Wednesday, August 8, 2012

வானவில் 100: ஒலிம்பிக்சும் நடிகை சமந்தாவும்

வானவில்லின் நூறாவது பகுதி இது. வழக்கமாய் வரும் ஏழு பகுதிகளையும் இம்முறை வெவ்வேறு பதிவர் நண்பர்கள் எழுதி உள்ளனர் ! உங்களுக்கு இது நிச்சயம் வித்தியாச அனுபவம் தரும் என்று நம்புகிறேன். நூறு பதிவுகளுக்கும் நீங்கள் தந்துள்ள அன்பிற்கும் ஆதரவுக்கும் நெகிழ்வான நன்றி !

************

ஒலிம்பிக்ஸ் சர்ச்சை - பதிவர் ஹுசைனம்மா

ஒலிம்பிக் தொடக்க விழாவின்போது, இந்திய அணியின் அணிவகுப்பில் சிவப்புச் சட்டை அணிந்த பெண் ஒருவர் அதிஉற்சாகத்துடன் முன்னே நடந்துசென்றார். மற்ற வீரர்கள் அனைவரும் மஞ்சள் சீருடை அணிந்திருக்க, இவர் மட்டும் பளிச்சென சிவப்புச் சட்டை அணிந்திருந்ததால் பார்த்தவர்களுக்கு யார் இவர் என்ற ஆவல் எழுந்தது. ஆனால், அவர் அணியைச் சேர்ந்தவரே அல்ல என்பது தவிர, யாரென்றே யாருக்கும் தெரியவில்லை; காவல் துறையின் அத்தனை அடுக்கு பாதுகாப்புகளையும் மீறி எப்படி அணிவகுப்பில் நுழைந்தார் என்றும் தெரியவில்லை!!

இரண்டு நாட்களுக்குப் பின் அவர் பெயர் மதுரா என்று தெரிந்தது. ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!!

சென்ற வருடம் ஆகஸ்டில் இங்கிலாந்தில் இந்திய அணியும் கலந்துகொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடந்த அதே சமயம், அங்கு பெரிய கலவரம் நடந்துகொண்டிருந்தது. அப்போது சுனில் கவாஸ்கர் சொன்னார், “இதைவிட மிகமிகச் சிறிய சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்தால் போதும்; உடனே பாதுகாப்புக் குறைவு எனச் சுட்டிக்காட்டி, இங்கிலாந்து அணியினர் கிளம்புகிறோம் என்றிருப்பார்கள்” என்று ! அதுதான் இப்போ நினைவுக்கு வருகிறது!

இது மட்டுமல்ல, அதுக்கும் ரெண்டுமூணு நாள் முன்னேதான், 11-வயதுச் சிறுவனொருவன், இங்கிலாந்து விமான நிலையத்தில் தனியே, பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் என்று எந்த ஆவணங்களும் இல்லாமல், வீசிய கையோடு, அனைத்து செக்யூரிட்டி லெவல்களையும் கடந்து விமானத்திலும் ஏறி இத்தாலிக்கும் சென்றுவிட்டான்!! அதையும் அந்தப் பையன் தானே பெருமையுடன் சொன்னபிறகுதான் ’கண்டுபிடித்துள்ளார்கள்’!!

ரூல்ஸெல்லாம் ஏழை(நாடு)களுக்கு மட்டும்தான் போல!!

