Tuesday, July 20, 2010

தஞ்சையின் மறக்க முடியாத இடங்கள்

எனது சொந்த ஊரான நீடாமங்கலத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது தஞ்சாவூர். அடியேன் பிறந்தது தஞ்சாவூரின் அரசு மருத்துவ மனையில் தான்!! சினிமா பார்க்கவும், துணி வாங்கவும், டாக்டரிடம்  காட்டவும் எங்க ஊர் மக்கள் வருவது தஞ்சாவூருக்கு தான். நான் +1, +2  ரெண்டு வருஷம் இங்கு படித்தேன். டீன் ஏஜ் வயது. படிப்பில் கவனம் போகலை. கிரிக்கெட்டால் கெட்டு அலைந்தேன். அப்புறம் சற்று தெளிந்து கல்லூரி, வேலை, குடும்பம் என வாழ்க்கையில் நிறைய தூரம் வந்து விட்டாலும் தஞ்சையை வருடத்துக்கு சில முறையாவது தரிசிக்கிறேன். சமீபத்தில் தஞ்சை சென்றேன். 30 வருடங்களுக்கு முன் எனக்கு மகிழ்ச்சி தந்த சில இடங்கள் இன்னும் கூட உள்ளது. நீங்கள் தஞ்சை காரர் எனில் நான் சொல்லும் இடங்களை மிக ரசிப்பீர்கள். இல்லா விடினும் வாசிக்கலாம்...
 
இதோ எனக்கு பிடித்த சில இடங்கள் 
 
சாந்தி புரோட்டா கடை 
 
நீங்கள் என்னை சாப்பாட்டு ராமன் என நினைத்தாலும் பரவாயில்லை; சாந்தி பரோட்டா, சாந்தி பரோட்டா தான். அந்த குருமா.. அடடா.. வெக்க படாமல் பல முறை ஊற்ற சொல்லி வெளுத்து வாங்குவேன். என்ன பரோட்டாவில் சற்று டால்டா அதிகமாய் இருக்கும். ஆனால் அந்த டேஸ்ட் புடிச்சு போச்சே!! இந்த கடை கடந்த முப்பது ஆண்டுக்கும் மேலாக எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த முறையும் இங்கு சாப்பிட்டேன். என்ன ஒன்று. முதலிலேயே சாப்பிடும் பரோட்டாவிற்கு காசு குடுத்து டோக்கன் வாங்க சொல்கிறார்கள். எத்தனை சாப்பிடுவோம் என முன்பே முடிவு பண்ண முடியுமா என்ன? அப்படியும் டோக்கன் வாங்கிட்டு பரோட்டா தயாராகும் வரை மக்கள் பொறுமையாய் காத்திருக்கிறார்கள்.  
 
தஞ்சை பழைய பஸ் நிலையத்திற்கு நேர் எதிரில் இந்த கடை உள்ளது. இந்த நிறைய திரை அரங்குகள் உள்ளன. இவற்றில் எல்லாம் எவ்வளவு படங்கள் பார்த்துள்ளோம்! அவசரமாய் சாந்தியில் பரோட்டா சாப்பிட்டுட்டு மதிய காட்சிக்கு ஓடிய நினைவுகள் வருகிறது...
 
போனால் ஒரு முறை இந்த பரோட்டா சாப்பிட்டு பாருங்கள். முதலிலேயே பரோட்டா பிச்சு போட்டுட்டு அப்புறம் குருமா ஊற்ற சொல்லணும். இது ரொம்ப முக்கியம். :)
 
அன்பு பால்/ லஸ்ஸி கடை

அதே பழைய பஸ் ஸ்டாண்ட் வெளியே பரோட்டா கடைக்கு நேர் எதிரே உள்ளது அன்பு லஸ்ஸி கடை. பகலில் லஸ்ஸியும் இரவில் கற்கண்டு பாலும் விற்பார்கள். நின்றவாரே எவ்வளவு கூட்டம் குடிக்கும் என்பதை நீங்கள் நேரில் பார்த்து தான் ஆச்சரிய படனும். இது போன்ற லஸ்ஸியை நான் வேறெங்கும் குடித்ததில்லை. லஸ்ஸி தயார் செய்து விட்டு மேலே பாலாடை போடுவார்கள். பின் அதன் மேல் சர்க்கரை தூவுவார்கள். இந்த ஆடையை கொஞ்சம் கொஞ்சமாய் கடைசி வரை வைத்து குடிக்க வேண்டும். அப்போ தான் நல்லா இருக்கும். ஒன்று குடித்து முடித்ததும் இன்னொன்று குடிக்கலாமா என temptationவரும். அதனை அடக்கி கொண்டு கிளம்ப வேண்டும்.


இவர்களே இரவில் கற்கண்டு பால் தயார் செய்வார்கள். இதற்கும் கூட்டம் அம்மும். இந்த முறையும் கற்கண்டு பால் குடித்தேன். ஆனால் பழைய டேஸ்ட் இல்லை.

அவசரமாய் பால் குடித்து விட்டு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் பஸ்ஸை ஓடி போய் பிடிக்கும் மக்கள் இன்னும் மாற வில்லை.

