Wednesday, May 29, 2013

வானவில்- கௌரவம் -ஜனனி ஐயர் -சீனு மாமா

பார்த்த படம் : கௌரவம் 

பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் ராதா மோகன் இயக்கிய கௌரவம் சமீபத்தில் தான் பார்க்க முடிந்தது. சாதி மாறி திருமணம் செய்யும் பெண்- மற்றும் மாப்பிள்ளையை குடும்பமே கொன்று போடும் கதை- ஆனால் கல்லூரி மாணவர்கள் புரட்சி - அது இதென்று நாசம் செய்து விட்டார்

தெலுகு ஹீரோ மகா கொடுமை ! எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் அவர் வந்து போவது வெறுக்கடிக்கிறது. (மறைமுக தயாரிப்பாளரோ?)

ஹீரோயின் யாமி கெளதம் தான் ஒரே ஆறுதல்

ராதாமோகன் இதுவரை இயக்கிய படங்களில் மிக பெரும் அறுவை - என்கிற ஒன்று தான் இப்படம் பற்றி மனதில் தங்க போகிறது !

அழகு கார்னர்

அவன் இவன் படத்தில் ரசிக்க வைத்தவர்.  கண்களும் புன்னகையும் பெரிய பிளஸ்.



சமச்சீர் கல்வியில் அதிகமாகும் மதிப்பெண்கள்

பன்னிரெண்டாம் வகுப்பு வரை - CBSE தவிர மற்ற அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வி முறைக்கு மாறியதும் - மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் மதிப்பெண்களை அள்ளுகிறார்கள் ! பத்தாம் வகுப்பு பேப்பர் திருத்திய ஒரு ஆசிரியருடன் சமீபத்தில் பேசியபோது அவர் பகிர்ந்த தகவல் இது:

ஒரு நாளைக்கு 24 பேப்பர் திருத்தணுமாம். ஒரு பேப்பர் திருத்த 12 ரூபாய் தரப்படுகிறது. தவிர தினசரி பேட்டா 150 ரூபாய் என பேப்பர் திருத்தும் ஆசிரியர்க்கு தினம் கிடைப்பது 440 ரூபாய்.

அவர் திருத்திய பேப்பர்களில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுத்தவர்களே 80 %க்கும் மேல் இருக்குமாம் ! மூன்று பேப்பர்களில் நூறு மார்க் எடுத்தவர்களே எக்கச்சக்கம் என்கிறார். அரசு தரும் சலுகை மார்க்கும் சேர்ந்து கொள்ள - இப்போதெல்லாம் மார்க் வாங்குவது ரொம்ப எளிதாகிடுச்சு ; மெட்ரிகுலேஷன் மாணவர்கள் இப்படி மார்க்கை அள்ளுவதால் பாதிக்கப்படுவது அரசு பள்ளி மாணவர்கள் தான் என்றார் அவர் !

சிந்திக்க வேண்டிய விஷயம் தான் !

BCCI தலைவர் பதவியை ராஜினாமா செய்யணுமா சீனிவாசன் ?

குருநாத் மெய்யப்பன் கைதை தொடர்ந்து சீனிவாசன் BCCI தலைவர் பதவியை ராஜினாமா செய்யணும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. இன்னொரு பக்கம் தெற்கை அடிக்க நினைக்கும் வடக்கின் சூது இது என்றும் பேச்சு உலவுகிறது.

நடந்த சம்பவங்களை அடுத்து சீனிவாசன் நிச்சயம் பதவி விலக வேண்டும் என்று தான் நினைக்கிறேன். அவர் நேரடியே பெட்டிங் அல்லது ஊழலில் ஈடுபடாவிட்டாலும் கூட - அவர் விலகுவது தான் தார்மீக ரீதியில் சரியான ஒன்றாய் இருக்க முடியும்

- குருநாத்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இப்போது சொல்வது

- குருநாத் டுவிட்டர் உள்ளிட்ட கணக்குகளில் முன்பு சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஓனர் என்று இருந்ததை தற்போது அவசரமாக அகற்றுவது

- இவையெல்லாம் சீனிவாசன் மீதிருந்த கொஞ்ச நஞ்ச நல்ல அபிப்ராயத்தை அகல வைக்கிறது. குருநாத் மீதான குற்றங்களை விசாரிப்பதே BCCI -தான் ; அதன் தலைவர் பொறுப்பில் இருப்பவர் அவரது மாமனார் சீனிவாசன். நியாயமான நடவடிக்கையை எப்படி எதிர்பார்க்க முடியும்?

AVM என்கிற மிக பெரும் குடும்பத்தை சேர்ந்த மெய்யப்பனுக்கு இது தேவையா? சீனிவாசன் அவர்களுக்கு தன் மகன் மற்றும் - மகள் 2 பேராலும் நிம்மதி இல்லை !

போஸ்டர்/ அய்யாசாமி கார்னர்


RJ Balaji Comedy 

சேட்டை படத்தை நம்ம பாலாஜி சிக்கி சின்னாபின்னம் செய்வதை கேட்டு மகிழுங்கள்



IPL 6 Vs சூது கவ்வும் - ஒரு ஒப்பீடு (By நண்பர் கார்த்திக்)

இந்த IPL 6- ன் டைட்டில் SPONSOR எனக்கு என்னவோ பெப்சி இல்லை சூது கவ்வும் படம் தானோ என்று தோன்றுகிறது..

"IPL 6 - சூது கவ்வும்" என்றாலும் "சூது கவ்வும் - IPL 6" என்று IT SERVES TO PROMOTE EITHER. •

* சூது கவ்வும் intended காமெடி IPL 6 unintended tragedy.

• சூது கவ்வும் (SK ) ல 5 rules, IPL 6 - நோ ரூல்ஸ் •

* SK - ஆதிக்கத்தில் கையை வைக்காதே , IPL 6 ஆதிக்கம் தான் கையை வைப்பதே.

* SK - ஆள் கடத்த 45000, இங்கே மேட்ச் கடத்த பல லட்சங்கள். •

* சூது கவ்வுமில் ஒரே ஒரு பொண்ணு HEROINE னு கூட சொல்ல முடியாது .IPL 6 பல பெண்கள். Rochelle Rao டு cheer leaders.

• IPL 6 காமெடி டீம் - சித்து & கோ., SK - சேதுபதி & கோ.

• SK - ஹெலிகாப்ட்டர் SHOOT (ஹெலிகாப்ட்டர் வெச்சு பணத்தை சுடரங்க), IPL - ஹெலிகாப்ட்டர் SHOT .

• SK - தமிழ் என்டேர்டைன்மென்ட் IPL - ஆல் இந்திய என்டேர்டைன்மென்ட்

• SK ல போலீஸ் கு ஆப்பு IPL 6 போலீஸ் வெச்சது ஆப்பு.

• SK ல இருட்டு அறையில் முரட்டுக்குத்து, IPL 6 வெட்ட வெளிச்சத்தில் கும்மாங்குத்து !

• Saving the best for the last - SK - போட்டுக்குடத்தது நம்பிக்கை கண்ணன், IPL - போட்டு வாங்கியது குருநாத் மெய்யப்பன்

Thanks: http://bla-bla-blag.blogspot.in/
********
ஊருக்கு செல்வதால் வரும் ஞாயிறு வரை வீடுதிரும்பலுக்கு விடுமுறை ! எந்த ஊருக்கு என்கிறீர்களா ?

ஞான் திரும்ப வந்து பறையும் :)

Monday, May 27, 2013

தொல்லை காட்சி- TMS- ராதாமோகன் - அனுஷ்கா விளம்பரம்

சூர்ய வணக்கத்தில் ராதா மோகன்

இயக்குனர் ராதா மோகன் சிறப்பு விருந்தினராக சன் டிவியின் சூர்ய வணக்கத்தில் வந்தார். மொழி, அபியும் நானும் போன்ற அற்புத படங்கள் எடுத்தவரிடம் அவரது சமீபத்திய படமான கௌரவம் பற்றி மட்டுமே பேசினர். அவரும் ஆர்வமாய் பல விஷயங்கள் சொல்லி கொண்டிருந்தார். கண்டிப்பாக என்ற வார்த்தையை வரிக்கு வரி சொல்லி கொண்டிருந்தார் இயக்குனர்.

" இந்த படம் கண்டிப்பா இளைஞர்களுக்கு பிடிக்கும் "

" இந்தியாவின் எதோ ஒரு மூலையில் கண்டிப்பா இதை மாதிரி சம்பவம் நடந்துகிட்டிருக்கு "

"கண்டிப்பா படத்தை தியேட்டரில் பாருங்க "

என்று பேசி கொண்டே போனவரிடம்

" தியேட்டரை விட்டு படம் கண்டிப்பா ஓடிடுச்சுங்க " என்று நான் கத்தியது  அவருக்கு கண்டிப்பா கேட்டிருக்காது !

கேப்டன் டிவியில் "அசத்தல் அரங்கம் "

விசுவின் அரட்டை அரங்கம் பாணியில் அப்படியே உல்ட்டா அடித்து கேப்டன் டிவியில் "அசத்தல் அரங்கம் " நடத்துகிறார்கள். நடிகர் ரமேஷ் கண்ணா  ொகுத்து வழங்குகிறார். செலக்ஷன் துவங்கி நிகழ்ச்சி வரை அப்படியே அரட்டை அரங்கம் பாதிப்பு தான் !

10 வயது பெண் 25 வயது மாதிரி பேசுகிறார். கண்ணீர் கதைகள் சொல்லப்பட உடனடி உதவிகள் கிடைக்கின்றன. ரமேஷ் கண்ணா அதிகம் பேசாமல் அடக்கி வாசிப்பது மட்டுமே ஆறுதல்

நிகழ்ச்சியில் பேசுவோரும், பார்வையாளர் வரிசையில் வருவோரும் மட்டுமாவது தங்கள் முகம் டிவியில் வருது என்று இவற்றை பார்ப்பார்கள் ! அவ்ளோ தான் !

நேரம் - நஸ்ரியா 

நேரம் பட குழு விஜய் டிவி யில் பேசினர். நம்ம மக்கள் நஸ்ரியா, நஸ்ரியா என்று புலம்புகிறாரே - அவரும் வந்து பேசினார்.



அம்மணி இப்போ தான் பிளஸ் 2 எழுதிருக்காராம் ! (எல்லாரும் அதையே சொல்றீங்க ??) தமிழ் தெரியாதாம் (ஒரே பீட்டர் தான் !) படம் சூப்பர் ஹிட் ஆனதாலே தியேட்டரில் ஸ்க்ரீன் கீழே -- தரையில் உட்கார்ந்து அவங்க நண்பர்கள் படம் பாத்தாங்களாம் (அடேங்கப்பா !) இப்படி பல கதைகள் சொல்லிகிட்டே போனாங்க ...

முக்கியமான விஷயம். அம்மணி நேரில் பார்க்க ரொம்ப சுமார் தான்.. மேக் அப்-பில் தான் நிறைய பில்ட் அப் என்பது தெளிவாய் தெரிந்தது !

TMS க்கு அஞ்சலி

TMS மறைவு செய்தியை பல சானல்கள் கவர் செய்தாலும், சன் நியூசில் பல மணி நேரம் அவரது இல்லத்திலிருந்து தொடர்ந்து பலரிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பினர். அவரது பல அற்புத பாடல்கள் ஒளிபரப்பி நெகிழ வைத்தனர். சிவாஜி மற்றும் எம். ஜி. யார் இருவருக்கும் பெரும்பாலான பாடல்களை பாடியது இவர் தான் என்பதும், அந்த பாடலை கேட்டாலே அது இருவரில் யாரின் பாடல் என்று தெரியுமளவு பாடியதும் தான் உடனடியாக TMS என்றதும் நினைவுக்கு வருகிறது. நூற்றுகணக்கான நினைவில் நிற்கும் பாடல்களை பாடிய TMS க்கு எமது அஞ்சலி !

பெஸ்ட் ஹவுஸ் - விஜய் டிவி நிகழ்ச்சி 

சிறந்த இல்லத்தை தேர்வு செய்யும் விஜய் டிவி நிகழ்ச்சி முடிவுகள் நேற்று ஒளிபரப்பானது. முடிவுகள் அறிவிக்கும் முன் போட்டியில் பங்கேற்ற பல்வேறு வீடுகளை காட்டினர். பின் விருது நிகழ்ச்சியை காட்டும்போது - ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த வீடு என தேர்ந்தெடுத்த வீட்டின் உரிமையாளரை அழைத்து பரிசு தந்தனரே ஒழிய - பரிசு பெற்ற வீடு எது என்பதை காட்டவே இல்லை ! இப்படி பரிசு பெற்ற வீட்டை கூட காட்டாமல், அந்த வீட்டின் உரிமையாளரை மட்டும் காட்டுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும் ! இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் நிகழ்ச்சி/ போட்டி நடத்தும் இவர்களை என்ன செய்வது ? ஹூம்

ரசித்த விளம்பரம்- சார் அனுஷ்கா சார் !

அனுஷ்கா சென்னை சில்க்ஸ்க்காக நடித்த இந்த விளம்பரத்தை நாம் பல முறை டிவி யில் பார்த்திருப்போம். அவையெல்லாம் 15 நொடி அல்லது 20 நொடியாக இருக்கும். ஒரு நிமிடத்துக்கு வரும் இந்த முழு விளம்பரம் + அதில் தலைவி தரிசனம் கண்டு மகிழுங்கள் !

Friday, May 24, 2013

மீடியாவின் டார்லிங் - பிரபலத்தின் அறியாத பக்கங்கள்

மீபத்தில் வழக்கறிஞர் நண்பர் ஒருவருடன் பேசியபோது மீடியாவின் டார்லிங் ஆன ஒரு பிரபலம் பற்றி விளாவாரியாய் பகிர்ந்தார். அவர் பகிர்ந்தது அப்படியே உங்களுக்கு ...

" நம்ம பிரபலம் Basically ஒரு சுய விளம்பர பிரியர். தன்னை பற்றி தினம் செய்தி வர வேண்டுமென குறியாக இருப்பார்.

பிரபலத்திடம் நிறையவே நல்ல குணங்களும் உண்டு வக்கீலாக இருந்தபோது பல வழக்குகளில் அவர் இலவசமாக வாதிட்டது உண்டு. பின் அவர் நீதிபதி ஆனார்

" லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. எனது காலத்தில் ஒரு லட்சம் வழக்குகளை முடிப்பேன்"என்று சூளுரைத்தார்

வழக்குகள் தேங்குவது தவறு தான். ஆனால் அதை தீர்க்க இவர் எடுத்த வழிகள் நிச்சயம் சரி கிடையாது. புதிதாக வரும் வழக்குகளை " அட்மிஷன் வழக்குகள்" என்பார்கள். அப்படி புதிதாய் வரும் எந்த வழக்கையும் இவர் உடனடியாக டிஸ்மிஸ் செய்து விடுவார். மேலும் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தோண்டி தோண்டி எடுத்து அவற்றையும் மானா வாரியாக டிஸ்மிஸ் செய்தார்.

இவர் ரிட்டயர் ஆக சில மாதங்கள் முன்பு ஒரு சட்ட பத்திரிக்கையில் இவர் ஏராள வழக்குகளை பைசல் செய்தது பற்றி விரிவாய் ஆய்வு செய்து - இவர் நீதிபதியாக இருந்த நாட்கள் எத்தனை - மொத்தம் எவ்வளவு மணி நேரம் இருந்துள்ளார்- எத்தனை வழக்குகள் தீர்ப்பளித்தார்  என்ற கணக்கை போட்டு - இவர் சராசரியாக ஒரு வழக்கிற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவாக தான் நேரம் எடுத்து கொண்டார் என்பதை எழுதினர் இது அனைத்து வட்டத்திலும் சற்று அதிர்வை ஏற்படுத்தியது

நினைத்து பாருங்கள்: ஒருவர் நீதிமன்றம் வருகிறார் என்றாலே அவருக்கு பல மாதங்கள் அல்லது வருடங்களாக மனதில் தீராத வலி இருக்கும். ஒரு வழக்கை தயார் செய்ய ஒரு வக்கீல் ஆபிசில் பல மணி நேரம் எடுத்து கொள்கிறார்கள் ஆனால் இப்படி மனிதர்களின் வலி, உழைப்பு இவை எதையும் மதிக்காத இந்த பிரபலம் ஒரு நிமிடம் கூட விசாரிக்காமல் வழக்குகளை டிஸ்மிஸ் செய்து தள்ளுகிறார்.

