Friday, January 27, 2012

காஞ்சி: சித்ரகுப்தனுக்கு கோயில் !! எந்த திசையில் தீபம் ஏற்றவே கூடாது?

காஞ்சிபுரம் குறித்த இந்த தொடருக்கு உங்கள் தொடர் ஆதரவு ஆச்சரிய படுத்துகிறது. "கோயில்கள் குறித்த பதிவு நிறைய பேர் வாசிக்க மாட்டார்கள்" என்று சொன்ன அய்யாசாமிக்கு செம பல்பு கொடுத்த   உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த பதிவில் காஞ்சியின் வேறு சில சிறப்பான கோயில்களையும் மற்றொரு நல்ல ஹோட்டலையும் பார்க்கலாம்

***
கச்சபேஸ்வரர் கோவில் ! இதுவும் காஞ்சி அம்மன் கோயிலுக்கு அருகே நடந்து போகும் தூரத்தில் தான் உள்ளது. இதனை ஒரு சிவ விஷ்ணு ஆலயம் என்று கூட சொல்லலாம். காரணம் முக்கிய சிவன் சன்னதிக்கு எதிரிலேயே பெருமாளுக்கும் சந்நிதி உள்ளது.

கச்சபேஸ்வரர் கோவில்
" கச்ச" என்றால் ஆமை என்று பொருள். இந்த இடத்தில், பெருமாள் ஆமை வடிவில் வந்து சிவனுக்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம். இங்கு உள்ள கோயில் குளத்தில் ஏராளமான ஆமைகள் உண்டு.
கோயிலின் நுழைவு வாயில்
இந்த கோயிலில் நான் மிக ரசித்த விஷயம் ஒன்று உண்டு. சிவனை மிக வழிபட்ட வாழ்ந்து மறைந்த மனிதர்களான நாயன்மார்களுக்கு இங்கு சிலை இருப்பதுடன் அவர் எதனால் சிறப்பு பெற்றார் என்பதை ஓரிரு வரிகளில் எழுதி வைத்துள்ளனர். உதாரணத்துக்கு சில:

அதிபத்தர்: இந்த நாயன்மார் ஒரு மீனவர். கடலில் பிடிக்கும் முதல் மீன் சிவனுக்கு என்று கடலில் விட்டு விடுவாராம். இவரை சோதித்து பார்க்க ஒரு முறை முதல் மீன் தங்க மீனாக வர வைத்தாராம் சிவன். அதையும் " சிவனுக்கு" என்று சொல்லி கடலில் போட்டாராம் அதிபத்தர்.

புகழ் சோழர்: போரில் வென்ற தலைகளில் சடை முடியுடன் கூடிய தலை கண்டதும் சிவபக்தனை கொன்ற பாவம் தீர தீக்குள் புகுந்தவர்.


நாங்கள் சென்ற போது அங்கு ஒருவர் விஷ்ணு துர்கை சந்நிதி அருகே அருமையாக நாதஸ்வரம் வாசிக்க, அந்த பின்னணி இசையுடன் இந்த கோயிலை ஒரு வீடியோ எடுத்தேன் பாருங்கள்



கோபுரத்தில் அமர்ந்திருக்கும் கிளிகள்

***********
காஞ்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது சித்ரகுப்தன் கோயில். நாங்கள் சென்ற ஞாயிறு காலை செம கூட்டம் ! சிறிய கோயிலாக தான் உள்ளது.உலகிலேயே சித்திர குப்தனுக்கு கோயில் இருப்பது இங்கு தான் என்பது குறிப்பிட தக்கது







இங்கே விளக்கு ஏற்றுவது குறித்து படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

கிழக்கே தீபம் ஏற்ற - துன்பம் ஒழியும் !

மேற்கே தீபம் ஏற்ற - கடன் தொல்லை/ பங்காளி பகை நீங்கும் !

வடக்கே தீபம் ஏற்ற - திருமண தடை/ கல்வி தடை நீங்கும் !

தெற்கு திசை நோக்கி மட்டும் தீபம் ஏற்ற கூடாதாம் !!

***

மேலும் இங்கு ஸ்ரீமன் நாராயணன் வாக்கு என்று, " கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை பின் பற்றினாலே போதும்... வாழ்வில் முன்னேறலாம் !" என்று போட்டிருந்தார்கள். ஆர்வமாய் ஒன்று தானே Follow செய்தால் போச்சு என்று படித்தால், எல்லாமே பின் பற்ற கஷ்டமாய் இருந்தது.. உதாரணத்துக்கு சில..

தன்னலமற்ற சேவை

அவா விடுத்தல்

பெற்றோர் பேச்சிற்கு முழுதும் கீழ்படிதல்

*****************
சித்ர குப்தன்   கோயிலுக்கு சற்று எதிரிலேயே எமனுக்கும் கோயில் உள்ளது. நாங்கள் சென்ற காலை பதினோரு மணிக்கே பூட்டியிருந்தது. அதிகம் திறப்பதில்லை என்றார்கள். மிக சிறிய கோயிலாக தான் தெரிகிறது. வெளியே உள்ள சுவரில் சிவன் ஓவியம் தான் உள்ளது. உள்ளே எம தர்மருக்கு விக்ரகம் இருக்கும் போலும் !!


