Saturday, March 16, 2013

பரதேசி- தமிழில் ஒரு உலக படம் -சல்யூட் பாலா !

ரதேசி - என்னை பார்க்க வைத்தது நம் பதிவர்களின் விமர்சனம் தான். அனைவருமே பாசிடிவ் ஆக எழுத - உடன் பார்க்கும் ஆவல் வந்தது. அந்த அளவு நம் விமர்சனம் தாக்கம் ஏற்படுத்துகிறது என்றாலும், விமர்சனம் எழுதுகிறேன் என்ற பேரில் திரைக்கதை மொத்தமும் எழுதும் பழக்கத்தை சிலர் விட்டொழித்தால் நல்லது. ஒரு பதிவர் அதர்வாவிற்கு பாதியில் என்ன ஆகிறது என்பதில் துவங்கி, கிளைமாக்சில் என்ன நடக்கிறது என்பது வரை எழுதி தள்ளி விட்டார்.

இதே தப்பை நானும் ஓரிரு முறை செய்திருந்தாலும் சிலர் சொன்ன உடன் திருத்தி கொண்டேன். எதை ரசித்தோம் என்று எழுதும் போதே சில விஷயங்கள் தெரிய வந்து விடும். அப்போதும் கூட முக்கிய விஷயங்களை எழுதாமல் இருத்தல் நலம். இரண்டாம் நாள் படம் பார்க்கும் எனக்கு ஒரு காட்சி கூட புதிதாய் இல்லாத படி கதை - திரைக்கதை மொத்தமும் எழுதி விட்டனர் நம் நண்பர்கள்.கதை முழுசும்  சொன்ன விமர்சனங்களை படிக்காமல் இருந்திருந்தால் இன்னும் ரசித்திருப்பேன்.

காசு கொடுத்து படம் பார்க்கும் மக்களின் சந்தோஷத்தை சுத்தமாய் குலைக்காதீர்கள் நியாயமாரே ..........ஏஏ ஏ ஏ ஏ ஏ !!!!!!

கதை

சாலூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுகணக்கான மக்கள், தேயிலை தோட்ட வேலைக்காக வெகு தொலைவில் உள்ள இன்னொரு ஊருக்கு பயணமாகிறார்கள். அங்கு அவர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள், கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பதை கண்ணீரோடும், வலியோடும் சொல்வது தான் பரதேசி
 
                                 


கதையின் சுருக்கத்தை வாசித்தால் மிக dry -ஆன ஒரு டாக்குமெண்டரி வகை படமோ என்று தோன்றும். ஆனால் நிச்சயம் அப்படி அல்ல ! பாலா ஒரு பேட்டியில் இதையும் ஒரு கமர்ஷியல் சினிமாவாக தான் எடுத்துள்ளேன் என்று சொல்லியிருந்தார். "நான் எங்கு கமர்ஷியல் சேர்க்கிறேன் என்று உங்களால் எளிதாய் கண்டுபிடிக்க முடியாது !"

படம் நெடுகிலும் சோகத்துக்கு இணையாக மெல்லிய நகைச்சுவையும் இழையோட வைத்துள்ள பாலா .. அசத்தி விட்டார்.

பல விஷயங்கள் மனம் விட்டு சிரிக்க வைக்கிறது

- மந்திரி பற்றி அதர்வா மற்றும் விக்ரமாதித்யன் அடிக்கும் கமண்ட்டுகள் (அது அரசியல் வாதிகளையும் மறைமுகமாக ஓட்டுவதால் மிக மிக ரசித்தேன் )

- டாக்டராக வரும் சிவசங்கர் பாத்திரம் - மற்றும் அவர் வரும் பத்து நிமிடமும் சிரிப்பு மழை தான். மதம் மாற்றும் கும்பலை இதற்கு மேல் கிண்டலடிக்க முடியாது. " நீ டாக்டராய்யா ? எங்கேய்யா டாக்டருக்கு படிச்சே? " என்று சிவசங்கர் கேட்க, "இங்கே தான் படிச்சேன். இவங்களை வச்சு தான் கத்து கிட்டேன்" என்பதில் துவங்கி, " இவன் கங்காணியை விட மோசமானவன்" என்று முடிப்பது அட்டகாசமோ அட்டகாசம் ! Sarchasam at its best ! (இதை பார்த்தும் மதம் மாற்றும் கூட்டம் அப்படியே தான் இருப்பார்கள் என்பது வேறு விஷயம் )

