Friday, March 3, 2017

வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் ஒரு பேட்டி படித்து அசந்து போனேன்

வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்த ரமேஷ் பக் ஷி ஷேர் மார்கெட் பற்றி சொல்லிய பல விஷயங்கள் அவசியம் பகிர தோன்றியது !

ரமேஷ் பக் ஷி

டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஆங்கிலத்தில் வந்த கட்டுரை இது. தமிழாக்கம் மட்டும் அடியேன்  :)

இனி ரமேஷ் பக் ஷி பேசியது
*********
னக்கு 30 வயதாக இருக்கும்போது நான் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய துவங்கினேன். குடும்பத்துக்கான மாதந்திர செலவுகள், இன்சூரன்ஸ் ப்ரீமியம் போன்ற செலவுகள் போக மீதம் இருக்கும் பணத்தில் 30 % பிக்சட் டெபொசிட் போன்றவற்றிலும், மீதம் இருக்கும் பணம் ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடு செய்வேன்

என் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும் - நான் முதலீடு செய்த 2 கம்பனிகளின் ஷேர்கள் தான் உதவின அவை - ஹிந்துஸ்தான் யூனி லீவர் மற்றும் மெட்ராஸ் சிமெண்ட் ஆகிய நிறுவன பங்குகள்

ஹிந்துஸ்தான் யூனி லீவர் பங்குகளை முதன்முதலாக 64,000 ரூபாய்க்கு வாங்கினேன். அடுத்த 20 வருடம் அதனை நான் விற்கவே இல்லை. இந்த 20 வருடத்தில் நிறுவனம் பலமுறை இலவச போனஸ் ஷேர்கள் வழங்கியது. அவை எல்லாம் சேர்ந்து நான் 35,000 ஹிந்துஸ்தான் யூனி லீவர் ஷேர்கள் வைத்திருந்தேன். மெட்ராஸ் சிமெண்ட் நிறுவன பங்கும் ஏறக்குறைய இதே கதை தான்

இந்த இரண்டு பங்குகளும் எனக்கு கறவை மாடுகள் போல வேண்டிய போதெல்லாம் பணம் தந்தன. 3 குழந்தைகள் படிப்பு மகள் திருமணம், ஆஸ்பத்திரி செலவுகள் என எல்லாவற்றுக்கும் - இவற்றை கொஞ்சம் கொஞ்சமாய் விற்று தான் சமாளித்தேன்

கடந்த 40 வருடங்களில் வேறு பல பங்குகளும் வாங்கி விற்றுள்ளேன். ஆனால் எந்த ஷேர் வாங்கினாலும் 3 குறைந்தது முதல் 5 வருடங்கள் வைத்திருந்து அதன் பின் தான் விற்பேன்

இந்த 40 வருடங்களில் எத்தனையோ முறை பல பங்கு மார்க்கெட் ஊழல்கள் வந்து போய் விட்டது. இவை வரும் நேரத்தில் பங்குகள் விலை மிக குறைந்து நம் மன நிம்மதி தற்காலிகமாக குலைந்து போகும் !

தற்போதைய ஷேர் மார்க்கெட் முற்றிலும் வேறு விதமாய் இருக்கிறது. இப்போது நான் முற்றிலும் தவிர்ப்பவை பொது துறை நிறுவன பங்குகள் மற்றும் நிறுவனங்கள் வெளியிடும் IPO - க்களை.

ஒரு போதும் நான் ஷேர்களை அன்றே வாங்கி அன்றே விற்கும் வேலையில் இறங்கியதில்லை. அ து சூதாட்டம் போல

பொதுவாக ஷேர் மார்கெட் பற்றி சொல்லும்போது ஒன்று சொல்வார்கள் : உங்களின் எல்லா செலவுகளும் போக - மீதமுள்ள பணத்தில் - உங்கள் வயது என்னவோ - அத்தனை சதவீதம் பிக்சட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்யணும் மீதம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யணும் என்பார்கள். அதாவது வயது அதிகமாக, ஆக ஷேர் மார்கெட் முதலீட்டை குறைத்து கொண்டு பிக்சட் டெப்பாசிட் போன்றவற்றில் அதிகம் முதலீடு செய்யணும் என குறிப்பது இதன் அர்த்தம். ஆனால் என் விஷயத்தில் நான் இதற்கு நேர் மாறாக செய்கிறேன். எனக்கு இப்போது வயது 80. நான் எனது மீதமுள்ள வருமானத்தில் 80 % ஷேர் மார்கெட்டில் சேமிக்கிறேன் மீதம் 20 % தான் பிக்சட் டெபொசிட் அல்லது கடன் பத்திரங்களில் சேமிக்கிறேன்

