Friday, August 31, 2012

பதிவர் சந்திப்பில் பதிவர்கள் சுய அறிமுகம்:படங்கள்

திவர் சந்திப்பு குறித்த செய்தியை இணையத்தில் பார்த்து விட்டு புதிய தலைமுறை சானல் நிருபர்கள் அவர்களாகவே விழாவுக்கு வந்திருந்தனர் புதிய தலைமுறை நியூஸ் சேனல் கவர் செய்துள்ளது. விரைவில் இது வெளியாகும் என்றும் என்றைக்கு என சொல்வதாகவும் நிகழ்ச்சி படமெடுக்க வந்துள்ள பீர் முகமது கூறியுள்ளார்

மக்கள் தொலைக்காட்சியில் பதிவர்கள் இருபது பேர் பேசியுள்ளது அடுத்த சனிக்கிழமை (செப்டம்பர் 8-காலை எட்டரை மணி முதல் ஒன்பது வரை ஒளிபரப்பாகும்; முடிந்தால் பாருங்கள் !)
புதிய தலைமுறை நிருபர் பாரதி பேசுகிறார்

நிகழ்ச்சியில் பேசிய புதிய தலைமுறை நிருபர் பாரதி புதிய தலைமுறை இணைய தளத்தில் பதிவர்கள் அனைவரும் படைப்புகள் அனுப்பலாம் என கூறினார். அவர்கள் இணைய தளம் பார்த்தால் உங்களுக்கு மேல் விபரங்கள் தெரியும் !

***


நிற்க. இவ்வளவு பதிவு தேத்தணும் என்ற எண்ணத்தில் படம் எடுக்கலை. மூத்த பதிவர்கள் படங்கள் மட்டும் தான் நிச்சயம் எடுக்க நினைத்தேன். மற்றவை அந்த நேரத்தில் நான் பாட்டுக்கு எடுத்தேன். அப்புறம் ஒவ்வொன்றாய் போடவும், நண்பர்கள் தங்கள் முகத்தை இணையத்தில் பார்ப்பதில் மிக மகிழ்கிறார்களே என படங்கள் அனைத்தும்  இங்கு  பகிர்ந்து வருகிறேன்



இவையும் முதல் இரண்டு நாளில் ஏழெட்டு பதிவாய் போட்டு விட்டு மூன்றாம் நாள் மற்ற பதிவுகளுக்கு போயிடலாம் என நினைதேன். திண்டுக்கல் தனபாலன் போன் செய்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் போடாதீர்கள்; யாரும் பார்க்க மாட்டார்கள் என்று அன்போடு கூறியதால், நான்கைந்து நாளாய் நம் ப்ளாகில் இந்த சந்திப்பு குறித்து படங்கள் வருகிறது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு பதிவுடன் இவை முற்றும் !

பதிவர் சந்திப்பில் எடுத்த பதிவர்களின் சுய அறிமுக படங்கள் சில இன்று:

காவேரி கணேஷ் சுய அறிமுகம்


முதல் நண்பர் பெயர் தெரியலை, கிராமத்து காக்கை, கருண், மோகன்குமார்,  கோகுல், பசுமை தாயகம் அருள், புரட்சிமணி 
நண்பர்கள் அரட்டை

மக்கள் சந்தை சீனிவாசனுக்கு நினைவு பரிசு

புலவர் ஐயாவுடன் பதிவர்கள்


மகிழ்ச்சியான மூடில் பி.கே. பி


கண்மணி என்ற பெண் பதிவரின் தந்தை - என் பெண்ணின் பதிவை எல்லாரும் படிச்சு, அவளை என்கரேஜ் செய்யுங்க என பேசினார்

உடல் மண்ணுக்கு-உயிர் தமிழுக்கு இது மட்டுமே பிலாசபி மேடையில் பேசியது
பதிவர் சிமுலேஷன் (சார் உங்க போட்டோ கேட்டீங்க - இங்கிருந்து எடுத்துக்குங்க)

சுப்பு ரத்தினம்

பால கணேஷ், மோகன் குமார், ரோஸ்விக்
பதிவர் கிராமத்து காக்கையுடன் நான் ; பின்னே அகநாழிகை வாசு 
மூத்த பதிவர்கள் முன் வரிசையில் 
ஒரு லட்சம் ரூபாய் பரிசு போட்டி பற்றி மக்கள் சந்தை அருணேஷ் பேசுகிறார் 
விழாவுக்கு வந்தோரில் 20 % பெண் பதிவர்கள். அவர்களில் ஓரளவு தெரிந்த ஓரிருவர் தவிர வேறு யாரையும் Photo எடுக்கலை. மேலும் பதிவர் அறிமுக நேரம் தான் மக்கள் தொலைக்காட்சி ஹாலுக்கு கீழே வைத்து பதிவர்களிடம் பேசியதால் பதிவர்கள் பலரை மாற்றி மாற்றி கீழே அழைத்து போகும் பணியை செய்து கொண்டிருந்தேன். அதனால் தான் பல பதிவர்கள் படங்கள் எடுக்க முடியலை. இங்கு மிஸ் ஆன இன்னும் நிறைய படங்கள் நிச்சயம் மதுமதி பகிர்வார் !

