Sunday, September 22, 2013

ஆனந்த யாழை மீட்டும் -மகள்களின் தினம்- சில நினைவுகள்

இன்று மகள்களின் தினம் என்று முகநூலில் வாசித்தேன் ......

எனது மகள் குறித்த நினைவுகளை அவளது இரண்டு வயது வரை ஒரு தனி டயரி குறிப்பாக எழுதி வைத்திருந்தேன். அதிலிருந்து மிக சிறிய பகுதி இங்கு.......

பிறந்த நாள் 

முதல் நாள் இரவு முதலே மனைவிக்கு Uneasy ஆக இருந்தது. ஆனால் பிரசவம் என சொல்ல தெரியவில்லை. டாக்டர் குறித்து கொடுத்திருந்த நாளுக்கு நிறையவே நேரம் இருந்தது. முதல் பிரசவம் என்பதால் இருவருக்கும் அனுபவம் இன்றி பிரசவ வலி கூட சரியாக உணர முடியாமல் போகும் ! எங்களுக்கும் அப்படியே நடந்தது

எந்த நேரமும் பிரசவ வலி வரலாம் என்று தெரிந்து காருக்கு சொல்லி வைத்திருந்தாலும், அந்த தினம் பிரசவ வலி என்று தெரியாமல் எனது அப்போதைய TVS Champ வண்டியிலேயே ஈக்காட்டுதாங்கல் முதல் தாம்பரம் வரை பயணமானோம்

மருத்துவரிடம் சென்று பார்த்ததும் அவர் இன்று மதியம் டெலிவரி ஆகிடும் என்றதும் நம்பவே முடியவில்லை. "இன்னும் 10 - 15 நாள் இருக்கே " என புலம்பி கொண்டிருந்தேன் (உள்ளுக்குள் பிரசவத்துக்கு TVS சாம்ப் வண்டியில் அழைத்து வந்த குற்ற உணர்ச்சி )

அன்று மாலை - மகளை முதன்முறை பார்த்த நிமிடம் இன்னும் பசுமையாய் நெஞ்சுக்குள்.....

ரோஸ் நிறத்தில் - பிரிந்து உரியும் தோலுடன் ....குறைந்த முடியுடன் - என் மூக்கு சாயலில் நர்ஸ் கையிலிருந்த ஸ்நேகாவை பார்த்தேன். இன்று வரை அந்த நாளை விட மகிழ்ச்சியான நாள் வாழ்நாளில் இருக்க முடியாது !

முதல் நாள் இரவு வலியில் சுத்தமாய் தூங்காத மனைவி - குழந்தை பிறந்த நாளன்று (நார்மல் டெலிவரி!) அந்த மகிழ்ச்சியிலேயே இரவு முழுதும் அவளை பார்த்தவாறு சுத்தமாய் தூங்க வில்லை !

எட்டு மாதம் 

ஸ்நேகாவை அழைத்து கொண்டு அப்போது நாங்கள் குடியிருந்த காலனி கிரவுண்டில் ஜாக்கிங் செல்ல சில முறை முயற்சித்ததுண்டு. அவளை ஓரமாய் அமர வைத்து விட்டு ஓடினால் " அப்பா நம்மை விட்டுட்டு எங்கேயோ போகிறார்" என்கிற மாதிரி பெரிதாய் அழ ஆரம்பித்து விடுவாள். பின் அவள் அம்மாவிடம் தந்து விட்டு ஓடினாலும் அழுகை தான்.....

இதே மைதானத்தில் இருக்கும் கொடிக்கம்பம் அவளுக்கு மிக பிடித்தமான ஒன்று. சுதந்திர தினம் போன்ற நேரங்களில் கொடியேற்றவே இந்த கம்பம் இருக்கும். இதற்கு கொடிக்கம்பத்திற்கு ஸ்னேஹா வைத்த பெயர் "இந்தியா ". காலை அல்லது இரவு சாப்பிட வைக்க பல முறை இந்த இந்தியாவிற்கு அழைத்து வருவது வழக்கம். ஒரு கையால் கம்பத்தை பிடித்தவாறு சுற்றி சுற்றி வருவாள்...

தாய்ப்பால் குடிப்பது ஒரு புறமென்றால். பாட்டிலில் பால் குடிப்பதும் ரொம்ப பிடிக்கும். பாட்டில் கண்ணில் பட்டாலே " பாயி.. பாயி.. " என்பாள் (பால்..பால்!) . இரவில் முழுதும் சாப்பிட்டு விட்டாலும், பால் பாட்டிலை பார்த்தால், " பாயி.. பாயி.. " என குடித்து விட்டு தான் -  விடுவாள். சில நேரம் நிறைய குடித்து வாந்தி எடுத்து விடுவதும் உண்டு. இதனால் இரவில் பால் பாட்டிலை கண்ணில் படாமல் ஒளித்து வைத்து விடுவோம்

ஒரு வயது 

டேப் ரிக்கார்டர் வால்யூமை அதிகப்படுத்தி அலற வைத்து விட்டு எப்படி குறைப்பது என்று தெரியாமல் அங்கிருந்து ஓடி விடுவாள் !

காய்கறி வாங்கி வந்தால் தக்காளியை எடுத்து " பப்பாளி, பப்பாளி" என்றபடி அதனை போட்டு அமுக்கி ஒரு வழி செய்து விடுவாள்

ஒரு பிஸ்கட் தந்தால் கொஞ்சம் கொஞ்சமாய் வாய்க்குள் ஊற வைத்து சாப்பிடுவாள். ஒரு பிஸ்கட் சாப்பிட 15 நிமிடத்துக்கு மேலாகும். ...ஆனாலும் கீழே போடவே மாட்டாள். இந்த 15 நிமிடத்தில் எங்கெங்கோ போவது வருவது என்று என்ன அட்டகாசம் செய்தாலும் பிஸ்கட் மட்டும் பத்திரமாக கையில் இருக்கும் !

குழந்தை பயந்த மாதிரி இருந்ததால் தர்க்கா கூட்டி சென்று சொல்ல சிலர் பரிந்துரைத்தனர். மாலை 6.30 க்கு தர்க்காவில் பிரார்த்தனை முடித்து விட்டு - பின் அங்கு காத்திருக்கும் குழந்தைகளுக்கு காதில் ஓதுவார்கள். " ஊ ஊ " என ஓதுவதால் அவர்களுக்கு ஊ தாத்தா என பெயர் வைத்து விட்டாள் சிநேகா. தர்க்காவில் பிரார்த்தனை நடக்கும் சத்தம் கேட்டால் " ஊ தாத்தா .. ஊ தாத்தா " என்று சொல்வாள்.

பச்சை மற்றும் சிகப்பு நிறத்தில் இரண்டு பந்துகள் இருந்தன. அதை கையில் எடுத்து கொண்டு சிறிது தூரம் நடந்து பின் ஷார்ட்புட் போல தூக்கி எறிவாள். கட்டிலுக்கு கீழே அல்லது பிரிட்ஜ் கீழே பந்து சென்று விட்டால், எடுக்க முடியாமல் அழுகை தொடரும்.... நாம் மறுபடி மறுபடி எடுத்து தந்தால் கவலையே படமால் மறுபடி தூக்கி எறிவாள். ஒரு அளவுக்கு மேல் பொறுமை இன்றி நாம் பந்தை ஒளித்து வைக்க வேண்டும்.

ஏதாவது ஒன்று பிடித்து விட்டால், " அகாருக்கே " (அழகாருக்கே !) என்று ரசித்து சொல்வாள்

எல்லா பொருளையும் தன்னுடையது என்று நினைக்கும் குணம் இந்த ஒரு வயதில்... எந்த பொருளாக இருந்தாலும் " என்னோது ; தம்ம மாட்டேன் " (என்னோடது; தர மாட்டேன் )

எனது நண்பன் ஸ்ரீதர் மற்றும் அவன் மனைவி ஒரு முறை நெற்றியில் பல பொட்டுகள் வைத்து கண்ணாடியில் பார்க்கும் பழக்கும் ஏற்படுத்தி விட - அது தொடர்கதையாகி விட்டது. கண்ணாடியில் ஒட்டியிருக்கும் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்து கொள்வதும், சில கீழே விழுந்தால், சில நேரம் பசை இல்லாத பக்கத்தை எடுத்து வைக்க முயன்று - தோற்பாள். சில நேரம் நம் முகத்திலும் பல பொட்டுகள் வைத்து விடுவாள்.

************
எல்லோரும் ஒரே விதமான வாழ்க்கை தான் வாழ்கிறோம் என தல சுஜாதா சொன்னது போல் இதே விதமான சில குறும்புகளை உங்கள் மகளும் செய்திருக்கலாம் ! 
************
அந்த நோட்டில் இன்னும் நிறையவே இருக்கிறது.. ஞாயிறு கணினியில் நீண்ட நேரம் அமர்ந்தால் - மகளிடமிருந்து அடி விழும்.. 

அதனால் 

மீ எஸ்கேப் !

Friday, September 20, 2013

வீடு திரும்பல்' மோகன்குமாரின் "வெற்றிக்கோடுகள்" : ஒரு விமர்சன‌ பார்வை



டிகளின் உயரம் எப்போதும் அளவோடு இருத்தல் வேண்டும். உயரம் அதிகமாக இருந்தால் ஏறுவதை தவிர்த்துவிடுவோம், குறைவாக இருக்கும் பட்சத்தில் தாண்டிச்சென்றுவிடுவோம். மோகன்குமார் வெற்றிக்கோடுகள் புத்தகத்தின் படிகளை சரியாகவே நிர்ணயத்திருக்கிறார்.

ப‌டித்து முடிக்காம‌ல் வைத்திருக்கும் புத்த‌க‌ங்க‌ளை முடித்த‌ பிற‌கே புது புத்த‌க‌ங்க‌ள் வாங்க‌ வேண்டும் என்ற‌ விர‌த‌த்தை சற்றே த‌ள‌ர்த்த‌ வைத்த‌து மோக‌ன்குமாரும், சுரேகாவும். அடைமழையில் டிஸ்க‌வ‌ரி சென்று மோக‌னையும் சுரேகாவையும் பையில் அடைத்த‌பிற‌கும் ம‌ன‌சு அலைபாய‌,ஏ.கே.செட்டியாரும், சு.காவும், சு.ராவும்,க‌.நா.சுவும்,வ‌ண்ண‌நில‌வ‌னும் இட‌ம் பிடித்துக்கொண்டார்கள்.

[Picture+002.jpg]

வீடு திரும்பியதும் கையில் எடுத்தது "வீடு திரும்பலின்" வெற்றிக்கோடு புத்த‌க‌த்தை. அதைப்ப‌ற்றி கொஞ்ச‌ம்....

புத்தக விபரம் :
வெற்றிக்கோடு
'வீடு திரும்பல்' மோகன்குமார்
அகவொளி பதிப்பகம்
விலை : 80 ரூ.

85 ப‌க்க‌ங்க‌ள் (முன்னுரை ம‌ற்றும் முடிவுரை த‌விர்த்து). 19 க‌ட்டுரைக‌ள். ச‌ட்டென்று ஆர‌ம்பித்து ச‌டுதியில் முடியும் எழுத்து ந‌டை.

"உன‌க்கு புத்திம‌தி சொல்லுற‌ அள‌வுக்கு நான் பெரிய‌ அப்பாட‌க்கர் இல்லை, என‌க்கு ந‌ட‌ந்த‌தை,நான் பின்ப‌ற்றுவ‌தை எழுத்தாக்கியிருக்கிறேன், இஷ்ட‌மிருந்தா ப‌டி, இல்லாட்டி போயி புள்ள‌குட்டிக‌ள‌ ப‌டிக்க‌ வை" என்று முன்னுரையிலேயே முத்தாய்ப்பு வைத்திருக்கிறார்.(மோக‌னின் மைண்ட் வாய்ஸ் : நாங்க‌ள்ளாம் எவ்வ‌ள‌வு பாத்திருக்கோம்!!!!!!!)

பெரும்பாலான க‌ட்டுரைகள் ந‌ம்முடைய‌ வாழ்க்கையை இடுப்பில் கேமிராவைக்க‌ட்டிக்கொண்டு ப‌ட‌ம்பிடித்தது போல‌ இய‌ல்பாய்...

வெள்ளிக்கிழ‌மை போட்டுக்கிற‌ ச‌ட்டையை ( வியாழ‌க்கிமை மழை வ‌ந்துட்டா என்ன‌ ப‌ண்ணுற‌து??) புத‌ன்கிழ‌மையே சுவைச்சி ரெடி ப‌ண்ணி வைக்கிற‌ முன் ஜாக்கிற‌தை முத்த‌ண்ணா பார்ட்டி நான், சில‌ கட்டுரைகளை படிக்கையில் சிரிப்ப‌தை த‌விர்க்க‌ முடிவ‌தில்லை.

புத்த‌க‌த்தில் பிடித்த‌ சில‌ ப‌குதிக‌ள் :

"உங்க‌ள் வாழ்க்கையின் சில‌ ப‌குதிக‌ளை நீங்க‌ள் திரும்பி பார்க்க‌வும், உங்க‌ள் வாழ்க்கைக்கு தேவையான‌ ஒரு சில‌ விஷ‌ய‌ங்க‌ள் க‌ற்றுத்த‌ர‌வும் செய்யுமானால் இந்த‌ புத்த‌க‌ம் த‌ன் க‌ட‌மையை செய்துவிட்ட‌து என்று அர்த்த‌ம்".

"முத‌லில் ஒருவர் செய்த‌ க‌ண்டுபிடிப்பை அடுத்து மெருகேற்றிய‌வர் முத‌லாம் நப‌ரைவிட‌ அதிக‌ பிர‌ப‌ல‌ம் ஆன‌து ந‌ட‌ந்துதான் உள்ள‌து".

படிக்கையில் ச‌த்துண‌வு திட்ட‌த்தை அமுல்ப‌டுத்திய‌ காம‌ராஜ‌ரும், அத‌னை பிர‌ப‌ல‌ப்ப‌டுத்திய‌ எம்.ஜி.யாரும் நினைவுக்கு வ‌ருகிறார்க‌ள்.

"முக்கிய‌ பொருள்க‌ளை எப்போதும் குறிப்பிட்ட‌ இட‌த்தில் வைப்ப‌தும் அங்கிருந்து தேவையான‌ போது உட‌னே எடுப்ப‌தும் மிக‌ச்சிறிய‌, ஆனால் ந‌ம் நேர‌த்தை நிறைய‌ சேமிக்கிற‌ விஷ‌ய‌ம்".


நான் சிர‌த்தையுட‌ன் க‌டைபிடிக்கும் விஷ‌ய‌ம் இது. 'பேக்கப் & கிளீனிங் ப்ராசஸ்' அலுவ‌க‌த்துக்கு ம‌ட்டும‌ல்ல‌,வீட்டுக்கும் சேர்த்துதான்.

