Tuesday, July 17, 2012

சென்னையில் நடந்த மினி-பதிவர் சந்திப்பு

ஞாயிறு மாலை டில்லியிலிருந்து பதிவர் வெங்கட் நாகராஜ் போன் செய்தார். " மின்னல் வரிகள் பால கணேஷ் உங்க போன் நம்பர் கேட்கிறார். தரலாம் இல்லை? " என்று கேட்க " தாராளமா தாங்க" என்று கூறி விட்டு போனை வைத்தேன். சென்னை பாலகணேஷ் அதே ஊரிலிருக்கும் என் போன் நம்பர் வேண்டி டில்லியில் உள்ள வெங்கட்டை தொடர்பு கொள்கிறார். இது முதல் ஆச்சரியம். இரண்டாவது ஆச்சரியம் நம்ம போன் நம்பர் எதோ தேவ ரகசியம் போல, வெங்கட் எனக்கு ஒரு முறை போன் செய்து, கேட்டு விட்டு பின் தருகிறார். இது அடுத்த ஆச்சரியம்.

முழுதாய் ஆச்சரியப்பட்டு முடிப்பதற்குள் கணேஷ் போனில் கூப்பிட்டு விட்டார். " பதிவர்கள் அப்பாதுரை மற்றும் ரமணி சென்னை வந்துள்ளனர். நாளை மாலை எங்கள் வீட்டில் சந்திக்கிறோம். வர முடியுமா?" என்றார். நிச்சயம் வருகிறேன் என்றேன்.

திங்கள் மதியம் திடீரென மிக பெரிய ஆணி ஒன்று முளைத்து அன்றே அதை பிடுங்க வேண்டும் என்று கூறியதால், ஆணி பிடுங்கி விட்டு கிளம்ப தாமதம் ஆனது. அவர்கள் ஐந்தரைக்கு சந்திக்க, நான் ஆறே முக்காலுக்கு தான் சென்றேன்

பாலகணேஷ், ரமணி, அப்பாதுரை மூவரையுமே முதல் முறை சந்திக்கிறேன்

பாலகணேஷ் வீட்டில் வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போடுவதற்குள் அவர் கேட்ட முதல் கேள்வி " எப்படி சார் தினம் 1 பதிவு எழுதுறீங்க? செம உழைப்பு வேணுமே?" என்றார். " கொஞ்ச நாளா தான் சார் இப்படி தினம் எழுதுறேன். தொடர்ந்து தினம் எழுத முடியும்னு தோணலை. ஓடுற வரைக்கும் ஓடட்டும்"

மெயில் மற்றும் பின்னூட்டம் மூலம் அறிமுகமான மூவரையும் சந்திக்க மிக மகிழ்ச்சியாய் இருந்தது.

அப்பாதுரை அமெரிக்காவில் வசிப்பவர். மிக இலக்கிய தரத்துடன் எழுதும் வெகு சில பதிவர்களில் ஒருவர். பிறர் பதிவுகளில் அவர் பின்னூட்டங்களும் மிக சுவாரஸ்யம் ஆக இருக்கும். மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டார். சில வார லீவில் தமிழகம் வந்துள்ளார். ஜூலை முடியும் வரை இங்கு இருப்பார்.

ரமணி சார்: மதுரையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த வார தமிழ்மண ஸ்டார் !ஓய்வு காலத்தை எழுதுவதில் பயனுள்ள முறையில் கழிக்கிறார். தமிழ் சினிமா பாடல்களில் கரை தேர்ந்தவர். கண்ணதாசன், வாலி, பட்டுகோட்டை பாடல் வரிகளை , அவற்றின் அர்த்தத்தோடு இவர் அலசிய விதம் அருமையா இருந்தது !



மின்னல் வரிகள் கணேஷ்: கிழக்கில் முன்பு பணியாற்றியவர், தற்போது இன்னொரு பத்திரிக்கையில் பணி புரிகிறார். பல தமிழ் எழுத்தாளர்களுடன் பழகிய அனுபவங்களை இவர் எழுதுவது வெகு சுவாரஸ்யம். சந்திப்பு இவர் வீட்டில் தான் நிகழ்ந்தது

கணேஷ் குடும்பத்தார் அன்று உறவினர் வீடு சென்று விட்டதால், நாங்கள் நேரம் பற்றிய கவலை இன்றி உரையாடினோம். கணேஷ் தன் மனைவியை நிறையவே நக்கல் செய்து பதிவு எழுதுவார். எப்படி தான் தைரியமா இப்படி எழுதுறாரோ என கேட்க நினைத்தேன். இதனை மிக ஸ்போர்டிவ் ஆக எடுத்து கொள்ளும் அவரையும் நேரில் பாராட்ட எண்ணினேன். முடிய வில்லை

