Monday, October 19, 2015

வானவில் : புலி- நீயா நானா-பசங்க-2-ரேஷ்மி மேனன்

பார்த்த படம் - புலி 

சிம்புதேவன், சிம்புதேவன் என ஒரு இயக்குனர் இருந்தார்... துவக்கத்தில் ஓரளவு வித்யாச, ரசிக்கும் படியான படங்களை இயக்கி வந்தார். ஆனால் விஜய் என்கிற பெரும் நடிகரை வைத்து கொண்டு ஒரு மரண மொக்கை படம் கொடுத்தது பெரும் ஏமாற்றம். எந்த விதத்திலும் துளி கூட ரசிக்க முடியாத, ஈர்க்காத, சிரிப்பை வரவைழைக்காத படம்..

இதில் பாகுபலியுடன் இப்படத்தை ஒப்பிட்டதெல்லாம் டூ மச். விஜய் நடித்த கொடுமையான படங்கள் பட்டியலில் சுராவுக்கு டப் பைட் கொடுக்கும் புலி.

சின்ன பசங்க சுட்டி டிவி யில் இதை விட நல்ல நிகழ்ச்சியை பார்ப்பார்கள் என்றாள் என் மகள்.

அடுத்த பண்டிகைக்கு சன் டிவியில் புலி ஒளிபரப்பாகும் போது- சேனல் மாற்றி விடுவது நலம் !

நீயா நானா 

இந்த வாரம் பெண்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுகிறதா; அவர்கள் உழைப்பு சுரண்டப்படுகிறதா என்பது குறித்து பேசினர் .. நல்ல தலைப்பு தான். பல இடங்களில் பெண்களுக்கு - ஆண்களுக்கு இணையான சம்பளம் தரப்படுவது இல்லை..

இன்னும் சில தொழில்களில் ஆண்களுக்கும் கூட - அவர்கள் உழைப்புக்கு ஏற்ற சம்பளம் தரப்படுவது இல்லை; அதையும் சேர்த்து இதே தலைப்பில் பேசியிருக்கலாம்...

அடித்தட்டு மக்கள் பலர் கலந்து கொண்டு - 10- 12 மணி நேரம் தாங்கள் உழைப்பதையும் - மிக குறைந்த ஊதியம் பெறுவதையும் பற்றி பேசினர்.  கேட்க சிரமமாக தான் இருந்தது.

நிற்க. நீயா நானா நிகழ்ச்சியில் - அதில் பங்காற்றுவோர் உழைப்பு எவ்வளவு சுரண்டப்படுகிறது தெரியுமா? தினம் 3 ஷூட் என காலை 9 மணி துவங்கி நள்ளிரவு 2 மணி வரை தொடர் ஒளிப்பதிவு - 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய கூடாது என்கிற விதியை மீறி - தொடர்ச்சியாக 17 மணி நேரம் வேலை வாங்குகிறார்களே .. இதை எந்த கணக்கில் சேர்ப்பது ?

படித்ததில் பிடித்தது

If you are going on 

a vacation with 

your WIFE, 

it's not a vacation..

It's just 

a change of 

"Location"

எதிர்பார்க்கும் படம்: பசங்க -2

பாண்டிராஜ் இயக்கிய பசங்க - எனக்கு பிடித்ததொரு குழந்தைகள் படம். அது கிராம பின்னணியில் எடுக்கப்பட்ட படம்- இப்போது அவரே குழந்தைகள் படம் ஒன்று பசங்க -2 என எடுத்து வருகிறார். இது நகரத்து மாணவர்கள் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. சூர்யா தயாரித்ததுடன் சிறு   பாத்திரத்தில் நடித்துள்ளார். (சூர்யா நல்ல கருவுள்ள, மெசேஜ் சொல்லும் படங்களை மட்டும் தயாரிப்பதாக தெரிகிறது )

பசங்க முதல் பாகத்தை தாண்டா விடினும், ஏமாற்றமால் இருந்தால் போதும் !





அழகு கார்னர் 



கலாம்.. சலாம் !





சென்னையில் எங்கே சார் மழை காலம்?

சென்னை வந்து 18 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மிக மோசமான தண்ணீர் பிரச்னையை இந்த வருடம் சென்னை எதிர் கொள்ளும் என நினைக்கிறேன். மழை என்பதே இல்லை.. ஐப்பசி மாதமே வந்து விட்டது. அதிக பட்சம் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஏதும் மழை பெய்தால் தான் உண்டு ! பின் பனி வந்து விடும்.. மழை இருக்காது.

தனி வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் சர்வ நிச்சயமாக இவ்வருடம் தண்ணீர் வெளியிலிருந்து வாங்க வேண்டியிருக்கும். தொடர்ந்து தண்ணீர் வெளியிலிருந்து கிடைக்குமா என்கிற ஐயமும் கூட உள்ளது...

ஒரே ஒரு நம்பிக்கை.. சென்னை கடற்கரையை ஒட்டி இருப்பதால், மழை காலம் முடிந்த பின்னும் கூட ஏதேனும் ஒரு Depression உருவாகி, மழை அடித்தால் சென்னை ஓரளவு தப்பிக்கலாம் !!

No comments:

Post a Comment