இவர் இப்படி டிஸ்மிஸ் செய்யும் வழக்குகள் பெரும்பாலும் அப்பீலுக்கு செல்லும்போது பிரபலம் தந்த தீர்ப்பை தவறு என்று சொல்லி மாற்றான தீர்ப்பு தரப்பட்டது. அப்பீல் யாரிடம் சென்றாலும் இவர் தீர்ப்பு திருத்தப்பட்டது உறுதி ! "Application of mind " இன்றி அவசர கோலத்தில் அள்ளி தெளித்த படி இவர் தீர்ப்புகள் தந்ததே இதற்கு காரணம்

பிரபலம் சாதகமான தீர்ப்பு வழங்கிய நபர்களும் உண்டு. மறுமலர்ச்சி தலைவரும் , "அறிவாளி" எழுத்தாளரும் இவருக்கு நெருங்கிய நண்பர்கள்;  மேலும் வழக்கறிஞராக இருந்த போது, அவரது கிளையன்ட் ஆக இருந்தவர்கள். இவர்கள் தொடுக்கும் வழக்குகளில் டிஸ்மிஸ் செய்யாமல் எப்போதும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவார் பிரபலம் !

வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகள் வட்டத்தில் இவரை ஒருவர் கூட மதிக்க வில்லை என்பதே உண்மை. வழக்கு பதிவு செய்து அவஸ்தை பட்டவர்களுக்கும் இவரை பற்றி நன்கு அறிவர்.

ஆனால் இவர் எப்பவும் மீடியாவின் டார்லிங் ஆக இருந்தார்.அதற்கு காரணம் - இவர் தினமும் நிருபர்களை சந்தித்து நிறைய செய்திகள் தந்த வண்ணம் இருப்பார். மேலும் " குறிப்பிட்ட செய்தியை எந்த கோணத்தில் எழுத வேண்டும் " என்றும் டிரைனிங் தர இவர் தவறுவதில்லை. இவரால் மீடியாவிற்கு நிறைய செய்திகள் கிடைத்ததால் இவரை பற்றி நல்ல விதமாகவே எழுதி வந்தனர். மீடியாவை பொறுத்த வரை எந்த ஒரு நீதிபதியும் இவ்வளவு நெருக்கமாக அவர்களுடன் இருந்ததில்லை ! அதுவே அவர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

நம்ம பிரபலத்துக்கு வழக்கின் தீவிரம், வாதியின் பக்க நியாயம் எது பற்றியும் கவலை இல்லை. வழக்கு சீக்கிரம் முடியனும் அது மட்டுமே அவர் எண்ணம். பாவம் புண்ணியம் என்றெல்லாம் இருந்தால் இவர் பல்லாயிரகணக்கான மக்களின் பாவத்தை சேர்த்து கொண்டார் என்று தான் சொல்லணும்

இவருக்கு உடல்நிலை சரியில்லாத போது மருத்துவ மனையில் அட்மிட் ஆகியிருந்தார். அப்போது அவர் வக்கீலாக இருந்த போது உடன் பணியாற்றிய சிலர் அவரை நேரில் சந்தித்து பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க அவரோ " வர வேண்டாம்" என்று சொல்லி அனுப்பி விட்டார். மருத்துவமனையில் இருந்து வந்த பின் பிரபலம் சொன்னது " நான் மருத்துவ மனையில் இருக்கும் போது யாருமே வந்து என்னை பார்க்க வில்லை பார்த்தீர்களா ? இதிலேயே தெரிய வில்லையா ? நான் நேர்மையானவன் - அதான் யாரும் வரவில்லை என ? "

" நாங்க வர்றோம் என சொல்லிய போது வர வேண்டாம் என்று சொல்லி விட்டு இப்போது - நாங்களாகவே வராத மாதிரி பேசுகிறாரே என்று வருந்தினர் வக்கீல்கள்.

நம்ம பிரபலம் ரிட்டையர் ஆன அன்று ஒரு ஸ்டன்ட் அடித்தார் பாருங்கள். ரிட்டயர் ஆனதும் நேராக கிளம்பி நீதிமன்றம் அருகில் இருக்கும் ஒரு காபி கடைக்கு சென்றார். அவருடன் 50 பேர்.. அவர்கள் அனைவரும் பத்திரிக்கையாளர்கள் தான் ! காபி குடிக்கும் போது எதிரில் போவோர் வருவோரை எல்லாம் தானாகவே கூப்பிட்டு கை கொடுத்து பேசினார். பின் ரயில்வே நிலையம் சென்று ரயிலில் பயணித்தார். ரிட்டயர் ஆனதால் ரயில்வே பாஸ் எடுத்து விட்டதாகவும் இனி ரயிலில் தான் பயணிப்பேன் என்றார்.

இதை கேட்ட வழக்கறிஞர்கள் உருண்டு புரண்டு சிரித்தனர். "இவர் வீடு இருக்கும் பக்கம் ரயில் நிலையமே கிடையாது. அப்புறம் எதற்கு சீசன் டிக்கெட் எடுக்கணும்? இவர் வக்கீலாக பணியாற்றிய போதே சொந்த கார் வைத்திருந்தார். இப்போது கார் வைத்து கொள்ள மாட்டேன் என்று சீன் காட்ட வேண்டிய அவசியம் என்ன ?

மீடியா நினைத்தால் - யாரை வேண்டுமானால் ஹீரோ ஆக்கலாம் என்பதற்கு வாழும் உதாரணம் நம்ம பிரபலம் !

உங்களுக்கு தெரிந்த எந்த ஒரு தமிழக வழக்கறிஞரிடமும் பேசி பாருங்கள்... இந்த பதிவில் உள்ளது அனைத்தும் உண்மை என்பதோடு இன்னும் நிறைய நிறைய சம்பவங்கள் பகிர்வார்கள் !

இவை எதுவும் பொதுமக்களுக்கு தெரியா வண்ணம் பிரபலத்தை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு பில்ட் அப் செய்து வைத்திருக்கிறது நம்ம மீடியா !

வாழ்க ஜனநாயகம் !

Wednesday, May 22, 2013

வானவில்- நஸ்ரியா- கண்கள் இரண்டால்- இலவச மிக்சியின் தரம்??

தமிழக அரசு தரும் இலவச பேன், மிக்சி எப்புடி?

எங்கள் தெருவை சேர்ந்த ஒருவர் பகிர்ந்த செய்தி இது:

தமிழக அரசு தரும் இலவச பேன், மிக்சி சமீபத்தில் வாங்கி வந்துள்ளார். அவரது மிக்சியில் திருகும் பட்டனே இல்லை! வேறு தாருங்கள் என்று கேட்டால் " கம்பனியே அப்படி தர்றாங்க. நாங்க என்ன செய்வது? " என மாற்றி தரலியாம். " எனக்காவது பரவாயில்லை; ஒருத்தர் Fan- ல் - ரெக்கைகளே இல்லை ! இதுக்கென்ன சொல்றீங்க " என்று சிரித்தார் அவர்.

இலவசம் என்கிற பேரில் சிலருக்கு மட்டுமே வழங்கி அதிலும் தரமில்லாத பொருட்களை தந்து மக்களிடம் திருப்தியின்மையை தான் அரசியல் கட்சிகள் சம்பாதிக்கின்றன !

அழகு கார்னர்

ஊரே 5 நாளாய் இவரை பற்றி தான் பேசி கொண்டிருக்கிறது நேரம் பட ஹீரோயின் - நஸ்ரியா. (கூகிள் பிளஸ்சில் இப்படம் பகிர்ந்த உண்மை தமிழன் அண்ணனுக்கு நன்றி)




போஸ்டர் கார்னர்

என்னென்ன டிராபிக் மீறல்களுக்கு எவ்வளவு பைன் என்று சொல்கிற போஸ்டர் ! நன்கு படிக்க போஸ்டர் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படியுங்கள்



என்னா பாட்டுடே !

பொதுவாய் இன்றைய பாடல்கள் குறித்து இருக்கும் குற்றசாட்டு - அவை பழைய கால பாடல்கள் போல காலத்தை தாண்டி நிற்பதில்லை என்பது. ஆனால் ஜேம்ஸ் வசந்தன், இசை அமைத்த முதல் படத்திலேயே நீண்ட காலம் வாழும் இந்த பாட்டை நமக்கு அறிமுகப்படுத்தியது ஆச்சரியமான விஷயம் தான்.

கண்கள் இரண்டால் என்கிற இந்த பாடல் - அந்த வருடத்தில் எனது வெவ்வேறு வித நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிடித்த பாடலாய் இருந்ததை காண முடிந்தது. பொதுவாய் ரசனையில் வேறுபட்ட அவர்கள் அனைவரையும் எப்படி இந்த ஒரு பாடல் ஈர்த்தது? இத்தனைக்கும் பாடிய இருவரும் இப்பாடலில் தான் அறிமுகம்.

எல்லா பாடல்களையும் போல மெட்டு தான் இந்த பாடலையும் நம் மனதுக்குள் வந்து அமர வைக்கிறது. பாடலை படமெடுத்த விதமும் அழகு



ஐ.பி.எல் .....

ஸ்பாட் பிக்சிங்கில் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் கைது ஒரு புறம் - அதற்கு BCCI -யின் வழ வழா கொழ கொழா நடவடிக்கை -இவை மனதை பாதிக்கவே செய்கிறது. இருப்பினும் - எத்தனையோ மன அழுத்தங்களுக்கு கிரிகெட் என்கிற இந்த என்ட்டர்டெயின்மென்ட் உதவுவதால் - பார்க்கவே செய்கிறோம்

சென்னை 5 வது முறையாக பைனல் உள்ளே நுழைவது மிக மகிழ்ச்சி. ஐ.பி.எல் .லில் Most Consistent அணி என்றால் அது சென்னை அணி தான் என்பதை யாருமே மறுக்க முடியாது

பைனலில் மீண்டும் சென்னை- மும்பை மோதும் என்று எதிர்பார்க்கிறேன் பார்க்கலாம் !

அய்யாசாமி கார்னர்

ஒரு நாள் Mrs . அய்யாசாமி சீக்கிரமாய் அலுவலகம் கிளம்பிவிட, அய்யாசாமி கணினியில் அமர்ந்து சற்று ஜனநாயக கடமை ஆற்றி விட்டு, ஆபிஸ் கிளம்பினார். சாப்பாட்டு பை, ஹெல்மெட் எல்லாம் எடுத்துகிட்டோம் தானே என நன்றாக செக் செய்து கொண்டு வண்டியை எடுத்து கொண்டு சற்று தூரம் சென்றவர், எதேச்சையாக திரும்பி பார்க்க வீட்டை பூட்டாமல் முழுவதும் திறந்து போட்டு விட்டு கிளம்பியது தெரிந்தது. அன்று எதேச்சையாய் திரும்பா விடில், மாலை வரை வீடு திறந்தே கிடந்திருக்கும் !

ஆபிஸ் போனதும் Mrs . அய்யாசாமிக்கு இதை போனில் சொல்லி, போதுமான திட்டு வாங்கியதும் தான் மெயில் பாக்ஸையே ஓபன் செய்தார் நம்ம ஆளு !

பாலாஜி காமெடி

சென்னை சூப்பர் கிங்க்ஸ் டிரைனரை போனில் கூப்பிட்டு அவரை இஷ்டத்துக்கு களாய்க்கும் பாலாஜி காமெடி கேட்டு சிரியுங்கள் !

Monday, May 20, 2013

தொல்லை காட்சி - நீயா நானா 80-கள் காலம் - சிவகார்த்தி -AV ரமணன்

நீயா நானா - எண்பதுகளின் காலம்

எண்பதுகளின் காலம் சிறப்பான ஒன்றா, மோசமான ஒன்றா என்ற நீயா நானா விவாதம் மிக சுவாரஸ்யம். பொதுவாய் " அந்த காலத்திலே" என ஆரம்பித்து அப்போது தான் வாழ்க்கை மிக அற்புதமாய் இருந்ததை சொல்வது தான் வழக்கம். ஆனால் அந்த காலம் எத்தனை மோசமானது என்று பேசியோர் சொன்ன பல விஷயங்கள் செம !

 இணையத்தில் பிரபலமான அபிலாஷ் சந்திரன் மற்றும் மகுடேஸ்வரன் விருந்தினராய் வந்திருந்தனர்.

வழக்கம் போல் இரண்டு அணிகளையும் அவரவர் குறைகளை சொல்லி முடித்தார் கோபி.

கோபியை விடவும் சிறப்பு விருந்தினர்களை விடவும் கலந்து கொண்ட சாதாரண மனிதர்கள் நன்கு பேசிய நிகழ்ச்சி இது !

இதில் ஒரு சில பகுதிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு:


Neeya Naana Part 1 by tammy27


Neeya Naana Part 2 by gurueaswar


Neeya Naana Part 3 by gurueaswar


நல்ல நிகழ்ச்சி - சித்திர கதைகள்

சுட்டி டிவியில் தினம் காலை 9.30 க்கு ஒளிபரப்பாகிறது - சித்திர கதைகள். தமிழக/ இந்திய புராணங்களை கார்ட்டூன் வடிவில் மிக சுவாரஸ்யமாக காண்பிக்கிறார்கள். விடுமுறையில் எங்கள் பெண் தொடர்ந்து பார்க்கிறாள். முருகன் - பிள்ளையார் - ஞானப்பழம் கதை தொடங்கி , கிருஷ்ணரின் பல குறும்புகள் என - அனைத்தும் புராண கதைகளே. சின்ன பசங்களுக்கு பிடிக்கும் விதத்தில் பழங்கதை அறிய வைப்பது நல்ல முயற்சி !

சினிமா இண்டஸ்டிரி இன்றைய நிலை நிலை குறித்த விவாதம்

தமிழ் திரை உலகின் இன்றைய நிலை குறித்து சன் செய்திகளில் ஒரு விவாதம் நடந்தது தயாரிப்பாளர்கள் கேயார், பிரமிட் நடராஜன், சித்ரா லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசிய சில கருத்துக்கள் :

* சென்சார் போர்டில் இருப்பதெல்லாம் 40, 50 வயதுக்கு மேற்பட்டவர்களே. அதில் இளைஞர்கள் சிலரையாவது நியமிக்க வேண்டும்

* படத்தின் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை எங்களுக்கு வழங்கப்படவேண்டும். பல வெளிநாடுகளிலும், இங்கேயே இசை நிகழ்சிகளுக்கும் அவர்களே விலை நிர்ணயம் செய்யும்போது எங்கள் படங்களுக்கு நாங்கள் ஏன் டிக்கெட் விலை நிர்ணயம் செய்ய கூடாது ?

* இப்போது பல படங்கள் 10 நாளுக்கு மேல் ஓடுவதில்லை. முதல் வாரம் ரிலீஸ் ஆகும் சனி, ஞாயிறு கூட்டம் ஓரளவு நன்றாக இருந்தால் அடுத்த சனி, ஞாயிறு கூட்டம் அவ்வளவு தான் !இதனால் டிவிகளில் விளம்பரம் நிறைய செய்ய வேண்டியுள்ளது சிறு படங்களை 2- 3 கோடி செலவில் எடுத்து விட்டு அதே போல் இன்னும் 2-3 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்ய முடிவதில்லை

* தயாரிப்பாளர்களில் 97 % புது ஆட்கள் தான். இவர்களுக்கு முன் அனுபவம் இல்லாததால் தகுதிக்கு மீறிய சம்பளம் தந்து பட்ஜெட்டை ஏற்றி விடுகிறார்கள். மேலும் எங்கு சிக்கனம் செய்வது, டைரக்டரிடம் என்ன கேள்வி கேட்பது என்றும் அவர்களுக்கு தெரிவதில்லை. இயக்குனர் ஆகும் முன் பயிற்சி தேவை என்பது போல, தயாரிப்பாளர் ஆகும் முன்பும் யாரிடமாவது பணி புரிந்து விட்டு வரவேண்டும் என்று கொண்டு வரவேண்டும். அப்படி பணி புரிந்தால் சினிமா எடுக்கும் ஆசை அவர்களை விட்டு ஓடி விடும் !

பிளாஷ் பேக் - சப்தஸ்வரங்கள்

இன்றைய சூப்பர் சிங்கர் ஜூனியரின் முன்னோடி - சன் டிவியில் ஏ வி ரமணன் நடத்திய சப்தஸ்வரங்கள். பெரும்பாலும் கர்னாட சங்கீத பாடல்களை தான் பாடுவர் என்று ஞாபகம். இறுதியில் ஒரு பாட்டு பாட சொல்லி அதன் மெட்டு, பீட்டு இரண்டையும் தலை கீழாய் மாற்றி அடிக்க அதற்கு தகுந்த படி பாடவேண்டும். பாடுவோருக்கு ரொம்ப சாலன்ஜிங் ஆன, பார்க்கும் நமக்கு சுவாரஸ்யமான ரவுண்ட் இது
                   

நிகழ்ச்சி நடத்திய ஏ வி ரமணன் பாடுவோரை நன்கு என்கரேஜ் செய்து அருமையாய் நடத்துவார். ரஜினி கமல், சூர்யா என அனைவருக்கும் பின்னணி பாடும் இன்றைய பிரபல பாடகரான கார்த்தி அறிமுகமானது சப்தஸ்வரங்களில் தான் !

