பொள்ளாச்சி- டாப்ஸ்லிப்- பரம்பிக்குளம்- ஆழியாறு - 3 நாள் பயணமாக அண்மையில் சென்று வந்தோம். மிக இனிமையான இப்பயணத்தில் இருந்து சில புகைப்படங்கள் மட்டும் தற்போது... பயணம் பற்றிய குறிப்புகள் 3-4 பகுதிகளாக விரைவில் வெளியாகும்..
டாப் ஸ்லிப்பில் நாங்கள் தங்கிய அறைக்கு வெளியே மெல்லிய மழையில் ..
நாங்கள் சென்ற காரின் பக்கவாட்டில் மிக அருகே காட்டெருமை கூட்டம்
காட்டெருமையுடன் காரில் இருந்த படி மகளின் செல்பி
பரம்பிக்குளத்தில் அற்புதமான ட்ரெக்கிங்கின் போது
I am a strict father.. you know !!!
இவர் குளிக்க ஆரம்பிச்சா குளிச்சிக்கிட்டே இருப்பாரே.. நிறுத்தவே மாட்டாரே
சூர்யா என்கிற யானை மேல் ஒரு இனிய சவாரி
சூர்யாவோடு விளையாடும் மனைவி-மகள்
டாப் ஸ்லிப்பில் ட்ரைபல் (Tribal) களுக்கான சிறப்பு பள்ளியில் மாணவர்களுடன் ஒரு சிறு கலந்துரையாடல்
டாப் ஸ்லிப்பில் அறைக்கு அருகே உலா வந்த மான் கூட்டம்
ரெண்டரை வயது குட்டி யானையை அது இருக்கும் வீட்டினுள் சென்று பார்த்த அற்புத நிமிடங்கள்
சண்டை போடுற டச் விட்டு போயிட கூடாது என்கிற நல்லெண்ணத்தில்...
பரம்பிக்குளம் அணை
ஏராளமான கண் கொள்ளா காட்சிகளில் மாதிரிக்கு ஒன்று
465 வயது மரத்துடன் நாங்கள்.. நாங்கள் பிடிப்பது போல் இன்னும் மூவர் கை கோர்த்தால் மட்டுமே மரம் முழுதும் கை கோர்க்க முடியும் !!
அண்மையில் நண்பர்கள் பாலா- டெய்சி குடும்பத்துடன் கேரளாவில் இருக்கும் பூவாருக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டோம். அப்பயணம் பற்றிய சிறு தொகுப்பு இது:
பூவார் - கேரளா- தமிழக பார்டரில் இருக்கும் ஒரு பேக்வாடர்ஸ் இடம்...இங்கிருந்து சில கிலோ மீட்டர் தாண்டினால் தமிழகமும், பின் நாகர்கோவிலும் வந்து விடுகிறது.. நாங்கள் 3 நாள் பூவார் மகேந்திரா ரிசார்ட்டில் தங்கினோம். இதில் ஒரு நாள் பேக்வாட்டர்ஸ் பயணம்.. மற்ற படி ரிசார்ட்டில் இருக்கும் விளையாட்டுகள், மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விடல்.. (ரிசார்ட் காரர்கள் மீன் பிடிக்கும் வரை பேசாதிருந்து விட்டு பிடித்த பின் வந்து புலம்பியதால் - மீன்களை ஆற்றில் விட வேண்டியதானது) என மிக ரிலாக்ஸ்டு ஆக இருந்தோம்.
