Tuesday, August 31, 2010

தேவகுமார் பதிவு-" நான் வயதுக்கு வந்தபோது அது வாலிபன்"

என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் தேவ குமார். தற்போது டில்லியில் வேலை பார்க்கிறார். தலை நகரில் இருந்தாலும் கிராமத்து நினைவுகள் இன்னும் ஈரமாய் அவருக்குள்...இதோ அவரின் மரம் பற்றிய ஓர் பதிவு..

****
நான் வயதுக்கு வந்தபோது அது வாலிபன்
(இது எங்கள் வீட்டில் இறந்து போன அரச மரத்துக்கு சமர்ப்பணம்)


"மரம் பார்க்க ஒரு ஜென்மம் போதாது என நண்பன் குமார்ஜி சொல்வான்" என ஆரம்பிக்கும் பா. ரா. வின் வலைமனையின் ஒரு பதிவு. எனக்கும் கூட அப்படித்தான். ஏனோ மரம் ரொம்ப பிடிக்கும் எனக்கு. நான் மரங்களோடு வளர்ந்தவன். எங்கள் வயல்களில் நிறைய மரங்கள் இருந்தன. மா, கொய்யா, தென்னை, பூவரசு, புங்கை, எட்டி, கூந்தல் பனை, ஈரபலா, நார்த்தங்காய் - இப்படி நிறைய மரங்கள். ஊர் திருவிழாவுக்கு எங்கள் தோட்டத்தில் இருந்துதான் கூந்தல் பனை தோரணத்துக்கு போகும். ஒரு மரத்தின் பெயரே எங்களுக்கு தெரியாது, அதை ஓட்டை மரம் என்று சொல்வோம். எங்கள் வீட்டின் எருமை மாட்டுக்கு கொம்பை இடிக்கும் பழக்கம் இருந்தது. அது எப்போதும் இந்த மரத்தில் தான் இடிக்கும், அதனால் ஓட்டை விழுந்தது. ஒரு நாள் அந்த ஓட்டையில் மாட்டின் கொம்பு மாட்டி லேசாய் ஒடிந்து போக, எல்லோரும் மரம் மாட்டை பழி வாங்கியதாய் சொன்னோம். அது தவறு. மரமும் நிலம் மாதிரி தான். அகழ்வாரை தாங்கும்...பழி வாங்காது...

எங்கள் வீட்டுக்கு முன் இருந்த அரச மரம்தான் எனக்கு மிகவும் பிடித்த மரம். நாலுபுறமும் கிளை பரப்பி, நான்கு ஐந்து ஆட்கள் கட்டி பிடிக்கும் அளவுக்கு பருமனான அந்த மரத்தை பார்த்து கொண்டே இருக்கலாம். நிமிடத்துக்கு ஒரு முறை உரு மாறும் மேகம் மாதிரி, அந்த மரமும் உரு மாறும், காற்று - அதில் ஊஞ்சலாடும் தாவணி பெண். அந்த மரம் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு குரலில் பேசும், பழம் நிறைந்த நாட்களில் (பகலில்) குருவிகள் குரலில் (இரவில்) வொவாள்கள் குரலில், கோடை காலத்தில் சருகுகள் குரலில், ஆடி மாதத்தில் காற்றின் குரலில், இப்படி அந்த மரம் ஒரு பல குரல் மன்னன்.

அந்த மரத்துக்கு என்ன வயது என்றே யாருக்கும் தெரியாது. நான் வயசுக்கு வந்தப்பவே அது வாலிபனா இருந்தது என சொன்ன அப்பாயி, சமீபத்தில் இறந்தபோது அவர்களுக்கு 90 வயது. அந்த மரம் 100 வருஷத்துக்கு மேல் வாழ்ந்து இருக்கும் எனவே தோன்றுகிறது. அந்த மரதுக்கு வயசாச்சி என சொல்லி என் அப்பா அந்த மரத்தை வெட்டிவிட (வீட்டின் மேல் விழுந்து விடும் பயத்தில்), இப்போது எனக்கு பார்க்கிற எல்லா அரச மரமும் என் வீட்டையும் தோட்டத்தையும் நினைவுபடுத்துகின்றன.