சிவகார்த்திகேயன் In - நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியின் ஒளி வடிவம் இது; டிவி யில் பார்க்க முடியாமல் யூ டியூபில் தான் பார்த்து மகிழ்ந்தேன்

வழக்கம் போல் சிவா-வின் ஹியூமர் சென்ஸ்க்காக பார்க்கலாம்.. விளம்பரம் இன்றி இந்த ஒரு மணி நேரம் செல்லும் இந்த நிகழ்ச்சியை.





Sunday, May 19, 2013

அன்னக்கொடியும் கொடி வீரனும் - பாடல்கள் தேறுமா?

2008- இறுதியில் வெளியான பொம்மலாட்டதுக்கு பிறகு - 4 வருடம் கழித்து இன்னொரு பாரதி ராஜா படம் ! இம்முறை அவருக்கு நெருக்கமான கிராமத்து களன். கதையில் பார்த்திபன்- அமீர் போன்றோர் உள்ளே வந்தது- வெளியேறியது துவங்கி ஏகப்பட்ட சர்ச்சைகள். அவற்றுக்குள் செல்லாமல் பாடல்கள் எப்படி என்று பார்ப்போம்

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வந்த பலரும் இந்த ஆல்பத்தில் பாடியிருக்கிறார்கள். சத்ய பிரகாஷ், சந்தோஷ், பூஜா.... இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் வைரமுத்து மட்டுமன்றி அவரோடு - அறிவுமதி, கங்கை அமரன், ஏகாதசி என பல கவிஞர்கள் பாடல்கள் எழுதியுள்ளனர் (வைரமுத்து எப்பவும் தானே எல்லா பாட்டும் எழுதணும் என்ற கொள்கை உள்ளவர்; இம்முறை தன் நண்பரிடமே அது பலிக்க வில்லை )



ஆவாரங் கூட்டுக்குள்ளே

பாடகர்கள்: சத்திய பிரகாஷ், சின்மயி
இயற்றியவர்: வைரமுத்து

டிபிக்கல் கிராமத்து பாட்டு - கிழக்கு சீமையிலே, கருத்தம்மா என எத்தனையோ படங்களில் இத்தககைய பாட்டுகளை கேட்டிருக்கோம். இது பாரதிராஜா பட பாட்டு என சொல்லிடலாம்.

கேட்டதும் ஓரளவு பிடிக்கிற மாதிரி இருந்தாலும், அப்புறம் பெரிதாய் ஈர்க்காமல் அப்படியே நின்னுடுது. ப்ளூட் இசை மட்டுமே கவர்கிறது

பாடலின் பெரிய குறை - பெண் குரல் - கிராமத்து சாயல் சிறிதும் இல்லை !

அன்னமே

பாடியவர்கள் : ஜி வி பிரகாஷ் குமார்,பூஜா
எழுதியவர்: ஏகாதசி

நம்ம விஜய் டிவி சூப்பர் சிங்கர் பூஜா பாடியிருக்கார் !

மிக மிக மெதுவாக நகர்கிற பாட்டு. தைரியமாக இப்படி ஒரு ஸ்லோ சாங்க் எப்படி வைத்துள்ளனரோ தெரிய வில்லை. ரொம்ப செண்டிமெண்ட்டலாக திரையில் நிச்சயம் க்ளிசரினுக்கு வேலை வைக்கிற பாட்டு. ப்ச் .....

புத்தி வச்ச

பாடியவர்கள் : ஜி வி பிரகாஷ் குமார், பிரசாந்தினி
எழுதியவர்: அறிவுமதி

ஆல்பத்தில் பாரதி ராஜா ஸ்டைல் இல்லாமல் - ஜி வி பிரகாஷ் குமார் ஸ்டைலில் அமைந்த பாட்டு இது. அதனாலேயே கேட்க நன்றாக இருக்கிறது.

துவக்க இசை - அருமை. மிக மெலடியஸ் பாடல். ஓரிரு முறை கேட்ட பின் பிடிக்கிறது. பாடல் வரிகள் புரியாமல் இசை டாமினேட் செய்வதை தடுத்திருக்கலாம்

நரிக உறங்க

பாடகர்கள்: சந்தோஷ், ஹரிணி சுதாகர், பூஜா
இயற்றியவர்: வைரமுத்து

மீண்டும் இசை மட்டுமே ஈர்க்கிறது. பரதேசி படத்தின் சில பாட்டுகளை இப்பாடல் நினைவு படுத்துவது பெரிய மைனஸ்

போறாளே போறாளே

பாடியவர்: S. P. சரண்
இயற்றியவர்: கங்கை அமரன்

கடலோர கவிதைகளில் " போகுதே போகுதே.. என் பைங்கிளி வானிலே " கேட்டிருக்கிறீர்களா? அதே மாதிரி சூழலில் காதலி பிரியும் போது காதலன் சோகத்தில் பாடுகிற பாடல்

மெட்டு, பாடல் வரிகள் இரண்டுமே அதிகம் கவரவில்லை. ஒரு இடத்தில் "ஓ...ஓ " என வரிகளே இன்றி ஜவ்வு மாதிரி திரும்ப திரும்ப பாட வைத்துள்ளது எரிச்சலூட்டுகிறது

அன்னமே

பாடியவர்கள் : மாயா, படையப்பா ஸ்ரீராம், ரைஹானா
எழுதியவர்: ஏகாதசி

ஆல்பத்தின் ஒரே செம ஸ்பீட் பாட்டு. கோவில் திருவிழா அல்லது சாமி பூஜையின் போது நடக்கும் பாட்டாக வருகிறது. கிராமத்து வாத்தியங்கள் ஒலிப்பது ஈர்க்கிறது. மற்றபடி பெரிதாய் சொல்லி கொள்ள ஏதுமில்லை
*****
மொத்தத்தில் -

சோகம் பிழியும் பாடல்களும், மிக மெதுவான - சுவாரஸ்யம் இல்லாத பாடல்களும் ரசிகர்களுக்கு பிடிக்காமல் தான் போகும்.

ஓரிரு பாடல்கள் மட்டும் தான் ரசிக்க முடிகிறது ..பல முறை கேட்ட பின்னும் !

Friday, May 17, 2013

உணவகம் அறிமுகம் - சூப்பர் ராயல் ரெஸ்டாரன்ட், பள்ளிக்கரணை


ள்ளிக்கரணை நூறடி ரோடு அருகில் காமாட்சி மருத்துவமனை to - பல்லாவரம் செல்லும் வழியில் - நல்லதொரு ஹோட்டல் இல்லை என்ற குறையை போக்கியுள்ளது இந்த சூப்பர் ராயல் ரெஸ்டாரன்ட்.

வந்து ஒரு வருடம் ஆகிறது. முதலில் காலை வேலை டிபன் மட்டும் போட்டு வந்தனர் பின் இரவு டிபனும் சேர்த்தனர் நான்கைந்து மாதமாக மதிய சாப்பாடும் துவக்கி விட்டனர்.




தமிழ் சினிமா போல 4 நண்பர்கள் சேர்ந்து நடத்தும் கடை இது. நால்வருமே வெவ்வேறு பணியில் இருப்பவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித டியூட்டி நேரம். ஒருவர் பகல் நேர வேலை; இன்னொருவர் யூ. கே ஷிப்ட், மற்றவர்க்கு இரவு பணி. தங்கள் வேலை நேரம் போக மாறி மாறி கடையில் இருந்து கவனிக்கிறார்கள். சனி ஞாயிறில் சில நேரம் மட்டும் கடை நடத்தும் நண்பர்களை இங்கு ஒன்றாக பார்க்க முடியும்

சேலம் அருகிலுள்ள ஆத்தூரை சேர்ந்த இவர்கள் - தங்கள் ஊர் சுவையில் உணவு வழங்குவது தான் சிறப்பு. குக், வேலைக்கான ஆட்கள் எல்லாமே அங்கிருந்து தருவித்ததால் இது சாத்தியமாகிறது

காலை நேரத்தில் வழக்கமான இட்லி, தோசை வகைகள், பூரி, பொங்கல். சப்பாத்தி போன்றவை கிடைக்கும். மதியம் சாப்பாடும் உண்டு. பிரியாணியும் உண்டு. இவர்களின் உணவுகளில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதும், நிறைய மூவ் ஆவதும் பரோட்டா, சப்பாத்தி மற்றும் ரவா தோசை.

ஆனால் நான் விரும்பி செல்வது இரவு உணவுக்கு தான். குறிப்பாக இவர்களின் கொத்து பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா மற்றும் கலக்கி ஆகியவை நான் விரும்பி சாப்பிடுபவை.



ஓபன் கிட்சன் என்பதால் அவர்கள் உங்களுக்கு உணவு தயாரிப்பதை நீங்கள் பார்க்க முடியும். கொத்து பரோட்டாவிற்கு - பரோட்டாவை நன்கு பிய்த்து போட்டு, நிறைய, நிறைய வெங்காயம் போட்டு, ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அவர்கள் தயார் செய்யும் லாவகம் எப்போதும் கவரும். குறிப்பாக பரோட்டவை எல்லோரும் தோசை கரண்டியால் கொத்துவார்கள். ஆனால் இங்கு அவர்கள் 2 டம்ளர் வைத்து கொண்டு , அதை திருப்பி பிடித்து கொத்துவார்கள்.

வெங்காயம் அதிகம் போட்டு, முட்டையும் கலந்து சுட சுட தயார் ஆகும் கொத்து பரோட்டா தான் அட்டகாசமாக இருக்கும் (விலை : 50)

முட்டை வீச்சு பரோட்டா - பெயருக்கேற்றபடி முட்டை போட்டு தயார் ஆகும் பரோட்டா. ஓரத்தில் முட்டையின் மஞ்சள் கரு தெரிய மெத்து மெத்தென்று தயார் ஆகி வரும். வெரி டேஸ்ட்டி !

இவர்களின் சைவ குருமா அந்த அளவு நன்றாக இல்லை என்பது தான் ஒரு குறை. சிக்கன் க்ரேவி காசு கொடுத்து வாங்கினால் தான் காம்பினேஷன் சரியே வொர்க் அவுட் ஆகும்.

இட்லி 5 ரூபாய்; பரோட்டா - 10 ரூபாய்; முட்டை வீச்சு - 20; ஆம்லெட் வகைகள் - 10; கொத்து பரோட்டா - 50 ரூ என இருக்கும் இவர்கள் விலை பட்டியல் நம் பர்சை பதம் பார்க்காத வண்ணம் இருக்கிறது. கூடவே இவர்களின் ஆத்தூர் சுவையும் சேர்ந்து கொள்ள கடையில் கூட்டம் அதிகமாகி கொண்டே போவதை தொடர்ந்து கவனிக்க முடிகிறது.

***********
பின்குறிப்பு :

அண்மையில் காலமான பதிவர் பட்டாப்பட்டி அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக அவரது ஏழாம் நாள் காரியம் நடக்கும் நாளை (சனிக்கிழமை) பதிவுகள் வெளியிடவேண்டாம் என பதிவர் நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிற நண்பர்களுக்கும் இந்த வேண்டுகோளை பகிர்கிறோம்.

பட்டாப்பட்டி அவர்களுக்கு அஞ்சலி; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் !

Wednesday, May 15, 2013

வானவில்: 3 பேர் 3 காதல்- இளம் குற்றவாளிகள் -தங்க மீன்கள்

பார்த்த படம் 3 பேர் 3 காதல்

நண்பன் சங்கர நாராயணன் படித்து படித்து படம் பற்றி இங்கு சொன்னபின்னும் தெரிந்தே ரிஸ்க் எடுத்தேன்



படத்தில் ஒரு சில நொடிகள் கூட யாரும் மௌனமாய் இல்லை பேச்சு பேச்சு.. பேச்சு. நமக்கே அலுப்பாகிடுது. விமல் மற்றும் அர்ஜூன் காதல் போர்ஷன்கள் மிக செயற்கை. மூன்று கதைக்குள்ளும் சரியான லிங்க் இல்லாதது கொடுமை.

படத்தின் உருப்படியான விஷயம் சேரன் மற்றும் பானு சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் தான். இந்த பார்ட் முழுதுமே கதை- நடிப்பு - 2 பாட்டுகள் என அருமையாய் இருந்தது

விகடனில் படத்துக்கு 37 மார்க் தான் தந்திருந்தனர் ! நம்மை இப்படி சோதிப்பதை விட வசந்த் ரிட்டயர் ஆகி விடுதல் நலம் !

திருச்சி விசிட்

ரொம்ப காலம் கழித்து நண்பர் தேவாவுடன் திருச்சி சென்றேன். டோல் பிளாசாக்களில் மட்டுமே சற்று தாமதமாகிறது. மற்றபடி நிதானமாக சென்றாலே 6 மணி நேரத்தில் சென்று விட முடிகிறது

நாங்கள் படித்த சட்ட கல்லூரி - அப்போது " பாப்பம்மாள் அன்ன சத்திரம் " என்ற இடத்தில் இயங்கி வந்தது. காவிரி ஆற்று பாலம் அருகிலேயே இருந்த அந்த கட்டிடம் இடிந்து கிடந்ததை காண மனது என்னவோ போல் ஆனது. அடுத்து மெயின் கார்ட் கேட் பேருந்து நிலையம் - 5 ஆண்டுகள் தினம் நாங்கள் பஸ் ஏறிய இந்த இடத்தை இன்று கண்டபோது தலை சுற்றி விட்டது. எங்கு நிற்கிறோம் - எந்த ஊருக்கு செல்லும் பஸ் எங்கு நிற்கிறது என எதுவும் புரியாமல் குழம்பி போனேன்.

கல்லூரி காலத்தில் சுற்றிய இடங்களை இன்று காணும் போது மனதில் எவ்வளவோ நினைவுகள் ! உடன் கல்லூரி கால நண்பர் யாரேனும் இருந்திருந்தால் இன்னும் அதிகம் கொசுவர்த்தி சுற்றியிருக்கலாம் ஹூம்

போஸ்டர் கார்னர்




எதிர்பார்க்கும் - தங்க மீன்கள்

அடுத்து வர உள்ள தமிழ் படங்களில் மிக எதிர்பார்க்கும் படம் " தங்க மீன்கள்" ; இதன் டிரைலரை காணும்போதே இது குழந்தைகளுக்கான படம் என்பது தெரிகிறது. ஆனந்த யாழை மீட்டுகிறாய் மற்றும் நதி வெள்ளம் மேலே - ஆகிய இரு பாடல்களும் சமீபத்தில் நான் மிக விரும்பி கேட்கும் பாடல்கள்......

இந்த டீசரில் படம் குறித்து இயக்குனர் ராம் பாலு மகேந்திரா மற்றும் கெளதம் மேனன் பேசுகிறார்கள். அந்த குழந்தையின் " அப்பா..ஆ .ஆ .ஆ .ஆ " என்னும் அலறல் மனதை என்னவோ செய்கிறது...



சட்ட பக்கம் - இளம் குற்றவாளி வயதை குறைக்க சட்டம்


குற்றம் புரியும் நபர் தற்போதைய சட்டப்படி - 18 வயது முடியும் வரை இளம் குற்றவாளி என்று கருதப்பட்டு- பல குற்றங்களுக்கு முழு தண்டனை கிடைப்பதில்லை. டில்லி பேருந்தில் தாக்கப்பட்டு மரணமடைந்த பெண்ணை தாக்கியது ஒரு இளம் குற்றவாளி தான். இத்தகைய வழக்குகளில் அவர் மேஜர் ஆகும் வரை "சீர் திருத்த பள்ளியில் வைத்து விட்டு அதன் பின் வெளியே விட்டு விடுவார்கள்

இதனை மாற்ற - இளம் குற்றவாளிகளுக்கான வயதை 16 ஆக குறைக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை நாடாளுமன்ற நிலைக்குழு செய்துள்ளது. இதற்கு முன் இளம் குற்றவாளிக்கான வயது 16 என்று தான் இருந்ததாகவும், சில வருடங்களுக்கு முன் 18 - என மாற்றிய பின், கடந்த சில வருடங்களில் - 16 வயது முதல் 18 வயதிற்குள் குற்றம் இழைக்கும் இளைஞர்கள் - வருடத்துக்கு 20,000 க்கும் மேல் இருப்பதாக சொல்கிறது இந்த அறிக்கை.


RJ பாலாஜி காமெடி
பாலாஜியின் சரவெடி காமெடியில் இந்த முகமூடி விமர்சனமும் ஒன்று. இதனை கேட்டு நீங்கள் சிரிக்காமல் இருக்க முடியாது ! தயவு செய்து அலுவலகத்தில் இதனை கேட்காதீர்கள் !



அய்யாசாமி கார்னர்

சந்திரபாபுவின் பழைய பாடல் ஒன்றில் " மாமியார் வீடு சொர்கத்தை போலே " என்ற வரி வரும் கேட்டுள்ளீர்களா? அது சத்தியமான உண்மை என்பது அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் !

