Tuesday, July 14, 2009

நாடோடிகள் விமர்சனம்


தமிழில் ஒரு வித்யாசமான கதை ...

நண்பர்கள் மூவர் சேர்ந்து தன் நண்பனை அவன் காதலி உடன் சேர்த்து வைக்கின்றனர். இதனால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய இழப்புகள். அந்த காதல் ஜோடி பத்து நாள் சேர்ந்து இருந்து விட்டு "ஒத்து போகலை" என பிரிகின்றனர். நண்பர்கள் அவர்களை என்ன செய்தனர் என்பதை செம பர பரப்பாக சொல்கிறது climax.

இடைவேளைக்கு முன் 15 நிமிடங்கள் சரியான விறு விறுப்பு. காதலர்களை பஸ்ஸில் ஏற்றி விட்டு, ஓடியவாறே தனது கழுத்து செயின், பாக்கெட்டில் உள்ள பணம் முழுதும் என ஹீரோ சசி குமார் எடுத்து தரும் காட்சியில் தியேட்டர் கை தட்டலில் அதிர்கிறது.

படத்தில் பல முகங்கள் முன் பின் பார்த்திராத நபர்கள். அனைவரும் இயல்பாக நடிப்பதால் நிஜம் போல் இருக்கிறது படம். குறிப்பாய் நண்பர்களில் ஒருவரின் அப்பாவாய் வரும் ex military man character- அருமை. "அப்பான்னா இப்படி இருக்கனும்டா" என பின் பக்க இளைஞர்கள் comment !!

வசனம் சில இடங்களில் நெஞ்சை தைக்கிறது. இன்றைய காதல்கள் எந்த லட்சணத்தில் உள்ளன என அப்பட்டமாய் சொல்கிறது படம்.

Hero சசி குமார் மிகை படுத்தல் இல்லாத நடிப்பில் கவர்கிறார். புது முக ஹீரோயினகள் OK.

ரெண்டு குத்து பாட்டு.. ஒரு melody song. ஒரு fast beat (often repeat). Background music சற்றே இரைச்சல். Still OK. இடை வேளைக்கு பின் படம் சற்றே நொண்டுகிறது. உடனடி தேவை கத்திரி.

மிக அதிக பாராட்டு சேர வேண்டியது, எழுதி இயக்கிய சமுத்திர கனிக்கு.

நாம் பொதுவாய் comedy, sentiment,acting, songs என எல்லாம் சேர்த்த மாதிரி படம் தான் எதிர் பாப்போம். அந்த மாதிரி ஒரு படம் நாடோடிகள்.

Dont miss it!!

2 comments:

  1. Write up is fine, but it is really killing to see age old masala cinema with new breed of actors.

    ReplyDelete
  2. கரெக்டுதான் keep it up, Mohan

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...