ரமணி சார் எம்.ஜி.ஆர் பற்றி ஏற்கனவே பல பதிவுகள் எழுதி உள்ளார். இருந்தாலும் நேரிலும் எம்.ஜி.ஆர் குறித்து பல தகவல்கள் சொன்னார். எல்லா பாடல்களிலும் எம்.ஜி.ஆர் தன் கைகளை வைத்து செய்வது நான்கே ஸ்டெப் தான் என்று கூறி விட்டு அவற்றை தனி தனியே செய்து காண்பித்தார். பின் எம்.ஜி.ஆர் பாட்டொன்றை பாடிய படியே அந்த ஸ்டெப்கள் போட்டு காண்பித்த போது செமையாக அனைவரும் சிரித்தோம்.

பெரியார், எம். ஆர். ராதா ஆகியோரை சந்தித்த, அவர்களோடு பழகிய அனுபவங்களை ரமணி அவர்கள் சொன்னதில் நேரம் போனதே தெரியலை. ரமணி சார் இதுவரை எழுதியதை விட இன்னும் எழுதாததே மிக மிக அதிகம். எங்களிடம் பகிர்ந்த பல சுவாரஸ்ய அனுபவங்களை அவர் எழுத வேண்டும் என அவைவரும் அவரிடம் கூறினோம்

அப்பாதுரை "சென்னையில் என்ன நடக்குதுன்னு தெரியணும்னா வீடுதிரும்பல் தான் படிப்போம்னு யூ. எஸ்-சில் என் நண்பர்கள் ரெண்டு மூணு பேர் சொல்லுவாங்க" என்றார். மிக மகிழ்ச்சியாய் இருந்தது. ஊரை விட்டு பிரிந்து எங்கோ இருப்போருக்கு நம் ஊர் பற்றி அறிய ஆர்வம் நிறையவே இருக்கும். எனவே தான் சென்னை மற்றும் தமிழகம் பற்றி அதிகம் எழுதுகிறோம்.

பேச்சு வீடுதிரும்பலில் எழுதப்படும் சாதாரண மனிதர்களின் பேட்டி பற்றி சென்றது.

" பஸ் கண்டக்டரை பார்த்து பேசிய அனுபவம் எழுதினேன் இல்லியா. அவரிடம் பேசிட்டு நான் இறங்குறேன் என்று சொன்ன உடனே அவர் என் கையை பிடிச்சு ஒரு முத்தம் குடுத்தார். அதை எனக்கு அந்த பதிவில் எழுத முடியலை. மக்கள் அவரை தப்பா நினைச்சுக்குவாங்களோ என பயமா இருந்துச்சு. ஆனா அவர் தன்னோட அன்பை, சந்தோஷத்தைத்தான் அப்படி காட்டினார். ஒவ்வொரு மனுஷனும் தான் பேசுறதை, காது குடுத்து கேட்க யாராவது கிடைப்பாங்கலான்னு ஏங்குறாங்க. " என்றேன்

"இப்படி எளிமையான மனிதர்கள் பத்தி எழுதுறது ரொம்ப முக்கியம். ஒரு பத்தாவது, பன்னிரெண்டாவது படிக்கிற பையன் கண்டக்டர் ஆகணும்னு நினைப்பதில்லை. வேறு வேலை கிடைக்காதவர்கள் தான் இந்த மாதிரி வேலைக்கு வர்றாங்க. ஆனா இந்த தொழில் அசிங்கம் இல்லைன்னு அவங்களுக்கு புரியணும். இது மாதிரி பதிவுகள் அந்த வேலையை ஓரளவு செய்யும்" என்றார் அப்பாதுரை.

அனைவருமாய் சேர்ந்து சென்னைபித்தன் ஐயா வீடு சென்று அவரை சந்திக்கலாம் என ஒரு திட்டமிருந்தது. ஆனால் சென்னை பித்தன் ஐயா வீட்டில் நிறைய உறவினர்கள் வருவதால் நாங்கள் செல்ல வில்லை.

அமெரிக்கா சென்ற இந்தியர்களின் வாழ்க்கை முறை கடந்த நாற்பது ஆண்டுகளில் எப்படி எல்லாம் மாறியுள்ளது என்று அப்பாதுரை கூறினார். அது மட்டுமே தனியாய் ஒரு பதிவு எழுதும் அளவு கனமான விஷயமாய் இருந்தது.

நேரம் ஆகி விட்டதால் அனைவரும் தத்தம் வழியே பிரிந்தோம்.