அய்யாசாமி தனது வீட்டில் இருந்தால் வேலை பெண்டு நிமிர்ந்திடும். ஆனால் ஓரிரு மாசத்துக்கு ஒரு முறை மாமனார் வீட்டுக்கு சென்றால் அய்யாவுக்கு ராஜ உபசாரம் தான் ! சாப்பிடுவது, தூங்குவது, புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது என மனுஷன் வாழ்க்கையை நல்லா என்ஜாய் செய்வார்.

அவர் மாமியார் வேறு அநியாயத்துக்கு நல்லா சமைப்பாரகளா? மனுஷன் புகுந்து விளையாடிடுவார். சமீபத்தில் சென்றபோது கறி, மீன், ஸ்நாக்ஸ் எல்லாம் சாப்பிட்டுட்டு பின் தங்கள் வீட்டுக்கு வந்தா- வீட்டின் உள்ளே போகும் முன்பே - பிரச்சனை ஆரம்பிச்சுடுச்சு

மனுஷனுக்கு வாயிலயும் , வயித்திலேயும் பிச்சிக்கிட்டு ! இரவு நேரம் வேறு .. டாக்டரிடம் செல்ல முடியலை.. மனுஷனுக்கு உடம்புக்கு முடியாட்டி ரொம்ப படம் காட்டுவார். " எமன் வர்றான். கண்ணுலே தெரியுது " என்றெல்லாம் வீட்டில் உள்ளவர்களை தூங்க விடாமல் படுத்திட்டார்.
அடுத்த 2 நாளில் போர்ட் மீட்டிங் வேறு. ஒரு வழியாய் காலையே டாக்டரை பார்த்து ஊசி, மருந்து என சரியாகி ஆபிஸ் போனார்

அவருக்கு இப்படி ஆனதுக்கு காரணம் சொல்றார் பாருங்க " ஊரிலிருந்து ஒரு ஆள் உங்கள் வீட்டுக்கு வந்திருந்தானே.. அவன் பார்வையே சரியில்ல; நான் சாப்புடுறத பார்த்து கண்ணு வச்சிட்டான். இனிமே அந்த ஆளு இருந்தா கம்மியா சாப்பிடனும் "

Tuesday, May 14, 2013

சென்னை கடற்கரை - கோரமுகம்- மனதை வருத்தும் நினைவுகள்

டற்கரை ஒவ்வொரு மனிதருக்கும் எவ்வளவோ மகிழ்வான நினைவுகளை, அனுபவங்களை தருகின்றன.



அதே கடற்கரைக்கு வேறு ஒரு முகமும் உண்டு. அந்த முகத்தை தரிசித்தவர்களால் கடற்கரையை மகிழ்ச்சியோடு அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது.
**********
ஏழாண்டுகள் முன் என்னுடன் பணி புரிந்த அலுவலக நண்பரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் இது.

அவர் நிஜ பெயர் வேண்டாம். ரவி என வைத்து கொள்வோம். அப்போது வேலை பார்த்த சாப்ட்வேர் நிறுவனத்தில் டீம் லீடராக இருந்தார். சற்று வயதான பின் தான் திருமணம் ஆனது. பெருங்குடியில் Flat வாங்கிய போது கிரகப்ரவேசதுக்கு அழைத்திருந்தார்.

வீடு வாங்கும் முன் நான் வக்கீல் என்பதால் நிறைய சந்தேகம் கேட்பார். அப்போது வீட்டுக்கு குறிப்பிட்ட வகை இன்சுரன்ஸ் எடுத்திருப்பதாக சொன்னார். அது ஒரு பிளைன் ரிஸ்க் பாலிசி. யார் லோன் வாங்கி உள்ளனரோ, அவருக்கு ஏதேனும் நடந்து விட்டால் மீதம் EMI ஏதும் கட்டவேண்டாம். இன்சூரன்ஸ் நிறுவனம் லோன் பணத்தை வங்கிக்கு தந்து விடும். இறந்தவரின் வாரிசுகளுக்கு மீதம் பணம் தராமலே வீட்டின் உரிமை மற்றும் இதர டாக்குமெண்டுகள் வந்துவிடும்.

அப்போது அது சற்று புதிய கான்செப்ட் ஆக இருந்தது. அவரை பார்த்து விட்டு பின் நானும், எங்கள் ஹவுசிங் லோனுக்கு அதே பாலிசி எடுத்தேன்.

நிற்க. முக்கிய விஷயத்துக்கு வருவோம்

குறிப்பிட்ட நாள் அன்று ரவி அலுவலகம் வந்தார். அன்று அவர் டீமில்  பணிபுரியும் நபர்களுக்கு டிரையினிங் ப்ரோகிராம் நடந்தது. அவரும் கலந்து கொண்டுள்ளார். மதியம் 12 மணிக்கு மேல் அவருக்கு ஒரு போன் வருகிறது. " அவசரமாய் கிளம்ப வேண்டும்" என்று கூறி விட்டு லீவ் சொல்லி விட்டு செல்கிறார் .

அடுத்த சில நாட்களுக்கு பின்,  அவரையும், மனைவி & குழந்தையும் 2 நாளாய் காண வில்லை என்கிற தகவல் கம்பனிக்கு வருகிறது. லீகல் ஹெட் எனும்போது நான் இத்தகைய விஷயங்களையும் ஹாண்டில் செய்யத்தான் வேண்டும்.

விசாரித்த போது தெரிய வந்த தகவல்கள் அதிர்ச்சியை தந்தன.

விடுப்பு கேட்டு சென்ற ரவி நேராக இல்லம் சென்று மனைவி மற்றும் கை குழந்தையுடன் மகாபலிபுரம் சென்றுள்ளார். அங்கு ஒரு ரிசார்ட்டில் அன்று மாலையும், இரவும் தங்கி உள்ளனர். அதன் பின் அவர்கள் யாரையும் காண வில்லை.

சில நாட்களுக்கு பின் ரவி மற்றும் அவர் குழந்தையின் உடல் மட்டும் பீச்சில் இருந்து கிடைத்தது.

அவர் மனைவி உடல் கிடைக்க வில்லை.  மனைவி குறித்து எந்த தகவலும் தெரியாதது பல்வேறு ஊகங்களுக்கு இடமளித்தது. மக்கள் பல விதமாய் பேசினர்.

இறந்த ரவி வீட்டுக்கு நாங்கள் சென்றிருந்தோம். ரவி மற்றும் அவர் மனைவியின் உறவினர்கள் அந்த வீட்டை நிறைத்திருந்தனர். ரவி மனைவியின் பெற்றோர் கதறியதை தான் இன்னும் மறக்க முடியாது

" எங்க பொண்ணு செத்திருக்கணும்; செத்திருக்கணும். அவளோட இறந்த உடம்பை நாங்க பாக்கணும் ! அது கிடைச்சா எங்களுக்கு போதும் !" இதையே சொல்லி அரற்றி கொண்டிருந்தனர்.

அந்த பெண்ணின் உடல் கிடைக்கவே இல்லை.

கடற்கரை செல்லும் சில பொழுதுகளில், முன்பொரு சமயம் கடலில் கிடைத்த ரவி உடலும், அவர் கைக்குழந்தை உடலும் அவ்வப்போது நினைவில் வந்து போகும்.

ரவியின் மிக நெருங்கிய நண்பன் ஒருவனை சமீபத்தில் சந்தித்தேன். அந்த பொண்ணு பத்தி ஏதும் தகவல் தெரிஞ்சுதா என்றேன். "இல்லை" என்றான்

என்ன தான் ஆனது அந்த பெண்ணுக்கு?

வாழ்க்கை சில புதிர்களை விடுவிப்பதே இல்லை. சில கேள்விகளுக்கு அது பதில் தராமலே இருந்து விடுகிறது !

****
கடற்கரையில் நிகழ்ந்த இன்னொரு சம்பவம்: 

எங்கள் உறவினர் ஒருவரின் மகன் மிக நன்கு படிப்பான். ஈரோடில் அவன் படித்த பள்ளியில் + 2 வில் முதல் ரேங்க்.   கிண்டி அண்ணா யூனிவர்சிட்டியில் பீ. ஈ படித்தான். முதல் வருடம் படிக்கும் போதே ஏனோ நிரம்ப வருத்தத்துடன் இருந்தான். இஞ்சிநியரிங்கில் 75 சதவீதம் போல் மார்க் வாங்கினான். அது அவனுக்கு திருப்தி கரமாய் இல்லை. பள்ளியில் முதல் மார்க் வாங்கியவனுக்கு கல்லூரியில் தன்னை விட பலர் அதிக மார்க் வாங்குவதை ஏற்கவே முடிய வில்லை.

ஈரோடுக்கு செல்லும்போதெல்லாம் வீட்டில் புலம்பி கொண்டிருந்திருக்கிறான். இரண்டாம் ஆண்டு செமஸ்டர் பரீட்சை நேரம் மிக மூட் அவுட். ஹாஸ்டலில் தங்கி படிப்பவன் தேர்வு எழுதாமல் எங்கோ என்று விட்டான். அவனது மொபைல் ரூமிலேயே இருந்தது.

ஈரோடில் இருந்து பெற்றோர் வந்து பல நாட்கள் போலிஸ் கம்பிலேயின்ட், பத்திரிக்கையில் விளம்பரம் தந்து தேடிய பின் ..........

அவனது உடல் கடலில் இருந்து ஒதுங்கியது !

நன்கு படிக்க கூடிய பையன். அண்ணா யூனிவர்சிட்டியில் மெரிட்டில் சீட்; கல்லூரியில் 75 சதவீத மார்க், நிச்சயம் கோர்ஸ் முடித்ததும் Campus வேலை ..! இவ்வளவும் இருந்தும் மன சிதைவு (டிப்ரஷன்) அவனை தற்கொலைக்கு தூண்டி விட்டது.

நீச்சல் தெரியாது அவனுக்கு ! கடைசியாக ஈரோடு சென்றபோது " பீச்சில் விழுந்தால் என்ன ஆகும்?"  என தன் பாட்டியிடம் கேட்டிருக்கிறான். சொல்லி சொல்லி அழுதார் அவனது பாட்டி
****
அநேகமாய் கடற்கரை செல்லும்போதெல்லாம் இந்த நினைவுகள் வந்து மனதை சற்று அசைத்து பார்க்கிறது
****
துவங்கிய வரிகளில் தான் முடிக்க வேண்டும்.

கடற்கரைக்கு வேறு ஒரு முகமும் உண்டு. அந்த முகத்தை தரிசித்தவர்களால் கடற்கரையை சில நேரங்களில் அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது !

Monday, May 13, 2013

தொல்லைகாட்சி - மருத்துவர் ஐயா - ராட்டினம்- சூப்பர் சிங்கர்

டிவியில் பார்த்த படம் : ராட்டினம் 

ராட்டினம்  படம் வந்த போது உண்மை தமிழன் உள்ளிட்ட சில பதிவர் நண்பர்கள் நல்ல விதமாய் எழுதியிருந்தனர்.

இளம் வயது பள்ளி காதல் - அதற்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு என்கிற "காதல்" டைப் கதை. காதல் படம் போலவே முடிவில் உள்ள டுவிஸ்ட்கள் தான் வியக்க வைக்கிறது. இளம் - ஹீரோ ஹீரோயின் இருவர் நடிப்புமே நிறைவு. ஹீரோயின் அழகு ! இருவரையும் அதன் பின் எந்த படத்திலும் காணவில்லை - ஏனென்று தெரியவில்லை !




புதுமுக இயக்குனர் படத்தை ரொம்ப அழகாய் கொண்டு சென்று, மனதில் ஒரு தாக்கம் ஏற்படுத்தும் வண்ணம் முடித்திருந்தார். சன் அல்லது கே டிவி யில் நிச்சயம் மறுபடி போடுவார்கள். அவசியம் பாருங்கள் !

சூப்பர் சிங்கர் அப்டேட் 

30 டாப் பாடகர்களை தேர்ந்தெடுக்கிறோம் ; அவர்கள் பிரம்மாண்ட மேடையில் பாடுவார்கள் என மூணு வாரமா பஜனை செய்தனர். கடைசியில் - முதல் 30 பேரை ஒரு வழியா தேர்ந்தெடுத்து முடிக்க, மீதம் 3 பேர் பாவமா நின்றனர். " உடனே நீங்கள் மூவரும் கூட அடுத்த ரவுண்ட் செலக்ட் ஆகுறீங்க" என்றனர் அட பாவிங்களா ! இந்த கருமத்துக்கு தான் 3 வாரம் இதை வச்சு இழு இழுன்னு இழுத்தீங்களா ! நல்லாருங்கடா !

மருத்துவர் ஐயா பேட்டி 

சிறையில் இருந்து வந்த வெளியே வந்த மருத்துவர் ஐயா பேட்டி ஏறக்குறைய முழுவதும் மக்கள் டிவியில் பார்த்து மகிழ்ந்தேன். ஐயா இதில் உதிர்த்த முத்துக்கள் :

* கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும் இனி தி. மு. க , அ .தி. மு. க , தேசிய கட்சிகள் ஆகிய எவற்றுடனும் தேர்தல் கூட்டணி கிடையாது ("உங்களுக்கு பழக்கம் இல்லாத ஒன்றை சொல்றீங்களே ஐயா"- என ஏன் எந்த நிருபரும் கேட்கலை ?)

*காடுவெட்டி குருவை போல தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர்கள் தமிழகத்தில் யாருமில்லை

* பா ம. க கட்சியனர் எந்த தவறும் செய்யாத போது (அப்படிங்களா?) தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் பலரையும் சிறையில் அடைத்தது. தாக்கப்பட்டதேன்னவோ நாங்கள் தான்.ஆனால் எங்களையே பிடித்து சிறையில் அடைக்கிறார்கள்

* பாராளுமன்ற தேர்தலில் அ .தி. மு. க விற்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது. நாங்கள் 10 தொகுதி ஜெயிப்போம் ( ஏன் சார் இம்புட்டு கம்மியா சொல்றீங்க? 30, 40 ன்னு அடிச்சு விட வேண்டியது தானே)

நிற்க. கடந்த சில தேர்தல்களில் மருத்துவரை அவரது கட்சியை சார்ந்த மக்களே புறக்கணித்த நிலையில்,  சாதிக்காக ஜெயிலுக்கு போனதாக பிரசாரம் செய்து தங்கள் சாதி ஓட்டையாவது மீண்டும் பெறசெய்கிற முயற்சிதான் இது என்று தோன்றுகிறது !

பிரபல படங்களும் சீரியல்களும்

சிந்து பைரவி, மண் வாசனை, பாமா விஜயம் - இதெல்லாம் என்ன என சொல்லுங்க பார்ப்போம் !

பிரபல சினிமா பட பெயர்கள் என்று தானே சொல்வீர்கள் ! உங்கள் வீட்டு இல்ல தலைவிகளிடம் சொல்லி பாருங்கள் .. இதெல்லாம் இப்போது சக்கை போடு போடும் டிவி சீரியல்கள் ! ராஜ் டிவி யில் மாலை நேரம் அடுத்தடுத்து ஒளி பரப்பாகும் சீரியல்கள் பெயர் தான் அவை ! எல்லாமே ஹிந்தி சீரியல் டப்பிங்.

மாலை 7 முதல் எட்டரை வரை இதனாலேயே ஆபிசில் உட்கார்ந்து விட்டு வருகிறேன். வீட்டிற்கு வந்தால் வந்தால் ஒரே அழுகை சத்தமாய் இருக்கும் ! ஹூம் !

கிரிக்கெட் கார்னர்

கிட்டத்தட்ட 3 அணிகள் (சென்னை, ராஜஸ்தான், மும்பை ) செமி பைனல் செல்வது உறுதியான நிலையில் நான்காவதாக செல்லும் அணி - பெங்களூருவா அல்லது ஹைதராபாத்தா என்பது மட்டுமே முக்கிய கேள்வியாக உள்ளது மேலும் எந்த அணிகள் எந்த ரேங்கில் அணி வகுக்கும் என்பதும் !

கொல்கத்தா அணியிடம் நேற்று தோற்றதால் இனி வரும் 2 மேட்ச்களையும் ஜெயித்தாக வேண்டும் என்ற கடினமான நிலையில் இருக்கிறது பெங்களூரு. ஹைதராபாத்தோ தங்கள் ஊரில் மிக மோசமான ஒரு பிட்சை வைத்து கொண்டே இவ்வளவு தூரம் வந்து விட்டது.

நேற்றைய சென்னை Vs ராஜஸ்தான் மேட்சில் கிடைத்த மரண அடி - சென்னையின் ஆதிக்கத்தை சற்று அசைத்து பார்த்து விட்டது !


