Thursday, February 7, 2013

வாவ் ! மறக்க முடியாத முட்டம் கடற்கரை !

முட்டம் கடற்கரை - கடலோரக்கவிதைகள் படம் மூலம் பாரதிராஜாவால் பிரபலமானது இல்லையா? அதே ஊர் தான் !  அதற்கு முன் அலைகள் ஓய்வதில்லை கூட இங்கு தான் எடுத்தார் என நினைக்கிறேன். இருப்பினும் முட்டம் சின்னப்பதாஸ் என்று சொல்லி, சொல்லி கடலோரக்கவிதைகள் படம் தான் இந்த ஊரை பிரபலமாக்கியது.



நாகர் கோவிலில் இருந்து சற்று தள்ளி இருக்கும் ஊர் ( ஒரு மணி நேர பயணம்) என்பதால், அவ்வளவு தூரம் டிராவல் செய்து போகணுமா என தயக்கம் இருந்தது. அப்போ தான் கன்யாகுமரி கடற்கரை வேறு பார்த்திருந்தோம். அதே கடல் தானே என்று ஒரு எண்ணம். வீட்டம்மா தான் " ரொம்ப நல்லா இருக்குமாம். ஆபிஸ் தோழிகள் போய் வந்து சொன்னாங்க " என சென்றே ஆகணும் என்றார்.

சென்ற பின் தான் தெரிந்தது. இங்கு வராமல் போயிருந்தால் ஒரு அற்புத கடற்கரையை பார்க்க தவறியிருப்போம்.

எனக்கு தெரிந்து நான் பார்த்த அழகிய கடற்கரை இதுதான். குறைந்த பட்சம் தமிழகத்தின் அழகிய கடற்கரை என்று தயக்கமின்றி சொல்லி விடலாம்.

சினிமாவில் காட்டியதை விடவும் நேரில் இன்னும் பல மடங்கு அழகு. கடலில் என்ன அழகு இருந்து விடமுடியும் என்கிறீர்களா?

முட்டம் கடற்கரையை நெருங்கும் போதே வரிசையாய் நூற்று கணக்கில் தென்னை மரங்கள் பீச்சில் கால் நனைக்கும் தூரத்தில் உள்ளன.  வெவ்வேறு வடிவத்தில் வளைந்து இருக்கும் இந்த மரங்களை  சாலையில் நீங்கள் சற்று உயரத்திலிருந்து பார்ப்பீர்கள். அதாவது உயரத்தில் சாலை. கீழே நூற்றுகணக்கில் மரங்கள் மற்றும் அழகிய பீச். இந்த காட்சி தான் எங்களை முட்டத்துக்கு வரவேற்றது. ஆரம்பமே அசத்தலப்பா என்று சொல்லியவாறு கடற்கரையை அடைந்தோம்.

****
இந்த வீடியோவில் சாலையில் (உயரத்தில்) இருந்து கீழே இருக்கும் பீச்சின் அழகை ரசியுங்கள்:






ஒரு பக்கம் முழுதும் கடல் அதன் நேர் எதிர்புறம் முழுதும் பாறை இடையில் கரை. இது தான் முட்டத்தின் மிகப்பெரும் அழகே. சான்சே இல்லை ! அசந்து போய் விட்டோம். இத்தனைக்கும் நாங்கள் சென்ற நேரம் உச்சி வெய்யில் மதியம் 12 முதல் 1 வரை அங்கிருந்தோம்.

கடற்கரையின் ஓரத்தில் பெரும் பாறைகள் உள்ளன. அங்கு இரும்பு கம்பி போடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெரும் அலைகள் அடித்து கொண்டே இருக்கின்றன. இந்த இடத்தில் சற்று உள்ளே போனால் அலையின் வேகத்தில் நம்மை உள்ளே இழுத்து போய் விடுமாம். இந்த இடத்திற்கு செல்லாதீர்கள் என கூட்டி வந்த டிரைவர் கூறியிருந்தார். நாங்களும் அந்த இடம் அருகே போகவே இல்லை.


டிரைவர் "செல்லாதீர்கள்" என எச்சரித்த இடம்

முட்டத்துக்கு செல்ல சரியான நேரம் காலை 6 அல்லது ஏழு தான். வெய்யில் இன்றி பீச் அழகை நன்கு ரசிக்கலாம். மாலை நேரம் சென்றால் ஆறு மணிக்குள் அங்கிருந்து கிளம்பி விடணும். அதன் பின் அப்படிப்பட்ட ஒதுக்கு புறத்தில் இருப்பது நல்லதல்ல.

மாலைக்கு பின் அதே இடம் குடிமகன்களின் கூடாரம் ஆகிவிடுகிறது. குடித்து விட்டு போகட்டும். அதில் கூட தப்பு இல்லை. ஆனால் எல்லா பாட்டில்களையும் அங்குள்ள பாறைகளில் போட்டு உடைத்து விட்டு போய் விடுகிறார்கள் என்பது பெரும் சோகம்.

மிக அழகிய கடற்கரை டூரிசம் எடுத்து கொண்டு நன்கு டெவலப் செய்யலாம். கேட்பாரற்று கிடப்பதை காண மிக வருத்தமாய் இருந்தது


மீண்டும் முட்டம் பீச்சுக்கு வருவோம். நாம் கடற்கரையில் கால் நனைப்போம் அல்லவா? அங்கேயே சிறு சிறு பாறைகள் உள்ளன. நாம் அதன் மேல் ஏறி நின்று கொண்டால் நம்மை தாண்டி அலை அடித்து போகிறது. நம்மை சுற்றிலும் அலை போகும் போது நாம் நனையாமல் மேலே நின்று பார்ப்பதும், அலை மெல்லியதாக நம் காலை வந்து தொடுவதும் புது வித அனுபவமாய் இருந்தது.

இந்த பீச்சில் உள்ள தண்ணீர் மிக தெளிவாக அதன் நிறமே பார்க்க ரொம்ப ஆசையாக இருந்தது. நீச்சல் குளத்தில் உள்ள நீரின் நிறத்தில் இங்கு தண்ணீர் இருந்தது. மண்ணும் கூட பிரவுன் அல்லது பிங்க் நிறத்தில் இருக்கிறது

**
இந்த வீடியோ பீச்சில் நின்றபடி எடுக்கப்பட்டது; படம் எடுப்பவரை சுற்றி செல்லும் சுழல் அலைகளை இதில் காணலாம்:




ஒவ்வொரு இடத்தையும் பார்த்து " கடலோர கவிதைகளில் சத்யராஜ் மீன் பிடித்து வந்து கொடுக்கும் இடம் இது தான்" ; " ரேகா குடை பிடித்தவாறு இங்கு தான் நடந்து வருவார்";  "அலைகள் ஓய்வதில்லை படத்தில் குட்டி பசங்களுடன் கார்த்திக்- ராதா ஒளிந்து விளையாடும் இடம் இது" - என சொல்லி கொண்டிருந்தோம்.




அங்கிருந்த ஒரு மணி நேரமும் நாங்கள் மூவரும் சிறு குழந்தைகள் போல் ஆகி விட்டோம். அந்த இடத்தில அநேகமாய் வேறு யாரும் இல்லை. அலைகளுக்கு நடுவே பாறையில் ஏறி நிற்பது; பீச்சுக்கு சற்று உள்ளே போவது; அலை துரத்தும் போது ஓடி பிடித்து விளையாடுவது என செம கலாட்டா. கிளம்பவே மனமின்றி தான் அங்கிருந்து கிளம்பினோம்

நாகர்கோவில் அல்லது கன்யாகுமரி சென்றால் முட்டத்துக்கு அவசியம் ஒரு விசிட் அடியுங்கள் ! நிச்சயம் எனக்கு நன்றி சொல்லுவீர்கள் !

33 comments:

  1. நல்ல கடற்கரை.....

    கன்யாகுமரி - நாகர்கோவில் சென்றிருந்தாலும் முட்டம் சென்றதில்லை மோகன்... பார்க்கலாம்....

    ReplyDelete
    Replies
    1. ஆம் வெங்கட்; அடுத்த முறை சென்று வாருங்கள்

      Delete
  2. அந்த வேன் போகும் புகைப்படம் நல்ல ஃபிரேம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரை அழகு

      Delete
  3. அழகான கடற்கரை.. நாகர்கோவிலுக்குப் பக்கத்துல சொத்தவிளை என்னும் இடத்தில் இருக்கும் கடற்கரையும் நல்லாருக்கும்ன்னு கேள்வி. அங்கே போனீங்களா?.. போகலைன்னா அடுத்த தடவை கண்டிப்பா போயிட்டு வாங்க.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி அமைதி சாரல். நாங்கள் போகலை அடுத்த முறை செல்ல முயல்கிறோம்

      Delete
    2. சொத்தவிளை ஒரு Ready Made கடற்கரை அக்கா . அதைவிட முட்டம், கடியப்பட்டினம், சின்னவிளை, கடற்கரைகள் நல்லாருக்கும். பிள்ளைதோப்பு கடற்கரை மிக சுத்தமான கடற்கரை. (அது பழைய French Colony என்பது குறிப்பிடத்தக்கது.) Long Shoot Panoramic View படங்களுக்கு தேங்காய் பட்டினம் மிக அழகானதாய் இருக்கும்.

      Delete
  4. மிக அழகான படங்கள். வீடியோ அற்புதமாக இருக்கு.அதிக கூட்டம் இல்லாமல் அமைதியாக இருப்பது நல்லயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ராம்வி நன்றி

      Delete
  5. புகைப்படங்கள் அருமை...