தஞ்சை தியேட்டர்கள்


தியேட்டர்கள் பற்றி சொல்லி கொண்டே போகலாம். சாந்தி கமலா இரண்டும் சிவாஜி கணேசன் கட்டியது. பின் ஜீவி பில்ம்ஸ் வாங்கினார்கள் என நினைக்கிறேன். பெரும்பாலான முக்கிய படங்கள் இங்கு வந்து விடும். கமலாவை விட சாந்தி பெரிய தியேட்டர். அருகில் விஜயா தியேட்டர். இங்கு அந்த காலத்திலேயே டிக்கட் விலை அதிகம்.

திருவள்ளவர் என ஒரு தியேட்டர். உள்ளூர் நிர்வாகமே நடத்தியது என நினைக்கிறேன். ரொம்ப சுமாரான maintenance. இங்கு குறிப்பாக தீபாவளிக்கு சில நாள் முன் போடப்படும் மலையாள படங்கள் ரொம்ப பேமஸ் (நம்புங்கப்பா.. நான் பார்த்ததில்லை). ராஜ ராஜன் என இன்னொரு தியேட்டர். சற்று பெரிது. டீசண்டாக இருக்கும். இவை அனைத்தும் தாண்டி தற்போது தஞ்சையை கலக்குவது ராணி பேரடைஸ் தியேட்டர் தான். முன்பிலிருந்தே உள்ளது இந்த தியேட்டர். ஆனால் தற்போது புதுப்பிக்கப்பட்டு  நல்ல sound effect உடன் செமையாய் உள்ளது என்கின்றனர். நல்ல படங்களாகவும் எடுக்கின்றனர். புதுப்பிக்கப்பட்ட பின் நான் இன்னும் படம் பார்க்கலை.

அனுமார் கோவில்


ரயில் நிலையம்/ ராஜ ராஜன் திரை அரங்கிற்கு அருகே உள்ளது ஒரு மிக சிறிய அனுமார் கோவில். ஏறக்குறைய நடை பாதை கோயில் போல் தான் இருக்கும். ஆனால் சனி கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த அனுமார் மிக சக்தி வாய்ந்தவர் என நம்பிக்கை.
 
பெரிய கோவில்


தஞ்சை பற்றி சொல்லிட்டு பெரிய கோவில் பற்றி சொல்லாமல் போக முடியுமா? ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மன நிலை, அனுபவம் தரும் கோவில். அற்புத புல்வெளி நம் மனதை கொள்ளை கொள்ளும். மிக பெரிய பிரகாரங்கள். கோயில் கோபுர நிழல் கீழே விழாது என்கிறார்கள். நந்தியும் மிக ஸ்பெசல் தான். கோயில் உள்ளே போகா விட்டால் கூட வெளியே சில கிலோ மீட்டர் தூரத்தில் நாம் எங்கு சென்றாலும் அந்த கோபுர அழகு மயக்கும்.

********
இவை தவிர குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை நிறைய இருக்கலாம். நீங்கள் தஞ்சை நண்பர் எனில் உங்களுக்கு பிடித்த இடம் பற்றி பகிருங்கள். தஞ்சை டவுனை தாண்டும் போது எல்லா பக்கமும் வயல்கள்.. இவை தற்போது குறைந்து வந்தாலும் இன்னும் பசுமையான வயல்கள், போர்வேல்கள் மனதை நிறைக்கின்றன.


தஞ்சை.. ஒரு முறை அவசியம் சென்று வர வேண்டிய ஊருங்க !!

55 comments:

  1. //கோயில் கோபுர நிழல் கீழே விழாது என்கிறார்கள்.//

    கோபுரத்தின் மீதுள்ள கும்பத்தின் நிழல் கோபுரத்தின் மீதே விழுமாறு கோபுரம் அகலமாக இருப்பதால், அந்த கும்பத்தின் (கலசம்) நிழல் தரையில் விழாது. கோபுரத்தின் நிழம் கீழே பார்க்கலாம். (எனக்குத் தெரிந்தவரை).
    நான் பூண்டி புஷ்பம் காலஜுல படிச்சேன்.. 5 வருடம்(3 yrs UG & 2 yrs PG) நீடாமங்கலம் வழியாத்தேன் போய்வந்தேன்..
    'டிரைணுல' டிக்கெட்டு எடுக்காம ஒரு சில தடவை (பயந்துகொண்டே) போய்வந்தது மறக்க முடியாத அனுபவம்..( ஓசி மாங்காய் சாப்பிடுவது போல )

    ReplyDelete
  2. அந்த லஸ்ஸி கடை பற்றி எழுதியது
    அனுபவத்தின் உச்சம்.'லஸ்ஸி தயார் செய்து விட்டு மேலே பாலாடை போடுவார்கள். பின் அதன் மேல் சர்க்கரை தூவுவார்கள். இந்த ஆடையை கொஞ்சம் கொஞ்சமாய் கடைசி வரை வைத்து குடிக்க வேண்டும். அப்போ தான் நல்லா இருக்கும்' இது மாதிரி உங்களால் மட்டும்தான் எழுத முடியும்.

