Tuesday, February 19, 2013

Baywatch : கன்யாகுமரி தீம் பார்க் - ஒரு பார்வை


ன்யாகுமரி சுற்றுப்பயணத்தொடரில் இம்முறை வட்டகோட்டை மற்றும் பேவாட்ச் எனும் Entertainment பார்க் இரண்டையும் பார்க்கலாம்

வட்டக்கோட்டை

மிக அழகான இந்த இடம் நாகர்கோவில்/ கன்யாகுமரி பக்கம் நீங்கள் செல்லும்போது அவசியம் விசிட் அடிக்க வேண்டிய இடங்களுள் ஒன்று. நாகர்கோவிலில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்திலும், கன்யாகுமரியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.



 பெயருக்கேற்ற படி இது ஒரு கோட்டை. ஆனால் வட்ட வடிவம் போல் நமக்கு தெரியலை. சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் தான் தெரியுது. வெளி பக்கம் முழுதும் கருங்கல்லால் செய்த உயரமான மதில் சுவர். உள்ளே நுழைந்ததும் அகழி போல ஒரு நீர் தேக்கம்.




இது ராஜாக்கள் இருந்த கோட்டை அல்ல. கன்யாகுமரி மற்றும் நாகர்கோவில் கடற்கரை அருகே இருந்தமையால், கடல் வழியே எதிரி படைகள் வர வாய்ப்பு உண்டு . அதனை கண்காணிக்க கட்டிய கோட்டையே இது. இங்கு வீரர்கள் தான் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக கன்யாகுமரியில் முத்துக் குளிக்கும் வழக்கம் இருந்தமையால் இங்குள்ள முத்துக்களை அபகரிக்க கள்ளர் கூட்டம் வரும் அபாயம் இருந்திருக்கிறது. எனவே இந்த ஏற்பாடு.

டச்சு காலத்தில் இது செங்கோட்டையாக இருந்ததாகவும், தளபதி டிலனாய் என்பவர் தான் இதனை கற்கோட்டையாக மாற்றினார் என்றும் அங்குள்ள குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வீரர்களுக்கு கண்காணிப்பறை, ஓய்வறை ,ஆயுதச்சாலை என பல இடங்கள் இங்கு இருந்திருக்கின்றன. இன்று அவை எதுவும் இல்லை. ஒரு காட்சி பொருளாக மட்டுமே உள்ளது

வட்டக்கோட்டை - 2 அடுக்காக உள்ளது. கீழ் தளம். நீர் நிலை (குளம்) ஒன்றும் அழகான் புல்வெளியும் உள்ளது. இங்கு நாரைகள் மிக ஜாலியாக உலவுகின்றன.

முதல் மாடி போல இருக்கும் மேல் தளத்திலும் அற்புதமான புல்வெளி உள்ளது. இங்கிருந்து பார்த்தால் தான் இந்த இடத்தின் அழகு முழுமையாக தெரிகிறது. சுற்றிலும் கடல். ஒரு பக்கம் தென்னை மரங்கள் வரிசையாக அழகுற காட்சி தர, அதற்கு நடுவே மிக அதிக புல்வெளியுடன் இருக்கிறது இந்த கோட்டை. காற்று வேறு இனிமையாக நம்மை தழுவி போகிறது. வீடியோவை பாருங்கள்



மிக ரம்மியமான சூழல். (அதற்கேற்ப ஆங்காங்கு காதலர் கூட்டம் வேறு)
கூட்டம் அதிகமில்லை ( நாங்கள் பல இடங்கள் பார்க்கணும் என்பதால் காலை 9 மணிக்கே அங்கு சென்று விட்டோம்)


அவசியம் ஓரிரு மணி நேரம் அமர்ந்து பொறுமையாய் ரசிக்க வேண்டிய இடங்களுள் ஒன்று வட்ட கோட்டை !