எனது காமிரா படங்கள் அனைத்தும் அநேகமாய் முடிந்தன. விழா பற்றி இன்னும் இரண்டே பதிவு வெளியாகும். நன்றி !

34 comments:

  1. இன்ட்லி வேலை செய்யலை; நான் மாலை வரை இணையம் பக்கம் வர முடியாது. இன்ட்லி வேலை செய்வதை பார்த்தால் நண்பர்கள் யாரேனும் அதில் இணைக்குமாறு வேண்டுகிறேன் நன்றி

    ReplyDelete
  2. படங்கள் எல்லாம் அருமை... பலரும் சந்தோசப்பட்டுக் கொள்வார்கள்...

    மிக்க நன்றி சார்... (TM 2)

    ReplyDelete
  3. /// இன்ட்லி வேலை செய்யலை ///

    ஆமாம்... நேற்று முதல்... ஒவ்வொரு தளமும் திறக்கவே ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...

    நண்பர்களே... இன்ட்லி வோட் பட்டன் மற்றும் இன்ட்லி Widget - இரண்டையும் இன்ட்லி சரி ஆகும் வரை நிறுத்தி வைக்கவும்...

    ReplyDelete
  4. யார்கிட்டேயும் இத்தனை போட்டோஸ் இருக்காது போல.
    எல்லாம் நல்லா எடுத்திருக்கீங்க அண்ணே.

    ReplyDelete
  5. பகிர்வுக்கு மிக்க நன்றி சார்..

    ReplyDelete
  6. பதிவர் அறிமுக நேரம் தான் மக்கள் தொலைக்காட்சி ஹாலுக்கு கீழே வைத்து பதிவர்களிடம் பேசியதால் பதிவர்கள் பலரை மாற்றி மாற்றி கீழே அழைத்து போகும் பணியை செய்து கொண்டிருந்தேன்
    >>>
    இப்படியெல்லாம் பூசி மொழுகக்கூடாது. மக்கள் டீவிக்கு பேட்டி குடுத்துக்கிட்டு இருந்தேன்னு சொல்லுங்க., நான் பேசுறது மட்டும் 10 நிமிசம் வர மாதிரி போடுங்கன்னு நிருபர்கிட்ட சொன்னதை நாந்தான் கேட்டேனே.

    ReplyDelete
  7. //உடல் மண்ணுக்கு-உயிர் தமிழுக்கு இது மட்டுமே பிலாசபி மேடையில் பேசியது //

    அவர் பதிவுகள்ல மட்டும் தான் பேசுவார் போல..

    ReplyDelete
  8. படங்கள் அனைத்தும் அருமை சார்... நிச்சயம் பலருக்கும் மகிழ்வைத் தரும்.....

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்!
    பெண் பதிவர்கள் படங்கள் காணவில்லை?

    ReplyDelete
  10. படங்கள் அனித்தும் அருமை

    ReplyDelete
  11. படங்கள் அருமை

    ReplyDelete
  12. வணக்கம் தலிவா :),
    என்ன நேத்து பெற கரீட்ட சொன்னீங்க
    //புரட்சி மணி (பேர் கரீட்டா சொல்றேனா?) )// இன்னிக்கு இப்பிடி?
    //புரட்சி தமிழன் //
    இதுவும் நல்லாத்தேன் இருக்கு.
    புகைப்படங்கள் அனைத்தும் அருமை. என்னுடைய புகைப்படங்கள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை .
    பகிர்வுக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  13. என்னப்பா இது நான் இருக்கிற ஒரு போட்டோகூட இன்னும் வரவில்லை...

    இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

    ReplyDelete
  14. நிகழ்வுகளை படம் பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  15. படங்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி மோகன்!

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  16. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    என்னப்பா இது நான் இருக்கிற ஒரு போட்டோகூட இன்னும் வரவில்லை...

    இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...//

    நான் இதை ஆமோதிக்கிறேன்

    ReplyDelete
  17. நெறைய படம் போடுங்க சார்..!பின்னாடி உங்களை கலாய்ப்பதுக்கு எனக்கு தேவைப்படும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  18. படங்கள் அருமை சார்....