பிடித்த டிவி விளம்பரம்

இந்த விளம்பரம் பிடிக்க ஒரே காரணம் தான் - கா - த் -ரி - னா - வாவ் !





நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக சொல்கிறார்கள். மிக மொக்கை + செம பெயிலியர் ஆன நிகழ்சிகளில் ஒன்றாக ஆகி விட்டது இந்த சீசன் ! இதனாலேயே தொடர்ந்து பிரபலங்களை அழைத்து வந்து பேச வைத்தனர். நடிகை ராதிகா ஓரிரு வாரம் முன்பு வந்து மிக ஜாலியாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இப்படி சுவாரஸ்ய எபிசொட்கள் மிக குறைவே !

சில நாட்கள் முன்பு வெளிநாட்டில் வாழும் ஒரு பெண்மணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது " வெளிநாடுகளிலும் கூட திருட்டு என்பது நிறையவே உண்டு. திருட வந்து விட்டு வீட்டில் பணம் நகை எதுவுமே இல்லாவிட்டால், அந்த கடுப்பிலயே கத்தியால் குத்தி விட்டு போவார்கள் வீட்டில் எப்போதும் கொஞ்சமாவது நகை மற்றும் பணம் (Minimum 20,000) வைத்திருக்க வேண்டும் " என்றார்

நாமெல்லாம் வீட்டில் நகை அல்லது பணம் வைக்கவே மாட்டோம் ! ஆனால் அப்படி திருடன் வந்து பார்த்து விட்டு அந்த கடுப்பிலேயே குத்தி விட்டு போவான் என்ற சிந்தனை சற்று வித்யாசமாக இருந்தது !
****
அண்மை  பதிவு: 

நீயா நானா ஜெயித்தொருக்கு நிஜமா பரிசு  தர்றாங்களா? அனுபவம் 

உணவகம் அறிமுகம் - White Pepper  ரெஸ்டாரன்ட் வேளச்சேரி 

Saturday, May 11, 2013

உணவகம் அறிமுகம் : White pepper ரெஸ்டாரன்ட், வேளச்சேரி

வேளச்சேரி - விஜய நகர் பேருந்து நிலையத்திலிருந்து குரு நானக் மற்றும் பீனிக்ஸ் மால் செல்லும் சாலையில் உள்ளது இந்த உணவகம்.

சைனீஸ், இந்தியன், தந்தூரி வகைகள் என்ற அறிவிப்பு பலகை பார்த்து விட்டு சற்று தயக்கத்தோடு தான் உள்ளே நுழைந்தோம். ஆனால் எங்களை முழுவதும் திருப்தி படுத்தி விட்டது இங்குள்ள உணவுகள்..




ஞாயிறு மாலை என்பதால் நல்ல கூட்டம். உள்ளே நுழையும் போது அதிர்ஷ்டவசமாக இடம் கிடைத்து விட்டது. எங்களுக்கு பின்னாலேயே வந்த இரு குழுக்கள் சற்று காத்திருக்க வேண்டியதாயிற்று.

அகலம் அதிகமில்லாத குறுகலான கடை. ஆனால் வால் போல் நீளமாக இருக்கிறது. 15 குழுக்களாவது அமர்ந்து சாப்பிட மேசைகள் உள்ளன

நாங்கள் ஆர்டர் செய்தது :

மஷ்ரூம் சூப்
சிக்கன் டிக்கா ரோல்
பட்டர் நான்
தந்தூரி பரோட்டா
கடாய் பன்னீர்
பிரைட் ரைஸ்...

உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கும் போது அங்கு சாப்பிடும் மக்களை கவனிக்கிறேன். நண்பர்களோடு வந்து சாப்பிடும் ஐ. டி இளைஞர் கூட்டம், குடும்பத்தோடு வந்துள்ள மக்கள், மெல்லமாய் பேசியவாறு தேவைக்கதிகமாக சிரிக்கும் காதலர்கள்.. என எல்லா வித மக்களையும் இந்த
ரெஸ்டாரன்ட் கவர்ந்துள்ளது தெரிந்தது.

சூப்புக்கு சைட் டிஷ் போல பீட்ரூட்டை நீளமாக நறுக்கி மூன்று பீஸ் வைத்திருந்தனர். கூடவே ஒரு முழு மிளகாய் வேறு ! எப்படி மிளகாயை அப்படியே கடிக்க முடியும் என தயக்கம் இருந்தாலும் அது குடை மிளகாய் போல அதிக காரம் இன்றி சூப் உடன் சேர்ந்து கடித்து சாப்பிட நன்றாகவே இருந்தது

சிக்கன் டிக்கா ரோல் - இங்கு தான் முதன் முதலில் சாப்பிட்டு பார்த்தோம். பிஸ்சா போல ஒரு சமாச்சாரமாக தான் அது தெரிந்தது. பிஸ்சா மாதிரி ஒரு வஸ்து உருண்டையாக ஒரு ரோல் போல இருக்க, அதனுள்ளே சிக்கன் ஸ்டப் செய்திருந்தனர். நல்ல டேஸ்ட்.

பட்டர் நான் & காடாய் பன்னீர் - செம சுவையாக இருந்தது.

இங்குள்ள அனைத்து உணவுகளிலும் குறிப்பிட்டு சொல்லும் வித்தியாசம் ஒன்று உண்டு - அவர்கள் சாப்பாட்டில் பலவற்றை முழுசாய் போட்டு விடுகிறார்கள். கடாய் பன்னீரில் காஞ்ச மிளகாய் முழுசாய் (காம்புடன்) கிடக்கிறது. போலவே தனியா கூட அரைத்து தூளாக போடாமல் முழுசாய் போட்டுள்ளனர் !

எப்பவும் போல அனைத்து உணவையும் ஆளுக்கு கொஞ்சம் என ஷேர் செய்து சாப்பிட்டு முடித்தோம்.

பின் கடைசியாய் எங்கள் பெண் பலூடா ஆர்டர் செய்தாள். அவளுக்கு மட்டும் ஒரே ஒரு பலூடா ஆர்டர் செய்தோம்.


வந்த பின் கொஞ்சம் சாப்பிட்டு பார்க்க ஹவுஸ் பாஸ் தனக்கும் வாங்கி தந்தால் தான் ஹோட்டலை விட்டு வருவேன் ; இல்லா விட்டால் வர மாட்டேன் என்று அடம் பிடிக்க, அவரை அங்கேயே விட்டு செல்ல நல்ல வழி அது தான் என்றாலும், அதை சொல்ல மனமின்றி இன்னொரு பலூடா ஆர்டர் செய்தேன்.

"அடடா பலூடான்னா இது தான் பலூடா ! பேஷ் ! பேஷ் ! ரொம்ப நல்லாருக்கு !" என காசு செலவான கவலையை மறந்து நான் சொல்ல

" ஆமாங்க இனிமே இந்த வழியா போனா, இங்கே வந்து வெறும் பலூடா மட்டுமாவது சாப்பிட்டுட்டு போகணும் " என்றார் ஹவுஸ் பாஸ் !

அவர் சொன்னா அப்பீல் ஏது?

**********
மேலதிக தகவல்கள்: 

White pepper ரெஸ்டாரன்ட்
100 Feet Byepass Road
வேளச்சேரி

வீடுதிரும்பல் பரிந்துரை : ஒரு முறை நிச்சயம் செல்லலாம் !

Thursday, May 9, 2013

ஐ.பி.எல்-லில் மேட்ச் பிக்சிங் உண்டா ? ஒரு அலசல்

வ்வொரு வருடமும் ஐ. பி. எல் நடக்கும் போதும் மேட்ச் பிக்சிங் குறித்த விவாதங்கள் கிளம்பி விடுகின்றன.

குறிப்பாக சென்னை வெல்லும் ஒவ்வொரு முறையும் " ஜெயிக்க வைத்த சீனு மாமாவுக்கு ஜே !" என்று முக நூல் மற்றும் கூகிள் பிளஸ்சில் குரல் கிளம்புவது சகஜம் ! மேட்ச் துவங்கும் முன்பே கூட " சீனு மாமா இன்னிக்கு என்ன செய்ய போறாரோ ?" என்று தான் இணையத்தில் பேசி கொள்கிறார்கள்

match fixing cartoons, match fixing cartoon, match fixing picture, match fixing pictures, match fixing image, match fixing images, match fixing illustration, match fixing illustrations

ஐ. பி. எல் லில் மேட்ச் பிக்சிங் சாத்தியம் தானா ? எனது சிற்றறிவுக்கு எட்டிய சில கருத்துகளை இங்கு பகிர்கிறேன்.

முதலில் பிக்சிங் நிச்சயம் இருக்கிறது என்று நினைப்போர் சொல்லும் காரணங்கள் :

1. கிரிக்கெட்டில் காம்ப்ளிங் இருக்கிறது என்பதில் யாருக்கும் சந்தேகமோ, மறுப்போ இல்லை. இந்த மேட்ச் யார் டாஸ் ஜெயிப்பார்கள், முதலில் பேட் செய்வது எந்த அணி, எவ்வளவு வித்தியாசத்தில் , யார் ஜெயிப்பார்கள், ஒரு ஓவரில் அடிப்பது எவ்வளவு ரன் என விரிவான கேம்ப்ளிங் சர்வ நிச்சயமாக நடக்கிறது

ஆனால் இந்த கேம்ப்ளிங் Group - விளையாடும் வீரர்களுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கு சாதகமான முடிவுக்காக பேரம் பேசி, அதுவும் படியும் போது தான் மேட்ச் பிக்சிங் ஆகிறது.

அசார், ஜடேஜா காலத்திலேயே இருந்த இந்த பிக்சிங் இப்போது காசு அதிகம் புரளும் போது நிறையவே நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை

2. கடைசி ஓவர்களில் தொடர்ந்து போடப்படும் புல் டாஸ்களை பாருங்கள். புல் டாசில் பவுண்டரி அடிப்பது எளிது என்று தெரிந்தும் எப்படி மீண்டும் மீண்டும் கடைசி ஓவரில் புல் டாஸ் போடணும்?



3. மிக எளிதான ஸ்கோர் கூட - கடைசி ஓவர் வரை இழுத்து யார் ஜெயிப்பார் என்ற டென்ஷன் வர வைத்து மேட்ச் முடிவதில் தெரியவில்லையா பிக்சிங் உண்டு என ?


4. நான்கு வெளிநாட்டு வீரர் தான் விளையாடுவார்கள் என்பதிலேயே பிக்சிங் துவங்கி விடுகிறது. இன்று ஆடும் அந்த 4 வெளி நாட்டு வீரர்கள் யார் என்பதிலேயே காம்ப்ளிங் மற்றும் பிக்சிங் நடக்க நிறையவே வாய்ப்ப்பு உண்டு.

5. சென்ற ஆண்டு ஐந்து இளம் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் பிரச்சனையில் நீக்கப்பட்டதிலிருந்தே இங்கு பிக்சிங் எவ்வளவு ஆழமாக ஊடுருவி உள்ளது என்பது தெரியும்


6. பல நேரங்களின் அணியின் ஓனர் மற்றும் கேப்டன் மட்டுமே இதில் முழுதும் ஈடுபட வாய்ப்பு அதிகம். அதனால் ஒவ்வொரு பிரான்சைஸ்சும் தங்களுக்கு தோதுவான அணி தலைவரை நியமிக்க வாய்ப்புகள் அதிகம்.

கேப்டன் தான் பல முடிவுகள் எடுக்க போகிறவர். நன்கு பந்து வீசுபவரை முதலில் கொடுத்து முடித்து விட்டு, மிக சுமாராக பந்து வீசுபவரை கடைசி ஓவர்களில் அவர் வீச வைக்கலாம். பேட்டிங் ஆர்டர் மாற்றி இறக்கலாம். இப்படி அவர் ஒப்பு கொண்ட கேம்ப்ளிங்கிற்காக பல விஷயங்கள் செய்ய கூடும்

ஐ. பி. எல்லில் மேட்ச் பிக்சிங் இருக்காது என்று நினைப்போரின் எண்ணம் இப்படி இருக்கிறது

1. மேட்ச் பிக்சிங் ஓரளவு இருக்கும் என்பதை முழுதும் மறுக்க முடியாது. ஆனால் அது வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் அளவிலும் - அல்லது மேட்சில் நடக்கும் ஒவ்வொரு செயலும் பிக்சிங் ஆனது என்பதை நம்ப முடியாது

ஒவ்வொரு செயலும் பிக்சிங் என்றால் - அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை - விஷயம் பலருக்கும் தெரியும். நிச்சயம் வெளியிலும் இந்நேரம் வந்திருக்கும்.

2. சச்சின், திராவிட் போன்ற இதுவரை எந்த கருப்பு புள்ளியும் இல்லாத வீரர்கள் பிக்சிங் இருந்தால் இவ்வளவு ஆர்வத்துடன் தங்களை ஈடுபடுத்தி கொள்ள மாட்டார்கள். கஷ்டப்பட்டு எடுத்த நற்பெயரை அவ்வளவு எளிதாக இழக்க அவர்கள் ஒப்பு கொள்வார்களா என்ன?



3. சொல்லி வைத்து பந்து போடுவதும், சொல்லி வைத்து அதனை ஆறுக்கு அனுப்புவதும் நடப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். என்ன தான் அல்வா மாதிரி பந்து போட்டாலும் எல்லாராலும் அதனை சிக்சர் ஆக்கிட முடியாது.

4. உலகின் அனைத்து முன்னணி வெளிநாட்டு வீரர்களும் இதில் இருக்கும் போது அப்படி பிக்சிங் நடந்தால் நிச்சயம் அவர்கள் அதனை பற்றி ஒரு கட்டத்தில் பேச தான் செய்வார்கள். குறிப்பாக தங்களை எந்த அணியும் செலெக்ட் செய்யலை; அல்லது சரியான சம்பளம் வழங்கலை எனும்போது அவர்கள் பிக்சிங் சம்பவங்கள் பற்றி பேச வாய்ப்புகள் உண்டு. அப்படி யாரும் இதுவரை பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது

5. உலகம் முழுதும் உற்று பார்க்கும் இந்த டோர்னமென்ட்டில் நன்கு ஆடி பெயர் எடுக்கணும், புகழ் பெறணும் என்று தான் எந்த வீரரும் நினைப்பார்களே ஒழிய, குறுகிய நோக்கில் இப்போது கிடைக்கும் பணத்துக்காக, மோசாக ஆடி தனது காரியரை இழக்க வீரர்கள் ஒப்பு கொள்வர் என்று தோன்ற வில்லை

6. நீங்களும் நானும் நம்புறோம் அல்லது நம்பவில்லை என்பது இருக்கட்டும்;  கிட்டத்தட்ட 2 மாசம் நடக்கும் அனைத்து மேட்ச்களுக்கும் மிக பெரும் கூட்டமாக ஸ்டேடியம் சென்று ஆதரிக்கிறார்கள் பாருங்கள். போலவே டிவியில் பார்ப்போரும் பல கோடி மக்கள் உண்டு. பிக்சிங் இருக்கிறது என்று முழுதும் நம்பினால் யாரும் தெரிந்தே இப்படி பார்த்து ஏமாற மாட்டார்கள். இத்தனை பேர் தொடர்ந்து பார்க்கிறார்கள் என்பதிலேயே அவர்கள் பிக்சிங் பற்றி நம்பவில்லை அல்லது கவலை கொள்ள வில்லை என்பதையே காட்டுகிறது. 

ஆமா.. இவ்விஷயத்தில் உங்கள் கருத்து என்ன .. பின்னூட்டத்தில் கருத்து சொல்லிட்டு போங்க சாரே !

********

Wednesday, May 8, 2013

வானவில்: ரன் பேபி ரன்- RJ பாலாஜி - பூனம் பாஜ்வா

பார்த்த படம்- ரன் பேபி ரன்

மோகன்லால் மற்றும் அமலா பால் நடித்த மலையாள படம் ரன் பேபி ரன். மீடியா - (தொலை காட்சி சானல்) என்கிற களத்தில் நிகழும் ஒரு சஸ்பென்ஸ் கதை.

மோகன்லால் மற்றும் அமலா பால் புகைப்பட காரர் மற்றும் ரிப்போர்டர். காதலித்து திருமணம் செய்யும் நிலையில், ரிப்போர்ட் எடுக்க செல்லும்போது வரும் சண்டையால் பிரிகிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு அவர்கள் சேர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல். இப்போது மோசமான அரசியல்வாதியால் அவர்கள் இருவரும் ஓடி ஒளிய வேண்டிய நிலை ( அதான் பட தலைப்பு ) ; எப்படி தப்பினார்கள் என்பதே படத்தின் இரண்டாம் பகுதி .

