Saturday, May 14, 2016

காஸ்ட் அக்கவுன்ட்டசி கோர்ஸ் - ஒரு பார்வை

ICWA என்று ஏராள மக்களுக்கு தெரிந்த காஸ்ட் அக்கவுன்ட்டசி படிப்பு தற்போது பெயர் மாற்றம் செய்து ICMA என்று அழைக்கப்படுகிறது

இந்த கோர்ஸ் முடித்தவர்கள் ACMA ( (Associate Cost and Management Accountant) என்ற குவாலி பிகேஷன் - தன் பெயருக்கு பின்னால் போட்டு கொள்ளலாம்

CA, ACS, ICWA  ஆகிய 3 கோர்ஸ்களும் காமர்ஸ் படிப்போரால் விரும்பி படிக்கப்படுபவை.

55 வருடங்களுக்கும் முன்பு துவங்கப்பட்ட ஒரு பழமையான படிப்பு இது.

உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் (Manufacturing ) இந்த படிப்பின் தேவை அதிகமாக உள்ளது. ஒரு பொருளை தயார் செய்ய ஆகும் செலவு, அதனை எப்படி குறைப்பது - இது இரண்டும் ஒரு காஸ்ட் அக்கவுண்டட்டின் முக்கிய வேலையாகும்

ICWA படிப்பை முடிக்க எவ்வளவு செலவாகும்? எத்தனை வருடங்களாகும்?

துவக்கம் முதல் முடிவு வரை 20,000- 30,000 வரை செலவாகும்; அந்தந்த நிலை வரும்போது தான்  பணம் கட்டவேண்டும்.

பவுண்டேஷன் துவங்கி படித்தால் 3 வருடங்களும், டிகிரி முடித்தவர்கள் நேரே இன்டர் மீடியட் டில் நுழைந்தால் 2 வருடத்திலும் முடிக்கலாம் (பெயில் ஆகாமல் பாஸ் செய்யும் பட்சத்தில்)



எத்தனை நிலைகள் உள்ளன?

+ 2 எந்த க்ரூப் படித்தவர்களும் பவுண்டேஷன் என்கிற துவக்க நிலையில் சேரலாம். இது 4 பேப்பர்களை கொண்டது. ஒவ்வொரு பேப்பரிலும் 40 மார்க்கும் மொத்தமாக - நான்கிலும் சேர்த்து 200 மார்க்கும் எடுத்தால் பாஸ் செய்து விடலாம்

பவுண்டேஷன் பாஸ் செய்தவர்களும், டிகிரி முடித்தவர்களும் இன்டர் மீடியட் என்கிற இரண்டாம் நிலைக்கு செல்லலாம்.

இது 2 க்ரூப்களை கொண்டது. ஒவ்வொரு க்ரூப்பிலும் 4 பேப்பர்கள் உண்டு. மொத்தம் இந்த நிலையில் 8 பேப்பர்கள்.

ஒரு க்ரூபில் ஒவ்வொரு பேப்பரிலும் 40 மார்க்கும் மொத்தமாக - நான்கிலும் சேர்த்து 200 மார்க்கும் எடுக்க வேண்டும்.

இதுவே 8 பேப்பர்களும் சேர்த்து எழுதினால், ஒவ்வொரு பேப்பரிலும் 40 மார்க்கும் மொத்தமாக - எட்டிலும் சேர்த்து 400 மார்க்கும் எடுக்கவேண்டும்.

இன்டெர் மீடியட் பாஸ் செய்தவர்கள் பைனல் - எனும் இறுதி நிலைக்கு செல்லலாம். இன்டெர் மீடியட் போலவே அங்கு மொத்தம் 8 பேப்பர்கள் உள்ளன. பாஸ் செய்ய தேவையான மார்க்குகளும் மேற் சொன்னவாறே.

பைனல் பாஸ் செய்தவுடன் மெம்பர் ஆகி விட முடியுமா? C A போல ட்ரைனிங் எதுவும் வேண்டாமா? 

பாஸ் செய்து முடித்ததும், குறைந்தது 3 வருடம் ஏதேனும் அலுவலகத்தில் பைனான்ஸ் சம்பந்தமான வேலை செய்த அனுபவம் இருந்தால் - உடன் மெம்பர் ஆகி விட முடியும்.

படித்து முடிக்கும் போது - வேலையில் வேறு முன் அனுபவம் இல்லா விடில் - சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு தான் - முழுமையான மெம்பர்ஷிப் வாங்க முடியும்.

C A வில் கண்டிப்பாக ஆடிட்டரிடம் சேர்ந்து தான் 3 ஆண்டுகள் பயிற்சி எடுக்க வேண்டும் என்பது ஸ்ட்ரிக்ட் ஆக பயன்படுத்தும் ஒரு ரூல் ஆகும். இங்கு அப்படியின்றி, எந்த நிறுவனத்தில் பைனான்ஸ் துறையில் வேலை செய்தாலும் போதும் என்பதால் - படித்து முடித்து விட்டால் -மெம்பர்ஷிப் வாங்குவதில் பெரும் சிரமம் இருக்காது.