சித்திர குப்தன் கோயில் எதிரில் உள்ள எமதர்மன் கோவில் 
*************



காஞ்சிபுரத்தில் உள்ள மற்றொரு நல்ல சிறு ஹோட்டலை அறிமுக படுத்துகிறேன். காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அருகிலேயே உள்ளது அன்னபூர்ணா பவன் ஹோட்டல். பிராமண குடும்பம் ஒன்று அவர்களே சமைத்து பரிமாறுகிறார்கள். மதிய சாப்பாடு நாங்கள் சாப்பிட்டோம். குறிப்பாய் வத்தல் குழம்பு செமையாக இருந்தது. காய்கறிகளும் அருமை. நாற்பது ரூபாய்க்கு மிக நிறைவான சாப்பாடு. காஞ்சி காமாட்சி கோயில் சென்றால், வெளியே வந்த பின் நிச்சயம் இங்கு சாப்பிடலாம் நீங்கள் !







அடுத்த பதிவில் :


பாண்டவ தூத பெருமாள் - மகா பாரதத்தில் இடம் பெற்ற கோவில்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தோர் அவசியம் செல்ல வேண்டிய கோவில்

கைலாச நாதர் - ஒரு வித்தியாசமான கோவில்

26 comments:

  1. சூப்பர் கவரேஜ்.

    ஹி ஹி ஒரு விஷயம் ஃபாலோ பண்ணனும்ன்னு நினைக்கிறதே கஷ்டம்.

    ReplyDelete
  2. // அதிபத்தர்: இந்த நாயன்மார் ஒரு மீனவர். கடலில் பிடிக்கும் முதல் மீன் சிவனுக்கு என்று கடலில் விட்டு விடுவாராம் //

    கிட்டி-புல்லு அப்படி ஒரு விளையாட்டு..(அதான் 'கில்லி')
    நாங்க வேளையாடச்சே.. முதல்ல எவ்ளோ ஸ்கோர் வருதோ அத்தனையும் சாமிக்கு விட்டுடுவோம்...


    //மேற்கே தீபம் ஏற்ற - கடன் தொல்லை/ பங்காளி பகை நீங்கும் !
    வடக்கே தீபம் ஏற்ற - திருமண தடை/ கல்வி தடை நீங்கும் !

    கிழக்கு நோக்கி
    விளக்கேத்தினாலே போதுமே..
    துன்பம் விளகும்னா.. எந்த வகை (கடன் தொல்லை/ பங்காளி பகை / வேலை, கல்யாணம்..) துன்பமா இருந்தாலும் விலகிடுமே .

    //பெற்றோர் பேச்சிற்கு முழுதும் கீழ்படிதல் //

    ஹி.. ஹி..
    நாமதான் செய்யல....
    நம்ம புள்ளைங்கலாவது செய்யறாங்களானு பாப்போம்..

    //வத்தல் குழம்பு செமையாக இருந்தது. காய்கறிகளும் அருமை. நாற்பது ரூபாய்க்கு மிக நிறைவான சாப்பாடு. காஞ்சி காமாட்சி கோயில் சென்றால், வெளியே வந்த பின் நிச்சயம் இங்கு சாப்பிடலாம் நீங்கள் !//

    Thanks for the info

    // பாண்டவ தூத பெருமாள்//

    ஒ!.. அவரோட நகமே ஒரு அடிக்கு (more than one foot) மேல இருக்குமே..
    ஜைஜாண்டிக்..

    ReplyDelete
  3. காஞ்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது சித்ரகுப்தன் கோயில். நாங்கள் சென்ற ஞாயிறு காலை செம கூட்டம் ! சிறிய கோயிலாக தான் உள்ளது.உலகிலேயே சித்திர குப்தனுக்கு கோயில் இருப்பது இங்கு தான் என்பது குறிப்பிட தக்கது

    Oh.. Thanks for the infn

    ReplyDelete
  4. பதிவும் படங்களும் அருமை.

    தீபம் ஏற்றுவது பற்றிய குறிப்பு சிறப்பு.

    சித்திரகுப்தன், யமன் கோவில்கள் எனக்கு புதிய தகவல்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. அனைத்து செய்திகளுமே அருமை! ஹோட்டல் பற்றிய தகவல் மிகவும் பயன்படும். புகைப்படங்கள் எல்லாமே மிகவும் அழகு!!

    ReplyDelete
  6. உங்கள் இந்த தொடரின் மூலம் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது நன்றி பாஸ் தொடருங்கள் தொடர்கின்றேன்

    ReplyDelete
  7. //இங்கு உள்ள கோயில் குளத்தில் ஏராளமான ஆமைகள் உண்டு.//

    ரியலி?! இதுவரை பார்த்ததில்லை :(


    வாவ்! எமதர்மர் கோயில் எனக்கு புதுசு..இந்த முறை போகும்போது பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. நல்ல வீடியோ...

    பின்னணியில் இசை மிஸ்ஸிங்!

