கேரளாவில் - படகு வீட்டில் பயணிக்கணும் என்று ஒரு சில ஆண்டுகளாகவே யோசித்தும், பேசியும் வந்தோம். சென்ற வருடம் "குளு,மணாலி " தேர்வு செய்த அதே நபர் தான் - இம்முறை கேரள படகு வீட்டுக்கு தான் போகணும் என முடிவு செய்ததும் ! அது - எனது பெண் !
முதலில் சென்னையில் உள்ள கேரள டூரிசம் அலுவலகத்தில் பேசிவிட்டு ரயில் டிக்கெட் புக் செய்தேன். நண்பன் மணியிடம் சொன்னபின் " நானும் வருகிறேன் " என்றதோடு, அவரது நண்பர்கள் இருவரும் அடுத்தடுத்து இணைந்தனர்

படகு வீட்டுக்கு இப்படி நண்பர்கள் குடும்பங்களோடு சேர்ந்து செல்வது தான் - பசங்க விளையாட ஜாலி என்பதோடு - செலவாகும் பணமும் கூட அப்போது தான் கணிசமாக குறையும் !
ஆலப்புழா மற்றும் குமரக்கோம் - இவை இரண்டும் பேக் வாட்டர் மற்றும் படகு சவாரிக்கு மிக புகழ் பெற்றது. இரு இடங்களில் இருந்தும் இரவு நேர படகு சவாரி உண்டு எனினும்- ஆலப்புழா தான் இப்படி ஒரு முழு நாள் சவாரி செல்ல சிறந்தது -
ஆலப்புழாவில் 2000க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இதனால் சவாரிக்கான செலவு கணிசமாக குறைவு; குமரக்கோமில் 50க்கும் குறைவான படகுகள் தான் உள்ளன. வெளிநாட்டவர் மற்றும் அதிகம் விபரம் தெரியாதோர் தான் அங்கிருந்து இரவு நேர படகு சவாரி செய்கின்றனர். மேலும் ஆலப்புழா படகு சவாரியில் நீங்கள் - நடுவில் காணும் தண்ணீரை தவிர - இரு புற கரைகளிலும் வீடுகள் மற்றும் மனிதர்களை காணலாம்; குமரக்கோமில் மிக அதிகம் நீரை மட்டுமே காண முடியும் ! கரைகளில் வீடுகள் குறைவு
சென்னையிலிருந்து தினம் இரவு 8.45 க்கு ஆலப்புழாவிற்கு நேராக ஒரு ரயில் கிளம்புகிறது. அது காலை 10.45 அளவில் சென்று சேர்கிறது. ஆழப்புழாவில் இறங்கியபோது படகு இல்ல பயணத்தை ஆர்கனைஸ் செய்த நிறுவன நபர் நம்மை ரீசிவ் செய்ய வந்திருந்தார்.
அன்றைய நாள் முழுதும் படகில் தான் இருக்க போகிறோம் - என்பதால் அன்று வேன் தேவையில்லை என சொல்லி விட்டோம் (அன்றைக்கும் வேன் தேவையெனில் 1600 ரூபாய் சொல்லியிருந்தனர் ; ரயில் நிலையத்தில் இருந்து 2 ஆட்டோக்களில் - படகு துறையை அடைந்தோம் ஒரு ஆட்டோவிற்கு - ரூ. 100 மட்டுமே ஆனது; இதனால் சேவிங்க்ஸ் 1400 ரூபாய் )
படகு துறை அடைந்ததும் நாம் வந்து விட்ட தகவல் போனில் சொல்லி விட்டால், சற்று நேரத்தில் , கரைக்கு நமது படகு வந்து சேர்கிறது. அடுத்துடுத்து படகுகள் நிற்பதால் சில நேரம் மூன்றாவது படகாக நமது படகு நிற்க - நடுவில் இருக்கும் இரண்டு படகு உள்ளே ஏறி நமது படகை அடைய வேண்டியிருக்கும்.
படகு துறையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. மேலும் படகு வீடும் சுற்றி பார்க்கலாம்
படகில் ஏறியதும் நமது செருப்ப்களை கழட்டி கையில் எடுத்து கொள்ள சொல்கிறார்கள் ! (வீட்டுக்குள் - செருப்புடன் நடக்க மாட்டோம் அல்லவா? அப்படித்தான் !மேலும் அப்போது தான் சுத்தம் செய்த படகை - அழுக்காக்க அவர்கள் மனம் ஒப்புவதில்லை ). நமது லக்கேஜ்கள் அவர்கள் சுமந்து வர நாம் செருப்பு மட்டும் எடுத்தவாறு - படகின் உள்ளே வந்து சேருவோம்
காலை உணவை ரயிலில் முடித்து விட்டு படகை அடைந்து தான் அன்றைய தினத்தின் குளியலே - உடன் மதிய சாப்பாடு .