    ராணி பேரடைஸ் தியேட்டரில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலப்படம் அதிகம் திரையிடுவார்கள்.

    எத்தனை முறைப் பார்த்தாலும் புதிதாகப் பார்ப்பது போல் இருப்பது, பெரிய கோவிலின் சிறப்பு.
    நன்றி.

    ReplyDelete
  3. தஞ்சாவூர் இன்றும் மிகச் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்று. அருமை!

    By the way,
    என்ன ஒரு ஒத்துமை! நீ தஞ்சாவூர் சுத்திப் பாத்த அனுபவம் எழுதியிருக்கே... நான் சிங்கப்பூர் சுத்தி பாத்தா அனுபவம் எழுதியிருக்கேன்

    ReplyDelete
  4. Anonymous2:30:00 PM

    மறுபடியும் ஒரு தரம் தஞ்சாவூர் போகணும்.

    ReplyDelete
  5. ரகுவின் சித்தி பெண் கல்யாணத்திற்காக ஒரு முறை தஞ்சாவூர் சென்றிருக்கிறேன். பெரிய கோவில் ரொம்பவே ஈர்த்தது. சுத்தியடிச்ச விஷயம் - சந்துகள்.

    அப்புறம் என் மாமியார் தஞ்சாவூர் ஸ்பெஷலாக 2 ஐட்டம் பண்ணுவார். ஒன்னு அசோகா அல்வா. ரெண்டாவது உசிலி. அப்புறமா என் பதிவுல பகிர்கிறேன்.

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வு நண்பரே. இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த முறை திருச்சி செல்லும் போது செல்லவேண்டும். பார்க்கலாம்.

    ReplyDelete
  7. அந்த பரோட்டா மணத்தை பதிவில் நுகர்கிறேன்.

    ReplyDelete
  8. அண்ணே உங்கள் பயண கட்டுரைகள் எங்களுக்கும்
    யூஸ் ஆகுது....நாளைக்கு நம்ம பக்கம் வந்து பாருங்க

    ReplyDelete
  9. ரொம்ப நாளாச்சு.. போய் வந்து..

    ReplyDelete
  10. ரொம்ப அருமையான நினைவுக் கோர்வை.

    தஞ்சை ஸ்பெஷல் ஆனா இளநீர், கடப்பா, தக்காளி கொத்சு, அசோகா (பயற்றம் பருப்பில் செய்யும் இனிப்பு), வற்றல் குழம்பு, ஜவ்வரிசி பாயசம், சரஸ்வதி மஹால், கல்கோனா, எல்லாம் நினைவுக்கு வரது.

    :) nostalgic.. :)

    ReplyDelete
  11. அண்ணா,

    பர்வீன் தியேட்டரை விட்டுட்டீங்களே

    :)))))

    ReplyDelete
  12. // Vidhoosh(விதூஷ்) said...
    ரொம்ப அருமையான நினைவுக் கோர்வை.

    தஞ்சை ஸ்பெஷல் ஆனா இளநீர், கடப்பா, தக்காளி கொத்சு, அசோகா (பயற்றம் பருப்பில் செய்யும் இனிப்பு), வற்றல் குழம்பு, ஜவ்வரிசி பாயசம், சரஸ்வதி மஹால், கல்கோனா, எல்லாம் நினைவுக்கு வரது.

    :) nostalgic.. :)

    20 July, 2010

    //

    அக்காவுக்கு திருவையாறு ஞாபகம் வந்திருச்சு போல :)

    ReplyDelete
  13. // Cable Sankar said...
    ரொம்ப நாளாச்சு.. போய் வந்து..


    //

    யோவ் நீயும் நீடாமங்கலம்தானே???

    ReplyDelete
  14. //நான் +1, +2 ரெண்டு வருஷம் இங்கு படித்தேன்.

    //

    கே.எச்.எஸ்சா?? ராஜாஸ்சா??

    ReplyDelete
  15. நானும் அந்தப் புரோட்டா கடையில் சாப்பிட்டிருக்கிறேன். அதே போல் என் தனிப்பட்ட விருப்பம் அந்த லெஸி. நான் பிறந்தது தஞ்சைதான். பிறகு குடந்தைக்கு சென்றாலும், கவி நண்பர்களை சந்திக்க அடிக்கடி தஞ்சைக்கு செல்வதுண்டு. சிவகங்கை பூங்காவும், தஞ்சை அரண்மனையும், வெள்ளைப் பிள்ளையாரும் மறக்கமுடியாதது.

    ReplyDelete
  16. http://viewsofmycamera.blogspot.com/2010/07/blog-post.html

    பெரிய கோவில் பல்வேரு கோணங்களில், கண்டு மகிழுங்கள்

    ReplyDelete
  17. ஊருக்கு போறப்பல்லாம் அப்டியேத்தான் போறேன்... பெரியக்கோவிலுக்குள்ள போக முடியறதில்ல.. ஒரு நாலு வருஷம் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்...

    மறுபடியும் வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்.. பார்ப்போம்...

