Friday, August 30, 2013

வீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - வெற்றி பெறுமா ? FIRST ON NET

வெற்றிக்கோடு - புத்தக விமர்சனம் -FIRST ON NET - தேவகுமார் 

நான் டில்லியில் வேலை பார்த்த Law Firm-ல் இருந்த பெண்கள் சற்று மேனா மினுக்கிகள். ஒரு நாளைக்கு மூன்று முறை மேக் அப் போட்டு manicure- ஐ பற்றி தீர விவாதித்து, Perfume-ஐ தெளித்து கொள்ளாமல், Perfume cloud ஏற்படுத்தி, தங்களை வாசனை செய்து கொண்டு , படாடோபமாக இருப்பார்கள்.

என் நண்பன் அவளது தோழி ஒருத்தியை திருச்சூரில் இருந்து அலுவலகத்திற்கு அழைத்து வந்தான். எந்த ஒப்பனையும் இல்லாமல், கோதுமை நிறத்தில், எளிமையான சுடிதாரில் சுருள் சுருளான முடியோடு வந்த அந்த பெண்ணை பார்த்து என் அலுவலக பெண்கள் வெவ்வேறு விதத்தில் சொன்ன ஒரே விஷயம் - She looks so fresh !

நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத எடுத்து காட்டுகளோடு வெளியாகும் சுய முன்னேற்ற கட்டுரைகளுக்கு மத்தியில் - மோகன்குமாரின் வெற்றிக்கோட்டை படிக்கும் போது - எனக்கு அந்த freshness -ம், படாடோபம் இல்லாத அழகும், மினுக்கி கொள்ளாத உண்மையும், மிக நெருக்கமான உணர்வும் வந்து போனது.

எங்கோ யாருக்கோ நடந்ததை சொல்லாமல் - தனக்கு நடந்த அனுபவங்களையே கட்டுரையாக்கி இருப்பது - அவரது தைரியத்தையும், கட்டுரைகளில் உண்மை தவிர வேறொன்றும் இல்லை என்பதையும் சொல்லி செல்கிறது. " My life is my message " என்பது மாதிரி !

மோகன்குமாரை எனக்கு 22 ஆண்டுகளாக தெரியும். 1991-ல் முதலாண்டு சட்டம் படித்த போது - ராக்கிங்கில் பழக்கமாகி, அப்போது நான் பாலகுமாரனை படிப்பேன் என்று சொன்னதையும் மன்னித்து (!) என்னை தம்பியாக்கி கொண்டார் . அவர் வழி நான் நடந்தேன். (கொஞ்சம் அரைகுறை !) அவர் ACS -ல் சேர்ந்தார். நானும் சேர்ந்தேன். (இன்னும் முடிக்க வில்லை) அவர் தினமும் எழுதுகிறார். நான் என்றேனும். அந்த வகையில் மோகன்குமார் எனக்கு குருநாதர்

கல்லூரி காலத்தில் அவரது கவிதைகளில் " சுழித்து ஓடும் சலன ஆறு " என்பது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வரும். அந்த சலனங்களிலிருந்து, பயங்களிலிருந்து மீண்டு எப்படி வெற்றியாளர் ஆனார் என்கிற ஆச்சரிய குகையின் " அண்டா காகசம் - அபூ காகுசம் " தான் இந்த கட்டுரைகள்
*****
சுய வெறுப்பு மற்றும் கோபம் குறித்த கட்டுரைகள் " நமக்கு நிகழ்ந்த அனுபவங்கள் ஆயிற்றே " என்று பலரையும் எண்ண வைக்கும்

                               

குறிப்பாக சுய வெறுப்பு பற்றிய கட்டுரையில் " நடந்ததை மாற்ற கடவுளாலும் கூட முடியாது" என்று அவர் சொல்லும்போது - அந்த செய்தி எவ்வளவு ஆழமானது என்பதை தாண்டி - இந்த புரிதல் எவ்வளவு பயனுள்ளது என்பது தான் எனக்கு தோன்றுகிறது

மனதின் அத்தனை குற்ற உணர்வுகளையும், கசப்புகளையும் களைந்து எறிந்து - நம்மை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு இந்த புரிதல் நகர்த்தி செல்லக்கூடும். " இன்று புதிதாய் பிறந்தோம் " என்ற பைபிளின் வரிகளும் சொல்வது இதை தானோ ?

                                                             

கோபத்தின் காரணம் எந்த நிகழ்வும் அல்ல - உங்களின் எதிர்பார்ப்பு என்பதாகட்டும், சண்டை போட்டவர்களிடம் அடுத்த நாள் நான் பேசி விடுவேன் என்பதாகட்டும், பக்கத்துக்கு வீட்டு காரனிடம் அன்போடு பழகுவதன் அவசியம் சொல்வதாகட்டும் ( அவன் பத்த வைக்கும் பரட்டை ஆகி விடாமல் தடுக்க ) - இவை அனைத்தும் அன்பாலேயே காரியத்தை சாதித்து விடலாம் என ஆச்சரியப்படுத்துகின்றன !
**********


" பெரியோர் ஆசியும் ரோல் மாடலும்" என்பது சுய முன்னேற்ற கட்டுரைகளுக்கு புதிதான கோணம்.

உங்கள் Idol-ஐ கண்டுபிடியுங்கள். அதே நேரம் உங்கள் Identiy - ஐ கை விடாதீர்கள் என்பது எவ்வளவு உண்மை !

இப்புத்தகம் புதுப்புது முன்னேற்றத்தின் காரணிகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நம்மை பின்னிழுக்கும் ஆமை என பொறாமையை அடையாளம் காட்டும் ஒரு கட்டுரை " உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிட்டு உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்ளப்போகிறீர்களா ?" என கேட்கும் போது நமக்கு நம்மையே பிடிக்க ஆரம்பிக்கிறது. அதுவே வெற்றியின் ஒரு பக்கம் தான்.