CA-விற்கும் ICWA- விற்கும் என்ன வித்யாசம்?

C A - பெரியண்ணா என்றால் - இவர் கடைசி தம்பி.

நிச்சயம் C A - விற்கு இருக்கும் அங்கீகாரம் மற்றும் வாய்ப்புகள் அளவு இப்படிப்பிற்கு இல்லை; ஆனால் C A மிக கடினமான கோர்ஸ். பலரால் முடிக்க முடியாது. எனவே அந்த அளவு உழைப்பு தர முடியாது - தன்னால் பாஸ் செய்ய முடியாது என்று எண்ணுவோரில் பலர் தான் - அதற்கடுத்து உள்ள இந்த படிப்பை  தேர்வு செய்கின்றனர்.

இதற்கு இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் மருத்துவ படிப்பு ( MBBS ) படிக்க எண்ணுவோர் - அது முடியாத பட்சம் - பல் மருத்துவம், B V S C - போன்ற அடுத்த நிலை படிப்புகளை நாடுவதை சொல்லலாம்.

ACS Vs ICWA???

கம்பனி செகரட்டரி நிறுவனமும், காஸ்ட் அக்கவுண்டண்ட் நிறுவனமும் செய்து கொண்டுள்ள பரஸ்பர ஒப்பந்தத்தின் படி, ACS முடித்திருந்தால் - இந்த கோர்ஸில் பாதிக்கும் மேற்பட்ட பரிட்சைகள் எழுத வேண்டாம். அவை Exempt ஆகிவிடும். மீதமுள்ளவை எழுதினால் போதும். நான் ACS முடித்தவன் ஆதலால் அப்படி தான் மீதமுள்ள தேர்வுகள் மட்டுமே எழுதி சரியே 2 ஆண்டுகளில் இந்த கோர்ஸ் முடித்தேன்.

முதலில் காஸ்ட் அக்கவுண்டண்சி முடித்து விட்டு பின் ACS படித்தாலும் இதே போல் ACS -ல் பாதிக்கும் மேற்பட்ட தேர்வுகள் எழுத தேவை இல்லை !!

ICWA முடித்தவர்கள் என்ன விதமான வேலைகள் செய்கிறார்கள்?

இவர்கள் பெரும்பாலும் நிறுவனங்களில் அக்கவுண்ட்ஸ் / பைனான்ஸ் டிபார்ட் மென்ட்டில் பணி புரிகிறார்கள். வெறும் பி. காம் முடித்து விட்டு நுழைந்தால் - துவக்க நிலை வேலை தான் நிறுவனத்தில் கிடைக்கும். இந்த கோர்ஸ் முடிப்பதால் - குறைந்த பட்சம் உதவி மேலாளர் ( Assistant Manager ) என்கிற நிலையில் சேர வாய்ப்புகள் அதிகம்.

பின் அக்கவுண்ட்ஸ் துறையில் பல விஷயங்களையும் கற்று தேர்ந்தால் - சில ஆண்டுகளில் அக்கவுண்ட்ஸ் டிப்பர்ட் மென்ட் -முழுமைக்கும் அவர்களே மேனேஜர் ஆகவும் வாய்ப்புகள் உண்டு (நிச்சயம் அது தனி நபர் திறமையை பொருத்தது)

கோர்ஸில் இண்டர்மீடியட் முடித்தாலே - பைனான்ஸ் துறையில் ஏதேனும் வேலை கிடைக்கும். முழுவதும் முடித்தால் இன்னும் நல்ல வேலைக்கு செல்ல முடியும். எனவே வேலை வாய்ப்புக்கு கவலை இல்லாத படிப்பு இது.

 தனியாக ப்ராக்டிஸ் செய்ய முடியுமா?

ஆம்; ஆடிட்டர் போல, கம்பனி செகரட்டரி போல தனியாக ப்ராக்டிஸ் செய்யலாம். ஆனால் CA  அல்லது ACS உடன் ஒப்பிடும்போது - தனியே ப்ராக்டிஸ் செய்ய வாய்ப்புகள் சற்று குறைவு தான். இந்த கோர்ஸ் முடித்த பலரும் நிறுவனங்களில் தான் பணிபுரிகிறார்கள். 


இணைய தள முகவரி

http://icmai.in/icmai/aboutus/

சென்னை அலுவலகம் :

SOUTHERN INDIA REGIONAL COUNCIL
CMA Bhawan,
4, Montieth Lane,
Egmore, Chennai - 600 008
Ph : 044-28554443,28554326 
Gram :"STANDCOST" 

Fax : 91- 044- 28554651
******
தொடர்புடைய பதிவுகள்

கம்பனி செக்ரட்டரி படிப்பும் வேலை வாய்ப்பும் 

வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்

2 comments:

  1. தேர்வு முடிவுகள் வெளிவரும் நேரத்தில் பயனுள்ள பதிவு

    ReplyDelete
  2. very nice article this is so help full for us you can take more information about this topic icwa course details

    ReplyDelete