Monday, May 16, 2016

வேலை வாய்ப்பை அள்ளித்தரும் D Pharm & B. Pharm: ஒரு பார்வை

டிப்ளோமா இன் பார்மசி

இந்த படிப்பை யார் படிக்கலாம்? 

+ 2 வில் இயற்பியல் / வேதியல் படித்த மாணவர்கள் - டி. பார்ம் படிப்பில் சேரலாம். அதாவது கணிதம், இயற்பியல், வேதியல் என மேக்ஸ் க்ரூப் படித்தவர்கள் அல்லது உயிரியல். இயற்பியல் , வேதியல் - என சயின்ஸ் க்ரூப் படித்த மாணவர்கள் படிக்கலாம். காமர்ஸ் உள்ளிட்ட பிற பிரிவு முடித்தவர்கள் சேர முடியாது.

எத்தனை வருட படிப்பு இது? என்ன படிக்கிறார்கள்? 

இது ஒரு டிப்ளோமா கோர்ஸ். 2 வருட படிப்பு. இதில் கீழ்கண்ட பாடங்களை படிக்கிறார்கள்

முதல் வருடம் 
Pharmaceutics – I
Pharmaceutical Chemistry – I
Pharmacognosy
Biochemistry & Clinical Pathology
Human Anatomy & Physiology
Health Education & Community Pharmacy

இரண்டாம் வருடம் 
Pharmaceutics – II
Pharmaceutical Chemistry – II
Pharmacology & Toxicology
Pharmaceutical Jurisprudence
Drug Store and Business Management
Hospital and Clinical Pharmacy.

முழுக்க முழுக்க மருந்துகள் பற்றிய பாடங்கள் தான் இவை. வேதியல் பாடம் நன்கு படிக்கும் மாணவர்கள் இதில் பெரும்பாலான பாடங்களை ஆர்வத்துடன் படிப்பர்.



என்ன விதமான வேலை வாய்ப்புகள்? 

ஒவ்வொரு மருந்து கடையிலும் டி . பார்ம் முடித்தவர் ஒருவராவது இருக்க வேண்டும். கடைகளில் பார்மசிஸ்ட்  ஆக பணியாற்றினால் குறிப்பிட்ட அளவு சம்பளம் தான் கிடைக்கும். எனவே டி . பார்ம் முடித்த பின் தானே ஒரு மருந்து கடை ஆரம்பிப்பதே மிக சிறந்தது. இதற்கு மிக அதிக முதலீடு தேவையில்லை; சில லட்சங்கள் போதும்; பெரும்பாலான மருந்து நிறுவனங்கள் க்ரெடிட் முறையில் கடைகளுக்கு மருந்துகள் சப்ளை செய்யும். எனவே சரியான வழி காட்டுதலுடன் தனி கடை ஆரமபித்து நல்ல முறையில் பணம் ஈட்டலாம். சுய தொழில் என்பது சிறப்பான ஒன்று தான் !

அரசும் பார்மசிஸ்ட்டுகளை தொடர்ந்து வேலைக்கு எடுக்கிறது; இதற்கான தேர்வை பாஸ் செய்தால் - அரசு வேலையும் கிடைக்கும். மேலும் ரயில்வேயிலும் பார்மசிஸ்ட்டுகளை வேலைக்கு எடுக்கிறார்கள்

மேற்படிப்பு? 

இது ஒரு டிப்ளோமா படிப்பு தான். இந்த கோர்ஸ் முடித்த பலரும் பி. பார்ம் என்கிற மேற்படிப்பு படிக்கிறார்கள். இது பற்றி தனியாக கீழே தந்துள்ளேன்..

செலவு? 

அரசு கல்லூரிகளில் வருட பீஸ் 5000 முதல் 7000 வரை என்கிற மிக குறைந்த அளவில் இருக்கும்.

தனியார் கல்லூரிகள் சில ஆண்டுகள் முன் 25,000 முதல் 30,000 வரை பீஸ் வாங்கி வந்தனர். தற்போது இன்னும் சற்று அதிகமாகியிருக்கலாம்.
**************
பேச்சிலர் ஆப் பார்மசி (B. Pharmacy)

யார் யார் இந்த கோர்ஸில் சேர முடியும் ?

டி. பார்முக்கு மேலே சொன்னது இங்கும் பொருந்தும். + 2 வில் இயற்பியல், வேதியல்   பாடங்களை படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.



மேலும் டி. பார்ம் படித்தவர்களும் பி. பார்ம் சேர விண்ணப்பிக்க முடியும். ஒரு கல்லூரியில் 25 சீட்டுகள் இருந்தால், அதில் 15 சீட்டுகள் +2 முடித்தவர்களுக்கும், 10 சீட்டுகள் டி. பார்ம் படித்தவர்களுக்கும் என்ற ரீதியில் சீட்டுகள் வழங்கப்படும்.

 இது 4 வருட படிப்பு; மருந்துகளின் தன்மை, மருந்து தயாரிக்கும் விதங்கள் உள்ளிட்ட பாடங்கள் இப்படிப்பில் இடம் பெறுகிறது

கட் ஆப் மார்க்?