- ஏராள மக்கள் இறந்த பின் மீண்டும் கூலிகளை கூட்டி வர கங்காணி கிளம்ப, அப்போது அவர் மனைவி " மறக்காம எனக்கு சங்க சங்கிலி வாங்கி வந்துடுங்க " என்று சொல்கிற காட்சியில் தியேட்டர் குலுங்குகிறது

- அதர்வாவின் பாட்டி பேசும் பேச்சுகள் அனைத்துமே சிரிக்க வைக்கின்றன. குறிப்பாய் " எங்க கல்யாணத்துக்கு நானே தமுக்கு அடிக்கிற மாதிரி கனவு வருது" என அதர்வா சொல்ல, " எனக்கும் கூட நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து பிச்சை எடுக்கிற மாதிரி கனவு வருது" என பாட்டி கொடுக்கும் பஞ்ச் சிரிப்பை அள்ளுது



நடிப்பிலும் பாத்திர படைப்பிலும் அதர்வா மற்றும் தன்ஷிகா பெரிதும் கவர்கின்றனர்
அதர்வா - நம் அனைவரின் பரிதாபத்தையும் படம் முழுதும் எளிதில் பெறுகிறார். அற்புதமான நடிப்பு..

தன்ஷிகா பாத்திரம் மிக அழகு. ஒரு நாளைக்கு 3 கூடை தேயிலை பறிக்கணும் என கருத்த பெண்ணுக்கு தன் கூடையிலிருந்து தேயிலை கொட்டுவதாட்டும், தன் மகள் அதர்வாவுட்ன் நட்புடன் பழகுவதை ரசிப்பதாகட்டும்.. சிறந்த துணை நடிகை விருதுக்கு வாய்ப்பிருக்கு 

பிரிட்டிஷ் காரர் துவங்கி, கங்காணி வரை காசு உள்ள எல்லாருமே ஒரு விதத்தில் ஏழைகளை சுரண்டுபவர்களாகவே காட்டி செல்கிறார் இயக்குனர். கங்காணியாக வரும் இயக்குனர் ஜெர்ரி நம் கோபத்தையும் சாபத்தையும் ஒட்டு மொத்தமாக பெறுகிறார்

படத்தில் என்னை கவராத ஒரே பாத்திரம் வேதிகா (அங்கம்மா) தான். தமிழ் படத்தின் வழக்கமான லூசு ஹீரோயின் போல இவர் செய்யும் சேஷ்டைகள், பலர் முன்பு தெருவில் ஆடும் டான்ஸ்  எரிச்சல். எந்த பெண்ணும் தன் காதலன் ஊரில் நாலு பேரால் மதிக்க பட வேண்டும் என்று தான் நினைப்பாள். காதலனை ஊருக்கு முன் அவமானப்படுத்தி சிரிக்க மாட்டாள். அப்படி செய்தால் அதற்கு பேர் காதலே அல்ல !  எனக்கு தெரிந்து பாலா கோட்டை விட்ட அரிதான விஷயங்களில் ஒன்று வேதிகா பாத்திரம் !

பாடல்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.  போலவே பின்னணி இசை சில இடத்தில் அடக்கி வாசித்திருக்கலாம்.

நிச்சயம் இந்த வருடத்து தேசிய விருதுகளில் பலவற்றை அள்ளி வரும் என்றாலும் 3 பேருக்கு நிச்சயம் அது கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

ஒளிப்பதிவாளர் செழியன் - படம் பார்க்கிற உணர்வே இன்றி நம்மை அந்த இடத்துக்கே கூட்டி போய் விடுகிறார். துவக்க காட்சியில் ஊர் முழுக்க காட்டி விட்டு அதர்வாவில் முடிகிற காமிரா, படம் முடியும் போதும் அதையே தான் செய்கிறது.. இறுதியில் மனது கனத்து போகிறது ! 

கலை இயக்குனர் - வாட் எ ஜாப் ! பாலாவிற்கு அடுத்து மிக ஈர்ப்பது இவர் தான் ! வீட்டின் நிலைப்படி துவங்கி, பற்பல விஷயங்களில் அசத்தி விடுகிறார்.

இயக்குனர் பாலா - பெயர் போடும் போதே கை தட்டல் எழுந்து அடங்குகிறது. எத்தனையோ இடங்களில் கண்ணீர் வர வைக்கிறார் ! இடைவேளையின் போது அந்த கை அசையும் போது நம் மனதும் வயிறும் பிசைகிறது. அந்த காட்சியும், விஷூவலும் நெடு நாளைக்கு மறக்காது !

(இவ்வளவு கனமான காட்சியை பார்த்து விட்டு, இடைவேளையில் பெரிய சைஸ் கோக் மற்றும் பாப் காரன் வாங்கி வந்து அமர்ந்தபடி படத்தை எப்படி சிலரால் பார்க்க முடிகிறதோ தெரிய வில்லை !)



படம் பார்க்கும் போது எனக்கு கடல் படமும், மணிரத்னமும் அடிக்கடி நினைவில் வந்து சென்றனர். அதற்கு ஒரே காரணம் தான் - கடல் படம் மிக மேலோட்டமாய் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாமல் போன ஒரு படம். மணிரத்னம் தயவு செய்து இந்த படத்தை பார்க்கட்டும். படம் துவங்கிய அரை மணியில், கல்யாண காட்சியில் ஹீரோவுக்கு சாப்பாடு கிடைக்காது. அதை கூட எவ்வளவு வலியுடன், பார்ப்பவர்கள் வேதிகாவை திட்டும் வண்ணம் எடுத்துள்ளார் பாலா என்று பார்க்கட்டும் ! எந்த விஷயத்தையும் சற்று உரைக்கும் படி சொல்வது என்பது இது தான் ! அவன் இவனுக்கு பிறகு இனி பாலாவிற்கு இறங்குமுகம் தான் என்று நினைக்க துவங்கிய என்னை போன்றோர் நிச்சயம் அந்த எண்ணத்தை வாபஸ் பெற வைத்து விட்டார் பாலா ! சேது, பிதாமகன் பட்டியலில் இணையும் இந்த படம் ! விகடனில் 50 லிருந்து 65 க்குள் இப்படத்துக்கு மார்க் கிடைக்கும்.

படம் அனைவராலும் பாராட்டப்பட்டாலும் வணிக ரீதியில் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே. இன்றைக்கு வீக் எண்டு திருவான்மியூர் S -2 வில் காலைகாட்சி முக்கால் வாசி தான் நிறைந்தது.

நிற்க தேயிலை தோட்ட கூலிகளின் வலி சொல்லும் படமாக மட்டும் இதனை நான் பார்க்க வில்லை. நல்ல வேலையும், கணினியும் கையுமாய் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் சுரண்டல் பேர் வழிகள் தானே? நமது வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரிக்கு அவள் வேலைக்கு தகுந்த கூலி தருகிறோமோ? பூக்காரியிடம் பேரம் பேசாமலோ, செருப்பு தைப்பவரிடம் பணம் குறைத்து தராமலோ நம்மால் இருக்க முடிகிறதா? அவர்கள் உழைப்பை, அவர்களுக்கான நியாயமான கூலியை நாம் எதோ ஒரு விதத்தில் சுரண்ட வில்லை?

பரதேசி படம் டீ குடிக்கும் போது மட்டுமல்ல, எளிய மனிதர்களிடம் பேரம் பேசும்போது நினைவுக்கு வரட்டும்; அவர்களை மனிதர்களாக நினைத்து அன்பு காட்ட ஒரு சில படியாவது எடுத்து வைக்க முயல்வோம் !

சோக படம் என்று ஒதுக்காமல் நல்ல சினிமா விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய, கொண்டாட வேண்டிய படம் இது

பரதேசி - சிம்மாசனத்தில் அமர வைக்க வேண்டிய  ராஜா !


*****
அண்மை பதிவுகள் :

எதிர் நீச்சல் - பட்டை கிளப்பும் பாட்டுகள் ஆடியோவுடன் ! அசத்தும் அனிருத் !