நிறைமாத கர்ப்பிணி‍‍‍‍‍‍‍‍‍‍ போல‌ எப்போதும் காட்சிய‌ளிக்கும் பர்ஸிலுள்ள தேவையில்லாத விஷயங்களை நாம் கடைசியாக பிரித்தெடுத்த‌து எப்போது???

"மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் உடல் கஷ்டத்தோடு இந்த பிரச்சினை முடியும் ( நான் இன்சூரன்ஸ் ஏஜன்ட் இல்லை என்பதறிக..)" "உனக்கேன் இவ்வளவு அக்கறை" என்று நாம் யாரும் கேட்டுவிடக்கூடாதல்லவா?

"வெற்றி பெற‌,முன்னேற‌,ம‌கிழ்ச்சி கொள்ள‌ ஒவ்வொரு ம‌னித‌னுக்கும் உரிமை உண்டு.அது ந‌ம‌க்கு ம‌ட்டுமே ந‌ட‌க்க‌ வேண்டும் என‌ நினைப்ப‌து மூட‌த்த‌ன‌ம்.வாழ்க்கையும், வாய்ப்புக‌ளும் அனைவ‌ருக்கும் போது."

"உங்க‌ள் குடும்ப‌த்தார் வ‌லி,க‌ண்ணீர் உண‌ராது நீங்க‌ள் இம‌ய‌மே தொட்டாலும் அதில் எந்த‌ ப‌ய‌னுமில்லை."

"க‌ட‌வுளாலும் முடியாத‌ விஷ‌ய‌ம் ஒன்று உண்டு. ந‌டந்ததை மாற்ற அவராலும் முடியாது! "

சில சிறு குறைகள் :

செல்ல‌ அம்மாவிற்க்கு ச‌ம‌ர்ப்ப‌ண‌ம் செய்த‌வ‌ர், தாயாரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.

"பதிவு" என்ற வார்த்தையை "கட்டுரை" என்று மாற்றியிருக்கலாம், பதிவர் அல்லாதவர்கள் புத்தகத்தை படிக்கும்போது சிறு குழப்பம் ஏற்படுகிறது. என்னிடமே மேற்கண்ட கேள்வி இருவரால் கேட்கப்பட்டது.

ஒரு சில எழுத்து பிழைகள் இருப்பினும் கட்டுரைகளின் சாராம்சம் அப்பிழைகளை புறந்தள்ளிவிடுகிறது.
*************************************************************
நீடாமங்கலத்துக்காரரின் மனதில் நீங்கா நினைவாய் நீண்ட நாட்களுக்கு நிலைக்கப்போகிறது இந்த (வெற்றி) கோடு.

சக பதிவராக‌, சக சோழமண்டலத்துக்காரனாக மோகனை வாழ்த்துவதில் ஒரு தன்னிறைவு ஏற்படுகிறது...

இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள் நண்பரே....

*************************************************************

"வெற்றிக்கோடு" - செட்டியார்கடை தேன்மிட்டாய்.

*************************************************************
வெற்றிக்கோடு புத்தகம் சென்னை சென்னை அகநாழிகை புத்தக கடையிலும், டிஸ்கவரி புக் பேலஸிலும் கிடைக்கிறது.

அகநாழிகை மூலம் புத்தகம் வாங்க - வாசுதேவன் - 9994541010

டிஸ்கவரி புத்தக கடையில் நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் வெற்றிக்கோடு புத்தகத்தை வாங்கலாம் !

நாகரத்னா பதிப்பகம் மூலம் வெற்றிக்கோடு புத்தகம் ஆன்லைனில் பெறலாம் ! 


By

Wednesday, September 18, 2013

வானவில் - வ. வா. சங்கமும், நரேந்திர மோடியும் !

மோடி Vs காங்கிரஸ் 

பா. ஜ. க மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க - இணையத்தில் மோடிக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து பலரும் எழுதி வருகிறார்கள்.

எனது இப்போதைய மன நிலையில் - மோடிக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்தால் என்ன என்று தான் தோன்றுகிறது.

சிற்சில தவறுகள் அவர் செய்திருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்று கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். தவறே செய்யாதவர் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் - ஒருவர் கூட அரசியலில் இருக்க முடியாது

குஜராத் சென்று வந்த பல்வேறு நண்பர்களும் அந்த மாநிலம் அடைந்த வளர்ச்சியை சொல்லி சொல்லி வியப்பதை கேட்டுள்ளேன். இத்தனைக்கும் மத்தியில் அவருக்கு இணக்கமான கட்சி இல்லாத போதே அவர் தன் மாநிலத்தை இந்த அளவு கொண்டு சென்றுள்ளார்

காங்கிரஸ் ஆட்சி - மீது உள்ள வெறுப்பு மட்டுமே மோடியை ஆதரிக்க காரணம். அவர் ஒருவேளை ஆட்சிக்கு வந்து சொதப்பினால் - அவரை விமர்சிக்கவும், எதிர்த்து வாக்களிக்கவும் தயங்க மாட்டேன் !

பார்த்த படம் - வருத்தபடாத வாலிபர் சங்கம்

கிராமத்தில் நடக்கும் காதல் கதை.

சிவகார்த்திகேயன் நடிக்கத் துவங்கியிருக்கிறார் ( சம்பளம் 3 அல்லது 5 என்கிறார்கள்... !!)

காமெடி ஆஹோ ஓஹோன்னு இல்லை. அதான் பெரிய ஏமாற்றம்; இதனை காமெடி பட லிஸ்ட்டில் சேர்க்கவே முடியாது.

சிவாவிற்கு இணையான பாத்திரம் சத்யராஜுக்கு.

Photo: வருத்தபடாத வாலிபர் சங்கம்  

கிராமத்தில் நடக்கும் காதல் கதை. 

சிவகார்த்திகேயன் நடிக்கத்  துவங்கியிருக்கிறார் ( சம்பளம் 3 அல்லது 5 என்கிறார்கள்... !!) 

காமெடி ஆஹோ ஓஹோன்னு இல்லை. அதான் பெரிய ஏமாற்றம்; இதனை காமெடி பட லிஸ்ட்டில் சேர்க்கவே முடியாது  

சிவாவிற்கு இணையான பாத்திரம் சத்யராஜுக்கு.  

ஹீரோயின் ஸ்ரீ திவ்யா ஷோக்கா கீறார். முதல் படம்னு தெரியாத அளவு நல்லா நடிக்கிறார். கிளாமரும் சேர்த்துக்  கொண்டால் இந்த 26 வயது (நன்றி : விக்கி பீடியா) ஆந்திர அம்மணி தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம் ! 

இமான் - இசை + பாடல்கள் - முதல் பெஞ்ச் ரசிகன் வரை சென்று சேர்க்கிறது. ஆனால் - நடிகர் விஜய் எந்த கெட் அப்பும் மாற்றாமல் எல்லா படத்திலும் நடிப்பதை போல, இமான் பாடல்கள் எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருப்பதைப் போல்  உணர முடிகிறது 

முதல் படத்தை மினிமம் கேரண்டியாக தந்து இயக்குனர் பொன்ராம் - சிறு வெற்றி பெற்றாலும் - அடுத்த படத்தில் நிச்சயம் இன்னும் இம்ப்ரூவ் செய்யணும் 

வ. வா. ச - டைம் பாஸ்.


ஹீரோயின் ஸ்ரீ திவ்யா ஷோக்கா கீறார். முதல் படம்னு தெரியாத அளவு நல்லா நடிக்கிறார். கிளாமரும் சேர்த்துக் கொண்டால் இந்த 26 வயது (நன்றி : விக்கி பீடியா) ஆந்திர அம்மணி தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம் !

இமான் - இசை + பாடல்கள் - முதல் பெஞ்ச் ரசிகன் வரை சென்று சேர்க்கிறது. ஆனால் - நடிகர் விஜய் எந்த கெட் அப்பும் மாற்றாமல் எல்லா படத்திலும் நடிப்பதை போல, இமான் பாடல்கள் எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருப்பதைப் போல் உணர முடிகிறது

முதல் படத்தை மினிமம் கேரண்டியாக தந்து இயக்குனர் பொன்ராம் - சிறு வெற்றி பெற்றாலும் - அடுத்த படத்தில் நிச்சயம் இன்னும் இம்ப்ரூவ் செய்யணும்

வ. வா. ச - டைம் பாஸ்.

பெண்கள் Vs ஆண்கள்

மௌலி, ஊர்வசி மற்றும் தெய்வ திருமகள் குட்டிப்பெண் நடிக்கும் நரசுஸ் காபிக்கான விளம்பரம் இது.

அம்மா தனது சிறு பெண்ணுக்கு காபி போட சொல்லி தருகிறார். காபி போட்டு முடித்ததும் மிகச் சரியாக அப்பா உள்ளே நுழைந்து - காபியை குடித்து விட்டு " பேஷ் ! பேஷ் ! ரொம்ப நல்லா இருக்கு " என்கிறார்

" இதை இதை இதைத் தான் நாங்க எதிர்பார்த்தோம் " என கோரசாக சொல்கிறார்கள் அம்மாவும்,பெண்ணும் !

ஆணை நல்ல சாப்பாட்டால் குஷிபடுத்துவ்து பெண்ணின் பொறுப்பு ("" இதை இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம் " ) சாப்பிட்டு விட்டு கருத்து சொல்வது மட்டுமே ஆணின் வேலை என்ற பழமை ஊறிய சிந்தனையில் எடுக்கிறார்களே? இந்த மகளிர் அமைப்பெல்லாம் இதை தட்டி கேட்க மாட்டாங்களா?

விளம்பரம் இப்படி இருந்தால் என்ன?

அப்பாவும் பெண்ணும் காபி போட்டு, வேலைக்கு சென்று திரும்பும் அம்மாவிற்கு தருவது போலவும் - அதற்கு அம்மா கருத்து சொல்வது போலவும் காட்டியிருந்தால் வித்யாசமாய் இருந்திருக்கும் ! (எங்க வீட்டில் நடக்குறதை சொன்னேன் பாஸ் ! )

போஸ்டர் கார்னர்

கூகிள் பிளஸ்சில் உண்மை தமிழன் இத்தகவலை பகிர்ந்திருந்தார்... விருப்பமுள்ளோர் பயன்படுத்தி கொள்ளவும்.

தமிழின் சிறந்த படங்கள் இவை தானா என்று சிந்தித்தால் வருத்தமாய் இருக்கிறது. உதிரி பூக்கள், மூன்றாம் பிறை, நாயகன் போன்ற படங்களும் இருந்திருக்கலாம் !



சம்பவம் - உணவகம் அறிமுகம் தந்த நட்பு

எங்கள் வீட்டுக்கருகே இருக்கும் சூப்பர் ரெஸ்டாரன்ட் பற்றி சில வாரங்கள் முன்பு எழுதியிருந்தேன். பதிவு வந்த சில நாட்கள் கழித்து அந்த ஹோட்டல் ஓனரிடம் இருந்து " மிக்க நன்றி; கடை பக்கத்தில் தான் உங்கள் வீடு இருக்கு போல இருக்கு; இன்னொரு முறை வந்தால் சந்திக்கலாம் " என்று எழுதியிருந்தார்

தினம் ஆபிஸ் விட்டு வரும்போது அந்த ஹோட்டல் வழியே தான் வருவேன் என்பதால் ஒரு நாள் எட்டி பார்க்க - கடையின் ஓனரான அந்த இளைஞருக்கு ரொம்ப சந்தோஷம் " சார் நீங்க எழுதுனது நல்லா ரீச் ஆகுச்சு சார். போட்ட புகைப்படத்தில் எங்க போன் நம்பரும் இருந்தது Facebook ல் படிச்சிட்டு நிறைய பேர் கால் செஞ்சாங்க.

ரொம்ப தூரத்தில் இருந்து கால் செஞ்சுட்டு 2,3 பேரு வந்தாங்க. வந்த நேரம் கரண்ட் இல்லை. பேட்டரி வேற டவுனு. அவங்களை நல்ல திருப்தியா சாப்பிட வைக்க முடியலையேன்னு கஷ்டமாகிடுச்ச்சு சார் " என்றார்

தொழிலில் உள்ள சிரமங்கள் பற்றியெல்லாம் நீண்ட நேரம் மனம் விட்டு பேசியவர் ரொம்ப தோஸ்த் ஆகிட்டார். " சார் இன்னொரு பிரண்டு இல்லை; அவன்தான் உங்களை பாக்கனும்னு சொல்லி மெயில் அனுப்பினான். இந்த நேரம் இல்லாம போயிட்டான் " என்று அன்புடன் சொல்ல, எங்கோ ஓரத்தில் எழுதுறது எத்தனை பேரை தொட்டு விடுகிறது !

வித்யா போஷக் -வெங்கி

வித்யா போஷக் என்கிற தொண்டு நிறுவனம் மூலம் சேவைகள் பல செய்யும் வெங்கி அவர்களிடமிருந்து வந்துள்ள தகவல் 

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.வித்யா போஷக் தொண்டு நிறுவனத்திற்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன். 'Give India Challenge' போட்டியில் வித்யா போஷக் பங்கெடுத்துள்ளது. இப்போட்டியில் இருநூறு தனிப்பட்ட நன்கொடைகளை முதலாவதாக நாங்கள் பெற்று விட்டால், ரூ.2,00,000.00 வெல்லும் வாய்ப்புக்கிட்டும்.

ரூ.100 அளவிலான உங்கள் ஒவ்வொருவரின் எளிய நன்கொடையானது 502 பட்டதாரி, கிராமப்புற மாணவர்களை வேலைக்கான தகுதியுள்ளவர்களாக மாற்றும் வல்லமையை எங்களுக்குத் தரக்கூடியது. எங்கள் பயிற்சி குறித்த மேலதிக விவரங்களை இணைத்துள்ள கோப்பில் பார்க்கலாம்.

தற்போது வித்யா போஷக் இப்போட்டியில் 48 தனிப்பட்ட நன்கொடைகளுடன் முதலாவது இடத்தில உள்ளது. நாங்கள் ஊக்கதொகையான ரூ 2,00,000.00 வெல்ல இன்னும் 152 பங்களிப்பாளர்கள் கூடுமானவரை விரைவாக வித்யா போஷக் நிறுவனத்துக்கு வழங்க வேண்டுகிறேன்.