டெல்லியில் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவில் நான் வாக்கிங் போகும்போது எப்போதும் ஒரு பெரியவர் அந்த சின்ன அரச மரத்திடம் நெடுநேரம் நின்றுகொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார். சில நாட்களுக்கு முன்னால் அவர் அந்த மரத்திடம் ஹிந்தியில் - சொல்லு, நான் அப்படிப்பட்டவனா, நான் உன் வீட்டுகாரிய அப்படி சொல்லி இருப்பேனா, உனக்கு என்னபத்தி தெரியும்தானே - கைகூப்பி பேசி கொண்டு இருந்ததை பார்க்கையில், பிள்ளைகளை வளர்க்கும் அதே ஆர்வத்தோடு ஒரு மரத்தையும் வளர்க்க வேண்டும்போல் இருக்கிறது. நாம் வயதாகி பேசுவதை காது கொடுத்து கேட்க ஒரு பிள்ளை வேண்டாமா!

***
(இந்த பதிவை எழுதியவர்: தேவகுமார் )

Thursday, August 12, 2010

3 கவிதைகள் & யாருக்கோ இன்னிக்கு பிறந்த நாளாம்

சூடுகண்ட பூனை

பாலைக் கண்டு

சிறிது காலம் மிரளும்

என்றாலும்

சுவையும் சுகமும்

மறந்து போகுமா

பூனைக்கு??

********

இரக்க பட முடிய வில்லை

சோம்பேறிகள் மீது...

********

நீயும் நானும்

முயங்கிய கட்டிலில்

விரவி கிடக்கும்

குழந்தையின் பொம்மைகள்....


***
பின் குறிப்பு: இன்னிக்கு பிரபல(மாகாத) ஒரு பதிவருக்கு பிறந்த நாளாம்.. அவர் ப்ளாகின் முதல் எழுத்து & கடைசி எழுத்து சேர்த்தால் " வீல்" என்று வருமாம். அந்த பதிவரின் முதல் எழுத்து & கடைசி எழுத்து சேர்த்தால் "மோர்" என்று வருமாம்..(என்னா வெளம்பரம்!!)

உங்கள் மன பூர்வமான ஆசிகளை அந்த ச்ச்ச்சின்ன பதிவருக்கு வழங்குங்கள்.

Monday, August 9, 2010

பதிவுலகமும் நானும் தொடர் பதிவு

இந்த பதிவை எழுத விதூஷ் மற்றும் மாதவன் அழைத்திருந்தனர். மிக்க நன்றி இருவருக்கும் !!

வேலை பளு மற்றும் உடல் நலம் காரணமாய் (தற்போது முழுவதும் நலம்; நண்பர்கள் அன்பிற்கு நன்றி ) தாமதமாய் எழுதுகிறேன்...
*****
1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மோகன் குமார்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆம். இயற் பெயரே மோகன் குமார் தான். வீடு திரும்பல் மோகன் குமார் என ப்ளாகுகளில் பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள். ப்ளாக் பெயருடன் சேர்ந்து அறிய படுவது மகிழ்வாய் தான் உள்ளது.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

வலை பதிவுகளை எதேச்சையாக அறிந்து கொண்டு நெடு நாளாக வாசித்து வந்தேன். பின் ஒரு நாள் ஏதேதோ க்ளிக் செய்து ப்ளாக் துவங்கும் இடம் வந்து விட்டது. ப்ளாகிற்கு பெயர் கேட்க, நான் தந்த பெயர்கள் அனைத்தும் ஏற்கனவே உள்ளதாக அறிந்தேன். பின் மறைந்த நண்பன் லட்சுமணனின் கவிதை புத்தக தலைப்பான வீடு திரும்பல் என்ற பெயர் தர, அது இருப்பது தெரிந்து அதே பெயர் வைத்தேன்.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

துவக்கத்தில் திரட்டிகள் இருப்பது தெரியாது. பதிவு எழுதி விட்டு என் நண்பர்களுக்கு மெயில் அனுப்புவேன். அவர்கள் வாசித்து விட்டு மெயில் அல்லது தொலை பேசியில் கருத்து சொல்லி கொண்டிருந்தனர். திரு. ரேகா ராகவன் மூலம் தான் திரட்டிகள் தெரிந்து தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் இணைத்தேன். அதன் பின் தான் நிறைய பேர் வாசிக்கவும் பின்னூட்டம் இடவும் ஆரம்பித்தனர். ரேகா ராகவன் பின் ப்ளாக் வடிவமைப்பு குறித்து பல உபயோகமான தகவல் தந்தார். ரேகா ராகவன் சாருக்கு இந்த நேரத்தில் மீண்டும் நன்றி சொல்ல வேண்டும் !! நன்றி சார் !! போலவே நண்பர் பெஸ்கி (ஏதோ டாட் காம்) இந்த வலை பூ வடிவமைப்பிற்கு பெரிதும் உதவினார்.

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஓரளவிற்கு பகிர்வது உண்டு. சில நேரங்களில் நமது வடிகாலாக, ஆறுதலாக சில விஷயங்களை பகிர்வது உள்ளது. ஆனால் நம்மை பற்றி முழுவதுமாய் பகிர கூடாது என நினைக்கிறேன். ஒரு அலுவலகமாகட்டும், ஒரு தெருவாகட்டும், சமூகமாகட்டும் ..அதில் 90 நல்லவர்கள் இருந்தால், பத்து மோசமானவர்கள் இருப்பார்கள். அதே போல் தான் பதிவுலகமும். அந்த பத்து பேர் நம்மை குறித்த தனிப்பட்ட தகவல்களை மோசமாக உபயோகம் செய்ய வாய்ப்பு உண்டு. எனவே சற்று எச்சரிக்கை உணர்வு அவசியமே.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பதிவராய் அல்லது எழுத்தாளராய் இருந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியாது. அப்படி சம்பாதித்தவர்கள் மிக குறைவே. பொழுது போக்கிற்காக தான் எழுதுகிறேன். அளவோடு இருந்தால் இது ஒரு நல்ல பொழுது போக்கு என நிச்சயம் சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் recognition-க்காக ஏங்குகிறான். அந்த recognition ப்ளாகில் கிடைக்க பெறுகிறது. இது மனிதனின் ஈகோவை ஓரளவு திருப்தி படுத்துகிறது.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

இரண்டு வலை பதிவு. வீடு திரும்பல் தவிர ஆரம்பத்தில் ஆங்கிலத்திலும் ஒரு வலை பதிவு துவங்கி எழுதி வந்தேன். தற்சமயம் அதில் அதிகம் எழுதுவதில்லை. தமிழில் எழுதுகிற சுகம் தனி. நாம் தாய் மொழியில் தான் சிந்திக்கிறோம். அவரவருக்கும் தாய் மொழியில் எழுதுவது இயல்பாய் இருக்கும்.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம் என்ற பகுதியை சாய்ஸில் விடுகிறேன். பொறாமை.... தொடர்ந்து எழுதும், நிறைய பின்னூட்டம் வாங்கும் சிலர் மீது லேசாக வரும். :))

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

அலுவலகத்தில் உடன் பணி புரிந்த பிரகாஷ் என்ற நண்பர் " உங்க ப்ளாக் விகடன் படிக்கிற மாதிரி இருக்கு. பல விஷயம் கலந்து எழுதுறீங்க" என்றார். ரொம்ப மகிழ்வாய் இருந்தது. துவக்கம் முதலே வாசித்து வரும் என் நண்பன் தேவ குமார் தில்லியில் இருந்தாலும் போன் செய்து பாராட்டுவான். விவாதிப்பான்.

மேலும் தொடர்ந்து ஊக்கம் தரும் அமைதி அப்பா, ரகு, வெங்கட் நாக ராஜ், சித்ரா, ராம லக்ஷ்மி, ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி ஐயா, மாதவன், பெயர் சொல்ல, ஷங்கர், ரேகா ராகவன் போன்ற அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

10 . கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் பற்றி கூறுங்கள்

பதிவுகள் மூலம் ஏற்கனவே நிறைய தெரியும். இனியும் அறிவீர்கள்...

இதனை தொடர அழைக்க விரும்புவது:


அமைதி அப்பா

வெற்றி

ஜெட் லி

அதி பிரதாபன்

Tuesday, August 3, 2010

வானவில் - எந்திரனும் களவானியும்

எக்கச்சக்க வேலை பளு. அஞ்சு நாளா உடம்பு சரியில்லை. ஜூரம் அதிகமா இருந்தும் தொடர்ந்து அலுவலகம் வர வேண்டிய சூழல். எனவே தான் கொஞ்ச நாளாய் பதிவுகள் எழுதலை. வந்து பார்த்து ஏமாந்த நண்பர்கள் மன்னிக்கவும்.


***************

ஜீஜிக்ஸ் : ஒரு அறிமுகம்

ஜீஜிக்ஸ் என்ற புதிய திரட்டி வாரா வாரம் சில ப்ளாகர்களை கௌரவிக்கிறது. இவர்களிடமிருந்து

எனக்கு சமீபத்தில் வந்த ஒரு இ மெயிலை தங்களுடன் பகிர்கிறேன்:

சென்ற வார சிறந்த எழுத்தாளராக தேர்வு பெற்றிருக்கும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் !!.

உங்கள் படைப்புகளை சமூகம் சார்ந்த வளர்ச்சிக்கு ஆதரவாக எழுதுங்கள்.

ஆக்ரோஷமாய் வளர்வோம் !!

நன்றி

ஜீஜிக்ஸ் குழு

http://www.jeejix.com/Post/Show/321/சென்ற%20வார%20சிறந்த%20எழுத்தாளர்கள்
ம்ம்.. கொஞ்சம் சந்தோஷமா தான் இருக்கு

நமது ப்ளாகை பார்வையிட்டோர் எண்ணிக்கை ( Page Hits ) 50,000 ஐ கடந்துள்ளது. இது இன்னொரு சிறு மகிழ்ச்சி..

****

களவாணி: சிறு பார்வை

களவாணி பார்த்தோம். பள்ளி பெண் காதலிப்பதாக, திருமணம் செய்வதாக காட்டும் தவறான கதை. இத்தகைய அலைகள் ஓய்வதில்லை டைப் பள்ளி காதல்கள் எனக்கு பிடிப்பதில்லை. இத்தகைய படங்கள் பார்த்து குறைந்தது பத்து பேராவது கேட்டு போவார்கள் என்பது நிச்சயம். பள்ளி பருவத்தில் வருவது calf love தான். அது பெரும்பாலும் நிலைப்பதில்லை.
நிற்க. அதை தவிர்த்து களவாணி படம் செம காமெடி. கஞ்சா கருப்பு பகுதிகள் விழுந்து விழுந்து சிரித்தேன். போலவே ஹீரோ மாட்டு வண்டி ஓட்ட அப்போது ஹீரோயின் இடம் இருந்து போன் வந்ததும் அப்படியே விட்டு விட்டு இறங்கி பேச ஓடி விடுவார். மாடுகள் பக்கத்து வயலை மேய போயிடும். வண்டி பின்னால் இருக்கும் பெண்கள் பேசும் பேச்சு மற்றும் ரியாக்ஷன் செம சிரிப்பு. மறுபடி போன் வர அந்த ரெண்டு பெண்களும் மறுபடி குசுகுசுப்பாங்க.. ரசிச்சு சிரிக்கிற மாதிரி இருக்கு பல காமெடி காட்சிகள் .

படத்தில் எங்க தஞ்சையை அழகா பசுமையா பார்க்க சந்தோஷமா இருந்தது.

****

கிரிக்கட் கார்னர்

சச்சின் 48 ஆவது செஞ்சுரி அடித்தது அசத்தல். மிக அதிக டெஸ்ட் ஆடிய பெருமையும் தலைக்கு கிடைத்துள்ளது. ஆனால் ஒன் டேயில் இவரை விட ஜெய சூரியா சில மேட்சுகள் அதிகம் ஆடியுள்ளாராம்! விரைவில் அதையும் தாண்டுவார்.

சச்சின் , ரைனா ஆட்டம் தவிர இந்திய அணியில் சொல்லிக்கிற மாதிரி வேற ஒன்னும் இல்லை. குறிப்பா பவுலிங் .. சுத்த மோசம்..

எந்திரன் : கிளிமான்ஜோரோ


எந்திரன் பாடல்களில் தற்போதைக்கு பிடித்தது " கிளிமான்ஜோரோ " தான். சின்மயிக்காகவே பிடிக்குமுங்க...அதோட இந்த பாட்டின் பீட் அட்டகாசம்.

ரசித்த SMS:

It is not what we have makes a difference, but how we use what we have makes the difference.
Related Posts Plugin for WordPress, Blogger...