சொந்த கதை ஓரளவு இருந்தாலும், இனி நட்சத்திர பதிவர் ஆவோருக்கு உதவும் என்ற எண்ணத்தில் இந்த பதிவு...
எந்த ஒரு பெரிய விஷயம் தனி மனிதன் திட்டமிட்டாலும், அதை செயல் படுத்த ஒரு குழு நிச்சயம் தேவைப்படுகிறது . இந்த வார பதிவுகளுக்கு பின்னால் சிறு குழு உதவி உள்ளது. அவர்களை அறிய செய்யவும் நன்றி சொல்லவும் இது ஒரு வாய்ப்பு.
தமிழ் மணம், தனது நட்சத்திர பதிவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறது என அறியேன். ஆனால் நம் வாரம் துவங்க 15 நாட்கள் முன்பு ஒரு மெயில் அனுப்பி, நட்சத்திர பதிவராக இருக்க சம்மதமா என கேட்கின்றனர். பொதுவாய் இத்தகைய அரிய வாய்ப்புகள் வாழ்க்கையில் வந்தால், தவற விடுவதில்லை (தொலை காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டும் தற்போது "எஸ்" சொல்வது கொஞ்சம்; "நோ" சொல்வது நிறைய )
தமிழ் மணம் மெயில் வந்த அன்று எனக்கு போர்ட் மீட்டிங். மேலும் அடுத்த பத்து நாட்களுக்கு என்னுடன் டிப்பார்ட்மண்டில் இருக்கும் ஒரே நபரும் விடுப்பில் செல்கிறார். இதனால் அதிக வேலை என்பதோடு தினம் வீட்டுக்கு செல்லவும் தாமதமாகும். எனவே இரு நாள் யோசித்தேன். வாய்ப்பை தவற விட வேண்டாம் என்று இரு நாளுக்கு பின் சரி சொன்னேன்.
சரி சொன்ன அன்றிலிருந்தே என்னை பொறுத்த வரை நட்சத்திர வாரம் துவங்கி விட்டது. தினம் ஒவ்வொரு பதிவாக எழுத ஆரம்பித்தேன். சனி ஞாயிறில் இன்னும் சற்று அதிக பதிவுகள் எழுதப்பட்டன. நட்சத்திர வாரம் காதலர் தினத்தில் துவங்கி உலக கோப்பை துவங்கும் நேரத்தில் முடிவது தெரிந்தது. இரண்டுக்கும் சிறப்பு பதிவுகள் தேவை என புரிந்தது.
மேலும் நட்சத்திர வாரம் துவங்கும் திங்கள் கிழமைக்கு முன் நான்கு நாட்கள் (வியாழன் முதல் ஞாயிறு வரை ) அலுவல், பின் சொந்த வேலையாக ஊரில் இருக்க மாட்டேன்.இந்த நான்கு நாட்களும் இணையம் பக்கமே வர முடியாது. இது தெரிந்து அனைத்து பதிவுகளும் மிக முன்பே தயார் செய்யப்பட்டது.
ச்சும்மா ! உங்களை குஷிப்படுத்த
முதல் நாள் காதலர் தின சிறப்பு பதிவுக்கு பின்னூட்டங்கள் (வழக்கம் போல் வாழ்த்து சொல்லி) நிறைய வந்தது. மதியம் போட்ட பெண்கள் டயலாக்ஸ்க்கு அதிக பின்னூட்டங்கள் இல்லை. "சரி தினம் இரண்டு போடுவது தவறோ? ஏகப்பட்ட பதிவு எழுதுறான்" என மக்கள் வெறுக்கிறார்களோ என ஒரு எண்ணம். சரி இன்னொரு நாள் பார்க்கலாம் என நினைத்தேன். மறு நாள் பால குமாரன் பதிவுக்கு எதிர்பார்த்த படி பின்னூட்டங்கள் & ரெஸ்பான்ஸ் செம. பின்னூட்டங்கள் தவிர மெயில் & போனில் பதிவர் அல்லாத பழைய & புது நண்பர்கள் இந்த பதிவு பற்றி பேசினர். இதை விட ஆச்சரியம் இந்த ஒரு வாரத்தில் எழுதிய பதிவுகளில் மிக அதிக ஹிட்ஸ் வாங்கியது செவ்வாய் மதியம் வெளியிட்ட வேலை நீக்கம் என்கொயரி அனுபவம் பதிவு தான். இது ஓர் மீள் பதிவு!! தினம் ரெண்டு பதிவு போடலாமா, மீள் பதிவு போடலாமா என்ற ரெண்டு தயக்கங்களையும் வேலை நீக்கம் பதிவுக்கான வரவேற்பு உடைத்தது.