உங்கள் பங்களிப்பு ரூ. 100 முதலானதாக இருக்கலாம்..கீழ்க்கண்ட தொடுப்புகள் மூலம், நெட் பாங்கிங், கடன் அட்டை அல்லது டெபிட் கார்டு வாயிலாக உங்கள் பங்களிப்பை வழங்க இயலும். http://www.giveindia.org/iGive-NurtureMerit

இத்தகவலை உங்கள் நண்பர்களிடமும், இணையத்திலும் பகிர வேண்டுகிறேன். கீழ்க்கண்ட இணைப்பின் வாயிலாக Give India Challenge' போட்டியில் எங்கள் தற்போதைய நிலையைக்காணலாம். http://www.giveindia.org/t-india-giving-challenge-2013-league-standings-challengers-overall.aspx

வித்யா போஷக் மூலம் நடக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவுவது குறித்து வெங்கி அவர்களிடமிருந்து வந்துள்ள மெயில் இது

Dear Friends,

We have created simple Online tests using google forms and sending weekly two tests / assignments to the Economically Challenged final year BA / BCOM / BSC degree students who are looking for a job in Service sector, KPO & BPO's or Govt Jobs or Bank jobs etc

You could see the sample aptitude tests here http://vpcareeroptions.blogspot.in/p/blog-page.html

Also our blog http://vpcareeroptions.blogspot.in/

Initially we met the rural college students for one to one counseling initial training. After the counseling we prepared their profiles and then started with online training through Email. This will go on till June 2014 and once their results come we will arrange for Campus interviews for them in our offices.

Our plan is to provide them a GPRS enabled handset so that we can give them a test every day. We are planning for mobile application for the online tests.

If members of this group is Interested to take it to rural colleges near your places we can jointly do this and train Rural students for making them job ready. I will provide all the materials for the same and we can add the students in our mailing list for online tests.
Thanks
Venky

அய்யாசாமி கார்னர் 

அய்யாசாமி தற்போது தினம் வீடுதிரும்பலில் பதிவு எழுதலையே ஒழிய - ஒவ்வொரு நாளும் வேறு ஒரு பதிவு எழுதி கொன்று கொண்டிருக்கிறார்.

புதிய கம்பனி சட்டம் வந்தமையால் - அது பற்றி ஆங்கிலத்தில் தினம் ஒரு கட்டுரை எழுதி முகநூல் மற்றும் கம்பனி செகரட்டரி சர்கிள்களில் அடிச்சு விடுறார்.

Mrs. அய்யாசாமி பொறுத்து பொறுத்து பார்த்தார் - இந்த மனுஷனிடம் பேசுறதுன்னா கணினி மூலம் தான் பேசணும் போலன்னு கஷ்டப்பட்டு முதல்முறையா தனியா ஒரு மெயில் ஐ. டி கிரியேட் செய்துட்டார். அதிலிருந்து அய்யாசாமிக்கு மெயில் அனுப்பினா மனுஷன் படிச்சுட்டு " ஓகே அப்ரூவ்ட் ; யூ மே ப்ரோசீட் " ன்னு பதில் அனுப்புறார் !

இது பற்றி அய்யாசாமி: " வீட்டில் பிரச்சனையான மேட்டர் பேசினா சண்டை தான் வரும்; அம்மணி இப்படி மெயில் அனுப்பினா, பெரிய சண்டை இல்லாம எல்லா விஷயமும் ஈசியா முடிஞ்சுடுது !"

ஒரு மார்க்கமா தான் போயிக்கிட்டு இருக்கார்.. என்னிக்கு மேடம் பொங்க போறாங்களோ - மனுஷன் அடங்க போறாரோ தெரியலை !

Friday, September 13, 2013

சென்னையில் புதிய கம்பனி சட்டம் குறித்து 2 மீட்டிங்குகள்

நண்பர்களே,

புதிய கம்பனி சட்டம் குறித்து சென்னையில் இன்றும் நாளையும் இரு மீட்டிங்கள் நடக்க உள்ளன

ACS இன்ஸ்டிடியூட்டில் இன்று மாலை நடக்கும் மீட்டிங் - இலவச மீட்டிங் ஆகும்.

நாளை மாலை எங்கள் ஸ்டடி சர்கிள் மூலம் நடக்கும் மீட்டிங்கிற்கு ரூ 250 நுழைவு கட்டணம்.

விருப்பமுள்ளோர் கலந்து கொள்ளலாம் .

இன்றைய மீட்டிங் குறித்த விபரங்கள் ......



நாளைய மீட்டிங்


Thursday, September 12, 2013

வானவில்- ஊதா கலரு ரிப்பன்-பதிவர் திருவிழா ப்ளஸ் மைனஸ்


ஏன் பதிவு எழுதலை 

"10 நாளாய் ஏன் பதிவு இல்லை ?" என ஒரே போன் மற்றும் மெயில்.. 2 வாரம் போஸ்ட் போடாம ஒதுங்கி இருக்கலாம்னு பார்த்தா முடியலை...

இப்படி இந்த பதிவை ஆரம்பிக்க ஆசை தான். ஆனால் ..........முதல் வாரம் அதிகம் பேர் கேட்கலை.

இந்த வாரம் நிறையவே விசாரிப்புகள் !

" காட்சியில் இல்லையென்றால் காணாமல் தான் போவாய் " என்று செல்லும் ஒரு கவிதை வரி.. நினைவுக்கு வருகிறது !

கம்பனி சட்டம் கெஜட்டில் வெளியாகிடுச்சு. ஆபிஸ் வேலை மற்றும் வீட்டில் செய்யும் உதவிகள் ......இதுக்கு நடுவே கிடைக்கிற கொஞ்சம் ப்ரீ டைமில் புது சட்டத்தை நிறைய படிச்சு அப்டேட் பண்ணிக்க வேண்டியிருக்கு. மேலும் வாரம் ஓரிரு இடத்திலாவது கம்பனி சட்டம் குறித்து பேச வேண்டியுள்ளது. தொடர்ந்து பதிவு எழுத முடியாமைக்கு காரணம் இது தான்.

இனி வீடுதிரும்பலில் பதிவுகள் தினம் வராது ! வாரம் எத்தனை பதிவு வரும்னு எந்த உறுதிமொழியும் கொடுக்க முடியலை. வாரம் 1 அல்லது 2 பதிவு எழுத முயற்சி செய்கிறேன் !

சென்னை பதிவர் திருவிழா 

அனைவரும் எழுதி முடித்து விட்ட செப்டம்பர் 1 பதிவர் திருவிழா பற்றிய ஒரு குவிக் ப்ளஸ் அண்ட் மைனஸ் இதோ :

ப்ளஸ்

விழா குழுவில் இருந்த நண்பர்களின் அட்டகாச பிளானிங் ; அயராத உழைப்பு . சிறு சிறு தடைகள் வந்த போதும் இலக்கை சென்று சேர்ந்தது

மதிய சாப்பாட்டில் - இம்முறை நான் வெஜ் மற்றும் வெஜ் இருந்தது .. இரண்டுமே.. நன்றாகவும்

நான்கு பதிவர்களின் புத்தகங்கள் வெளியாகியது

தம்பி சங்கவியின் புத்தக வெளியீடு 

பாமரனின் பேச்சு

சென்ற ஆண்டு விழாவின் போது இணையத்தில் அது பற்றி சிறிது மன வருத்தம் இருந்த நண்பர்களில் பலர் இம்முறை விழாவுக்கு வந்தது மிக பெரிய மகிழ்ச்சி. இணைய சண்டைகள் அதிகம் பெரிது படுத்தாமல் இருந்தால் - நீர் குமிழி போல தானே உடைந்து காலப்போக்கில் சரியாகி விடும் என தோன்றுகிறது

மதுமதியின் குறும்பட வெளியீடு (படத்தில் பங்கேற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் வந்திருந்தனர்; படம் முடிந்து அவர்கள் எழுந்து நின்ற போது அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது)

கேபிள் - எனது வளர்ச்சிக்கு முதல் காரணம் வலைத்தளமே - இன்று படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவும் காரணம் அதுவே என்று பேசியது நெகிழ்வு

சுரேகா, அகிலா உள்ளிட்டோர் காம்பியரிங்கை தங்களுக்குள் சரியே பங்கிட்டு கொண்டு நிறைவாய் செய்தனர்



விழாவுக்கு வந்திருந்த ஒவ்வொருவருக்கும் புதிதாய் ஓரிரு நட்பாவது கிடைத்தது

இவ்விழா அடுத்தடுத்த வருடங்களில் சென்னையை தாண்டி நடக்க இருப்பது (அடுத்த வருடம் ஈரோட்டில் நடக்கும் என இறுதியில் அறிவிக்கப்பட்டது.. )

மைனஸ் 

விழா அரங்கம் - மாலை துவங்கி இரவு வரை செல்லும் விழாவுக்கு இவ்வரங்கம் சரியானது. ஆனால் சென்னை வெய்யிலில் - பகலில் நடந்த விழா என்பதால் சற்று சிரமத்துக்கு ஆளாக வேண்டியிருந்தது. நாங்கள் இன்னும் நல்ல அரங்கமாய் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இது விழா குழுவை சேர்ந்த எங்கள் பிழையே.

