Thursday, September 1, 2011

மங்காத்தா விமர்சனங்கள் பற்றிய விமர்சனம்

மங்காத்தா படம் வந்தாலும் வந்தது. பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான். முதல் நாள் படம் பார்த்து விட்டு பதிவெழுதினோர் இருபதுக்கும் மேல். நான் வாசித்த சில விமர்சனங்களும் அது பற்றிய விமர்சனமும் இங்கே. அனைத்து விமர்சனகளுக்கான லிங்க் ஆங்காங்கு தலைப்பிலேயே உள்ளது !

முன்னாலேயே மூணு விஷயம் சொல்லிடுறேன்.

1. எனக்கு அஜித் பிடிக்கும். ஆனாலும் அவர்  Fan அல்ல. 
2. பெரும்பாலான விமர்சனங்கள் பற்றி என் கருத்தும் சுருக்கமாய் கொடுத்துள்ளேன்  
3. இது ஒரு பரிசோதனை பதிவு !

அனைத்திலிருந்தும் ஓரிரு வரிகள் தந்திருப்பதால், இதுவே ஒரு விமர்சனம் வாசித்த எண்ணத்தை ஒருவேளை தரக்கூடும் !


அஜித் show stealer

MSK / Saravana

நிறைய தோல்விகள் தந்தாலும் அஜித்தின் ஒப்பனிங் எப்போதும் போல செம. வீட்டு பக்கம் இருக்கும் ஒரு காம்ப்ளெக்ஸ் தியேட்டரின் இன்றைய இருபத்தியெட்டு ஷோக்களும் ஹவுஸ்புல், புக்கிங் தொடங்கிய சில மணிகளில். காலை ஐந்து மணிக்கு அப்படியொரு கூட்டம் அப்படியொரு ஆரவாரம்.


மங்காத்தா - விதிகளை உடைத்த அஜித்


வலைமனை சுகுமார்

மிக சுருக்கமான விமர்சனம் தந்தாலும் படம் நல்லாருக்கு என சொல்லி விட்டார் சுகுமார்

"தமிழ் சினிமா ஹீரோக்கள் இதையெல்லாம் பண்ணக்கூடாது என இலக்கணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் அந்த இலக்கணங்களை கடைப்பிடிப்பது அவசியம். கதாநாயகியை ஏமாற்றாதது, கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது, உண்மையான வயதை மறைப்பது என மாஸ் ஹீரோக்களுக்குண்டான அத்தனை இலக்கண விதிகளையும் துணிச்சலாக உடைத்து மங்காத்தா விளையாடி இருக்கிறார் அஜித்".


மங்காத்தா – வை ராஜா வை


கேபிள் சங்கர்

படம் நல்லாருக்கு; நிச்சயம் ஓடும் என சொல்லி விட்டார் (இவர் இப்படி சொல்வது rare-தான்)

"டூயட் பாடவில்லை, ஏழை குழந்தைகளை தூக்கி வைத்து, ஆயாக்களை கட்டிக் கொண்டு பாடவில்லை. நான் வளர்ந்ததே உன்னால்தான் என்று பார்வையாளர்களை பார்த்து பாடவில்லை. ஆனால் இதுவெல்லாம் இல்லாமல் அஜித் ஒரு அஜித் படம். பல சமயங்களில் ஓவர் பில்டப் சொதப்பிவிடும். ஆனால் அதே சமயம் ஓவர் பில்டப் சும்மா எகிறி அடித்து தூள் பரத்தவும் செய்யும். மங்காத்தா ரெண்டாவது வகை. சும்மா அடித்து தூள் பரத்தியிருக்கிறார்கள்".

மங்காத்தா ஹாட் விமர்சனம் 

பதிவர் சார்: உங்க பேர் என்னங்க? ப்ளாக் பார்த்தா தெரியலை!

"ஹீரோயின் த்ரிஷாவுக்கு வேலையெ இல்லை எனலாம், அஜித்தை உண்மையாக‌ காதலிக்கும் த்ரிஷாவுக்கு காதல் ரசமெ வரவில்லை. ஆன்ட்ரியா, அஞ்சலியை வீணடித்திருக்கிறார்கள்.

குறைகளை அனைத்தையும் தவிர்த்தால், ரசிர்களுக்காக‌ ஆடிய‌
மங்காத்தா ஆட்டத்தில் அஜீத்தும் இயக்குநர் வெங்கட் பிரபுவும் வென்றிருக்கிறார்கள்.."

CP பிரவீன்

"இந்த படத்துக்கு அஜித் வாய்க்குள்ளேயே சென்சார் போர்டு உறுப்பினர்கள் ஒக்காந்து இருந்தாங்க போல. அவர் வாயை திறந்தார்னாலே வெறும் பீப்… பீப்.. சத்தம் தான். அவ்வளவு மோசமான கெட்ட வார்த்தைகள்."