    நல்ல பகிர்வு...

    ReplyDelete
  18. அடடா!! தஞ்சை தஞ்சை தாம்பா ! பின்னூட்டம் மூலம் ரொம்ப நாள் கழித்து எத்தனை பழைய நண்பர்கள் வர்றாங்க!! அட ஹிட்ஸ் கூட புது படத்துக்கு வர மாதிரி கிடைக்குதுங்க. நம்ப ஊர் எத்தனை பேர் மனசுல இருக்குன்னு நினைச்சா பெருமையா இருக்கு

    ReplyDelete
  19. தமிழ் அமுதன்: நன்றிங்க
    ***
    மாதவன்: கோபுரம் பற்றிய தகவல் விளக்கத்திற்கு நன்றி; நம்ம ஊர் காரர் .. எப்பவும் மன்னை/ தஞ்சை செல்லும் பாக்கியம் உங்களுக்கு உண்டு.
    ****
    அமைதி அப்பா: லஸ்சி மேட்டர் நீங்க ரசித்தது ரசிக்கும் படி இருந்தது :)) ராணி பேரடைஸ் தியேட்டரில் தற்போது புது தமிழ் படம் போடுகிறார்கள். நான் போன போது " ராவணன்"
    ****
    பெயர் சொல்ல: அட பாவி. உன்னோட சிங்கப்பூர் பதிவு கூட இதை ஒப்பிடுறே!!இரு கவனிக்கிறேன்..
    ****
    சின்ன அம்மணி: ஆஹா உங்களை மறுபடி போக வைக்க நினைக்கும் அளவு பதிவு இருந்ததா? மகிழ்ச்சி

    ReplyDelete
  20. வித்யா: ஆஹா; தஞ்சாவூர் அசோகா ரொம்ப famous. பாம்பே சுவீட்சில் வாங்கி சாப்பிடனும். இந்த முறையும் வீட்டுக்கு வாங்கி வந்தேன்
    ***
    நன்றி வெங்கட்; அவசியம் போய் வாங்க; ஊர் பெருசா மாறலை
    ****
    ஜனா சார்: நன்றி; நினைத்தாலே நாவில் எச்சு ஊறுதுங்க
    ***
    ஜெட் லி : நன்றிங்கண்ணா; உங்க ப்ளாக் தான் அடிக்கடி பார்க்கிறேனே?
    ****
    கேபிள்: ம்ம் போயிட்டு வாங்க
    ***
    விதூஸ்: அடடா! நம்ம ஊர்காரர் ஆச்சே; அடுக்கிட்டீங்க போங்க ! அசத்தல்
    ****

    ReplyDelete
  21. வாங்க புதுகை அப்துல்லா; பக்கத்துக்கு ஊர்னதும் குஷி வந்துடுச்சா? நான் KHS School-ங்க;

    பர்வீன் தியேட்டர் இன்னும் இருக்கா தலைவா? உங்க ஊர் சிறப்புகளை எழுதுங்க; உங்க அனுபவங்கள் இதை விட சுவாரஸ்யமா இருக்குமே!!
    ****
    நன்றி குடந்தை அன்புமணி; மற்ற இடங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி ; அவற்றில் சிவகங்கை பூங்கா இப்போது சரியாக பராமரிக்கபடலை; இல்லா விடில் நிச்சயம் குறிப்பிட்டிருப்பேன்.
    ***
    நன்றி க்ருபா; அவசியம் நீங்கள் தந்த சுட்டி பார்க்கிறேன்
    ***
    வாங்க பாலாசி; நீங்க நம்ம ஊர்தானா? சொல்லவே இல்ல? :)))

    ReplyDelete
  22. நான் இதுவ‌ரைக்கும் த‌ஞ்சை போன‌தில்லை. ப‌திவை ப‌டிச்ச‌துக்க‌ப்புற‌ம் பெரிய‌ கோவிலுக்காக‌வும், ப‌ரோட்டாக்காக‌வும் போக‌ணும் போல‌யிருக்கு :))

    ReplyDelete
  23. ஆகா..தஞ்சாவூரா...எவ்வளவோ ஊர் மாறிட்டாலும் (குறிப்பா ஊரைத்தாண்டி புது பேருந்து நிலையம்) மண்வாசனை மயக்குதே!

    இன்னிக்கு சாஸ்த்ராவைப் பத்தியும் எழுதலாம். ஆமாம் ஏன் தலையாட்டிக்கிட்டு பொம்மை மாதிரி இருக்கீங்க!!

    ReplyDelete
  24. நினைவுகளை திரும்ப கிளறிப்பார்ப்பதைவிட சுகம் ஏது?

    ReplyDelete
  25. மோகன், ஊர் ஞாபகம் வரவச்சிட்டீங்களே!

    என்னுடைய favorite பெரிய கோவில்தான். சூரியன் மறையும் சாயங்கால வேளையில் கோவிலுக்கு செல்லும்போது ஏற்படும் அனுபவத்தை விவரிக்க முடியாது.

    Ideal Resort இருக்கும் வென்னாற்றங்கரை வழியாக சென்று வருவது பிடிக்கும்.