இறுதி நாள் ரூம் காலி செய்துவிட்டு - தொட்டி பாலம், திப்பரப்பு அருவி, பத்மநாபபுரம் பேலஸ் மற்றும் முட்டம் பீச் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தோம்...இந்த இடங்கள் அனைத்தும் பூவாருக்கு அருகில் தான் உள்ளது
பயணத்தில் சில இனிய விஷயங்கள்:
பேக்வாட்டர்ஸ் பயணம்
மகேந்திரா ரிசார்ட்டில் முதல் முறை தங்கிய அனுபவம்; இந்த ரிசார்ட் பற்றி நன்கு அறிய முடிந்தது ; அங்கு ஒவ்வொரு வேலையும் சாப்பிட்ட வகை வகையான உணவுகள்
திப்பரப்பு அருவி குளியல் (முதல் நாள் வரை அருவியில் யாரும் குளிக்க அனுமதியில்லை; நாங்கள் சென்ற அன்று ஊரில் திருவிழா என மக்களை குளிக்க அனுமதித்தனர்.. ஆனந்த குளியல்.. அனைவரும் என்ஜாய் செய்தோம் )
பத்மநாபபுரம் பேலஸ் அனைவரும் மிக ரசித்தனர்..
என நிறையவே இனிய நினைவுகள்.
நாங்கள் சென்று வந்து வாரங்கள் பல கடந்து விட்டதால் விரிவாக எழுத இயல வில்லை.. புகைப்படங்களும் அவை பற்றிய சிறு குறிப்பும் மட்டும் பகிர்கிறேன்
சென்னை டு திருவனந்த புரம் - விமானத்தில் பயணித்தோம்; திரும்பியதும் அவ்வாறே; ஒரு மாதம் முன்பு புக் செய்ததால் மிக குறைவான விலையில் டிக்கெட் போட முடிந்தது
நாங்கள் தங்கிய பூவார் மகேந்திரா ரிசார்ட்
மகேந்திரா ரிசார்ட்
மனைவி, மகள், நான் மூவருமே முதல் முறை பில்லியர்ட்ஸ் ஆட கற்று கொண்டோம்.. சுவாரஸ்யமான விளையாட்டு !!
பேக் வாட்டர்ஸ் படகு பயணம்
இப்படி அமர்ந்திருந்த பறவை..
போட்டோ எடுப்பது தெரிந்து - தண்ணீரில் நீந்தி எஸ்கேப் ஆனது
மிதக்கும் படகு உணவகங்கள்.. மீன் .... முக்கிய, ருசியான உணவு
பேக் வாட்டர்ஸ் படகு பயணத்தில் கேத்தலின்
ஏரிக்கு நடுவே அமைந்துள்ள மாதா சிலை
படகு பயணத்தில் வரும் பாலம் ஒன்று..
தொட்டி பாலம் அருகே - தோட்டம் ஒன்றில்
பிடி... பிடி.. மீன் பிடி
எனது மகள் சிநேகா, பாலா மகள் கேத்தலின் இருவருக்கும் சட்டம் படிக்கவே விருப்பம். பூவாரில் வாக்கிங் செல்லும் போது காவல் நிலையத்தை பார்த்து, உள்ளே செல்லவேண்டும் என்று கூறினர்.. சென்று காவலர்களிடம் சற்று பேசி விட்டு, நியாபகத்திற்கு எடுத்த போட்டோ.....
கிராமத்தில் மீன் வலை பின்னும் ஒரு குடும்பத்தாருடன் அளவளாவல்
திருநெல்வேலி அருகே ஒரு மிக பழமையான சர்ச் சென்ற போது எடுத்த புகைப்படம்
முட்டம் கடற்கரையில் ஒரு மாலை வேளை
பூவார் மிக ரிலாக்சட் ஆக 3 நாள் போல சென்று தங்க ஏற்ற இடம். திருவனந்த புரம் வரை ரயில் அல்லது விமானத்தில் சென்று பின் ஓரிரு மணி நேர கார் பயணத்தில் பூவார் அடையலாம்.
பூவாரில் நிறைய நல்ல ரிசார்ட்கள் உள்ளன. தண்ணீரில் மிதக்கும் ரிசார்ட் ஒன்று மிக பிரபலம். அண்மையில் எனது அலுவலக நண்பர்கள் சிலர் அங்கு சென்று தங்கி வந்தனர். பூவார் செல்லும்போது முடிந்தால் நாகர்கோவில் அருகே இருக்கும் பத்மநாபபுரம் பேலஸ், தொட்டி பாலம், திப்பரப்பு அருவி இவையும் சேர்த்து பார்க்க திட்டமிடுங்கள்...
ஆலப்புழா குறித்தான முந்தைய பதிவை அடுத்து - பல நண்பர்களும் எப்போது செல்லலாம்; எங்கு தங்கலாம் என பல கேள்விகளை மெயிலில் கேட்டனர்' ; எனவே இப்பதிவை கேள்வி - பதில் பாணியில் தந்துள்ளேன்
**************** ஆலப்புழா செல்ல சிறந்த நேரம் எது ?
ஆலப்புழா செல்ல - எல்லா மாதமும் ஓகே என்றாலும், மிக சரியான நேரம் நவம்பர், டிசம்பர் ஜனவரி மாதங்கள் தான். நாங்கள் சென்ற போது இருந்த கலங்கிய நீர் - சென்று கடலில் சேர்ந்து விட, மழை பெய்ததில் சேர்ந்த நல்ல நீர் அப்போது இங்கிருக்கும் ; மேலும் மழை முடிந்து கிளைமேட் கூட ரசிக்கும் படி இருக்கும்.
********** கேரளாவில் நாம் 4 நாள் சுற்று பயணம் செய்கிறோம் - என்றால்- அதில் 1 நாள் இந்த படகு சவாரி செய்வோம்; அந்த 1 நாளைக்கு நாம் ஹோட்டலை காலி செய்யாமல் - அதற்கான வாடகையும் கொடுக்கணும்; படகுக்கான வாடகையும் கொடுக்கணும் ; இது இரட்டி செலவாச்சே ?
உண்மை தான்; இதை தவிர்க்க பலரும் - தங்கள் பயணத்தில் எடுத்தவுடன் - அதாவது ரயிலில் இறங்கியவுடன் நேராக படகு சவாரி செல்ல துவங்கி விடுவார்கள்; மூட்டை முடிச்சு + முழு லக்கேஜுடன் படகில் ஏறி அங்கேயே குளித்து விட்டு பயணம் தொடர்வார்கள் அல்லது உங்கள் கேரள பயணத்தின் இறுதியில் - நீங்கள் தங்கிய ஹோட்டல் அரை காலி செய்து விட்டு ஹவுஸ் போட் வந்து விடலாம். அங்கிருந்து நேரே உங்கள் ரயில் பிடிக்கிற மாதிரி திட்டமிட்டு கொள்ள வேண்டும்
********** ஒரு நாள் இரவு மட்டும் படகில் தங்குகிறோமே ; அப்போது படகு தொடர்ந்து இயங்கி / நகர்ந்து கொண்டிருக்குமா?
இல்லை; மாலை ஆறு மணியளவில் படகு நிறுத்தப்பட்டு விடும். பேக் வாட்டர்ஸ் பின்னணியில் ஒரு சின்ன கிராமத்தில் நமது படகும், போலவே இன்னும் பல படகுகளும் நிற்கும். மாலை 6 - 7 வெளிச்சம் இருக்கும் போதே ஒரு ரவுண்ட் கிராமத்தை சுற்றி வந்து விடுதல் நலம். பின் இரவு சாப்பாடு - நல்ல நட்பு வட்டம் இருந்தால் - போட்டில் மாலை அல்லது இரவு- உங்களுக்குள் சில விளையாட்டுகள் நடத்தி மகிழலாம்.
********** படகில் பயணித்தவாறே சன்ரைஸ் அல்லது சன் செட் பார்க்க முடியுமா?
அதற்கான வாய்ப்புகள் மிக குறைவு; மாலை 6 மணிக்குள் படகை நிறுத்தி விடுவதால் - சன் செட் பார்க்க முடிவதில்லை ; காலை நாம் குளித்து , சாப்பிட்டு முடித்த பின் தான் படகை மீண்டும் இயக்குவார்கள்; அதற்குள் நிச்சயம் சன் ரைஸ் முடிந்திருக்கும்
சில படகு சவாரி இணைய தளங்கள் - சன்ரைஸ் & சன் செட் பார்த்து என்ஜாய் செய்யலாம் என விளம்பரம் செய்கின்றன; இது மார்கெட்டிங் ஜிம்மிக் தான். அப்படி விளம்பரம் செய்யும் ஆட்களிடம் கேட்டு உறுதி படுத்தி கொள்ளலாம்
********** இந்த படகு சவாரியை "நான்வெஜ்" சாப்பிடும் ஆட்கள் தான் அதிகம் என்ஜாய் செய்வார்கள் என்பது உண்மையா?
என்னை பொறுத்த வரை இது முழுக்க, முழுக்க உண்மை; படகு சவாரியில் அந்த வித்யாச பின்னணிக்கு அடுத்து நம்மை பெரிதும் ஈர்ப்பது - அங்கு சாப்பிடும் சாப்பாடு !
நாங்கள் தங்கிய கிராமத்தில் கண் முன்னே - உயிர் மீன் பிடித்து ஒரு கிலோ நூறு ருபாய் என 2 கிலோ வாங்கினோம்; அங்கிருக்கும் ஒரு வயதான பெண்மணி அதை கிளீன் செய்ய வாங்கியது வெறும் 50 ரூபாய் ; 2 கிலோவிற்கும் அதிகமாக இருக்கும் மீன்களை அவ்வளவு அருமையாக - ஒண்ணரை மணி நேரம் செலவழித்து புளி போட்டு தேய்த்து சுத்தமாக தந்தார்
செல்லும் வழியில் ஒரு மீன் கடைக்கு படகுக்காரர்கள் கூட்டி சென்றனர்; அங்கு நம்ம ஊர் விலையில் மீன், நண்டு விற்கின்றனர். வேறு வழியின்றி அங்கு நண்டு வாங்கினோம். (கிராமத்தில் இப்படி அருமையான மீன் கிடைப்பது தெரிந்திருந்தால் வாங்கியிருக்க மாட்டோம்)
இரவு சாப்பாடு - சிக்கன் குழம்பு; நண்டு மசாலா ; மீன் வறுவல் - இவை மூன்றும் 5 கிலோ இருக்கும் ; வெறும் 10 பேர் - இந்த 5 கிலோவையும் சாப்பிட்டு காலி செய்தோம். சப்பாத்தி, சாதம் போன்றவை இருந்தும் அதை - செகண்டரி ஆக்கி விட்டு- மெயின் கோர்ஸ் ஆக நான்வெஜில் புகுந்து விளாசினோம்; அவ்வளவு அருமையான சாப்பாடு ! அனைவரும் வெரி ஹாப்பி ! மறு நாள் யாருக்கும் எதுவும் வயிற்றுக்கு பிரச்சனை வரலை .. சிறுவர்கள் உட்பட !
நமக்கு வேண்டிய மெனு முன்பே சொல்லி விட முடியுமா?
உங்கள் படகு சவாரிக்கு ஒரு நாள் முன்பு அவர்களுக்கு போன் செய்து - உங்களுக்கு வேண்டிய சமையலை பற்றி பேசலாம்; எத்தனை பேர் வர போகிறார்கள்; அதில் எத்தனை பேர் வெஜ் எவ்வளவு பேர் நான் வெஜ் போன்ற தகவல்கள் சொல்லலாம் ; மலையாள குண்டு அரிசி வேண்டாம்; தமிழக அரிசி வேண்டும் என்றால் சொல்லி விடலாம் (நாங்கள் அப்படி தான் சொல்லியிருந்தோம்) ; மீன் - தேங்காய் எண்ணையில் பொறிக்கலாமா, நல்ல எண்ணையில் தான் பொறிக்கனுமா என்கிற வரைக்கும் instructions - தரலாம். மேலும் பசங்களுக்கு போர் அடித்தால் பார்க்க - DVD Player வேண்டும்; ஆடியோ சிஸ்டம் வேண்டும்; மீன் பிடிக்க தூண்டில் வேண்டும் போன்றவை முன்பே சொன்னால் எடுத்து வைப்பார்கள் ; இவற்றிற்கு சார்ஜ் கிடையாது
*********** படகு சவாரிக்கு எவ்வளவு நாள் முன்பு புக்கிங் செய்யணும்?
சென்னை டு ஆலப்புழா தினமும் ஒரு ரயில் (Chennai - Alleppey Express/16041)- இரவு 8.45 க்கு சென்ட்ரலில் இருந்து செல்கிறது ; இதில் ரயில் டிக்கெட் போடுவது தான் முதலில் செய்ய வேண்டிய வேலை; செல்ல; திரும்ப - இரண்டிற்கும் ரயில் டிக்கெட் - ஒரு சில மாதங்கள் முன்பு புக்கிங் செய்வது அவசியம். மற்றபடி போட் புக்கிங் ஒரு வாரம் முன்பு செய்யலாம். ஆளப்புழாவில் 2000 படகுகள் இருப்பதால் படகிற்கு தட்டுப்பாடு இல்லை; சில நேரம் ரொம்ப நெருக்கத்தில் நீங்கள் - 4 அல்லது 5 படுக்கை உள்ள படகு கேட்டால் - குறிப்பிட்ட நிறுவனத்திடம் அது ஏற்கனவே புக் ஆகியிருக்கலாம் ; எனில் வேறு நிறுவனத்தை தொடர்பு கொள்ளனும்
********** ஒரு நாள் போல படகில் இருக்கிறோமே.. மொத்தம் எவ்வளவு தூரம் பயணம் செய்வோம்?
கேட்க சற்று காமெடியாய் தான் இருக்கும்; மொத்தம் - 20 அல்லது 30 கிலோ மீட்டர் தான் பயணிப்போம். 15 கிலோ மீட்டர் போல சென்று விட்டு அதே 15 கிலோ மீட்டர் திரும்ப வருவோம் அவ்வளவு தான்
இந்த பேக் வாட்டர் - ஆலப்புழா முதல் கோட்டயம் வரை நீள்கிறது ; இதன் மொத்த நீளம் - 22 கிலோ மீட்டர். பெரும்பாலான படகுகள் - ஆலப்புழா முதல் குமரக்கோம் வரை மட்டுமே பயணிக்கிறது
********** கப்பலில் பயணிக்கையில் - வரும் சிக்நெஸ் போல் இதில் வர வாய்ப்புண்டா ?
நிச்சயம் இல்லை; பயணிக்கும் தூரமே குறைவு; மேலும் ஓரிரு மணி நேரத்துக்கு ஒரு முறை ப்ரேக் விடுகிறார்கள்; படகை நிறுத்தி இறங்கி நடந்து விட்டு வருகிறோம்
********* படகில் விபத்து என அவ்வப்போது கேள்விப்படுகிறோமே ?
ஆம் ரெண்டு வகை ரிஸ்க் இருக்கிறது ஒன்று - அசம்பாவிதமாய் படகு கவிழ்ந்து - சிலர் இறப்பது. அடுத்து இரவு நேரம் படகுகள் வரிசையாய் நிறுத்தி விட்டு தூங்கும் நேரம் - தீ விபத்து நடந்து அது மற்ற இடங்களுக்கும் பரவி ஓரிரு முறை விபத்து நிகழ்ந்துள்ளது
கார் அல்லது பஸ்-சில் செல்லும்போது நடக்கும் விபத்து போல் தான் இதுவும் ! லைப் ஜாக்கெட் போன்றவை உள்ளதா அவை சரியாக வேலை செய்கிறதா என்று வேண்டுமானால் கேட்கலாம் ; வேறு ஏதும் நாம் செய்ய முடியும் என தோணலை !
********** இந்த படகுகளுக்கு எப்படி புக் செய்வது?
சென்னையில் உள்ள கேரளா டூரிசம் மூலம் நாங்கள் புக் செய்தோம்; அரசு அங்கீகரித்த போட் ஆப்பரேட்டரை அறிமுகம் செய்தனர்; பாதி பணம் இங்கேயே கட்டி விட்டோம். ஆனால் இப்படி இன்னொரு ஆள் மூலம் செல்லும்போது சற்று விலை அதிகமாக வாய்ப்பு உண்டு ; போனில் இரண்டு அல்லது மூன்று நிறுவனத்திடம் பேசி - பார்கயின் செய்தால் நிச்சயம் நல்ல ரேட் கிடைக்கும்
ஒரே ஒரு தனி குடும்பம் சென்றால் - கணவன் - மனைவி- 2 குழந்தைகள் ஒரு நாள் படகு சவாரி + 3 வேளை சாப்பாட்டுக்கு 10,000 போல் வாங்குவார்கள். குடும்பங்கள் அதிகம் சேரும்போது விலை கணிசமாய் குறைய வாய்ப்புண்டு. காரணம் படகு ஒன்றே; படகில் வேலை செய்வோரும் அதே அளவே !
*********
ஆலப்புழா தவிர நாங்கள் கொச்சின் மற்றும் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி சென்று வந்தோம்.
ஆலப்புழா பற்றி வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில்
கேளுங்கள் !
கேரளாவில் - படகு வீட்டில் பயணிக்கணும் என்று ஒரு சில ஆண்டுகளாகவே யோசித்தும், பேசியும் வந்தோம். சென்ற வருடம் "குளு,மணாலி " தேர்வு செய்த அதே நபர் தான் - இம்முறை கேரள படகு வீட்டுக்கு தான் போகணும் என முடிவு செய்ததும் ! அது - எனது பெண் !
முதலில் சென்னையில் உள்ள கேரள டூரிசம் அலுவலகத்தில் பேசிவிட்டு ரயில் டிக்கெட் புக் செய்தேன். நண்பன் மணியிடம் சொன்னபின் " நானும் வருகிறேன் " என்றதோடு, அவரது நண்பர்கள் இருவரும் அடுத்தடுத்து இணைந்தனர்
படகு வீட்டுக்கு இப்படி நண்பர்கள் குடும்பங்களோடு சேர்ந்து செல்வது தான் - பசங்க விளையாட ஜாலி என்பதோடு - செலவாகும் பணமும் கூட அப்போது தான் கணிசமாக குறையும் !
ஆலப்புழா மற்றும் குமரக்கோம் - இவை இரண்டும் பேக் வாட்டர் மற்றும் படகு சவாரிக்கு மிக புகழ் பெற்றது. இரு இடங்களில் இருந்தும் இரவு நேர படகு சவாரி உண்டு எனினும்- ஆலப்புழா தான் இப்படி ஒரு முழு நாள் சவாரி செல்ல சிறந்தது -
ஆலப்புழாவில் 2000க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இதனால் சவாரிக்கான செலவு கணிசமாக குறைவு; குமரக்கோமில் 50க்கும் குறைவான படகுகள் தான் உள்ளன. வெளிநாட்டவர் மற்றும் அதிகம் விபரம் தெரியாதோர் தான் அங்கிருந்து இரவு நேர படகு சவாரி செய்கின்றனர். மேலும் ஆலப்புழா படகு சவாரியில் நீங்கள் - நடுவில் காணும் தண்ணீரை தவிர - இரு புற கரைகளிலும் வீடுகள் மற்றும் மனிதர்களை காணலாம்; குமரக்கோமில் மிக அதிகம் நீரை மட்டுமே காண முடியும் ! கரைகளில் வீடுகள் குறைவு
சென்னையிலிருந்து தினம் இரவு 8.45 க்கு ஆலப்புழாவிற்கு நேராக ஒரு ரயில் கிளம்புகிறது. அது காலை 10.45 அளவில் சென்று சேர்கிறது. ஆழப்புழாவில் இறங்கியபோது படகு இல்ல பயணத்தை ஆர்கனைஸ் செய்த நிறுவன நபர் நம்மை ரீசிவ் செய்ய வந்திருந்தார்.