தல-க்காக முதல்நாள் முதல் ஷோ

நாஞ்சில் பிரதாப்

எந்தெந்த படங்களிலிருந்து உருவினார்கள் என்ற விவரத்துடன் பிரதாப் விமர்சனம் சுவாரஸ்யம் !

"எல்லாப்படங்களிலும் "ஹேக்" செய்ய ஐஐடி ட்ராப் அவுட், ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட்டை கூப்பிடுவதை பார்த்தால் ஐஐடி-யில் "ஹேக்" செய்வது எப்படி என்பதற்கு தனியாக க்ளாஸ் வைத்து சொல்லிக்கொடுக்கிறார்களா என சந்தேகமாக இருக்கிறது. ஐ.டி.ஐ க்கு கூட போகாத நம்ம கேப்டனை இந்த டெக்னாலஜீ விசயத்துல அடிச்சுக் முடியாது. பவர்பாயிண்ட் பிரசன்டேஷனை வைத்து வாசிம்கானின் இருப்பிடத்தையும், நெட்வொர்க்கையும் கண்டுபிடிக்கும் அளவுக்கு தமிழ்சினிமாவில் யாருக்கும் டெக்னாலஜீ பத்தி தெரியவில்லை."


கவிதை வீதி சௌந்தர்

ரொம்ப சீக்கிரம் பதிவு போட்டவர்களுள் ஒருவர். அஜீத் பேன் என சொல்லி விட்டார். எனவே அவருக்கு இந்த படம் பிடிப்பது இயல்பு தான் .

"இசையால் அத்தனைப்பாடல்களையும் அசத்தியிருக்கிறார் யுவன். விளையாடு மங்காத்தா, பல்லேலக்கா, மற்றும் இவன் அம்பானி பரம்பரைடா பாடல்கள் தியாட்டரை கலக்குகிறது. ஆடாமல் ஜெயிச்சோமடா என்று அஜித் ஆடும் போது ரசிகர்களால் அமைதிகாக்க முடியவில்லை."

பிரபாகரனின் தத்துபித்துவங்கள் 

இவரது ப்ளாக் நீண்ட நாளாகவே உள்ளே போக முடியலை. இன்றும் அப்படியே. கிளிக் செய்தாலே இப்படி தான் மெசேஜ் வருகிறது.

Something went wrong while displaying the webpage ! To continue reload or go to another page

எந்த கம்பியூட்டரில் இருந்து பார்த்தாலும் இதே நிலை தான் !!
என்னென்னு கொஞ்சம் பாருங்க பிரபா!

மங்காத்தா- நீண்ட நாட்களுக்கு பின் அஜித்தின் ஹிட்


ஜெயந்தனின் தர்பார்


படத்தின்ட ஹை லைட்டே படம் முடிஞ்சதும் எழுத்தோட்டத்தோடு வரும் ஷூட்டிங் ஸ்போட் சீன்கள் தான்... செம காமெடி...

மொத்தத்தில் தொடர் தோல்விக்கு பிறகு விஜய்க்கு எப்படி காவலன் அமைந்ததோ அதே போல் அஜித்துக்கு மங்காத்தா.

மங்காத்தா "மச்சி ஓபன் தி பாட்டல்"

Suresh Kumar

தயாநிதி அழகிரி தயாரிப்பில் கலாநிதி மாறன் வெளியீட்டில் வந்ததாலோ என்னவோ தவறு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே பணத்தை அமுக்கி கொள்வது போல் படம் அமையுது. வெங்கட் பிரபு 2Gயை நினத்து தான் ..............எடுத்தாரோ ?

CP . செந்தில் குமார்

இவர் சளைக்காமல் எல்லா படத்துக்கும் வசங்களை நோட் பண்ணி எழுதுவார். ஆனால் நான் அவற்றை எப்போதும் வாசிக்க மாட்டேன். சாய்ஸில் விட்டுடுவேன் ! இயக்குனரிடம் கேட்கும் கேள்விகள் மட்டும் சுவாரஸ்யம் !


யுவக்ரிஷ்ணா

சுருக்கமான, லக்கி பாணி கிண்டலுடன் கூடிய விமர்சனம்

"ஒரு படத்தில் அதிகபட்சம் நான்கைந்து ட்விஸ்ட் இருக்கும். மாஸ்ராஜா ரவிதேஜாவின் படமென்றால் இருபது இருபத்தைந்து ட்விட்ஸ்ட். மங்காத்தா முழுக்க முழுக்க ட்விஸ்ட்டுதான். படம் முடிந்ததும் தலையெல்லாம் கிறுகிறுத்து விடுகிறது. இரண்டரை மணி நேர படத்துக்கு எழுபத்தைந்து சீன்கள். இந்தப் படத்தில் ஒரு இருநூறு சீன் இருக்குமோ?"


ஜெட்லி

நண்பர் ஜெட்லி அதிகாலை அஞ்சு மணிக்கு படம் பார்த்து விட்டு கொட்டாவியுடன் எழுதிய விமர்சனம்

அஜித் அர்ஜுனை அக்சன் கிங் என்று அழைக்கும் போது தியேட்டரில் பயங்கர விசில். அதே போல் அர்ஜுனும் தல என்று சொல்வார்...அட அட என்னா விசில்... விசில் கூட ஒரு படத்தின் வெற்றியை முடிவு பண்ணும்.

