Friday, April 30, 2010

யானைகளுடன் 1 நாள்-கூர்க் அனுபவம்

கூர்க்கில் ஹில்டவுன் என்ற ஹோட்டலில் ரூம் புக் பண்ணியிருந்தேன். ஹோட்டல் சென்று ரூமை பார்த்து நொந்து போனோம். அழுக்கு ரூம். சோபா பார்பதற்கு கொடுமையாய் இருந்தது. அதில் போட்டிருந்த துணி என்று துவைத்தது என தெரியலை. வேறு ரூம் மாற்றி கொடுங்கள் என்றதும் சில நூறு ரூபாய் அதிகம் என சொல்லி ஒரு டீசன்ட் ரூம் தந்தனர். இது நிச்சயம் நன்றாய் இருந்தது!!


















மாற்றி குடுத்த ரூம்                                                   ஹோட்டல் வெளியே


கூர்க் என்ற சின்ன ஊரில் இவர்கள் வாங்கும் ரூம் வாடகையே அதிகம். இதில் செக் அவுட் 12 மணிக்கு; அதுக்கு மேல் கொஞ்சம் லேட் என்றாலும் முழு நாள் வாடகை தரனும் என்ற ரீதியில் பேசினார்கள். சாப்பாடும் சரியில்லை. மறு நாள் வேறு ரூம் மாத்திட வேண்டியது தான் என முடிவு செய்தேன்.


கூர்கில் இந்த ஏப்ரல், மே மாதங்கள் - காலை மற்றும் மாலை செம கூலாக உள்ளது. பகலில் வெயில் சற்று சுள்ளுன்னு தான் அடிக்கிறது. மைசூர் மற்றும் கூர்க் செல்ல செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் தான் சிறந்தவையாம்.

மறு நாள் காலை ராஜாஸ் சீட் என்ற பார்க் சென்றோம். அந்த காலத்தில் ராஜா இங்கிருந்து அமர்ந்து சூரிய அஸ்தமனம் பார்ப்பாராம். இப்போதும் மாலை வேளை தான் சூரிய அஸ்தமனம் பார்க்க பலர் இங்கு வருகின்றனர். ஆனால் நாங்கள் சென்ற போது, பனி (Mist) மாலையில் இருப்பதால் sunset பார்க்க முடியாது என்றனர். எனவே நாங்கள் பகலில் சென்றோம்.



 

ராஜாஸ் சீட் .. வியு ..

நிறைய மலர்கள்; நல்ல வியு பாயிண்ட்.. மேலும் ஒரு Toy train-ம் உள்ளது. கூர்கில் நிச்சயம் (மாலை நேரத்தில்) செல்ல வேண்டிய இடம் இது.


மதியம் அபே நீர் வீழ்ச்சி சென்றோம். கோடை என்பதால் தண்ணீர் அதிகம் கொட்டலை. அபே falls-ல் எப்போதுமே யாரையும் குளிக்க அனுமதிப்பதில்லை. தூரத்திலிருந்து அதன் அழகை மட்டும் பார்க்கலாம். அவ்ளோ தான்.



அங்குள்ள தொங்கு பாலத்தில் நடப்பது ஒரு ஜாலியான அனுபவமாக உள்ளது. அபே falls செல்ல முக்கிய காரணம் வழியில் நிறைய காபி தோட்டங்கள் இருக்கும் என்றனர். மூனார் சென்ற போது பார்த்த தேயிலை தோட்டம் போல் அழகாய் இருக்கும் என ஆசையாய் இருந்தேன். ஆனால் காபி இலைகள் சிறிய அளவில் உள்ளன. தேயிலை தோட்டங்கள் போல் பார்க்க பச்சை பசேலென இல்லை. இது ஏமாற்றமே.

கூர்கில் ஸ்பெஷல் அங்கு கிடைக்கும் தேன் மற்றும் காப்பி பௌடர். இவை வாங்கினோம். தேன் விற்க அரசு நடத்தும் சொசைட்டி உள்ளது, இங்கு வாங்குவது நல்லது. கணேஷ் காப்பி என்ற இடத்தில் காப்பி நன்கு உள்ளது, கண் முன் அரைத்து தருகின்றனர்.

கூர்க் அருகில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் : தலை காவிரி.இங்கிருந்து தான் காவிரி உருவாவதால் புனித இடம் என பலர் தேடி போய் வழிபட்டு வருகின்றனர். நமக்கு அப்படி சென்டிமன்ட் இல்லை. எனவே போகலை.