**************
பே வாட்ச் கன்யாகுமரி ஒரு பார்வை 

பே வாட்ச் உள்ளே போகும் முன் ஒரு மெழுகு மியூசியம் உள்ளது. இதை காண ரூ. 50 கட்டணம். பே வாட்ச் சுற்றி பார்க்க அனைத்து விளையாட்டுகள் விளையாட 300 ரூ கட்டணம்.

முதலில் மெழுகு மியூசியம் பார்ப்போம்.

நுழைவு வாயிலின் வலது புறம் சில சிலைகளும், இடது புறம் சில சிலைகளும் உள்ளது. இரண்டின் நுழைவு வாயிலும் தனித்தனி.

மியூசியத்தில் பெரும்பாலும் மோகன்லால், ஜேசுதாஸ் போன்ற மலையாள சினிமா உலகத்தினர் அல்லது கேரள அரசியல் வாதிகள் சிலைகள் தான் அதிகம் உள்ளது.

இவை தவிர ஜாக்கி சான் சிலை சண்டை போடும் பாவனையில் உள்ளது.



தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சிலையும், ரஜினி சிலையும் இருந்தது. மற்றபடி தமிழகத்தில் இருந்த போதும் தமிழக சினிமா மற்றும் பிற பிரபலங்கள் சிலை குறைவே இதன் காரணம் கேட்க இந்த் மியூசியம் முதலில் கேரளாவில் இருந்ததாகவும், அதனை அப்படியே இங்கு ஷிப்ட் செய்துள்ளதாகவும் கூறினர்.




இந்த சிலைகளை தினம் காலை நேரம் துடைப்பார்களாம். மாதம் ஒரு முறை "குளிப்பாட்டு"வார்களாம். இங்கு பணி புரியும் நண்பர் சொன்னது.



நாங்கள் இதே போன்ற ஒரு மெழுகு சிலை மியூசியம்  ட்டி சென்ற போது பார்த்திருக்கிறோம். அங்கு இதை விட இன்னும் நிறைய மெழுகு சிலைகள் இருந்தன. இடமும் மிக பெரியது; சிலைகளும் அதிகம். மனம் ஒரு புறம் அந்த மியூசியத்துடன் ஒப்பிட்டு " அந்த அளவு இல்லை " என சொல்லி கொண்டிருந்தது. நீங்கள் எந்த மெழுகு மியூசியமும் பார்க்கா விடில் இது நிச்சயம் attractive -ஆக இருக்கும். மேலும் இங்கு இந்த மெழுகு சிலை மியூசியம் மட்டும் தனியாக இல்லையே ! பே வாட்ச் என்கிற Entertainment பார்க்குடன், அதன் ஒரு சிறு பகுதியாக தானே உள்ளது.

இங்கு எடுத்த 2 வீடியோ இதோ பாருங்கள்:

Bay watch Wax Museum Videos:







*********
மெழுகு மியூசியத்துக்கு அடுத்து ...பே வாட்ச் Amusement பார்க்

நாங்கள் பெரும்பாலானவற்றில் விளையாட வில்லை. நேரம் இல்லை என்பதால் ஒரு ரவுண்டு சுற்றி பார்த்து விட்டு வந்து விட்டோம்.

விளையாட்டுகளில் முக்கியமான சில :

வாட்டர் கேம்ஸ்: அழகான சுவிம்மிங் பூல் உள்ளது. குழந்தைகளுக்கு சற்று ஆழம் குறைவாகவும், பெரியவர்களுக்கு சற்று அதிகமாகவும் இருக்கும் படி பார்த்து கொண்டுள்ளனர்

பவுண்டேன் போல கொட்டும் நீர் ஊற்றுகள் உள்ளன (சென்னையில் உள்ள கிஷ்கிந்தா உள்ளிட்டவற்றில் நீங்கள் இத்தகைய வாட்டர் கேம்ஸ் என்ஜாய் செய்திருக்கலாம்). இத்தகைய தண்ணீர் உங்களுக்கு ஒத்து கொள்ளும் என்றால் நிச்சயம் இந்த வாட்டர் கேம்ஸ் செம ஜாலியாக இருக்கும்


நிறைய ராட்டினம் டைப் விளையாட்டுகள் உள்ளன. எங்களுக்கு அவை சற்று அலர்ஜி என்பதால் நாங்கள் செல்ல வில்லை. இங்கு எந்த விளையாட்டுக்கும் லிமிட் இல்லை என்பது முக்கியமான விஷயம். உங்களுக்கு பிடித்தால் நீங்கள் இரண்டு மூன்று முறை கூட விளையாடலாம்.