இணையத்தில், எங்கெங்கோ வாழும் எத்தனை விதமான நண்பர்கள் கிடைக்க பெறுகிறார்கள் என வியந்தவாறே "வீடு திரும்ப"லானேன்.

51 comments:

  1. மினி-பதிவர் சந்திப்பு நிகழ்வில் நானும் கலந்து கொண்டது போன்ற சந்தோஷம்.

    நிற்க. தொலைபேசி எண்ணை தருவதற்கு முன் உங்களை அழைத்தது தில்லி எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம். பல சமயங்களில் எண்ணைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறேன். நண்பர் கணேஷ் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையுடன் தான் உங்களிடம் கேட்டேன். நேற்று கூட அவர் எண்ணை வேறொருவருக்குக் கொடுப்பதற்கு அவரிடம் பேசினேன்!

    பதிவர் சந்திப்பின் மூலம் நீங்கள் பேசிய விஷயங்களையும் அறிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. ரமணி அவர்களையும் சந்திக்க ஆவல். ஆகஸ்ட் மாதம் தமிழகம் வந்தாலும் வருவேன். முடிவான பிறகு சொல்கிறேன்.

    ReplyDelete
  2. இனிய சந்திப்பு. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. இனிய சந்திப்பை அறிந்ததில் மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. மோகன் சார்,

    நான் உங்கள் நீண்ட நாள் வாசகன்.......உங்கள் பதிவுகள் அனைத்தும் வாசித்து வருபவன்.நல்ல விஷயங்களை எழுதுவதால் உங்கள் மேல் தனி மதிப்பு உண்டு..தொடரட்டும் உங்கள் பணி......

    ReplyDelete
  5. இயந்திர வாழ்வில் இதயங்களின் சந்திப்பு ஒரு வரம் அது உங்களுக்கு வாய்க்க பெற்றிருக்கு ...............மகிழ்ச்சி தோழர்களே

    ReplyDelete
  6. மினி பதிவர் சந்திப்பு நானும் கலந்து கொண்டது போன்ற உணர்வு இதை படித்தவுடன் தோன்றியது வாழ்த்துக்கள் மோகன் சார்

    ReplyDelete
  7. Anonymous10:24:00 AM

    மினி பதிவர் சந்திப்பை நீங்கள் பகிர்ந்து கொண்ட விதம் வழக்கம் போல் மிக அருமை. அப்பாதுரை யு எஸ்ஸில் எந்தப் பகுதி என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே :-(

    ReplyDelete
  8. நான் சொன்னதைவிட
    உங்கள் மூலம் சொல்லப்பட்டது
    மிக மிக அருமை

    அன்று உங்களுடனும் கணேஷ் சாருடனும்
    அப்பாத்துரை அவர்களுடனுமிருந்த
    இரண்டு மணி நேரம் அர்த்தமுள்ளதாய் இருந்தது
    உங்கள் மூவரைக் கூட பதிவின் மூலம்
    அறிந்து கொண்டது விரல் நுனி அளவே
    எனப் புரிந்து கொள்ள அந்த சந்திப்பு உதவியது

    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ஆஹா.... நான் சொல்ல எண்ணியதை ரமணி ஸார் சொல்லிட்டார். விரல் நுனி அளவே சந்திப்பில் பேசியது. இன்னும நாம் கலந்துரையாடி மகிழ எவ்வளவோ விஷமிருக்கிறது நண்பரே... அடிக்கடி சந்திக்க முயல்கிறேன். வெங்கட் சம்பந்தப்பட்டவரிடம் கேட்டு போன் எண் தருவது நயத்தகு நாகரீகம். அவரை நாம் மனமாரப் பாராட்டுவோம். ரமணி ஸார் மற்றும் அப்பா ஸாரின் அனுபவங்களுக்கு முன் நானெல்லாம் மிகச் சாதாரணம் என்பதை அன்று உணர்ந்தேன். அன்றைய இனிய நிகழ்வை மிக அழகாக எழுத்தில் நீங்கள் வடித்துள்ளமை மிகமிக மகிழ்வு தந்தது. மிக்க நன்றி. (மனைவி பதிவு பத்தின விஷயம்... உங்கள்ட்ட அடுத்த சந்திப்புல சொல்றேன். இங்க எழுதினா படிச்சுடுவாங்களே... ஹி... ஹி...)

    ReplyDelete
  10. ஏம்ப்பா... என்னோட படத்தை இப்டி பெரிசாப் போட்டு மக்களை பயமுறுத்தறீங்க... ரமணி ஸார் படத்தை போட்ருக்கலாமே... இந்த வார தமிழ்மண சூப்பர்ஸ்டார் இல்லையா... (10)

    ReplyDelete
  11. சந்திப்பு விவரம் அருமை!

