Thursday, December 29, 2016

2016 சிறந்த பத்து படங்கள்

இறுதி சுற்று

வழக்கமான ஸ்போர்ட்ஸ் பட டெம்ப்லேட் தான். ஆனால் ஹீரோயின் தான் இங்கு சர்ப்ரைஸ் பாக்கெட். நிஜ பாக்ஸரை நடிக்க வைக்கும்போது அவர் நடிப்பில் சோடை போக வாய்ப்பு மிக அதிகம்; ஆனால் ரித்திகா சிங் நடிப்பிலும் பிய்த்து  உதறினார்.

Related image

மாதவனின் majestic நடிப்பு, சந்தோஷின் பாடல்கள், விளையாட்டில் இருக்கும் அரசியல் (அதிலும் பெண் என்பதால் சந்திக்கும் பிரத்யேக கொடுமைகள் )- இயல்பான இயக்கம் என படம்  மின்னியது.

 இறுதி சுற்று விமர்சனம் : இங்கு

விசாரணை

வெற்றி மாறன் தமிழில் குறிப்பிடத்தகுந்த, நம்பிக்கைக்குரிய இயக்குனராக மீண்டும் ஒரு முறை தன்னை நிரூபித்த படம்.

போலீஸ் விசாரணையின் பல முகங்களை காட்டி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது; நிஜ வாழ்வில் நடந்த சம்பவத்தின் பிரதிபலிப்பு என்பது கூடுதல் வலி.

ரத்தமும் வன்முறையும் சற்று அதிகம் (நியாயம் தான் எனினும்) ; அது மட்டும் தான் எனக்கு பிடிக்க வில்லை; மற்றபடி அற்புதமான படம் !

 விசாரணை விமர்சனம் : இங்கு

விசாரணை -தமிழின் இரண்டாவது மிகச்சிறந்த படமா ?

பிச்சைக்காரன்

எப்படி இந்த பெயரில் படம் எடுக்கிறார்கள்; இந்த படம் பார்த்தேன் என சொல்லவே மக்கள் யோசிப்பார்களே .. படம் பெயர் சொல்லி டிக்கெட் வாங்க கூட யோசிப்பார்களே என  நினைத்திருந்தேன்.அதையெல்லாம் மாற்றி அட்டகாசமாக படம் எடுத்து மிக, மிக பெரும் வெற்றி  பெற்றனர்.

Image result for pichaikaran

என்ன ஒரு வித்யாசமான கதைக்களன்.. பின் அதனை ரசிக்கும் வண்ணம் திரைக்கதையாக்கிய விதம். அட்டகாசம் !

நல்ல இயக்குனரான  சசி நீண்ட இடைவெளிக்கு பின் வந்தாலும், தரமான படமொன்றை தந்தார். விஜய் ஆண்டனியின் கதை தேர்வு தான் அவரை இதுவரை காப்பாற்றி வருகிறது

பிச்சைக்காரன்- இந்த வருடத்தின் தவற விடக்கூடாத ஒரு படம் !

 பிச்சைக்காரன் விமர்சனம் : இங்கு 

தோழா

 பணக்காரன்-ஏழை இடையே இருக்கும் நட்பை காமெடி கலந்து சொல்லி  ஜெயித்தனர். நாகார்ஜுனா நடிப்பு பெரும் பாராட்டை பெற, கார்த்தியின் காமெடி மக்களிடம் நன்கு எடுபட்டது

தோழா விமர்சனம் : இங்கு

24

இந்த வருடம் வந்த படங்களில் எனக்கு ரொம்ப பிடித்த படம்; செம வித்யாசமான கதை. சொன்ன விதமும் கிளாஸ். (நான் ஒரு வாட்ச் மெக்கானிக் என அவ்வப்போது போடும் ரம்பம் தான் திருஷ்டி பொட்டு!)

Image result for 24 tamil movie

ஒரு ஹாலிவுட் பட ரேன்ஜுக்கு இருந்த இந்த படம் ஓடவில்லை ! எல்லா புது முயற்சியையும் வரவேற்கும்    தமிழகம் இந்த முயற்சியை ஏனோ கை விட்டது  !

24 விமர்சனம் : இங்கு 

கபாலி

இந்த வருடத்தில் மிக பெரும் hype உடன் வெளியான படம். அந்த hype ஐ வைத்தே ஓரளவு காசு பார்த்து  விட்டனர்.

Image result for kabali

நல்ல படம் தான்.. .......

தான் என்று இழுக்கிறோம் பாருங்கள் .. அது தான் விஷயம். மெட்றாஸில் இருந்த செறிவு இந்த படத்தில் இல்லை; ஏகப்பட்ட பாத்திரங்கள்.. எல்லோர் மீதும் சந்தேகிக்கும் வண்ணம் அமைந்த திரை கதை..

கதை எதை நோக்கி செல்கிறது.. கபாலி மனைவியை தேடி கண்டு பிடிப்பது தான் கதையா? அல்லது வில்லன்களை ஒழிப்பதா.. குழம்பி போகிறோம்...

முடிவு .. நிச்சயம் பாராட்டும் வண்ணம் இருந்தது; சுஜாதா கதை போல நம் முடிவிற்கு விட்டது  அருமை.

கபாலி. இன்னும் நன்றாக வந்திருக்க வேண்டிய படம்.

 கபாலி விமர்சனம் : இங்கு

தெறி

விஜய்க்கு இன்னொரு கமர்ஷியல் ஹிட்; இரட்டை வேடம் - குழந்தையின் கியூட்னஸ் இரண்டாலும் படம்  தப்பித்தது; கையை கடிக்காத ஒரு வெற்றி படம் என்கிற அளவில் மட்டும் பட்டியலில் சேர்த்துள்ளேன்.

 விமர்சனம் : இங்கு

தெறி படம் எப்டி பேபி ?சினிமா விமர்சனம்

தர்ம துரை

இந்த ஆண்டு விஜய் சேதுபதி  ஆண்டு;எத்தனை படம் நடித்து விட்டார்..  அடேங்கப்பா. ரெக்க போல ஒரு சில தவிர்த்து பலவும் கையை கடிக்காமல் காப்பாற்றி விட்டது.

Image result for tharmathurai

தர்மதுரை மருத்துவ துறை - காதல் தோல்வி இந்த இரண்டு விஷயத்தையும் சற்று வேறு கோணத்தில் பார்க்க உதவியது; துணுக்கு எழுத்தாளராக ஒரு ஹீரோயின் பாத்திரம் அமைந்தது அழகு.

நல்ல கதை- சொன்ன விதமும் அருமை; மருத்துவர்கள் மீதுள்ள மதிப்பு உயரும் வண்ணம் படத்தை அழகாய்  முடித்திருந்தனர்.

தர்மதுரை விமர்சனம் : இங்கு 

கொடி 

தனுஷ் நடிப்பில் வெளியான கொடி எனக்கு பிடித்திருந்தது; முழுக்க முழுக்க அரசியலை கதை களமாய் கொண்ட படங்கள் அரிது (அமைதிப் படை அப்படியான ஒரு படம்)

Image result for kodi film

இரண்டு தனுஷ் மற்றும் த்ரிஷா மூவர் பாத்திரங்களும் வித்யாசமான முறையில் அமைக்க பட்டிருந்தது. படம் பெரிய வரவேற்பை பெறாவிடினும் சொல்ல வந்த விஷயத்தை விட்டு எங்கும் நகராமல் - சிறிதும் divert ஆகாமல் சென்ற இப்படம் இவ்வருடத்தில் குறிப்பிடத்தக்க படங்களுள் ஒன்று.

கொடி விமர்சனம் : இங்கு

ரஜினி முருகன்

வருடத்தின் முதல்  ஹிட் (பொங்கல் ரிலீஸ் ) ; சிவா நடித்து இவ்வருடம் வெளிவந்த இன்னொரு படமான ரெமோ கையை கடிக்காமல் ஓடினாலும் அது என்னை சுத்தமாய் கவர வில்லை;

ரஜினி முருகன் பார்க்கும் போது ஜாலியாக சிரிக்க  முடிந்தது;வெளியில் வந்ததும் எந்த காமெடியும் நினைவில் இல்லை ! குடும்பத்துடன் தியேட்டர் சென்று ஜாலியாய் சிரித்து மக்கள் இதனை பெரும் வெற்றி  படமாக்கினர்.

ரஜினி முருகன்: விமர்சனம் : இங்கு 

****
பின்குறிப்பு: 1) ஜோக்கர் படம் அருமை என பலரும்  கூறினர்;இன்னும் பார்க்க வில்லை.

2) பிற மொழி படங்களில் நான் பார்த்தவற்றில் சிறந்தவை :

ஆங்கிலம் : Sully
ஹிந்தி : Dungal & Pink
மலையாளம் : Charlie
***
2015 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே 

2012 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2011ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2010ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2009 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

Monday, December 26, 2016

வானவில்: லைட்ஹவுஸ் ஒரு பார்வை-மெக்டொனால்ட்ஸ் ஏமாற்று வேலை- ஜெயலலிதா தெரு

சென்னை லைட் ஹவுஸ் - ஒரு விசிட் 

அண்மையில் சென்னை கலங்கரை விளக்கம் சென்று வந்தோம். மெரினா பீச்சில் - கமிஷனர் அலுவலகம் தாண்டி ஆல் இந்தியா ரேடியோவிற்கு எதிரில் உள்ளது கலங்கரை விளக்கம் !

9 மாடி கட்டிடத்தின் மேல் செல்ல லிப்ட்டில் மட்டுமே அனுமதி (படிக்கட்டில் நோ !) சிறிது நேர காத்திருப்பிற்கு பின் 9 வது மாடிக்கு சென்று பின் அங்கிருந்து ஒரு மாடி மட்டும் படியேறி மேல்பகுதி வந்து சேர்கிறோம். ஞாயிறு என்பதால் நல்ல கூட்டம்; சில இடங்களில் மட்டும் காற்று பிய்த்து கொண்டு அடிக்கிறது; அனைவரும் போட்டோ எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறார்கள். மாலை நேரம்.. பீச், எதிரில் உள்ள கிரிக்கெட் கிரவுண்ட், காமராஜர் சாலை வாகனங்கள் என 10-15 நிமிடம் பார்த்து விட்டு திரும்ப வேண்டியது தான்..



கீழே சின்னதாய் - கலங்கரை விளக்கம் குறித்த கண்காட்சி உள்ளது. நுழைவு கட்டணம் - 20 ரூபாய்.

பெரிய எதிர்பார்ப்பின்றி ஒரு முறை விசிட் அடிக்கலாம் லைட் ஹவுஸிற்கு !

இப்படியும் நடக்குது  மெக் டொனால்ட்ஸ்சில்   

அண்மையில் வேளச்சேரி மெக் டொனால்ட்ஸ் கடைக்கு சென்ற போது "கார்ட் வேலை செய்யாது" என எழுதி  போட்டிருக்க,2000 ரூபாய்க்கும் சில்லறை இல்லை என்ற நிலையில், இருந்த நூறுகளை தேற்றி அதற்கேற்ப ஆர்டர் செய்யும் நிலை..

சாஃட் ட்ரிங்க்ஸ் வந்து சேர, " இதை ஆர்டர் செய்யவே இல்லையே!" என்றதும் " இது free - பா" என்றால் மகள்..

பின் சற்று யோசித்து விட்டு மகளே   கேட்டாள் : "நாம நினைச்சதை விட 150 ரூபாய்க்கு மேல் அதிகமா இருக்கு" என்று கவுண்ட்டரில் போய் கேட்க, அது   சாஃட் ட்ரிங்க்ஸ்க்கான பணம் என தெரிந்தது.

இதற்கு ஏன் இலவசம் என சொல்லி தலையில் கட்டணும்? அப்புறம் அதை பில்லில் போடணும்? (காம்போ என போட்டு விடுவதால் பலர் கவனிப்பதில்லை !)

அமர்ந்திருக்கும் அனைத்து டேபிள்களிலும் கோக் அல்லது பெப்சி என ஏதேனும் ஒரு சாஃட் ட்ரிங்க்ஸ்  இருப்பதை அப்புறம் தான் கவனித்தேன் !

என்னமா ஏமாத்துறாங்க ! ஹூம் !

எதிர்பார்ப்பில் - புரியாத புதிர் 

புதுமுக இயக்குனரின் புரியாத புதிர் ட்ரைலர் வித்யாசமாக உள்ளது; ஏற்கனவே வெளியான இப்பட பாடல்கள் ரசிக்கும் வண்ணம்  உள்ளன. த்ரில்லர் சப்ஜெக்ட்... ட்ரைலர் தரும் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்தால் .. மகிழ்ச்சி !