    ReplyDelete
  6. முகநூல் போட்டோ இங்கு எடுத்ததா...?

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்; வள்ளுவர் சிலை பின்புறம் இருக்குமாறு உள்ள முகநூல் புகைப்படம் கன்யாகுமரியில் எடுத்தது

      Delete
  7. அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  8. அழகிய கடற்கரை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மாதேவி நன்றி

      Delete
  9. அழகு. அந்த இரண்டாவது புகைப்படத்திலிருக்கும் இடத்தில்தான் ‘மலையோரம் வீசும் காற்று..’ (மோகன், நதியா) படமாக்கப்பட்டதென நினைக்கிறேன்:)!

    ReplyDelete
    Replies
    1. அட கலக்குறீங்க !

      Delete
  10. நல்ல அழகிய கடற்கரை, கட்டாயம் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம், நன்றி கும்மாச்சி

      Delete
  11. அற்புதமான பதிவு.
    முட்டம் கடற்கரையை நம் கண்முன் கொண்டு வந்து விட்டார் திரு மோகன் குமார். 2 காணொளிக்காட்சிகள், அற்புதம் பாருங்கள்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் திரு மோகன் குமார்.

    ReplyDelete
    Replies
    1. முகநூலில் பகிர்ந்தமைக்கு நன்றி சார்

      Delete
  12. பாராட்டத்தக்க வர்ணனை . செல்லும் ஆவலை தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி நிலாமதி

      Delete
  13. ஆஹா.... அழகோ அழகு!!!!

    முட்டம் என்றொரு புத்தகம் கூட வந்துருக்கு. எழுதியவர் பதிவர் நண்பர் சிறில் அலெக்ஸ்.

    நாங்க மாலை நேரம் போய் வந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. டீச்சர் ரொம்ப வருஷம் முன் சென்றீர்களோ? நாங்கள் மாலை தான் செல்ல சொல்லி கேட்டோம் . கார் & ஆட்டோ காரர்கள் மாலை நேரம் செல்லவே செல்லாதீர்கள்; இப்போ நிலைமை மோசம் என்றனர் !

      Delete
  14. நாங்க போனது 2009 ஃபிப்ரவரி. நாட்டை நாசமாக்க நாலு வருசம் போதாதா என்ன?

    ReplyDelete
    Replies
    1. நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. சிலர் மதுவுடன் சேர்த்து விஷத்தையும் அருந்தி தன்னுயிரையும் இழந்தது, காவல்துறையின் உயிரையும் எடுக்கிறார்கள். மேலும் பல இடங்களில் பாசி படர்ந்த வழுக்கும் பாறைகள் இருப்பதனால் கீழே விழுந்து உயிரிழப்பும் ஏற்படுகிறது. நிச்சயமாக எங்க ஊரு ECR போல் கிடையாதுங்க.

      Delete
  15. அருமையான இடமாக இருக்கும் போல் தெரிகிறது.... அடுத்த முறை செல்ல வேண்டும். தகவல்களுக்கு நன்றி.

    படங்களை பார்க்கும் போது அடி ஆத்தாடி! பாடல் பின்புலத்தில் ஒலிக்கிறது.

    ReplyDelete
  16. Every Sunday Eve, or Whenever I get frustrated I visit my Beach. Now past few years, I am Really Missing my Beach Mr. Mohan. Thanks for your wonderful Photos and videos.

    ReplyDelete
  17. //குறைந்த பட்சம் தமிழகத்தின் அழகிய கடற்கரை என்று தயக்கமின்றி சொல்லி விடலாம்.//
    That's Very True. One Time my boss asked me "What's Special at your Place ?" I replied "Sea Food Sir".
    I think, you have not tasted our Sea Food, Is not Mr.Mohan?

    ReplyDelete
  18. நிறைய முறை முட்டம் போக வேண்டுமென்று நினைத்ததுண்டு. சென்றதில்லை. தங்கள் பதிவு அங்கு செல்ல வேண்டுமென்ற ஆவலைத் தூண்டிவிட்டது. மேலும், சமீபத்தில் கொற்கை நாவல் வாசித்திருந்ததால் அந்த ஊருக்கும் செல்ல வேண்டுமென்று நினைத்துள்ளேன். படங்கள் அருமை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  19. MUTAM kadarkarai mattumalla, nam MANATHIN karaigalaiyum veru yaravadhu solli padhiyayavaiththaaldhan nam mandaikkul oru VILAKKU eriginradhu VELICHAMUM therigindradhu. enna pandradhu nama appadi marittom adhoda nam ADUTHTHA THALAIMURAIYAIYUM appadi vazha PAZHAKKAPPADUTHTHITTIRUKKOM. m.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...