Saturday, January 28, 2012

சுஜாதாவின் விபரீதக் கோட்பாடு

சில நேரங்களில் நாவல்களின் தலைப்புக்கும் கதைக்கும் உள்ள தொடர்பை மூளையை கசக்கி கொண்டு தேட வேண்டும். ஆனால் இந்த நாவலுக்கு இதை விட அருமையான தலைப்பு இருக்க முடியாது.

கணேஷ்- வசந்த் நாவல்கள் பெரும்பாலும் கதாசிரியர் சொல்லும் பாணியில் தான் எழுத பட்டிருக்கும். அரிதாக இந்த நாவல் கணேஷ் பார்வையில் (நான் என்று துவங்கி கதை சொல்வதாக) அமைந்துள்ளது


கணேஷை சந்திக்க வரும் ஒரு இளைஞன், காணாமல் போன தன் மனைவியை கண்டுபிடித்து அவளிடமிருந்து டைவர்ஸ் வாங்கி தர சொல்கிறான். அவர்கள் இருந்த வீட்டுக்கு கணேஷ் சென்று பார்வையிட சில தடயங்கள் கிடைக்கிறது. அதனை தொடர்ந்து அவள் ஊட்டியில் இருக்கிறாள் என தெரிந்து அவளுடன் கணேஷ் போனில் பேசுகிறான். பின் நேரில் சந்திக்க செல்ல, அவள் அதற்குள் கொலை செய்ய படுகிறாள். அந்த கொலையை செய்தது யார் என கணேஷ்- வசந்த் கண்டு பிடிப்பது தான் கதை.

நாவலை எடுத்தால் கீழே வைக்காமல் ஒரு மணி நேரத்தில் படித்து முடித்து விடலாம். அவ்வளவு விறுவிறுப்பு. நமக்கு யார் மீது சந்தேகம் உள்ளதோ அது சரியாகவே உள்ளது. ஆனால் அவள் வீட்டை விட்டு ஓடியதும், கொலைக்கான காரணங்களும் தான் நாம் நினைக்க முடியாத படி இருக்கும்.

பெண்களை வசந்த் பார்வையில் வர்ணிக்கும் சுஜாதா ஸ்டெயில் அப்படியே !! உதாரணமாய் " அவள் ஆண்பிள்ளை மாதிரி பனியன் அணிந்திருந்தாலும், பெண் என்பதற்கான அடையாளங்கள் நிறையவே தெரிந்தன.. நிறையவே" ஆண்கள் பலரும் இதனை வாசித்து சிரிப்பார்கள் என்றாலும் பெண்கள் இதனை வாசிக்கும் போது என்ன நினைப்பார்கள் என தெரியலை.

கல்யாணம் செய்து கொள்ளவே மாட்டேன் என இருப்பவனிடம் எதோ ஒரு தவறு உண்டு என அவ்வப்போது சொல்வார் சுஜாதா ! இந்த கதையிலும் அக்கருத்து அடி நாதமாக தெரிகிறது.


பெண்ணை வசியபடுத்தி படமெடுக்கும் விஷயத்தை அவர் எழுபதுகளின் துவக்கத்தில் எழுதியது ஆச்சரியமாக உள்ளது. பின்னாளில் ப்ரேமானந்தாக்களும், நித்யானந்தாக்களும் அடித்த லூட்டியை பல வருடங்களுக்கு முன்பே எழுதி விட்டார் வாத்தியார் !

ஒரு சுவாரஸ்யமான திரில்லர் கதையை சுஜாதா நடையில் கணேஷ்- வசந்த் என்கிற சுவாரஸ்யத்துடன் வாசிக்க விருப்பம் எனில் இந்த புத்தகத்தை நீங்கள் நாடலாம்.

நாவல்: விபரீத கோட்பாடு
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 60

டிஸ்கி: நாவலை வாசித்துவிட்டு எனக்கு பார்சல் செய்த நண்பர் ரகுவிற்கு நன்றி !