இந்த வயதிலும் ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்வதால் என் மனது மிக விழிப்புடன் இருக்கிறது. இது உடல் நிலையை நன்கு வைத்து கொள்ள உதவுகிறது மேலும் எனது சொத்து மதிப்பு ஏறி இறங்குவதில் பாதிக்காமல் இருக்க கற்று கொள்வது வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை ஏற்று கொள்ளும் மன பக்குவத்தை தருகிறது
*********
அவரது பேட்டி இங்கு முடிகிறது. இனி எழுதுவது மோகன் குமாராகிய எனது கருத்து :

ஷேர் மார்க்கெட்டின் மிக முக்கியமான நன்மை - அதன் liquidity - தான். உங்களுக்கு வேண்டிய நேரம் வேண்டிய அளவு ஷேர்களை விற்கலாம். ஒரு நிலம் வாங்கி வைத்திருந்தால் அவசரத்திற்கு விற்பதில் சிரமம் இருக்கும். அதே இடத்தில் நிலம் வாங்க விருப்பமுள்ள ஆள் கிடைக்கணும்; விலை படியனும்; எல்லாம் முடிந்து விற்று முடிக்க சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். ஆனால் ஷேர் மார்க்கீட்டில் நீங்கள் முதலீடு வைத்திருந்தால் அன்றைக்கே கூட விற்று விட முடியும்

ஆனால் ஷேர் மார்க்கெட்டில் தனி நபர்கள் பலரும் பணத்தை இழக்கவே செய்கின்றனர். ஷேர் மார்க்கெட்டில் உண்மையில் நன்கு பணம் செய்பவர்கள் Financial Institution என்று சொல்லப்படுகிற நிறுவனங்கள் தான்.

தனி நபர்கள் செய்யும் மிக பெரிய தவறு உடனே லாபம் பார்க்க நினைப்பது

இந்த பேட்டி மூலம் நாம் எடுத்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் - ரமேஷ் - ஒவ்வொரு பங்கையும் பல வருடங்கள் பொறுமையாக விற்காமல் வைத்திருந்தது தான். நல்ல நிறுவன பங்கை வாங்கி, சில வருடங்கள் அதனை விற்காமல் பொறுமையாக வைத்திருந்தால் நிச்சயம் 3 - 5 வருடங்களில் நல்ல விலைக்கு செல்லும். இது முதலீட்டாளர்கள் அனைவருமே ஒப்பு கொள்ளும் விஷயம் !
*****
பின்குறிப்பு:

இந்த பதிவு பற்றி நண்பர் ஸ்ரீராம் நாராயணன் கூகிள் பிளஸ்சில் எழுதியது முக்கிய தகவல் என்பதால் பதிவில் சேர்க்கிறேன் :

பேட்டியில் கற்க வேண்டியது நிறைய இருக்கு

1. சேமிப்பு அவசியமல்ல இன்றியமையாது
2. பங்குச்சந்தை ரேஸ் மைதானமல்ல, காலையில் பத்து ரூபாய் எடுத்துச் சென்று சாயங்காலம் 100 ரூபாயோடு திரும்ப
3. don't put all eggs in one basket முதலீட்டை Equity & Bond / FD என்று இரண்டாக பிரிக்கவேண்டும். அதிக ஈக்விட்டியில் ஆரம்பித்து மெதுவாக பாண்ட் / ஃபிக்ஸ்ட் டெபாசிட் பக்கம் நகர ஆரம்பிக்கணும். ரிட்டையர்மெண்ட்டுக்கு முன் பெருமளவு ஈக்விட்டியிலிருந்து வெளியே வந்து விடணும் (due to very high volatility)
4. Do not try to time the market - no one has ever done it
5. Do your research before buying a stock and Stay with your choice for a long time.

மூணு வருசம் வச்சிருந்தா லாபம் நிச்சயம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது, மேலும் ஷேர் என்பது 100 % லிக்விட் அசெட்டும் கிடையாது. நீங்க வச்சிருக்கும் ஷேரை வாங்கறதுக்கு ஆள் இருக்கும் வரையே அது லிக்விட்.

ஷேர் மார்க்கெட்டில் தனி மனிதர்கள் பணம் இழக்கிறார்கள் நிறுவனங்கள் லாபம் அடைகின்றன என்பதை உண்மை இல்லை என்று சொல்ல மாட்டேன் ஆனால் அது தவறான பார்வை. இதில் வித்தியாசம் எமோசன். நம் பணத்தை கையாளும் போது எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் எமோசனலாக எடுக்கப்பட்டைவையாக இருக்கும். அதே இரு ஃபண்ட் மேனேஜர் செய்யும் போது லாஜிகலாக இருக்கும். நாமும் லாஜிகலாக தெரிவு செய்து தொடர்ந்து லாஜிகலாக செயல் பட்டால் (hold, buy more, sell etc) history proves that you can gain in Stock market. ஆனால் நாம் செய்வதோ வாட்சப்ல சொல்லிட்டான், ஃபேஸ்புக்ல சொல்லிட்டான், பக்கத்து வீட்டுக்காரன் சொல்லிட்டான் மார்க்கெட் விழும்னு அதனால நான் விக்கறேன் என்று முடிவு பண்றோம்.. பிரச்சனை நம்மிடம் மார்க்கெட்டில் இல்லை

அவர் சொல்லாமல் விட்டது போதிய அறிவும் நேரமும் இல்லாதவர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது நலம்.

****
அண்மை பதிவு:

குற்றம் 23- சினிமா விமர்சனம் 

11 comments:

  1. ஷேர் மார்க்கெட்டில் தனி நபர்கள் பலரும் பணத்தை இழக்கவே செய்கின்றனர்//என்னைப் போலவே.நல்லப் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  2. தேவையான அறிவுரையுடன் பகிர்ந்துள்ளீர்கள். வரவேற்கிறேன்!

    சென்னைக்கு வெளியே 'அவசியமில்லாமல்' விவசாய நிலங்களை 'பிளாட்ஸ்' என்கிற பெயரில் கணக்கில்லாமல் வாங்குவோரிடம், என் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், "இன்றை குறைந்த முதலீடு, பிற்காலத்தில் குழந்தைகளுக்கு உதவும்" என்கிறார்கள். அவர்கள் திருந்த இந்தப் பதிவு ஒரு வாய்ப்பாக அமையும் என்று நம்பலாம்!

    ReplyDelete
  3. உண்மைதான். ஷேர் மார்க்கெட்டில் long term லாபம்தான் கிடைக்கும். ஆனால் அது எல்லாருக்கும் கிடைத்துவிடாது. நிறைய அதிர்ஷ்டமும் கொஞ்சம் புத்திசாலித்தனமும் வேண்டும். ஒருகாலத்தில் அம்பானியை தெய்வமாக மதித்து கும்பிட்ட சாமான்யர்கள் ஏராளம். சாமான்யனுக்கும் ஷேர் மார்கெட்டுக்கு இழுத்து வந்தவர் அவர்தான்.

    ReplyDelete
  4. நல்லதொரு பேட்டி மோகன். பக் ஷி - எதற்கு இடையில் ஒரு இடைவெளி! :) பக்‌ஷி என்பது தான் சரியாக இருக்கும்..... இங்கே பஞ்சாபிகளில் நிறைய பக்‌ஷி [Bakshi] உண்டு.......

    ReplyDelete
  5. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=35526

    sir, you promise to write an article about new companies bill. we r expecting.

    advance thanks

    ReplyDelete
    Replies
    1. நினைவு படுத்தியமைக்கு நன்றி ஹரி; நிச்சயம் எழுதுகிறேன்

      Delete
  6. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=36163

    Second Reminder anna.

    Please

    ReplyDelete
  7. Hari.. will surely write it this week. By the way, since I am not subscribed to Vikatan, can you kindly send that article on 1 person company to my mail ID: snehamohankumar@yahoo.co.in

    Thanks

    ReplyDelete
  8. Its not that only Direct Equity creates you wealth, salaried class can go the Mutual Funds route, its more simple but people hardly have the discipline to stay invested for long term (10+years).

    ReplyDelete
  9. பயனுள்ள அருமையன பதிவு
    லாபம் அதிகம் சம்பாதிக்கவில்லை என்றாலும்
    நிதானமாக முதலீடு செய்து வருகிறேன்
    அதற்குத் தகுந்தார்ப்போல
    லாபம் இருக்கத்தான் செய்கிறது
    ஃபிக்ஸட் டெபாசிட்டை விட...
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  10. I suggest everyone to invest in share market not to make handy money but to create true wealth. My own example...I invested in Granules India by buying 10000 shares 4 years back for around rs.140 each. It reached more than rs.1500 each (now 130 after face value split from 10 to 1)I easily made more than 1 crore. Only thing you have take risk at the right stocks. In these 4 years it went up and down but I had the courage to hold the stock for long term. Similarly v2 retail, bought at Rs.30, 4 years back now nearly Rs.190....If you want to make serious money legally stock market is the best place.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...