Monday, June 10, 2013

தொல்லை காட்சி - ஜோடி சீசன்- லிங்குசாமி- சூப்பர் சிங்கர்

விஜய் டிவி - ஜோடி சீசன் - 6

விஜய் டிவியில் நடக்கும் டான்ஸ் நிகழ்ச்சி - ஜோடி சீசன் -6. பொதுவாக இத்தகைய சூப்பர் சிங்கர் அல்லது ஜோடி சீசன் எல்லாம்- புது முகங்கள் தங்கள் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக தான் பயன்படுத்துவர். ஆனால் ஏற்கனவே பல படங்களில் நடித்த - பிரபு தேவா தம்பி - நாகேந்திர பிரசாத் - ஆனந்தி என்கிற பெண்ணுடன் (அம்மணி அழகு ஹீ ஹீ ) டான்ஸ் ஆடுகிறார். மற்ற புது முகங்களுடன் நன்கு எஸ்டாப்ளிஷ் ஆன நடிகர் போட்டியிடுவது எப்படி சரியாகுமோ தெரியலை !



இவ்வாரம் ரொமான்ஸ் ரவுண்ட் என ஆள் ஆளுக்கு - பின்னி பிணைந்து சூட்டை கிளப்பிட்டாங்க. நாகேந்திர பிரசாத் ஜோடியான ஆனந்தி,  தான் இந்த போட்டியில் ஆடும் ஒருவரை காதலிப்பதாகவும் அவர் பெயரையும் சொல்ல, அந்த நபர் வந்து நிற்க, அப்புறம் " ஏய் ஏமாந்தியா ?" என பல்பு கொடுத்தார் ! விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோவில் டிராமா நடப்பது தவிர்க்க முடியாமல் போய் விட்டது !

லிங்குசாமியின் ஓவியங்கள் + கவிதை புத்தகம்

கலைஞர் செய்திகளில் "கனவு தொழிற்சாலை" என சினிமா செய்திகள் தாங்கிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் இயக்குனர் லிங்குசாமியின் கவிதை புத்தக வெளியீடு பற்றி சிறு பகுதி வந்தது. லிங்குசாமி கவிதைகள் மட்டுமல்ல- ஓவியமும் நன்கு வரைவாராம் - கதாசிரியர்- இயக்குனர்- தயாரிப்பாளர் - இவை தாண்டி - கவிஞர் மற்றும் ஓவியராக அவரால் எப்படி இருக்க முடிகிறது ! அதிலும் தயாரிப்பாளர் - இயக்குனர்- இரண்டுமே டென்ஷன் ஆன வேலைகள் ! இதற்கான பதிலை இப்படி சொன்னார் லிங்கு சாமி "நமக்கு எந்தெந்த விஷயம் எல்லாம் பிடிக்குதோ, அது எல்லாத்திலும் நம்ம எனர்ஜியை முழுசா செலுத்திட்டா போதும், நேரம் - மத்த பிரச்சனை எல்லாம் விஷயமே இல்லை "

டிவி விளம்பரம் 

ஏர் இந்தியாவின் சர்விஸ் என்னவோ கிண்டலடிக்கிற அளவில் தான் இருக்கிறது. ஆனால் தந்தை- மகள் பற்றிய அதன் விளம்பரம் சற்று ரசிக்கும் படி உள்ளது




நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் - 50 லட்சம் 

போலிஸ் துறையில் பணியாற்றும் வசந்த குமார் என்பவர் - நீ. வெ .ஒ. கோ- வில் 50 லட்சம் வென்றார். பிக்சிங் உண்டா - எம்புட்டு பணம் கைக்கு கிடைச்சிருக்கும் போன்ற சந்தேகங்கள் அரித்து கொண்டே தான் இருந்தன

அவர் ஒரு கோடி ஜெயித்த மாதிரி நாலைஞ்சு நாளா ஒரே சீனை போட்டு - நம்மை நிகழ்ச்சி பார்க்க வைத்து விட்டனர் விஜய் டிவி மக்கள் !

எளிய குடும்பம்- கூலி வேலையில் கஷ்டபட்ட தந்தை என பரிதாப பேக் க்ரவுண்ட் - அரசு வேலையில் (போலிஸ்!) இருக்கும் வசந்த குமார் - கடைசி கேள்வி -வரும்போது 2 லைப் லைன் மீதம் இருந்தது. அவற்றை பயன்படுத்தியும் கூட, தூர்தர்ஷன் டைட்டில் மியூசிக் இசையமைத்தவர் யாரென்று சொல்லாமல் விலகினார்

இந்த நிகழ்ச்சி என்றில்லை - எல்லாவற்றிலும் பிரகாஷ் ராஜ் தவறாமல் சொல்லும் வார்த்தைகள் (செல்லம் தவிர) - சூப்பர், எக்சலண்ட் - தயவு செஞ்சு வேற சில வார்த்தைகள் கத்து குடுங்கப்பா சானலிலே !

டிவியில் பார்த்த படம் - அழகே உன்னை ஆராதிக்கிறேன்

இந்த படத்தில் வரும் " நானே நானா யாரோ தானா" என்கிற அற்புத பாட்டு - 30 ஆண்டுக்கு மேலாக எனக்கு பிடித்த பாட்டு. ஆனால் படம் பற்றியோ, கதை பற்றியோ துளி கூட தெரியாது .எதேச்சையாய் ஒரு நாள் இரவு ராஜ் டிவியில் - காண, கடைசி வரை - விழித்திருந்து  பார்த்தேன்

இயக்குனர் ஸ்ரீதர் இயக்கம்; 30 ஆண்டுக்கு முன் வந்த கதையில் - துவங்கும் போது அவ்வளவு முற்போக்கு -சிந்தனைகள் - ஆனால் முடிக்கும்போது சற்று சொதப்பி விட்டார்

பெண்களிடம் பழகி ஏமாற்றும் - ஆசாமி ஜெய் கணேஷ் - அவரிடம் ஏமாறுகிறார் லதா - இது தெரிந்தும் லதாவை உருகி, உருகி காதலிக்கிறார் விஜய குமார்.

லதா வாழ்விற்குள் மீண்டும் வரும் ஜெய் கணேஷ் - இப்போது அவரது அண்ணன் மகளை கெடுக்க முயல, லதா அவரை கொன்று விட்டு தானும் (இயற்கை!!) மரணம் எய்துகிறார் !

நடிகை - லதா பீல்ட் அவுட் ஆகும் நேரத்தில் வந்த படமாய் இருக்கணும். ராஜா மட்டும் - அட்டகாச பாடல்களை வாரி வழங்கிய படம் !

ஒரு வார்த்தை ஒரு லட்சம் பைனல்

சில மாதங்களாக நடந்து வந்த ஒரு வார்த்தை ஒரு லட்சம் ஜூனியர் நிகழ்வின் பைனல் நேற்று ஒளிபரப்பானது. பாண்டிச்சேரி ஆதித்யா பள்ளி மாணவிகள் இருவர் தலா ஒரு லட்சம் வென்றனர். திருச்சி மாணவிகள் இரண்டாம் இடம். சென்னை பள்ளிகள் எதுவும் இறுதி போட்டிக்கு வரவில்லை என்பதோடு - ஆண்களிலும் ஒருவர் கூட இறுதி போட்டிக்கு வரலை !

இறுதி போட்டியில் - மிக கடினமான சொற்கள் - நேரமும் வழக்கத்தை விட குறைவு - மாணவிகள் சற்று திணறி தான் போயினர்.

பரிசு வழங்க வந்தது பாடலாசிரியர் நா முத்து குமார்

வெற்றி பெற்றதும் நன்றியும் மகிழ்ச்சியும் - சொல்ல ஆங்கிலம் தான் 90 % உபயோகித்தனர் மாணவிகள் :)

சூப்பர் சிங்கர் கார்னர் 

2013-ன் முதல் சில மாதங்களில் தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த   TMS , PB ஸ்ரீநிவாஸ், ராமமூர்த்தி ஆகியோர் அடுத்துடுத்து மரணமடைந்து விட்டனர்.அஞ்சலி செலுத்தும் விதத்தில் இவர்களின் பாடல்கள் மட்டுமே இவ்வாரம் முழுக்க சூப்பர் சிங்கரில் ஒலிக்க உள்ளது.

TMS மற்றும் ஸ்ரீனிவாசின் அற்புத பாடல்கள் பிடிக்கும் என்றால் - இவ்வார நிகழ்ச்சியை காணுங்கள் !
*****
அண்மை பதிவுகள் 

குட்டிப்புலி - பெரிய சைஸ் கரடி ! 

ஆலப்புழா.. Boat House பயணம் -ஸ்பெஷல் படங்கள்

ஜிம் டிரைனர் வாழ்க்கை - அறியாத தகவல்கள் 

8 comments:

  1. ம்ம் இந்த வாரம் முழுசா குட்டீஸ் சுட்டீஸ் பார்த்தேன். ப்ப்ப்ப்பா எம்புட்டு பெரிய சாதனை நான் செஞ்சது

    ReplyDelete
  2. நீங்கள் கூறியது போல நானும் கடந்த வாரம் "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" படம் பார்த்தேன்.. நன்றாக ஆரம்பித்த கதை போக போக சலிப்பூட்டியது. ஆயினும் முழுவதுமாக பார்த்தேன்... ராஜாவின் பாடல்கள் மட்டும் அருமை... 1) என் கல்யாண வைபோகம் 2) நானே நானா யாரோ தானா 3) குறிஞ்சி மலரில் போன்ற பாடல்கள் கேட்க இனிமை.
    அது மட்டுமல்லாது, தினமும் ராஜ் டி.வி.யில் இரவு படம் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நடுத்தரப் படங்களாக போடுவதும் விளம்பர தொந்தரவு இல்லாததும் ஆறுதலாக இருக்கிறது.... சென்ற சில வாரங்களில் இப்படி தான் "புதுக்கவிதை", "புது புது அர்த்தங்கள்" "ரெட்டை வால் குருவி" "சாதனை" "தாய்க்கு ஒரு தாலாட்டு" "கணம் கோர்ட்டார் அவர்களே" "ஜாதி மல்லி" என்று சில படங்கள் பார்த்தேன்,thanks to Raj .T .V.
    பதிவுகள் தொடர்ந்து படிக்கிறேன், நன்றாக இருக்கிறது.. மிக்க நன்றி....

    ReplyDelete
    Replies
    1. அருணாச்சலம்: விரிவான கருத்துக்கு மிக்க நன்றி ; ராஜ் டிவி பொதுவாய் விளம்பரம் போட்டு கொள்வார்கள் இரவு நேரம் மிக குறைவாய் விளம்பரம் போடுவது ஆச்சரியம் ; ஓரளவு நல்ல படங்கள் போடவும் செய்கிறார்கள்

      Delete
  3. பல்சுவை நிகழ்ச்சிகள் பற்றிய சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  4. சென்னைத் தொலைக்காட்சியின் துவக்க ஆண்டு (1975) முதல், பல ஆண்டுகளுக்கு (2000 முடிய), வயலும் வாழ்வும் நிகழ்ச்சியின் ஆரம்ப இசையாக ஒலித்தது இளையராஜாவின் நானே நானா யாரோ தானா பாடல்தான்.


    தான் இசையமைத்த வயலும் வாழ்வும் நிகழ்ச்சியின் ஆரம்ப இசையைத்தான், நானே நானா பாடலுக்கு இளையராஜா உபயோகப் படுத்தினார்

    ReplyDelete
    Replies
    1. அட சுவாரஸ்யமான தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி நாகராஜன்

      Delete
  5. நல்ல பகிர்வு.

    தகவல்களுக்கு நன்றி மோகன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...