Monday, March 18, 2013

தொல்லை காட்சி- நீயா நானா - பரதேசி படகுழு - ஷீக்கர் தவன்

டிவி யில் பார்த்த படம் - ஸ்ரீ ராம ராஜ்ஜியம் 

சன் டிவி மகாபாரதம் உள்ளிட்ட பக்தி சீரியல்கள் ஒளி பரப்பி தங்களுக்கும், நாத்திகத்துக்கும் சம்பந்தமில்லை என காட்டி கொள்கிறது. கலைஞர் டிவி மட்டும் தான் இன்னும் கொஞ்சம் பிலிம் காட்டி வருகிறது (ஆனாலும் சிவராத்திரி அன்று நள்ளிரவு ஸ்பெஷல் சினிமா போட கலைஞர் டிவி மறக்க வில்லை !)

சன் டிவி மூலம் தெலுகு டப்பிங் படமான ஸ்ரீ ராம ராஜ்ஜியம் இப்போது தான் பார்க்க முடிந்தது. படம் குறித்த செய்திகள் வெளியாகும் போதே சீதாவாக நயன் தாராவா என்ற எண்ணமே அருவருப்பை தந்தது ( அப்போது தான் பிரபு தேவா குடும்ப வாழ்க்கையில் விளையாடி இருந்தார்) அதுவே அப்போது பார்க்காமல் போக காரணம். ஆனால் இப்போது பார்க்கும்போது நயன் தாரா அந்த பாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளது புரிந்தது. 
ராமராக - பால கிருஷ்ணாவை தான் தாங்கி கொள்ள முடியலை. முகம், கழுத்து, உடல் எல்லாமே வயதானவர் என காட்டி கொடுத்து விடுகிறது. நல்லவேளை இவருக்கு அதிக போர்ஷன் இல்லை.


ராமர் இலங்கையில் சீதாவை தீக்குளிக்க சொன்னதே ஒரு தவறு என்றால் அதை விட பெரிய தவறையும் அவர் செய்துள்ளார். அயோத்தி வந்த பின் மக்கள் " அவள் ஒரு வருஷம் இன்னொருவனுடன் இருந்தவள் " என்று பேச, " இப்படி பேசப்படுபவள் ராணியாக இருந்தால், அது ராஜ வம்சத்துக்கு அவமானம் என தானாகவே முடிவெடுத்து - நிறை மாத கர்ப்பிணியான அவளை - அவளுக்கு சொல்லாமலே காட்டில் கொண்டு போய் விட வைக்கிறார். லவ, குச - குழந்தைகள் பிறந்து 10 வயது வரை வளர்ந்த பின்னும் ராமா - சீதா இணையவே இல்லை. இறுதியில் ராமனை காட்டில் ஒரு முறை பார்த்த பின் பூமி பிளந்து சீதா அதனுள் செல்வதாக கதை முடிகிறது.

ராமர் மீதிருக்கும் மரியாதையை அசைத்து பார்த்து விடுகிறது இப்படம் ! இன்னொரு முறை டிவி யில் போட்டால் அவசியம் காணுங்கள் !


கிரிக்கெட் கார்னர் - ஷீக்கர் தவன் 

சேவாக் மற்றும் கம்பீரை கட்டி கொண்டு அழுத இந்திய கிரிக்கெட் அணி கட்ட கடைசியில் பொறுமை இழந்து முரளி விஜய் மற்றும் ஷீக்கர் தவனுக்கு வாய்ப்புகள் தர, இருவருமே தங்களை நிரூபித்துள்ளனர்

Shikhar Dhawan reached his half-century off 50 deliveries

ஷீக்கர் தவன் தனது முதல் டெஸ்ட்டிலேயே ஆடிய ஆட்டம் அசத்தி விட்டது. விடுமுறை நாளில் டிவி முன் அமர்ந்து பார்த்த அனைத்து மக்களையும் பழைய ஷேவாக் ஆட்டம் போல அக மகிழ வைத்து விட்டார். முதல் நாள் அவ்வளவு அருமையாக ஆடியும் அடுத்த நாள் சடாரெனஅவுட் ஆனது ஏமாற்றம். ஆனால் கிரிக்கெட்டில் ஒரு Flow-வில் தான் அடிக்க முடியும். அன்றே இன்னொரு ஒரு மணி நேரம் இருந்தால் 250- ஐ தொட்டிருப்பார். இவர் நல்ல பீல்டரும் கூட;