19 comments:

  1. சுஜாதா அவர்களின் எந்த நாவலை எடுத்தாலும், முழுவதும் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது.அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும்.
    விபரீதக்கோட்பாடும் அது போலதான்.

    நல்ல விமர்சனம்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  2. அண்ணே அழகான விமர்ச்சனம்...

    சுஜாதா சுஜாதா தான்....

    ReplyDelete
  3. பெண்களும் ரசிப்பார்கள் என்றே நம்புகிறேன். தலைவரின் எழுத்து ஒரு குறும்புத்தனத்துடன் இருக்குமே தவிர ரொம்பவும் அத்து மீறாது.

    அடுத்தது "வஸந்த் வஸந்த்" வாசிச்சு பாருங்க...அதுவும் சூப்பரா இருக்கும்.

    ReplyDelete
  4. 'காயத்ரி' படிச்சு பாத்தீங்களா..? அதுலயும் நெறைய வசனங்கள் இந்த மாதிரி இருக்கும்...ஆனா அந்த பொன்னே சொல்ற மாதிரி இருக்கறதால வக்கிரமா தெரியாது... அந்த கதைலயும் கணேஷும் வசந்தும் தான் துப்பு துலக்குவாங்க...

    ReplyDelete
  5. இந்த புத்தகம் மிஸ் ஆயிடுச்சு...சீக்கிரம் வாங்குறேன்...

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. //நாவலை எடுத்தால் கீழே வைக்காமல் ஒரு மணி நேரத்தில் படித்து முடித்து விடலாம். //

    தலைவரின் பெரும்பாலான நாவல்கள் இந்த வைக்கவே முடியாத ரகம்தான்...


    நல்லதோர் விமர்சனம் மோகன்.... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. sms இல்லாத நாட்களிலேயே அந்த அளவுக்கு ரத்தின சுருக்கமான எழுத்து நடை இவருக்கு மட்டுமே. பொழுதுபோக்கான கதை இது.

    சுஜாதா எழுதிய பல கதைகள் தன்னிலையில் எழுதப்பட்டவை. அதுதான் தனக்கு எளிதாக இருக்கிறது என்று ஒரு முறை கூறியிருக்கிறார்

    ReplyDelete
  9. உங்களுக்கும், உங்களுடன் இந்தப் புத்தகத்தைப் பகிர்ந்து கொண்ட ரகுவுக்கும் நன்றி. இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னொரு விமர்சனம்...

    ஒரு சங்கம் செய்யும் ஒரு விபரீத செயலைக் கண்டுபிடிக்கும் கதை. தம்புசெட்டித் தெருவுக்கு ஒரு பெண்ணும் ஒரு இளைஞனும் கணேஷ் வசந்தின் அலுவலகத்திற்கு வருவார்கள். இருவரும் விரைவில் மணந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி திடிரெனக் காணாமல் போய் விடுகிறார். எனவே மனைவியைக் கண்டுபிடித்து விவாகரத்துப் பெற வேண்டும். இது அந்த இரண்டாவதாக மணந்து கொள்ளப் போகும் பெண்ணின் பிடிவாதத்தால் தான். கணேஷ் வசந்த் சரி என்று ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு போவார்கள். அங்கு முதல் மனைவியின் அறையில் சில ஃப்லிம் சுருள்களை கணேஷ் எடுத்து வைத்துக் கொள்வார், கூடவே ஒரு நோட்டிலிருந்து மேல் காகிதத் துண்டையும். அங்கு அந்த இளைஞனின் சித்தப்பா ஒருவரையும் சந்திக்க நேரிடும். சித்தப்பாவின் உதவியாளராகத்தான் இரண்டாவது பெண் அங்கு சேர்ந்து அந்த இளைஞனைக் காதலித்து மணமுடிக்க இருப்பார். அந்த ஃப்லிம் சுருள்கள் அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்த்தும். கணேஷ் முதல் மனைவி ஊட்டியில் இருப்பதைக் கண்டு பிடித்துவிடுவார். ஆனால் இவர்கள் அங்கு போய் சந்திக்கும் முன் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு இருப்பார். இது நிறைய சந்தேகங்களை எழுப்பும். அவர் ஏன் ஊட்டி யாருக்கும் தெரியாமல் சென்றார். அந்த வீட்டில் என்ன பிரச்சினை என்பதைக் கண்டுபிடிப்பதே கதை.ஏதோ ஒரு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விபரீதத்தை அந்த சங்கம் நிறைவேற்றும் குற்றத்தை இறுதியில் கண்டுபிடிப்பார்கள்.

    ReplyDelete
  10. அவருடைய நாவல்கள் எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை ! பகிர்வுக்கு மிக்க நன்றி சார் !

    ReplyDelete
  11. RAMVI said...
    சுஜாதா அவர்களின் எந்த நாவலை எடுத்தாலும், முழுவதும் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது.
    ***
    சுஜாதாவின் எந்த நாவலும் செம விறுவிறுப்பு தான் நன்றி ராம்வி.

    ReplyDelete
  12. சங்கவி said...
    அண்ணே அழகான விமர்ச்சனம்...

    சுஜாதா சுஜாதா தான்....

    ***

    ஆம். நன்றி சங்கவி

    ReplyDelete
  13. ர‌கு said...
    பெண்களும் ரசிப்பார்கள் என்றே நம்புகிறேன். தலைவரின் எழுத்து ஒரு குறும்புத்தனத்துடன் இருக்குமே தவிர ரொம்பவும் அத்து மீறாது.

    **

    சரியா சொன்னீங்க நன்றி ரகு

    ReplyDelete
  14. மயிலன் said...
    'காயத்ரி' படிச்சு பாத்தீங்களா..? அதுலயும் நெறைய வசனங்கள் இந்த மாதிரி இருக்கும்...ஆனா அந்த பொன்னே சொல்ற மாதிரி இருக்கறதால வக்கிரமா தெரியாது... அந்த கதைலயும் கணேஷும் வசந்தும் தான் துப்பு துலக்குவாங்க...

    ***

    அப்படியா சார்? வாசிக்கிறேன்

    ReplyDelete
  15. வெங்கட் நாகராஜ் said...

    தலைவரின் பெரும்பாலான நாவல்கள் இந்த வைக்கவே முடியாத ரகம்தான்...
    ***
    நன்றி வெங்கட்

    ReplyDelete
  16. பின்னோக்கி said...
    sms இல்லாத நாட்களிலேயே அந்த அளவுக்கு ரத்தின சுருக்கமான எழுத்து நடை இவருக்கு மட்டுமே. பொழுதுபோக்கான கதை இது.
    ***
    சுஜாதா நடையை sms உடன் ஒப்பிட்டது அழகு. நீண்ட நாளுக்கு பின் வருகை தந்தமைக்கு நன்றி பின்நோக்கி

    ReplyDelete
  17. BalHanuman said...
    உங்களுக்கும், உங்களுடன் இந்தப் புத்தகத்தைப் பகிர்ந்து கொண்ட ரகுவுக்கும் நன்றி. இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னொரு விமர்சனம்...
    ******
    மகிழ்ச்சி நன்றி பாலஹனுமான்

    ReplyDelete
  18. Rathnavel Natarajan said...
    அருமையான பதிவு.
    நன்றி.

    *******
    நன்றி ஐயா

    ReplyDelete
  19. திண்டுக்கல் தனபாலன் said...
    அவருடைய நாவல்கள் எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை ! பகிர்வுக்கு மிக்க நன்றி சார் !

    **

    நன்றியும் மகிழ்ச்சியும் தனபாலன்

    ReplyDelete