இந்த வாரத்தில் எனக்கு மிக பிடித்த பதிவுகள் அம்மா, சீனு சார் & பால குமாரன் சந்திப்பு ஆகியவை. நண்பர்கள் வரவேற்பு அதிகம் கிடைத்தது என்பதற்காக மட்டுமில்லாமல் "Straight from my heart " & மனதில் நீண்ட நாள் ஊறி கிடந்து பின் வெளி வந்ததாலும் பிடித்தவை.
பதிவில் மிக முக்கியமாய் கடைசி பகுதி அனைவரையும் கவரும் படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்ததும் இந்த வாரம் தான். அந்த கடைசி பாரா படிப்பவர்களை நெகிழ்த்துவதாகவோ, சிறு ஷாக் தருவதாகவோ, புன்னகை புரிய வைப்பதாகவோ இருத்தல் நலம் என உணர்ந்தேன்.
நண்பன் தேவா: கல்லூரியில் எனது ஜூனியர். சில பதிவுகளை இவனுக்கு அனுப்பி கருத்து கேட்டேன். வாசித்து விட்டு உடன் சில மாற்றங்கள் சொன்னான். அவன் சொன்ன மாற்றங்கள் அனைத்தும் நண்பர்களால் பின்னூட்டங்களில் பாராட்டப்பட்டன. தில்லியில் இருந்தாலும் அநேகமாய் இந்த ஒரு வாரம் தினம் ஒரு முறை பேசி கொண்டிருந்தான். அவனால் ஒரு குறிப்பிட்ட நாள் இணையம் பக்கம் வர முடியாமல் இருந்த போதும் எஸ். எம். எஸ் அனுப்பி இன்றைக்கு ரெஸ்பான்ஸ் எப்படி என்று கேட்டான். இது போன்ற ஆதரவும் எதிர் பார்ப்பும் எழுதும் யாருக்கும் பெரிய பலம்.
பதிவர் ராம லட்சுமி : மூத்த பதிவரான இவரிடம் பல ஆலோசனைகள் பெற்றேன். மேலும் இவர்தான், கூகிளில் ஒவ்வொரு பதிவுக்கும் எவ்வளவு ஹிட்ஸ் என தெரிவதை பார்க்க சொல்லி தந்தார் (இந்த வாரம் தான் இது தெரிந்தது; இன்னும் தெரியாமல் இருப்போருக்கு: நமது டேஷ் போர்டில் நியூ போஸ்ட், எடிட் போஸ்ட் என்றெல்லாம் இருக்கும் அல்லவா? அதன் கடைசியில் Stats என்று இருக்கும் பாருங்கள். அதனை கிளிக் செய்தால் இந்த வாரம், மாதம், ஆல் டைம் பாபுலர் பதிவுகளை பார்க்கலாம்)
யூ டியூப் மூலம் வீடியோ பதிவேற்ற தெரிந்தாலும் அதை பதிவில் அப்லோட் செய்ய தெரியாமல் இருந்தேன். கேபிள் மூலம் இவ்வாரம் தான் கற்றேன் (ஆதி மனிதன் ஒரு முறை பின்னூட்டத்தில் சொன்னாலும் அப்போ புரியலை)
மாலை நேரத்து பதிவுகளை வெளியிட , தமிழ் மணம் & இன்ட்லியில் சேர்க்க உதவியது நண்பர் மாதவன்! (அலுவலகத்தில் தமிழ் மணம் & இன்ட்லி Access இல்லை). ஒவ்வொரு முறையும் மிக சரியாக நான் சொன்ன நேரத்தில் சேர்ப்பித்தார் தம்பி மாதவன். (ஒரு நாள் மட்டும் அந்த வேலையை ஈரோடு கதிர் செய்தார்!..கதிரோட சர்வீசுக்கு எல்லையே இல்லை போல )
ஆணும் பெண்ணும் கதை வெளியிடுவதற்கு முதல் நாள் தான் எழுத பட்டது. பதிவர் ரேகா ராகவன் உடனே வாசித்து விட்டு, சற்று ரீ- ரைட் செய்து தந்தார்.
பெற்றது:
புதிதாய் 13 தொடரும் நண்பர்கள்
வழக்கத்தை விட அதிகமான ஹிட்ஸ்கள் (தினம் ரெண்டு பதிவு எழுதியதாலும் இருக்கலாம்)
நெகிழ்வான பின்னூட்டங்கள்.
ஸ்டோர் செய்து என்றைக்கும் வாசிக்கும் படியான சில நேரடி மெயில்கள்
வழக்கத்தை விட அதிகமான ஹிட்ஸ்கள் (தினம் ரெண்டு பதிவு எழுதியதாலும் இருக்கலாம்)
நெகிழ்வான பின்னூட்டங்கள்.
