Saturday, August 8, 2015

வானவில்: ஏர்டெல் உடனடி நடவடிக்கைக்கு ஒரு வழி..

பார்த்த படம்- இன்று நேற்று நாளை 

சற்று தாமதமாக தான் இப்படம் காண முடிந்தது. பதிவுலக நண்பர்களால் பெருவாரியாக பாராட்டப்பட்ட படம்...



டைம் மிஷின் என்கிற வித்தியாச முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை... ஆனால் அந்த அட்டகாச கான்செப்டை வைத்து கொண்டு பிச்சு உதறியிருக்கலாம்... சினிமாவில் பட்டினத்தில் பூதம், நாடகத்தில் எஸ். வீ,. சேகரின் மகாபாரதத்தில் மங்காத்தா இவை இதே களத்தில் அசத்திய கதைகள்..

டைம் மிஷின் கான்செப்டை நிச்சயம் இன்னும் சுவாரஸ்ய படுத்தியிருக்கலாம்.. பெரும்பகுதி காணாமல் போன பொருட்களை கண்டு பிடிக்கவும், கட்டப்பட்ட நாய் - அவிழாமல் இருக்கவுமே டைம் மிஷின் கதையில் யூஸ் ஆகுது...

படம் - கமர்ஷியல் வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால் சிக்சர் அடிக்க வேண்டிய கதைக்களனில் மூச்சிரைக்க ஓடி மூணு ரன் எடுத்துள்ளார்கள் என்கிற வருத்தம் தான்...

ரசித்த பாடல் - ஆகாயம் தீப்பிடிச்சா 

சென்ற வருடம் வந்தவற்றில் - வெகுவாக ஈர்த்த பாடல்களில் இதுவும் ஒன்று... புது இசை அமைப்பாளர்களில் அனிருத், இமானுக்கு அடுத்த படியாக சந்தோஷ் நாராயண் அசத்துகிறார்.

மெட்ராஸ் படம் - மிகவும் பாராட்ட தக்க ஒரு முயற்சி.. இன்று அதன் இயக்குனர் ரஜினியை வைத்த படம் இயக்க காரணமே மெட்ராஸ் படம் தான் !!

படத்தில் 2-3 பாடல்கள் அருமை எனினும் இந்த மெலடி - கிளாஸ்..




ரசித்த SMS:

Mistakes are very easy to see with others and very difficult to see within oneself.

வீடுதிரும்பல்... வாரமிரு முறை மீண்டும்...

ஆம்; தலைப்பிலேயே புரிந்திருக்கும்.. வாரம் இரு பதிவாவது இனி எழுத திட்டம். சனி மற்றும் புதன் கிழமை பதிவுகள் வெளியாகலாம்... புது பதிவு தயாராக இல்லை எனில் பழைய பதிவில் ஏதாவது ஒன்று மீள் பதிவு செய்ய நேரலாம்... பொறுத்தருள்க !

வீட்டருகில் ஒரு சம்பவம்.. 

செய்தி தாள்களில் மரண செய்திகள் எவ்வளவோ வாசிக்கிறோம். அதுவே நமது வீட்டுக்கருகில் நடக்கும் போது - செய்தி தாள்களில் வாசித்து விட்டு கடந்து போவது போல் முடிவதில்லை.. 

எங்கள் வீட்டுக்கு 2 தெரு தள்ளி நடந்த சம்பவம்.. 

கணவன் போலீசில் - ஊட்டியில் பணியாற்றுகிறார்...மனைவி மற்றும் 2 குழந்தைகள் மட்டும் சென்னையில் வசிக்கின்றனர்...

கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு வந்து விட, மனைவியிடம் விவாகரத்து கேட்டு வற்புறுத்தி உள்ளார்... மனைவி, உள்ளூரில் போலிஸ் காரர் நடத்தும் கடையை தனக்கு எழுதி தர சொல்லி கேட்டுள்ளார் (படிக்காத மனைவி பின் 2 குழந்தைகளை எப்படி காப்பாற்றுவார்? )

ஊட்டியிலிருந்து ஒரு நாள் வந்த கணவன் - பிள்ளைகள் பள்ளி சென்ற மதிய வேளை வீட்டுக்குவந்து மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின் வீட்டை விட்டு நைசாக வெளியேறி விட்டார். மாலை பள்ளியிலிருந்து வந்த குழந்தைகள் அம்மா இறந்து கிடப்பதை கண்டு விக்கித்து போயினர்.. சில மணி நேரங்களில் தானாகவே ஆஜர் ஆன கணவன் ஏதும் தெரியாத மாதிரி நடித்து அழுதுள்ளார்.. 

போஸ்ட் மார்ட்டமில் கழுத்து நெரித்து இறந்ததும், அன்று தான் கணவர் ஊரில் இருந்து வந்துள்ளதும், அவர்கள் இடையே நடக்கும் சண்டை இவை - மூலம் கணவரை 'முறைப்படி' விசாரிக்க,  அவர் கொன்றது தான் தான் என ஒப்பு கொண்டுள்ளார்.. 

தாய் இறக்க, தந்தை ஜெயிலில் இருக்க , +2 மற்றும் 9 வது படிக்கும் குழந்தைகள் இப்போது சென்னையை காலி செய்து விட்டு திருச்சியில் பாட்டி வீடு சென்று விட்டனர்.. 

திருமணத்துக்கு பின் - வேறு பெண்ணுடன் சகவாசம் எங்கு கொண்டு போய் முடித்திருக்கிறது.. !! மனது இறந்து போன அந்த அப்பாவி பெண்ணையும், அந்த குழந்தைகளையும் நினைத்து தான் இன்னும் வருந்துகிறது ! 

ஏர்டெல் - உடனடி நடவடிக்கைக்கு

அண்மையில் நான் உபயோகிக்கும் ஏர்டெல் மொபைலில் ஒரு பிரச்சனை இருந்தது. அவ்வப்போது புகார் செய்து சலித்துப் போயிருந்தேன்... அப்போது நண்பர் ஒருவர் மற்றொரு மெயில் ஐ. டி தந்து இதற்கு மெயில் அனுப்பு; உடனே வேலை நடக்கும் என்றார்....

நாம் பொதுவாக கஸ்டமர் கேருக்கு தான் தொலை பேசுவோம்; மெயில் அனுப்புவோம்; இது அதற்கு அடுத்த படி... நோடல் ஆபீசர் எனப்படும் அடுத்த நிலை அதிகாரி. இவரிடம் புகார் செய்தால் பொறி பறக்கிறது..

நான் இவருக்கு மெயில் அனுப்பி - 5 நிமிடத்தில் ஏர்டெல்லில் இருந்து தொலை பேசினர் ; அன்றே பிரச்சனை தீர்த்து வைக்க பட்டது.

இது போன்ற நோடல் ஆபீசர் வோடபோன் உள்ளிட்ட மற்ற சேவை நிறுவனத்திடமும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

ஏர்டெல் - நோடல் ஆபீசர் மெயில் ஐ. டி - Nodalofficer.tn@in.airtel.com

இவர் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே பணியாற்றுகிறார்; வார இறுதிகளில் அனுப்பப்படும் மெயில்கள் சற்று தாமதமாக கவனிக்கப்படும் என்பதை அறிக !!

2 comments:

  1. வாரம் இரு முறை பதிவு - Welcome.....

    ReplyDelete
  2. தொகுப்பில் அனைத்தும் சுவாரஸ்யமாயிருந்தன.

    ReplyDelete