சென்னை ஸ்பெஷல் - பதிவர் பாலகணேஷ் (மின்னல் வரிகள்)

சமீபத்துல பர்த்டே கிஃப்ட் வாங்க Celebrationsங்கற ஷாப்புக்குப் போயிருந்தேன். அங்க இருந்த சில ஐட்டங்கள் கண்ணை இழுத்துச்சு. ஒரு சின்னப் பையன் போட்டோ 3Dயில பாக்கறதுக்கு சூப்பரா இருந்துச்சு. கேட்டப்ப, நாம கொடுக்கற படத்தை இப்படி 3Dயில மாத்தி தருவாங்களாம். இப்படி அவங்க நிறைய Personalized Gifts செஞ்சு தர்றதா சொன்னாங்க. ப்ளேயிங் கார்ட்ஸ்ல, காபி மக்-ல, செஸ்போர்ட்ல, தலையணை உறையில, மவுஸ் பேடுல.... இப்படி பல விஷயங்கள்ல உங்களோட போட்டோவைப் பதிச்சு, வாழ்த்து அச்சிட்டுத் தர்றாங்க.

உங்க குழந்தைங்களோட படத்தை அழகா எக்ஸாமினேஷன் பேட்ல ப்ரிண்ட் பண்ணித் தர்றாங்க. இதைத் தவிர கல்யாணம் மற்றும் பர்த்டே செலிப்ரேஷன் பண்றீங்கன்னா அங்கயும் ப்ளவர்ஸ், ஃப்ரூட்ஸ் டெக்கரேஷன்லாம் பண்ணித் தர்றதுண்டாம். தி.நகர்ல விஜயமகால் தாண்டினதும் வர்ற சிக்னல்ல ரைட் கட் பண்ணினா ரெண்டாவது கடை. தேவைப்படறவங்களுக்காக அட்ரஸ் இங்க: Celebrations, 2, South Boag Road, (Opp. Residency Towers), T.Nagar, Chennai-24. Ph:2435876/42178767.

கடைக்குப் போய் ஆர்டர் கொடுக்கறதுக்கெல்லாம் எங்கப்பா நேரமிருக்குன்னு சலிச்சுக்கற டைப்பா நீங்க... கவலைய விடுங்க. www.chennaicelebrations.com ங்கற தளத்துக்குப் போனீங்கன்னா அங்கயே உங்களுக்கு வேணுங்கறதை ஆர்டர் பண்ணிடலாம். உங்க நட்பு மற்றும் உறவினர் வட்டத்துக்கு வித்தியாசமான பரிசுகள் கொடுத்து அசத்திடலாம்!

போட்டோ கார்னர் : பதிவர் ராமலட்சுமி

ஒளிப்படம் ஒரு மொழி. ரசிக்கும் அழகினையும் இனிக்கும் நினைவுகளையும் எடுத்து இயம்புவது தாண்டி ஒரு விடயத்தை.. ஒரு நிகழ்வை.. அதன் இடத்தோடும் காலத்தோடும் பதிந்து, வரும் சந்ததியருக்கான சரித்திர ஆவணம் ஆகும் சக்தி வாய்ந்தது. ஒரு சிறந்தபடம் பல கதை சொல்லும். குறிப்பாக பொது இடங்களில் இயல்பு நிலையில் படமாக்கப்படுகிற மனிதர்கள் (street photography) அந்தந்த காலக்கட்டத்தின் கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை அவற்றின் நிறைகுறைகளை வெளிப்படுத்துவதோடு, தம்மையும் அறியாமல் சரித்திரத்தில் இடம் பெற்று விடுகிறார்கள். கீழ்வரும் படம் அந்த வகையில் ஒன்றாக, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத் தூண்டும் படங்களுக்கு மத்தியில் இன்னொரு முறை பார்க்கத் தேவையின்றி மனதில் பதிந்து விடும் இரகமாக எனக்கும் இன்னும் பலருக்கும் (சொன்னார்கள்).


ரசித்த கவிதை - பதிவர் ராஜாராம்

நிறைமாத கர்ப்பிணியின்
நடையைப் போல
தளும்புகிறது
நிரம்பிய ஏரி.

விதவிதமாய் ஒலியெழுப்பி
பயமுறுத்தும் முயற்சியில்
தவளைகள்
கரைக்குள் தவிக்கும்
அலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
நான்.

ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறதே
தூங்கி போயிருப்பாளோ?

