Saturday, March 3, 2012

அரவான் படத்தின் நிஜ ஹீரோக்கள்

அரவான் விமர்சனம் : முதல் பகுதி இங்கே !

வரலாற்று நாவலை எடுக்க நிறைய தைரியம், உழைப்பு, செலவு எல்லாம் வேண்டும். அத்தனை செய்தும் அது நம்மை ஈர்க்காமல் போகும் வாய்ப்பும் உண்டு. அரவானில் நம்மை ஈர்க்க வைப்பது அது பீரியட் படம் என்கிற உணர்வே அதிகம் தெரியாத படி எடுத்தது தான் ! இதற்கு முழு காரணமும் இந்த படத்தின் அசத்தலான டெக்னிகல் டீம் ! அவர்களில் சிலரின் பங்களிப்பு குறித்து ஓர் அலசல்:

வசந்தபாலன்

எனக்கு வசந்த பாலன் மீது அதிக ஈர்ப்பு கிடையாது. கடைசியில் சோக முடிவை (சில நேரம் வலிந்து) வைப்பவர் என்ற குற்றச்சாட்டு எனக்கு உண்டு.


வெயில்: வாழ்வில் தோற்ற மனிதனின் கதை என்கிற அளவில் பிடித்தது. மேலும் ஊரை விட்டு ஓடி போகும் ஒருவன் ஊருக்கு திரும்ப வருவது, அப்போது எப்படி ஏற்று கொள்கிறார்கள் என்கிற விஷயம் சற்று புதிது. ஆனால் பசுபதி பார்ட்டில் நிறைய சினிமா பாரடைசோ பட காப்பி; முடிவு சோகம் வலிய வைத்ததாகவே தோன்றியது.


அங்காடி தெரு: நிச்சயம் வெயிலை விட அதிகம் பிடித்தது. ரெங்கநாதன் தெரு குறித்த கதை; அந்த Sales man - Sales woman குறித்து இத்தனை வலியோடு ஒரு படம் வந்ததில்லை. ஹீரோ- ஹீரோயின்-வில்லன் மூவர் நடிப்பும் பிரமாதம். இறுதியில் அஞ்சலிக்கு கால் போக வைத்து நம்மை கை குட்டை தேட வைத்தார்.

இப்போது அரவான். முந்தைய படங்களை விட இது நிச்சயம் அதிகம் பிடிக்கிறது. (சொல்ல போனால் அவர் படம் ஒன்றை விட அடுத்தது அதிகம் பிடிப்பதை கவனித்திருக்கலாம்) இந்த படத்தில் ஆதிக்கு இணையாக, அவரை விட அதிகம் உழைத்து இவராய் தான் இருக்கும்.

முற்பாதியில் கள்வர்கள் கதை பார்க்க பார்க்க மிக வியப்பு. என்ன ஒரு டீடைலிங் ! 
  • திருட போகும் இடத்தில், சத்தம் வர கூடாது என திருடர்கள் பேசி கொள்ளும் சங்கேத மொழி 
  • எண்ணெய் போட்டு   தாழ்ப்பாளை  திறப்பது; கிழவி இடிக்கிற சத்தத்தின் இடையே, அதே ரைமிங்கில் பூட்டை அடித்து உடைப்பது, 
  • திருட்டை காட்டும் போதே, திருடும் வீட்டின் தகவல் அவர்களுக்கு எப்படி தெரிந்தது என கட் செய்து காட்டும் நேர்த்தி 
என துவக்கத்திலேயே சிக்சர் அடிக்கிறார். 


  • படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களுக்கும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நன்கு வேலை வாங்கியுள்ளார். முக்கிய பெண்கள் அனைவருமே செம அழகு என்பது குறிப்பிடத்தக்கது. 
  • பிற்பகுதியை ஒரு த்ரில்லர் போல, கொலை செய்தது யார் என தவிப்புடன் தேடும் மனநிலையில் கொண்டு போக முடிவு செய்தது மிக நன்று. ஆனால் ஓரிரு இடங்களில் பின்பாதி நொண்டுகிறது. சில இடத்தில் கத்திரி தேவையோ?(குறிப்பாய் அந்த சரச பாட்டு) 
  • படம் முழுதும் விலங்குகள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றையும் பயன் படுத்த எவ்வளவோ அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ("இப்படத்தில் விலங்குகள் அன்போடு பராமரிக்க பட்டன என துவக்கத்தில் ஸ்லைட் போடுகிறார்கள்) 
  • பல சுவாரஸ்ய இடங்கள்: கன்னு குட்டியுடன் ஓடும் ரன்னிங் ரேஸ், ஜல்லி கட்டு இவையெல்லாம் மிக அழகாய், ரசிக்கும் படி உள்ளன.
மூட நம்பிக்கைகளை சாடும் படமாக தான் இதை கொள்ள முடியுமே தவிர, மரண தண்டனைக்கு எதிராய் அல்ல. மகா பாரதத்திலும் சரி, இங்கும் சரி அரவான் பலி தர படுகிறார். அது மரண தண்டனை அல்ல ! 

கள்ளர்களின் அறியாமையை பணக்காரர்களும், மக்களின் மூட நம்பிக்கையை ராஜா போன்றோரும் - exploit செய்வதை மிக subtle-ஆக காட்டி உள்ளனர். குறிப்பாய் நகை திருபவன் திருடன் என்றால், அவனை ஏய்த்து கம்மி பணம் தருபவனும் திருடன் தானே என நம்மை யோசிக்க வைத்து விடுகிறார்!

இப்படம் வேறு வெளிநாட்டு பட காப்பி இல்லை எனில், இதுவரை வசந்த பாலன் எடுத்ததில் By far this is the best film ! அடுத்த படத்திலாவது சோகமான முடிவை அவர் தவிர்க்க பார்த்தால் நலம் !
 ***
அடுத்த ஹீரோ: சு. வெங்கடேசன்  


காவல் கோட்டம் : சாகித்ய அக்காடமி விருது சென்ற வருடம் வாங்கிய வரலாற்று நாவல் ! பொன்னியின் செல்வன் என்கிற வரலாற்று நாவலை படமாய் எடுப்பதாக ரொம்ப வருடங்களாக பலரும் சொல்லி வருகிறார்கள். யாரும் எடுக்கிற மாதிரி தெரியலை ! ஆனால் சுட சுட இப்போ வெளிவந்த வரலாற்று நாவலின் (ஒரு பகுதியை) படமாக்கியுள்ளனர்.

இலக்கிய வாதிகளை, குறிப்பாய் கதாசிரியரையே அழைத்து வந்து கதை வசனம் எழுத வைப்பது எழுத்துக்கு கிடைத்த மிக பெரிய மரியாதை என்று தான் சொல்ல வேண்டும்.

வரலாற்று படங்களில் சுத்த தமிழில் வசனம் பேசி கொல்வார்கள். இங்கு பேச்சு தமிழில் இருப்பது மிக மகிழ்ச்சி.

"திருடர்கள் பாவம் " என நம்மை நினைக்க வைத்து " வயிற்றுக்கு தான் திருடுகிறார்கள்" என நம் மனதையே சற்று மாற்றி பார்க்கும் அளவில் உள்ளது முதல் பாதி. ஆனால் படத்தின் இறுதியில் அந்த ஊரும், திருடும் தொழிலை விட்டு காவலர்கள் ஆனார்கள் என பாசிடிவ் ஆக முடிப்பது அருமை.

கோட்டையூர் என்கிற ஊர் பற்றி பெருமையாய் ஒருவர் பேச " அது என்ன பெரிய சி. பி ஐ ஊரா " என்கிறார் பசுபதி.18 ஆம் நாற்றாண்டில் எங்கே அய்யா சி. பி ஐ?

***********

கார்த்திக்: முதலில் சினிமா உலகிற்கு எப்படி வந்தார் தெரியுமா? சன் டிவியில் முன்பு சப்த ஸ்வரங்கள் என்ற நிகழ்ச்சி (இப்போதைய சூப்பர் சிங்கர் போல) வந்தது. எஸ். வி ரமணன் நடத்தினார். அதில் கலந்து கொண்ட ஒரு பாடகராக திரை உலகம் வந்து, பின் ரஜினி, சூர்யா என அனைத்து டாப் தமிழ் ஹீரோக்களும் பாடிய பிசி பாடகர். அவருக்குள் இப்படி ஒரு பரிமாணமா ?

தான் ஒரு பாடகர் என்பதால் அவரே பாடாமல் பலரையும் உபயோகித்திருப்பது நன்று. இரண்டு பாடல்கள் அருமை ! ஒரு பாடலில் மட்டும் கார்த்திக் குரல் ஒலிக்கிறது ! பாடல் வரிகள் புரிகின்றன. ஒரு பாட்டை தவிர மற்றவை படத்தோடு இணைந்து வருகின்றன. ஹீரோ இன்டிரடியூஸ் சாங் , சும்மா ஒரு டூயட் என்கிற மாதிரி இல்லாமல் பாடல் வரிகளும் கதையை சொல்கிற அளவில் இருப்பது அனைவர் உழைப்பையும் காட்டுகிறது.

கார்த்திக்கின் பின்னணி இசை ஆச்சரியமாக இருந்தது. புது இசை அமைப்பாளரிடம் இந்த அளவு எதிர்பார்க்கலை ! குறிப்பாய் எங்கு சத்தம் இன்றி இருக்கணும், எங்கு அதிரும் இசை தரணும் என புரிந்து செய்துள்ளளர். திருட்டு காட்சியில் பொந்து போல சுவரை ஓட்டை போட்டு அதற்குள் ஒரு மனிதர் போகும் போது, பாம்பு போகும் இசை தந்தது ஒரு உதாரணம். Well done Karthik ! We expect a lot from you !!

                                                             *******************
ஒளிப்பதிவாளர் சித்தார்த்

டிரைலரில் நீர் வீழ்ச்சியிலிருந்து இருவர் குதிக்கும் காட்சியே இவர் ஒளிப்பதிவு மீது மிகுந்த எதிர்பார்ப்பை தந்தது. படத்தில் அது மிக ஜீவனான காட்சி. அந்த சில நொடிகள் அசந்து போகிறோம்.

  • சில காட்சிகளில் காமிராவை முழு சுழற்று சுழற்றி நமக்கு மயக்கம்/ வாந்தி வர வைக்கும் உத்தியை பலரும் ஏன் தான் செய்கிறார்களோ? 
  • இந்த படத்தை டீ. வி. டி. அல்லது இணையத்தில் பார்க்க முடியாத படி எடுத்துள்ளார் சித்தார்த் . கள்வர் கதை என்பதால் பல காட்சிகளும் அரை இருட்டில் நகர்வதால், டிவியில் பார்த்தால் நிச்சயம் நல்ல எபக்ட் கிடைக்காது. 

இயக்குனருக்கு வலது கரமாக இருந்து அசத்தி உள்ளார் சித்தார்த்.

*************
                  விஜய் முருகன்
கலை இயக்குனர் விஜய் முருகன்  
ஒரு படத்தில் ஆர்ட் டைரக்டர் இருப்பதே தெரிய கூடாது. இந்த படத்தில் அவர் தெரியவே இல்லை ! யோசித்து பார்க்கையில் தான் ஒவ்வொருவர் வேட்டியும் கூட பழுப்பேறி இருப்பதும், படம் பெரிதும் அவுட்டோரில் இருப்பதும் நினைவில் வருகிறது. அந்த காலத்து உடை, பொருள்கள் என ஏகமான உழைப்பு இவருடையது ! படம் எடுக்கும் போதே வேலை பளு தாங்காமல் இவருக்கு ஸ்ட்ரோக் வந்ததாக படித்த நினைவு ! கையில் இருக்கும் கம்பை  கள்வர்கள் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாய் உபயோகிக்கும் விதம் இயக்குனர் மற்றும் கலை இயக்குனரின் திறமைக்கு ஒரு சான்று!

                                                                           ***********
நங்கநல்லூர் வெற்றிவேலில் முதல் நாள் மாலை காட்சி படம் பார்த்தோம். ஆயிரம் பேர் அமர கூடிய திரை அரங்கில் நூறுக்கும் குறைவாய் ஆட்கள் இருந்தனர். இந்த படம் ஓடாவிடில், நம் ரசனையை தான் குற்றம் சொல்லணும் !
                                                                             ***********
நிறைவாக: 

எங்கள் ஊரான நீடாமங்கலத்தில் மகாபாரத கதை வருடா வருடம் நடக்கும். 16 நாள் விழாவில் ஒரு நாள் முழுதும் "அரவான் கள பலி" அமர்க்களபடும் !. ஊரின் முக்கிய இடத்தில் அரவான் சிலை செய்து, வருடா வருடம் அதனை வெட்டுவார்கள் . பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனது சிறு வயதில் அரவான் மீது இரக்கம் பிறக்கும். 

படம் பார்த்த என் பெண் திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தாள் " கடைசியில் அந்த ஆள் இறந்திருக்க வேண்டாம்ப்பா. ஒன்பது வருஷம் ஒளிஞ்சிருந்த ஆள் ஒரு வருஷம் இருந்தா பிழைச்சிருப்பாரே ! , பாவம்ப்பா அவரு:"

எங்கள் ஊர் அரவான் களபலி பார்த்து விட்டு, என் பெற்றோரிடம் சொன்ன இதே விதமான வரிகள் நினைவுக்கு வந்தது.

