ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் புத்தகம் எதேச்சையாக தான் கிடைத்தது. வழக்கமாய் வீட்டிலிருக்கும் பழைய பேப்பரை கடையில் போடும்போது அங்கு இந்த புத்தகத்தை பார்த்து வாங்கினேன். ஐநூறு பக்கத்துக்கும் மேலிருக்கும் இந்த புத்தகத்திற்கு பழைய புத்தக கடைக்காரர் சொன்ன விலை 5 ரூபாய் !! ( நிஜ விலை: 90 )
பொதுவாய் எந்த புத்தகமும் எடுத்து ஒரே நாளில் வாசித்து முடிக்கிற என்னால் இந்த புத்தகம் படித்து முடிக்க சில வாரங்கள் ஆனது. காரணம் : 86 அத்தியாயங்கள் !விசாரணை என்கிற பெயரில் போலிஸ் கொடுமையெல்லாம் சொல்லும்போது தொடர்ந்து வாசிக்க முடியாமல் அயர்ச்சியாகி விடுகிறது. முதல் பகுதி மிக விரைவாய் படித்தாலும் இரண்டாம் பகுதியை ஜீரணிக்க சற்று சிரமமாய் தான் இருந்தது.
***
மிக சுருக்கமாய் ஆட்டோ சங்கர் கதை (அவர் புத்தகத்தில் சொன்னபடி) :
மனைவியை விடுத்து வேறொரு பெண்ணோடு ஓடிப்போன அப்பா. அதே போல் இன்னொரு ஆணுடன் ஓடிப்போன அம்மா. இளம்வயதில் தனி மரமாய் சங்கர். அவரின் பதினாலு வயதில் காதல் திருமணம் ! குழந்தை பிறந்தும் பசி, பட்டினி. பின் ரவுடித்தனம் செய்ய ஆரம்பித்து பணம் ஈட்ட துவங்குகிறார். போலிசே கள்ள சாராயம் காய்ச்ச சொல்ல, தொழில் அமோகமாய் நடக்கிறது. அடுத்து பிராத்தல் வேலை ! பல நடிகைகளை அரசியல் வாதிகளுக்கும், போலீசுக்கும் ஏற்பாடு செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இதில் அவர்கள் செக்சில் ஈடுபடும்போது ரகசியமாய் வீடியோ வேறு எடுக்கிறார்.
சங்கருக்கு சில சின்ன வீடுகள் உண்டு. அதில் ஒருவரை ஒரு சண்டையில் ஓங்கி அடிக்க, அந்த பெண் கீழே விழுந்து இறக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து அவரை தனக்கு சொந்தமான இடத்தில் தரையை தோண்டி புதைக்க, பின் இப்படி கொன்று புதைப்பது தொடர் கதையாகிறது.
ஆனால் பல கொலைகள் செய்தது தன்னுடன் இருந்த நண்பன் பாபு தான்; அது பற்றி தனக்கு தெரியாது என புத்தகத்தில் சொல்கிறார் சங்கர். ஒரு நிலையில் காணாமல் போன ஒருவரின் மனைவி கவர்னர் ஆட்சியில் தன் கணவர் காணும் என புகார் தர, வழக்கு சி. பீ சி. ஐ. டி வசம் சென்று, சங்கர் கைதாகிறார். அவர் ஆபிஸ்லிருந்து தோண்ட தோண்ட பல எலும்பு கூடுகள் கிடைக்க தமிழகம் அதிருகிறது
சங்கருக்கு தூக்கு தண்டனை கிடைக்கிறது. உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம், ஜனாதிபதி அனைவரும் சங்கரின் தூக்கினை உறுதி செய்ய, சங்கர் தூக்கில் இடப்படுகிறார்
****
நூலில் முதல் பகுதியில் ஐம்பது பக்கத்திற்கு இந்த தொடரை எழுதும் முன் பட்ட கஷ்டங்களை, சந்தித்த வழக்குகளை சொல்லி போகிறார் நக்கீரன் கோபால். ஒரு பத்திரிகை நடத்துவது எத்தனை சவாலானது என புரிகிறது.
சங்கர் தன் இளமை காலத்தில் துவங்கி, தான் எப்படி ரவுடி ஆனேன் என்பதை சொல்வது சினிமா பாணியில் உள்ளது. பசி கொடுமையில் பக்கத்தில் இருக்கும் கடையில் அரிசி சென்று கடனாய் கேட்க, அவரோ, அந்த வழியே வரும் போலீசிடம் சொல்லி "வம்பு வளர்க்கிறான்" என அடி வாங்கி தருகிறார். சிறிது நேரம் கழித்து வந்து அதே கடைக் காரரை புரட்டி போட்டு சங்கர் அடிக்க, அவர் எல்லா பொருளும் இலவசமாய் தந்து அனுப்ப, இப்படித்தான் தான் ரவுடி ஆனதாக சொல்கிறார் சங்கர்
****
சங்கர் வீடு கட்டி கிரகப்ரவேசம் செய்த போது, அதில் மிக அதிக அளவில் கலந்து கொண்டது பெரும் போலிஸ் அதிகாரிகளே. திருவான்மியூர் ஸ்டேஷனுக்கு தான் வாங்கி தந்த Fan -லேயே தான் தலை கீழாய் கட்டி தொங்க விடப்பட்டதாய் பின்னர் சொல்லிப்போகிறார் சங்கர்.