ரொம்ப சூப்பர் எல்லாம் இல்லை. ஜஸ்ட் டைம் பாஸ் படம். மோகன் லாலுக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு வெற்றி படமாய் இது அமைந்தது

அழகு கார்னர்

பூனம் பாஜ்வா- கண், மூக்கு, உதடு, சிரிப்பு, உடல் வாகு என அனைத்தும் சரியாய் இருந்தும் ஏனோ தமிழில் அதிகம் ஸ்கோர் செய்யாமல் போனது வருத்தமே. நம்ம ஜீவா கூட அடுத்தடுத்து தன் படங்களுக்கு இவரையே ஹீரோயினாக்கி முன்னுக்கு கொண்டு வர முயற்சி செய்தார். 

வரணும். அம்மணி மீண்டும் ஒரு ரவுண்டு வரணும்


                        
பதிவு திருட்டு

முகநூலில் தன்னம்பிக்கை என்ற பெயரில் இயங்கி வரும் நபர் எனது அனுமதி இன்றி- சாதாரண மனிதர்கள் வரிசையில் எழுதிய பேட்டிகள் பலவற்றை தனது தளத்தில் பகிர்ந்துள்ளார். எனது பெயரோ, ப்ளாக் லிங்கோ இன்றி தான் எழுதியது போலவே பகிர்ந்துள்ளார். பதிவுகள் ஒவ்வொன்றும் - 50 க்கும் மேல் ஷேர் செய்யப்பட்டுள்ளன. ஏராள காமன்ட்கள் அவரை வாழ்த்தி போடும்போதும் - எழுதியது வேறு நபர் என்று சொல்லாமல் திருட்டு சந்தோஷம் அனுபவித்துள்ளார் இந்த நல்லவர் !

http://www.facebook.com/ThannambikkaiFans?fref=ts

அவர் திருடி பகிர்ந்துள்ள ஒவ்வொரு பதிவிலும் எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். முகநூளில் இந்த செய்தியை பகிர்ந்ததும், நண்பர்கள் அவர் தளத்துக்கு சென்று அவரது இந்த செயலை கண்டிக்க உடனே நமது பதிவுகள் அனைத்தையும் அகற்றி விட்டார். நண்பர்கள் அவர் திருட்டை கண்டித்து போட்ட 20-க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களையும் அகற்றி விட்டு நல்லவர் போல் தன் "பணி "யை தொடர்கிறார்.

பதிவர் நண்பர் பிரபு கிருஷ்ணா தனது பதிவுகளையும் இவர் எடுத்து கையாண்டுள்ளதாக கூறுகிறார். இவரது பக்கத்தில் உங்கள் பதிவுகள் கூட எடுத்து ஷேர் செய்திருக்க கூடும். ஒரு முறை எட்டி பாருங்கள்

போஸ்டர் கார்னர் 

இந்த போஸ்டரில் உள்ள உண்மை சுடுகிறது !



RJ பாலாஜியின் அசத்தல் காமெடி

ரேடியோவில் கலக்கி கொண்டிருக்கும் ஒரு மனிதர் RJ பாலாஜி. மனிதருக்கு என்னா ஹியூமர் சென்ஸ் ! (எதிர் நீச்சல் படம் பார்த்திருந்தால் கிளை மாக்சில் - மாரத்தான் போது காம்பியராக வருவாரே.. அவர் தான் பாலாஜி)

இவரது பேச்சை ஆயிரகணக்கான இளைஞர்கள் கூட்டம் ரசிக்கிறது. விகடன் சென்ற ஆண்டின் சிறந்த ரேடியோ ஜாக்கி விருது இவருக்கு தான் தந்தது

இவரின் சில காமெடிகள் அவ்வப்போது இங்கு பகிர எண்ணம்..

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் ஆடும் தமிழக வீரர்களை அழைத்து இவர் கலாய்ப்பதை கேட்டு சிரியுங்கள் ! அஷ்வின், ஸ்ரீகாந்த் , அபராஜித் என எல்லாரையும் நாசம் பண்றார்.



பஸ்கள் எரிப்பு......

பா. ம. க நிறுவனர் ராமதாஸ் கைதும் அதை தொடர்ந்து நடக்கும் பஸ் எரிப்புகளும் அரசியல் வாதிகள் மீதான வெறுப்பை அதிகமாக்குகின்றன

ஒரு வழக்கில் கைதானார் ...சரி. அடுத்து பல வழக்குகள் போட வேண்டிய அவசியம் என்ன? இது ஒரு பக்கம் என்றால், இதுவரை 500 க்கும் மேற்பட்ட பஸ்களை எரித்தது கொடுமையிலும் கொடுமை ! மரம் வெட்டிகள் என்ற பெயரோடு பஸ் எரித்தோர் என்ற நற்பெயரும் சேர போகிறது. பா. ம. க விற்கு ஆதரவு இருப்பதே மிக சில மாவட்டங்களில் மட்டும் தான். அங்கும் கூட அவர்கள் சாதியை தவிர்த்த மற்றவர்கள் அக்கட்சியை முழுவதும் வெறுக்க ஆரம்பித்து விடுவர்.

குறிப்பிட்ட மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இதனால் அநேகமாய் நிறுத்தப்பட்டு, தனியார் பேருந்துகள் தான் இயங்குகின்றன போலும். அவர்களும் மிக அதிக கட்டணம் வசூலிப்பதாக டிவி செய்தியில் கண்டேன்.

எதிர்ப்பை காட்ட - இதுவா வழி? ஹூம் :((

மகிழ்ச்சியான செய்தி

சேவை இல்லம் குறித்த நேற்றைய பதிவை வாசித்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் - சேவை இல்லத்துக்கு பென்ச் உள்ளிட்ட உதவிகள் தர முன் வந்துள்ளது.

நல்ல பதிவுகள் அதிகம் கவனிக்கபடாமல் போகிறதே என நானும் ஆதி மனிதனும் நேற்று பேசிய போது சற்று வருத்தப்பட்டோம். ஆனால் யார் கண்ணில் பட வேண்டுமோ, அவர்களுக்கு அது சரியாக சென்று சேர்ந்துள்ளது அறிந்து மிகவும் மகிழ்ச்சி !

அவர்கள் யார் என்ற விபரம் - சேவை இல்லத்துக்கான உதவி முழுவதும் நடந்து முடிந்த பின் பகிர்கிறேன்.

Tuesday, May 7, 2013

யாருடா மில்லர்? கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு Visual ட்ரீட்

நேற்றைய பெங்களூரு Vs பஞ்சாப் மேட்ச் ரொம்ப கொஞ்ச நேரம் தான் பார்த்தேன்.

வீட்டிற்கு வந்த போது எனது அபிமான டீ வில்லியர்ஸ் தனது டிரேட் மார்க் அதிரடி ஆட்டம் ஆடி கொண்டிருந்தார். AB Delivers என்று ஸ்டேடியத்தில் இருந்த பெரிய திரை காட்டியது சுவாரஸ்யம் !

பின் பஞ்சாப் 10 ஓவரில் 58 ரன் என்றதும் இனி மேட்ச் சுவாரஸ்யமாக இராது என ஆப் செய்து விட்டு தூங்க சென்று விட்டேன். காலை பேப்பரில் பஞ்சாப் ஜெயித்ததை அறிந்து ஆச்சரியம் !

நினைத்து பாருங்கள்: கடைசி 7 ஓவரில் 98 ரன் எடுக்கணும். ஓவருக்கு 14 ரன். மில்லர் தவிர உருப்படியான ஆட்கள் வேறு யாரும் இல்லை. 7 ஓவரில் 98 அடிப்பதே கடினம் என்றால், அந்த ஸ்கோரை 2 ஓவர் முழுசாய் மிச்சம் வைத்து அடித்து முடித்த மில்லரை எப்படி பாராட்டுவது! T - 20 ல் ஒன் ஆப் தி பெஸ்ட் ஆட்டம் இது !


24 பந்தில் - முதல் 50; அடுத்த 50 க்கு எடுத்து கொண்டது வெறும் 13 பந்துகள் !

பல ஷாட்டுகள் லாங் ஆன், லாங் ஆப் அல்லது ஸ்ட்ரைட் டிரைவ் அடித்தது அட்டகாசம் !

அவரது தந்தை மில்லருக்கு இப்படி சொல்லி கொடுப்பாராம்....

'If it's in the V, in the tree; if it's in the arc, it's out of the park.

அதை நேற்று நிகழ்த்தி காட்டியிருக்கிறார் மில்லர் !

இதற்கு முன்பும் இதே டோர்னமெண்ட்டில் சென்னை மற்றும் மும்பையுடன் ரொம்ப அட்டகாசமாக ஆடி, வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தார். அவருக்கு சரியான சப்போர்ட் இன்றி அந்த மேட்ச்கள் தோற்றனர். புனேயுடன் பெரிய ஸ்கோர் Chasing - இதே போல் ஒரு அதிரடி ஆடி தான் ஜெயித்து கொடுத்தார்.

டேவிட் மில்லர் - has finally arrived ! இவர் ஆடிய 37 பந்துகள் மட்டும் அடங்கிய ஹை லைட்ஸ் இது. பார்த்து என்ஜாய் செய்யுங்கள்.. கிரிக்கெட்டை விரும்பும் அனைவரும் ரசிக்க கூடிய இன்னிங்க்ஸ் இது !



(If you cannot see it here, Please click " Watch on You tube " and you can see the highlights)

தமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்

ண்பர்- பதிவர் ஆதி மனிதன் தமிழக அரசால் நடத்தப்படும் சேவை இல்லம் பற்றி சில முறை கூறியுள்ளார் அவரது தாயார் திருமதி. அபிராமி இந்த சேவை இல்லத்தில் பல ஆண்டுகள் Superintendent -ஆக சேவை செய்து ஓய்வு பெற்றவர்.



அண்மையில் (5 மாதம் முன்பு.. அண்மை தானே?) தஞ்சை சென்ற போது சேவை இல்லத்தின் மேலாளர் திரு. அசோகன் அவர்களை ஆதி மனிதன் மூலம் சந்திக்க முடிந்தது.

தஞ்சையில் சேவை இல்லம் - நாஞ்சி கோட்டை சாலையில் பர்வீன் தியேட்டர்/ உழவர் சந்தைக்கு அருகில் உள்ளது.

ஓரிரு ஏக்கரில் பெரிய காம்பஸ் அது. ஆதி மனிதனின் தாயார் திருமதி. அபிராமி சொல்லி சென்றதால் நமக்கு அங்கு நல்ல மரியாதை  !

இனி அசோகன் சேவை இல்லம் பற்றி பேசியதில் இருந்து :

திரு. அசோகன் மற்றும் இன்னொரு ஆசிரியருடன் 
" தமிழக அரசாங்கத்தால் நடத்தப்படுவது இந்த சேவை இல்லம்.

இங்கே மொத்தம் 105 பெண்கள் இருக்காங்க. இதில் சில பேர் விதவைகள், சிலர் கணவனால் கை விடப்பட்டவர்கள், சிலர் அனாதைகள், இதை தவிர வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் ஏழை பெண்களும் தங்கி படிக்கிறாங்க.

முன்னே எல்லாம் விதவைகள், வயதானவர்கள் நிறைய இருந்தாங்க. இப்ப ஏழை பெண்கள் எண்ணிக்கை தான் அதிகம். வயதாகி தங்கி படிப்போர் எண்ணிக்கை குறைஞ்சுடுச்சு.

வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் மிக ஏழ்மையான குடும்பம் அப்படிங்குறதுக்கு தாசில்தார் சர்டிபிகேட் தரணும். அதன் அடிப்படையில் நாங்க சேர்த்துப்போம்

(சேவை இல்லம் பற்றி அறிய கீழே உள்ள அறிவிப்பு பலகையை அவசியம் வாசியுங்கள்)



105 பேரில் ஒவ்வொருதங்களும் வெவ்வேறு வகுப்பு படிக்கிறாங்க. ஆறாவது முதல் + 2 வரை இங்கு வகுப்புகள் இருக்கு. ஆறு டீச்சர்ஸ் இவங்களுக்கு பாடம் சொல்லி தர இருக்காங்க.

இந்த இல்லம் துவங்கியது 1964 -ல். இப்போ - அம்பதாவது வருஷம்.

இது மாதிரி சேவை மையம் தமிழகத்தில் - தாம்பரம், கடலூர், மதுரை, திருநெல்வேலி, தஞ்சை உள்ளிட்ட 7 ஊரில் இருக்கு. எல்லா இடத்திலும் தங்கும் வசதி, சாப்பாடு, படிப்பு செலவு என எல்லாமே ப்ரீ தான்

இங்கே நிறைய வித்யாசமான மாணவிகளை சந்திச்சிருக்கோம். குறிப்பா தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகமான போது - முதல் குழந்தையா வந்த பெண் - தாம்பரத்தில் படித்து வளர்ந்தார். அப்புறம் + 2 வில் கணித க்ரூப் அங்கில்லை என இங்கு வந்து சேர்ந்து படித்தார்

இங்கு படித்த பல பெண்களுக்கு நாங்களே திருமணம் செஞ்சு வச்சிருக்கோம். அந்த பெண்களுக்கு எங்களோட சமூக நலத்துறை தான் பெற்றோர் மாதிரி இருப்பாங்க.

+ 2 வரை இருக்கும் படிப்புகள் தவிர வேறு நிறைய கோச்சிங்கும் இங்கு தர்றோம். குறிப்பா 6 மாச கம்பியூட்டர் ட்ரைனிங் கோர்ஸ் பிரபலம். அது கத்துகிட்ட பெண்களுக்கு குறைஞ்சது 3,000 ரூபா சம்பளத்தில் உள்ளூரில் டேட்டா என்ட்ரி வேலை கிடைக்குது

டைப் ரைட்டிங், தையல் போன்ற வகுப்புகளும் தனி கோர்சாக இங்கு எடுக்கிறோம்

இங்கு படிக்கிற பசங்க கல்லூரியில் சேர்ந்து படிச்சா அவங்க செலவுக்குன்னு அரசாங்கமே வருடத்துக்கு 30,000 பணம் தருது. அதை வச்சிக்கிட்டு அவங்க கல்லூரி படிப்பை முடிக்கலாம்.



இதை பயன்படுத்தி எஞ்சினியரிங், டாக்டர் படிப்புக்கு படிச்ச பசங்க கூட இருக்காங்க

அரசாங்கம் இவங்களுக்கு வருடத்துக்கு 2 செட் யூனிபார்ம் தரும். இங்கே வேலை செய்யும் டீச்சர்ஸ் , நாங்க எல்லாம் பணம் போட்டு ஒவ்வொரு வருஷ தீபாவளிக்கும் இவங்களுக்கு புது துணி எடுத்து தருவோம்.



கிராமத்தில் படிச்சா பெண்களை பாதியிலேயே படிப்பை நிறுத்துற பிரச்சனை ( டிராப் அவுட்) இங்குள்ள பெண்களுக்கு இருப்பதில்லை. +2 வரை  இங்கே படிச்சுடுறாங்க

தாம்பரத்தில் மட்டும் டீச்சர் ட்ரைனிங் இன்ஸ்டிடியூட் கூட இருக்கு. வேலை வாய்ப்பில் சலுகை சில குறிப்பிட இடங்களில் மட்டும் இருக்கு

இந்த பள்ளிக்கோ இங்கிருக்கும் மாணவிகளுக்கோ என்ன உதவிகள் வேண்டும் என்று கேட்டபோது

சில பேர் கல்யாண நாள் போன்றவற்றில் உணவு கொண்டு வந்து தருகிறேன் என கேட்கிறாங்க ஆனா
வெளி உணவுகளை நாங்க உள்ளே அனுமதிப்பதில்லை ஒரு சில முறை சாப்பிட்டு பசங்களுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு

(வீடியோவில் சேவை இல்லம் சுற்றி பார்க்கலாம்)



" ரொம்ப முக்கியமான உதவி பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு சில பாடங்களுக்கு தான் தேவையான டீச்சர்ஸ் இருக்காங்க. ஆங்கிலம் உட்பட சில பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லை. இதனால் அரசு தேர்வு எழுதும் போது ரொம்ப சிரமப்படுறாங்க. யாராவது வாரத்தில் ஒரு சில நாள் வந்து பாடம் சொல்லி குடுத்தா கூட உதவியா இருக்கும்

அடுத்து சில வகுப்புகளில் உட்கார பெஞ்ச்கள் இல்லை. எட்டாவது ஒன்பதாவது படிக்கும் பெண்கள் தரையில் அமர்ந்து குனிந்து எழுதுவதற்கு சிரமப்படுகிறார்கள். முடிந்தால் பெஞ்ச் மற்றும் டேபிள் உதவினால் நன்றாயிருக்கும்



இந்த பதிவை இங்கு பகிர முக்கிய காரணம் - தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த அரசியல் கட்சிகளை தாண்டி - எந்த அரசாங்கம் வந்தாலும் மாறாமல் தொடரும் ஒரு சில நல்ல விஷயங்களில் இந்த சேவை இல்லமும் ஒன்று. உங்கள் ஏரியாவில் ஏழை பெண்கள் யாரேனும் இருந்தாலும் சேவை இல்லம் பற்றிய தகவல்கள் பகிரலாம் !

