Wednesday, December 18, 2013

நவீன சரஸ்வதி சபதம், இன்சிடஸ் -2 & மெமரீஸ் - விமர்சனம்

ண்மையில் கண்ட ஒரு ஆங்கிலம், ஒரு தமிழ் மற்றும் ஒரு மலையாள படம் பற்றிய சுருக்கமான விமர்சனம் இது:

இன்சிடஸ் -2  (ஆங்கிலம்) 

பொதுவாய் மிரட்ட வைக்கும் பேய் படங்களை சுத்தமாய் பார்க்காத ஆள் நான். சின்ன வயதிலிருந்தே  அப்படியே வளர்ந்தாச்சு. இனிமேயா மாற்றி கொள்ள முடியும் ?

ஆனா நம்ம வீட்டம்மாவுக்கு பேய் (படங்கள்) என்றால் உசிரு.! :)



பெண் வேறு இந்த படத்தை பார்த்தே ஆகணும் என அடம் பிடிக்க, ஒரு நள்ளிரவில் DVD -ல் பார்க்க துவங்கினோம்.

ஆங்கில படத்துக்கு ஆங்கில சப் டைட்டில் இருந்தும் கூட படத்தை புரிந்து கொள்வது மிக கடினமாக இருந்தது. ஒரு மாதிரி குன்சாக கலந்து பேசி தான் கதையை புரிந்து கொள்ள வேண்டியிருந்தது

கதை பற்றி எது சொன்னாலும் சுவாரஸ்யம் குறைந்து விடும்.

வீடுதிரும்பல் பரிந்துரை - பேய் மற்றும் ஹாரர் பட பிரியர் என்றால் பாருங்கள். 2 நிமிடத்துக்கு ஒரு முறை அலற/ திடுக்கிட வைக்கிறார்கள்.

நவீன சரஸ்வதி சபதம் 

ரொம்ப மாடர்ன் ஆன சிவலோகம். கணினியில் ஜாலியாக விளையாடும் சிவன். ஆங்கிலம் பேசும் பார்வதி என ஆரம்பம் நல்லா தான் இருந்துச்சு. Plot கூட சுவாரஸ்யமே. ஆனால் இடைவேளைக்கு மேல் உட்கார முடியலை ! பாதி படத்துக்கு பின் ரம்பம்னா ரம்பம் - கழுத்து அறுந்து போச்சு.

ஹீரோயின் நிவேதா தாமஸ் ஓரளவு நல்லா இருந்தார். அவரும் பாதி படத்துக்கு மேலே வர வாய்ப்பு இல்லாம போயிடுது.



வீடுதிரும்பல் பரிந்துரை - டிவியில் போடும்போது முதல் பாதி மட்டும் பார்க்கலாம் !

மெமரீஸ் ( மலையாளம்)

படம்னா இது படம் ! அட்டகாசம் !

க்ரிப்பிங்  ஆன ஒரு கதை. சுவாரஸ்யமான திரைக்கதை. நகம் கடிக்க வைக்கும் காட்சிகள். புத்திசாலி தனமான கிளைமாக்ஸ் என எல்லா விதத்திலும் கவர்கிறது படம்.



பிரிதிவி ராஜ் - ரொம்ப இயல்பா நடிச்சிருக்கார். மற்ற பாத்திரங்களும் Very apt !

மனைவியை இழந்து வாடும் ஒரு போலிஸ் காரர் கதை என்ற விதத்தில் வேட்டையாடு விளையாடு வாசம் இருந்தாலும் - அந்த ஒரு வரியுடன் ஒற்றுமை நின்று விடுகிறது ! இது டோட்டலி வேற விதமான படம் !

வீடுதிரும்பல் பரிந்துரை -   அவசியம் பாருங்கள் இந்த மலையாள படத்தை !

9 comments:

  1. மலையாளம் எனக்கு தெரியாதே

    ReplyDelete
  2. மெமரீஸ் பார்க்க வேண்டும்... நன்றி...

    ReplyDelete
  3. கிறிஸ்துமஸ் விடுமுறையில் நானும் குடும்பத்தோடு உட்கார்ந்து MISIDIOUS II பார்க்கப் போகிறென்!

    ReplyDelete
  4. அது தான் அலற வைக்கிறது என்று சொல்கிறீர்களே.... அதை ஏன் நள்ளிரவில் பார்க்கறீங்க சார்?......:))

    முதல் இரண்டும் வேண்டவே வேண்டாம்... மூன்றாவது படம் வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்க முயற்சி செய்கிறேன்...:)

    ReplyDelete
  5. மிக சரியான பரிந்துரை

    ReplyDelete
  6. Visit : http://kudanthaiyur.blogspot.in/2013/12/blog-post_18.html

    ReplyDelete
  7. மெமரீஸ் அவசியம் பார்க்கின்றேன் நண்பரே நன்றி
    த.ம.5

    ReplyDelete
  8. மெமரீஸ் படம் ஏற்கனவே பார்க்க நினைத்த படம்.

    மற்ற இரண்டும் பார்க்கப் போவதில்லை எப்படியும்!

    ReplyDelete
  9. பின்னூட்டத்திற்கு நன்றி நண்பர்களே !

    ReplyDelete