அன்றைய நாள் முழுதும் படகில் தான் இருக்க போகிறோம் - என்பதால் அன்று வேன் தேவையில்லை என சொல்லி விட்டோம் (அன்றைக்கும் வேன் தேவையெனில் 1600 ரூபாய் சொல்லியிருந்தனர் ; ரயில் நிலையத்தில் இருந்து 2 ஆட்டோக்களில் - படகு துறையை அடைந்தோம் ஒரு ஆட்டோவிற்கு - ரூ. 100 மட்டுமே ஆனது; இதனால் சேவிங்க்ஸ் 1400 ரூபாய் )
படகு துறை அடைந்ததும் நாம் வந்து விட்ட தகவல் போனில் சொல்லி விட்டால், சற்று நேரத்தில் , கரைக்கு நமது படகு வந்து சேர்கிறது. அடுத்துடுத்து படகுகள் நிற்பதால் சில நேரம் மூன்றாவது படகாக நமது படகு நிற்க - நடுவில் இருக்கும் இரண்டு படகு உள்ளே ஏறி நமது படகை அடைய வேண்டியிருக்கும்.
படகு துறையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. மேலும் படகு வீடும் சுற்றி பார்க்கலாம்
படகில் ஏறியதும் நமது செருப்ப்களை கழட்டி கையில் எடுத்து கொள்ள சொல்கிறார்கள் ! (வீட்டுக்குள் - செருப்புடன் நடக்க மாட்டோம் அல்லவா? அப்படித்தான் !மேலும் அப்போது தான் சுத்தம் செய்த படகை - அழுக்காக்க அவர்கள் மனம் ஒப்புவதில்லை ). நமது லக்கேஜ்கள் அவர்கள் சுமந்து வர நாம் செருப்பு மட்டும் எடுத்தவாறு - படகின் உள்ளே வந்து சேருவோம்
காலை உணவை ரயிலில் முடித்து விட்டு படகை அடைந்து தான் அன்றைய தினத்தின் குளியலே - உடன் மதிய சாப்பாடு .
குளியல் - சாப்பாடு எல்லாம் முடித்து மதிய நேரம் - படகு மெதுவாக பயணக்கிறது அப்போது படகை ஓட்டிய டிரைவர் பகிர்ந்த சில தகவல்கள்: (அவரிடம் இதை தவிர - தனி பேட்டி இல்லை; பயம் வேண்டாம்)
* ஒரு படுக்கை அறை துவங்கி - ஆறு படுக்கை அறை வரை பல வித படகுககள் உண்டு. உங்களுடன் பயணிக்கும் நண்பர்கள் / உறவினர்கள் பொறுத்து எத்தனை படுக்கை அறை உள்ள படகு தேவை என முடிவு செய்யலாம்
* நாங்கள் சென்ற 4 படுக்கை அறை கொண்ட படகின் விலை ஒரு கோடி ரூபாய்; இது 5 வருடத்துக்கு முந்தைய விலை என்றும், இப்போது இன்னும் கூட அதிகமாய் இருக்கலாம் என்றும் சொன்னார். படகு உள்புறம் முழுதுமே மரத்தால் இழைத்து இழைத்து கட்டியுள்ளனர்; 1800 Sq feet - முழுதும் வுட்டன் தரை தளம்; படுக்கை அறை ; ஸ்டார் ஹோட்டலில் இருப்பது போல ஷவர்; ஏ சி - என லக்சரியாய் இருப்பதால் இவ்வளவு காஸ்ட்லி ஆகி றது
* ஒரே படுக்கை அறை கொண்ட படகு 20 லட்சம் போலிருக்க கூடும். (2 அல்லது 3 படுக்கை அறை - வரை - படகில் ஒரு தளம் தான் இருக்கும் ; நான்குக்கு மேல் எனில் - 2 தளம்- கீழே படுக்கை அறை ; மேலே சாப்பாட்டு அறை )
* ஆலப்புழாவில் முக்கிய தொழிலே இந்த படகு - தான் ; அதற்கடுத்து கயிறு தயாரிக்கும் தொழில்.
* படகில் குறைந்தது 3 பேர் பயணிப்பார்கள். சமைக்க, படகு ஓட்ட, உங்கள் அறையில் ஏ. சி ஓடலை ; தண்ணீர் வரலை என்றால் சரி பார்க்க - என அத்தனை வேலைகளும் அனைவருக்கும் தெரியும் (முதல் நாள் முழுக்க படகு ஓட்டிய நபர் இரவு தன் வீட்டுக்கு கிளம்பி விட்டார்; மறு நாள் படகு ஓட்டியது - சமையல் வேலை செய்தவர் தான்)
**********
வேம்பு நாடு என்ற சொல்லப்படும் இந்த ஏரியின் இரு கரையிலும் - சில நிமிடங்களுக்கு ஒரு முறை - ஆங்காங்கு வீடுகள் தென்படுகின்றன. மிக அரிதாக அடுத்துடுத்து வீடுகள் உள்ளன.
பயணத்தின் ஒரு சிறு பகுதி இந்த வீடியோவில்
இந்த வீடுகளில் இருப்போருக்கென - தனியே பள்ளி- சர்ச் ஒன்று என ஒவ்வொன்றையும் ஆங்காங்கு பார்க்க வேடிக்கையாக உள்ளது (பள்ளியாகட்டும், சர்ச் ஆகட்டும் அருகில் வேறு பில்டிங் அநேகமாய் கிடையாது !)
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவை தேடி - சிம்பு செல்வாரே - அதே ஊர் தான் இது !
மக்கள் சென்று வர ஆங்காங்கு அரசு படகுகள் இயங்குகின்றன. கண்டக்டர் போல் ஒருவர் இருந்து கொண்டு டிக்கட் தருவதை காண முடிகிறது
தவிர சில மக்கள் தங்கள் வீடுகள் வெளியே தாங்கள் சென்ற வர படகும் வைத்துள்ளனர்
***
நடுவில் ஓரிரு இடத்தில் மீன் போன்றவை ஷாப்பிங் செய்ய நிறுத்துகிறார்கள். ஆறு மணியளவில் படகு நிறுத்தப்பட்டு விடுகிறது.
சுற்றிலும் வயல்வெளி இருக்க அங்கு பயன்படுத்தும் ஈ.பி கனக்ஷனில் இருந்து நமது படகுகளுக்கு - மின்சார இணைப்பு தருகிறார்கள். கூடவே கேபிள் கனக்ஷனும் ! (அதுவரை படகில் இருக்கும் ஜெனரேட்டரில் நமக்கு மின்சாரம் தரப்படும் )
மாலை நேரம் கிராமத்தில் இறங்கி சற்று சுற்றி வந்தோம். இரவு மிக அருமையான, மறக்க முடியாத சாப்பாடு ... அது பற்றியும், ஆலப்புழா செல்ல எப்படி புக் செய்வது, எவ்வளவு செலவாகும் நம்பிக்கைக்குரிய படகு ஹவுஸ் விபரங்கள் போன்றவை அடுத்த பகுதியில் வெளியாகும் !
ஆலப்புழா .. சென்ற வார இறுதியில் 4 நண்பர்கள் குடும்பத்துடன் சென்று வந்தோம். அப்போது எடுத்த சில புகைப்படங்கள் மட்டும் இப்போதைக்கு. தனி பதிவு விரைவில்.. நிச்சயம் பதிவுகளை (பல வாரம்) இழுத்துடிக்காமல் - தேவையான தகவல்கள் சொல்லி விடுவேன் !
நம்ம (போன) போட்டுதேங் ..
கம்பனி காரர்கள் வந்தால் மீட்டிங் ரூமாய் உபயோகிக்கலாம்; நாங்க சாப்பிடும் அறையாய் மட்டும்