குளியல் - சாப்பாடு எல்லாம் முடித்து மதிய நேரம் - படகு மெதுவாக பயணக்கிறது அப்போது படகை ஓட்டிய டிரைவர் பகிர்ந்த சில தகவல்கள்: (அவரிடம் இதை தவிர - தனி பேட்டி இல்லை; பயம் வேண்டாம்)
* ஒரு படுக்கை அறை துவங்கி - ஆறு படுக்கை அறை வரை பல வித படகுககள் உண்டு. உங்களுடன் பயணிக்கும் நண்பர்கள் / உறவினர்கள் பொறுத்து எத்தனை படுக்கை அறை உள்ள படகு தேவை என முடிவு செய்யலாம்
* நாங்கள் சென்ற 4 படுக்கை அறை கொண்ட படகின் விலை ஒரு கோடி ரூபாய்; இது 5 வருடத்துக்கு முந்தைய விலை என்றும், இப்போது இன்னும் கூட அதிகமாய் இருக்கலாம் என்றும் சொன்னார். படகு உள்புறம் முழுதுமே மரத்தால் இழைத்து இழைத்து கட்டியுள்ளனர்; 1800 Sq feet - முழுதும் வுட்டன் தரை தளம்; படுக்கை அறை ; ஸ்டார் ஹோட்டலில் இருப்பது போல ஷவர்; ஏ சி - என லக்சரியாய் இருப்பதால் இவ்வளவு காஸ்ட்லி ஆகி றது
* ஒரே படுக்கை அறை கொண்ட படகு 20 லட்சம் போலிருக்க கூடும். (2 அல்லது 3 படுக்கை அறை - வரை - படகில் ஒரு தளம் தான் இருக்கும் ; நான்குக்கு மேல் எனில் - 2 தளம்- கீழே படுக்கை அறை ; மேலே சாப்பாட்டு அறை )
* ஆலப்புழாவில் முக்கிய தொழிலே இந்த படகு - தான் ; அதற்கடுத்து கயிறு தயாரிக்கும் தொழில்.
* படகில் குறைந்தது 3 பேர் பயணிப்பார்கள். சமைக்க, படகு ஓட்ட, உங்கள் அறையில் ஏ. சி ஓடலை ; தண்ணீர் வரலை என்றால் சரி பார்க்க - என அத்தனை வேலைகளும் அனைவருக்கும் தெரியும் (முதல் நாள் முழுக்க படகு ஓட்டிய நபர் இரவு தன் வீட்டுக்கு கிளம்பி விட்டார்; மறு நாள் படகு ஓட்டியது - சமையல் வேலை செய்தவர் தான்)
**********

பயணத்தின் ஒரு சிறு பகுதி இந்த வீடியோவில்
இந்த வீடுகளில் இருப்போருக்கென - தனியே பள்ளி- சர்ச் ஒன்று என ஒவ்வொன்றையும் ஆங்காங்கு பார்க்க வேடிக்கையாக உள்ளது (பள்ளியாகட்டும், சர்ச் ஆகட்டும் அருகில் வேறு பில்டிங் அநேகமாய் கிடையாது !)
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவை தேடி - சிம்பு செல்வாரே - அதே ஊர் தான் இது !
மக்கள் சென்று வர ஆங்காங்கு அரசு படகுகள் இயங்குகின்றன. கண்டக்டர் போல் ஒருவர் இருந்து கொண்டு டிக்கட் தருவதை காண முடிகிறது
தவிர சில மக்கள் தங்கள் வீடுகள் வெளியே தாங்கள் சென்ற வர படகும் வைத்துள்ளனர்
***

நடுவில் ஓரிரு இடத்தில் மீன் போன்றவை ஷாப்பிங் செய்ய நிறுத்துகிறார்கள். ஆறு மணியளவில் படகு நிறுத்தப்பட்டு விடுகிறது.
சுற்றிலும் வயல்வெளி இருக்க அங்கு பயன்படுத்தும் ஈ.பி கனக்ஷனில் இருந்து நமது படகுகளுக்கு - மின்சார இணைப்பு தருகிறார்கள். கூடவே கேபிள் கனக்ஷனும் ! (அதுவரை படகில் இருக்கும் ஜெனரேட்டரில் நமக்கு மின்சாரம் தரப்படும் )
மாலை நேரம் கிராமத்தில் இறங்கி சற்று சுற்றி வந்தோம். இரவு மிக அருமையான, மறக்க முடியாத சாப்பாடு ... அது பற்றியும், ஆலப்புழா செல்ல எப்படி புக் செய்வது, எவ்வளவு செலவாகும் நம்பிக்கைக்குரிய படகு ஹவுஸ் விபரங்கள் போன்றவை அடுத்த பகுதியில் வெளியாகும் !

வேம்பு நாடு என்ற சொல்லப்படும் இந்த ஏரியின் இரு கரையிலும் - சில நிமிடங்களுக்கு ஒரு முறை - ஆங்காங்கு வீடுகள் தென்படுகின்றன. மிக அரிதாக அடுத்துடுத்து வீடுகள் உள்ளன.
இந்த வீடுகளில் இருப்போருக்கென - தனியே பள்ளி- சர்ச் ஒன்று என ஒவ்வொன்றையும் ஆங்காங்கு பார்க்க வேடிக்கையாக உள்ளது (பள்ளியாகட்டும், சர்ச் ஆகட்டும் அருகில் வேறு பில்டிங் அநேகமாய் கிடையாது !)