அரவான் டீம்: நீங்க ஜெயிச்சிட்டீங்க ! வாழ்த்துகள் !

35 comments:

  1. போன முறை விமர்சனமே அருமையாக இருந்தது..அதற்கு இன்னும் ஒரு பிளஸாக இந்த பதிவு..டெக்னிக்கல் கலைஞர்களை நன்கு அறிமுகபடுத்தி படத்தில் இவர்களது பங்கையும் அழகாக வழங்கியுள்ளீர்கள்..அருமை..நன்றி சகோ.
    Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

    ReplyDelete
  2. மிக மகிழ்ச்சி நன்றி குமரன்

    ReplyDelete
  3. வசந்தபாலன் வெவ்வேறு களங்களில் தன்னை பதித்துக்கொள்கிறார்.ஆனால் எல்லா களங்களிலும் சோகம் இழைந்தோடுவது சற்றே ஆயாசத்தை ஏற்படுத்தும்.டெக்னிகல் கலைஞர்களை பற்றி தனியாக விமர்சனம் நல்ல முயற்சி.

    ReplyDelete
  4. வித்தியாசமான விமர் சனம் !

    ReplyDelete
  5. விமர்சனத்தை விட எனக்கு இந்த பதிவு பிடிச்சிருக்கு. நல்லா எழுதியிருக்கீங்க மோகன்.

    ReplyDelete
  6. இரண்டாம் பகுதியும் படித்தேன்....

    மிக மிக நல்ல அலசல்.... எல்லா விஷயங்களையும் கவனித்து விமர்சனம் செய்தது நன்று...

    தொடருங்கள் மோகன்...

    ReplyDelete
  7. தாங்கள் விமர்சனம் எழுதியதைப் பார்த்தால், அரவான் படத்திற்கு அந்த டீம் உழைத்ததைவிட தங்கள் உழைப்பு அதிகமாகத் தெரிகிறது. மிகச் சிறந்தப் பதிவாக இது உள்ளது. பாராட்டுக்கள்.

    *******************

    // நங்கநல்லூர் வெற்றிவேலில் முதல் நாள் மாலை காட்சி படம் பார்த்தோம். ஆயிரம் பேர் அமர கூடிய திரை அரங்கில் நூறுக்கும் குறைவாய் ஆட்கள் இருந்தனர். இந்த படம் ஓடாவிடில், நம் ரசனையை தான் குற்றம் சொல்லணும்! //

    சென்னைக்கு வந்து ஐந்து வருடத்தில் மூன்று படம பார்த்துள்ளேன். இது நான்காவது படம் கணக்கில் வந்துவிடப் போகிறது தங்கள் விமர்சனத்தால்.

    ReplyDelete
  8. அருமை. அறிவுஜீவி கண்ணோட்டத்தோடு இல்லாமல், படத்தில் உழைத்திருக்கும் படைப்பாளிகளை பாராட்டியிருப்பது, வாசிக்க நிறைவாக இருக்கிறது.

    ReplyDelete
  9. படத்தின் விமர்சனம் அருமை.இன்றெ படத்தை பார்க்க போகிறேன்

    ReplyDelete
  10. நீங்க அரவான் படத்தை பற்றி மிக சிறப்பாக விமர்சையாக எழுதியிருப்பதை படித்ததும் உடனடியாக படம் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுகிறது. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  11. கோகுல் said...
    வசந்தபாலன் வெவ்வேறு களங்களில் தன்னை பதித்துக்கொள்கிறார்.ஆனால் எல்லா களங்களிலும் சோகம் இழைந்தோடுவது சற்றே ஆயாசத்தை ஏற்படுத்தும்.டெக்னிகல் கலைஞர்களை பற்றி தனியாக விமர்சனம் நல்ல முயற்சி.

    **

    நன்றி கோகுல். வசந்த பாலன் பற்றி சரியாக சொன்னீர்கள் !

    ReplyDelete
  12. திண்டுக்கல் தனபாலன் said...
    வித்தியாசமான விமர் சனம் !

    ***

    நன்றி தனபாலன் சார் !

    ReplyDelete
  13. ர‌கு said...

    விமர்சனத்தை விட எனக்கு இந்த பதிவு பிடிச்சிருக்கு. நல்லா எழுதியிருக்கீங்க மோகன்.

    **

    ஆம். எனக்கும் இந்த பதிவு மனதுக்கு பிடித்தது நன்றி ரகு

    ReplyDelete
  14. வெங்கட் நாகராஜ் said...
    இரண்டாம் பகுதியும் படித்தேன்....