வேளச்சேரி வியாபாரிகளின் புலம்பல் 

புயலால் இணையம் உள்ளிட்ட சேவைகள் பாதித்தது ஒருபுறம் என்றால், வேளச்சேரியில் இன்னொரு பிரச்சனை. விஜய நகர் பேருந்து நிலையம் எதிரில் மேம்பாலம் ஒன்று அமைக்கும் பணி  நடைபெறுகிறது ; இதனால் சாலைகள் தோண்டியதில், பல கடைகளில் இணைய இணைப்பும் - Debit / Credit சேவையும் இல்லை ! அவை வேலை செய்யலை.. இதனால் பிரதமரின் கனவான பணமில்லா வர்த்தகம் நடக்க முடியவில்லை; பண வர்த்தகம் மட்டுமே சாத்தியம் ! அதிலும் 2000 ரூபாய் நோட்டு- அதற்கான சில்லறை இன்மை.. போதிய அளவு 100 ரூபாய் நோட்டுகள் இல்லாதது.. இதனால் விஜய நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பல கடைகளில் வியாபாரம்  படுத்து விட்டது.. மருந்து கடைகள் கூட இதற்கு விதி விலக்கில்லை. பரிதாபம் !

போஸ்ட்டர் கார்னர் 



சென்னையில் ஜெயலலிதா தெரு

நடை பயிற்சி மேற்கொள்ளும் போது வெவ்வேறு ரூட் மற்றும் தெருக்களில் நடக்கும் வழக்கும் உண்டு. அப்படி ஒரு முறை நடக்கும் போது வேளச்சேரி/ மடிப்பாக்கம் இரண்டும் சந்திக்கும் இடமான கைவேலி அருகே ஜெயலலிதா தெரு என்ற பெயர் பலகை கண்டேன். முன்னாள் முதல்வர் .. எனவே அவர் பெயரில் தெரு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவரை இப்படி பெயர் சொல்லி அழைப்பதே மரியாதை குறைவு என எண்ணும் அவர் ஆட்சி காலத்திலேயே இந்த தெரு இருந்து வந்திருக்கிறது.. அம்மா  ஜெயலலிதா தெரு என்றிருந்தால் ஆச்சரியம் வந்திருக்காது .. ஜெயலலிதா தெரு என்பது தான் புருவம் உயர்த்த வைத்தது !

Saturday, December 24, 2016

அமீர்கானின் Dangal-ஹிந்தி பட விமர்சனம்


ருமை, அற்புதம், அட்டகாசம், சிறப்பு இன்னும் என்னென்ன சூப்பர் லேட்டிவ் தோன்றுகிறதோ அனைத்தையும் சொல்லி விடுங்கள்.. எல்லாமே இப்படத்துக்கு suit ஆகும்.. அது தான் Dungal !

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற கீதா மற்றும் பபிதா என்ற 2 இந்திய பெண்களின் உண்மை கதை Dangal (யுத்தம்) என்கிற படமாக வந்துள்ளது. இந்த பெண்களின் தந்தை/ அவர்களின் பயிற்சியாளராக மஹாவீர் சிங் என்கிற பாத்திரத்தில் அமீர் கான் !


ஸ்போர்ட்ஸ் படங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் template இதிலும் உண்டு: சாதாரண வீரர்களை கோப்பையை வெல்ல செய்யும் பயிற்சியாளர் ! இங்கு மிக முக்கிய வித்யாசம். இது நிஜத்தில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு.. மேலும் அந்த பயிற்சியாளர் .. அப்பெண்களின் தந்தை !

முதல் 10 நிமிடம் தாண்டி அமீர் கான் தெரியாமல் - மஹாவீர் தான்  தெரிகிறார். அதிகப்படியாக நடிக்காமல் - தேவைக்கேற்ப அட்டகாசமாய் underplay செய்துள்ளார் அமீர். அந்த பாத்திரம் மிக சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. காமன் வெல்த் போட்டி நடக்கும் போது அவர் சொல்லும் strategy கள் அருமை என்றால்- இறுதி போட்டியை அவர் பார்க்க முடியாமலே போவதும், தேசிய கீதம் ஒலிப்பதை வைத்தே எந்த நாடு வென்றது என அவர் உணர்ந்து கொள்வதும் நெகிழ வைக்கிறது !


படம் முழுதும் விரவியிருக்கும் காமெடி - சீரியஸ் சப்ஜெக்ட்டை இலகுவாக்குகிறது.

மகாவீர் மற்றும் அவரது இரு பெண்களின் கதை தான் இது; மற்ற சிறு பாத்திரங்களும் ரசிக்கும் வண்ணம் உள்ளன. குறிப்பாய் கதை முழுதும் சொல்லும் அந்த சொந்த கார பையன், மஹாவிரின் மனைவி, கோழி கடை வைத்திருக்கும் நபர் .. இப்படி ஏராளம்.. கீதா வளர்ந்த பின் வரும் கோச் பாத்திரம் தான் சற்று வில்லன் போல் ஆக்கி விட்டனர் (நிஜ வாழ்விலும் அப்படியா அல்லது கதைக்காக அவ்வாறு செய்தனரா என தெரிய வில்லை )

Wrestling போட்டியை - அதன் விதிகளை நமக்கு எளிதாக கற்று கொடுத்து விடுகிறார்கள்; எப்படி அடித்தால்/ விழுந்தால் எவ்வளவு பாயிண்ட் என்பது துவங்கி, Wresting போட்டி முழுவதுமே 4 முதல் 6 நிமிடத்தில் முடிந்து விடும் என்பது வரை !

சண்டை காட்சிகள் மிக துல்லியம் .. நிஜ Wresting பார்ப்பது போலவே தான் உள்ளது..



அமீர் இப்படத்திற்காக - மஹாவீர் பாத்திரத்துக்காக நிஜமான தொப்பையுடன்  நடித்துள்ளார்.படத்தின் துவக்கத்தில் வரும் 10 நிமிட காட்சிகளில் உள்ள உடலை 6 மாதம்  பயிற்சி செய்து பின்னர்  எடுத்துள்ளனர்.எப்படி உடலை .ஏற்றினார், எப்படி இறக்கினார் என்பது யூ டியூபில் உள்ளது; பாருங்கள்.



லகானை விட இப்படம் பல மடங்கு சிறந்தது என சிலர் எழுதிய போது சிரிப்பாக  இருந்தது;ஆனால் படம் பார்த்ததும் அது நிச்சயம் சரி என புரிந்தது; லகான், தாரே ஜாமீன் பர் இப்போது Dungal என சிறந்த படங்களை அமீர் தயாரிப்பது பெருமையளிக்கிறது !

மிகக் கவர்வதும் நெகிழ வைப்பதும் திரைக்கதை தான்.  நிஜத்தில் நடந்த சம்பவங்கள் என்பதால் கதை மாற்ற முடியாத  ஒன்று; குறிப்பாக போட்டிகளில் எந்த பாயிண்ட்களில் , எத்தனை செட்களில் வென்றார்கள் எதையுமே மாற்ற முடியாது; ஆனால் அவர்கள் வாழ்வில் எந்த சம்பவங்கள் சினிமாவுக்கு செட் ஆகும் என்பதை புத்தி சாலித்தனமாக திரைக்கதை  அமைத்துள்ளனர்.

திரைக்கதை, இயக்கம், அமீர் மற்றும் பாத்திமா - இந்த 4 பேருக்குமே நிச்சயம் சில விருதுகள் காத்திருக்கிறது !

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை ஐந்துக்கு - நான்கரை ஸ்டார் தந்து விட்டு "   Forget Demonetization ; just go and watch Dungal" என எழுதியிருந்தது. மிக சரியான விமர்சனம் !

பள்ளி சிறுவர்களுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அவசிய அவசியம் காண்பிக்க வேண்டிய படம் !

ஹிந்தி மற்றும் மலையாள படங்கள் சப் டைட்டிலுடன் பார்ப்பது வழக்கம். ஆனால் இப்படம் தமிழில் ஜாஸ் சினிமாஸில் கண்டோம். நிறைய Wrestling சண்டை காட்சிகள் என்பதால் டப்பிங்க் சிங்க் ஆகாத பிரச்சனை இல்லை; எங்களுக்கு டப்பிங் படம் போல தெரியவே இல்லை; பெண் இன்னொரு முறை தியேட்டர் சென்று பார்க்கணும் என வறுபுறுத்தி வருகிறாள் !!

இந்த வருடத்தில்  மட்டுமல்ல,இதுவரை வந்த இந்திய சினிமாக்களில் ஒரு மிக சிறந்த படம் இது.

Dungal - Don't miss it !
****
தொடர்புடைய பதிவு

அமீர்கான் அசத்திய நான்கு படங்கள்

http://veeduthirumbal.blogspot.com/2011/02/blog-post_23.html

Friday, December 23, 2016

அடையார் ப்ரோக்கன் பிரிட்ஜ் - ஒரு பார்வை

சென்னை ப்ரோக்கன் பிரிட்ஜ் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறேன்.. ரொம்ப நாள் அது வட சென்னையில் இருக்கிறது என்று  நினைத்திருந்தேன். இணையத்தில் தேடி பார்க்கும் போது தான் அது பெசன்ட் நகர் பீச்சிற்கு மிக அருகே உள்ளது என தெரிந்தது.



எங்கே இருக்கிறது? 

பெசன்ட் நகர் பீச் சென்றுள்ளீர்களா? அதன் ஒரு புறத்தில் KFC மற்றும் திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி கடை உள்ளது; தலப்பா கட்டி கடையை ஒட்டி பீச் அருகிலேயே ஒரு சாலை  செல்லும்;கொஞ்ச தூரம் குடிசை பகுதிக்குள் புகுந்து செல்ல வேண்டும். சரியாக ஒரு கிலோ மீட்டர் அப்படி பயணித்தால்  ப்ரோக்கன் பிரிட்ஜ்ஜை அடையலாம்.



எப்படி செல்லலாம்? 

கார் அல்லது பைக் இரண்டுமே  ப்ரோக்கன் பிரிட்ஜ்ஜிற்கு சற்று தூரம்வரை (மிக அருகில்)  செல்ல முடியும். பெசன்ட் நகர் பீச்சிலிருந்து நடந்து போனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.



எப்போது செல்லலாம்?

பகலில் மட்டும் தான் செல்ல முடியும் !  மாலை நான்கரை அல்லது 5 மணிக்கு மேல் போலீஸ் வந்து இங்கு இருக்க வேண்டாம் என அனுப்பி விடுவதாக சொன்னார்கள் (நாங்கள் சென்ற போது 4 மணி இருக்கும். நான்கரைக்கு  கிளம்பினோம்;அன்றைக்கு போலீஸ் அங்கு இல்லை !)

இருட்டிய பின் செல்வது பாதுகாப்பானது இல்லை; அதிகாலை சென்றாலும் கூட வெய்யில் இல்லாமல் நன்கு என்ஜாய் செய்யலாம்

என்ன விசேஷம்? 

உடைந்த நிலையில் ஒரு பாலம். எல்லா பக்கமும் கடல் நீர். சற்று தொலைவில் மிக பெரும் கட்டிடங்கள்.. இந்த வித்தியாச சூழலை  பார்த்து ரசிக்கவும், குறிப்பாக புகைப்படம் எடுக்கவும் செய்யலாம்....அவ்வளவே !

பாலம் எப்படி உடைந்தது? 

1967ல் கட்டப்பட்ட இப்பாலம் -10 வருடங்கள்  பயன்பட்டுள்ளது;பின் 1977ல் உடைந்த பின் இதனை கட்ட யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை.


எச்சரிக்கை !

இரவில் செல்லவேண்டாம். சிறந்த நேரம்.. அதிகாலை



பிரிட்ஜ் மேலே ஏற சற்று சிரமமே. ஆண்கள் மற்றும் உயரமான பெண்கள் ஓரளவு முயற்சியுடன் ஏறிவிடலாம். ஏற சிரமப்படுவோருக்கு நண்பர்கள் குனிந்து - என் மேல் ஏறி செல் என உதவுகிறார்கள் !!

 பெரிய எதிர்பார்ப்புடன் செல்ல வேண்டாம். எந்த செலவும் இல்லாமல் ஒரு வித்தியாச இடம் .. அவ்வளவே.. !

Sunday, December 11, 2016

சென்னை 28 : பார்ட் 2 - சினிமா விமர்சனம்

முதல் பார்ட் எடுத்து விட்டு - செகண்ட் பார்ட் வரும்போது நிறைய பாத்திரங்கள் காணாமல் போகும்; ஆனால் முதல் பார்ட்டில் இருந்த அநேக பாத்திரங்களையும் மீண்டும் எடுத்து கொண்டு, புதிதாய் சில காரெக்டர் சேர்த்து அமர்க்களம் செய்துள்ளனர் சென்னை -28 பார்ட் டூவில் !

Image result for chennai 28 2 jai

பாசிட்டிவ் 
- - -
முதல் பார்ட்டில் கதை என ஒன்று பெருசாய் இருக்காது; இங்கு கிரிக்கெட் தவிர கதை என ஒன்று பின்னணியில் இருக்கு; கூடவே கிரிக்கெட்டும்

கிரிக்கெட் மேட்ச் எல்லாம் சுவாரஸ்யம். ஷார்க் டீம் ஜெயிப்பது நாம் ஜெயிப்பது போல ஜாலியா இருக்கு

கரண்ட் விஷயங்கள் அனைத்தையும் தொட்டு போகிறார்கள்..

மிர்ச்சி சிவா அங்கு விட்டதை அப்படியே கன்டினியூ செயகிறார். வெரி நைஸ் !

வைபவ் நெகட்டிவ் பாத்திரத்தில் அசத்துகிறார். ஹீரோயின் ரசிக்கும் வண்ணம் உள்ளார்.

மனைவிகள் மேட்ச் பார்த்துட்டு தங்கள் பாணியில் ஐடியா தருவது கலக்கல்

ஷார்க்ஸ் டீம் வென்றது என வழக்கமான முடிவு போல் இல்லாமல் வித்யாசமாக முடித்துள்ளனர் (மூணாவது பார்ட்டுக்கு  வேறு பிட் போடுறாங்க !)

ஆங்காங்கு வரும் சிரிப்பு, பலருக்கும் பிடித்த கிரிக்கெட்டை பெரிய திரையில் பார்ப்பது இரண்டும் தான் படத்தை காப்பாற்றுகிறது

நெகட்டிவ் 
- - - -
முதல் மற்றும் மிக பெரிய நெகட்டிவ் பாடல்கள்... எதுவுமே ஈர்க்கலை; மேலும் பொருத்தமில்லாத இடங்களில் வந்து இம்சை செயகிறது

வெங்கட் பிரபு தன் தம்பிக்கு இப்படி முக்கிய துவம் தருவதை எப்போது தான் நிறுத்துவார்? திறமை இருந்தால் பாராட்ட மாட்டோமா? முன்னேறியிருக்க மாட்டாரா பிரேம் ஜி ?

சுத்தமாய் பல ஆண்டுகள் கிரிக்கெட்டே ஆடாதோர் எப்படி ஜெயிப்பார்கள் என்பது பெரிய கேள்விக்குறி; சைக்கிள் ஓட்டுற மாதிரி தான் கிரிக்கெட் ஆடுறதும் என ஒரு டயலாக் விடுறாங்க. அது சரியான ஒப்பீடு இல்லை.

முதல் பார்ட் vs இரண்டாம் பார்ட் 

சந்தேகமே வேண்டாம்.. முதல் பார்ட் தான் தி பெஸ்ட் ! அதுக்கு காரணம் இப்படி ஒரு genre இதுவரை நாம் பார்த்ததே இல்லை; அதுவே நம்மை ஆச்சரியப்படுத்தி ரசிக்க வைத்தது

அடுத்து காமெடி.. அதிலும் நிச்சயம் முதல் பார்ட் மிக அசத்தியது; குறிப்பாக முதல் பார்ட்டில் மிர்ச்சி சிவா தன் காதலை அண்ணனின் சிறு மகள் முன் சொல்லி பழகுவார்; அதனை காட்சிப்படுத்திய விதமெல்லாம் சான்ஸே இல்லை ! அது போன்ற தியேட்டரை குலுங்க வைக்கும் காட்சிகள் இங்கு இல்லை; பவுலிங்கா .. பீல்டிங்கா கேள்வியெல்லாம் epic ! அது போன்ற காமெடியை இங்கு மீண்டும் அப்படியே காட்டி தப்பிக்க பார்க்கிறார்கள்.

Image result for chennai 28 2

விமர்சனம் ஒன்றில் - முதல் பார்ட்டில் சிக்ஸர் அடித்தார்; இரண்டாவது பார்ட்டில் பவுண்டரி அடித்துள்ளார் என குறிப்பிட்டனர். இதை விட மிக சரியாய் ஒரே வரியில் விமர்சிக்க முடியாது

சென்னை 28 பார்ட் டூ : வெங்கட் பிரபு பாணி காமெடி- கிரிக்கெட் இரண்டில் எந்த ஒன்று பிடித்தாலும் படத்தை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்.. !

Saturday, December 10, 2016

வானவில்:தமிழக அரசியல் நிலவரம் - கவலை வேண்டாம்

பார்த்த படம்: கவலை வேண்டாம் 

ஜீவா எப்போது கடைசியாக தனி ஹிட் படம் கொடுத்தார் என யாருக்காவது நியாபகம் இருக்கா? இதோ இன்னொரு ஜீவா படம் !

பிரிந்து வாழும் மனைவியுடன் - டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட ஒரு வாரம் மட்டும் சேர்ந்து வாழ சொல்கிறார் ஜீவா; அந்த ஒரு வாரத்தில் மன மாறுதல் ஏற்பட்டு இருவரும் சேர்வார்கள் என்பதை சொல்லணுமா என்ன ?

காமெடியை நம்பியே படமெடுத்துள்ளனர்...வேறு எந்த விஷயமும் இல்லை.. பார்க்கும் போது சிரித்து விடுகிறோம்.. ஆனால் அப்புறம் தான் அது மோசமான டபிள் மீனிங் வசனம் என புரிகிறது.. இப்படி இரட்டை அர்த்த வசனங்களில் தான் படம் முச்சூடும் நகர்கிறது.. ஹூம்

படம் பெட்டிக்குள் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

அழகு கார்னர் 


டிவி பக்கம்: ஜோடி நம்பர் ஒன் 

T ராஜேந்தரை வைத்து கொண்டு மரண மொக்கை போடுகின்றனர். கூட இருக்கும் சதாவும் சரி இவரும் சரி, சுமாராக ஆடுவோரை கூட அருமை, ஆஹா ஓஹோ என்கிறார்கள்.. யாருமே வெளியேற்ற படுவதில்லை..

T ராஜேந்தர் அடுக்கு மொழியில் அறுத்து தள்ளுவதை கலந்து கொள்வோரே கேட்டு சிரி சிரி- யென சிரிக்கிறார்கள்.

மகள் டான்ஸ் நிகழ்ச்சி என இதனை தொடர்ந்து பார்த்து வந்தாள் .. அவளே விரைவில் ஒதுக்கி தள்ளி விடுவாள் என நினைக்கிறேன் !

தமிழக நிலவரம் 

ஒரு மாநில முதல்வர் இறந்து இவ்வளவு அமைதியாக - வன்முறையின்றி அடக்கம் செய்யப்பட்டு ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பியது ஆச்சரியமாக இருக்கிறது.. ! இதற்கு(ம்)  de monetization தான் காரணம் .. கையில் பணமில்லாததால் ரவுடிகளை கடைகள் உடைக்க பயன்படுத்த முடியவில்லை என்கிறார்கள் மோடி பக்தர்கள். எனக்கு அது சரியாக தோன்ற வில்லை; 2000 ரூபாய் நோட்டு கொடுத்தால் செய்ய மாட்டார்களா? அல்லது தஞ்சை இடை தேர்தலில் தந்தது போல் 500 ரூபா பழைய நோட்டு தந்தாலே ரைட்டு என இறங்க மாட்டார்களா?

நிச்சயம் முதல்வர் மரணத்தில் மர்மம் இருக்கிறது; 25 ஆண்டுக்கு முன் அமெரிக்காவில் எம்ஜியார் அவர்கள் இருந்த போது கூட சில புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டனர். ஏன் இப்போது எந்த படமும் எடுக்க வில்லை? வெளியிட வில்லை? ஏன் சசிகலா தவிர வேறு யாரும் முதல்வரை பார்க்க அனுமதிக்க பட வில்லை? இப்படி ஏராள கேள்விகளுக்கு விடையே இல்லை..

நிச்சயம் இது பற்றி ஒரு நேர்மையான விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியாகும் ! அது நடக்கும் என தோன்ற வில்லை :(

போஸ்டர் கார்னர் 



கிரிக்கெட் கார்னர் 

இரண்டாவது மற்றும்  மூன்றாவது டெஸ்ட் மேட்சில் இந்தியா எளிதில் வென்றது; நான்காவது டெஸ்ட் நிஜமான சவாலாக இருக்க போகிறது; மும்பை விக்கெட்டில் 400 ரன் எடுத்துள்ளது  இங்கிலாந்து. இவ்வளவு ரன் எடுத்த எந்த அணியும் தோற்றது இல்லையாம் !

கோலி மற்றும் புஜாரா தொடர்ந்து நல்லபடியே பாட்டிங் செய்ய, அப்புறம்  அஷ்வின்,ஜடேஜா போன்றோரின் பங்களிப்பால் தான் இந்தியா தப்பித்து வருகிறது. துவக்க மற்றும் நடுநிலையில் பிற பேட்ஸ்மேன்கள் சொதப்பி   வருகின்றனர்.

அஷ்வின் விக்கெட்டுகள், ரன்கள் இரண்டிலும் அசத்தி வருவது அட்டகாசம். (அதுக்காக இவர் பாட்டிங்கை லக்ஷ்மனுடன் ஒப்பிட்டு வருகிறது ஒரு கூட்டம்.. அநியாயம் !) 

Thursday, December 8, 2016

சைத்தான் & பிங்க் - சினிமா விமர்சனம்

பிங்க் - ஹிந்தி

இவ்வருடத்தின் ஒரு அட்டகாசமான படம். இக்காலத்திற்கு மிக தேவையான படமும் கூட.


ஒரு பார்ட்டியில் 3 ஆண்கள் - 3 பெண்கள் சந்திக்கின்றனர். குடிக்கின்றனர். பின்னர் அந்த ஆண்களில் சிலர் பெண்களிடம் தவறாக நடக்க முயல, ஒரு பெண் அவர்களில் ஒருவனை மிக மோசமாக தாக்கி விட்டு சென்று விடுகிறார்கள்.

வசதியும், பின்புலமும் உள்ள அந்த பையன் பெண்கள் விபச்சாரிகள் என்றும்,தன்னை தொழிலுக்கு அழைத்து விட்டு, மறுத்ததால் கொல்ல முயன்றனர் என்றும் போலீசில் புகார் செயகிறான். பெண்களுக்காக வழக்கையெடுத்து நடத்தும் அமிதாப் வழக்கை எப்படி எதிர்கொண்டார் என்பது ரசிக்கத்தத்தக்க இப்படத்தின் கதை.

மிக அற்புதமான கோர்ட் சீன்கள் - அமிதாப்பின் இயல்பான நடிப்பு - தாப்ஸி உள்ளிட்ட பெண்களின் பதை பதைப்பு ...என ரசிக்க ஏராள விஷயங்கள் !

அனைத்தையும் தாண்டி 2 விஷயங்கள் தான் இப்படத்தை ஒவ்வொரு இளம் ஆணும், பெண்ணும்  காண  வேண்டியதாக்குகிறது !

நோ என்பது ஒரு வார்த்தையில்லை; அது ஒரு முழுமையான  சென்டென்ஸ் ! ஒரு பெண் நோ சொன்னால் - அது உங்கள் தோழியோ, காதலியோ, மனைவியோ , செக்ஸ் ஒர்க்கரோ - யாராய் இருந்தாலும் தொடக்கூடாது என்பது மிக அருமையாக - மனதை தைக்கும் படி சொல்லியிருக்கின்றனர் !

போலவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் வளர்க்கும் விதத்தில்  காணப்படும் வித்யாசம்.. ரொம்ப தெளிவாக முகத்தில் அறைகிற மாதிரி சொல்லியிருக்கின்றனர்.

தவற விடக்கூடாத நல்லதோர் படம் ! அவசியம் காணுங்கள் !

சைத்தான் 

எழுத்தாளர் சுஜாதாவின் ஆ நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

Image result for saithan movie

கணினி இன்ஜினையராய் இருக்கும் ஒருவனுக்கு மண்டைக்குள் குரல் கேட்கிறது; அது மாடிக்கு போ; கீழே குதி என்கிற அளவு மோசமாக போக, மன நல மருத்துவரை நாடுகிறார்கள். எதனால் அப்படி நடந்தது, எப்படி சரியானது என்பது 130 நிமிட படம்..

நிச்சயம் வித்தியாச கதைக்களன்.. சொன்ன விதமும்  ஓகே; ஆயினும் சற்று சைக்கோ தனம் நிரம்பியது என பெண்களுக்கு அதிகம் பிடிக்கவில்லை; பில்ட் அப் நன்றாக இருந்தது; காரணமும் நாம் எதிர் பார்க்காத புது மாதிரி  விஷயம் தான்.. இருந்தும் எதோ ஒன்று குறைகிறது. இரண்டாம் பாதி நிச்சயம் அதிகம் கவரவில்லை..

காஸ்டிங் - சரியான ஒன்றாக இருந்தது; நாசர், சாரு ஹாசன் உள்ளிட்ட பொருத்தமான நடிகர்கள்.. காதல், ரொமான்ஸ் இவற்றுக்கு வேலை மிக கம்மி

வித்தியாச திரைக்கதையை தேடி எடுக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துகள்

இம்முறை முதல்வர் மரணமும் சேர்ந்து கொள்ள, படம் நொண்டியடிக்கிறது.

வித்தியாச த்ரில்லர் படம் விரும்புவோர் ஒரு முறை காணலாம்.

Sunday, December 4, 2016

மாவீரன் கிட்டு - சினிமா விமர்சனம்


மாவீரன் கிட்டு: தலைப்பை கேட்டதும் என்ன தோன்றும்? இலங்கை தமிழர் போராளி கிட்டு அவர்கள் பற்றிய கதையோ என்று தானே.. அது தான் இல்லை ! இருப்பினும் இன்னும் ஒரு சமூக பிரச்சனையை தான் தொட்டுள்ளனர் !



கதை

மேல் சாதி- கீழ் சாதி என பாகுபாடு பார்க்கும் கிராமம் ஒன்று.. கீழ் சாதி மக்கள் என்று கூறி குறிப்பிட்ட சமூகத்தினர் சடலத்தை தங்கள் தெரு வழியே எடுத்து செல்ல கூடாது என்று கூறுகின்றனர்.. உயர் நீதி மன்றமே தீர்ப்பு தந்தும் அதை மதிக்க தயாராய் இல்லை சடலம் மட்டும் செல்லலாம் மற்றவர்கள் அல்ல என தூக்க கூட அனுமதிக்க வில்லை  .. படத்தின் இறுதியில் ஒரு மரணம் நிகழ்கிறது.. இம்முறை அம்மக்கள் அனைவரும் செல்கின்றனர்.. எப்படி என்பது தான் திரைக் கதை !

நடிப்பு

ஏறக்குறைய 2 ஹீரோ கதை.. விஷ்ணு மற்றும் பார்த்திபன்.. இருவருமே தங்கள் பாத்திரத்தை சரியாக செய்துள்ளனர்.

கருப்பு சட்டை, வேஷ்டி என படம் முழுதும் ஒரே காஸ்டியூமில் வந்தாலும் ஆழமான பாத்திரத்தில் அசத்துகிறார் பார்த்திபன்.

விஷ்ணுக்கு சவாலான பாத்திரம்.. இறுதியில் இப்படி தான் நடக்க போகிறது என தெரிவதால், அவர் பாத்திரம் பெற வேண்டிய இரக்கம் கிட்டாமல் போகிறது

ஸ்ரீ திவ்யா - முழுக்க காதலுக்கு முக்கிய துவம் தரும் கதை அல்ல. இருந்தும் தனது வாய்ப்பை சரியே பயன்படுத்தியுள்ளார்.

Image result for maaveeran kittu

எரிச்சல் வர வைக்கும் வில்லன் பாத்திரம் தொடர்ந்து வருகிறது.. ஹரி உத்தமனிற்கு  ! ஸ்டிரியோ டைப் ஆகாமல் பார்த்து கொள்ளுதல் நலம் (தொடரியிலும் இப்படி ஒரு மோசமான பாத்திரம் தான் அவருக்கு !)

இயக்கம்

சமூக அக்கறையுள்ள படம் எடுக்க நினைத்தமைக்கு வந்தனம். கதையில் சிறு காட்சி கூட தேவையில்லை என இல்லாமல் செல்கிறது படம்.

பாம்பு கடித்த பெண்ணை மாணவர்கள் தூக்கி சென்று காப்பாற்றும் காட்சி அருமை; சாதாரண தந்தை பாத்திரம்: மகளை கொன்று விட்டு போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சி .. தமிழகத்தில் நடந்த சம்பவம் தான்.. அதிர்கிறது மனது

ஏனோ இரண்டாம் பாதி - முதல் பாதியின் விறுவிறுப்பையும், ரசிப்பையும் தர தவறி விடுகிறது.

கதையின் முக்கிய விஷயம்.. தெருவினுள் சடலம் மற்றும் அதனை தூக்கி செல்ல விடாமை.. உயர் நீதி மன்ற தீர்ப்பில் சடலம் மட்டும் செல்லலாம் என உள்ளது என காரணம் காட்டி - மறுபடி தீர்ப்பு வாங்கி வாருங்கள் என்கிறார்கள். முதல் முறை சரி.. அவசரமாய் அடக்கம் செய்ய வேண்டும்.. பின் நடந்ததை சொல்லி மீண்டும் ஒரு ஆர்டர் வாங்க முடியாதா என்ன? 

2 மணி நேர படம் .. 3 மணி நேரம் ஓடுவது போல் இருக்கிறது .. !


இமான் இசையில் சில பாடல்கள் இனிமை; பின்னணி இசை பொருத்தமாய் செய்துள்ளார். 

இயற்கை கொஞ்சம் சில லொகேஷன்கள் .. (அனைத்தும் தமிழகத்தில் தான் என நினைக்கிறேன் )

சூரியை ஏன் இவ்வளவு சின்ன பாத்திரத்தில் நடிக்க வைத்தனர் என தெரிய வில்லை; அவரும் அறிமுக படுத்திய இயக்குனர் என்பதால் நடித்து கொடுத்துள்ளார். மற்ற படி சினிமாவில் வராத பல முகங்கள் இயல்பாய் வந்து போகின்றனர்.. 

நிறைவாக 

சமூக அக்கறையுள்ள படம் தான்; ஆனால் இன்று மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது fun & entertainment என்பதால், படம் ஓட/ ஹிட் ஆக சாத்திய கூறுகள் மிக குறைவு !

தியேட்டர் கார்னர் 

ரொம்ப நாள் கழித்து சத்யம் தியேட்டருக்கு சென்றோம் (வேளச்சேரி அருகே வீடு என்பதால் பீனிக்ஸ் அல்லது PVR செல்வதே வழக்கம் )

சவுண்ட் சிஸ்டம், ஏசி எல்லாம் அருமை என்றாலும், சீட் இடைவெளி குறைவு - காருக்கு பார்க்கிங் 60 ரூபாயா? PVR மாலே பரவாயில்லை போலிருக்கு !

மற்றபடி மால் தவிர்த்த தியேட்டர்களில் சென்னையில் இதை விட சிறந்த தியேட்டர் இருக்கவே முடியாது !



Saturday, November 19, 2016

நைட் ஷிப்ட் வேலை - விரிவான அலசல்

ல வித மனிதர்களை - அவர்கள் வாழ்க்கை, வேலை குறித்த கேள்விகளோடு வீடுதிரும்பல் மூலம் அவ்வப்போது சந்தித்து வருகிறோம். சென்னை பஸ் கண்டக்டர் பேட்டி வாசித்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த வரிசையில் இரவு நேர பணி செய்யும் ஒரு நண்பர் மூலம் இந்த பணியின் சங்கடங்கள் குறித்து விரிவாய் அறிய முடிந்தது. நமக்கு நன்கு அறிமுகமான பதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமார் தான் நமது கேள்விகளுக்கு மிக அழகாய் பதில் அளித்துள்ளார். இதோ நைட் ஷிப்ட் வேலை குறித்த அவரது பேட்டி:
**************
நீங்கள் எதனால் இரவு நேர பணியை தேர்ந்தெடுத்தீர்கள்? 

இரவுப்பணியை 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர்(நான் உட்பட)விரும்பி தேர்ந்து எடுப்பதில்லை. இந்திய – அமெரிக்க நேர வித்யாசம் ஒன்றே இதற்கு முக்கிய காரணம். அதிர்ஷ்டம் உள்ள சிலருக்கு பகல் பணி கிடைப்பது உண்டு. உதாரணத்திற்கு சிங்கப்பூர் போன்ற க்ளயன்ட் இருக்கும் அணிகளை சொல்லலாம்.

எத்தனை வருடமாக இரவு நேர பணி செய்கிறீர்கள்? தொடர்ந்து எத்தனை வருடம் ஒருவரால் இரவு நேர வேலை செய்ய முடியும்?

நான்கைந்து ஆண்டுகள் இரவுப்பணியில் வெரைட்டி வெரைட்டி ஷிப்ட்களை செய்து உள்ளேன். தொடர் இரவுப்பணி செய்தால் கஷ்டம்தான். ஜிம் பாடி என்றால் இரண்டு ஆண்டு. பிஞ்சு பாடி என்றால் ஓராண்டு தாங்கும். அதன் பின் உடல்நிலை படிப்படியாக மோசமாகும். பிரஷர் இல்லாத டீமில் இரவுப்பணி என்றால் மேலும் ஓராண்டு மைலேஜ் தரும் நம்ம பாடி.

இரவு நேர பணியாளர்கள் பொதுவாய் என்ன விதமான வேலை செய்கிறார்கள்?

எனக்கு தெரிந்து வாய்ஸ் மற்றும் நான் வாய்ஸ் என இருவகை இரவுப்பணிகள் உண்டு. வாய்ஸ் ப்ராசஸ் செய்பவர்கள் பொதுவாக அமெரிக்க எசமான்/நுகர்வோர் கேட்கும் துறை சார்ந்த சந்தேகங்களை போனில் பேசியே தீர்த்து வைப்பார். இதில் இன்னொரு வகை கலக்சன் போஸ்டிங். அதாவது கம்பேனிக்கு காசு தராமல் இழுத்து அடிக்கும் வெளிநாட்டவரை போனில் தாஜா/எச்சரிக்கை செய்து பணம் வாங்குதல். நான் வாய்ஸ் துறையில் இருப்பவர்கள் தப்பு செய்தால் மெயிலில் மட்டுமே திட்டு வாங்குவர். வாய்ஸ் ப்ராசஸ் என்றால் போனிலேயே கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

இரவிலேயே வெவ்வேறு ஷிப்ட் உள்ளதா? என்ன அது?

இரவுப்பணியில் கூட நேர வித்யாசங்கள் உண்டு. இரவு 12, 4 மற்றும் காலை சூரியன் வரும் வரை கல் உடைக்கும் வண்ணம் வெவ்வேறு ஷிப்ட்கள் உண்டு. அதிகாலை கோழி கூவும் முன் துவங்கும் ஆஸ்திரேலிய ஷிப்ட், நள்ளிரவு நாய் ஊளையிடும்போது துவங்கும் கர்ண கொடூர ஷிப்ட், அனைத்திலும் மேலாக இரவு 10 அல்லது 11 மணிக்கு துவங்கி காலை 7வரை கதற கதற அடிக்கும் ஷிப்டும் உண்டு. இதற்கு க்ரேவ்யார்ட் ஷிப்ட் என்று பெயர் வைத்து உள்ளனர். அடியேன் இந்த ஷிப்டில் பல மாதங்கள் கல் உடைத்து உள்ளேன்.

சிலர் இங்கிலாந்து நேரம் என மதியம் 1 மணிக்கு சென்று விட்டு இரவு பன்னிரண்டு மணிக்கு வருகிறார்கள். இவர்கள் பாடு சற்று தேவலாம் என சொல்லலாமா?

நீங்கள் சொல்வது சரிதான். இதற்கு யு.கே ஷிப்ட் என்று பெயர். மதிய உணவு நேரத்திற்கு பின் தொடங்கி அதிகபட்சம் இரவு ஒரு மணிக்குள் முடிந்துவிடும். ஆறு மணி நேரம் நிம்மதியான உறக்கம். அதிகாலையில் அரக்க பரக்க எழுந்திரிக்க வேண்டாம் என்பதால் பலருக்கு பிடித்த ஷிப்ட் இதுதான். குறிப்பாக இந்த ஷிப்ட் துவங்கும் மற்றும் முடியும் நேரத்தில் ட்ராபிக் தொல்லை இல்லாமல் இருப்பது மற்றொரு ப்ளஸ்.

துவக்கத்தில் இரவு விழித்து பகலில் தூங்குவதில் என்ன சிரமம் (உடல் மற்றும் மன ரீதியாக) இருந்தது? அது எப்போது சரியானது அல்லது பழகி போனது?

நினைவு தெரிந்த நாள் முதல் இரவு ஒன்பது மணிக்கு முன் தூங்கி அதிகாலை ஐந்து மணிக்கு துயில் எழுந்த எனக்கு முதலில் முழு இரவுப்பணி (இரவு 11 முதல் காலை 7) கிடைத்தபோது சங்கடமாகத்தான் இருந்தது. பல ஆண்டுகள் விளையாட்டில் நித்தம் ஈடுபட்டவன் என்பதால் உடல் ரீதியாக பிரச்னை பெரிதாக இருந்ததில்லை. அதே சமயம் மனரீதியான பிரச்னை வீட்டில் இருந்தது. “சிவா நைட் ஷிப்ட் போயிட்டு வந்து தூங்கிட்டு இருக்கு போல?” என்று அம்மாவிடம் கேட்டுவிட்டு “நேத்து நாட்டார் கடைல உளுந்து வாங்கனேன். இன்னைக்கு அந்த சீரியல் என்னாச்சி?” என்று பக்கத்து வீட்டு ஆன்ட்டிகள் உரக்க பேசி தூக்கத்தை கெடுக்கும்போது அறைக்கதவை படாரென சாத்தி, கோபத்தில் கத்தி உள்ளேன் பலமுறை.

அம்மன் கோவில் லவுட் ஸ்பீக்கர், பக்கத்து வீட்டு டி..வி.சத்தம், நன்றாக தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில் காலிங் பெல் அடிக்கும் குரியர் ஆட்கள், சேல்ஸ்மேன்கள்...இம்சைக்கா பஞ்சம்..

இரவில் வேலைக்கு நடுவே ஓரிரு மணி நேரம் தூங்க அனுமதி உண்டா?


பெரும்பாலான ஆபீஸ்களில் தூங்க அனுமதி இல்லை. கேப்டீரியாவில் வேண்டுமெனில் சில நிமிடங்கள் குறட்டை விடலாம். வேலை செய்யும்போதே தூங்கி வழியும் ஆட்கள் பலர் உண்டு. அரை தூக்கத்தில் அண்ணன்கள் இருக்கும்போது மவுஸ், கீபோர்ட் போன்றவற்றை ஒளித்து வைத்து விடுவோம். அது தெரியாமல் அவர்கள் வெறும் டெஸ்க்கில் டைப் செய்தல், மாவு பிசைவது போல மவுஸ் இருந்த இடத்தை கையால் ஆட்டுதல் போன்றவற்றை செய்வதை கண்டால் சிரிப்பை அடக்க முடியாது.

பகல் நேரம் நன்றாய் தூங்க முடியுமா? பல்வேறு சத்தங்களும் வெளிச்சமும் இருக்குமே? பகலில் தூங்க தூக்க மாத்திரை உபயோகிப்போர் உள்ளனரா?

ப்ளாட் சிஸ்டம், பங்களாவில் தங்கும் அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் பணக்கார ஊழியர்கள் பெரும்பாலும் நிம்மதியாக தூங்கலாம். சாதாரண வீடுகளில் தங்கி இருப்போர் ட்ராபிக் சத்தம், வீட்டில் இருப்போர் நடமாட்டம், வெளிச்சம் போன்றவற்றை தாங்கி தூங்கி ஆக வேண்டும். இல்லாவிடில் மறுநாள் ஆபீசில் வேலை செய்ய முடியாத அளவிற்கு கண்ணை சொக்கும். தூக்க மாத்திரை உபயோகிப்போர் மிகவும் குறைவுதான்.

இரவு நேரம் பணி என்பதால், ஐந்து நாள் பகலில் தூங்குவோர் வார இறுதியில் எப்படி தூங்குவார்கள்?

சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் அவ்வளவு லேசில் தூக்கம் வந்து விடாது. நள்ளிரவை தாண்டியே விழித்து பழக்கப்பட்ட பாடி ஒத்துழையாமை இயக்கத்தை வீக்கெண்டிலும் விடாமல் பின்பற்றும். இதை நான் டைப் செய்வது கூட சனி இரவு 11மணிக்கு பிறகுதான்.

உங்கள் அலுவலகத்தில் பெண்கள் இரவு நேர டியூட்டி செய்கிறார்களா? ஆண்களுக்கும் அவர்களுக்கும் உடல் அல்லது மன ரீதியாக இரவு நேர பணியில் வேறுபாடுகள் உண்டா?

நிறைய அலுவலகங்களில் பெண்கள் இரவுப்பணியை செய்ய ஆரம்பித்து ஆண்டுகள் சில ஆகின்றன. சோர்வின் காரணமாக மயக்கம் போட்டு விழும் பெண்களும் உண்டு.பெண்கள் இரவுப்பணி வேலைக்கு சேர்ந்த சில மாதங்களுக்கு பின் மிகவும் சோர்ந்து மேலதிகாரிகளிடம் வேறு ஷிப்ட் கேட்பதும், கைக்குழந்தையை பராமரிக்க நேரம் ஒதுக்க வேலையை ராஜினாமா செய்வதும் அடிக்கடி நடக்கும்.

இரவு நேர பணியில் stress-அதிகம் என்பதால், stress relief ஆக ஆண்-பெண் செக்ஸ் அலுவலகத்திலேயே மிக எளிதாக நடக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறதே. இது எந்த அளவுக்கு உண்மை?

மிக எளிதாக நடக்க வாய்ப்பே இல்லை. இது குறித்து எவருடனும் நேரடி விவாதம் செய்ய தயார். நிர்வாகத்திற்கு தெரியாமல் சில ஆர்வக் கோளாறுகள் சேட்டை செய்வது நிஜம்தான். நிறைய டீம்கள் வேலை செய்யும் ஒரு சில அலுவலகத்தின் சாக்கடை கழிவுகளை அகற்றுகையில் கிலோ கணக்கில் காண்டம்கள் இருந்தது செய்தியாகவே வந்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் வாலிபால் ஆடாதவன் எந்த துறையில்தான் இல்லை? சாப்ட்வேர் துறை ஆட்களை மட்டும் அடிக்கடி குறிப்பிட்டு பேசுவது சரியென்று தோன்றவில்லை.

உங்களுக்கு தெரிந்த கணவன் - மனைவி - ஒருவர் இரவிலும் மற்றவர் பகலிலும் வேலை பார்க்கிறார்களா? குடும்பத்தை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்?

இரவு பகல் என வெவ்வேறு வேலை நேரத்தில் இருக்கும் கணவன் மனைவிக்கு பெரிதாக பிரச்னைகள் குறைவு. ஒரே ஷிப்டில் இருந்தால் மண்டை காய்ச்சல் அதிகம். சோர்வாக வீட்டுக்கு வந்த உடன் யார் சமைப்பது, இதர வேலைகளை செய்வது என்று.

திருமணத்தின் போது இரவு நேர வேலை என்பதால் மாப்பிள்ளை அல்லது பெண் வீட்டார் யோசிக்கிறார்களா? மணம் முடிக்க மறுக்கிறார்களா?

உண்மைதான். இரவுப்பணி செய்யும் நபர்களுக்கு கல்யாணம் செய்வது என்பது மன்மோகன் வாயில் இருக்கும் கொழுக்கட்டையை பிடுங்குவதை விட கடினமான செயல். கல்யாணம் நிச்சயம் ஆனதும் பெரும்பாலான பெண்கள் வேலையை ராஜினாமா செய்து விடுவார்கள். ஆண்கள் “கல்யாணம் நடக்குற ஒரு நாளைக்கு முன்னாடி இருந்து எனக்கு பகல் ஷிப்ட் ஆரம்பம் மாமா. உங்க திரிஷாவை எனக்கே தாங்க” என்று அல்வா கிண்டுவார்கள். தாலி கட்டிய மறுநாள் நைட் ஷிப்டுக்கு கிளம்புவார் புது மாப்ளே. இது ஜகஜம்தான் சார்.

இரவு நேர வேலையில் நல்லது எது? கெட்டது எது?

திருவிளையாடல் தருமி டைப் கேள்வி..ரைட்டு. நல்லது என்றால் நைட் ஷிப்டுக்கு கிடைக்கும் அதிக சம்பளம்தான் வேறொன்றும் இல்லை. கெட்டது என்றால் அதே சம்பளத்தை சில ஆண்டுகளில் டாக்டருக்கு மொய் வைக்கும் நிலை வருவதுதான். “ராத்திரி பூரா இத்தனை வருஷம் நாயா உழைச்சனே? அதுக்கு பிரமோஷன் இல்லையா எசமான்?” என்று அப்ரைசல் நேரத்தில் மேனேஜர் சட்டையை பிடித்து யூனியன் தலைவர்(உதாரணம்: ‘துலாபாரம்’ ஏ.வி.எம்.ராஜன், ‘பாசமலர்’ ஜெமினி ) ரேஞ்சுக்கு டயலாக் பேசினால் பருப்பு வேகாது.

இரவு நேர வேலை செய்வோர் வார இறுதி நாட்களை எப்படி கழிக்கிறார்கள்? நீங்கள் எப்படி கழிக்கிறீர்கள்?

இரவு நேரத்தில் வேலை செய்வோர் அதிகபட்சம் சனி அன்று மதியம் அல்லது மாலை வரை நன்றாக ஓய்வு எடுப்பர். நல்ல பிள்ளைகள் ஏதோ ஒரு கோர்சில் சேர்ந்து சனி, ஞாயிறு அன்றும் படித்து கொண்டே இருக்கும். சுமாரான வசதி உள்ளவர்கள் டாஸ்மாக் பாரில், டப்பு பார்ட்டிகள் பப்பில் (தற்காலிக) தோழிகளுடன் சனி இரவில் புரியாத பாஷையில் ஓடும் பாட்டுக்கு மொக்கையாக மூவ்மெண்ட் போட்டு ஆடுவர். நான் கெட்ட பயக்கம் இல்லாத பயபுள்ள என்பதால் அடிக்கடி தியேட்டரில் டென்ட் அடிப்பேன். சினிமா இஸ் மை passion.

சம்பளம் குறைவாக இருந்தாலும் இரவு வேலையை விட்டு விட்டு பகல் நேர வேலைக்கு வரவே பலரும் விரும்புவதாக சொல்கிறார்களே உண்மையா?

முற்றிலும் சரி. 

பல ஆண்டுகள் நைட் ஷிப்ட் மட்டுமே செய்து, தொப்பை விழாத அதிசய பிறவிகளும் உண்டு. அவர்கள் எல்லாம் பிரம்மனால் ஸ்பெஷலாக ஆர்டர் செய்து அனுப்பப்பட்ட ஆஜானுபாகுக்கள்.  இது மிக குறைந்த சதவீதமே

ஆரம்பத்தில் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு விட்டில் பூச்சிகளாக இரவுப்பணிக்கு வருவோர் கொஞ்ச காலம் கழித்து குறைவான சம்பளம் கிடைத்தால் போதும். இந்த 'பேய் பங்களா'வை விட்டு ஓடணும்டா சாமி என்றுதான் நினைப்பார்கள்.  இது தான் பெரும்பான்மையானவர்கள் நிலை !

*******

Thursday, November 17, 2016

பாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்

சென்னையில் இது மாரத்தான் காலம்.. பொதுவாகவே வெய்யில் சற்று குறைந்த அக்டோபர் முதல் ஜனவரி முடியும் வரை பல மாரத்தான்கள் நடக்கும்.

பெரும்பாலான மாரத்தான்களில் நாம் பணம் கட்டவேண்டியிருக்கும். நமக்கு டி ஷர்ட் - காலை உணவு போன்ற செலவுகளை பார்த்து கொள்வர்.

இருப்பினும் முழுவதும் இலவசமான சில மாரத்தான்களும் உண்டு. அப்படி நடந்தது தான் அண்மையில் பில்லர் பேசர்ஸ் என்ற குழு நடத்திய மாரத்தான்.

ஒரு மாரத்தான் எப்படி நடத்த வேண்டும் என இந்த குழுவிடம் கற்று கொள்ள வேண்டும். அனைத்து ஏற்பாடுகளும் அவ்வளவு துல்லியம். ஒவ்வொரு கிலோ மீட்டர் இடைவெளியிலும் வாலன்டியர்கள் மழையில் நின்றபடி எலக்ட்ரால் கலந்த நீர் தந்த படி இருந்தனர்.. எனவே எனர்ஜி குறையாமல் ஓட முடிந்தது. 

ஓடி முடித்ததும்  Physiotherapy team மூலம்செய்த கூல் டவுன் அதி அற்புதம். ஓடிய 500க்கும் மேற்பட்டோருக்கு இளநீர் ஏற்பாடு செய்திருந்தது ஆச்சரியம் !! அப்புறம் அற்புதமான சாப்பாடு. 

மழையில் நனைந்தவர்களுக்கு  துண்டு கொடுத்து தலை துவட்டி கொள்ள சொன்னதெல்லாம் நினைத்து பார்க்க முடியாத விருந்தோம்பல் !

நிகழ்ச்சி துவங்கும் முன் மழை பெய்வதால் காத்திருக்க, அப்போது நரேஷ் அய்யரை கண்டேன். அவர் தானா என சந்தேகம். அருகில் சென்று உங்கள் பேர் என்ன என்று கேட்க, நரேஷ் என்றார். அப்புறம் அவர் தான் என தெரிந்ததும், அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தேன். 

மழை தொடர்ந்து கொண்டே போனதால் - கொஞ்ச நேரம் அவரிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது; வெளிச்சம் அதிகம் வரவில்லை; எனவே பலரும் அவரை அடையாளம் கண்டு கொண்டு வந்து பேசவில்லை (ஓடி முடித்ததும் ஏராள மக்கள் அவருடன் சேர்ந்து படம் எடுத்து கொண்டனர்.. குறிப்பாக பெண்கள் !)

பிறந்து வளர்ந்தது மும்பை என்றாலும் எப்போதுமே சென்னை - மும்பை என மாறி மாறி இருப்பதாக சொன்னார். இப்போதும் அசோக் நகரில் வீடு இருக்கிறதாம். எனவே மாரத்தான் நடத்தும் குழுவில் சிலரை நன்கு தெரிந்திருக்கிறது 

முன்பே வா என் அன்பே வா பாடல் பற்றி பேசாமல் இருக்க முடியாது ; இது வரை வந்த மொத்த தமிழ் பாடல்களில் சிறந்தவற்றை பட்டியலிட்டால் அதில் அந்த பாட்டு வந்து விடும் என்றேன். சிரித்தபடி " எல்லா க்ரெடிட்டும் ரகுமான் சாருக்கு தான் " என்றார். "அந்த பாட்டு தான் உங்களுக்கு signature பாட்டு மாதிரி ஆகிடுச்சு இல்லை?" என்றேன். "ஆமாம் " என்றார். மெலடி தான் அதிகம் பாடுகிறீர்களோ என்றதற்கு - அவ்வப்போது பாஸ்ட் பீட் பாட்டுகளுக்கும் கூப்பிடுகிறார்கள்; அண்மையில் கெத்து படத்தில் பாடிய வேகமான பாட்டு நன்கு ரீச் ஆனது என்றார். 

முதல் முறை ஓடுவதாக சொன்னார். ஆனால் டென்சன் இல்லாமல் கூல் ஆக தான் இருந்தார். 

எந்த ஆடம்பரமும் இல்லை; மராத்தான் முடித்த பின் பலரும் வந்து படமெடுக்க, சிரித்தபடி ஒத்துழைத்தார். 

நாமெல்லாம் மொபைலை சும்மாவே நொண்டி கொண்டிருப்போம். அங்கிருந்த சில மணி நேரத்தில் அவர் கையில் மொபைலை காண வில்லை; எந்த டைவர்ஷனும் இல்லாமல் முழுக்க முழுக்க மாரத்தான் அனுபவத்தை மட்டுமே என்ஜாய் செய்தார். 

பெரிய மாரத்தான் என்றால் கூட்டம் அதிகமாய் இருக்கும் - இது போன்ற 400- 500 பேர் ஓடும் மாரத்தான் என்றால் அதிகம் பிரச்சனையில்லை என நினைத்திருக்கலாம்.

ஓடி முடித்த பின்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்; அவரது குரலும், பல பாடல்களும் எனக்கும் மட்டுமல்ல - மகளுக்கும் மிக பிடித்தமானவை; வீட்டில் வந்து பெண்ணிடம் சொன்னதும், வராமல் போனதற்கு ரொம்பவும் மிஸ் செய்தாள் !

மரத்தானில் எடுத்த புகைப்படங்கள் சில..  

மழை நிற்கும் வரை நரேஷ் அய்யருடன் ஒரு உரையாடல் 

வைப்ரன்ட் வேளச்சேரி ரன்னிங் குழுவுடன் ..(நான் அவ்வப்போது செல்வது இங்கு தான் .. அருகில் உள்ளதால் )

10 கி. மீ ஓட்டம் துவங்குகிறது 

ஓட்றா ..ஓட்றா ஓட்றா !!!

நரேஷ் ஓடுகிறார் 
எப்ப 5 கி. மீ வரும்? எப்ப பாதி தூரம் முடிச்சி திரும்ப ஓட ஆரம்பிப்போம் ??

மழையில் புகைப்படக்காரரும் குழந்தைகளும் 


மழையிலும் பைக்கில் சென்ற படி புகைப்படம் எடுக்கும் வாலன்டியர்கள் 


வாகனங்கள் எதிர் திசையில் மட்டுமே அனுமதி. வழியெங்கும் போலீஸ் நின்று உதவினர் ....


ஐ.. அதோ முடியுற இடம் கண்ணில தெரியுது !!!


ஓடி முடிச்சாச்சு.. மெடலு வாங்கியாச்சு 



ஓடி முடித்ததும் மிக அருமையாக அவர்களே கூல் டவுன் உடற் பயிற்சிகள் செய்தனர்

Bluedart  நண்பர்கள் ..நாங்கள் இணைந்து தான் ஒன்றாக சென்றோம்
ACS நண்பர் சரவணன் (எனக்கு இடது) மற்றும் அவரது ரன்னிங் குழு நண்பர்களுடன் ..மாரத்தான் முடித்த சந்தோஷத்தில்.. மழையில்  !

                                                நரேஷ் அய்யருடன் ஒரு புகைப்படம் 
****
புகைப்படங்களுக்கு நன்றி: Nithins Photography, ஆர்த்தி சுவாமி நாதன் மற்றும் பில்லர் பேசர்ஸ் குழுவினர்
****
தொடர்புடைய பதிவுகள்

உடல் எடை குறைப்பு: உணவாலா? உடற் பயிற்சியாலா: ஒரு நேரடி அனுபவம்

மராத்தான் ..சில தவறான புரிதல்கள்

சென்னையின் மாபெரும் - விப்ரோ மாரத்தான்.. சில பாசிட்டிவ் & நெகட்டிவ்

முதல் மாரத்தான் அனுபவங்கள் 


Friday, November 11, 2016

அச்சம் என்பது மடமையடா - சினிமா விமர்சனம்

நூறு  ரூபாய் - ஆயிரம் ரூபாய் விஷயம் தீப்பற்றி எரியும்போது - படத்தின் பெயருக்கேற்ப தைரியமாக வெளிவந்துள்ளது - அச்சம் என்பது மடமையடா !

Beep பிரச்சனைக்கு பிறகு வெளிவரும் சிம்புவின் படம்; நிச்சயம் சிம்பு படம் என்பதால் காணவில்லை; கவுதம் மேனனுக்காக தான் தியேட்டரில் பார்த்தது ! வெகு சில படங்கள் தவிர அவரது பல படங்கள் ரசிக்கும் வண்ணமே இருக்கும் ! அந்த நம்பிக்கையை கவுதம் காப்பற்றினாரா?

கதை 

(முழு கதையும் சொல்லவில்லை; கவலை வேண்டாம் )

தன் தங்கையின் தோழி மஞ்சிமாவை காதலிக்கிறார் சிம்பு; அவரது ஊருக்கு செல்லும்போது - ஒரு கூட்டம் அவரது குடும்பத்தையே பழி வாங்க அலைவது தெரிகிறது; காப்பாற்றினாரா என்பது டிபிக்கல் கவுதம் மேனன் ஸ்டைலில்  திரையில் விரிகிறது !



Image result for acham enbathu madamaiyada

ஒரு டிக்கெட்டில் இரண்டு படம் 

முதல் ஒரு மணி நேரம் முழுக்க ரொமான்ஸ்... அட்டகாசமான 5 பாடல்களும் முதல் ஒரு மணியில் முடிந்து விடுகிறது. ஒவ்வொரு பாட்டுக்குமான சூழல், அதை படமாக்கிய விதம் அனைத்தும் அழகு

தள்ளி போகாதே பாடல் ஆரம்பிக்கும் இடம் அதிர்ச்சி ! என்னடா இந்த இடத்தில் பாட்டா என நினைத்தாலும் - பாடல் முடியும் முன் - அந்த புதிரை சிறிது சிறிதாக விடுவிக்கிறார்

அந்த ஒரு மணி நேரம்முடிந்ததும் -  ஆக்ஷன் படம் துவங்குகிறது; பின் ரொமான்ஸ் மிக அரிதாக ஓரிரு நிமிடமே வருகிறது

ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் எடுக்க எண்ணி இரண்டு வெவ்வேறு ஜானர் கலந்து படம் தந்துள்ளார் !

சிம்பு - மஞ்சிமா 

சிம்பு எவ்வளவு திறமையான நடிகர்.. ஆனால் இவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதம் பல படங்களில் மகா மோசம் ! தேவையற்ற பில்ட் அப் - லிட்டில் சூப்பர் ஸ்டார் என சொல்லி கொள்வது - இதையெல்லாம் விடுத்து இப்படிப்பட்ட இயக்குனர் கையில் கிடைக்கும் போது மட்டும் தான் சரியாக வெளிப்படுகிறார். இந்த படத்தில் கடைசி 10 நிமிடம் தவிர்த்து மற்ற நேரம் ரொம்ப apt !


மஞ்சிமா - முதல் பாதியை நாம் ரசிக்க முக்கிய காரணம். சிறிதே பூசிய உடல் வாகு எனினும் கேரளத்து பைங்கிளி; இரண்டாம் பாதியில் இவர் அழகை துளியும் ரசிக்க இயலாமல் கதை நகர்கிறது


ரகுமான் 

சந்தேகத்திற்கிடமின்றி படத்தின் இன்னொரு ஹீரோ ரகுமான் தான்.. என்னா மாதிரி பாட்டுகள் ! இந்த வருடத்தில் மிக சிறந்த ஆல்பங்களில் ஒன்று. முதலில் கேட்கும் போது 3 பாட்டுகள் பிடித்தது; படத்தோடு பார்க்கையில் அனைத்துமே அட்டகாசம் !


கவுதம் 

போலீஸ் கதையில் கவுதம் மேனனின் ஆர்வம் குறையவே குறையாது போலும் ! எல்லா ஹீரோவுக்கும் ஒரு போலீஸ் ஸ்டோரி தந்து விடுகிறார்.

காதலை இவரை போல் அழகாய் காட்ட - தமிழில் இயக்குனர்கள் மிக குறைவு. காதல் உருவாவதை  - பூ மலர்வது போல ரசித்து எடுக்கும் இவர் இளைஞர்களின் பிரிய இயக்குனராக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

இரண்டாம் பகுதியில் லாஜிக் மீறல்கள் மற்றும் முதல் பகுதியின் ஸ்வீட் நெஸ் இல்லாமல் போனது மக்களிடம் எப்படி ரசிக்கப்படும், எடுபடும் என தெரியவில்லை.

Image result for acham enbathu madamaiyada

ஹிட்டா ? மிஸ்ஸா ? 

சிம்புவின் நேரம் .. அரிதாக அவர் படம் சொன்ன படி ரிலீஸ் ஆக, வேறு பல விஷயங்கள் படத்தின் வசூலை பாதிக்கிறது. ஆன்லைனில் டிக்கெட் புக்  செய்து  பார்க்கும் சென்னை போன்ற மல்டிப்ளக்ஸ்களில் - 500- 1000 ரூபாயால் சிறிதளவே பாதிப்பிருக்கும். தஞ்சை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் படம் முதல் வார இறுதியில் full ஆகி ஓடுவதே மிக கடினம்.