    ஒருவருடைய விலாசம், தொலைபேசி எண், அவர்களுடைய படம் எல்லாம் அவர்களைக் கேட்காமல் மற்ற யாருக்கும் தெரிவிக்கக்கூடாது.

    வெங்கட் சொன்னதுபோல் நாம் வாங்கிக்கட்டிக்க நேரலாம்.

    அப்பாதுரையின் நசிகேதன் வாசிச்சு வாய் பிளந்தவள் நான்.

    ReplyDelete
  12. பெரிய பெரிய தலைகள் சந்திப்பு.. வெகு சுவாரஸ்யமான சந்திப்பாக இருந்திருக்கிறது என்று உங்கள் எழுத்துக்கள் உணர்த்துகின்றன.. சந்திப்பு அடிக்கடி நிகழட்டும் :)

    ReplyDelete
  13. நேரில் படிப்பது போன்ற வர்ணனை. பகிர்விற்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. பதிவர்களாய் சந்தித்து நண்பர்களய்ப் பிரிந்ததறிய மகிழ்வாய் இருக்கிற‌து. விரிவாய் பதிவில் சொல்லியிருக்கும் விதம் மிக‌ அருமை!

    ReplyDelete
  15. பதிவர்கள் சந்திப்பு வர்ணனை விவரம் ஜோர்.

    ReplyDelete
  16. நான் உங்கள் பதிவை தவறாது படித்துகொண்டு இருக்கிறேன்... உங்கள் பதிவுகள் மிகவும் ரசிக்கும் படி உள்ளன... சலிப்பு ஏற்படாமல் பதிவு எழுதுவது உங்களின் சிறப்பு...

    ReplyDelete
  17. பதிவர் சந்த்திப்பு அருமை ரமணி சாரின் ப்ளாக் வசித்துவருகிறேன். திரு அப்பாதுரை சாரின் லிங்க் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் நீங்கள் சட்ட ஆலோசனை எழுதி நீண்ட நாட்களாகிவிட்டன நன்றி

    ReplyDelete
  18. இனிய சந்திப்பு விவரம் அருமை...
    பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...
    வாழ்த்துக்கள்...(த.ம. 14)

    ReplyDelete
  19. வெங்கட்: ஆகஸ்ட்டில் வருகிறீர்களா? மகிழ்ச்சி ஆகஸ்ட் 19 அன்று பெரிய விழா உள்ளது. அந்த சமயம் இங்கிருந்தால் பலரை சந்திக்கலாம்.

    ReplyDelete
  20. ராமலட்சுமி : நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  21. அமைதி சாரல்: நன்றி

    ReplyDelete
  22. சித்தார்த்தன் : உங்களின் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தந்தது. முடியும்போது கருத்தும் கூறுங்கள் நன்றி

    ReplyDelete
  23. கோவை மு. சரளா: நன்றி சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  24. வலங்கை சரவணன்: நன்றி

    ReplyDelete
  25. பாலஹனுமான்: அவர் US-ல் எங்கு உள்ளார் என்ற விபரம் நான் கேட்கவில்லை. உங்களை பற்றி அவரிடம் சொன்னேன். மெயிலில் இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்கிறேன்.

    ReplyDelete
  26. ரமணி சார்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  27. பாலகணேஷ்: ரமணி சார் படம் இப்போது சேர்த்து விட்டேன்

    ReplyDelete
  28. துளசி மேடம்//அப்பாதுரையின் நசிகேதன் வாசிச்சு வாய் பிளந்தவள் நான்.//

    உண்மை !

    Thanks !!

    ReplyDelete
  29. வரலாற்று சுவடுகள்: நன்றி நண்பா. சென்னை வரும்போது சொல்லுங்க. எல்லாரையும் பாத்திடலாம்

    ReplyDelete
  30. சீனி: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  31. மனோ சாமிநாதன் said...