தொல்லை காட்சி - நீயா நானா - பரதேசி படக்குழு - ஷீக்கர் தவன் 

40 comments:

  1. பலத்த பாதிப்பினை ஏற்படுத்தின படம்...நேற்று இரவுக்காட்சி படம் முடிந்து வெளியில் வரும்போது ரசிகர்கள் சொன்னது....இன்னிக்கு தூக்கம் போச்சி என்பதுதான்...வெல்டன் பாலா...

    ReplyDelete
    Replies
    1. சரியாக உங்கள் உணர்வுகளை பதிவு செய்தீர்கள் நன்றி ஜீவா

      Delete
  2. நல்ல படத்தை பற்றிய நச் விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ் நன்றி

      Delete
  3. உங்கள் விமர்சனம் அருமையாக இருந்தது!

    ReplyDelete
  4. உண்மை சார் படத்தின் முக்கியமான காட்சிகளை எழுதி விடக் கூடாது , அப்புறம் எப்படி ரசித்துப் பார்க்க முடியும், இந்த ஒரு விசயத்தில் நான் மிக உறுதியை இருப்பேன்.

    மேலும் ஒரு படம் பார்க்கப் போவது என்று முடிவு எடுத்துவிட்டால் சிலரின் விமர்சனம் பக்க தலை வைத்துப் படுக்க மாட்டேன்... படத்தை வாசிப்பது எனக்குப் பிடிக்காது. விமர்சனம் மட்டுமே பிடிக்கும்

    //ஹீரோயின் போல இவர் செய்யும் சேஷ்டைகள், பலர் முன்பு தெருவில் ஆடும் டான்ஸ் எரிச்சல்// ஹா ஹா பக சமயங்களில் நான் ரசித்தேன். நான் வாழ்ந்த பகுதிகளில் இது போன்றவர்களை நான் பார்த்துள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹீரோயின் பற்றி நீங்க சொன்னது ஆச்சரியமா இருந்தது ரைட்டு :)

      Delete
  5. எல்லா விமர்சனங்களும் படிக்கும்போது பார்க்கவேண்டுமென்ற எண்ணம் வலுக்கிறது. பார்த்து விடுகிறேன் மோகன்.....

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள் வெங்கட்

      Delete
    2. இன்னும் பார்க்கவில்லையா வெங்கட்.. லேட் சார்.

      Delete
  6. Replies
    1. மகிழ்ச்சி விஜயகுமார் ராமதாஸ்

      Delete
  7. நமக்கு இந்த அழுகாச்சி படங்களை பார்க்க தைரியமில்லை

    ReplyDelete
    Replies
    1. நானும் அதே ரக ஆள் தான்; ஆனால் எனக்கு படம் பிடித்ததே பிரேம் !

      Delete
  8. அண்ணே எனக்கு இந்த படம் பார்க்கணும்னே தோணல? ஒரு சில பேர் சூப்பர் ன்னு சொல்றாங்க ஒரு சில பேர் வேஸ்ட் ன்னு சொல்றாங்க பார்ப்போம்?

    ReplyDelete
    Replies
    1. யாரும் வேஸ்ட் என சொன்னாங்களா? நான் கவனிக்கலை சக்கர கட்டி

      Delete
  9. படம் பார்த்துவிட்டேன்.... பேஸ்புக்கில் நான் பகிர்ந்தது

    சேதுபடத்தில் விக்ரமின் மூளைபிரிவதைப்பார்த்தபின்னர் மீண்டும் அந்த சீனைப்பார்ப்பதில்லை என்று முடிவுசெய்யுமளவுக்கு ஆக்கியிருந்தார்பாலா...
    இந்தப்படமும் அதேபாதிப்பைத்தான் ஏற்படுத்தியிருந்தது...திருப்பி மீண்டும் ஒருதடவை பார்க்கவேண்டுமா... நரகம் கண்முன்னால் அதுவும் இறுதிக்கட்டம் இருக்கின்றதே...பாருங்கள் புரியும்
    உணர்வுகளால் உருவாக்கப்பட்டபடம் ஆகவே வார்த்தைகளால் விபரிப்பதில் பயனில்லை என்று நம்புகின்றேன் நிச்சயம் பாலாவிற்குத்தேசியவிருது கிடைக்கும்.அதர்வாவிற்கு இது மிகவும் நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும்....

