Friday, March 20, 2009

வழக்கறிஞர் போராட்டம் சில பார்வைகள்....

வெற்றிகரமான 75-வது நாள்.. என cinema poster பார்த்து தான் நமக்கு பழக்கம்... இப்படி advocates boycott 75 days - நடந்து கேள்வி பட்டதே இல்லை... ஒரு வழியாய் தமிழகத்தில் advocates போராட்டம் முடிவுக்கு வந்தது... நானும் B.L. படித்தவன் என்ற முறையில் இந்த காலத்தில் அலுவலகத்திலும், நண்பர்களிடமும் ஏகப்பட்ட கேள்விகளை, கருத்துகளை சந்தித்தேன்..

அதே நேரம் என் உடன் படித்த வக்கீல் நண்பர்கள், நான் office-வேலையாக interact செய்யும் ஏராளமான வக்கீல்கள் பேசியது முற்றிலும் வேறு விதமாய் இருந்தது..

முதலில் வக்கீல்கள் கருத்து:

Feb 19th அன்று வக்கீல்கள் மேல் போலீஸ் நடத்திய தாக்குதல் முன்பே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று…Sri Lankan issue -வை divert செய்ய தமிழ் நாடு அரசு திட்டமிட்டே இதனை செய்தது. அதில் வெற்றியும் பெற்றது. (இப்போது வக்கீல்கள் யாரும் Sri Lankan issue பற்றி பேசுகிறார்களா என்ன?) ஆனால் தமிழக அரசு, வக்கீல்கள் இவ்வளவு நாள் ஒற்றுமையாய் நின்று அரசை எதிர்ப்பார்கள் என நினைக்க வில்லை.

இன்னொரு சாரார் Feb 19th க்கு பிறகு ADMK தூண்டுதல் உள்ளதாகவும், boycott வாபஸ் பெற விடாமல் அவர்கள் செய்வதாகவும் கூறினர்.

அனைவரும் மாறாமல் சொன்னது: அன்று போலீஸ் excess -மிக, மிக அதிகம் என்றும், ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை அதை முழுசாய் சொல்ல வில்லை என்றும் வருந்தினர். ஏதோ 15 வக்கீல் court campus-ல் தவறாய் நடந்ததற்கு ஏன் அத்தனை பேரை அடிக்க வேண்டும்? அடி வாங்கிய பலர் இந்த பிரச்சனையில் சிறிதும் சம்பந்த படாதவர்கள். மேலும் அன்று, போலீஸ், பாரிஸ் கார்னர் area வில் எல்லா ஆட்டோகாரர்களிடமும் வக்கீல்களை ஏற்ற கூடாது என்று கூறியதாகவும், இதனால் தப்பியோ அடி பட்டோ வெளியே வந்த எந்த வக்கீலும் ஆட்டோ மூலம் போக முடியவில்லை என்றும் வருந்தினர்; தம்பு செட்டி தெரு, லிங்கி செட்டி தெரு என வெளியே உள்ள வக்கீல் office-க்குள் கூட வந்து அங்குள்ள வக்கீல்களை போலீஸ் அடித்தனர். இது முற்றிலும் unwarranted என்றனர்.

மேலும் தவறு செய்தது வக்கீல்கள் என்றால், அவர்களை மட்டும் அடித்திருக்க வேண்டியது தானே? அவர்கள் car-கள் மற்றும் two wheelers-ஒன்று விடாமல் அடித்து நொறுக்கியது ஏன்? இப்படி அடித்து நொறுக்க எந்த சட்டத்தில் இடம் உள்ளது? இதற்கு உரிமை தந்தது யார்?

பொது மக்கள் பார்வை:

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், பொது மக்கள் வக்கீல்கள் போராட்டத்தை ஆதரிக்க வில்லை. பிப் 19th கோர்ட் அமர்களம்-க்கு பிறகு உடனடி மக்கள் reaction : "இந்த வக்கீல்களுக்கு நல்லா வேணும்; ரொம்ப நாளா போலீசை வெறுப்பேத்திட்டு இருந்தாங்க. எல்லாத்துக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமா போலீஸ் குடுத்திட்டாங்க" என்பதாய் இருந்தது.

போக போக கோர்ட் resume -ஆகாமல் போகவே " ஒரு கொலை நடந்தா கூட கொலையாளிக்கு உடனடி தண்டனை கிடைக்காது; இந்த விஷயத்தில் முதலில் போலீஸ் மேல் action எடுக்க வேண்டும் அப்புறம் தான் கோர்ட் வருவோம் என்றால் எப்படி?"என மக்கள் கோபம் கூடியது.

"தங்கள் சுய நலத்துக்காக எவ்வளவு நாள் boycott செய்வார்கள். இதனால் எவ்வளவு பொது மக்கள் பாதிக்க படுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை".

"போலீசும் ஒரு union ஆரம்பித்தால் என்னாவது? அது நாட்டுகே நல்லதல்ல". என்றும் பேசினர்.

பொதுவாக மக்கள், தமிழக அரசு இந்த விஷயத்தில் எந்த action-ம் எடுக்காமல் inefficient ஆக இருந்தது என்றே கருதினர்.

மேலும், unlike advocates, ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கையை சாதாரண மக்கள் யாவரும் ஏற்று கொள்ளவே செய்தனர் !!

இறுதியாய் உயர் நீதி மன்றம் இரண்டு போலீஸ் officers - suspend செய்யப்பட வேண்டும் என்று சொல்ல, தமிழக அரசும் உடனே obey செய்கிறோம் என்றது. வக்கீல்கள் கோரிக்கை இதனை விட மிக பெரிது; ஆனாலும், இதை விட இன்னொரு face saving வாய்ப்பு கிடைக்காது என " Boycott தற்காலிக( ??!!) வாபஸ்" என்றுள்ளனர்..

Personal ஆக, Advocate-ஆய் practice செய்ய விருப்பம் இன்றி, corporate side- சென்ற நான் இந்த 75 நாட்களில் சில முறை "Party in person" ஆக, court-செல்ல வேண்டி வந்தது. இதில் நிறையவே வித்யாசமான அனுபவங்கள் கிடைத்தன.

இந்த blog படிக்கும் வக்கீல் நண்பர்களே ஒரே வேண்டுகோள்: ஒரு critical conditionல்- உள்ள patient -ஐ ஏற்றி செல்லும் ambulance டிரைவர், பாதி வழியில் இறங்கி கொள்வதும், நீங்கள் தொடர் boycott செய்வதும் ஒன்று தான்... இரண்டுமே உங்களை நம்பி வந்தவர்களை கிட்டத்தட்ட கொல்லும் செயல் தான். எதிர்ப்பை காட்ட எவ்வளவோ வழிகள் உண்டு; வக்கீல் தொழில் மீது -இருக்கும் மதிப்பை இதற்கு மேலும் கெடுக்க வேண்டாம். நீங்கள் வாதாடி நல்ல judgement வாங்கி தந்த உங்கள் client-க்கு இது எத்தனை noble profession-என்பது தெரியும். சாதாரண மக்களுக்கு அது தெரியாது. இனி அரசியல் தூண்டுதல் காரணமாக இது போன்ற நீண்ட boycott போராட்டங்கள் வந்தால் அதில் கலந்து கொள்ளாமல் எதிர்ப்பை காட்ட ஒத்த மனம் உடையோர் முயலுங்கள்.. நன்றி….
Related Posts Plugin for WordPress, Blogger...