    பதிவர்களாய் சந்தித்து நண்பர்களய்ப் பிரிந்ததறிய மகிழ்வாய் இருக்கிற‌து.
    *****

    மிக சரியாய் சொன்னீர்கள் மேடம் நன்றி

    ReplyDelete
  32. ரிஷபன் சார்: நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  33. சமீரா இப்படி Silent-ஆக வாசிப்போர் சொல்கிற கருத்து மிக மகிழ்வை தருகிறது மிக நன்றி

    ReplyDelete
  34. சலீம்: நன்றி. அப்பாதுரை ப்ளாக் லிங்க் தற்போது பதிவில் தந்து விட்டேன். சட்ட கேள்வி பதில் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை எழுதுகிறேன். இந்த வாரம் ஒரு பகுதி வெளியிட பார்க்கிறேன். தங்கள் ஆர்வத்துக்கு நன்றி

    ReplyDelete
  35. தனபாலன் சார்: நன்றி

    ReplyDelete
  36. Anonymous5:51:00 PM

    மூத்த பதிவர்களை சந்தித்த அனுபவம் நல்லாயிருந்தது மோகன்...கண்டக்டர் நெகிழ்ச்சி தருணம்...

    ReplyDelete
  37. முன்னணி பதிவர்களின் பதிவைப் போலவே அவர்களின் சந்திப்பும் சுவாரசியம்.

    ReplyDelete
  38. கணேஷ்: புரிதலுக்கு நன்றி! :)

    மோகன்: எனக்கும் 19 அன்று சந்திப்பில் கலந்து கொள்ள ஆவல் தான். ஆனால் சில பல சிக்கல்கள். இப்போதைக்கு 20-ஆம் தேதி சென்னையில் இருக்க வாய்ப்பிருக்கிறது. முன்பே சொல்கிறேன். இந்த சந்திப்பு போல ஒரு மினி-பதிவர் சந்திப்பு நடத்தி விட்டால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
  39. Anonymous11:35:00 PM

    ரமணி ஸார் மற்றும் சின்னக் கடுகு இவர்களின் புகைப்படங்களை இணைத்த நீங்கள் அப்பாதுரையை விட்டு விட்டீர்களே ?

    ReplyDelete
  40. ரெவரி: நன்றி

    ReplyDelete
  41. முரளி சார்: நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  42. வெங்கட்: ஆகஸ்ட் 20 சென்னை வரும் நீங்கள் - ஒரு நாள் முன்பு 19 (அதுவம் ஞாயிறு ) வரலாமே? அப்புறமாய் போனில் இது பற்றி பேசுகிறேன்

    ReplyDelete
  43. பால ஹனுமான்: அன்று நாங்கள் படங்கள் ஏதும் எடுக்கலை. அப்பாதுரை பெரும்பாலும் தன் படங்களை தளத்தில் பகிர்வதில்லை. சிலர் தங்கள் படங்கள் வெளியாக வேண்டாம் என நினைக்கலாம் இல்லையா? அப்படி தான் இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் சந்திப்பன்று பதிவெழுதும் எண்ணமில்லை. இருந்தால் அனைவரையும் மொபைலில் படம் எடுத்திருப்பேன்

    ReplyDelete
  44. சந்திப்பு மிக இனிமையாக, சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று உணர முடிகிறது.

    ReplyDelete
  45. சந்திப்பின் நிறைவை உங்கள் எழுத்தில் உணர முடிகிறது. அந்த் எம்ஜிஆரின் நான்கு ஸ்டெப்கள்.... எவ்வளவு enjoy பண்ணியிருப்பீர்கள் என்று தெரிகிறது... கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கிறது மோகன், உங்களையெல்லாம் நினைக்கும்போது.

    ReplyDelete
  46. பேசிச் செலவழித்த சில மணிகள் எளிதில் மறக்க முடியாதவை.
    பணிச்சுமைக்கிடையே நேரம் எடுத்துக் கொண்டு வந்ததற்கு நன்றி.

    ஒரு photo எடுத்திருக்கலாமென்று தோன்றவேயில்லை..

    ReplyDelete
  47. ஸ்ரீராம். said...

    சந்திப்பு மிக இனிமையாக, சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று உணர முடிகிறது.

    **

    உண்மை தான். சென்னையிலிருந்தாலும் உங்களை தான் இன்னும் சந்திக்க முடியலை. ஒரு அப்பாயின்ட் மென்ட் குடுங்க ஸ்ரீராம்

    ReplyDelete
  48. உமா மேடம் : இப்படி மனம் திறந்து பாராட்டவே ஒரு மனது வேண்டும் நன்றி

    ReplyDelete
  49. அப்பா துரை: உங்கள் பின்னூட்டம் மிக மகிழ்வை தந்தது. சென்னையில் தானே உள்ளீர்கள்? அடுத்து சந்திக்கும் போது படமெடுத்து இன்னொரு வானவில்லில் சேர்த்தால் போகுது !

    ReplyDelete
  50. நானும் கலந்து கொண்டிருப்பேன்,கால்கட்டுப் போடாமல் இருந்திருந்தால்! a sad miss..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...