    இடையில் மதம் பரப்பும் சீன் ஒன்றுவரும் தரமாக இருந்தது....அவன் கங்காணியைவிட கொடுமையானவன்...

    நான் கடவுளில் பாலா வெளிப்படுத்திய அவரது நாத்திகதோற் இங்கேயும் சில இடங்களில் ஒலித்திருக்கின்றது....சாமிக்கு முன் கங்காணி இருப்பார் சாமியை அதர்வா நிமிர்ந்து நின்றுவணங்குவார் கங்காணியை காலில்தொட்டு முதுகைவளைத்து கூனி வணங்குவார்.

    படம் பார்க்கும்போது தோன்றியது இதுதான் நல்லவேளை நாம் தப்பிவிட்டோம்..

    கொடுமையான விடயங்களில் ஒன்று எதுவெனில் முடிவை எமது கைகளில் ஒப்படைப்பது அதையேதான் பாலா இறுதியில் செய்திருக்கின்றார்....
    இப்படியான ஒரு படத்தை எடுப்பதற்கு பாலா சைக்கோவாக இருக்கவேண்டுமென்றால் அவர் சைக்கோவாகவே இருக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. அருமை.. க்ரிதிகன் யோகா ராஜா

      Delete
  10. //விகடனில் 50 லிருந்து 65 க்குள் இப்படத்துக்கு மார்க் கிடைக்கும்.//

    அப்படியா? பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. சார் 50 மார்க் நிச்சயம். எந்த சந்தேகமும் இல்லை; அதற்கு மேல் எவ்வளவு என்று தான் பார்க்கணும்

      Delete
  11. Replies
    1. நன்றி முரளி சார்

      Delete
  12. //சோக படம் என்று ஒதுக்காமல் நல்ல சினிமா விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய, கொண்டாட வேண்டிய படம் இது//

    சரி சார்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமைதி அப்பா

      Delete
  13. பாலா என்ன நினைத்து படம் எடுக்கின்றார் கமர்சியல் படம் பண்ணுகிறாரா அல்லது அவரது கலைத் திறமையை வெளிப்படுத்த படம் பன்னுகின்றாரா என்பது முக்கியமில்லை வருகிற மனிதன் இருக்கும் கவலையை மறந்து சந்தோசமாக 2மணி நேரம் செல்லவேண்டும் அதை விடுத்து ஏற்கனவே உள்ள பாரத்தின் மீது இன்னும் பாரம் ஏற்றினால் வண்டி என்னவாகும் என்று சிந்தித்து படம் எடுப்பது நலம்.

    ReplyDelete
    Replies
    1. படம் பார்க்காத வரை நானும் உங்களை போல தான் பேசியிருப்பேன் நண்பா. பார்த்த பின் உங்கள் எண்ணமும் மாற வாய்ப்புண்டு

      Delete
  14. Nice vimarsanam. Nanum ungala pola ezhuthanumnu asaipadaren. I am a new blogger

    ReplyDelete
    Replies
    1. எழுதுங்கள் கலியபெருமாள் வாழ்த்துகள்

      Delete
  15. நல்ல முயற்சி... ஆனால் “எரியும் பனிக்காடு” நாவலைப் படித்தால் இந்த படம் ஒரு சிறு பாதிப்பை மட்டுமே கொடுக்கும்... வலிகளின் பயணம்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ? நன்றி குட்டி

      Delete
  16. மலங்காட்டு தேயிலைக்கு உரமான
    தென்நாட்டு தமிழ்க்குடிகள் ..,
    நூற்றாண்டு கல்லறைகள் உடைத்து
    திரைபிம்பமாய் உயிர்த்திருக்கிறார்கள் !!!

    நம் மேலான இரண்டு மணி நேர
    பொழுதுபோக்கிற்காக MY LORD !!! ..,

    ReplyDelete
  17. //பரதேசி படம் டீ குடிக்கும் போது மட்டுமல்ல, எளிய மனிதர்களிடம் பேரம் பேசும்போது நினைவுக்கு வரட்டும்//
    அதுதான் அவசியமும் கூட!