லைவ் ரிலே- யில் ஆடியோ சரியாக இல்லை. அதனை சரி செய்ய எவ்வளவோ முயன்றும் அந்த நேரத்து பரபரப்பில் முடியவே இல்லை

ஒரு கல்யாணம் நடத்துவது போல நிகழ்ந்த இவ்விழாவில் இப்படி ஓரிரு குறைகள் நிகழ்வது சகஜமே ! அடுத்த வருட விழாவில் இக்குறைகள் நிகழா வண்ணம் ஜாக்கிரதையாக இருப்போம் !

போனஸ்

புத்தகத்துக்கு முகப்பு அட்டை வரைந்த தம்பி சுகுமாருக்கு நன்றி தெரிவித்த நேரம் 

சுய அறிமுகத்தில் இரண்டு நண்பர்கள் மேடையில் ஏறி பேசத்துவங்கும் முன் கைதட்டல் - பிளந்து கட்டியது. அவர்கள்.. திண்டுக்கல் தனபாலன் மற்றும் ஸ்கூல் பையன் ! நண்பர் தனபாலன் ப்ளாகில் அனைவருக்கும் கமண்ட் போடுவார். தம்பி ஸ்கூல் பையன் - முகநூலில் எல்லாருக்கும் லைக் போடுவார். இருவருக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் - தான் இந்த கைத்தட்டல் !

இனி மற்ற விஷயங்கள் செல்வோம். இவற்றில் பல முகநூலில் அவ்வப்போது பகிர்ந்தவை. முகநூலில் ஏற்கனவே வாசித்தோர் பொறுத்தருள்க ! அல்லது இந்த இடத்தில் எஸ் ஆகுக !

என்னா பாட்டுடே - ஊதா கலரு ரிப்பன்

ஊதா கலரு ரிப்பன் ....சிவகார்த்திகேயன், இமான், இயக்குனர் மூவருமே கலக்கியிருந்தாலும் முதல் மார்க் இமானுக்கு தான் !

மியூசிக், பாடல் கம்போசிஷன், மெட்டு - அனைத்தும் அசத்த .....ஆட வைக்குது இப்பாடல் !

ஒரு காலத்தில் ராஜா ரசிகன் - இன்று இமான் மற்றும் அனிருத் ரசிகனாக மாறி வருகிறேன் ...



25 வருட நட்பு 

எங்கள் சட்ட கல்லூரி நண்பர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்து இன்றோடு 20 ஆண்டுகள் ஆகிறது.

எல்லோருக்கும் தர
என்ன உண்டு என்னிடம்
புன்னகை தவிர?

- என 1993-ல் எழுதியது இதே செப் - 8 -ல் தான்

பிரேம், பாலா , டெய்சி, அமுதன், நித்தியானந்தம், பிரபு, பரிமளா , சந்துரு, பரணி போன்றோர் சென்னையிலும் - ராஜ், சதீஷ், ஸ்ரீதர் போன்றோர் திருச்சியிலும் இன்னும் பல்வேறு நண்பர்கள் வெவ்வேறு ஊர்களிலும் இருக்கிறோம்.

25 வருட நட்பு 
என்ரோல் செய்து 20 ஆண்டுகள் ஆகிறது என்றால் - அதற்கு முன் நாங்கள் படித்ததும், திருச்சியை கலக்கியதும் 5 ஆண்டுகள்.

இந்த 25 ஆண்டுகளில் நண்பர்கள் லட்சுமணன், ஜனார்த்தனன் மற்றும் கார்த்திக் மரணம் எங்களை அவ்வப்போது உலுக்கி விட்டுப்போனது.

25 ஆண்டு கால நட்பு ! கல்லூரி காலத்தில் எங்களுக்குள் எத்தனை சண்டைகள் ...பிரிவுகள் ... கண்ணீர். ஆனால் கல்லூரி முடித்த பின் குடும்ப நட்பாய் இன்று எங்கள் உறவு தொடர்கிறது



25 ஆண்டு கால நட்பை நினைவூட்டும் வகையில் சென்னை நண்பர்கள் செப்டம்பர் 8 அன்று சந்தித்தோம்.

சிரித்து சிரித்து புரையேறிய அத்தருணங்கள் வாழ்வில் மிக இனிமையானவை !

அடுத்த சந்திப்பு பாலாவின் வீட்டில் அக்டோபர் 2 அன்று !

வீ ஆர் வெயிட்டிங் !

தலைவா..ஆஆஆஆஆ!

Watched Thalaiva.. Marana Mokkai film.....

Vijay's look and dance movements are the one and only saving grace...

Recommendation : Skip it even in Good quality DVD ......

போஸ்டர் கார்னர் 



தொட்டால் தொடரும் 

நண்பர் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் பட பூஜை இன்று நடக்கிறது.

கேபிள் ஒரு எளிமையான அற்புதமான மனிதர். பதிவுலகில் நுழைந்த பொழுதில் எத்தனையோ சிறு சிறு சந்தேகங்களை தொலைபேசி அல்லது நேரில் கேட்ட போதும் புதியவன் என்று எண்ணாது பொறுமையாய் விளக்கியவர். 2010 -ல் ப்ளாகில் வந்த எனது சுய முன்னேற்ற தொடரை பார்த்து விட்டு நண்பர் அகநாழிகை வாசுவிடம் புத்தகமாய் போட சொல்லி பரிந்துரைத்தவர்.

மேல் பாராவில் சொன்னது எனக்கு நடந்தது. இதே அனுபவம் ஏராள இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும்.. சுரேகா, கே. ஆர். பி உட்பட !

நண்பர்கள் அனைவரையும் " தலைவரே" என்று இவர் சொல்வது மிக ரசிக்கும்படி இருக்கும் ... !



ப்ளாக் என்கிற மீடியாவை சரியாக பயன்படுத்தி - கொஞ்சம் கொஞ்சமாய் - உதவி இயக்குனர், வசனகர்த்தா என்று உயர்ந்து - இன்று படம் இயக்கும் நிலைக்கு வந்துள்ள கேபிள் சங்கரிடம் - தத்தம் துறையில் நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதை கற்று கொள்ளலாம் !

தொட்டால் தொடரும் வெற்றிபெறவும், சினிமா துறையில் உங்களுக்கென்று ஒரு தடம் பதிக்கவும் வாழ்த்துக்கள் தலைவரே !

ஒரு சிறு விளம்பர இடைவேளை ...

வெற்றிக்கோடு புத்தகம் சென்னை சென்னை அகநாழிகை புத்தக கடையிலும், டிஸ்கவரி புக் பேலஸிலும் கிடைக்கிறது. 