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவை தேடி - சிம்பு செல்வாரே - அதே ஊர் தான் இது !
மக்கள் சென்று வர ஆங்காங்கு அரசு படகுகள் இயங்குகின்றன. கண்டக்டர் போல் ஒருவர் இருந்து கொண்டு டிக்கட் தருவதை காண முடிகிறது
தவிர சில மக்கள் தங்கள் வீடுகள் வெளியே தாங்கள் சென்ற வர படகும் வைத்துள்ளனர்
***
நடுவில் ஓரிரு இடத்தில் மீன் போன்றவை ஷாப்பிங் செய்ய நிறுத்துகிறார்கள். ஆறு மணியளவில் படகு நிறுத்தப்பட்டு விடுகிறது.
சுற்றிலும் வயல்வெளி இருக்க அங்கு பயன்படுத்தும் ஈ.பி கனக்ஷனில் இருந்து நமது படகுகளுக்கு - மின்சார இணைப்பு தருகிறார்கள். கூடவே கேபிள் கனக்ஷனும் ! (அதுவரை படகில் இருக்கும் ஜெனரேட்டரில் நமக்கு மின்சாரம் தரப்படும் )
மாலை நேரம் கிராமத்தில் இறங்கி சற்று சுற்றி வந்தோம். இரவு மிக அருமையான, மறக்க முடியாத சாப்பாடு ... அது பற்றியும், ஆலப்புழா செல்ல எப்படி புக் செய்வது, எவ்வளவு செலவாகும் நம்பிக்கைக்குரிய படகு ஹவுஸ் விபரங்கள் போன்றவை அடுத்த பகுதியில் வெளியாகும் !
அருமையான,பயணப்ப கிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteGood
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமை. தகவல்களுடன் நல்ல ஒப்பீடு. உண்மை. குமரகத்தில் எங்கு நோக்கினும் தண்ணீர்தான். ஆனால் கரையோர வீடுகள் அடுத்தடுத்து வரிசையில் இருந்தன. குமரகம் படங்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:). ஏரிக்கரைப் பூங்காற்றே.., இங்கே முதல் 7 மற்றும் 9,10,15: தண்ணி காட்டறேன்..; இங்கே படங்கள்: 1,4.
ReplyDeleteவிண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவை தேடி - சிம்பு செல்வாரே - அதே ஊர் தான் இது
ReplyDelete>>
மிக முக்கியமான பயணக்குறிப்பே இதுதான் சகோ!
நேரில் சென்றது போல திருப்தியாய் இருந்தது...
ReplyDeleteபசுமையை காண்பதில் அப்படியொரு சந்தோசம் உண்டாகிறது..
தொழிற்களம் வாசியுங்கள்
அருமையான தொகுப்பு .
ReplyDeleteரசித்தேன்.
காத்திருக்கிறேன்... அடுத்த பகுதிக்கு...
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeletethanks for info.
ReplyDeleteஜில்லென்ற பதிவு!
ReplyDeleteboss,
ReplyDeleteAthu vembunadu illai,vembanadu.
அப்போ ஞானும் என் திரிசாவைத் தேடி ஆலப்புழா போயிட வேண்டியது தான். அவ்வ்வ் !
ReplyDeleteநல்ல தகவல்கள்.... அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்.....
ReplyDeleteபடகு வீடு ஆசை இன்னும் மனசில் இருக்கு!
ReplyDeleteஎப்போகிடைக்குதோ கிடைக்கட்டுமுன்னு பூவாற்றில் ஒரு படாகு சவாரி மட்டும் போய் வந்தோம்.
இப்போ உங்க பதிவில் படகு வீடு பார்த்ததும் ஆசை மீண்டும் துளிர்விட்டுருக்கு!
பதிவும் படங்களும் அருமை! இனிய பாராட்டுகள்.
Very informative post sir..
ReplyDeleteuseful informtion
ReplyDeleteநல்லாருக்கு. சீக்கிரம் மற்ற விவரங்களை எழுதுங்கள். எப்படி புக் பண்ணினீர்கள், செலவு எல்லாவற்றையும். வெஜ். சாப்பாடு கிடைக்குமா போன்றவற்றையும்.
ReplyDeleteஅருமை,படகு எப்படி முன்பதிவு செய்வது ,எந்த நிறுவனம் ஆன்லைனில் பதிவிற்கு சிறந்தது?உணவு எப்படி?மேலதிக விபரங்களுக்கு பதிவை எதிர்பார்க்கிறோம்
ReplyDelete"ஆலப்புழா செல்ல எப்படி புக் செய்வது, எவ்வளவு செலவாகும் நம்பிக்கைக்குரிய படகு ஹவுஸ் விபரங்கள்"
ReplyDeleteSir can u please post this details ..please ...
நண்பா பதிவு வெளியாகி விட்டது; வாசிக்கவும்
Deletehttp://veeduthirumbal.blogspot.com/2016/05/faq.html