    பழைய பஸ் நிலையத்திற்கு வடக்கே உள்ள தெற்கலங்கம் வீதி ஆசியாவிலேயே அதிக டாக்டர்கள் கிளினிக் வைத்திருக்கும் வீதியாகும்.

    அடுத்த முறை தஞ்சாவூர் போகும்போது சாந்தி பரோட்டா கடை + அன்பு லஸ்ஸி கடை விசிட் கட்டாயம் உண்டு:)

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  26. //முதலிலேயே பரோட்டா பிச்சு போட்டுட்டு அப்புறம் குருமா ஊற்ற சொல்லணும்//

    உண்மைதான் சார் பரோட்டாவின் சுவையே இப்படி சாப்பிடும் போது தான்....

    நானும் பரோட்டா பிரியன் தான்...

    ReplyDelete
  27. கடைகளுக்கான பெயர்ப்பலகைகள் தஞ்சையில் மிகவும் சிறப்பாக இருக்கும். ஜீவி என்னும் ஓவியர் வரையும் ஓவியங்கள் மிகவும் தத்ரூபமாக இருக்கும். அதிலும் சாந்தி, கமலா தியேட்டரின் இடதுபுறத்தில் அமைந்திருக்கும் கடை ஒன்றில், தாஜமகாலின் பின்புறத்தில் யமுனை ஆற்றில் ஒட்டகம் ஒன்று செல்வது போல் வரையப்பட்டிருக்கும் காட்சி இன்னும் நினைவில் நிற்கிறது. தண்ணீர் துளிகள் தெறிப்பது கூட அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். (இப்பொழுது அந்த ஓவியம் இருக்கிறதா என்று தெரியவில்லை)
    அந்தப் பக்கம் செல்லும்போதெல்லாம் சில நிமிடங்கள் நின்று அந்த ஓவியத்தை ரசித்துவிட்டுச் செல்வேன். பழைய தஞ்சை மாவட்டம் முழுதுமே ஜீவியின் ஓவியங்கள் நிறைந்த பெயர்ப்பலகைகள் நிறைந்திருந்தன. ப்ளெக்ஸ் கலாச்சாரத்தில், இன்று எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  28. ஆஹா... அந்த லஸ்ஸி தஞ்சாவூர்ல மட்டும் இல்லீங்க... தஞ்சை மாவட்டக் கடைசியில இருக்கிற எங்க ஊர்லயும் அதே டேஸ்ட்டோட கிடைக்கும். 3 மாசம் முன்னால போனேன். நாடு கடந்து வந்துட்டாலும் நம்ம மண்ணை மிதிக்கும் போது வர சிலிர்ப்பு, அது அனுபவிச்சாதான் உணர முடியும்......

    ReplyDelete
  29. நானும் தஞ்சாவூர்காரன் தான் ரொம்ப மகிழ்ச்சி ......

    ReplyDelete
  30. அருமையான பகிர்வு மோகன்.

    எனக்கு மிகப் பிடித்த ஊர் தஞ்சை. தாத்தா வீடு அங்கு இருந்தது. ஒவ்வொரு விடுமுறையும் அங்குதான் கழியும்.

    பல வருடங்கள் ஆகிவிட்டன தஞ்சைக்கு சென்று. இப்போது அங்கு உறவுகள் என்று யாருமில்லை, ஆனாலும் அடுத்து எப்போது அங்கே செல்வோம் என்று ஏக்கமாக இருக்கிறது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  31. Lassikku kuruma vegetariana?

    ReplyDelete
  32. Pl read lassikku as parottakku

    ReplyDelete
  33. எனது 30 வருட வாழ்கை தஞ்சை தான், டிகிரி படிப்பு பூண்டி புஷ்பம் கல்லூரி , 1995 டு 1998 , நீங்கள் கூறிய அனைத்தும் நான் அனுபவித்து , மீண்டும் அதை அனுபவிக்க போகிறேன் , நன்றி பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  34. எனது 30 வருட வாழ்கை தஞ்சை தான், டிகிரி படிப்பு பூண்டி புஷ்பம் கல்லூரி , 1995 டு 1998 , நீங்கள் கூறிய அனைத்தும் நான் அனுபவித்து , மீண்டும் அதை அனுபவிக்க போகிறேன் , நன்றி பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  35. த்ஞ்சாவூர சுத்திக் காமிச்சிட்டீங்க....

