Saturday, September 17, 2016

வானவில்- ABCD 2 சினிமா- தாம்பரம் சேட் பிரியாணி-ரயிலில் ஒரு பாட்டு

பார்த்த படம் - ABCD பார்ட் 2 (ஹிந்தி)

அதிசயமாய் முதல்  பார்ட்டை  விட நல்லதாக இரண்டாம் பார்ட் அமைந்த ஒரு படம் !

சுமாராய் ஆடும் ஒரு க்ரூப்பை - பயிற்சியாளர் (பிரபு தேவா) - எப்படி பரிமளிக்க வைக்கிறார் என்ற அதே கதை தான். முடிவில் அவர்கள் கோப்பை வெல்லாமல் போவது மட்டும் சற்று வித்யாசம்

படம் முழுக்க முழுக்க பாடல் மற்றும் டான்சில் தான்  நகர்கிறது; நாங்கள் சப் டைட்டில் இன்றி பார்த்தோம். இருந்தும் எந்த பிரச்னையும்  இல்லை.

டான்ஸ் ஒவ்வொன்றும் பிச்சு உதறிடுறாங்க...! படத்தை பார்க்க வைப்பது டான்ஸ் தான்.

சென்ற வருடம் வந்த இப்படம் வசூல் ரீதியிலும் ஹிட் ஆகியுள்ளது.

அழகு கார்னர் 



ரயிலில் ஒரு பாட்டு 

ரயிலில் மாலை ஏறும்போதே பாட்டு சத்தம் தூள் கிளப்பியது; கல்லூரி மாணவர்களாய் இருக்கும் என பார்த்தால் நிறுவனம் ஒன்றில் பணி புரிபவர்கள். யூனிபார்மில் அமர்ந்த படி, ரயிலில் தாளமிட்டபடி பாடி கொண்டிருந்தனர். பாட்டுகள் நிஜமாகவே நன்றாய் இருந்தன ! அதிக சத்தம் - அதனால் தொந்தரவு இவையும் இல்லை. பயண நேரத்தையும் பாடல்களையும் ரொம்ப மகிழ்வுடன் அனுபவித்து கொண்டிருந்தனர் அந்த 5 பேரும் ....

அமர்ந்த படி யோசித்தேன். அநேகமாய் தொலை தூரம் பயணம் செய்பவர்களாய் இருக்கும். போர் அடிக்காமல் இருக்க இப்படி செயகிறார்கள்..

முதல் விஷயம்... குழுவாய் இருப்பதால் தான் இது சாத்தியமாகிறது . தனியாய் பாடியபடி வந்தால் வேறு மாதிரி பார்ப்பார்கள்.

அடுத்து .. தினம் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் வீணாகிறது என புலம்பாமல்  அதையும் இனிமையாய் கழிக்கிறார்கள்..

வாழ்க்கை தானாக இனிமையாகாது.. அதை இனிமையாக்கி கொள்வது பல நேரம் நம் கையில் தான் இருக்கிறது .. இல்லையா?

டிவி  பக்கம்: சானல் 7-ல் 100 செய்திகள் 

சானல் 7 தமிழில் இயங்கி வரும் ஒரு நல்ல சானல். இதில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள்  100 செய்திகள் தொகுத்து வழங்குகிறார்கள். நிச்சயம் அருமையான  முயற்சி;தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு, சினிமா என அனைத்தும் கலந்த கலவை. அன்றைய நாளின் அணைத்து முக்கிய விஷயங்களும் தெரிந்து கொள்ளலாம்.

100 செய்திகள் என்பதால் மிக வேகமாக பேசுகிறார்கள். அது ஒன்று தான் சற்று குறை; தொடர்ந்து நாம் பார்த்தால் பழகி விடும் என நினைக்கிறேன்

என்னா பாட்டுடே : நான் போகிறேன் மேலே மேலே 

நாணயம் படத்தின் "நான் போகிறேன் மேலே மேலே ".. அட்டகாசமான மெலடி !

இசை, SPB குரல், படமாக்கம்  என  அனைத்தும் ரசிக்கும் படி ஒரு பாட்டு !



ஆமாம்.. SPB தற்போது ரிட்டையர் ஆகி விட்டாரா என்ன .. தமிழில் அவர் பாடல்கள் அநேகமாய் வருவதில்லையே !

போஸ்ட்டர் கார்னர் 


சாப்பாட்டு கடை - E சேட் பிரியாணி, தாம்பரம்

E சேட் பிரியாணி பற்றி முன்பே கேள்விப்பட்டுள்ளோம். இம்முறை தாம்பரத்தில் - பிரியாணி பார்சல் வாங்கினோம். நியாயமான விலை; நல்ல டேஸ்ட். குறிப்பிட்டு  சொல்ல வேண்டிய விஷயம்.. அளவு நிறையவே  இருக்கிறது.நாங்கள் 3 பிரியாணி வாங்கி விட்டு - ஒன்றை அப்படியே வைத்து  விட்டோம்.இரண்டிலேயே மூவருக்கு வயிறு நிரம்பி  விட்டது.

கடை - குடும்பத்துடன் சென்று அமர்ந்து சாப்பிடும்படி சுத்தமாக இல்லை; அதனால் பார்சல் வாங்கி  கொண்டு சென்று  விடலாம்;

இவர்களுக்கு மேடவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கிளைகள் இருக்கிறது.

பிரியாணி விரும்பிகள் அவசியம் ஒரு முறை முயல வேண்டிய கடை !

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...