-சத்ரியன்

மனதை நெகிழ்த்திய சம்பவம் - பதிவர் அமைதி அப்பா

இந்த வருட +2 தேர்வில், எனது தம்பி மகன் சில தேர்வுகளை எழுதாமல் விட்டுவிட்டு தொடர்ந்து படிக்க முடியாது என்றும் கூறிவிட்டான். உறவினர்களும் நண்பர்களும் +2 உடனடித் தேர்வை எழுதச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. இந்நிலையில், செய்தி அறிந்த அவன் முன்பு படித்த தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர், நேரடியாக அவனது வீட்டிற்கு சென்று, தான் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து தேர்ச்சிப் பெற்றதற்குரிய சர்டிபிகேட்களைக் காட்டி, நீண்ட நேரம் எடுத்துச் சொல்லி, பரிட்சை எழுதுவதற்கு சம்மதிக்க வைத்து, அன்றே தேர்வுக் கட்டணம் கட்டுவதற்கு தனது பைக்கிலேயே உடன் அழைத்து சென்றுவிட்டார். இப்பொழுது, தேர்வும் எழுதிவிட்டான்.

அந்த தலைமையாசிரியரின் கல்வி மற்றும் இப்போதைய சமூக நிலையை அவசியம் தெரிவிக்க வேண்டும். அவர், எம்.ஏ.,எம்.எட்.,எம்பில். முடித்துவிட்டு, டாக்டரேட் படிப்பதற்கு முயற்சித்துக் கொண்டுள்ளார். தனது இரண்டு மகள்களையும் மருத்துவக் கல்லூரியில் படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார். சிறந்த எழுத்தாளர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையில் பல்வேறு பெயர்களில் எழுதிவருகிறார். அவர், திரு கருப்பம்புலம் சுப்பு வேதையா சித்திரவேலு. தன்னிடம் படித்த மாணவன் தொடர்ந்து படிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில்,தன்னுடைய இமேஜ் பற்றிக் கவலைப்படாமல், பள்ளிக் கல்வியில் தான் தேர்ச்சிப் பெறாததை, ஆதாரத்துடன் காட்டி அந்த மாணவனுக்கு புரியவைத்த, அந்த மாமனிதரை பாராட்ட வார்த்தையில்லை.

ரசித்த வரிகள் ( QUOTE CORNER) - பதிவர் ரேகா ராகவன்

Pleasure comes through toil and not by self-indulgence and indolence. When one gets to love work, his life is a happy one. -- Ruskin.

அழகு கார்னர் - பதிவர் ரகு

சமந்தா - சமீபத்திய ஹிட்டான ஈ'யின் ஃபேவரைட் ஸ்வீட்! சின்ன சின்ன க்யூட்டான எக்ஸ்ப்ரஷன்ஸ், அழகான கண்கள், லேசாக தலை குனிந்த வெட்கத்துடன் கூடிய ஸ்மைல் என்று நம்மையும் 'ஈ'ர்த்துவிடுகிறார்.










                                                                                                                                                       

தமிழில் சமந்தாவின் அடுத்த படம், கெளதமின் 'நீதானே என் பொன்வசந்தம்'. கெளதம், சமீராவுக்காகவே, 'மில்கி வே' ஃபலூடா ரேஞ்சுக்கு உருகு உருகென்று உருகுவார். சமந்தாவை நடிக்கவைக்கும்போது கேட்கவா வேண்டும்! நான் விண்ணை தாண்டி வருவாயா தெலுகு வெர்ஷனை பார்க்கவில்லை. ஸோ, 'சமந்தா வசந்தம்' வீச ஆவலுடன் காத்திருக்கிறேன் :)

சுருக்கமாக சொன்னால், சமந்தா......... இதயத்தின் நான்கு அறைகளில், அனுஷ்கா, அஞ்சலிக்கு பிறகு மூன்றாவதாக குடிவந்திருக்கும் புதிய தேவதை :)