    ReplyDelete
  36. திரு மோகன் குமார் அவர்களுக்கு நன்றி,


    தஞ்சாவூரில் 1995 உலக தமிழ் மாநாடு நடக்கும்போது முதலாம் ஆண்டு கல்லூரி படித்து கொண்டிருந்தேன், எங்கெல்லாம் தஞ்சையின் பெயரும், ராஜ ராஜ சோழனின் பெயரும் காண கிடைக்கிறதோ, தேடி பிடித்து படித்து விடுவேன்,

    ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தன்னை தஞ்சாவுரான் என்று சொல்லி கொள்வதில் எல்லேருக்குமே ஒரு பெருமை,

    மணி மண்டபம், கீழ வாசல், ஜீபிடர் தியேட்டர், அருள் தியேட்டர், ஆற்று பாலம், புன்னை நல்லூர் மாரியம்மன், அரண்மனை, சரஸ்வதி மஹால், மேரிஸ் கார்னர், ஒரியண்டல் டவர் இன்னும் நிறைய,


    இப்பொழுது, ஜிவி காம்ப்ளெக்சசஸ் அதி நவீன படுத்தி நான்கு தியேட்டராக மாற்றி இருக்கிறார்கள், அடுத்த முறை ஊருக்கு போகும் போது போய் பார்க்கணும்., நினைவுகளுக்கு நன்றி,

    கி. முருகவேல்., அபுதாபி

    ReplyDelete
  37. திரு மோகன் குமார் அவர்களுக்கு நன்றி,


    தஞ்சாவூரில் 1995 உலக தமிழ் மாநாடு நடக்கும்போது முதலாம் ஆண்டு கல்லூரி படித்து கொண்டிருந்தேன், எங்கெல்லாம் தஞ்சையின் பெயரும், ராஜ ராஜ சோழனின் பெயரும் காண கிடைக்கிறதோ, தேடி பிடித்து படித்து விடுவேன்,

    ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தன்னை தஞ்சாவுரான் என்று சொல்லி கொள்வதில் எல்லேருக்குமே ஒரு பெருமை,

    மணி மண்டபம், கீழ வாசல், ஜீபிடர் தியேட்டர், அருள் தியேட்டர், ஆற்று பாலம், புன்னை நல்லூர் மாரியம்மன், அரண்மனை, சரஸ்வதி மஹால், மேரிஸ் கார்னர், ஒரியண்டல் டவர் இன்னும் நிறைய,


    இப்பொழுது, ஜிவி காம்ப்ளெக்சசஸ் அதி நவீன படுத்தி நான்கு தியேட்டராக மாற்றி இருக்கிறார்கள், அடுத்த முறை ஊருக்கு போகும் போது போய் பார்க்கணும்., நினைவுகளுக்கு நன்றி,

    கி. முருகவேல்., அபுதாபி

    ReplyDelete
  38. நன்றி ரகு; அவசியம் ஒரு முறை தஞ்சை போங்க; பெரிய கோயில் தரும் பிரமிப்புக்காக நிச்சயம் போகலாம்.
    ***
    ராதா கிருஷ்ணன் சார்: அதிசயமா நம்ம ப்ளாக் பக்கம் !! தஞ்சை தான் அழைத்து வந்தது என நினைக்கிறேன்
    ***
    கதிர்: உண்மை தான். நன்றி நீண்ட நாள் கழித்து வந்தமைக்கு
    ***
    ரவி: நன்றி Emotional-ஆக எழுதி உள்ளீர்கள். நன்றி ரசித்தேன்
    ***

    ReplyDelete
  39. சங்கவி: ஆஹா நீங்களும் நம்மளை மாதிரியா; சென்னை வரும் போது சேர்ந்து பரோட்டா சாப்பிடுவோம்
    ***
    கும்மி: அருமை; அருமை; ஜீவி ஓவியங்கள் தஞ்சை முழுதும் நிறைந்திருந்த காலம் உண்டு; பல கடைகள் படம்/ பெயர் அவர் எழுதி தந்தை இருக்கும்; இப்போது உள்ளனவா என தெரியலை
    ***
    Panasai : நன்றி நண்பா சரியா சொன்னீங்க
    ***
    பெரியார்: அப்படியா மிக்க மகிழ்ச்சி
    ***
    நன்றி சரவணா; எங்க ஊர் பற்றிய பகிர்வு உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி
    ***

    ReplyDelete
  40. சுப்ரமணியம்: பரோட்டவிர்க்கு குருமா சைவம் தான்; அந்த கடையில் சைவம் மட்டுமே உண்டு
    ***
    பெலிக்ஸ் ராஜ்: நன்றி; தஞ்சை மண்ணின் மைந்தர் சார் நீங்க; என்னை விட நிறைய அனுபவித்திருப்பீர்கள்
    ***
    புலிகேசி: நன்றி
    ***
    முருகவேல்: என்ன சொல்வது சார்! அற்புதம்!! நான் சொல்லாமல் விட்ட நல்ல இடங்களை சொல்லிட்டீங்க; நானே இவற்றில் சில இடங்களுக்கு போனதில்லை; அடுத்த முறை இவற்றில் ஒரு சிலவாவது பார்க்க முயல்கிறேன்