T - 20 ல் டில்லி, மும்பை உள்ளிட்ட அணிகள் அவரை பந்தாடின. அதிலெல்லாம் 30 - 40 என அடிப்பாரே ஒழிய இவ்வளவு பெரிய திறமை ஒளிந்திருந்தது தெரியவே இல்லை. கம்பீர் மற்றும் சேவாக் இருக்கும் இந்திய அணியில் கடந்த பல வருடமாய் எந்த ஓபனிங் ஆட்டக்காரரும் உள்ளே நுழைய முடியாமல் இருந்ததும் ஒரு காரணம் !

ஆரம்பத்தில் அசத்தி விட்டு விரைவில் காணாமல் போன பிரவீன் ஆம்ரே, காம்ப்ளி, ஹிர்வானி போன்ற பட்டியலில் இணைய போகிறாரா அல்லது முதல் டெஸ்ட்டிலேயே அசத்தி பின் பல காலம் ஆடிய்த் டிராவிட், கங்குலி வரிசையில் சேர போகிறாரா என்று பார்க்கலாம் என என் நண்பர் அனந்து முகநூலில் சொன்னது தான் என் மனநிலையும் !

பரதேசி குழு - டிவியில் 

பொதுவாய் படத்தின் இயக்குனர்கள் தான் டிவி யில் வந்து படம் பற்றி பேசுவார்கள். ஆனால் பாலா தான் அதிகம் பேசாத ஆள் ஆயிற்றே? அதர்வா, தன்ஷிகா வேதிகா உள்ளிட்டோர் விஜய், கேப்டன், சன் என எல்லா சானல்களிலும் வந்து பரதேசி பற்றி பேசினர்.

ஒரு சில சம்பவங்கள் சுவையாய் இருந்தது. வேதிகா - அதர்வாவுக்கு சாப்பாடு ஊட்டுவது போல் ஒரு காட்சி வரும். படத்தில் வேதிகாவுக்கு கருப்பு மேக் அப் என்பதால், கைக்கும் கருப்பு கலர் அடிதிருப்பார்களாம். ஆனால் அதர்வா வாய்க்குள் சாப்பாடு கொடுத்து விட்டு கையை எடுத்தால் கருப்பு நிறம் மறைந்து வெள்ளை ஆகி விடுமாம். இதனால் ரீ டேக் மேல் ரீ டேக் எடுத்துள்ளனர்

இதில் அவ்வளவு கருப்பு மேக் அப்பும் அதர்வா வயிற்று க்குள் செல்ல, அவர் நிலையை நினைத்து பாருங்கள் !

3 மாதத்தில் படம் முழுதும் எடுத்து முடித்தது, அழுக்கு தண்ணீ ர் உள்ள குளத்தில் ஒரே ஷாட்டில் 500 பேர் தண்ணீர் குடித்தது என பல சுவாரஸ்ய விஷயங்கள் பேசினர்.

என்ன ஒன்று - ஒரு டிவி யில் பார்த்து விட்டு, இன்னொரு டிவி யில் பார்த்தால் டிட்டோவாக அங்கு என்ன பேசினாரோ அதையே தான் அனைவரும் ஒப்பித்தனர் ஏனுங்க கொஞ்சம் மாத்தி பேச கூடாதா?