55 comments:

  1. நூறாவது வானவில்லுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    வானவில் தோன்றிய நாளிலிருந்து வாசித்து வருகிறேன். ஏழு விஷயங்களைத் தரும் பல்சுவை வானவில் போல இன்று ஏழுநாளும் சுவாரஸ்யமான பதிவுகள் தருவதாக வீடு திரும்பல். அயராத உழைப்புக்குக் கிடைத்து வருகிற அங்கீகாரங்கள் மகிழ்ச்சிக்குரியது. வரிசையாக அவை தொடரட்டும்! தொடருங்கள்:)!

    ReplyDelete
  2. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வானவில்லுக்கு வாழ்த்துக்கள்.
    தேடி பிடிச்சு போட்டு இருக்கீங்க....அருமை...

    ReplyDelete
  4. எனது படத்தைப் பகிர்ந்திருப்பதற்கு நன்றி:)! மற்றவர்களின் பகிர்வு யாவும் அருமை.

    ReplyDelete
  5. நூறாவது வானவில்லிற்கு வாழ்த்துகள் மோகன்.

    இனிய பகிர்வு. சக பதிவர்களிடம் கேட்டு பகிர்ந்தது இனிய விஷயம். தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்....

    மனமார்ந்த வாழ்த்துகள்....

    ReplyDelete
  6. அமைதி அப்பாவின் குறிப்பு நெகிழ வைக்கிறது; ஆச்சரியமாக இருக்கிறது.

    100-க்கு வாழ்த்துகள்.

    //சிவப்புச் சட்டை அணிந்த பெண் //
    இந்தப் பெண்,(மதுரா) இரு நாட்கள் முன்பு, “ஆர்வக்கோளாறினால் அப்படிச் செய்துவிட்டேன்” என்று மன்னிப்புக் கேட்பதாகச் செய்தி வெளியாகியிருந்தது.

    ReplyDelete
  7. நூறாவது வானவில்லுக்கு வாழ்த்துக்கள்...
    பதிவர் ராஜாராம் - தளம் எனக்கு புதிது...

    பகிர்வுக்கு நன்றி…(TM 4)

    ReplyDelete
  8. Anonymous8:36:00 AM

    வானவில் 100 - வாழ்த்துக்கள்...

    பதிவர் ரகுவுக்கு கூடிய சீக்கிரம் ஒரு கால்கட்டு போட்டு விட வேண்டியதுதான் அவர் இதயத்தின் நான்காவது அறையில் ஒரு புதிய தேவதை குடியேறுவதற்கு முன் :-)

    ReplyDelete
  9. வானவில் அனைத்து வண்ணத்தையும் சுமந்து உள்ளது...

    100 வானவில் அழகிய தொகுப்புடன்...

    ReplyDelete
  10. யார் மனமும் கோணாமல், தரமான எழுத்துகளோடு எழுதிவருகிறீர்கள். இப்போதைக்கு ஒன்றுக்கு அடுத்து இரண்டு சீரோக்கள்தான். இன்னும் சில பல சீரோக்கள் add ஆக வாழ்த்துக்கள் மோகன். :)

    பதிவர் ராமலட்சுமி அவர்களின் புகைப்பட கார்னர் அருமை. சமயங்களில் இதுபோன்ற புகைப்படங்கள்தான் சட்டென்று மனதில் பதிகிறது. திருவான்மியூர் ரயில்வே ஸ்டேஷனிலும் இத்தகைய புகைப்படங்களை சுவரில் ஒட்டிவைத்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  11. ரகு: உங்கள் மனதின் நான்காவது அறை யாருக்கு என நண்பர் பாலஹனுமான் கேட்டதற்கு பதில் சொல்வீர்கள் என நினைத்தேன் :))

    ReplyDelete
  12. Anonymous9:46:00 AM

    ஒலிம்பிக்ஸ்...இப்படி ஒரு பாதுகாப்பு மீறல் இந்தியாவில் நடந்திருப்பின் இங்கிலாந்து விண்ணுக்கும் மண்ணுக்கும் எகிறி இருக்கும். இந்திய ஒலிம்பிக் கமிட்டி இதை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்தது முட்டாள்தனம். வானவில் சதம்அடித்ததற்கு வாழ்த்துகள்!!

