Saturday, December 10, 2016

வானவில்:தமிழக அரசியல் நிலவரம் - கவலை வேண்டாம்

பார்த்த படம்: கவலை வேண்டாம் 

ஜீவா எப்போது கடைசியாக தனி ஹிட் படம் கொடுத்தார் என யாருக்காவது நியாபகம் இருக்கா? இதோ இன்னொரு ஜீவா படம் !

பிரிந்து வாழும் மனைவியுடன் - டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட ஒரு வாரம் மட்டும் சேர்ந்து வாழ சொல்கிறார் ஜீவா; அந்த ஒரு வாரத்தில் மன மாறுதல் ஏற்பட்டு இருவரும் சேர்வார்கள் என்பதை சொல்லணுமா என்ன ?

காமெடியை நம்பியே படமெடுத்துள்ளனர்...வேறு எந்த விஷயமும் இல்லை.. பார்க்கும் போது சிரித்து விடுகிறோம்.. ஆனால் அப்புறம் தான் அது மோசமான டபிள் மீனிங் வசனம் என புரிகிறது.. இப்படி இரட்டை அர்த்த வசனங்களில் தான் படம் முச்சூடும் நகர்கிறது.. ஹூம்

படம் பெட்டிக்குள் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

அழகு கார்னர் 


டிவி பக்கம்: ஜோடி நம்பர் ஒன் 

T ராஜேந்தரை வைத்து கொண்டு மரண மொக்கை போடுகின்றனர். கூட இருக்கும் சதாவும் சரி இவரும் சரி, சுமாராக ஆடுவோரை கூட அருமை, ஆஹா ஓஹோ என்கிறார்கள்.. யாருமே வெளியேற்ற படுவதில்லை..

T ராஜேந்தர் அடுக்கு மொழியில் அறுத்து தள்ளுவதை கலந்து கொள்வோரே கேட்டு சிரி சிரி- யென சிரிக்கிறார்கள்.

மகள் டான்ஸ் நிகழ்ச்சி என இதனை தொடர்ந்து பார்த்து வந்தாள் .. அவளே விரைவில் ஒதுக்கி தள்ளி விடுவாள் என நினைக்கிறேன் !

தமிழக நிலவரம் 

ஒரு மாநில முதல்வர் இறந்து இவ்வளவு அமைதியாக - வன்முறையின்றி அடக்கம் செய்யப்பட்டு ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பியது ஆச்சரியமாக இருக்கிறது.. ! இதற்கு(ம்)  de monetization தான் காரணம் .. கையில் பணமில்லாததால் ரவுடிகளை கடைகள் உடைக்க பயன்படுத்த முடியவில்லை என்கிறார்கள் மோடி பக்தர்கள். எனக்கு அது சரியாக தோன்ற வில்லை; 2000 ரூபாய் நோட்டு கொடுத்தால் செய்ய மாட்டார்களா? அல்லது தஞ்சை இடை தேர்தலில் தந்தது போல் 500 ரூபா பழைய நோட்டு தந்தாலே ரைட்டு என இறங்க மாட்டார்களா?

நிச்சயம் முதல்வர் மரணத்தில் மர்மம் இருக்கிறது; 25 ஆண்டுக்கு முன் அமெரிக்காவில் எம்ஜியார் அவர்கள் இருந்த போது கூட சில புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டனர். ஏன் இப்போது எந்த படமும் எடுக்க வில்லை? வெளியிட வில்லை? ஏன் சசிகலா தவிர வேறு யாரும் முதல்வரை பார்க்க அனுமதிக்க பட வில்லை? இப்படி ஏராள கேள்விகளுக்கு விடையே இல்லை..

நிச்சயம் இது பற்றி ஒரு நேர்மையான விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியாகும் ! அது நடக்கும் என தோன்ற வில்லை :(

போஸ்டர் கார்னர் 



கிரிக்கெட் கார்னர் 

இரண்டாவது மற்றும்  மூன்றாவது டெஸ்ட் மேட்சில் இந்தியா எளிதில் வென்றது; நான்காவது டெஸ்ட் நிஜமான சவாலாக இருக்க போகிறது; மும்பை விக்கெட்டில் 400 ரன் எடுத்துள்ளது  இங்கிலாந்து. இவ்வளவு ரன் எடுத்த எந்த அணியும் தோற்றது இல்லையாம் !

கோலி மற்றும் புஜாரா தொடர்ந்து நல்லபடியே பாட்டிங் செய்ய, அப்புறம்  அஷ்வின்,ஜடேஜா போன்றோரின் பங்களிப்பால் தான் இந்தியா தப்பித்து வருகிறது. துவக்க மற்றும் நடுநிலையில் பிற பேட்ஸ்மேன்கள் சொதப்பி   வருகின்றனர்.

அஷ்வின் விக்கெட்டுகள், ரன்கள் இரண்டிலும் அசத்தி வருவது அட்டகாசம். (அதுக்காக இவர் பாட்டிங்கை லக்ஷ்மனுடன் ஒப்பிட்டு வருகிறது ஒரு கூட்டம்.. அநியாயம் !) 

1 comment:

  1. எல்லோரும் சகட்டு மேனிக்கு தமிழகம் அமைதியாக இருந்தது என்று பாராட்டிக்கொள்கிறீர்கள். மக்களும் எப்போது செத்த விஷயம் எப்போது வெளிவரும் என்ற மனநிலையில் இருந்தனர். மேலும் துணை ராணுவம் வருகின்றது என்று செய்தி வெளிவந்தது மற்றொரு காரணம். திராவிடக் கட்சித்தலைவர் இறந்தால் வன்முறை என்பது ஒரு நிதர்சனம்.மேலும் அப்போலோ மருத்துவமனையில் வன்முறை நடந்தேறியதை எல்லோரும் வசதியாக மறந்துவிட்டனர்.

    ReplyDelete