இவ்விடியோவில் பேவாட்ச் Amusement பார்க் முழுமையாய் காணலாம் :



குட்டி பசங்கள் என்ஜாய் செய்கிற மாதிரி ஒரு டாய் டிரையின் இருக்கிறது. அதற்கு பே வாட்ச் ரயில்வே நிலையம் என பேர் வைத்து குட்டியாக ஒரு ரவுண்ட் அடிக்கிறார்கள்.



ஒரு இருட்டான இடத்தில் உள்ளே நுழைந்து வெளியே வர, அதற்குள் எலும்பு கூடு போன்றவை பயமுறுத்தும் அல்லவா? அந்த வகை விளையாட்டு ஒன்று உள்ளது. சென்று வரும்போது எங்கள் பெண் நன்கு என்ஜாய் செய்தாள்

பொதுவாக சென்னையில் இருக்கும் இத்தகைய பார்க்குகளில் கூட்டம் ஏகமாய் இருக்கும். இங்கு அதிக கூட்டம் இருப்பதில்லை.

கன்யாகுமரியில் 2-3 நாள் நீங்கள் தங்கினால், நேரமிருந்தால் : அரை நாள் - பே வாட்சில் ஜாலியாக சுற்றி வரலாம்.

28 comments:

  1. எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி... (ஏன் இப்படியொரு போஸ்...?

    ReplyDelete
    Replies
    1. சும்மா ஜாலிக்கு தான் சார் :)

      Delete
  2. சார், ஈமெயில் செக் பண்றதே இல்ல போலிருக்கு ? :)))

    போன வாரம் ஒரு மெயில் அனுப்பியிருந்தேன். பிசியா
    ? :)

    ReplyDelete
  3. அருமை... கன்னியாகுமரி போனால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்கூல் பையன் பாருங்கள்

      Delete
  4. வட்டகோட்டை கதை இன்னும் நிறைய இருக்கு நண்பா, நேரில பார்க்கும்போது கண்டிப்பாக உங்களுக்கு விளக்கி சொல்கிறென், நான் சொல்வதை கேட்டபின் நீங்கள் அந்த கோட்டையை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிடும்...!

    எங்கள் ஊர் பற்றிய பதிவுக்கு நன்றி நண்பா...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ;;; முக நூலில் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்தமைக்கும்

      Delete
  5. வட்டக்கோட்டை போயிருந்தோம். இந்த பே வாட்ச் போகலை. இங்கே உங்க வீடியோ மூலம்தான் பார்த்துக்கணும். பகிர்தலுக்கு நன்றி.
    சிலைகள் இன்னும் கொஞ்சம் தத்ரூபமா இருந்துருக்கலாம் இல்லே, மேடம் டுஸார்ட் போல?

    ReplyDelete
    Replies
    1. ஆம் டீச்சர்; மெழுகு சிலைகள் இன்னும் நல்லா இருந்திருக்கலாம்

      Delete
  6. ees: : மன்னிச்சூ ! ஆபிஸ், வீடு, பதிவு போடுவது போன்ற ரெகுலர்
    வேலைகள் தாண்டி புதுசாய் ஸ்டடி சர்க்கிள் ஒன்றில் பொறுப்பில் இருப்பதால் அது சம்பந்தமான வேலைகள் எக்கச்சக்கமாய் நேரம் குடிக்கிறது