    ReplyDelete
  13. எல்லாப் பகுதிகளும் மனசை நிறைத்தாலும் சட்டென்று கண்ணைக் கவ்வி இழுத்த ராமலட்சுமி அவர்களின் புகைப்படத்துக்கு தனியிடம். 100 மேன்மேலும் பல்கிப் பெருகி எங்களுக்கு மகிழ்ச்சிதர உஙகளுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நல்ல கலவை.

    [என் PC-யில் தமிழ்மணம் சற்று படுத்துகிறது. திற்க்கமுடியவில்லை. அதனால் ஓட்டு போட முடியவில்லை. உங்களுடையதாவது பரவாயில்லை. சில பதிவுகளை படிக்கக் கூட முடியவில்லை. சிலவற்றில் comment செய்ய முடியவில்லை. என்னவென்று பார்க்கவேண்டும்.]

    ReplyDelete
  15. ஏழு சுவாரஸ்யமான பதிவுகள்

    நூறாவது வானவில்லிற்கு வாழ்த்துகள் மோகன்

    ReplyDelete
  16. 100-க்கு வாழ்த்துக்கள் மோகன் சார்; விரைவில் வானவில் 1000 எட்டட்டும் :)

    ReplyDelete
  17. வானவில்லின் வண்ணம் இன்னும் கூடி இருக்கின்றது சார் ...
    ஒலிம்பிக்ஸ் லண்டனில் நெறைய கூத்து நடந்தாலும் நண்பர் சொல்லுவது போல் ரூல்ஸ் எல்லாம் ஏழைகளுக்கு மட்டும் தான் போல ..
    என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் மோகன் குமார்! அத்தனை பகிர்வுகளும் அருமை!

    ReplyDelete
  19. வானவில்லின் நூறாவது பகுதிக்கு வண்ணமயமான வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. வானவில்லின் வர்ணங்கள் அனைத்தும் ரசிக்கவைத்தன. நூறாவது வானவில் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. இன்னும் பல நூறு பதிவு காண மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்!
    இந்த பதிவு நல்ல வித்தியாசமாக இருந்தது!! special thanks for sharing Celebrations gift shop...

    ReplyDelete
  22. வானவில் 100க்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  23. அந்த தலைமை ஆசிரியருக்கு ஒரு வணக்கம்.”மனிதர்”

    ReplyDelete
  24. நூறாவது வானவில்லுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  25. சிறப்பான பகிர்வு! அந்த ஆசிரியர் போல அனைவரும் இருந்து விட்டால் நாடு சுபிட்சம் அடையும்! அவருக்கு வந்தனங்கள்!

    இன்று என் தளத்தில்!
    சென்ரியுவாய் திருக்குறள்
    எம்புள்ளைய படிக்கவைங்க!
    உடைகிறது தே.மு.தி.க
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  26. வானவில் 100 க்கு வாழ்த்துகள்!

    என்னுடைய பகிர்வை வெளியிட்டமைக்கு நன்றி.

    அனைத்தும் சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  27. வாசிக்க மிக அருமையான பதிவு...

    ReplyDelete
  28. ராமலட்சுமி: முதல் பதிவிலும் நூறாவது பதிவிலும் பின்னூட்டம் இட்டு வாழ்த்திய வெகு சிலரில் நீங்களும் ஒருவர். என்னை விட வயதிலும், பதிவுலகிலும் மூத்தவர் என்ற முறையில் பதிவுலகளில் பலநேரங்களில் நல்ல வழிகாட்டியாக உள்ளதற்கு நன்றி சொல்லவேண்டும் ! மிக்க நன்றி

    ReplyDelete
  29. நன்றி கேபிள் மகிழ்ச்சி. உங்க கொத்து பரோட்டா எல்லாம் கணக்கே இல்லாம நம்பர் தாண்டிருக்கும் !