ஸ்டோர் செய்து என்றைக்கும் வாசிக்கும் படியான சில நேரடி மெயில்கள்
பழைய நண்பர்கள் தொலை பேசி செய்து பேசிய நெகிழ்வான நிமிடங்கள்
சுஜாதாவிற்கு ஸ்ரீ ரங்கம் போல எனக்கு நீடாமங்கலம் என உணர்ந்தது (அவரோடு ஒப்பீடு ரொம்ப ஓவர் என எனக்கே தெரிகிறது. "சொந்த ஊர் கதைகள் " என்ற அளவில் மட்டும் இதை உணர்க. இன்னும் 10 சதவீதம் கூட எங்க ஊர் & வித்யாச மனிதர்கள் பற்றி எழுதலை. இனி எழுதணும் )
சுஜாதாவிற்கு ஸ்ரீ ரங்கம் போல எனக்கு நீடாமங்கலம் என உணர்ந்தது (அவரோடு ஒப்பீடு ரொம்ப ஓவர் என எனக்கே தெரிகிறது. "சொந்த ஊர் கதைகள் " என்ற அளவில் மட்டும் இதை உணர்க. இன்னும் 10 சதவீதம் கூட எங்க ஊர் & வித்யாச மனிதர்கள் பற்றி எழுதலை. இனி எழுதணும் )
இழந்தது:
10 நாளாக பத்திரிக்கை வாசிக்கவே இல்லை
தினம் கணினியில் அதிகம் இருந்து கண்கள் சிவந்து ஓய்வுக்கு கெஞ்சியது
தினம் கணினியில் அதிகம் இருந்து கண்கள் சிவந்து ஓய்வுக்கு கெஞ்சியது
ஒரு சில நாள் ஓரிரு மணி நேரம் தூக்கம் குறைந்தது (ஆம் ஒரு சில நாள் ஓரிரு மணி நேரம் மட்டுமே !! தூக்கத்தை பெரும்பாலும் தியாகம் செய்வதில்லை)
சில நாட்கள் யோகா & ஜிம்முக்கு ரெஸ்ட் குழந்தை பாடத்தில் சுத்தமாய் கவனம் செலுத்த வில்லை
முக்கியமாய்: ஹவுஸ் பாஸ் " ஏங்க..உங்க கூட பேசியே நாளாச்சு; ஒரு அப்பாயன்ட்மென்ட் குடுங்க" என்று கேட்கும் நிலை வந்ததால், கடைசி ரெண்டு நாட்கள் ஒரு பதிவோடு நிறுத்தி விட்டேன். வேறு இரு பதிவுகள் கிட்ட தட்ட தயாராய் இருந்தாலும், பாலிஷ் செய்கிறேன் என கணினியில் உட்கார்ந்து, வார கடைசியிலும் மனைவி & குழந்தை உடன் நேரம் செலவிடாமல் போக விரும்பலை.
நண்பர்கள் கடந்த ஒரு வார வழக்கப்படி தினம் இங்கு வந்து ஏமாறாதீர்கள். இனி முன்பு போல் அதிக பட்சம் வாரம் இரு பதிவுகள் மட்டுமே வரும்.
நண்பர்கள் கடந்த ஒரு வார வழக்கப்படி தினம் இங்கு வந்து ஏமாறாதீர்கள். இனி முன்பு போல் அதிக பட்சம் வாரம் இரு பதிவுகள் மட்டுமே வரும்.
உங்கள் அனைவரின் அன்பிற்கும், வாசிப்பிற்கும் நெகிழ்வான நன்றி.
மற்றொரு சிறு மகிழ்வான செய்தி: தமிழ் மணத்தின் இந்த வார சிறந்த பதிவர்களில் வீடு திரும்பலுக்கு நான்காம் இடம்! மகிழ்ச்சியாக உள்ளது.
மற்றொரு சிறு மகிழ்வான செய்தி: தமிழ் மணத்தின் இந்த வார சிறந்த பதிவர்களில் வீடு திரும்பலுக்கு நான்காம் இடம்! மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த ஒரு வாரத்தில் நீங்கள் ரசித்த பதிவு பற்றியும், ஒரு வாரமாய் இந்த ப்ளாக் வாசித்திருந்தால், பொதுவாய் எப்படி இருந்தது என்றும் ஓரிரு வரிகள் சொன்னால் ஒரு சிறு குழந்தையை மகிழ்வித்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் ! (யப்பா பின்னூட்டம் போடுங்க என்பதை எப்படி டீசன்ட்டா கேக்குறான் பாருங்க )
இல்லாமல் போகுமோ
சரித்திரத்தில் ஒரு சிற்றிடம்
எனக்கு?