    உங்கள் மெயில் கிடைத்தது. தாம்பரம் அருகில் நீங்கள் சொன்ன இடங்கள் நிச்சயம் சென்று அது பற்றி எழுதுகிறேன். (உங்களுக்கு ரிப்ளை செய்ததாக நினைத்து கொண்டிருந்தேன் ; உங்கள் கமண்ட் பார்த்து தான் பதில் போடலை என தெரிந்தது)

    ReplyDelete
  7. நோ ப்ராப்ளம் சார் :):) ஒருவேள மெயில் ஐடி தப்பா இருக்கலாம் அல்லது அந்த ஐடி இப்போ உபயோகிக்காம இருக்காலாம்ன்னு நினைச்சேன்.அதான் இங்க கமெண்ட் போட்டேன் :)

    கண்டிப்பாப் போய் பாருங்க..உங்களுக்குப் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்.. எதாவது தகவல் வேணும்னா எனக்கு மெயில் பணணுங்க :)

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா ees ! கொஞ்சம் டைம் ஆகும். ஆனாலும் எழுதுறேன்

      Delete
  8. வட்டக் கோட்டை காணும் ஆவல் ஏற்படுகிறது. நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலட்சுமி மேடம்

      Delete
  9. சில வருஷங்களுக்கு முன் ஊருக்குப் போயிருந்தப்ப மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா பே வாட்ச் போயிருந்தோம். பசங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அப்போ இந்த மெழுகு மியூசியம் இருந்துச்சான்னு ஞாபகமில்லை.

    வட்டக்கோட்டையையும் விசிட் அடிச்சோம் ஒருக்கா.. அள்ளிட்டுப்போற கடல்காத்து. மதில் சுவர்லேர்ந்து எட்டிப்பார்த்தா காலடியில் தெரியுற கடல். ஆஹா!! அருமையான அனுபவம். அங்கே இருக்கும் ஸ்ப்ரிங் தென்னை மரத்தை எல்லோரும் சிலாகிச்சுப் பேசிக்கிறாங்க. நீங்க விசிட் செஞ்சீங்களா?

    படங்களெல்லாம் நல்லாருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அட நம்ம நண்பர்களில் ஒருத்தர் பே வாட்ச் போயிருக்காரே !

      வட்ட கோட்டை ரொம்பவே என்ஜாய் செய்தோம் நாங்கள். ஸ்ப்ரிங் தென்னை மரம் மேலிருந்து பார்க்கும்போது தெரிகிறது அருகில் போகலை

      Delete
  10. படங்கள் அழகு.

    அவரைப் பார்த்தால் ஜாக்கி சான் போலவே இல்லை!


    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா யாரு? பக்கத்திலே போஸ் குடுத்து நின்னவரா :)

      Delete
  11. அருமையான பகிர்வு! நன்றி! சுற்றுலா செல்கையில் அவசியம் உதவும்! நன்றி

    ReplyDelete
  12. 1972 ல் வெளி வந்த ராஜா திரைப்படத்தின் ' நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்' என்ற பாடல் காட்சியின் ஒரு பகுதி வட்டக்கோட்டையில் எடுக்கப்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. அட அப்படிங்களா நாகராஜன் ? தகவலுக்கு நன்றி ; அப்படம் நான் பார்த்துள்ளேன்

      Delete
  13. நல்ல படங்கள் மற்றும் காணொளிகள்.

    Keep enjoying! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்

      Delete
  14. அருமை . கண்டிப்பாக செல்லத்தூண்டுகின்றது

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஞானம் சேகர்

      Delete
  15. அருமை, எங்கள் ஊரை பற்றிய இனிமையான செய்திகளுக்கு நன்றிகள் கோடி.........

    ReplyDelete
  16. அருமையான இடங்களாக இருக்கு. அடுத்த முறை இந்த இடங்களையும் சேர்த்துக்கறோம்..:)

    ReplyDelete
  17. வட்டக்கோட்டை நான் பார்த்ததில்லை.. தகவலுக்கு நன்றி மோகன்!

    ReplyDelete