    ReplyDelete
  30. நன்றி கோவை நேரம். அவரவர் எழுதி தந்தது தான் நண்பா

    ReplyDelete
  31. நன்றி வெங்கட். நலமா? விரைவில் சென்னையில் சந்திப்போம்

    ReplyDelete
  32. அமைதி அப்பா சொன்ன தகவல் நெகிழ்வான ஆச்சரியமான விஷயம் தான் . நன்றி ஹுசைனம்மா

    ReplyDelete
  33. தொடர் ஆதரவுக்கு நன்றி தனபாலன்

    ReplyDelete
  34. பாலஹனுமான் : மிக நன்றி

    ReplyDelete
  35. நன்றி சவுந்தர்.. இன்று பரபப்பான பதிவு போட்டு கலக்கியவர் நீங்கள் தான்

    ReplyDelete
  36. நன்றி சிவா; அவ்வப்போது நீங்கள் போனில் தரும் ஆக்க பூர்வ யோசனைகளுக்கு மிக நன்றி. தொடருங்கள்

    ReplyDelete
  37. உண்மை தான் பாலகணேஷ் சார் நன்றி

    ReplyDelete
  38. சீனி: நன்றி நண்பா

    ReplyDelete
  39. வலங்கை சரவணன்: வணக்கம் நன்றி

    ReplyDelete
  40. வரலாற்று சுவடுகள் நன்றி நண்பா

    ReplyDelete
  41. அரசன்: உண்மை தான் நன்றி நண்பரே

    ReplyDelete
  42. மகிழ்ச்சி உமா மேடம் நன்றி

    ReplyDelete
  43. நன்றி ராஜ ராஜேஸ்வரி

    ReplyDelete
  44. நன்றி கீதா மஞ்சரி

    ReplyDelete
  45. நன்றி சமீரா. Celebrations கடைக்கு நாம் கணேஷ் சாருக்கு தான் நன்றி சொல்லணும்

    ReplyDelete
  46. சங்கவி: விரைவில் உங்களை சந்திக்க போகிறோம் என்பதே மகிழ்வாய் உள்ளது

    ReplyDelete
  47. அமுதா: உண்மை சரியாய் சொன்னீர்கள்

    ReplyDelete
  48. நன்றி இளங்கோ

    ReplyDelete
  49. நன்றி அமைதி அப்பா; அற்புத சம்பவம் பகிர்ந்தமைக்கும்

    ReplyDelete
  50. தொழிற்களம் குழு : நன்றி நண்பரே

    ReplyDelete
  51. இனி வீடு திரும்பல் பக்கமும் என் திரும்பல் இருக்கும்

    ReplyDelete
  52. நூறாவது வானவில் பதிவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  53. //

    மோகன் குமார் said...

    ரகு: உங்கள் மனதின் நான்காவது அறை யாருக்கு என நண்பர் பாலஹனுமான் கேட்டதற்கு பதில் சொல்வீர்கள் என நினைத்தேன் :))//

    சாரி மோகன், காலையில் அவசரவசரமாக கமெண்ட் எழுதியதில் கவனிக்கவில்லை.

    பாலஹனுமான் சார், நிரந்தர தேவதை குடிவந்தபின் மற்ற மூன்று தேவதைகள் குடியிருக்கும் அறை பற்றி நினைத்தால், 'அறை' விழுமே! அதுவரை இவர்கள் இருந்துவிட்டு போகட்டும் :)

    ReplyDelete
  54. வாழ்த்துகள் மோகன்.

    ReplyDelete
  55. அன்பான வாழ்த்துகள் நண்பா...!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...