    ReplyDelete
  19. திண்டுக்கல் தனபாலன்
    //நண்பர்களே... இன்ட்லி வோட் பட்டன் மற்றும் இன்ட்லி Widget - இரண்டையும் இன்ட்லி சரி ஆகும் வரை நிறுத்தி வைக்கவும்... //

    ******
    சார் என்னை மாதிரி ஆளுக்கு இதை எடுக்கவும் தெரியாது. சேர்க்கவும் தெரியாது. நண்பர் யாராவது தான் சேர்த்தே கொடுப்பார்கள். அதான் பிரச்சனை. :((

    ReplyDelete
  20. சிறப்பாக நடத்தி முடித்து விட்டீர்கள்1வாழ்த்துகள் மோகன் குமார் அவர்களே

    ReplyDelete
  21. கவிதை வீதி... // சௌந்தர் // said...

    என்னப்பா இது நான் இருக்கிற ஒரு போட்டோகூட இன்னும் வரவில்லை...இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
    ***
    நேத்து நீங்கள் கவியரங்கத்தில் கவிதை படிக்கிற மாதிரி போட்டோ போட்டேன். நீங்கள் அதை பார்க்காததை வன்மையாக கண்டிக்கிறேன் :))

    ReplyDelete
  22. R.Puratchimani said...


    வணக்கம் தலிவா :), என்ன நேத்து பெற கரீட்ட சொன்னீங்க
    //புரட்சி மணி (பேர் கரீட்டா சொல்றேனா?) )// இன்னிக்கு இப்பிடி? //புரட்சி தமிழன் //
    *****
    வீட்டுக்கு தெரியாம நடு ராத்திரியில் எழுந்து பதிவு எழுதினா இப்படி தான் ஆகும். கரீட் பண்ணிடுறேன் !

    ReplyDelete
  23. வீடு சுரேஸ்குமார் said...

    நெறைய படம் போடுங்க சார்..!பின்னாடி உங்களை கலாய்ப்பதுக்கு எனக்கு தேவைப்படும்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ****
    ரைட்டு !

    ReplyDelete
  24. சமுத்ரா said...

    படங்கள் அருமை
    ****
    நன்றி . விகடனில் உங்கள் ப்ளாக் அறிமுகம் பார்த்தேன் சமுத்ரா; உங்களை பற்றி மிக பாராட்டி எழுதிருக்காங்க மிக மகிழ்ச்சி

    ReplyDelete
  25. ராஜி said...

    இப்படியெல்லாம் பூசி மொழுகக்கூடாது. மக்கள் டீவிக்கு பேட்டி குடுத்துக்கிட்டு இருந்தேன்னு சொல்லுங்க., நான் பேசுறது மட்டும் 10 நிமிசம் வர மாதிரி போடுங்கன்னு நிருபர்கிட்ட சொன்னதை நாந்தான் கேட்டேனே.

    ***

    யக்காவ். உங்க தம்பியை நாலு நாளா தனியா கூகிள் பிளஸ்சுக்கு கூட்டி போயி குமுறு குமுறுன்னு குமுருறாங்க. நீங்க என்னடான்னா உங்க தம்பிக்கே உலை வைக்கிறீங்களே ! சரி விடுங்க. அடி வாங்கி வாங்கி இனிமே யார் அடிச்சாலும் தாங்குற அளவில் பழகிட்டே இருக்கேன்

    ReplyDelete
  26. J.P Josephine Baba said...

    வாழ்த்துக்கள்!பெண் பதிவர்கள் படங்கள் காணவில்லை? **

    ***
    அனுமதி இன்றி பெண் பதிவர்கள் படங்கள் எடுக்க கூடாது என்று பேசியிருந்தோம். காரணம் இப்படி போட்டு ஒரு முறை பெரிய சண்டை/ பிரச்சனை ஆகிடுச்சு

    தெரிந்த பெண் பதிவர்களிடம் மட்டும் போட்டோ எடுத்து அவங்களிடம் கேட்டுட்டு முன்னாடி உள்ள பதிவில் போட்டிருக்கோம்.

    ReplyDelete
  27. எனது காமிரா படங்கள் அனைத்தும் அநேகமாய் முடிந்தன//
    நீங்க கள்ளாட்டம் ஆடறீங்க...வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துட்டு இப்போ எஸ்கேப் ஆகறீங்களா...

    ReplyDelete
  28. நல்ல புகைப்படங்கள். இன்னும் இரண்டு பதிவு தானா? இது மோசம். பதிவர்கள் சந்திப்பு பத்தி ஒரு இருபது போஸ்டாவது எதிர்பார்த்தேன் உங்க கிட்ட.... :))

    ReplyDelete
  29. சிறந்த உழைப்பு.அருமையான வண்ணப்படங்கள்.வாழ்த்துக்கள்
    வில்லவன் கோதை

    ReplyDelete