மாணவிகளுக்கு பென்ச் போன்றவை வாங்க உதவ முடியும் என்றால் பள்ளியின் மேலாளர் அசோகன் அவர்களது தொலை பேசி எண் தருகிறேன் நேரடியே நீங்களே உதவலாம்

உங்களால் முடிந்தால் தஞ்சை செல்லும்போது இந்த சேவை இல்லத்துக்கு சென்று பாருங்கள் !
*********
அண்மை பதிவுகள் 

நீயா நானா ஜெயித்தொருக்கு நிஜமா பரிசு  தர்றாங்களா? அனுபவம் 

Monday, May 6, 2013

தொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா? அனுபவம்

ஐ. பி. எல் கார்னர்

நேற்றைக்கு மும்பையுடன் தோற்றாலும் கூட சென்னை மற்ற அணிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு ஜம்மென்று முதல் இடத்தில் அமர்ந்துள்ளது. நிச்சயம் முதல் 2 இடத்திற்குள் சென்னை வந்து விடும்.

ரைனா நல்ல பார்முக்கு வந்தது சென்னைக்கு பெரிய பலம். இப்போது ஹஸ்சி, ரைனா, தோனி என மூவரும் நன்கு ஆடுகின்றனர். ஜடேஜா, சாகா போன்றோர் அவ்வப்போது சப்போர்ட் செய்ய, அணி டாப் கியரில் செல்கிறது.
வழக்கமாய் செமி பைனல் செல்ல வாய்ப்புள்ள அணிகள் எவை என்பது இறுதி வரை சஸ்பென்ஸ் ஆக இருக்கும். இம்முறை சென்னை மற்றும் பெங்களூரு செல்வது உறுதி. மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய மூன்றில் - 2 அணிகள் செமி பைனல் வரும் என அதிக பரபரப்பின்றி இருக்கிறது. மற்ற அணிகளுக்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. அவற்றில் ஒன்றேனும் உள்ளே வருவது ஏதேனும் மிராக்கிள் நடந்தால் தான் உண்டு !

விஜய்  டிவிக்கு வந்த சோதனை

விஜய் டிவிக்கு என்ன பிரச்சனையோ தெரியலை. கும்கி உள்ளிட்ட படம், மற்றும் சிறப்பு நிகழ்சிகள் வெளியிட்ட போது வழக்கத்தை விட மிக குறைந்த விளம்பரங்கள் ! கூடவே.. கீழே சில வரிகள் ஓடிகொண்டே இருந்தது.. எங்கள் விளம்பர தாரர்கள் ஒத்துழைப்பின்மையால் நாங்கள் விளம்பரங்கள் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது".

அவர்கள் என்னவோ இதனை ரொம்ப வருத்தமா " தடங்கலுக்கு வருந்துகிறேன் " ரீதியில் சொன்னாலும், அதிக விளம்பரம் வரா விடில் பார்க்கும் நமக்கு மகிழ்ச்சி தானே ?

உழைப்பால் உயர்ந்த ஒரு தமிழர்

ஜெயா டிவியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு புட் கிங் நிறுவன அதிபர் சரத் பாபு- அவர்களை பேட்டி கண்டனர்.

சரத்பாபு பேசிய சில விஷயங்கள்:

பள்ளியில் படிக்கும்போது மாதாந்திர பீஸ் கட்ட முடியாமல் ஒவ்வொரு மாதமும் வகுப்பிற்கு வெளியில் நின்றது, அப்போதெல்லாம் பணம் என்கிற ஒன்று தானே நாம் இத்தனை கஷ்டப்பட காரணம் என்று மனம் வெதும்பியது



மின்சாரம் இல்லாத தங்கள் குடிசையில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படிக்கும்போது - " நமக்கு வேறு டைவர்ஷன் இல்லை - சிம்னி வெளிச்சத்தில் புத்தகம் மட்டுமே பார்க்க முடியும்" என்று மனதை தேற்றியபடி படித்த நினைவுகள்

IIM -ல் MBA படித்தாலும் சுய தொழில் செய்யணும் என்கிற உந்துதலில் அம்மா செய்த தொழில் என கேட்டரிங் துவங்கி படிப்படியாய் முன்னேறிய கதை -

என அவர் பேசியது very inspirational !

வாங்கியாச்சு நீயா நானா டிவி

நீயா நானாவில் கார்பரேட் கல்ச்சர் குறித்து சென்ற டிசம்பர் மாதம் பேசினேன். எங்கள் அணியில் சிறப்பாய் பேசியதாய் " கலர் டிவி பரிசு " என்று அறிவித்தனர். ஆனால் நண்பர்கள் சொன்ன தகவல்கள் அவ்வளவு ஊக்கமாய் இல்லை. அறிவித்தபடி பலருக்கும் டிவி வந்ததே இல்லை என்றனர் பதிவர் நண்பர்கள். பதிவர் ஓசை செல்லாவும் இதே போல் பாதிக்கப்பட்ட இன்னொருவர்.

சமீபத்தில் ஓசை செல்லாவுக்கு கலர் டிவி வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று தொலை பேசி வாயிலாக தகவல் சொன்னார்கள் என முக நூலில் ஒரு செய்தி பகிர்ந்தார். அதனை பார்த்து விட்டு நான் நீயா நானா குழுவிற்கு போன் செய்ய, " ஆமா சார். இப்ப தான் டிவி வந்திருக்கு; நேரில் வந்தா எடுத்திட்டு போகலாம் " என்றனர்.

சென்று, இயக்குனர் ஆண்டனியுடன் சற்று அளவளாவி விட்டு டிவி வாங்கி கொண்டு வந்தாயிற்று !

பரிசு கிடைக்குமா இல்லையா என்ற சஸ்பென்சை 6 மாதத்துக்கும் மேல் வைத்ததும், இப்போதும் கூட அவர்கள் கூப்பிடாமல், நானாக தகவல் தெரிந்து கேட்ட பின் தான் வர சொன்னதும் சற்று உறுத்தவே செய்கிறது.

சீரியல் பக்கம்: ஆபிஸ் 

ஆபிஸ் சீரியலில் ஒரு காட்சி - ஹீரோயின் மற்றும் செகண்ட் ஹீரோயின் இருவரும் முறையே - ஹீரோ மற்றும் செகண்ட் ஹீரோவை காதலிக்கிறார்கள். இரண்டு காதல் ஜோடிக்கும் சண்டை. பேச்சு வார்த்தை இல்லை. 
                       

" உன் ஆளு தாண்டி நல்லவன் " என்று இவளும், அதே மாதிரி அவளும், பல காரணங்களுடன் பேசி கொண்டே போகிறார்கள். எதற்கும் கம்பேர் செய்யும் சில பெண்கள் மனதை மறைமுகமா குத்தி காட்டிய மாதிரி இருந்தது.

டிஸ்கஷன் முடிவில் இருவரும் பேசி கொண்டது தான் ஹை லைட்: " பேசாம நாம ரெண்டு பெரும் லவ்வர்ஸ்சை swap பண்ணிக்குவோமா?" !!!!?????

லிங்குசாமி பேட்டி 

உழைப்பாளர் தினத்தை ஒட்டி கலைஞர் டிவி யில் லிங்குசாமி பேட்டி வெளியானது. தன் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார் லிங்குசாமி.

ஆனந்தம், ரன் ஆகிய 2 படங்கள் ஓஹோ என ஓடியதும் சற்று கெத்தாக இருந்ததும், மூன்றாவதாக அஜீத் நடிப்பில் ஜி வெளியாகி மரண அடி + வலியை, அவமானத்தை நேர்மையாக சொன்னார். அதிலிருந்து மீண்டு தன்னை நிரூபிக்கும் வெறியுடன் எடுத்து அதே ஆண்டு வெளியான சண்டைகோழி தான் அவரது படங்களில் அதிக நாள் ஓடிய படமாம் !

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எழுத்து துவங்கி பல நிஜ வாழ்க்கை உதாரணங்களுடன் ("எல்லாரும் தீபாவளிக்கு வெடி வெடிடிச்சிகிட்டு இருக்கும்போது லொகேஷன் பார்க்க போனார் பாலாஜி சக்திவேல்; அப்படி பட்ட உழைப்பாளிங்க எப்படி தோற்பாங்க ?) ரொம்ப அருமையாய் இருந்தது.

ரசித்த விளம்பரம்

டிவி யில் ரசித்த சில விளம்பரங்கள் அவ்வப்போது பகிர எண்ணம்.

ப்ளூ ஸ்டார் ஏ சி-க்கான இந்த விளம்பரம் ஐ. பி. எல் பார்க்கும் போது தொடர்ந்து வருகிறது. செம கிரியேட்டிவ் ! பாருங்கள் !

Sunday, May 5, 2013

எதிர் நீச்சல் - சினிமா விமர்சனம்

ஒரு சினிமாவில் என்னென்ன எதிர்பார்ப்போம்?

ஓரளவு நல்ல கதை
சிரிக்க வைக்கும் காமெடி
இனிமையான பாட்டுகள்
படம் முடிந்து வரும்போது ஜாலியான மனது

இவை அனைத்தும் சேர்த்து ஒரே பாக்கேஜ் ஆக தந்துள்ளார் புது இயக்குனர் செந்தில் குமார்

அசாதாரண பெயர் வைப்பதால் - அவஸ்தைப்படுவோரை நிச்சயம் சந்தித்திருப்போம். இந்த டிராக் ஒரு புறம். இந்திய விளையாட்டில் உள்ள அரசியல் மறுபுறம் என இரு விஷயங்களை எடுத்து கொண்டு நிறைய சிரிப்பு + சுவாரஸ்யத்துடன் தந்து முதல் பந்தையே பவுண்டரி ஆக்கிய இயக்குனருக்கு ஒரு ஷொட்டு.


கதை

குஞ்சிதபாதம் என்கிற தன் பெயருக்காக காம்ப்ளக்ஸ் உடன் இருக்கும் இளைஞர் சிவகார்த்திகேயன். தன் நண்பன் சதீஷ் அறிவுரையில் - ஜோதிடரை அணுகி - ஹரீஷ் என்று பெயர் மாற்றுகிறார். அதன் பின் ப்ரியா ஆனந்த் மீது காதல் மலர்கிறது.

ப்ரியா ஆனந்த் இவரது காம்ப்ளக்ஸ் உணர்ந்து வாழ்க்கையில் முன்னேற தூண்டுகிறார். பின் சென்னை மாரத்தானில் கலந்து கொள்கிறார் சிவகார்த்திகேயன். நந்திதா என்கிற டிரைனரிடம் பயில்கிறார். மாரத்தானை ஜெயிப்பாரா என்பது நான் சொன்னால் தான் தெரியுமா என்ன?

************
சிவகார்த்திகேயன்- மெரினாவில் நடிக்கவே தெரியலை என பெயர் வாங்கினார். கேடி பில்லாவில் ஓகே சொல்லும் நிலை தாண்டி இப்படத்தில் எந்த தயக்கமும் இன்றி இயல்பாய் , செமையாய் பொருந்துகிறார்

கும்கிக்கு பிறகு பாட்டுகள் ஆரம்பிக்கும் போதே விசில் சத்தமும் கை தட்டலும் தியேட்டரை கலக்குகிறது. பல பாடல்கள் உறுத்தாமல் படத்துடன் ஒட்டி வருவது பெரிய பிளஸ்.

பூமி என்னை சுத்துதே பாடல் பாண்டிச்சேரி பீச்சை சுற்றி செம அழகாக எடுத்துள்ளனர். பாண்டி மக்களுக்கும், பாண்டியை ரசிப்போருக்கும் இந்த பாட்டின் விஷூவல் மிக பிடிக்கும்.

பாண்டிச்சேரி தெருக்கள் 

மனோ பாலா அஞ்சு நிமிடம் வந்தாலும் தியேட்டர் குலுங்குகிறது

ஹீரோ நண்பனாய் வரும் சதீஷ் - காமேடியனாய் கால் ஊன்றி விடுவார்

வள்ளியின் தந்தையாய் வரும் புதுமுகம் யாருங்க? நல்ல நடிப்பு.. (ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கை புதுமுகம் என்பதால் மன்னிக்கலாம்)

நந்திதா - அட்ட கத்தியை விட இயல்பாக நடித்துள்ளார்

முதல் பாதி அளவு செகண்ட் ஹாப் ஜாலியாக இல்லாவிடினும் எடுத்த சப்ஜெக்ட்டுக்கு நியாயம் செய்துள்ளார் இயக்குனர்

கிளை மாக்ஸ் மட்டும் தான் - நாம் எதிர்பார்த்தது போலவே உள்ளது. ஆச்சரியங்கள் ஏதும் இல்லாமல் போகிறது. இன்னும் சற்று மெனகெட்டிருக்கலாம்

குண்டு பையன் வரும் போர்ஷன்கள் முழுதும் சர வெடி. மக்கள் செமை யாய் என்ஜாய் செய்கிரார்கள்

இசையால் இப்படத்துக்கு இன்னொரு ஹீரோவான அனிருத் மற்றும் நல்ல படம் தந்த தனுஷ்க்கு ஸ்பெஷல் பாராட்டுகள்



தியேட்டர் நொறுக்ஸ்

க்ரோம்பேட் வெற்றி திரை அரங்கில் பார்த்தோம். படம் ரிலீஸ் ஆகி நான்காம் நாள்- 6.45 காட்சிக்கு,  5 மணிக்கெல்லாம் தியேட்டர் புல். பின் மைக்கில் "எதிர் நீச்சல் டிக்கெட் இல்லை" என தொடர்ந்து அனவுன்ஸ் செய்தபடி இருந்தனர்.

திரைக்கு கீழே சீரியல் லைட் எல்லாம் போட்டு, திரை மேலேறும்போது மக்களின் உற்சாக குரலுடன் துவங்குகிறது படம். இப்படி படம் பார்த்து சவுண்ட் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. சின்ன ஊரில் தான் இவற்றை பார்க்க முடியும்

டிக்கெட் விலை 80 தான் - ஆனால் சவுண்ட் சிஸ்டம் சுமார்

வந்திருந்த சிலர் ரிபீட் ஆடியன்ஸ் என்பது அவர்கள் வசனத்தை முந்திக்கொண்டு ஒப்பிப்பதில் தெரிந்தது

மொத்தத்தில்:

சம்மரில் குடும்பத்தோடு பார்க்கும்படி மிக சரியாக வந்துள்ளது எதிர் நீச்சல் ! இவ்வருடத்தின் இன்னொரு ஹிட் படம்

வாழ்த்துக்கள் செந்தில் குமார்/ தனுஷ்/ சிவகார்த்தி & அனிருத் !

Friday, May 3, 2013

தங்க மீன்கள் - மனதை நெகிழ்த்தும் 2 பாடல்கள் - ஒரு பார்வை

ங்க மீன்கள் - கற்றது தமிழ் இயக்குனர் ராமின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் - கெளதம் மேனன் தயாரிப்பு- இசை - யுவன் சங்கர் ராஜா- பாடல்கள்- நா முத்து குமார்.

2011-ல் ஷூட்டிங் முழுதும் முடித்து விட்டாலும் - பல காரணங்களால் தாமதமாகி,  சமீபத்தில் பாடல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் படமும் வெளியாகி விடும் என்று நம்புவோம் !



**********
அப்பா- மகள் என்கிற உறவு தான் எத்தனை அற்புதமானது ! இப்பட பாடல்கள் முழுக்க முழுக்க இந்த உறவை பற்றி பேசுவதாலேயே - இயல்பான ஈர்ப்பு வந்து விடுகிறது.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

மிக அழகான மெலடி !

ஒவ்வொரு பாடலிலும் இயக்குனர் ராம் அப்பா- மகள் உறவு குறித்து கவிதை கலந்த வரிகள் சில பேசுகிறார். இப்பாடலுக்கு முன் அவர் சொல்வது :

"மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேர்த்ததில்லை என்று.. " ..

என்னை போல - பெண்ணை பெற்ற தகப்பன்கள் - பல தருணத்தில் இதனை உணர்ந்திருக்க கூடும்.

மனதை வருடும் மெல்லிய இசையுடன் பாடல் துவங்குகிறது.

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் "

" இளம் காத்தாய் வீசிய " ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரல் மெலடிக்கென்றே உருவானது ...

மெட்டு- அழகிய வரிகள் - பாடல நம்மை வேறு எங்கோ ஒரு வெளிக்கு இட்டு செல்கிறது



இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை.. இன்னும் வேண்டுமடி

சில மாதங்களே ஆன ஒரு பெண் குழந்தை- அவளுக்கு நடை பயில சொல்லி தரும் தந்தை என்கிற சித்திரம் இந்த வரிகள் கேட்கும்போதே மனதில் விரிகிறது. கூடவே எனது பெண்ணுக்கு நான் நடக்க சொல்லி தந்த தருணங்களும்...