    ReplyDelete
  18. அற்புதம் குமார். ரசித்தேன். படித்துக்கொண்டே வரும்போது ஒரு இடத்தில் வாய்விட்டுச்சிரித்தேன். படக்காட்சியல்ல, உங்களில் நக்கல். அது என்னவென்று நான் சொல்லி வாசிப்போரின் சுவரஸ்யத்தைக் குறைக்க விரும்பவில்லை. :P

    ReplyDelete
  19. என்னால் தியேட்டருக்குப் போய் அழுது கொண்டே படம் பார்க்க முடியாது எனவே இப்போதைக்கு ’பரதேசி’பார்ப்பதாக இல்லை.. ஆனால் உங்களுடைய இந்த வரிகளுக்காகவே
    (”தேயிலை தோட்ட கூலிகளின் வலி சொல்லும் படமாக மட்டும் இதனை நான் பார்க்க வில்லை. நல்ல வேலையும், கணினியும் கையுமாய் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் சுரண்டல் பேர் வழிகள் தானே? நமது வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரிக்கு அவள் வேலைக்கு தகுந்த கூலி தருகிறோமோ? பூக்காரியிடம் பேரம் பேசாமலோ, செருப்பு தைப்பவரிடம் பணம் குறைத்து தராமலோ நம்மால் இருக்க முடிகிறதா? அவர்கள் உழைப்பை, அவர்களுக்கான நியாயமான கூலியை நாம் எதோ ஒரு விதத்தில் சுரண்ட வில்லை?பரதேசி படம் டீ குடிக்கும் போது மட்டுமல்ல, எளிய மனிதர்களிடம் பேரம் பேசும்போது நினைவுக்கு வரட்டும்; அவர்களை மனிதர்களாக நினைத்து அன்பு காட்ட ஒரு சில படியாவது எடுத்து வைக்க முயல்வோம் !)”

    ஒரு பெரிய சல்யூட் பரதேசி சாதித்திருக்கிறான்!

    ReplyDelete
  20. படம் எப்பிடி இருக்கோ தெரியாது ஆனா உங்க விமர்சனம் ரொம்ப ரொம்ப அழகாவும் இயல்பாவும் இருக்கு சார்! வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  21. நல்ல பதிவு - வாழ்த்துகள்

    ReplyDelete
  22. \\பரதேசி படம் டீ குடிக்கும் போது மட்டுமல்ல, எளிய மனிதர்களிடம் பேரம் பேசும்போது நினைவுக்கு வரட்டும்; அவர்களை மனிதர்களாக நினைத்து அன்பு காட்ட ஒரு சில படியாவது எடுத்து வைக்க முயல்வோம் !

    சோக படம் என்று ஒதுக்காமல் நல்ல சினிமா விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய, கொண்டாட வேண்டிய படம் இது

    பரதேசி - சிம்மாசனத்தில் அமர வைக்க வேண்டிய ராஜா//அதுதான் அவசியமும் கூட!//

    anaivarukkum ore uNarvai kodukka mudikiRathenRaal athu padam alla paadam.

    ReplyDelete
  23. கட்டாயம் பார்க்க வேண்டுமென நினைத்தபடம். இன்னும் பார்க்கவில்லை.

    விரைவில் பார்ப்பேன்.

    ReplyDelete
  24. உங்களுடைய பதிவுகளை அன்மை காலமாக வாசித்து வருகிறேன். நன்றாக இருக்கிறது. மனம் விட்டு பேசுதல் குறைந்து வரும் காலங்களில், உங்கள் பதிவு அதை நிறைவு செய்து வருகிறது. ’பரதேசி ‘பாலா பதிவு செய்த வரலாறு, புத்தகங்களில் படிக்க விரும்பாதவர்கள் இந்த படத்தை பார்க்கும்போது வரலாற்றை தெரிந்துகொள்வார்கள். அந்த டாக்டர் கதாபாத்திரம் சர்ச்சையை உருவாக்கும் என prasad lab ல் preview ஷோ பார்க்கும் போது எண்ணினேன். அது சுனாமியாய் மாறாமல் போனது ஆச்சர்யமான விசயம்தான்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...