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்... காஞ்சி - பழைய பதிவுகளையும் படிக்க வேண்டும்... ஒவ்வொன்றாய் படிக்கிறேன்....

    ReplyDelete
  9. கோவிலுக்கு சென்று வந்த திருப்தி ! தொடருங்கள் நண்பரே ! படங்களும் அருமை ! நன்றி !

    ReplyDelete
  10. விளக்கங்களுடன் படங்களைப் பதிவிட்டாலே 'நாங்களும் உங்களுடன் கூடவே வந்தது போல உணர்வு' என்று சொல்லத் தோன்றும். வீடியோ என்றால் இன்னும் அந்த உணர்வு அசலானது.

    ReplyDelete
  11. அருமையான பகிர்வு. வீட்டு சாப்பாட்டின் சுவையைத் தந்திருக்கும் அன்னப்பூர்ணா பவன்.

    தொடருங்கள்.

    ReplyDelete
  12. //வித்யா said...

    சூப்பர் கவரேஜ்.

    ஹி ஹி ஒரு விஷயம் ஃபாலோ பண்ணனும்ன்னு நினைக்கிறதே கஷ்டம்.//
    *********
    ஆமாங்கோ ஆமா !

    ReplyDelete
  13. விரிவான கமண்ட்டுக்கு மிக நன்றி மாதவா

    ReplyDelete
  14. ரிஷபன் சார்: நன்றி

    ReplyDelete
  15. ராம்வி: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  16. மனோ சாமிநாதன் said...

    அனைத்து செய்திகளுமே அருமை! ஹோட்டல் பற்றிய தகவல் மிகவும் பயன்படும். புகைப்படங்கள் எல்லாமே மிகவும் அழகு!!
    *****
    மகிழ்ச்சியும் நன்றியும் மேடம் நலமா இருக்கீங்களா?

    ReplyDelete
  17. K.s.s.Rajh said...

    உங்கள் இந்த தொடரின் மூலம் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது நன்றி பாஸ் தொடருங்கள் தொடர்கின்றேன்
    **
    நன்றி ராஜா

    ReplyDelete
  18. ரகு: எம தர்மர் கோவில் சென்று பார்த்தால் அவசியம் அது பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். ஆட்டோ காரர் " இது தான் அந்த கோவில்" என்றார். பூட்டி வேறு இருந்தது. அது குறித்த தகவல் அறிய எனக்கும் ஆசையே. எந்த இடம் சென்று வந்தாலும் அதன் பின் அந்த இடம் குறித்த தகவல் மேலும் அறிய நிறைய ஆசை வருகிறது. உதாரணமாய் நான் சென்று வந்த இடங்களான ஹைதராபாத், கூர்க் போன்ற இடங்கள் குறித்த செய்தி என்றால் ஆர்வமாய் பார்ப்பேன். அது போல தான் இந்த கோயில் பற்றி அறிய விரும்புவதும்.

    ReplyDelete
  19. வெங்கட் நாகராஜ் said...

    நல்ல வீடியோ...

    பின்னணியில் இசை மிஸ்ஸிங்!
    *********
    நன்றி வெங்கட். தவறான வீடியோ முன்பு சேர்த்திருந்தேன். இப்போது சரி செய்து சரியா வீடியோ இணைத்துள்ளேன். சுட்டி கட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  20. திண்டுக்கல் தனபாலன் said...

    கோவிலுக்கு சென்று வந்த திருப்தி ! தொடருங்கள் நண்பரே ! படங்களும் அருமை ! நன்றி !

    *********
    மகிழ்ச்சி நன்றி தனபாலன்

    ReplyDelete
  21. ஸ்ரீராம். said...


    விளக்கங்களுடன் படங்களைப் பதிவிட்டாலே 'நாங்களும் உங்களுடன் கூடவே வந்தது போல உணர்வு' என்று சொல்லத் தோன்றும். வீடியோ என்றால் இன்னும் அந்த உணர்வு அசலானது.
    *******
    நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  22. ராமலக்ஷ்மி said...

    அருமையான பகிர்வு. வீட்டு சாப்பாட்டின் சுவையைத் தந்திருக்கும் அன்னப்பூர்ணா பவன்.

    தொடருங்கள்.

    ***

    நன்றி ராமலட்சுமி மேடம்

    ReplyDelete
  23. Rathnavel said...

    நல்ல பதிவு.
    நன்றி.
    **
    நன்றி ஐயா

    ReplyDelete
  24. நாயன்மார்களை பற்றிய தகவல்களும் இருப்பது சிறப்பு...

    தகவல்களும், படங்களும் சிறப்பாக இருந்தது...

    ReplyDelete
  25. //உலகிலேயே சித்திர குப்தனுக்கு கோயில் இருப்பது இங்கு தான் என்பது குறிப்பிட தக்கது//

    உங்கள் தகவலுக்கு: சித்திரபுத்திரனுக்கு போடிநாயக்கனூர் அருகே ஒரு கோயில் உள்ளது - போடி-தேனி செல்லும் வழியில் - தீர்த்தத்தொட்டி சுப்பிரமணியர் கோயிலுக்கு பக்கத்தில்.

    நன்றி - ஷோபன்

    ReplyDelete
  26. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete