Friday, August 2, 2013

உணவகம் அறிமுகம் - ஹோட்டல் லட்சுமி நரசிம்மா, சோளிங்கர்



மேலே உள்ள படத்தை பாருங்கள் - இந்த கட்டிடம் என்னவாக இருக்கும் என ஊகிக்க முடிகிறதா ? சினிமா தியேட்டர் மாதிரி இல்லை?

சிம்மா - சிம்மா - நரசிம்மா - என உறுமும் கேப்டன் படம் ஓடும் தியேட்டர் இல்லை இது- சோளிங்கரில் இருக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா ஹோட்டல் தான் இது ! சோளிங்கர் கடவுள் பெயரிலேயே இயங்குது இந்த ஹோட்டல்.

ஒரு காலத்தில் சோளிங்கர் சென்றால் சாப்பிட சரியான ஹோட்டல் இருக்காது. குறிப்பாக குடும்பத்துடன் சென்றால் - அங்கிருக்கும் சிறு ஹோட்டல்களில் சாப்பிடுவது பெரும் சிரமம். அந்த குறையை தீர்க்க கடந்த வருடம் துவங்கியது தான் இந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மா ஹோட்டல் !


ஹோட்டல் மட்டுமல்ல - மேலே லாட்ஜும் இயங்குகிறது

ஒரு முறை மீல்சும் - இன்னொரு முறை டிபனும் சாப்பிட்டுள்ளேன்

டிபன் வகைகளில் பூரி, பொங்கல், கிச்சடி, தோசை இவையெல்லாம் - 20 ரூபாய் என்கிற ஸ்டாண்டர்ட் ரேட் ! தோசைகளில் காளான் தோசை, காலி பிளவர் தோசை, கொத்தமல்லி தோசை என ஏராள வித்தியாச வெரைட்டிகள் உண்டு.

லஞ்சுக்கு - சாம்பார், கார குழம்பு, ரசம் எல்லாமே ஓகே. குறை சொல்கிற அளவிலோ வயிற்றை பதம் பார்க்கிற அளவிலோ இல்லை

இந்த ஹோட்டல் தவற விட கூடாத ஹோட்டல் அல்ல. சோளிங்கர் கோவிலுக்கு சென்றால் - நீங்கள் செல்ல தக்க ஒரே ஹோட்டல் இது தான் ! அதனாலேயே இங்கு அறிமுகம் செய்யப்பட்டது !

****
மேலதிக தகவல்கள் :

ஸ்ரீ லட்சுமி நரசிம்மா ஹோட்டல்
சோளிங்கர் - பேருந்து நிலையம் அருகில்
வகை: வெஜ் மட்டும்

7 comments:

  1. ஒரு காலத்தில் சோளிங்கர் சென்றால் சாப்பிட சரியான ஹோட்டல் இருக்காது.
    >>
    நிஜம்தான் நாக்க போகும்போது கட்டு சோறு கட்டிக்கிட்டுதான் போவோம்.

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்! நன்றி!

    ReplyDelete
  3. சோளிங்கர் வரகிடைத்தால் போகின்றேன் :))

    ReplyDelete
  4. thank you very much for your information

    ReplyDelete
  5. அன்பின்ப் மோகன் குமார் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. அன்புள்ள மோகன்குமார்,

    சோளிங்கர் பற்றி ஒன்றிரண்டு தகவல்கள். முன்பெல்லாம், அரக்கோணம் வந்து, சாப்பிடுவது வழக்கம்.கோவில் ப்ரசாதம் நன்றாக இருக்கும். இது இன்னொரு option.

    என் திருமணம் நடந்தது இந்த ஊரில்தான். என் மனைவியின் பாட்டி, சின்னமலை அடிவாரத்தில் வசித்து வந்தார்கள். மலையேறிவிட்டு, களைத்து வந்தால், நல்ல சாப்பாடும், கொஞ்ச நேரம் தூங்கவும் இடமிருந்தது. தட்டான் குளத்தில் குளிக்கிற இன்பமே அலாதி.இப்போது சென்னை வந்துவிட்டார்கள். இப்போதெல்லாம் அவசர, அவசரமாக அதிகாலையில் போய்விட்டு, மாலைக்குள் சென்னை திரும்பிவிடுகிறோம்.

    உங்கள் பதிவு என்னை அந்த இனிய நாட்களுக்கு அழைத்துச் சென்றது. அடுத்த முறை போகும்போது, லட்சுமி நரசிம்ம்மாவில் உணவருந்திவிட்டு வருகிறேன். இங்கே, முக்கால் வாசி வீடுகளுக்கும், கடைகளுக்கும் இந்த பெயர்தான்.

    என்னுடைய பதிவுகள் இங்கே உள்ளன. வந்துவிட்டுப் போகவும்.
    http://tamizhnesan.blogspot.ae/

    ஆலப்புழா பற்றி எழுதியது, உங்கள் ப்ளாக்கின் சுற்றுலா கட்டுரைக்களை பார்த்து அந்த உந்துததில்தான். நீங்களும் ஆலப்புழா பற்றி எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete