Thursday, March 21, 2013

குளிச்சா திப்ப்ப்பரப்பு - ஜாலி குளியல் அனுபவம்

திருநெல்வேலி, கன்யாகுமரி பயணக்கட்டுரையில் இம்முறை திப்பரப்பு நீர்வீழ்ச்சி மற்றும் நாகராஜா கோவிலை ஒரு ரவுண்ட் அடிப்போம் !

*****
குளிச்சா திப்பரப்பு 

திப்பரப்பு நீர்வீழ்ச்சி ஒவ்வொரு முறையும் கவர முக்கிய காரணம் - தண்ணீர் எப்போதும் இருக்கும் ! மேலும் அதிக கூட்ட நெரிசலின்றி ஜாலியாக குளிக்கலாம்




இம்முறை செல்லும்போது அந்த இடம் சற்று மாறுதலுக்கு உள்ளானது தெரிந்தது. சுற்றிலும் குரோட்டன்ஸ் உள்ளிட்ட நிறைய செடிகள் வைத்து ஒரு பூங்காவை வடிவமைத்துள்ளனர். அருவிக்கு சென்றால் சிலர் குளிக்காமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பார்கள் அல்லவா? அத்தகையோர் பூங்காவில்,  தள்ளி அமர்ந்து அருவியை ரசிக்கலாம்

இப்படத்தில் அய்யாசாமியும் கீறாராம் ! சொல்ல சொன்னார் :)

நான்கைந்து இடங்களில் அருவி கொட்ட, நடுவில் தடுப்பு சுவறொன்று வைத்து பெண்களுக்கான இடம் பிரித்து விட்டுள்ளனர். அருவிக்கு அருகே சிறு ஓடை போல் ஓட , சிறுவர் சிறுமிகள் அதில் ஆனந்தமாக நீந்தி மகிழ்கிறார்கள்.

ஒரே ஒரு செக்கியூரிட்டி நின்று கொண்டு ஆண்கள் பெண்கள் பக்கம் செல்லாமலும், வேறு சண்டைகள் வராமாலும் ஏரியாவை மெயிண்டைன் (!!) செய்கிறார்

திப்பரப்பு அருவியின் அழகை இந்த வீடியோவில் கண்டு களிக்கலாம்:


அருவிக்கு சென்றாலே முதலில் இறங்குவதும், கடைசியில் "போதும்; கிளம்பலாம்" என்று தர தரவென இழுத்து செல்லும் என்னை மாதிரி ஆளுக்கு ஏற்ற இடம் திப்பரப்பு ! கூட்ட தொந்தரவோ, யாரும் எண்ணை பிசுக்குடன் மேலே இடிக்கிறார்கள் என்றோ கவலை இன்றி வேண்டிய மட்டும் குளிக்கலாம். 

நின்றவாறு- படுத்தவாறு, அமர்ந்தவாறு வெவ்வேறு போஸில் ஆசை தீரும் வரை குளித்து தீர்த்தேன்.

குளியல் முடிந்து பசி வயிற்றை கிள்ள, திப்பரப்பில் சாப்பிட உருப்படியான ஹோட்டல் இல்லாதது பெரும் குறை.

நாகர்கோவில் பக்கம் செல்லும்போது தவற விடாதீர்கள் திப்பரப்பை !
****
நாகராஜா கோவில் 

நாகர்கோவில் என்பது மிக பெரிய ஊர் - கன்யாகுமரி மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் தான். ஆனால் நாகர்கோவிலில் பார்க்க என்ன இருக்கு என்று கேட்டால் - பத்மநாபபுரம் பேலஸ் திப்பரப்பு என 5 அல்லது 10 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இடங்களை தான் சொல்வார்களே ஒழிய, ஊருக்குள் ஒரு இடம் கூட பார்பதற்கு இருக்குற மாதிரி சொல்லவே மாட்டார்கள். அதையும் மீறி அழுத்தி கேட்டால், " நாகராஜா கோவில் மட்டும் தான் இங்கு விசேஷம் " என்று முணுமுணுப்பார்கள்.

ஒரு மாலை நேரத்தில் நாகராஜா கோவிலுக்கு சென்று வந்தோம்.



நாகர் கோவில் என்ற பெயரே இந்த கோவிலை வைத்து வந்தது தான். கோவில் முழுதும் நாகங்களின் படங்களை பார்க்க முடிகிறது. மேலும் கோவிலை வெளியிலிருந்து காப்பதும் இரு நாகங்களின் உருவங்களே

பரிகாரம் என்பது பெரிய பிசினசாக தொடர்கிறது. வெள்ளியில் கை, கால் வாங்கி சாமிக்கு காணிக்கை செலுத்துவது போன்ற நம்பிக்கைகளை காண முடிந்தது


கோவில் வந்ததுக்கு பின்னே ஒரு சிறு சம்பவம் கதை போல் சொல்லப்படுகிறது

ரொம்ப வருஷத்துக்கு முன் சிறுமி ஒருத்தி, இந்த இடத்தில் உள்ள புற்களை வெட்ட, திடீரென ரத்தம் கொட்டுவதை கண்டுள்ளாள். என்ன என்று பார்க்க, 5 தலை நாகமொன்றின் தலையை தெரியாமல் வெட்டியது தெரிய வந்துள்ளது. பயந்து ஓடி போய் ஊரில் சொல்ல, ஊர் மக்கள் வந்து பார்க்கும்போது அந்த நாகத்துக்கு பட்ட காயம் தானாகவே சரியாகி விட்டதை கண்டுள்ளனர். பின் இந்த இடத்தை சுத்தம் செய்து இந்த கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது



அதன் பின் ராஜா ஒருவர் கொடிய நோய் வந்து துன்புற்றதாகவும், அப்போது இந்த கோவிலுக்கு வந்து குணமானதால் அவர் இந்த கோவிலை மேலும் பிரபலமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு ஆவணி மாத ஞாயிறும் ராஜாவின் பரம்பரை பல வருடங்கள் இந்த கோவிலை வந்து வணங்கியிருக்கிறார்கள்.

கோவில் முழுவதும் நாக உருவங்களை தவிர முருகன், பிள்ளையார் சந்நிதிகள் மட்டுமன்றி சில ஜெயின் சிலைகளும் கூட இங்கு உள்ளது.

********












தொடர்புடைய திருநெல்வேலி / கன்யாகுமரி பயணக்கட்டுரைகள்:

சரவண பவன் ஓனர் கட்டிய கோவில் நேரடி அனுபவம்

திருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில் ஒரு பார்வை

நாகர்கோவில் - தொட்டி பாலமும், உதயகிரி கோட்டையும் - ஒரு பயணம்

வாவ் மறக்க முடியாத முட்டம் கடற்கரை

கன்யாகுமரி சில கசப்பான உண்மைகள்
***********
கோவிலில் நான் கவனித்த ஒரு காமெடியான விஷயம் இதோ:



கோவில் குறித்து எனக்கு தெரிந்த குறைவான் தகவல்களை கூறியுள்ளேன். பயண தொடரை தொடர்ந்து வரும் நெல்லை நண்பர்கள் மேலும் தகவல் இருந்தால் பின்னூட்டத்தில் கூறலாம் !

******
அண்மை பதிவுகள் :

வானவில்: கருணாஸ் பேச்சு- தேசிய விருது- தமன்னா 


ஈழ பிரச்சனை-கலைஞர் நிலை- விகடன் கட்டுரை

பரதேசி - தமிழில் ஒரு உலக சினிமா - சல்யூட் பாலா !

எதிர் நீச்சல் - பட்டை கிளப்பும் பாட்டுகள் ஆடியோவுடன் ! அசத்தும் அனிருத் !

தொல்லை காட்சி - நீயா நானா - பரதேசி படக்குழு - ஷீக்கர் தவன்



17 comments:

  1. திற்பரப்பு அருவியில் குளிக்க ஆசை வந்துவிட்டது மோகன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்; செடியூல் செய்யப்பட்ட இப்பதிவை தமிழ்மணத்தில் சேர்தமைக்கும்

      Delete
  2. பலமுறை சென்றதுண்டு... படங்கள் சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சார்? நன்றி

      Delete
  3. திற்பரப்பு நீர்வீச்சிக்கு நாங்கள் சென்று இருந்த பொழுது நீங்கள் படத்தில் காட்டி இருந்த இடத்தில் நீரின் வேகம் பயங்கரமாக கொட்டியது.மலை மேல் ஏறினால் அமர்ந்து கொண்டே குளிப்பது போல் ஒரு இடமும் உண்டு.அங்கே ஷேஃபாக குளிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி ஸாதிகா

      Delete
  4. கோவில் சமாச்சாரம் கொஞ்சம் இங்கே இருக்கு.

    http://thulasidhalam.blogspot.co.nz/2009/05/2009-30.html

    திற்பரப்பு பற்றி நம் தளத்தில் http://thulasidhalam.blogspot.co.nz/2009/06/2009-34.html

    நேரம் கிடைத்தால் பாருங்க.

    ReplyDelete
    Replies
    1. படிக்கிறேன் டீச்சர். நன்றி

      Delete
  5. ஜில்லுன்னு ஒரு பதிவு அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க உமா நன்றி

      Delete
  6. கொல்லிமலையிலும் ஒரு அருவி உண்டு. அட்டகாசமாக இருக்கும் அதன் பெயர் ஆகாய கங்கை. நீங்கள் சேலம்/நாமக்கல் பக்கமாக போகும்போது சென்று வாருங்கள்.
    http://en.wikipedia.org/wiki/Agaya_Gangai

    ReplyDelete
    Replies
    1. சரியான நபருக்கு சரியான இடம் அறிமுகம் பண்ணிருக்கீங்க நன்றி பாஸ்கரன். நிச்சயம் செல்வேன்

      Delete
  7. திற்பரப்பு அருவி நாகர் கோயில் நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
  8. அருமையான இடம். இரண்டு மூன்று முறைகள் சென்றிருக்கிறேன். மீண்டும் செல்லும் ஆசையை ஏற்படுத்துகிறது பதிவு.

    ReplyDelete
  9. 90 களின் ஆரம்பரத்தில் இருந்த அருவியும் இப்போது இருக்கும் நிலையும் மாறுதல் நிறைய. சுற்றுலா தலமாக மாறி வணிக நோக்க மையமாக மாறி விட்டது.

    90 ல் அருவி விட்டு வெளியே வந்தவுடன் இருந்த உணவு விடுதில் நாங்கள் சாப்பிட்ட குண்டு அரிசி சாப்பாடு எப்போதும் நினைவில் இருக்கும்.

    ReplyDelete
  10. நாகராஜா குளம் பளிச்சுனு இருக்கு. கண்ணுல காமிச்சதுக்கு நன்றி.

    ReplyDelete