மங்காத்தா இரண்டாவது பில்லாவா -விமர்சனம்



இளைய சிங்கம் 

"படத்தில் எத்தனை கேரக்டர் என்று எண்ணுவதற்கே தனி போட்டி வைக்கலாம் அவர்கள் அத்தனை பேரையும் அறிமுக படுத்தவே 45 நிமிடம் காலி மொத்தத்தில் இரண்டாவது பில்லாவா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்"


இட்லி வடை

ஹீரோயின் த்ரிஷா பற்றி சொன்னது ரசித்தேன்.

"த்ரிஷா தான் படத்தில் ஹீரோயின். ஏன் என்றால் அவர் தான் தலயுடன் ஒரு டூயட் பாடுகிறார்!. ஐபிஎல் சூதாட்டம் என்று வருவதாலோ என்னவோ, (தோனி புகழ்) லட்சுமிராயும் படத்தில் வந்துவிடுகிறார். சொல்ல மறந்துவிட்டேன் ஆண்டரியா சில காட்சிகளில் வருகிறார்.

இட்லிவடை மார்க் 50/100 ! ( தலயின் ஐம்பதாவது படம் என்பதால் இந்த மார்க் )"

***
வேறு ஏதேனும் விமர்சனங்கள் தவற விட்டிருந்தால் லிங்க் குடுங்கள் நண்பர்களே !

11 comments:

  1. விமர்சனத்திற்க்கு ஒரு விமர்சனம்....

    சூப்பர்..

    ReplyDelete
  2. புதுசு புதுவா ரூட்டை பிடிச்சி போயிகிட்டே இருங்க....

    ReplyDelete
  3. விமர்சனத்திர்க்கு விமர்சனம் பதிவு வித்யாசமா இருக்கு, மோகன்.

    ReplyDelete
  4. இந்த பதிவிற்கு நா ஒரு விமர்சனம் போட்டுடறேன்.. ஓகேவா..

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம்! புதிய முயற்சி மோகன்....

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு. உங்கள் பதிவுகளை யுடான்ஸ் திரட்டியில் இணைத்து மேலும் பலரை சென்றடைய செய்வீர். பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் ஒரே திரட்டி.

    http://udanz.com

    ReplyDelete
  7. நன்றி சௌந்தர். பதிவு போட்டு அடுத்த சில நிமிடத்தில் எப்படி ஆஜர் ஆனீங்க?
    **
    நன்றி ராம்வி மேடம்
    **
    மாதவா: ஏஏஏஏன் ?
    **
    வெங்கட்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  8. சார் நான் ஒரு சதாரண பதிவாளன் எழுதியதும் சில பதிவுகளே இருந்தும் எனது மங்காத்தா விமர்சனத்தை உங்கள் பக்கத்தில் பெரும் பதிவர்களின் விமர்சனத்துடன் சேர்த்ததற்கு நன்றி ...இது என்னை நிச்சயம் மேலும் எழுத துண்டும்

    ReplyDelete
  9. இட்லி வடையில் ஒரு சுவையான பின்னூட்டம்....

    kothandapani said...

    மங்காத்தா .......... சூப்பரான கதை , திருப்பங்கள் கொண்டது.

    மொத்த பணத்தையும் ஒரே கொள்ளையனே எடுத்து சென்று விடுவானோ என்று அனைவரும் எதிர் பார்க்க திடீர் திருப்பம்.

    அனைவருக்கும் காதில் பூ சுடிவிட்டு இன்னொரு கொள்ளையன் திடீர் என்ட்ரி. முடிவில் இரண்டு பேரும்
    கொள்ளை பணத்தை கூறு போட்டு கொள்கின்றார்கள். தயாநிதி முதலில் வெளியிடுவதாக சொல்லி கடைசியில் கலாநிதியும் கலந்து கொண்டதை
    கதை நினைவு படுத்துவதாக யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  10. விகடன் விமர்சனம்....

    42/100

    'தல ரசிகர்’களுக்காக 'தல ரசிகர்’களால் உருவாக்கப்பட்ட 'தல’ சினிமா!

    அஜீத் அநியாயத்துக்குக் கெட்டவர். சமூகத்துக்கு நல்லது செய்யும் மாஸ் ஹீரோ படங்களின் 'கோல்டன் ரூல்’ விதியை உடைத்ததற்கு வெங்கட் பிரபுவுக்கு ஒரு வெல்டன்!

    அஜீத்தின் சரக்குக் கச்சேரிக்கு சைடு டிஷ் ஊறுகாயாக த்ரிஷா. (தம்துண்டு கேரக்டருங்கோ!) அளவாக, அழகாக இருக்கிறார்... அவ்வளவே!

    அஜீத்தை நம்பி ஆடலாம்!

    ReplyDelete