    ReplyDelete
  41. இன்று என் ஊரான தஞ்சைக்குக் கிளம்புகிறேன். கிளம்புமுன் உங்களின் பதிவைப்பார்த்ததும் சந்தோஷம் தாங்கவில்லை.
    என்ன இருந்தாலும் நம் தாய் மண்ணின் சுகமே தனியானதுதானே?
    இன்னும் ஜுபிடர், ராஜா கலையரங்கம் தியேட்டர்களை விட்டு விட்டீர்கள். இவையெல்லாம் பழமையானவை. புற நகர்களில் பர்வீன், குமரன், சோழன் என்று தியேட்டர்களும் இருக்கின்றன.
    எப்போது தஞ்சை சென்றாலும் அந்திப்பொழுதில் பெரிய கோவிலுக்கு ஒரு முறை சென்று கருவூர் சன்னதி அருகே அமர்ந்து, நாதஸ்வர இசையையும் பாடல்களையும் செவிக்குணவாகவும் அங்கே வழங்கப்படும் சுண்டலை வாய்க்கு உணவாகவும் ரசிக்கவும் ருசிக்கவும் மறப்பதில்லை.
    நீடாமங்கலம் என்றதும் என்னும் கொஞ்சம் ஆச்சரியம். அது என் கணவரின் ஊர் என்பதால் நெருங்கிய சம்பந்தம் உண்டு. என் புகுந்த வீடு அதன் அருகில் உள்ள முல்லைவாசல்.
    அவசியம் அந்த லஸ்ஸியையும் பரோட்டாவையும் வாங்கி சாப்பிடப்போகிறேன்.
    தஞ்சையைப்பற்றிய சுவையான தகவல்களை வெளியிட்டதற்கு என் நன்றி!

    ReplyDelete
  42. Mano மேடம் தங்கள் கணவர் நீடாமங்கலம் முல்லை வாசல் என அறிந்து மிக மகிழ்ச்சி; எங்கள் ஊரில் அவர் படித்திருக்க கூடும்; என் தந்தை அமுதா பார்மசி என்ற பெயரில் மருந்து கடை35 ஆண்டுகள் வைத்திருந்தார். உங்கள் கணவரிடம் கேட்டால் தெரிய கூடும்.

    ReplyDelete
  43. என் தஞ்சை அனுபவத்தையும் எழுதத்தூண்டுகிறது பதிவு, என்னதான் சின்ன ஊரா இருந்தாலும் இன்று வரை எனக்குப் பிடித்த பெரிய ஊர் தஞ்சைதான். எனக்கு சாந்தி புரோட்டா பிடிக்காது, காரணம் அந்த தேங்காய் குருமா.

    ReplyDelete
  44. பதிவு மிக அருமை.

    //30 வருடங்களுக்கு முன் எனக்கு மகிழ்ச்சி தந்த சில இடங்கள் இன்னும் கூட உள்ளது.//

    இதே அனுபவம் கடந்த வாரம் எனக்கும் நெல்லையில்:)!

    ReplyDelete
  45. எங்கள் காலத்தில் தஞ்சையில் சுப்பையா பால் கடை, ஆனந்த் பவன், நியூ பத்மா கபே, யாகப்பா, ராஜா கலைஅரங்கம், ஞானம், ஜுபிடர், குமரன், திருவள்ளுவர், ராணி பேரடைஸ், கிருஷ்ணா திரை அரங்கங்கள், சிவகங்கைப் பூங்கா, அரண்மனை, தூய அந்தோணியார், செயின்ட் பீட்டர்ஸ், கே.ஹெச்.எஸ், ப்ளேக், பள்ளிகள்....

    நினைவுகளை மறுபடி மலர வைத்து விட்டீர்கள்...

    ReplyDelete
  46. அன்பின் மோகன் குமார்

    நீங்க தஞ்சாவூரா - பலே பலே

    நான் பிறந்தது தஞ்சாவூர் - வளர்ந்தது 1950-1963 தஞ்சாவூர். பழைய நினைவுகளை அசை போட வச்சீட்டிங்களே !

    இங்கல்லாம் சுருக்கமா எழுத இயலாது

    நான் பதிவு ஆரம்பித்த காலத்தில் எழுதி யுள்ள அசை போடுவது - குறிப்பு 1 எனத் தொடங்கி குறிப்பு 5 வரை மலரும் நினைவுகள் என்ற லேபிளில் எழுதி உள்ள இடுகைகளை நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கவும்.

    சூப்பரா கொசு வத்தி சுத்தி இருக்கீங்க

    கே ஹெச் எஸ் ஸா - நானு வீ ஹெச் எஸ்

    நல்வாழ்த்துகள் மோகன் குமார்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  47. மீண்டும் ஒரு அருமையான பதிவு.

    நாங்கள்லாம் அமெரிக்காவை பற்றியும் ஐரோப்பாவை பற்றியும் எழுதிக்கொண்டிருக்கும் போது அழகாக உள்ளூரை பற்றி எழுதி எல்லோரையும் தஞ்சையை பார்க்க கிளப்பி விட்டு விட்டீர்கள்.

    ஜூலை மாத பதிவிற்கு நவம்பரில் பின்னூட்டம்! நாங்க எப்பவும் கொஞ்சம் லேட் தான். தஞ்சையை பற்றி நானும் ஒரு பதிவு போட வேண்டும் என ஆவலை தூண்டிவிட்டு விட்டீர்கள்.

    ReplyDelete
  48. nostalgic. i loved this post. i did my undergraduation there. my pick is Hotel Satthars and parota fry in hotel karthick. and yes thanjavur medical college campus,Rajaa mirasudhaar hospital.