    மிக மிக நல்ல அலசல்.... எல்லா விஷயங்களையும் கவனித்து விமர்சனம் செய்தது நன்று...
    **
    Thanks a ton Venkat.

    ReplyDelete
  15. அமைதி அப்பா said...
    சென்னைக்கு வந்து ஐந்து வருடத்தில் மூன்று படம பார்த்துள்ளேன். இது நான்காவது படம் கணக்கில் வந்துவிடப் போகிறது தங்கள் விமர்சனத்தால்.

    **

    தங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தருகிறது சார்

    ReplyDelete
  16. சரவணகுமரன் said...
    அருமை. அறிவுஜீவி கண்ணோட்டத்தோடு இல்லாமல், படத்தில் உழைத்திருக்கும் படைப்பாளிகளை பாராட்டியிருப்பது, வாசிக்க நிறைவாக இருக்கிறது.

    **
    நன்றி சரவணகுமரன்

    ReplyDelete
  17. Arif .A said...

    படத்தின் விமர்சனம் அருமை.இன்றெ படத்தை பார்க்க போகிறேன்

    **

    நன்றி ஆரிப். நான் சொன்னதால் இன்றே பார்க்க போறேன் என்கிற மாதிரி இருக்கு உங்க பின்னூட்டம். :)) மகிழ்ச்சி.

    ReplyDelete
  18. RAMVI said...

    நீங்க அரவான் படத்தை பற்றி மிக சிறப்பாக விமர்சையாக எழுதியிருப்பதை படித்ததும் உடனடியாக படம் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுகிறது.

    **

    மகிழ்ச்சியும் நன்றியும் ராம்வி !

    ReplyDelete
  19. Anonymous7:59:00 PM

    கிராபிக்ஸ்..மைனஸ்.

    ReplyDelete
  20. விமர்சனம் அருமை......ஒவ்வொரு நபராக...உங்களின் detail ing அருமை.படம் எனக்கு பிடித்தது

    ReplyDelete
  21. Arumaiyana vimarsanam anna.Nitchayamaga theater la than poyi pakanum nu nenaika thoondiyathu. nandri.

    ReplyDelete
  22. எங்களை போன்றவர்களுக்கு உடனே இம்மாதிரியான படங்களை பார்க்கும் வாய்ப்பு இல்லாத போது இப்படி விமர்சனம் எழுதி எங்கள் வயிற்று எரிச்சலை கொட்டிக் கொள்கிறீர்கள்....

    ஹ்ம்ம்...பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எப்படியோ ஆவலை தூண்டியது மட்டும் இல்லாமல் ஓரளவு ட்ரைலர் பார்த்த அனுபவத்தை கொடுத்தீர்கள். நன்றி.

    ReplyDelete
  23. படத்தின் விமர்சனம் அருமை.

    ReplyDelete
  24. அய்யா அது சிபிஐ இல்லை, சீமையில் இல்லாத ஊரு...

    ReplyDelete
  25. கார்த்திக்கின் இசை ஒரு ஆல்பமாக ஓக்கே, படத்தில் எந்தப்பாடலுமே ஒட்டவேயில்லை. பின்னணி இசையும் கூட, இது என் கருத்து.

    ReplyDelete
  26. நல்லதொரு விமர்சனம் சார். தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றியும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  27. சிவா: உங்களுக்கு அப்படி தோன்றியதா? நான் அவ்வளவு உன்னிப்பாக கிராபிக்ஸ் கவனிக்கலை

    ReplyDelete
  28. கோவை நேரம்: நன்றி சார்

    ReplyDelete
  29. அன்பு: நல்லாருக்கியா? உனது கமன்ட் மகிழ்ச்சி தருகிறது

    ReplyDelete
  30. ஆதி மனிதன்: நன்றி அவசியம் பிறகு பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  31. ரபி: அப்படியா சொல்றீங்க? எனக்கு CBI தெளிவா கேட்டதா நினைவு சாரே !

    ReplyDelete
  32. நன்றி காஞ்சனா மேடம்

    ReplyDelete
  33. முரளி: தல ஆளையே காணும் ! எப்படி இருக்கீங்க? கமண்டுக்கு நன்றி

    ReplyDelete
  34. கோவை2டில்லி மேடம் : நன்றி. மகிழ்ச்சி

    ReplyDelete
  35. புதிய தெரியாத செய்திகள். அரவானின் கதாநாயகர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...