டிஸ்கவரி புத்தக கடையில் நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் வெற்றிக்கோடு புத்தகத்தை வாங்கலாம் !

http://discoverybookpalace.com/products.php?product=வெற்றிக்கோடு


வெற்றிக்கோடு புத்தகம் ஆன்லைனில் பெற

http://www.wecanshopping.com/products/வெற்றிக்-கோடு-%21.html

புத்தக வெளியீடு சமயம் எழுதியவை :

** உச்ச பட்ச சந்தோஷ மனநிலையில் உள்ளேன்

வெற்றிக்கோடு புத்தகம் முழுதும் ஒரு முறை இன்று வாசித்தேன் ; வாழ்நாளில் நான் செய்த உருப்படியான காரியம் என இப்புத்தகம் நினைவில் கொள்ளப்படும்.

மிக நிறைவாக உள்ளது. - நானும் ஒரு புத்தகம் எழுதி விட்டேன் என்ற நிறைவல்ல - இதன் Content - அதிலுள்ள உண்மை - இவை மட்டுமே தரும் நிறைவு.... இந்த நிறைவுக்கு முன் , அச்சீட்டின் போது புத்தகத்தில் நிகழ்ந்த சில சின்னச்சின்ன குறைகள் அடி பட்டு போகின்றன...

இப்புத்தகத்தை வாசிப்போரிடம் கொண்டு சேர்க்கும் மார்கெட்டிங் வேலைகளில் நானும், அகநாழிகை வாசுவும் ஈடுபட்டுள்ளோம் தான் ! ஆனால் அதை விட பெரிய மார்கெட்டிங் இனி தான் நடக்க உள்ளது. அது - புத்தகத்தை வாசிக்கும் பலர் - தங்கள் வாய் மொழியால் நண்பர்களுக்கு செய்ய இருக்கும் பரிந்துரை . ....!

***********
சின்ன வயதில் எந்த நல்ல விஷயம் நடந்தாலும் முதலில் அம்மாவிடம் சொல்ல/ காண்பிக்க நினைப்பேன். இப்போது? வேற யார் ? ஹவுஸ் பாஸ் தான் !

வெற்றிக்கோடு புத்தகம் இன்று கையில் கிடைத்ததும் - அடுத்த அரை மணியில் அம்மணி அலுவலகம் சென்று - முதல் பிரதியை கொடுத்து விட்டு வந்தேன் !

புத்தகம் குறித்து மனைவி வேலை செய்யும் HTL -லிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கருத்துகள் நிரம்ப மகிழ்ச்சியை தருகிறது

**************
இல்லாமற் போகுமோ
சரித்திரத்தில் ஒரு சிற்றிடம்
எனக்கு

20 வருடங்களுக்கு முன் எழுதியது .....

இன்று முதல் புத்தக வெளியீடு !
**************
முதல் முறையாக புத்தகத்தில் பலர் ஆட்டோகிராப் வாங்கியபோது சங்கோஜமாக இருந்தது ! ஆட்டோகிராப் போடும் அளவா வளர்ந்து விட்டோம் ! நம்ப முடிய வில்லை !
*************
வெற்றிக்கோடு புத்தக வெளியீட்டிற்கு முன்பிலிருந்தே - கடந்த 2 நாட்களாக " இத்தனை புத்தகம் வேண்டும்" என எனக்கும் வாசுவிற்கும் மெயில், போன் மற்றும் பின்னூட்டத்தில் வருகிற வரவேற்பை வைத்து பார்க்கிற போது 2 விஷயங்கள் உறுதியாய் தெரிகிறது :

1. கணினி வந்ததால் புத்தகங்கள் விற்பனை குறையும்; புத்தகங்கள் வழக்கொழியும் - என்பது மாயையே ! புத்தகங்களுக்கு அழிவே இல்லை !

2. சரியான முறையில் செய்தால் புத்தக விற்பனை லாபகரமான ஒன்றே

*****************
இரண்டு நாள்; நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் ; நன்றி நண்பர்களே !

*******************
அய்யாசாமி கார்னர்

திருமண நாளன்று அய்யாசாமி முகநூலில் எழுதியது

நாளையுடன் (29 ஆகஸ்ட் ) திருமணமாகி 16 ஆண்டு முடிகிறது !

தி.மு - தி. பி வித்தியாசங்களை நினைத்தால் ஆச்சரியமாய் இருக்கிறது.

வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாய் முழுமையடைவது இந்த 16 வருடங்களில் தான் !

" அன்பு எப்போதும் நேர் கோட்டில் இருக்காது; ஒன்று மேலே செல்லும்; அல்லது கீழே செல்லும் " - ஓஷோ

சின்ன சின்ன சண்டைகள் இருந்தாலும் மொத்தத்தில் - எங்கள் காதல் கிராப் அனைத்து விதங்களிலும் மேலே மட்டுமே செல்கிறது !

Life is beautiful !

Sunday, September 1, 2013

அகவொளி பதிப்பக இரு நூல்கள் வெளியீட்டு விழா - படங்கள் ​+ சிறு குறிப்பு

கவொளி பதிப்பகத்தின் இரு புத்தகங்கள் வெளியீட்டு விழா இன்று சைதாபேட்டையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

சதீஷ் சங்கவியின் " இதழில் எழுதிய கவிதைகள்" தொகுப்பை தாமோதர் சந்துரு அவர்கள் வெளியிட - மணிஜி அவர்கள் பெற்று கொண்டார் .

வால் பையன் புத்தகம் பற்றி மிக நகைச்சுவையாக பேசினார் !

அடுத்து " வெற்றிக்கோடு " புத்தகத்தை கேபிள் சங்கர் வெளியிட - ஜாக்கி சேகர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்

தொடர்ந்து ஜாக்கி சேகர், வழக்கறிஞர் தேவகுமார், கவிஞர் பத்மஜா நாராயணன், நண்பர் அதியமான் ஆகியோர் வெற்றிக்கோடு பற்றி தங்கள் கருத்துகளை விரிவாய் பேசினர்.

அவர்கள் பேசிய கருத்துகளில் நினைவில் உள்ளதை (நேரமிருப்பின்) பின்னர் பகிர்கிறேன்.

தேவாவின் பேச்சு கன்னி பேச்சு போலவே  தெரிய வில்லை ! அசத்தி விட்டான் !

ஜாக்கி மற்றும் பத்மஜா இருவர் குடும்பத்திலும் உடல்நல குறைவான நிலையில் தத்தம் மகள் இருந்த நிலையிலும் ஒரே நாளில் புத்தகத்தை வாசித்து விட்டு - விழாவில் கலந்து கொண்டு புத்தகம் பற்றி மிக மிக விரிவாய் பேசியது மனதை நெகிழ்த்தியது   !

என்ன தவம் செய்தனை .....இத்தகைய நண்பர்களை பெற !

நினைவில் இருந்தவரை வந்திருந்த பதிவர்கள்/ எழுத்தாளர்கள்  :

எழுத்தாளர் வா. மு. கோமு
மணிஜி
தாமோதர் சந்துரு
கேபிள் சங்கர்
ஜாக்கி சேகர்
அதிஷா
அகநாழிகை வாசுதேவன்
பால கணேஷ்
கே. ஆர். பி செந்தில்
பத்மஜா நாராயணன்
கண்ணன் ராமசாமி (கரா)
அதியமான்
ஸ்கூல் பையன்
பட்டிக்காட்டான் ஜெய்
முக நூலில் பதிவெழுதும் அன்பு சிவன்

இதனை தவிர சட்ட கல்லூரியில் என்னுடன் படித்த வழக்கறிஞர் நண்பர்கள் ...