FC, BC, MBC, SC என கட் ஆப் மார்க் மாறுபடுகிறது. வேதியல், இயற்பியல், உயிரியல் பாடங்களின் மொத்த கூட்டு தொகை 180 முதல் 190 மார்க் எடுத்தவர்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

பெரும்பாலும் பெற்றோர் / மாணவர்களின்  விருப்பம் MBBS ஆகத்தான் உள்ளது. அது கிடைக்காதவர்கள் BDS , BVSC போன்ற கோர்ஸ்களை நாடுகிறார்கள். இதற்கு அடுத்த கட்ட விருப்ப தெரிவாக பி. பார்ம் இருக்கிறது.

இந்த படிப்பை படிக்க கல்லூரிகள் எங்கெல்லாம் உள்ளன? 

கல்லூரிகள் பற்றிய இந்த பதில்  டி. பார்ம் மற்றும் பி. பார்ம் இரண்டு கோர்ஸ்களுக்குமே பொருந்தும்.

அரசு கல்லூரிகள் சென்னை, கோவை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட சில நகரங்களில் உள்ளன. தனியார் கல்லூரிகள் இதே ஊர்கள் அனைத்திலும் உள்ளன; மேலும் சேலம், காஞ்சிபுரம், நாமக்கல், ஊட்டி, நாகப்பட்டினம், கடலூர், திருவண்ணாமலை, கன்யாகுமரி, திருநெல்வேலி, சிவகாசி, திருச்சி, திருவள்ளூர், விருதுநகர், தருமபுரி உள்ளிட்ட ஊர்களில் உள்ளது.  அனைத்து கல்லூரிகள் விபரம் கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம் :

http://www.highereducationinindia.com/india/pharmacy-institutes-tamil-nadu.php

வேலை வாய்ப்புகள்? 

மிக மிக பிரகாசமான வேலை வாய்ப்ப்புகள் பி. பார்ம் படிப்பிற்கு உண்டு. இதனை முடித்து விட்டு வேலை இல்லாமல் இருப்போர் யாரும் இருக்க முடியாது.

இந்தியாவில் மருந்து துறை மிக பெரியது; நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம்; நோய்கள் & நோயாளிகள் மிக அதிகம். எனவே மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் அதிகமாகவே உள்ளது.

மருந்து உற்பத்தி செய்யும் யூனிட்டுகளில் கெமிஸ்ட் (Chemist ) கள் முக்கிய பங்கை வகிக்கிறார்கள். ஒவ்வொரு மருந்து கம்பனியிலும் நிறைய கெமிஸ்ட்கள் இருப்பர். எனவே மருந்து தயாரிக்கும் கம்பனிகளில் பி. பார்ம் முடித்தோருக்கு ஏராள வேலை வாய்ப்புகள் உள்ளது.



தமிழக அரசில்- ட்ரக்  இன்ஸ்பெக்டர் என்கிற வேலை வாய்ப்பு - தேர்வு மற்றும் நேர் முக தேர்வை வெற்றி கரமாக எதிர் கொண்டு சேர்ந்தால், கெஜட்டட் ஆபிசர் என்கிற அளவில் சேர முடியும்.

மேலும் பி. பார்ம் முடித்தவர்கள் மருந்து கம்பனிகளில் ரெப்ரசெண்டேடிவ் ஆக பணியாற்றுகிறார்கள். நிச்சயமாக நல்ல கம்பனியிலும், அது கிடைக்காத பட்சம் சிறு கம்பனியிலாவது ரெப்ரசெண்டேடிவ் வேலை நிச்சயம் கிடைக்கும். சிறு நிறுவனத்தில் சில வருடங்கள் பணியாற்றி விட்டு பின் நன்கு எஸ்டாப்ளிஷ் ஆன கம்பனிகளுக்கு பலரும் மாறுகின்றனர்.

இப்படி கெமிஸ்ட், ட்ரக் இன்ஸ்பெக்டர், ரெப்ரசெண்டேடிவ் என ஏராள வேலை வாய்ப்பு உள்ள அற்புதமான படிப்பு பி. பார்ம்; மக்களுக்கு இன்னும் இந்த படிப்பு பற்றி அதிகம் தெரியாததால் பலரும் சேர்வதில்லை;

பல நேரங்களில் மருந்து துறையில் தந்தை அல்லது பிற நெருங்கிய உறவினர் இருப்போர் தான் டி. பார்ம் அல்லது பி . பார்ம் படிப்பில் சேர்கிறார்கள். ஏற்கனவே இருப்போர் உதவுவர் என்பதால் மட்டுமில்லை - அதை விட முக்கியமாய் - அவர்களுக்கு தான் இந்த படிப்பின் அருமை தெரிகிறது- எனவே சரியாக அவர்கள் இந்த கோர்ஸ் படிக்க சொல்கிறார்கள்.

இதுவரை இந்த கோர்ஸ் பற்றி அதிகம் அறியாதோரும் கூட நம்பி சேர கூடிய ஒரு மிக நல்ல கோர்ஸ் பி. பார்ம்.

எனது அண்ணன்கள் இருவரும் இந்த படிப்பை தான் முடித்து  செட்டில் ஆனார்கள் என்பதால் இந்த படிப்பு பற்றி நன்கு அறிவேன் :)
**************
தொடர்புடைய பதிவுகள்:

கம்பனி செக்ரட்டரி படிப்பும் வேலை வாய்ப்பும்

காஸ்ட் அக்கவுன்ட்டசி கோர்ஸ் - ஒரு பார்வை

வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்

No comments:

Post a Comment