Friday, March 3, 2017

குற்றம் 23 - சினிமா விமர்சனம்

யக்குனர் அறிவழகனின் ஈரம் எனக்கு  மிக பிடித்தமான  படம். கதை- திரைக்கதை- இயக்கம் மூன்றிலும் அசத்தியிருப்பார் இயக்குனர்.

Related image

 அடுத்த படமான வல்லினம் - பெரும் தோல்வியை  சந்திக்க, ஈரம் பாணியில் மீண்டும் ஒரு த்ரில்லர்  தந்துள்ளார்.  ஈரத்தின் வெற்றி இங்கும் கிட்டுமா?

கதை 

சர்ச்சில் முதலில் ஒரு கொலை .. பின் அதனை தொடர்ந்து வரிசையாக பல கர்ப்பிணிகள் இறக்கிறார்கள். இக்கொலைகளை  துப்பறிகிறார் அசிஸ்டென்ட் கமிஷனர் வெற்றி (அருண் விஜய்); ஆர்டிபிஷியல் இன்செமினேஷன் என்னும் மருத்துவ முறையை வைத்து ஒரு பெரும் க்ரைம் நடப்பதை எப்படி கண்டு பிடிக்கிறார்- முறியடிக்கிறார் என்பதே கதை

பாசிட்டிவ் 

அருண் விஜய் மிக அட்டகாசமான நடிப்பு ! அழகு, நடிப்பு, திறமை எல்லாம் இருந்தும் அதிக வெற்றியை சுவைக்காதவர் - இப்படத்தில் ஹீரோவுக்கான நியாயத்தை நிச்சயம் தந்துள்ளார்.  செம பிட் ஆன உடல் .. சீரியஸான முகபாவம்.. ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்துவது என எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத நடிப்பு

ஹீரோயின் மஹிமாவிற்கு - மீனிங்புல் ரோல்  தந்துள்ளனர்.  அழகாக இருப்பதுடன் தெளிவாக - சரியான முறையில் நடிக்கிறார்.  இன்னும் உயரம் தொடும் திறமை  உண்டு.

Image result for kuttram 23 images

அபிநயா.. இரண்டாவது ஹீரோயின் என சொல்லும் விதத்தில் உள்ளது பாத்திரமும் நடிப்பும்.

பின்னணி இசை.. apt ! ஒளிப்பதிவு .. வெரி குட் . டாப் ஆங்கிள் ஷாட்கள் த்ரில்லர் படத்துக்கான வேலையை சரியாக செயகின்றன

ராஜேஷ் குமாரின் கதை மற்றும் (லேசான தொய்வை தவிர்த்து) திரைக்கதையும் நன்று

நெகட்டிவ் 

வில்லன் பாத்திரத்தின் நியாயம் மற்றும் குற்றங்களுக்கு சொல்லும் காரணம் அவ்வளவு வலுவாய் இல்லை ! இதனை இன்னும் சற்று வலுவாக்கி பாதி படத்திலாவது பார்வையாளர்களுக்கு தெரிய படுத்தி இருந்தால் - impact இன்னும்  இருந்திருக்கலாம். கிளைமேக்ஸ்க்கு முன் ஏனோ ஒரு lag  வருகிறது;அதன் பின் கொலைக்கான காரணங்கள் தெரிய வரும்போது - சற்று நீர்த்து போய் விடுகிறது

இன்னும் 5-7 நிமிடம் கத்திரி போட்டு படத்தை ஷார்ப்  ஆக்கலாம்.

தம்பி ராமையா என்றாலே - தனக்கு தானே (மனதுக்குள்) பேசிய படி இருக்கிற பாத்திரம் என ஆக்கி  விட்டார்கள்.சலிப்பூட்டுகிறது !

ஆர்டிபிஷியல் இன்செமினேஷன் என்பது அறிவியலின் ஒரு நல்ல கண்டு பிடிப்பு. அது இந்தியா வந்து 25 ஆண்டுக்கு மேலாகிறது; அதனை பெரும் பாவச் செயல் போல தோன்ற வைக்கின்றன சில காட்சிகள் ! இன்னும் கொஞ்சம் சென்சிடிவ் ஆக இதனை கையாண்டிருக்கலாம்

எல்லாம் முடிந்த பிறகு ஹீரோ சொல்கிறார் " குழந்தை இல்லை இல்லைன்னு எத்தனையோ பேர் சொல்றாங்க; இன்னொரு பக்கம் எத்தனை அநாதை குழந்தைகள் இருக்கு !!"

படம் இத்துடன் நிறைகிறது; இயக்குனர் சொல்ல  வந்தது: குழந்தை இல்லாதோர் ஒரு அநாதை குழந்தையை எடுத்து வளர்த்தாலே இரண்டு பிரச்னையும் தீர்ந்து விடும் என்பதை தான்.. ஆனால் அந்த மெசேஜ் சரியாக சென்று சேர்ந்ததா என்பது சந்தேகமே !

நிறைவாக 

படத்தை முதல் நாளே பார்க்க இன்னொரு முக்கிய காரணம்.. எனது கம்பெனி செக்ரட்டரி நண்பர்  திரு.ராமநாதன் சிறு ரோலில்  நடித்துள்ளார்.முதல் காட்சியில் வரும் பாதிரியார் தான் அவர் !  வருவது 2 நிமிடம் தான் என்றாலும் - முக்கால் வாசி படம் வரை - பாதிரியார் பற்றி எல்லாரும் பேசுகிறார்கள் .. நண்பருக்கு வாழ்த்துகள் !!

நிச்சயம் நல்லதோர் த்ரில்லர் ! நிச்சயம் நிறைய பேர் பார்ப்பர் ...  ரசிப்பர் .. ஆனால் படத்தை எங்கு  பார்ப்பார்கள்? தியேட்டரிலா என்றால் ....சந்தேகம் தான் !
*********
த்ரில்லர் படம் விரும்புவோர் நிச்சயம் ஒரு முறை காணலாம் !

*****
அண்மை பதிவு:

வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி



No comments:

Post a Comment