பிரேம்குமார்
பாலமுத்து குமார்
அமுதன்
தேவகுமார்

மற்றும்

ACS இன்ஸ்டியூட்டை சார்ந்த

நாகராஜன்
பாலசுப்ரமணியம்

(அநேகமாய் நான் ஓரிரு பதிவர்கள் பெயரை மறந்திருப்பேன். பின்னூட்டத்தில் தவற விட்ட நண்பர்கள் பெயரை சொல்லுங்கள் நண்பர்களே !)

**********
விழா முடிந்து பேசிக்கொண்டிருக்கும்போது மாலை 7.30 மணிக்கு நமது புத்தகம் அட்டை லே அவுட் செய்த சுகுமார் சுவாமிநாதனிடம் இருந்து ஒரு எஸ். எம். எஸ்.

இன்றைய விழாவில் எடுத்த புகைப்படங்கள் 8 மணிக்குள் பகிர்ந்தால் நாளை - சென்னையில் மட்டும் சர்குலேட் ஆகும் ஒரு செய்தித்தாளில் அதனை பகிர்கிறேன் என சொல்லியிருந்தார்

அகநாழிகை வாசுவிடம் சொன்னதும் உடன் அவர் அனுப்பி வைக்க ...இன்றைய புத்தக வெளியீடு விழா பற்றிய படம் நாளை சென்னை அவினியூ என்ற செய்தி தாளில் சிறு செய்தியாக வருகிறது.



மிக்க நன்றி சுகுமார் !

*********
முகநூலில் நண்பர் திரு அன்பு சிவம் அவர்கள் விழா மற்றும் புத்தகம் பற்றி எழுதியது இதோ:

கவொளிப் பதிப்பகத்தின் இரு புத்தக அறிமுக விழாவிற்குச் சென்றிருந்தேன்.

முதல் புத்தகம் தம்பி சதீஷ் சங்கவியின் இதழில் எழுதிய கவிதைகள். சதீஷ் முத்தத்திற்கு மொத்த குத்தகையாளர் என்பதால் முதல் கவிதைத் தொகுதியின் தலைப்பே இனிக்கும் இதழாய் இருந்ததில் வியப்பில்லை. சற்றே மேலோட்டமாகப் பார்த்த போது கவிதைகளில் தெரியும் நயமும் ரசனையும் நன்கு புரிந்தது.

இரண்டாவது புத்தகம் வீடு திரும்பல் மோகனின் வெற்றிக் கோடு. தமிழில் சுய முன்னேற்றம் குறித்த பல புத்தகங்கள் வந்து விட்டது. இதுவும் இன்னொன்றோ என்ற சந்தேகம் இருந்தது. வாங்கிப் படித்ததும் புரிந்தது இது பத்தோடு பதினொன்றல்ல என்பது. எந்த ஒரு மனிதன் நான் இந்தத் தவறைச் செய்தேன். அதனால் அல்லலுற்றேன். இதை நீயும் செய்யாதே துன்பத்திற்கு ஆளாகாதே என்று கூறுகிறானோ அவனது பாடங்கள் நிச்சயம் பயனுள்ளவையாகவே இருக்கும்.

சமீப காலமாக நான் எழுதி வரும் மீண்டும் மீண்டும சொல்வேனில் நான் சொல்ல நினைத்த சில விஷயங்களை மோகன் குமார் தனது நுாலில் சொல்லிவிட்டார். அத்தகைய விஷயங்களை நீக்கி மீண்டும் மீண்டும் சொல்வேன்.

மோகன் குமாரின் எழுத்து எளிமையானது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் எது முக்கியம் என்பதை எடுத்துரைக்கிறது. சற்றே எளிமையாகத் தெரியும் சில வாக்கியங்கள் உள்ளே ஒரு கடலை ஒளித்துக் கொண்டிருக்கிறது. உதாரணங்கள்

• நாம் எந்த ஒரு சிறு தவறும் செய்யக்கூடாதெனில், ஏதும் செய்யாமல் பேசாமல் இருந்தால்தான் முடியும்.

• வாழ்வில் வென்ற பல வெற்றியாளர்களும் ஏதோ ஒரு கட்டத்தில் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.

• கடவுளாலும் மாற்ற முடியாத விஷயம் ஒன்று உண்டு. நடந்ததை மாற்ற அவராலும் முடியாது.

தமிழில் சமீப காலத்தில் வந்திருக்கும் சுய முன்னேற்றப் புத்தகங்களில் வெற்றிக் கோடு நிச்சயம் வித்தியாசமானது. ஏதோ ஒரு மூலையில் வாழும் ஒரு மனிதனுக்கு இது வெற்றியைக் கொடுத்தாலும் போதும். அது மோகனுக்குக் கிடைத்த வெற்றி.

வாழ்த்துக்கள் சதீஷ் !

வாழ்த்துக்கள் மோகன் !
*********



****************
மிக குறுகிய அவகாசத்தில் வாசித்து விட்டு அற்புத கருத்துரை வழங்கிய நண்பர்களுக்கு சிறிய நினைவு பரிசு !  ( பேனா !)
*****************
புத்தகம் குறித்து அருமையாய் பேசினீர்கள் ஜாக்கி ; என் நண்பன் தேவா உங்கள் பேச்சு மிக பிடித்திருந்ததாக போனில் தெரிவித்தான் !

Photo 

************
பதிவர்கள் சிலரை தான் இயக்கம் புது படத்தில் எப்படி களாய்த்துள்ளார் கேபிள் என்ற விபரம் இன்று சொன்னார் ..விபரங்கள் விரைவில்.. தனியே பகிர்கிறேன்



***********
புத்தக வெளியீட்டில் நெகிழ வைத்த தங்கள் பேச்சை நாளைய விழாவிலும் எதிர்பார்க்கிறேன் - பத்மஜா மேடம்; நீங்கள் பேசியதை பின்னர் எழுதி தந்தால் - நிச்சயம் அடுத்த பதிப்பில் - புத்தகத்தில் அது சேர்க்கப்படும் !

Photo: இன்று அகநாழிகை புத்தக உலகில் நடைபெற்ற, மோகன்குமார் எழுதிய வெற்றிக்கோடு புத்தக வெளியீடு

விழா நடந்த ஹால் !

Photo


*********
விழா குறித்து முகநூலில் இன்று நான் பகிர்ந்த  சில விஷயங்கள் :

முதல் முறையாக புத்தகத்தில் பலர் ஆட்டோகிராப் வாங்கியபோது சங்கோஜமாக இருந்தது ! ஆட்டோகிராப் போடும் அளவா வளர்ந்து விட்டோம் ! நம்ப முடிய வில்லை !
*************
Bala Subramanian, a young Company Secretary who attended today " Vetrikkodu :" book release function has posted the following message in his timeline; Do not know how to share from there. Hence copying and sharing it here:

Bala Subramanianposted to Mohan Kumar
15 minutes ago near Chennai ·

Extremely privileged to be present at the book launch ceremony with all the well known writers. Buying the book before it is officially launched tomorrow is like going to a preview show for a Rajnikanth movie on the eve of its release. Thank you Mohan Kumar Sir for giving us the book.

Looking forward to read the book and the feedback will follow soon. — feeling excited.
*************
அற்புதமான நண்பர்கள். நிறைவான விழா. மறக்க முடியாத நாள் !

நெகிழ்ந்த மனதுடன் உறங்க செல்கிறேன். நாளை பதிவர் விழாவில் சந்திப்போம் !
Related Posts Plugin for WordPress, Blogger...