    ReplyDelete
  49. குடுகுடுப்பை: நன்றி. என்னது சாந்தி புரோட்டா பிடிக்காதா!! ஆச்சரியம்!
    **
    நன்றி ராமலட்சுமி
    **
    ஸ்ரீ ராம் சார்: அடடா! எத்தனை அற்புத இடங்கள்! அருமை சார்!!
    **
    சீனா சார்: நன்றி. உங்களுக்கும் மலரும் நினைவுகள் வர வைத்த பதிவு என நினைக்கிறேன்
    **
    ஆதி மனிதன்: நன்றி எழுத பாருங்கள் நண்பா
    **
    டாக்டர் வடிவுக்கரசி : நன்றி. சதார்ஸ் ஹோட்டல் இன்னும் உள்ளது. கார்த்திக் ஹோட்டலும் மறக்க முடியாது. அங்கு சிறு வயதில் எனக்கு நேர்ந்த அனுபவம் பகிர வேண்டும்.
    **

    ReplyDelete
  50. //அடியேன் பிறந்தது தஞ்சாவூரின் அரசு மருத்துவ மனையில் தான்!! //

    அடியேனும்தான் :)

    அனுமார் கோவில் தவிர மற்ற எல்லாமே நானும் அனுபவித்தவை (89-92 பூண்டி கல்லூரியில் படிக்கும் காலத்தில்) தஞ்சைதான் நமக்கு எல்லாமே!!

    ReplyDelete
  51. அன்புள்ள மோகன்,

    வணக்கம்...

    வந்தவர்களை வாழ வைக்கும் தமிழகமாம்...தமிழகத்தில்...

    நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியில் பிறந்தவன் நானும் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கும் பெருமை...

    பஞ்சம் போக்கும் தஞ்சை மீது கொண்ட வாஞ்சை விட்டு இன்று தஞ்சம் நான் புகுந்திருப்பது காவிரி புறப்படும் கர்நாடகத்தில்... பெங்களூரில்...

    காவிரி கரையென்றால் திருச்சி ஸ்ரீரங்கமும்... திருவையாறும் கண்ணில் மின்னல் வெட்டிபோகும்...

    காவிரி கரை மீது அமைந்திருக்கும் நல்லதொரு தலம் தான்... என் மனதிற்கு மிகவும் பிடித்தமான தஞ்சை மண்ணின் ஒன்று.... பிருந்தாவனம்.. ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் சன்னதி...

    பச்சை சேலை பூமிதாய் கட்டியிருக்க இருகண்ணில் செல்லும் வழியெல்லாம் இருகண்ணில் கண்டு மகிழ்ந்திருக்க....
    ஊருக்கு ஒதுக்கு புறமாய்... அமைதியாக வீற்றிருக்க... ராகவேந்திரா மந்திரத்தை மனம் முழுவதும் உச்சரித்து சுற்றி வர மனதில் உள்ள வேதனை யாவும் பறந்திடுமே...

    ஆற்றின் படிக்கரையில் அமர்ந்து மீன்களோடு விளையாடி மகிழ்ந்திட்ட சிறுவயது நினைவுகள் கண்ணுக்குள் அகலாமல் நெஞ்சுக்குள் இன்று இதனை எழுதும் சமயம் ஆனந்ததை அள்ளி தந்துக்கொண்டு...

    ReplyDelete
  52. அருமையான பதிவு...தஞ்சைவாசிகளை நெகிழ வைக்கும் பதிவு...பல நினைவுகளை மீண்டும் தூண்டிவிட்டது இந்த பதிவு....அதி அற்புத தேவதை போல் காட்சி தரும் என் மற்றொரு தாய் புன்னைநல்லூர் மாரியம்மனை மறக்க முடியுமா ? நான் படித்த ST.JOSEPHS பள்ளி, குந்தவை நாச்சியார் கல்லூரி, ராகவேந்திரர் கோயில், அதன் அருகில் இருக்கும் சீரடி பாபா கோயில் , SEAKINGS ஐஸ் கிரீம் கடை( சாந்தி தியேட்டர் எதிரில் இருந்தது நான் பள்ளியில் படித்த காலத்தில் ... இப்ப இருக்கிறதா என்று தெரியவில்லை) , காபி பேலஸ் , அப்பப்பா .......இப்படி இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.....என்னை போல் என் மகன்களும் தஞ்சை வெறியர்களாக இருகிறார்கள் ( அங்கு பிறந்தவர்கள் என்பதாலோ ?) ....

    ReplyDelete
  53. அன்புள்ள மோகன்,

    முகநூலில் (Facebook) நம்ம ஊருடன் உங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன்...

    Natives of Thanjavur தஞ்சாவூர்


    அன்புடன்,
    வாசன்...

    ReplyDelete
  54. நீங்க இத எழுதி ஒன்றரை வருடம் ஆச்சி. அதனால என்ன இப்ப கமென்ட் போடக்கூடாதா ?
    நா KHSS (1983-1988), Raja's (1990), Poondi Pushpam (BSc & MCA till 1996).

    பழைய நினைவுகள், திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

    ReplyDelete