கூர்கிளிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குஷால் நகரில் தான் பார்க்க மூன்று இடங்கள் உள்ளதால் மறு நாள் ரூம் காலி செய்து விட்டு குஷால் நகர் பயணமானோம். அங்கு கன்னிகா International என்ற ஹோட்டல் நன்றாயிருக்கும் என்றனர். உண்மை தான் 800 ருபாய் வாடகையில் டபிள் பெட் ரூம் நன்றாக உள்ளது, பேருந்து நிலையத்திலிருந்து ஒரு நிமிடம் நடந்தால் போதும். இங்கு ஒரே பிரச்சனை Restaurant -உடன் பாரும் சேர்ந்து உள்ளது. எனவே குடும்பத்துடன் Restaurant சென்று சாப்பிட முடியாது. ஒன்று ரூமுக்கு ஆர்டர் செய்து சாப்பிடனும். அல்லது வெளியே போய் சாப்பிடனும்.


அன்று இரவே குஷால் நகரில் உள்ள திபத் கோல்டன் டெம்பில் சென்று பார்த்தோம். ஆட்டோவிலேயே சென்று வரும் தூரம் தான். கோயில் ரொம்ப அழகாக உள்ளது. இங்கு சென்று வந்தது ஒரு நல்ல அனுபவம்.


நூற்றுக்கணக்கான திபத்தியர்கள் இங்கு தங்கி புத்தம் பயில்கின்றனர். இவர்கள் யாரும் திருமணம் செய்வதில்லையாம்!! புத்தர் சிலை அருகே இரு புறமும் புத்தருக்கு பின் புத்த மதத்தை பரப்பிய இருவர் சிலைகள்..



மறு நாள் காலை துபாரே பாரஸ்ட் சென்றோம். இங்கு காட்டில் உள்ள யானைகள் தினம், காலை ஆற்றுக்கு அருகே கூட்டி வர படுகின்றன.




அங்கு அவை குளிப்பாட்டபட்டு, சாப்பாடும் தருகிறார்கள். நாமும் கூட அவற்றை குளிப்பாட்டலாம். காலை 9 முதல் 10 .30 வரை தினமும் இது நடப்பதால் இந்த நேரத்தில் சென்றால் தான் இந்த இடம் பார்க்கணும். இல்லையேல் waste.

 















குளிபாட்டுகிறார்கள்                             சாப்பாட்டுக்கு காத்திருக்கு...


துபாரே பாரஸ்ட்டில் யானைகளை குளிப்பாட்டி, அவை சாப்பிடுவது பார்த்து ரொம்ப என்ஜாய் செய்தோம். மைசூர் மற்றும் கூர்க் பெண்கள் பொதுவாகவே ரொம்ப அழகு!!


பின் அருகிலுள்ள நிசர்கதாமா என்ற இடம் சென்றோம். இதுவும் ஒரு காடு போன்ற இடம் தான். மூங்கில் காடுகள், நடுவே ஒரு ஆறு, ஆற்றில் தற்போது குறைவாக தண்ணீர் ஓடுகிறது. இருந்தும் நான் குளித்தேன்.















இவர் குளிக்க ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாரே குளிச்சிக்கிடே இருப்பாரே

குஷால் நகர், கூர்கிற்கும் மைசூருக்கும் இடையே உள்ளது. மைசூர் டு கூர்க் நிறைய பேருந்துகள் உள்ளன. மைசூர் முதல் குஷால் நகர் வரை ரோடு அருமை. ஆனால் அதன் பின் கூர்க் செல்லும் ரோடு கொடுமை. ஏறும் போதும் இறங்கும் போதும் நாங்கள் வாமிட் செய்து விட்டோம். இது தான் ஒரே குறை.

அன்று இரவு மைசூர் வந்து ரயில் ஏறினோம். திரும்பும் போது III AC என்பதால் இந்த முறை எந்த பிரச்னையும் இல்லை. IPL பைனல் நடக்கும் போது டிரைனில் இருந்தோம். சென்னை வந்து இறங்கியதும் கண்ணில் பட்டது " சென்னை சூப்பர் கிங்க்ஸ் பைனல் வென்றது" ..ஊர் திரும்பிய வருத்தத்தை இந்த செய்தி மறக்கடித்து. மீண்டும் இயந்திரமாக தயாரானோம்.

15 comments:

  1. கூர்க் பயணக்கட்டுரை அருமை....

    மைசூரையும், கூர்க்கையும் சென்று பார்க்கவேண்டும் என ஆவல் அதிகரித்துவிட்டது....

    //மைசூர் மற்றும் கூர்க் பெண்கள் பொதுவாகவே ரொம்ப அழகு. போட்டோக்களில் ஆங்காங்கு பார்த்தால் உங்களுக்கும் தெரியும். //


    அங்க அங்க யாணை தாங்க தெரியுது....

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு.

    துபாரே ஃபாரெஸ்ட் மட்டும் போனதில்லை. யானைகளின் புகைப்படங்கள் அழகு.

    கூர்கில் ஓம்காரேஷ்வரா கோவிலும் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்று.

    ReplyDelete
  3. மைசூர் மற்றும் கூர்க் பற்றி நிறைய செய்திகள் தெரிந்து கொண்டோம்.

    //தேயிலை தோட்டம் போல் அழகாய் இருக்கும் என ஆசையாய் இருந்தேன். ஆனால் காபி இலைகள் சிறிய அளவில் உள்ளன. //

    நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

    //அன்று இரவே குஷால் நகரில் உள்ள திபத் கோல்டன் டெம்பில் சென்று பார்த்தோம்.//

    வேலூர் பொற்கோவில் மாதிரி இருக்குமா?

    மொத்தத்தில் எங்களுக்கு கோடை விடுமுறை சுற்றுலா செலவு இல்லாமல் செய்துவிட்டீர்கள். (சுற்றுலா சென்று வந்த திருப்தி கிடைத்துவிட்டது).
    நன்றி.

    ReplyDelete
  4. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  5. கூர்க் புதிய இடமாக இருக்கிறது. அருமை.

    ReplyDelete
  6. vidyasamana katturai
    visit my blog
    www.vaalpaiyyan.blogspot.com

    ReplyDelete
  7. ////மீண்டும் இயந்திரமாக தயாரானோம்.///


    .....அருமையான ட்ரிப் போய் விட்டு வந்த பின் தோன்றும் உணர்வு......
    படங்கள் அருமை. ட்ரிப் பற்றி தொகுத்த விதமும் அருமை.

    ReplyDelete
  8. அருமை!
    --

    // இங்கு காட்டில் உள்ள யானைகள் தினம், காலை ஆற்றுக்கு அருகே கூட்டி வர படுகின்றன. //

    இது புரியல தல!

    ReplyDelete
  9. நன்றி சங்கவி..
    ***
    நன்றி அமைதி அப்பா; அமைதிக்கு பரீட்சையோ? இல்லையேல் நீங்களும் எங்காவது செல்லலாமே?
    ****
    ராமசாமி கண்ணன்: நன்றி
    ***
    ***
    ராமலக்ஷ்மி : ஆம் கோயில் நாங்க போகலை. டுபாரே சென்று வாருங்கள்
    ***
    சித்ரா: நன்றி
    ***
    மாதேவி: நன்றி முதல் வருகையோ??
    ***
    நன்றி வால் பையான்; நிச்சயம் வருகிறேன்
    **
    ஷங்கர்: யானைகள் பகல் & இரவில் காட்டில் உள்ளன. அங்கிருந்து காலை நேரம் இந்த குறிப்பிட்ட இடத்துக்கு டூரிஸ்ட்டுகள் பார்க்க காலை மட்டும் அழைத்து வருகின்றனர்.
    ***

    ReplyDelete
  10. //தலை காவிரி.இங்கிருந்து தான் காவிரி உருவாவதால் புனித இடம் என பலர் தேடி போய் வழிபட்டு வருகின்றனர். நமக்கு அப்படி சென்டிமன்ட் இல்லை. எனவே போகலை. //

    தஞ்சாவூர்காரரிடம் இப்படி ஒரு வார்த்தை ஆச்சர்யம்!!!!!

    :)

    ReplyDelete
  11. கூர்க் போக‌ணும்னு ஒரு ஆர்வ‌த்தை கிள‌ப்பிட்டீங்க‌!

    க‌வ‌ர்ச்சி ப‌ட‌ம்லாம் வேற‌ போட்டிருக்கீங்க‌ ;))

    ReplyDelete
  12. Well done, Mr. Mohan.

    Regards,
    Suhasini

    http://indiancolumbus.blogspot.com
    A unique travel blog

    ReplyDelete
  13. Kolli malai enru oru idam tamilnattula irruku. Athuku oru thadavai poi vaanga.

    ReplyDelete
  14. அன்பின் மோகன் குமார்

    பயணக் கட்டுரை அருமை

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete