Wednesday, February 19, 2014

இது கதிர்வேலன் காதல் - ஓகே ஓகே யா ?

ரு கல் ஒரு கண்ணாடி (ஓகே ஓகே ) செய்த அதே டீம் சிறு மாற்றங்களோடு இன்னொரு காதல் கதையை கையில் எடுத்துள்ளது . ஓகே ஓகே உடனான ஒப்பீடுகளை தவிக்கவே முடியாது.

கதை நிச்சயம் ஓகே தான். ஆனால் அங்கு ஒண்ணுமே இல்லாத கதையை வைத்து கொண்டு வயிறு வலிக்க சிரிக்க வைத்தனர். இங்கு சந்தானம் இருந்தும் சிரிப்பு பெரும்பாலும் மிஸ்ஸிங் ! சந்தானம் மிக விரைவாக அலுத்து போகிறாரா ?????????

கதை 

அக்கா- தங்கை - அம்மா - அப்பா இவர்களோடு வாழும் கதிர்வேலன் படு பயங்கர ஆஞ்சநேய பக்தன். எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காதவர் எனும்போதே " ஹீரோயினை பார்த்ததும் கிளீன் போல்ட் " ஆவார் என எளிதில் சொல்லி விடலாம்

முற்றின முகம் கொண்ட நயன்தாராவிடம் காதலில் விழுகிறார். அவரோ இன்னொருவரை " லவ் பண்ணலாமா வேணாமா ?" என யோசனையில் இருக்க, கதிர்வேலன் காதல் நிறைவேறியதா என்பதை ரெண்டரை மணி நேரம் செலவழித்து தெரிந்து கொள்ளலாம் !



உதயநிதிக்கு டான்சில் நல்ல முன்னேற்றம். நடிப்பில் அதே முன்னேற்றம் .. இப்ப வருமோ ? எப்ப வருமோ ?

நயன்தாரா - யாரடி நீ மோகினி போல - ஹீரோவை உதறி தள்ளி விட்டு பின் காதலிக்கும் பாத்திரம்.. ஜஸ்ட் ஓகே. அம்மணிக்கு 35 வயசிலும் அவசியம் ஹாப் சாரியில் ஒரு பாட்டு வச்சுடுறாங்க :)

மயில்சாமி, உதயநிதியின் அக்கா கணவர் போன்ற சின்ன சின்ன பாத்திரங்கள் ஓரளவு ரசிக்க வைக்கின்றன.

மேலே மேலே பாட்டு மட்டும் மேலே ; மற்றவை எல்லாம் கீழே (அதுவும் முதல் பாட்டுக்கு சிகரெட் அடிக்காதோர் கூட வெளியில் ஓடி விடலாம் ) பாட்டு வரும் சீக்வன்ஸ் எல்லாம் தியேட்டரில்  " டேய் .. இப்ப பாட்டு பாட போறான் பாரு " என கரக்ட்டாய் சொல்கிறார்கள்.

அனைவரும் பார்க்க கூடிய "குடும்ப சித்திரமாய் " இருப்பதெல்லாம் ஓகே; ஆனால் கொடுத்த காசுக்கு

" தம்பி... சிரிப்பு இன்னும் வரலை " !

வெர்டிக்ட் : விரைவில் உங்கள் சன் டிவி யில் கண்டு களியுங்கள் !

Monday, February 17, 2014

புலிவால் -கோலி சோடா- சினிமா விமர்சனம்

புலிவால் 

ஆங்கிலப்படம் ஒன்று - மலையாளக்கரையோரம் ஒதுங்கி  பின் தமிழில் புலிவாலாக வந்துள்ளது

சுவாரஸ்யமான கதை தான். பணக்காரன் ஒருவனின் எக்குதப்பான  வீடியோ - ஏழை ஹீரோ கை வசம் சிக்குகிறது. இருவருக்கும் நடக்கும் எலி- பூனை விளையாட்டே புலிவால்.

ரகளையாய்   இக்கதையை வைத்து கொண்டு படம் செய்திருக்கலாம். ஆனால் படம் மிகப்பெரிய லெட் டவுன். :(

காமெடியே  படத்தின் வில்லனான கொடுமையை என்ன சொல்வது ! சூரி மொபைல் மற்றும் இணையத்தில் சுற்றி விட்டு 5 லைக் கூட வாங்க முடியாத காமெடியை தொடர்ந்து சொல்லி மரண மொக்கை போடுகிறார்.

ஓவியா மற்றும் (இளைத்து அழகான )அனன்யா தான் நமக்கு ஆறுதல்.



விமல் நடிப்பு ஒரே மாதிரி இருக்கிறது என சொல்லி சொல்லி நமக்கே போர் அடிச்சு போச்சு

புலிவால் - ஒரு நல்ல கதையை எப்படி கெடுக்கலாம் என பாடம் கற்று கொள்ள இளம் இயக்குனர்கள் (மட்டும்) காண வேண்டிய படம் !

கோலி சோடா 

"பசங்க" படத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களாக நடித்த அதே க்ரூப் நடிகர்கள் இப்போது டீன் ஏஜ் இளைஞர்களாக வலம் வந்துள்ளனர்.. "கோலி சோடா" வில்..

கோயம்பேடு மார்கெட்டில் மூட்டை தூக்கி பிழைக்கும் பெயர் கூட இல்லாத அநாதை சிறுவர்கள் -  சுயமாய் ஒரு ஹோட்டல் துவங்குகிறார்கள். அந்த ஹோட்டல் மட்டுமே அவர்களுக்கு அடையாளம் என்னும் நிலையில் அதற்கும் ஒரு வேட்டு வருகிறது. தங்கள் அடையாளத்தை எப்படி மீட்கிறார்கள் என்பதே மறு பாதி கதை

ATM என்று சொல்லப்படும் பெண்ணை அந்த பாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு பாராட்டு. அழகான பெண்கள் மட்டுமே நடிக்கும் திரைப்பட உலகில் - இப்படத்தில் அழகற்ற ஒரு பெண்ணுக்கு தான் மிக சிறந்த பாத்திரத்தையும், நல்ல மனதையும் அளித்துள்ளார்.




ஹீரோயின் சாந்தினி குறைவான மேக்  அப்பில் மனதை கவர்கிறார்.அம்மணி நிஜமாகவே ஸ்கூல் படிக்கிறார் என்கிறார்கள். வாம்மா .. மின்னல்ல்ல்ல் !

பசங்க நால்வருமே இயல்பு.

இயக்குனர் பாண்டிராஜ் வசனங்கள் ஆங்காங்கு மனதை தைக்கிறது. இருப்பினும் "அடையாளம் இல்லாமை " என்கிற விஷயம் போதிய அளவுக்கு திரைக்கதையிலோ, வசனத்திலோ பார்ப்போர் மனதில் தாக்கம் ஏற்படுத்த வில்லை.

லாஜிக் ஓட்டைகள் எக்கச்சக்கம். குட்டி பசங்க பெரிய ரவுடிகளை வீழ்த்துவது ஒரு உதாரணம்

ஜாலியான பீல் குட் மூவி என்கிற அளவில் ஒரு முறை பார்க்கலாம் இந்த கோலி சோடா !

Wednesday, February 5, 2014

மும்பை போலிஸ் & நார்த் 24 காதம் (மலையாளம் ) - விமர்சனம்

 மும்பை போலிஸ் (மலையாளம் ) - விமர்சனம் 

படத்தின் முதல் நிமிடமே அதிரடியாய் துவங்குகிறது. ஒரு கொலையை துப்பறியும் ஹீரோ பிரித்விராஜ் தனது மேலதிகாரிக்கு போன் செய்து கொலையாளி யார் என சொல்ல துவங்கும் முன் அவர் ஓட்டும் கார் விபத்துக்குள்ளாகிறது.

அந்த விபத்தில் ஹீரோவுக்கு பழையன எல்லாம் மறந்து போகிறது. இருப்பினும் மீண்டும் அந்த கொலையை துப்பறிகிறார். கொலையாளி யார் என அவருக்கு தெரிய வரும் போது .. நாமும் அதிர்ச்சியில் உறைந்து போவது உண்மை.



இத்தகைய படங்களில் ஒரு விஷயத்தை பெரிது படுத்தி - நம் ஆர்வத்தை வளர்த்து கொண்டே சென்று - கடைசியில் இதுவரை பார்த்திராத புது பாத்திரத்தை அறிமுகப்படுத்தி இவர்தான் கொலையாளி என்பர். ஆனால் இப்படத்தில் நிகழ்வது முற்றிலும் வேறான அனுபவம். அதிலும் கொலைக்கான காரணம் மிக ஆழமானது. பொதுவாய் சினிமாக்களில் அதிகம் தொடாத ஒரு விஷயத்தை அங்கு விரசமின்றி - மிக சரியாக தொட்டுள்ளனர்.

நினைக்க, நினைக்க எப்படி இவ்வளவு அழகாக ஒரு கதையை கன்சீவ் செய்தனர் என்ற வியப்பு தான் மேலிடுகிறது

Hats off to the Screenplay writer and Director. Don't miss this suspense thriller !

நார்த் 24 காதம் 

"அன்பே சிவம் " படத்தை சில இடங்களில் நினைவு படுத்தும் கதை. ஒரு பயணமும், அதில் நிகழும் இடைஞ்சல்களும், பல்வேறு வாகனங்களிலும் பயணம் செய்து சேர வேண்டிய இடத்தை கிளை மாக்சில் அடைவதும் இங்கும் நிகழ்கிறது

அன்பே சிவம் எப்படி ஒரு நெகிழ்வான அனுபவத்தை நமக்கு தந்ததோ, அதற்கு இணையான அனுபவத்தை இப்படமும் தரத் தவற வில்லை.



படத்தில் ரொம்பவும் எரிச்சல் படுத்துவதும் சரி, போகப்போக ரசிக்க வைப்பதும் சரி பாஹத் பாசில் பாத்திரம் தான். இதே போல "சுத்தம் சுத்தம் " என படுத்தும் சில ஆசாமிகளை நான் அலுவலகத்தில் கண்டிருக்கிறேன். ஆகவே என்னால் கூடுதலாக ரசிக்க முடிந்தது

நெடுமுடி வேணு ... பிறவி நடிகர்.. அட்டகாசமாக நடிக்கா விட்டால் தான் ஆச்சரியப்படணும். படத்தின் இறுதியில் இவரின் நடிப்பு  கண்ணில் நீர் வர வைத்து விடும்.

சுருதி.. "கண்கள் இரண்டால் " பாடலில் தாவணியுடன் வந்த அதே சுருதி.. அற்புதமான பாத்திரத்தில் நடித்துள்ளார். (படம் முழுவதும் ஒரே உடை தான்... நெடு முடி வேணுவுக்கும்...)

முக்கால் வாசி படத்திற்கு பின் சற்று இழுவையாக ஆவது போல் உணர்வு. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

"என்ன கொடுமை சார்" புகழ் பிரேம்ஜி தமிழராகவே வருகிறார். அவரது எபிசொட் அழகான கவிதை. மனிதர் தமிழில் தான் ஒரே மாதிரி நடிக்கிறார். வேறு விதமாய் நடிக்கவும் இவருக்கு தெரிந்தே இருக்கிறது

சக மனிதனை நேசி; அது தான் முக்கியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான் என்ற தாஸ்தாவ்ஸ்கியின் வரிகள் தான் படத்தின் அடி நாதம்.

தனது முதல் படத்திலேயே பவுண்டரி அடித்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள் !

Saturday, February 1, 2014

சென்னை ஆட்டோ - மீட்டர் குறித்து ஒரு மேட்டர் !

மிழகத்துக்கு வெளியே பயணிக்கும் ஒவ்வொரு முறையும் மற்ற மாநிலங்களில் ஆட்டோ கட்டணம் மிக குறைவாக இருப்பது - பெரு மூச்சை வரவழைக்கும். இதே தூரத்துக்கு சென்னையில் எவ்வளவு ஆட்டோ கட்டணம் இருக்கும் என்று கணக்கு போட்டால் வருத்தம் இன்னும் அதிகமாகும்.

தமிழகத்தில் மட்டும் ஆட்டோ கட்டணம் அதிகமாக இருக்க என்னென்னவோ காரணம் சொல்வார்கள் ஆட்டோ காரர்கள்.

"Empty  ஆக திரும்பணும் ;

மத்த ஊரு போல இங்கெல்லாம் ஆட்டோ அதிகம் உபயோகிப்பதில்லை;

எல்லாரும் வாங்குற  அளவு தானே நானும் வாங்குறேன் ?"

ஆகியவை மாதிரிக்கு சில..

இந்த நிலையை மாற்ற தமிழக அரசு முதல் சில அடிகளை எடுத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று...




(விலை வாசியை விண்ணை முட்ட வைத்தது, சென்ற ஆட்சிக்கு சற்றும் குறைவின்றி அடிக்கும் கொள்ளை போன்றவற்றில் இந்த ஆட்சி மீது வருத்தம் இருந்தாலும் அரிதாக நடக்கும் நல்ல விஷயத்தையும் சொல்லத்தானே வேண்டும் ?)

உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்... ஆட்டோக்களில் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்துவதை தமிழக அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. அநேகமாய் சென்னையில் 98 % ஆட்டோக்கள் எலக்ட்ரானிக் மீட்டர்  பொருத்தி விட்டன என்றே தோன்றுகிறது.

இப்போது இன்னொரு சிக்கல் : மீட்டர் பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும் என்று மீண்டும் ஆட்டோ காரர்கள் - ஏறும்போதே செல்லும் இடம் கேட்டு விட்டு " எவ்வளவு ஆகும் " என பழைய கதையை ஆரம்பிக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களில் அவ்வப்போது ஆட்டோவில் பயணித்ததில்  இப்படி அதிக தொகை கேட்கும் ஆட்டோவில் " மீட்டர் போட்டால் தான் வருவேன் " என்றால் " சரி சார்.. மேலே கொஞ்சம் போட்டு குடுங்க " என்று வருகிறார்கள். மேலே 20 ரூபாய் கொடுத்தாலும் கூட பழைய காலம் போல பகல் கொள்ளை இல்லாமல் தப்பிக்க முடிகிறது

நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பலரும் கூட "மீட்டர் போட்டால் மட்டுமே ஆட்டோவில் ஏறுவது " என்ற வழக்கத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை பகிர்கிறார்கள்

மாற்றம் முழுவதுமாக வந்து விட்டது என்று சொல்ல முடியாது. சட்டம் ஒரு பக்கம் இருந்தால் கூட - அதனை எப்படி மீறுவது என்று ஏராளமான ஆட்டோ காரர்கள் திட்டமிடுகிறார்கள்

அண்மையில் கீழ்கட்டளை சிக்னல் அருகே நண்பரின் வருகைக்காக காத்திருக்கும் போது இரண்டு பக்கமும் போலிஸ் நின்று கொண்டு - பயணிகளுடன் செல்லும் ஒவ்வொரு ஆட்டோவையும் நிறுத்தி மீட்டர் போட்டு விட்டு ஓட்டுகிறார்களா என்று செக் செய்ததுடன் மீட்டர் போடாமல் ஓடும் ஆட்டோ காரர்களை எச்சரித்து அனுப்புவதை காண முடிந்தது.

குறிப்பாக ஒரு போலிஸ் காரர் பின்னால் அமர்ந்திருந்த பயணிகளிடம் "அவர் மீட்டர்  போடாட்டி கூட -  நீங்க  போட சொல்லுங்க சார் ; போடாட்டி ஆட்டோ நம்பரை குறிச்சுக்கிட்டு  போலிசுக்கு போன் பண்ணுங்க. ஆயிரம் ரூபா பைன் போடுவோம் " என்று சொல்லி கொண்டிருந்தார் !

மீட்டர் போட்டு செல்லும் ஆட்டோக்கள் என்பது லட்சகணக்கான சென்னை வாசிகளின் கனவு. அது நிஜமாக இது ஒரு வாய்ப்பு !

நாம் தான் இதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மீட்டர் போட மாட்டேன் என்று சொல்லும் ஆட்டோக்களை முழுவதும் புறக்கணிப்பதும், மீட்டர் போட்டால் மட்டுமே ஆட்டோவில் ஏறுவதும் சென்னை வாசியாக நாம் செய்ய வேண்டிய காரியம் .

அனைத்து ஆட்டோக்களிலும் சூடு வைக்க முடியாத மீட்டர் பொருத்தப்பட்டு - அவசியம் மீட்டர் போட்டு தான் வண்டி ஓட்ட வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றி விட்டது. தயவு செய்து மீட்டர் போடாமல் செல்லும் ஆட்டோவில் ஏறி நாமே மாறுதல் வரும் சூழலை குழி தோண்டி புதைக்க வேண்டாம் !

மாறுதல்கள் அவ்வளவு சீக்கிரம் வந்து விடாது. சற்று போராடத்தான் வேண்டும். நமது பங்களிப்பும் இவ்விஷயத்தில் அவசியம் தேவை.
Related Posts Plugin for WordPress, Blogger...