அபியும் நானுமில் - வைரமுத்து என்றால் இங்கு நா. முத்துகுமார் !

அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி

இந்த ஆல்பத்தில் மிக அற்புத பாடல்களில் ஒன்று. கேட்டு பாருங்கள்




****
நதி வெள்ளம் மேலே

மனதை கவ்வும் பாட்டு "நதிவெள்ளம் மேலே ".

பணம் சம்பாதிக்கும் பொருட்டு குடும்பத்தை பிரிந்து வாழும் ஆண்கள் எத்தனை எத்தனை பேர் ! அந்த தந்தைகளின் மன நிலையை சொல்லும் பாட்டு இது.

Thanga Meengal Movie New Stills


நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய -
பொன் நினைவுகள்
நெஞ்சில் நிழலாடும்

முன்னந்தி நிலவில்
நீ ஓடிய
மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்

என் கண்ணின் இரு கருவிழிகள் உன் முகத்தை தேடுதடி
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி

ராகுல் நம்பியாரின் குரலில் முத்துகுமாரின் பாடல் வரிகள் - மனதை என்னவோ செய்கிறது.

அலைந்திடும் மேகம் அதை போல இந்த வாழ்க்கையே ............
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம் என்ற போதிலும்
அதிகாலையில்
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்

உயிரே உன்னை பிரிந்தேன்... உடனே நானும் இறந்தேன்
உடல் ...நானங்கு வாழும் நீ தானே
எந்தன் உயிரே ...

ஒவ்வொரு பல்லவிக்கும் இடையிலும் ப்ளூட் மனதை பிசைகிறது. சரணத்தை விட பல்லவி தான் அற்புதமாய் உள்ளது

மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார்
இலை வீழ்ந்தால் சருகாகும்
வறியவன் வாழ்க்கை இலை போல
என்றபோதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்


பாடலின் முன்பு இயக்குனர் ராமின் குரல் இப்படி சொல்கிறது

"அப்பாக்களை பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள்
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால் அப்படியெல்லாம் தந்துவிட
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை "



*****************

இவை தவிர இன்னும் இரு பாடல்களும் இருக்கின்றன துரதிர்ஷ்டவசமாக அவை பெரிய அளவில் கவரவில்லை

"பஸ்ட் - லாஸ்ட் - பாஸ் - பெயில் யாரு கண்டுபிடிச்சா ? " என்கிற பாட்டு ரொம்ப நாள் கழித்து ஒரு குழந்தை பாட்டாக வந்துள்ளது. ஆனால் முழுதும் கோரஸ் பாடுவதாலும், இரைச்சல் இசையாலும் அதிகம் ஈர்ப்பின்றி போகிறது.

Thanga Meengal Movie Stills

யாருக்கும் தோழன் இல்லை என்கிற இன்னொரு பாடல் மிக சிறிய ஒன்று - அதுவும் மகளை பிரிந்து வாடும் தந்தை குறித்தது தான். மிக ஸ்பீட் ஆன பாட்டில் அற்புதமான பாடல் வரிகள் அடிபட்டு போவது வருத்தமே !

***
நதி வெள்ளம் மேலே மற்றும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் - இரு பாட்டுகளும் போதும் இந்த படத்திற்கு.. !

படம் குறித்து நிச்சயம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டன இந்த இரு பாடல்களும் !

******
அண்மை பதிவுகள்:

சூது கவ்வும்- நிச்சயம் வெல்லும் - விமர்சனம்  

மூணு பேர் மூணு காதல் = ஜவ்வு மிட்டாய் விமர்சனம்  

Thursday, May 2, 2013

3 பேர் 3 காதல் : சினிமா விமர்சனம்

ங்கர நாராயணன் - பள்ளியில் என்னுடன் படித்த நண்பன். பதிவர் பெசொவி, சங்கர நாராயணன் மற்றும் நான் - 9th & 10th ஒன்றாய் படித்தோம்.

வீடுதிரும்பலுக்காக 3 பேர் 3 காதல் பற்றி அவன் எழுதிய விமர்சனம் இதோ:

3 பேர் 3 காதல்

அபாய எச்சரிக்கை !

இந்த படம் ஓடும் தியேட்டருக்குள்ளோ, ஏன் இந்த விமர்சனத்தின் உள்ளே கூட செல்லாதீர்கள் ! வேண்டாம் ப்ளீஸ்....

கதை

இவ்ளோ சொல்லியும் உள்ளே வந்துட்டீங்களா? விதி வலியது !

மருதம், நெய்தல், பாலை-  இப்படி 3 வெவ்வேறு இடங்களில் (மலை, கடல், நிலம்) நடக்கும் மூணு காதல்கள் தான் படத்தின் பின்புலம்.

கதை ஒன்று- ஊட்டியில் சார்ட்டட் அகவுண்டன்ட் ஆக இருக்கிறார் விமல் - அவருக்கு ஒரு காதல்- ஆனால் அந்த பெண்ணோ, " எனக்கு வேறு ஒருத்தருடன் நிச்சயம் ஆகிடுச்சு. .. இப்ப எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் சண்டை " என்று சொல்ல, விமல் " இப்ப உங்க ரெண்டு பேருக்கும் சண்டை தானே? அப்ப என்னை கன்சிடர் செய்யேன் " என்கிறார்

அந்த பெண் ஒரு முடிவெடுக்கும் முன் விமலுக்கு ஞானம் வந்துடுது - " நாம நல்லவனா - இருந்தா அவளை - அந்த ஆளோட சேர்த்து வைக்கணும் ; நமக்கே வேணும்னு நினைக்க கூடாது "

கதை ரெண்டு - சேரன் -   ஊரிலே, ஏன் இந்த உலகத்திலேயே அநியாயத்துக்கு நல்லவர். ஜெயிலில் இருந்து வருவோருக்கு பல விதத்தில் நம்பிக்கை தந்து உதவுகிறார். இதற்காக புன்னகை என்ற நிறுவனம் வைத்து நடத்துகிறார். அவருக்கு ஒரு பிசியோதெரபிஸ்ட் காதலி.

ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகும் கைதியான ஆடுகளம் நரேனை அவரது மகள் ஏற்க மறுக்க, அப்பா - மகளை சேர்த்து வைக்க போராடுகிறார் சேரன். அவரால் முடியாத அந்த காரியத்தை அவரது காதலி எளிதில் செய்து முடிக்க தனது "புன்னகை" நிறுவனத்தை அவர் வசம் ஒப்படைத்து விட்டு யூனெஸ்கொவில் பணியாற்ற பிரான்ஸ் பயணமாகிறார் சேரன் (சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணி இப்படி ஜெயில் கைதிகளுக்கு நிஜத்தில் உதவுவதை கடைசியில் காட்டுகிறார்கள்)
கதை மூன்று : அர்ஜூன் ஒரு ஸ்விம்மிங் கோச். தான் நீச்சல் கற்று தரும் பெண்ணை - காதலிப்பதோடு- அவளை நீச்சலில் பெரிய ஆளாக்கணும் என்ற லட்சியத்துடன் வாழ்கிறார்.

அர்ஜூனுக்கு ஒரு பெரிய விபத்து நடந்து,  முகம் தவிர மற்ற இடங்கள் செயலிழக்க.............

அந்த பெண் நீச்சலை தொடர்ந்தாரா- வென்றாரா , அர்ஜூன் என்ன ஆனார் என்பதை மூன்றாவது கதையில் சொல்லி நம்மை பாதி உயிருடன் வெளியே அனுப்புகிறார்கள்.
****
முழுக்க கதையை படிச்சிருந்தா.. கை குடுங்க பாஸ்... நீங்க செம பொறுமைசாலி !
****
கோடை விடுமுறையில் போர் அடிச்சிட்டு இருந்தான் எட்டாவது படிக்கும் என் பையன். "வெளியிலே கூட்டி போங்க" என்ற தொடர் வேண்டுகோளுக்காக காசி தியேட்டரில் அவனுடன் படம் பார்த்தேன். பாவம் பையன்.. வீட்டில் கம்பியூட்டர் கேம்ஸ் ஆவது ஆடிட்டு ஹாப்பியா இருந்திருப்பான் !

கேளடி கண்மணி, ஆசை, ரிதம் எடுத்த வசந்தா இது ! இன்னிக்கு சினிமா எவ்வளவோ மாறி போச்சு ! விஷவல் மீடியான்னு புரிஞ்சிக்காம படம் முழுக்க பாலசந்தர், விசு சினிமா மாதிரி எல்லாரும் பேசிகிட்டே இருக்கிறது கொடுமை ! டிராமாவா சினிமாவான்னு சந்தேகம் வந்துடுது !

ஸ்கூல் பசங்க ரேஞ்சுக்கு கடி ஜோக்ஸ் அடிக்கிறதும், விமலை சார்டட் அகவுண்டன்ட்ன்னு சொல்லிட்டு ஜோக்கர் செய்கிற வேலைகளை செய்ய வைத்திருப்பதும்.. முடியல !

3 கதைகளுக்கும் ஒண்ணோடு ஒண்ணு தொடர்பு இல்லை. கடைசியில் தொடர்புக்கு அவங்க சொல்ற சின்ன "கதை" நற நற ......

பாட்டுகள் கேட்க தான் நல்லாருக்கு. அதுவும் அர்ஜூன் பகுதியில்  வர்ற 2 பாட்டும்  பார்க்க சகிக்கல !

படத்தில் 3 ஜோடியில் - ஒண்ணு கூட ஒன்று சேரலை ! ஏன்னா " காதல்னா கொடுக்குறது " ன்னு மெசேஜ் சொல்றார் வசந்த். அட போங்க சார். இது எங்களுக்கே தெரியாதா?

முதல் நாள் என்பதால் காசி தியேட்டர் முக்கால் வாசி நிரம்பிடுச்சு. காலேஜ் பசங்க பலர் வந்து நொந்து போயி சவுண்ட் விட்டுகிட்டு இருந்தாங்க. 1 வாரம் கூட தாங்காது !

3 பேர் 3 காதல் = ஜவ்வு மிட்டாய்

(ஜவ்வு மிட்டாய் மன்னிக்க !)

****
அண்மை பதிவு:

சூது கவ்வும்- நிச்சயம் வெல்லும் - விமர்சனம்

Wednesday, May 1, 2013

சூது கவ்வும் - சினிமா விமர்சனம்

பீட்சா, நடுவுல கொஞ்சம் பாணியில் இளைய இயக்குனர் ஒருவரின் பாராட்டத்தக்க புதிய முயற்சி சூது கவ்வும் !




கதை (முழுசா சொல்லலை- பயம் வேண்டாம்) 

வெவ்வேறு காரணத்தால் வேலை இழந்த 3 நண்பர்கள் - இன்னொரு பக்கம் சின்ன சின்ன கிட்னாப் வேலை செய்து பணம் ஈட்டும் விஜய் சேதுபதி - ஒரு கட்டத்தில் மூவர் அணி நண்பர்கள் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து கிட்னாப் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

"சின்ன சின்ன கிட்னாப் மட்டுமே செய்வேன் அது தான் பிரச்சனை இல்லாதது" எனும் ஹீரோவின் பாலிசியை விடுத்து, முதல் முறை அமைச்சர் மகனை கடத்துகிறார்கள். பின் அவர்களை கண்டுபிடிக்க, கொன்று போட வருகிறார் ஒரு சைக்கோ போலிஸ் காரர் !

விஜய் சேதுபதி அண்ட் கோ மாட்டினாரா என்பது கிளை மாக்ஸ்

அசத்தும் திரைக்கதை 

ஒரு சீரியஸ் கதையை எவ்வளவு ஜாலியாக சொல்ல முடியுமோ அப்படி சொல்லி செல்கிறார்கள். தியேட்டரில் பல சீன்களுக்கு செம ரெஸ்பான்ஸ் !

பேச்சிலர் ரூமில் வேலை இல்லாத இளைஞர் - அவசரம் அவசரமாக கிளம்பி - பேன்ட் சட்டை போட்டு கொண்டு - ஜன்னல் ஓரமாய் அமர்ந்து - பாட்டிலை ஓபன் செய்யும்போது தங்களை கண்ட மகிழ்ச்சியில் விசில் சத்தம் கிளம்புது ! இன்னொரு பக்கம் நயன் தாராவுக்கு கோவில் கட்டிய நண்பர் (சாருக்கு வேறு நல்ல நடிகை கிடைக்கலையா?)

"என்னா பிளானோட சென்னை வந்துருக்கே ?"

" ப்ச்.. ஒரு பிளானும் இல்லை "

" அதான் ரொம்ப நல்லது; பிளானோட வந்தவன் எல்லாம் கஷ்டப்படுறான்; பிளான் இல்லாம வந்தவன் தான் ஜெயிக்கிறான்"

இப்படி ஜாலியாய் போகும் வசனங்கள் செம பலம் !

பலான படம் எடுக்கும் டாக்டர் - அவர் சொல்லும் "அந்த " படத்தின் ஒன் லைனர் - செல்போன் பேசியபடி செல்லும் பெண்ணை கடத்த - அதன் பின்னும் அவர் கடத்தியது தெரியாத படி செல்போன் பேசுவது - கிளைமாக்சின் 5 நிமிடங்கள் - என படத்தில் ரசித்து சிரிக்க ஏராள விஷயங்கள் உண்டு !

போலவே - சுற்றி போலிஸ் இருக்கும் போது பணத்தை எடுக்கும் பிளான்- கிளைமாக்சில் போலிஸ் வில்லனுக்கு கிடைக்கும் ஆப்பு - இவற்றுகெல்லாம் தியேட்டர் ஆர்பரிக்கிறது நிச்சய இந்த இரண்டு காட்சியும் யோசிக்க இன்றைய யூத்களால் மட்டுமே முடியும் !

மைனஸ்

குறைகளே இல்லையா என்றால் நிச்சயம் இருக்கிறது

நிறைய நிறைய லாஜிக் மீறல்கள்.



உதாரணத்துக்கு : எந்த முதல்வர் காசு தந்து அமைச்சர் மகனை மீட்கலாம் என்பார்? சட்டம் ஒழுங்கை பார்க்கும் அவரே அப்படி பேசுவாரா? (அதிலும் அறிமுகமாகும் காட்சியில், எந்த தேவையுமின்றி முதல்வர் ஒரு கெட்ட வார்த்தை பேசுகிறார். ஹூம் ! )

காலை ரூம் வந்து தூங்குகிறான் நண்பன் - அவனை எழுப்பியதும் - அன்று காலை வந்த பேப்பரை எடுத்து ஏழாம் பக்கம் ஓரத்தில் தன்னை பற்றிய செய்தியை காட்டுகிறார் - கனவுலேயே தினத்தந்தி படிசிட்டாரோ?

இடைவேளைக்கு பின், முதல் பாதியில் இருந்த ஜோஷ் மிஸ்ஸிங். இடைவேளை முடிந்ததுமே " ஹீரோ இனி ரொம்ப கஷ்டப்பட போறார்" என அவர்களே ஒரு பாத்திரம் மூலம் சொல்லிடுறாங்க ! கிளை மாக்ஸ் ஜாலியாய் முடிப்பதால் அதிகம் பாதிப்பின்றி தப்புது படம் !
மீதமுள்ள லாஜிக் மீறல் சிபி அவர்களின் பதிவில் நீங்கள் வாசித்து அறியலாம் :))

விஜய் சேதுபதி - அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு - ஆனால் இவரை தாடியுடன் 40 வயது ஆளாய் எதற்கு காட்டனும் என தெரியலை

படத்தில் பெண் பாத்திரத்துக்கு வேலையே இல்லை என்றாலும் - புத்திசாலிதனமாய் எப்பவும் ஒரு பெண் அருகில் இருக்கிற மாதிரி செய்துள்ளனர் (அந்த பாத்திரத்துக்கு இன்னும் களையான பெண்ணை தேர்வு செய்திருக்கலாம்..)

படத்தின் பல பாடல்கள் 2 அல்லது 3 நிமிடம் தான் வருகின்றன. குறிப்பாக கடைசி 2 பாட்டும் பழைய காலத்து ஸ்டைலில் உள்ளன

சோகமாய் முடிக்க வாய்ப்புள்ள படத்தை மக்கள் பல்ஸ் அறிந்து ரசிக்கும் படி முடித்த இயக்குனர் நலன் பாராட்டுக்குரியவர் !

சூது கவ்வும் - புதியவர்களின் வரவேற்கத்தக்க முயற்சி ! அதிக எதிர்பார்ப்பின்றி ஒரு முறை பாருங்கள் !

**********
அண்மை பதிவு:

வானவில்: அஜீத் - யாமி கெளதம்- மே தின ஸ்பெஷல் பாட்டு

Related Posts Plugin for WordPress, Blogger...