பல நுணுக்கங்களை சொல்லிச்செல்கிற அதே போக்கில், அதனால் விளையும் நன்மைகளையும் (பல சமயங்களில் அது சுய நலமாகவே இருந்தாலும்) சொல்வது சுவாரஸ்யம்.

Corporate Life-ல் கற்று கொள்கிற முக்கிய பாடம் - எது செய்தாலும் அதில் Return of Investment (ROI) என்ன என பார்க்க வேண்டும். இப்புத்தகத்தில் ஒவ்வொரு நுணுக்கத்திற்கும் ஒரு ROI- ஐ சொல்வது - இந்த கட்டுரைகள் ஒரு Seasoned executive-ஆல் எழுதியதால் சாத்தியப்பட்டது !
***********
திரு. சோம. வள்ளியப்பன் எனக்கு கல்லூரி காலத்தில் வகுப்பெடுத்தார். நான் தொடர்ந்து கவனிக்கும், வியக்கும் - சில விதங்களில் பின்பற்றும் மனிதர் அவர். அவரது நேர மேலாண்மை ஆச்சரியம் தரும். அப்போது அவர் ஒரு மேல் நாட்டு நிறுவனத்தில் - மதுராந்தகத்தில் வேலை பார்த்தார். அலுவலக பேருந்தில் பயணிக்கும் நேரத்திலும் எழுதி கொண்டே பயணித்தவர். மோகன் குமார் முன்னுரை யாரிடம் கேட்கலாம் என்று என்னிடம் கேட்டபோது முதலில் ஞாபகத்தில் வந்தவர் திரு. சோம. வள்ளியப்பன்.
                         


ஒரே நேரத்தில் Corporate executive ஆகவும் இருந்து கொண்டு வெவ்வேறு தளங்களில் சுணக்கம் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் மோகன் குமாரின் கட்டுரைகளுக்கு சோம. வள்ளியப்பன் சரியான முன்னுரையாளர் என்பது என் எண்ணம்.

திரு. வள்ளியப்பன் தனது முன்னுரையில் சொல்கிறார் " தேவைப்படுகிறவர்கள் - எதிர்பார்க்கிறவர்கள் மிகவும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற புத்தகங்கள் அவசியம் தேவை.

குருவின் சொல் மந்திரம் !

                                                                                                                       தேவகுமார் 

*************
முதல் கருத்துரை வழங்கிய தேவகுமாருக்கு நன்றி !

நாளை காலை புத்தகம் குறித்த பிரபல பதிவர் ஒருவரின் கருத்துக்கள் வீடுதிரும்பலில் இடம் பெறும் !

****
வீடுதிரும்பல் மோகன்குமார் எழுதிய வெற்றிக்கோடு புத்தகம் அச்சிடப்பட்டு - விற்பனைக்கு தயாராகிவிட்டது. அகநாழிகை புத்தக கடையில் கிடைக்கிறது..

https://www.facebook.com/aganazhigai

Photo: வீடுதிரும்பல் மோகன்குமார் எழுதிய வெற்றிக்கோடு புத்தகம் அச்சிடப்பட்டு - விற்பனைக்கு தயாராகிவிட்டது. அகநாழிகை புத்தக கடையில் கிடைக்கிறது.. 

https://www.facebook.com/aganazhigai

****
சனி, ஞாயிறு விழா குறித்த விபரங்கள் இதோ -



இரு நாளில் தங்களுக்கு எப்போது வசதிப்படுமோ அன்று அவசியம் கலந்து கொள்க ! உங்கள் வருகையும் இந்த எளிய, உண்மையான எழுத்துக்கு நீங்கள் தரும் ஆதரவும்  எங்களை மகிழ்ச்சிப்படுத்தும் !

10 comments:

  1. நல்ல விமர்சனம். வலைப்பூவில் வெளியான சில கட்டுரைகள் படித்திருந்தாலும், முழுப் புத்தகத்தையும், புத்தக வடிவில் வாசிப்பதில் இருக்கும் சுகத்திற்காக காத்திருக்கிறேன்.....

    செப்டம்பர் - 1 அன்று புத்தகம் கையில் கிடைக்கும் வரை.....

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம் ..

    புத்தக் வெளியீட்டுக்கு பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்.... புத்தக் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. //வீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - வெற்றி பெறுமா ?//
    சந்தேகமே வேண்டாம். வெற்றி பெரும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தேவ குமாரின் விமர்சனம் புத்தகம் வாங்கும் ஆவலை பன் மடங்கு அதிகமாக்குகிறது. நான் என் நண்பர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசளிக்க போகிறேன். குறைந்த பட்சம் 5 பேர்களுக்கு. 5+1= 6 புத்தகத்தை எனக்கு எடுத்து வைக்கவும். விழா அன்று சந்திப்போம். நன்றி.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் சார்.,விழாவில் சந்திப்போம்

    ReplyDelete
  7. வாழ்த்துகள் சார்!

    ReplyDelete
  8. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நெகிழ்வான நன்றி. சனி அல்லது ஞாயிறு விழாவில் சந்திப்போம் நண்பர்களே !

    ReplyDelete
  9. Anonymous11:27:00 AM

    வாழ்த்துக்கள் சகா. வாசிக்கத் தூண்டும் புத்தக விமர்சனம். தம் புத்தகத்தை வாங்கி வாசிக்க விழைகின்றேன். வாசித்த பின் என் கருத்துக்களை முன் வைக்கின்றேன். :)

    ReplyDelete