வெறுப்பேற்றும் விளம்பரம் 

பாண்ட்ஸ் ட்ரீம் பிலவர் பவடருக்கு ஒரு விளம்பரம் போடுகிறார்கள்

ஒரு வீட்டின் தோட்டத்தில் இளம் பெண் பாஸ்கட்பால் பந்தை வைத்து பயிற்சி செய்கிறாள். ரோட்டில் போகும் ஒருவன் அவளை பார்த்து விட்டு " எப்படி ஆடுவது என சொல்லி தரட்டுமா? " என கேட்க, உடனே ஹீ ஹீ என சரி என்கிறாள். சொல்லி தருகிறேன் என கையில் ஆரம்பித்து முன்னே பின்னே எல்லாம் கட்டி பிடிக்கிறான். அவன் பாண்ட்ஸ் பவுடர் போட்டிருப்பதால் அவளும் சகஜமா எடுத்துக்குராளாம். இதுவே அசிங்கம்னா இதுக்கு மேலே அசிங்கம் கடைசி ஷட்டில் அவளுக்கு ஏற்கனவே பேஸ்கட் பால் தெரியும் என்பதும், அவன் சீண்டவே அப்படி நடித்தாள் என்பதும் !

ஹூம்.. ரோடில் போற ஒருத்தனை எந்த பெண் இப்படி அனுமதிப்பாளோ ? கொடுமை :(

தெலுகு - சொல்லுங்கண்ணே சொல்லுங்க 

சொல்லுங்கண்ணே சொல்லுங்க தெலுகிலும் வருகிறது.



அப்படியே அதே செட்டிங்க்சை வைத்து ஜெமினி டிவி யில் எடுக்கிறார்கள். என்ன ஒன்று .. தமிழில் மழலை மாறாத சிறுவர், சிறுமியர்கள் தான் வருவர். அங்கு சற்று வளர்ந்த ( ஐந்தாவது. ஆறாவது படிக்கும் ) சிறுவர்கள் கூட வருகிறார்கள்

இங்கு இமான் அண்ணாச்சி செய்கிற ரோலை செய்வது- பாடகர் மனோ. இமான் அளவு காமெடி சென்ஸ் அவருக்கு இல்லை. அது மட்டுமல்ல, குழந்தைகளை பேச விடாமல், இவரே அதிகம் பேசி அறுக்கிறார். யாராவது அவருக்கு சரியான பீட்பேக் தந்து சற்று குறைவாய் பேச சொல்லலாம் !

நீயா நானா - முன்னேறிய Vs வீழ்ந்த மக்கள்

கஷ்டப்பட்டு முன்னேறிய மக்கள் ஒருபுறமும், நன்றாக இருந்து நொடித்து போனோர் மறுபுறமும் அமர்ந்து பேசிய நீயா நானா சுவாரஸ்யம் மற்றும் நெகிழ்ச்சி.

குறிப்பாக - இன்றைக்கு நன்றாக இருக்கும் மக்கள் ஒவ்வொருவரும் - எதோ ஒரு பொழுதில் சாப்பாட்டுக்கு வழியின்றி இருந்ததையும், யாரோ சிலரால் சில பொழுது பெரும் அவமானப்பட்டதையும் பகிர்ந்தனர். இன்னொரு பக்கம் வீழ்ந்த மக்கள் தாங்கள் முன்பு ராஜா மாதிரி எப்படி இருந்தோம் - அதிலிருந்து எப்படி வீழ்ந்தோம் என விரிவாக பேசினர். வீழ்ந்தவர்களில் எப்படி இத்தனை பேரை identify செய்து அரங்கிற்கு கொண்டு வந்தனரோ தெரிய வில்லை.. ஆச்சரியம் !

புகழேந்தி என்ற நிதிநிலை ஆலோசகர் ஸ்பெஷல் கெஸ்ட் ஆக வந்திருந்தார் " பணம் சம்பாதிப்பது பெரிதில்லை; அதை சரியே முதலீடு செய்யணும். தன்னிடம் இருப்பதில் பாதி பணத்தில் தான் ரிஸ்க் எடுக்கணும். பலரும் முழு பணமும் போட்டு ரிஸ்க் எடுக்கிறார்கள். நொடித்து போக காரணம் அது தான்" என்றார்

" பணக்காரனாக இருந்தால் கூட ஹெல்த் இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ், வியாபாரத்துக்கான இன்சூரன்ஸ் அவசியம் " என்றும் "வியாபாரம் நல்லா போகிறதோ இல்லையோ, அதனால் பெரிதும் பாதிப்படையாமல் தன் வசதிகளையும் ஸ்டேட்டசையும் எப்போதும் இழக்காமல் இருப்பவன் - அப்படி திட்டமிடுபவன் மட்டுமே பணக்காரன் " என்றார்.