வேறு நேரத்தில் வந்திருந்தால் - தோற்காமல் தப்பித்திருக்கும் படம்; இப்போது கமர்ஷியல் ஹிட் ஆவது மிக கடினம் !

பைனல் வெர்டிக்ட் 

நான், மனைவி, மகள் - மூவர் பார்த்தோம்; எனக்கு படம் - ஓகே; அவர்கள் இருவருக்கும் சுத்தமாய் பிடிக்க வில்லை !

பீல் குட் படம்; இளைஞர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்; லாஜிக் மீறல்களை மறந்து ஜாலியாய்  ஒருமுறை காணலாம்.. கவுதம் மேனன் மற்றும் AR ரகுமானுக்காக !

Sunday, November 6, 2016

பெயில் குறித்து : நீங்கள் அறிய வேண்டிய அனைத்தும் ...

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

வாரண்ட் இன்றி போலிஸ் எப்போது கைது செய்யலாம்

நீங்கள் கைதானால் உங்கள் உரிமைகள்

**************
ழக்குகளை அதன் தீவிரத்தை பொறுத்து பெயிலில் வரக்கூடிய வழக்கு என்றும் பெயிலில் வர முடியாத வழக்கு என்றும் பிரிக்கலாம்.

பெயிலில் வரக்கூடிய வழக்குகள்

இவை பெரும்பாலும் சிறு குற்றங்களாகும். இத்தகைய குற்றங்களில் காவல் துறை அதிகாரியே காவலில் உள்ளவரை பெயிலில் விடுவிக்கலாம். ஜாமீன் தருவோர் இன்றி கூட குற்றம் சாட்டப்பட்டவரிடமே ஜாமீன் பெற்று கொண்டு அவரை பெயிலில் விடலாம்

பெயிலில் விடுவிக்க முடியாத வழக்குகள்

"பெயிலில் விடுவிக்க முடியாத " என்பதன் பொருள் காவல் துறை அதிகாரியால் பெயிலில் விட முடியாது அதை ஒரு நீதிபதி தான் செய்ய முடியும் என்பதுதான்.

நீதிபதி குற்றவாளி குறித்த முதற்கட்ட முடிந்த பின் அவரை பெயிலில் விடுவிக்க கூடும். அவர் தான் குற்றம் புரிந்தார் என்பதற்கு நியாயமான காரணம் இல்லை என்பதாலும் வழக்கு முடிவதற்கு இடையிலும் பெயிலில் செல்ல நீதிபதி அனுமதிப்பார்

                                                       

பெயிலில் விட  மறுக்க  போலிஸ் பொதுவாக கூறும் காரணங்கள்

 1. குற்றவாளி விசாரணையின் போது ஆஜராக மாட்டார்

2. சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்

3. பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் குற்றம் புரிவார்

 4. காவல் துறையின் விசாரணை இன்னும் முடியவில்லை

 5. திருட்டு போன பொருட்கள் இன்னும் கைப்பற்ற படவில்லை

 6. குற்றம் புரிய பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்றபட்வில்லை

 7. சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

 குற்றம் சாட்டப்பட்டவர் போலீசார் கூறும் இத்தகைய கூற்றுகளை மறுக்கவேண்டும். அவற்றை மறுக்கவிடில் பெயில் கிடைப்பது கடினம்

பெயிலில் வர மனு

குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு பெயில் அப்ளிகேஷன் போட ஒரு வழக்கறிஞரை நியமிப்பது மிக நல்லது. அதற்கான மனு அவர் நீதிபதியின் முன் தரவேண்டும் (பெரும்பாலும் வெளியில் இருக்கும் நண்பர் அல்லது உறவினர் வழக்கறிஞரை பார்த்து விட்டு, அதற்கான கையெழுத்து மட்டும் குற்றம் சாட்டப்பட்டவரிடம் வாங்குவர் )

வழக்கறிஞரை அமர்த்திக்கொள்ள இயலாதென்றால் குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதிக்கு மனுசெய்யலாம் (பொது மக்களுக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியாது என்பதால் தானே வாதிடுவதை பொதுவாய் தவிர்ப்பது நல்லது)

பெயில் மனுவில் பொதுவாய் கீழ்க்காணும் காரணங்கள் சொல்லபடுகின்றன

1. பெயிலில் செல்லாவிடில் தனது வேலையை இழக்க நேரிடும்

2. தான் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் பாதிக்கப்படுகிறது

3. காவலில் இருப்பவருக்கு உடல்நலமில்லை, சிகிச்சை எடுப்பது வெளியில் தான் சாத்தியம்

பெயில் மறுப்பும் மேல் முறையீடும்

பெயிலில் விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும். அதன் அடிப்படையில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும்.

ஒருவரது பெயில் தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்

ஆண்டிசிபேட்டரி பெயில் (Anticipatory Bail)

ஒருவர் தன் எதிராளிகளால் பொய்யான வழக்கு தன் மீது போடப்பட்டு சில நாட்களாவது தன்னை சிறை வைக்க முயல கூடும் என எண்ணினால் ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் கேட்டு மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு

இதற்கான மனுவை அவர் மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யலாம். வாரன்ட் இல்லாமல் போலிசால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன் தர தயார் என்றால் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் மூலம் நீதிமன்றம் உறுதி செய்கிறது .

*********
அண்மை பதிவுகள் :

வானவில் + தொல்லை காட்சி: எஸ். ரா Vs சாரு, நீயா நானா, பியா இன்னபிற

உணவகம் அறிமுகம் : சுக நிவாஸ் லஸ் கார்னர்

Friday, October 28, 2016

கொடி : சினிமா விமர்சனம்

தனுஷுக்கு கடந்த சில வருடங்களில் வேலை இல்லா பட்டதாரி தான் மாஸ் ஹிட்; மாரி  போட்ட பணத்தை எடுத்ததால் சுமாரான ஹிட் என்று கேள்வி. (படம் மற்றும் பொதுவான ரிவியூ மிக மோசம் !)

கொடியாவது கை  கொடுத்ததா?

கதை 

இரட்டை பிறவிகள் தனுஷ்.. ஒருவர் நேர்மையான அரசியல் வாதி.. தம்பி கல்லூரி ஆசிரியர்.. த்ரிஷா மற்றும் அனுபமா இருவருக்கும் காதலிகள்..

தனுஷ் மற்றும் அவரது காதலி த்ரிஷா தேர்தலில் எதிர் எதிரே போட்டியிடும் சூழல்.. இதற்கு பின் நிகழும் விஷயங்கள் நிச்சயம் திடுக்கிட வைப்பவை  !

தனுஷ் - த்ரிஷா 

படத்தை அசால்ட்டாக சுமப்பது தனுஷ்.. 2 பாத்திரத்துக்கு நல்ல வித்யாசம் காட்டுகிறார்.

த்ரிஷா - பாத்திரம் செம வித்யாசம் ! நீலாம்பரியை மனதில் வைத்து - அந்த அளவு வரணும் என நினைத்து  செய்துள்ளனர். நீலாம்பரி அளவு இல்லா விடினும் - நிறைய சர்ப்ரைஸ் இருக்கு இவர் பாத்திரத்தில்

மற்றொரு நாயகி அனுபமா ப்ரேமம் படத்தில் நடித்தவர். அழகு + நடிப்பு இரண்டிலும் அருமை; தமிழில் நிறைய நடிங்க மேடம் !

Image result for kodi film

கதை மற்றும் இயக்கம் 

அரசியல் மற்றும் தேர்தல் என வித்தியாச கதை களம் .. தேவையற்ற காட்சிகள் அநேகமாய் இல்லை (சில சண்டை அல்லது பாடல் காட்சிகள் தவிர்த்து ) கதை எடுத்து கொண்ட விஷயத்தில் சரியே பயணிக்கிறது.

நேர்மையான அரசியல் வாதி (தனுஷ்) Vs நேர்மையற்ற அரசியல் வாதி (த்ரிஷா) என இரண்டு பாத்திரங்களை அமைக்கும் போதே சுவாரஸ்ய காட்சிகளுக்கு பேஸ் அமைந்து விடுகிறது !

இரண்டாம் பகுதியில் பல சின்ன சின்ன சர்ப்ரைஸ் உள்ளது; கதை தெரியாமல் பார்த்தால் அவற்றை ரசிக்கலாம்.

Image result for kodi film

மண்ணாசை பெண்ணாசை இந்த இரண்டையும் விட மோசமானது பதவி ஆசை என்பார்கள். படம் இந்த கருத்தை சுற்றியே தான் சுழல்கிறது .

மொத்தத்தில் 

படம் எங்களுக்கு நிரம்ப பிடித்திருந்தது; ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்சும் தியேட்டரில் நன்றாகவே இருந்தது; (நான்கைந்து குட்டி பசங்க படம் முடிந்து வரும் போது " செமையா இருந்துச்சு படம்" என பேசிக்கொண்டு போனது ஸோ சுவீட்)

 இருப்பினும் தேர்தல் - அரசியல் போன்ற விஷயங்கள் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் பிடிக்காமல் போகவும் செய்யலாம் !

கொடி - நிச்சயம் ஒரு முறை காண வேண்டிய படம்  !

***********
அண்மை பதிவு : 

காஷ்மோரா சினிமா விமர்சனம்

காஷ்மோரா : சினிமா விமர்சனம்

காஷ்மோரா பார்க்க 2 காரணங்கள்: முதலில் ட்ரைலர் - நிச்சயம் இது வித்தியாச படம் என சொல்லியது; இரண்டாவது இயக்குனர் கோகுல். இவரின் இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட காமெடி எனக்கு மிக பிடித்தமான ஒன்று; விஜய் டிவியில் இப்படம் அடிக்கடி போட்டாலும் அலுக்காமல் பார்த்து சிரிப்பேன்.

அதனை விட வித்தியாச genre -ல் இப்படம்.. எப்படி இருக்கிறது காஷ்மோரா?

கதை 

பேய் விரட்டுபவர் என சொல்லி ஊரை ஏமாற்றும் கூட்டம் கார்த்திக்- விவேக்குடைய குடும்பம்.

இவர்களை குடும்பத்தோடு யாரோ எதற்கோ கடத்தி செல்கிறார்கள்.. எதற்கு கடத்தப்பட்டார்.. தப்பித்தாரா என்பதை வெண் திரையில் காண்க

Kaashmora (aka) Kasmora #4

பிளஸ் 

கோகுல் காமெடியில் அசால்ட்டாக விளையாடுவார் என்பது தெரிந்த விஷயம்; இங்கும் கூட காமெடி தான் படத்தை ரசிக்க வைக்கிறது

கார்த்திக்கு கிட்டத்தட்ட சிறுத்தை படத்து திருடன் மாதிரி செம காமெடி காரெக்டர்.. மனுஷன் அழகாக செய்துள்ளார். உடன் விவேக்கும் முடிந்த வரை ஸ்கொர் செயகிறார்.. இவர்களின் சில கூத்துகள் "மேல்மருவத்தூர் " குரூப்பை நினைவு படுத்துகிறது.

நயன்தாரா இடைவேளைக்கு பின் வந்தாலும் - நினைவில் நிற்கிறார். மாற்றாக ஸ்ரீ திவ்யாவிற்கு ஏனோ தானோ பாத்திரம். ஹீரோவே அவரை அடிக்கடி லூசு என்றே அழைக்கிறார் (நயன் - ஸ்ரீ திவ்யா இருவருமே - கார்த்திக்கு ஜோடி இல்லை.. ரொம்ப ஆச்சரியமான விஷயம் தான் இது )
Image result for kashmora heroine

ஹீரோ மட்டுமல்ல - வில்லனும் கார்த்தி தான்.இதனால் மனிதருக்கு செம ஸ்கொப்

மைனஸ் 

ட்ரைலரில் ராஜா, போர் என நிறைய எதிர் பார்க்க வைத்து விட்டார்கள்.  அந்த பகுதி முக்கால் வாசி படம் தாண்டிய பின் தான் வருகிறது, ஆனால் அது மனதை பாதிக்கும் வண்ணம் இல்லை; உண்மையில் அந்த பகுதியை விட கார்த்தி- விவேக் ஏமாற்றும் நிகழ் காலமே ரசிக்கும் வண்ணம் உள்ளது; பிளாஷ் பேக்  பன்ச் ஆக இல்லாமல் போனது தான் படத்தின் பெரும் மைனஸ்

பிளாஷ் பேக் போரில் ஒரு படையையே - கார்த்தி ஒரே ஆளாய் வெட்டி கொள்வதெல்லாம்.. காதுல பூ

கம்பியூட்டர் கிராபிக்ஸ் வேலை ரொம்ப ரொம்ப சுமார்

இறுதி அனாலிசிஸ்

பேய், காமெடி காட்சிகள் நிச்சயம் குழந்தைகளை கவரும்.

வித்தியாச கதை காளன்  மற்றும் காமெடிக்காக ஒரு முறை காணலாம்.

காஷ்மோரா: Good. Could have been better !

***********

கொடி  : சினிமா விமர்சனம்

வானவில்: ரெக்கை- ஏறுமாறான கேஸ் சிலிண்டர் விலை-தீபாவளி படங்கள்

பார்த்த படம் : ரெக்கை 

விஜய் சேதுபதிக்கு மாஸாய் ஒரு படம் நடிக்க ஆசை; அதில் ஒன்றும் தப்பில்லை; ஆனால் கதையில் ஒரிஜினாலிட்டி மற்றும் சுவாரஸ்யம் இருந்திருக்க வேண்டும் !

கில்லி படத்தில் இருந்து inspire ஆன கதை என நினைக்கிறேன். கில்லியில் பாடல்கள், காமெடி இரண்டுமே ரசிக்கும்படி இருக்கும். இங்கு இரண்டும் படுத்து விட்டது.

போதாக்குறைக்கு ஹீரோயின்... !! தமிழ் சினிமாவில் ஹீரோயினை லூசு பெண்ணாய் காட்டுவதில் ஆச்சரியமே இல்லை;  "இதுவரை வந்த எல்லா லூசு ஹீரோயினுக்கும் ராணியாக இருக்கிறார்- இந்த பட ஹீரோயின் " என ஹிந்து பத்திரிக்கை மிக சரியாக எழுதியது.

லூசுத்தனம் ஒரு புறம் என்றால்- ஏழெட்டு ரவுண்டு அதிகமாய் போட்ட மேக் அப் வேறு பயமுறுத்துகிறது. கிட்டத்தட்ட ஒயிட் வாஷ் செய்த மாதிரி தான் இருக்கிறார் லட்சுமி மேனன் (அவரது நிஜ கலரை கும்கியில் பார்த்திருக்கோமே!)

சண்டைகளில் - ஹீரோ அடித்தால் எல்லாரும் அந்தரத்தில் பறக்கிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் ஹீரோவிற்கு அடுத்த அதிக செலவு - சண்டையில் ரோப் கட்டி பறக்க வைத்தமைக்கு தான் இருக்க வேண்டும்.

50 பேராக வந்து ஹீரோவோடு சண்டை போடுகிறார்கள். 50 பேரையும் ஹீரோ பறக்க விடுகிறார். ஒவ்வொருவராய் மட்டுமே வந்து அடி வாங்குகிறார்கள். கொடுமை !

ரெக்க - மொக்க !

அழகு கார்னர் 

ஸ்ரீ திவ்யா 
கேஸ் சிலிண்டர் விலை 

கேஸ் சிலிண்டர் விலை முன்பெல்லாம் ஒரே நிலையில் இருக்கும்; சற்று விலை ஏற்றம் நிகழ்ந்தால் பெரும் சத்தம் எழும். ஆனால் சமீப காலத்தில் கேஸ்  விலை ஒவ்வொரு மாதமும் மாறி கொண்டே இருக்கிறது.. ஆனால் எந்த சத்தமும் காணும் !

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம்; எல்லா நேரமும் விலை ஏற்றம் மட்டுமே நிகழவில்லை; சில நேரம் குறையவும் செய்கிறது ! ஒன்றாம் தேதி மாறும் விலை - அந்த மாதம் முழுதும் நீடிக்கிறது.

இருக்கட்டும்.. சிலிண்டர் போடும் பசங்க செய்யும் அநியாயம் மட்டும் மாறவே இல்லை; 40 ரூபாய்க்கு ஒரு ரூபாய் கம்மியாய் தந்தாலும் கன்னா பின்னாவென்று கத்துகிறார்கள் ! தருவதோ டிப்ஸ் ! இதில் நாமாய் பார்த்து தருவதை - வாங்கி கொள்ளாமல் அவங்க போடுற சவுண்ட் ஓவராய் இருக்குது மை லார்ட் !

ஜீ தமிழில் Fat VS Fit நிகழ்ச்சி

தமிழ் தொலை காட்சியில் 100 கிலோவிற்கு மேல் இருக்கும் ஆண்/ பெண் 8 பேரை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி Fat VS Fit. கொஞ்ச நாள் முன்பு தான் விஜய் டிவியில் ஒல்லி பெல்லி என இது போல ஒரு நிகழ்ச்சி வந்தது.

ஒவ்வொருவரையும் அழைத்து "குண்டா இருக்கறதுக்கு நீங்க வருத்தப்படுறீங்களா ? (பின்னே சந்தோஷப்படுவாங்களா?) எப்ப ரொம்ப பீல் பண்ணீங்க " என ஒரே மாதிரி கேள்விகள்.

குறிப்பிட்ட காலத்தில் யார் அதிக எடை குறைக்கிறார்கள் என்பது தான் போட்டி. சென்னையை சேர்ந்த கலர்ஸ் என்கிற நிறுவனம் இதனை  நடத்துகிறது; எனவே நிகழ்ச்சி நடக்கும்போதே திரையில் அவர்கள் நிறுவனம் குறித்த விளம்பரங்கள் ஓடி கொண்டே இருப்பது பெரும் இடைஞ்சல்.

என்ன கொடுமை சார் இது !

தென்காசி அருகே சர்க்கரை நோய்க்கு புதிதாக - தானே தயாரித்து மருந்து  கண்டு பிடித்தேன் என ஒரு டாக்டர் (??) அறிவித்து, அந்த மருந்தை நோயாளிகள் சிலருக்கு (அனைவரும் 40 வயதை ஒட்டியவர்கள்)  தந்திருக்கிறார். மூவர் உடனே  மயங்கி  விழ, மருந்தில் ஒன்னும் பிரச்சனை இல்லை என  நிரூபிக்க தானும் குடித்து  காட்டியுள்ளார்.சில நிமிடங்களில் நோயாளிகள் மூவர் மட்டுமல்ல, மருத்துவரும் இறந்து விட்டார் !

மருத்துவர் என சொல்லி கொண்டு இருக்கும் Quack களை எப்போது தான் முழுவதுமாக ஒழிக்க போகிறோமோ?

கிரிக்கெட் கார்னர்

டெஸ்ட் மேட்ச்களில் வழிந்து கட்டிய நியூசிலாந்து ஒன் டே மேட்ச்களில் நன்றாகவே ஆடுகிறது. இருப்பினும் இந்தியா தோற்ற 2 மேட்ச்களும் ஜெயித்திருக்க வேண்டியவை ! 240-260 ரன்களை இந்த 2 மேட்ச்களிலும் அடிக்காமல் இந்தியா தோற்றது அநியாயம் ! இரண்டு மேட்சிலும் கோலி சீக்கிரம் அவுட் என்பது கவனிக்க படவேண்டிய  விஷயம்.ஒரு காலத்தில் சச்சினை நம்பியிருந்தது போல் இப்போது கோலியை தான் இந்திய அணி பெரிதும்  நம்புகிறது.இத்தகைய Over dependency அணிக்கு நிச்சயம் நல்லதல்ல !

பேட்டிங்கில்  கோலி  தவிர,தோனி தான் ஓரளவுக்கு அடிக்கிறார். ரோஹித் மற்றும் ரஹானே ஒரு மேட்சிலும் நல்ல ஓப்பனிங் தரவில்லை; நல்ல 2 வீரர்கள் இவர்கள் இருவரும்.. அனுபவம் வாய்ந்தவர்களும் கூட.. இந்திய பிட்சில் கூட அடிக்கா விட்டால் என்ன சொல்வது !

மிடில் ஆர்டரும் மிக புதியவர்கள் .. மனிஷ் பாண்டே மற்றும் கேதார் ஜாதவ்.. இருவரும் சொல்லி கொள்கிற மாதிரி இதுவரை ஸ்கொர் செய்யவில்லை (பாண்டே முன்பு ஆஸ்திரேலியாவில் ஒரு செஞ்சுரி அடித்தவர் !)

யுவ்ராஜிற்கு ஏன் வாய்ப்பு தவறவில்லை என்பது புரியாத புதிர் !

தீபாவளி படங்கள்

காஷ்மோரா மற்றும் கொடி என தீபாவளிக்கு வெளியாகும் 2 படங்களுக்கும் டிக்கெட் போட்டாச்சு. இன்று இரவு/ நாளை 2 பட விமர்சனமும் வீடுதிரும்பலில் வெளியாகும் !

அண்மை பதிவுகள்  : 

காஷ்மோரா சினிமா விமர்சனம்

கொடி  : சினிமா விமர்சனம்

Thursday, October 27, 2016

ஜெயமோகனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?

ணையத்தில் ஒரு வீடியோ சில நாட்களாக சுற்றி  வந்தது;வங்கியில் பணி புரியும் ஒரு பெண்மணி மிக மெதுவாக  பணத்தை எண்ணி தருவதை காட்டும் வீடியோ அது.



இதனை யாரோ ஒருவர் ஜெயமோகனுக்கு அனுப்பி  வைக்க,அந்த பெண்மணி ஒரு தேவாங்கு, அடித்து வெளியே துரத்தணும்; வீட்டில் போய் கீரை ஆய்ந்தால் கூட நன்றாக செய்வாரா என  எழுதியிருந்தார்.


ஜெயமோகன் எழுதியது:

தேவாங்கு
“நியாயப்படி இந்தக்கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல.

இது திறமையின்மை மட்டும் அல்ல. நெடுங்காலமாக மூளையை எதற்குமே பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது ஏற்படும் சோம்பல். அதைவிட முக்கியமாக எதிரே நிற்பவர்களைப்பற்றிய பரிபூர்ணமான அலட்சியம்.

எனக்கு இரு தேசியவங்கிகளில் கணக்கு இருக்கிறது. கனரா வங்கியிலும் ஸ்டேட் வங்கியிரும் இதே அனுபவம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. நேற்றுகூட. இவைகளை அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது, சோஷலிசம்!”.
**********************
ந்நிலையில் இந்த பெண்மணி பற்றி வந்திருக்கும் இந்த தகவலை பாருங்கள்




மீண்டும் ஜெயமோகனுக்கு வருவோம்; தான் யார்.. எந்த உயரத்தில் இருக்கிறோம் என்பது புரியாமல், இணையத்திற்கு புதிதாய் வந்து சலம்பும் விடலை பையன் போல எந்த ஒரு முதிர்ச்சியும் இல்லாமல் ஜெயமோகன் எழுதியது பெரும் ஏமாற்றம்..

வீடியோவை பார்க்கும் போது நிச்சயம் அந்த பெண்மணி எதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர் என தெளிவாக தெரிகிறது. உடல்நிலை/ மனநிலை சரியில்லாதவர் என்பதை நிச்சயம் ஊகிக்க முடிகிறது; ஒருவரின் அனுமதி இன்றி அவரை வீடியோ எடுப்பதே  தவறு;குறைந்த பட்சம் முகத்தை மறைத்தாவது அதை வெளியிட  வேண்டும்.

பெண் என்பதால் - கீரை ஆய சொல்லி  சொல்கிறார் பாருங்கள் .. அங்கே  தெரிகிறது ஜெயமோகனின் நிஜ மனது.

இப்போது அந்த பதிவை அகற்றி விட்டார்.. இதிலேயே அவர் செய்தது தப்பு என அவர் ஒத்து கொள்வது புரியும்.. ஆனால் அப்படி எழுதியதற்கு குறைந்த பட்சம் மன்னிப்பாவது அவர் கோர வேண்டும் ! அப்போது தான் அவரை ஆளுமை என்றும், ஆசான் என்றும் சொல்ல தகுதி இருக்கும்.

படிக்கிறது ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோவில் என ஒரு பழமொழி சொல்வார்கள். ஜெயமோகனை வைத்து சொல்லனும்னா : எழுதுறது மஹா பாரதம்; மனசுல இருக்குறது துரியோதனன் தான்  !!

Related Posts Plugin for WordPress, Blogger...