Thursday, July 18, 2013

மாத சம்பளம் வாங்குவோரின் இன்கம்டாக்ஸ் ரிட்டன் - ஒரு FAQ


மிழகத்தின் மிக பெரும் பொறுப்பிலிருந்த ஒரு அரசியல் வாதி - குறிப்பிட்ட ஒரு வருடம் இன்கம் டேக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்ய வில்லை! ஏன் என்று கேட்டபோது " மறந்துட்டேன்" என்று சிம்பிளாய் சொன்னார்

நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் ; அப்படி காரணம் சொல்ல முடியாது ! " Ignorance of law is no excuse" என்று சொல்வார்கள் சட்ட வல்லுனர்கள் !

ஜூலை 31 வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.


இன்கம்டாக்ஸ் ரிட்டன் தாக்கல் பற்றிய சில தகவல்கள் கேள்வி பதில் வடிவில் .....



*************
யார் யாரெல்லாம் இன்கம்டாக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் ?
குறிப்பிட்ட அளவு வருமானத்துக்கு மேல் (Basic exemption limit ) இருக்கும் அனைவரும் இன்கம்டாக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வருடம் Basic exemption limit மிக சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது

60 வயது வரை உள்ள ஆண், பெண் இருவருக்கும் - Rs 200,000
60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிடிசன்களுக்கு - Rs 250,000

80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் சிடிசன்களுக்கு - Rs 500,000

முதல் கேட்டகரியில் சென்ற சில ஆண்டுகள் வரை ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிக சலுகை வழங்கப்பட்டது. அது அகற்றப்பட்டு ஆணுரிமை இந்த ஆண்டு முதல் நிலை நாட்டப்பட்டது !

இரண்டாவது கேட்டகரியில் சென்ற ஆண்டு வரை 65 வயதுக்கு மேற்பட்டோரை தான் சீனியர் சிடிசன் என்று கூறி வந்தனர். இந்த ஆண்டு 60 ஆக குறைத்துள்ளனர்

ஈ பைலிங் முறையில் வருமான வரி தாக்கல் யாரெல்லாம் செய்ய வேண்டும் ? 

5 லட்சத்துக்கு அதிகமான வருமானம் உள்ளோர் அவசியம் தங்கள் ரிட்டனை ஈ பைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. (இந்த ஆண்டு தான் 5 லட்சமாக குறைத்துள்ளனர்); இதில் ஒரு கொடுமை என்னவென்றால் நீங்கள் ஈ பைலிங் முறையில் தாக்கல் செய்தால் மட்டும் போறாது. அதனை அப்படியே ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து அவர்கள் சொல்லும் முகவரிக்கு தபாலிலும் அவசியம் அனுப்பியாக வேண்டும் !

இன்கம்டாக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்ய கடைசி தேதி என்ன? 

ஜூலை மாதம் 31- க்குள் நிறுவனத்தில் சம்பளம் வாங்கி பணி புரியும் அனைவரும் தாக்கல் செய்ய வேண்டும்.

கடைசி வாரத்தில் - அதிலும் கடைசி 3 தினங்களில் பொதுவாய் கூட்டம் மிக அதிகம் இருக்கும். எனவே சற்று முன்பு தாக்கல் செய்து விடுவது நலம்

வருமான வரி தாக்கல் செய்ய என்ன வழிமுறை ?

நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்களது சம்பளத்திலிருந்து வரி பிடித்தம் செய்வது உங்களது நிறுவனத்தின் கடமை; அவர்கள் நீங்கள் காண்பித்துள்ள வீட்டு கடன், NSC போன்றவற்றில் செய்துள்ள முதலீடு போன்றவற்றை கணக்கில் எடுத்து கொண்டு குறிப்பிட்ட அளவு வரியை பிடித்தம் செய்திருப்பார்கள். ஏப்ரல் முதல் மார்ச் வரை உங்கள் சம்பளம், வரி பிடித்தம் செய்து கட்டியது அடங்கிய Form - 16 உங்கள் நிறுவனம் உங்களுக்கு தரும். இதன் Form - 16 அடிப்படையில் தான் உங்களது இன்கம்டாக்ஸ் ரிட்டன் தயார் செய்ய வேண்டும்.

உங்களுக்கு ஓரளவு நல்ல Finance knowledge இருந்தால் நீங்களே அதனை பூர்த்தி செய்து கட்டி விடலாம். இல்லா விடில் இதற்கென இருக்கும் சிறு நிறுவனங்களை அணுகலாம்

பல கம்பனிகளும் தங்கள் ஊழியர்களுக்கு Tax ரிட்டன் தாக்கல் செய்ய வெளியிலிருந்து ஒரு ஆடிட்டர் குழுவை அனுமதிக்கிறது. இவர்கள் ஓரிரு நாள் நிறுவனத்துக்கு வருகை தந்து ஒவ்வொரு ஊழியருக்கும் தலா 200 ரூபாய் போல் வாங்கி கொண்டு - ரிட்டர்ன் தயார் செய்து உங்கள் கையொப்பம் வாங்கி தாக்கல் செய்து விட்டு அதன் நகல் உங்களுக்கு அளிக்கிற வேலையை செய்கிறது

இப்படி தாக்கல் செய்த நகலை பத்திரமாக உங்கள் பைலில் போட்டு வைப்பது அவசியம் . பின்னாளில் இன்கம் டாக்ஸ் துறையிலிருந்து கேள்விகள் ஏதும் கடிதம் மூலம் வந்தால் - உங்கள் ஒரிஜினல் ரிட்டன் - காப்பி காண்பிக்க வேண்டியிருக்கும் !

ஈ பைலிங் லிங்க் : https://incometaxindiaefiling.gov.in/

ஆன் லைனில் பான் கார்ட் அப்ளை செய்ய : https://www.tin-nsdl.com/

வங்கிகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு (Interest ) - டேக்ஸ் கட்ட வேண்டுமா? அதை வருமான வரி தாக்கல் செய்யும் போது குறிப்பிட வேண்டுமா? 

வங்கிகளில் இருந்து கிடைக்கும் வட்டியை (Interest ) வருமான வரி தாக்கல் செய்யும் போது குறிப்பிட வேண்டும் ; குறிப்பிட்டு விட்டு - அதற்கு விலக்கும் கோரலாம். குறிப்பிட்ட அளவு வரை கிடைக்கும் வங்கி வட்டிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு உண்டு (Section 80TTA)

நிறுவனங்களில் இருந்து வரும் டிவிடண்ட்-க்கு (Dividend received from Companies) டேக்ஸ்  கட்டணுமா ?

தேவையில்லை; அதற்கு ஏற்கனவே நிறுவனம் டேக்ஸ் கட்டி விடுவதால் (Dividend Distribution Tax) மறுபடி கட்ட தேவையில்லை  !

ரிட்டன் தாக்கல் செய்வதால் வேறு என்ன பலன் ?


வங்கிகள் உங்களுக்கு வீட்டு கடன் அல்லது வேறு கடன் வழங்கும்போது - உங்களது இன்கம் டேக்ஸ் ரிட்டன்களை கேட்கும். எனவே நீங்கள் வரி கட்டினாலும், வரி கட்ட வேண்டிய அவசியமின்றி அதற்கு சற்று குறைவாக சம்பாதித்தாலும் கூட தொடர்ந்து ரிட்டன் தாக்கல் செய்து வந்தால், வங்கிகள் அதனை நல்ல முறையில் Consider செய்வார்கள் ! உங்களுக்கு கடன் கிடைக்கும் வாய்ப்புகள் நிச்சயம் அதிகரிக்கும்

நாம் தாக்கல் செய்த ரிட்டனில் ஏதும் தவறு இருந்தால் என்ன செய்வது? 

நீங்கள் மறுபடியும் சரியான ரிட்டன் தாக்கல் செய்யலாம் ; அதிகப்படி டேக்ஸ் மறுபடி கட்டாமல் இருக்கும்வரை பிரச்சனை இல்லை  !

எங்கள் நிறுவனத்தில் அளவுக்கு அதிகமாக வரி பிடித்து விட்டார்கள் - இன்கம் டேக்ஸ் ரீபண்ட் எப்படி கிளைம் செய்வது?

இந்த வருடம் உங்களுக்கு அதிக வரி பிடிக்கப்பட்டு விட்டால் - அதை உங்கள் இன்கம் டேக்ஸ் ரிட்டனில் குறிப்பிட்டு ரீபண்ட் கிளைம் செய்யலாம்

உங்கள் 11 டிஜிட் வங்கி கணக்கை குறிப்பிட்டால் - ரீபண்ட் உங்கள் வங்கி கணக்கிற்கே வந்து விடும். உங்களுக்கு 11 டிஜிட் வங்கி கணக்கு இல்லாவிடில் உங்கள் பெயருக்கு செக் அனுப்பி வைப்பார்கள் - நீங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு ).

17 comments:

  1. பயனுள்ள தகவல்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோவை ஆவி ; உங்களை பார்த்ததில்லை ; இம்முறை பதிவர் சந்திப்பில் உங்களை பார்ப்பேன் என நினைக்கிறேன்

      Delete
  2. எனக்கு இன்கம் இல்லியே! அதுக்கு என்ன பண்ணலாம் சகோ!

    ReplyDelete
    Replies
    1. அலோ உங்க வீட்டு காரரை பைல் பண்ண சொல்லுங்க ; உங்க பொண்ணு கூட பைல் பண்ணணுங்கோ !

      Delete
  3. நான் மறந்துட்டனே.. தோ உடனே பிரின்ட் எடுத்து செலரி செல்க்கு அனுப்பனும்... டாக்ஸ் சம்பந்தமா எல்லாத்தையும் அவங்களே பார்த்துப்பாங்க...

    ReplyDelete
    Replies
    1. பிரகாஷ் ரைட்டு !

      Delete
  4. இன்கம் டாக்ஸ் சம்மந்தமான பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
    Replies
    1. நன்றிக்கு நன்றி ராகவாச்சாரி

      Delete
  5. ரிட்டர்ன் தாக்கல் பண்ணி 4 வருஷமாகியும் ரீபண்ட் வரலியை... என்னா பண்றது? நடையா நடந்து ஓஞ்சி போய்ட்டேன். ஆன்லைன் மூலமா ஏதாவது பண்ண முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. நல்ல சார்டட் அக்கவுண்டண்ட் மூலம் ரீபண்ட் என்ன ஆச்சு என செக் செய்யுங்கள் நண்பரே

      Delete
  6. நான் பான் கார்ட் வைத்துக் கொண்டுள்ளேன் ஆனால் வரி செலுத்துமளவிற்கு வருமானம் இல்லை மாதச் சம்பளம் வாங்கும் நானும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வெண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்றில்லை ; இது உங்கள் விருப்பம் மட்டுமே

      தாக்கல் செய்தால் பின்னாளில் கடன் போன்றவை வாங்கும்போது " கடந்த 3 வருட ஐ டி ரிட்டன் தாருங்கள் "என கேட்கும்போது தர ஏதுவாய் இருக்கும்

      Delete
  7. e-filing of IT is Mandatory for more than 5 lac.

    ReplyDelete
  8. Thanks for ur replay
    Anandaraj Thangaraj

    ReplyDelete
  9. பயனுள்ள தவல்கள் ! நன்றி நண்பரே !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...