நிகழ்ச்சி மிக நன்றாக சென்றாலும் ஏனோ டபக்கென்று ஒரு நிறைவு இல்லாமல் முடிந்த மாதிரி ஒரு பீலிங். இருப்பினும் சமீபத்திய நீயா நானாக்களில் இது ஒரு நல்ல நிகழ்ச்சி !

9 comments:

  1. ஷீக்கர் தவன் : தொடரட்டும் இந்த வெற்றி...

    புகழேந்தி அவர்கள் சரியாகத் தான் சொல்லி இருக்கிறார்...

    ReplyDelete
  2. ராமஜெயம் பார்க்க நினைத்த படம்...
    நீயா நானா பார்ப்பது இல்லை.. முன்பு இருந்த ஈர்ப்பு அதன் மீது இல்லை சார்

    ReplyDelete
  3. ராமராக நயந்தாரா பக்கத்தில் அமர்ந்திருப்பவர்.. அசப்பில் என்.டி.ரமராவ் மாதிரியே இருக்கார். கர்ணன் படத்தில் கூட வருவார்.

    ReplyDelete
  4. பாண்ட்ஸ் விளம்பரம் பார்த்து நானும் தலையில் அடித்துக்கொண்டேன்.இதேதான் After shave lotion விளம்பரங்களும்...

    ReplyDelete
  5. //நிகழ்ச்சி மிக நன்றாக சென்றாலும் ஏனோ டபக்கென்று ஒரு நிறைவு இல்லாமல் முடிந்த மாதிரி ஒரு பீலிங். இருப்பினும் சமீபத்திய நீயா நானாக்களில் இது ஒரு நல்ல நிகழ்ச்சி !//

    நிச்சயமாக நானும் எழுதவேண்டும் என்று நினைத்தேன் . ரெம்ப நாளைக்கு அப்புறம் ஒரு உருப்படியான எபிசோடு . சுரேஷ் பேசுனத பத்தி ஒண்ணுமே சொல்லலையே . அட்டகாசமா பேசுனாரு .

    ReplyDelete
  6. ஷிகார் தவான் அறிமுக ஆட்டத்தில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசமாக்கியுள்ளார்.இரட்டைச்சதம் அடிக்க முடியாமல் போனமை துரதிஷ்டமே

    ReplyDelete
  7. வரவர இந்த விளம்பரங்கள் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கின்றன. ஷிகார் தவான் திறமையை நிருபித்துள்ளார். நீண்ட நாள் நீடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையும்! இரட்டை சதம் அடிக்காததும் எனக்கு குறை! ராமராஜ்யம் ஒரு சில காட்சிகள் மட்டுமே பார்த்தேன்! நயன் நன்றாகத்தான் நடித்துள்ளார்! டப்பிங் குரல்தான் வெறுப்பேற்றியது! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  8. இந்த வாரம்தான் குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சியை இந்த வாரம்தான் முழுசா பார்த்தேன். நல்ல நிகழ்ச்சிதான், ஆனா, கொஞ்சம் பர்சனல் கேள்விகளை தவிர்க்கலாம்..., உங்க வீட்டுல யாரு சமைப்பாங்க? அம்மாக்கு கோவம் வந்தால்? போன்ற கேளிவிகளை தவிர்த்து கேட்கலம்.

    ReplyDelete
  9. ஸ்ரீ ராம ராஜ்ஜியம் பார்த்தேன். நீங்கள் சொன்னது போல பால கிருஷ்ணா தோற்றம் உறுத்தத்தான் செய்தது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...