****
நூலின் மிக அதிர்ச்சிக்குரிய பகுதி: நடிகைகள் பற்றி சங்கர் எழுதியுள்ளது தான். தண்ணீர் தண்ணீர் நடிகை, அக்கா -தங்கை நடிகை என யார் யார் எப்படி நடந்து கொண்டனர் என விளாவாரியாய் சொல்கிறார். சில நேரம் டிஸ்கோ சாந்தி, விஜய சாந்தி, பிரமீளா என நேரடியே பெயரோடு வேறு எழுதுகிறார் !
முதலில் கொஞ்சம் கிளுகிளுப்பாய் இருந்தாலும் போகப்போக ஒரு பத்து அத்தியாயத்துக்கு எந்த நடிகை - யாரிடம் சென்றார், யாரை எப்படி வீடியோ எடுத்தேன் என்று மட்டுமே புத்தகம் செல்வது சற்று அலுப்பு தட்டி விடுகிறது
***
நூலை சங்கர் தான் எழுதினாரா அல்லது அவர் சொன்ன தகவல்கள்/ அவர் எழுதியதை நக்கீரனில் யாரும் திருத்தி எழுதினாரா என தெரியவில்லை. காரணம் எழுத்து - அதிகம் படிக்காத சங்கரின் நடை போல தெரிய வில்லை. வரிக்கு வரி ஏதாவது உவமானம் !!
புத்தகத்தில் உள்ள இந்த வரிகளை வாசியுங்கள்:
********
சம்பத் இறந்ததை உணர்ந்ததும் எலிக்குட்டியின் தலையில் ஏ. கே 47 தாக்கிய அதிர்ச்சி. அட்ரினலின் பயம் போய் தாக்க , உடல் முழுக்க உடனடி வியர்வை முத்துக்கள் ரிலீஸ்.
பாட்டில் சரிந்து ததும்ப துதும்ப அந்த நெருப்பு திரவத்தை டம்ப்ளரில் குவித்தான் பாபு.
********
மூன்று வருடமாய் ப்ளாக் எழுதும் நமக்கே இப்படி வரிகள் எழுத முடியாது. எப்படி இந்த நடை சங்கருக்கு சாத்தியமானது என்று புரியவில்லை.
சங்கர் புத்தகம் முழுதும் தன்னை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு காட்டவும் தவறவில்லை. சங்கரின் இந்த வரிகளை பாருங்கள்
" ஏரியாவை பொறுத்த வரை நான் தான் நீதிபதி. தவறுகளை தட்டி கேட்கும் காவல்காரன். ராணுவம், எம்பிலாயின்மென்ட் எக்ஸ்சேன்ஜ்; ஏழைகளின் நன்னம்பிக்கை முனை, சுருக்கமாக சொன்னால் அந்த பகுதியின் அரசாங்கமே நான் தான்".
இது ஒரு சாம்பிள். போலவே சங்கர் விபாசாரம் செய்யும் ஒரு பெண்ணின் மகளை தனியே வீடு எடுத்து தங்க வைத்து நீ விபச்சாரம் செய்யப் போய் விடாதே என மகள் போல் பாவித்ததாகவும், அவரையும் தனக்கெதிரே போலிஸ் சாட்சி சொல்ல வைத்தது என்றும் சொல்கிறார்.
பல நேரங்களில் பின்னே நடக்க இருப்பதை தெரிந்து, தான் சமயோசிதமாக நடந்ததாக தன்னை சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு காட்டுகிறார் சங்கர் !
நடுவே சிறையிலிருந்து குழுவாக எப்படி தப்பினார், பின் எப்படி மாட்டி கொண்டார் என்கிற விரிவான தகவல் சில அத்தியாயங்களுக்கு விரிகிறது !
நூல் முழுதும் " நான்" என்று ஒருமையில் சொன்னாலும், கடைசியில் அவர் தூக்கில் இடப்பட்டதை நக்கீரன் நிருபர் எழுதியதாக சொல்லி முடிக்கிறார்கள். பல அரசியல் வாதிகள், உயர் போலிஸ் அதிகாரிகள் பற்றிய ரகசியங்கள் வெளியே வரக்கூடாது என்று தான் சங்கர் அவசர அவசரமாய் தூக்கிலிடப்பட்டதாக புத்தகத்தில் சொல்லப்படுகிறது.
புத்தகத்தில் இருக்கும் விஷயங்களில் எந்த அளவு உண்மை, எந்த அளவு சங்கரின் புனைவு என்பது புரியவில்லை. ஆனால் இவையெல்லாம் உண்மை எனில் எவ்வளவு மோசமான அரசியல் வாதிகளையும் போலீசையும் நாம் கொண்டுள்ளோம் என நினைத்தால்.. குமட்டுகிறது !

அரசியல்-சினிமா- போலிஸ் இந்த மூன்று துறையின் மறுபக்கம் அறிய இந்த நூலை வாசியுங்கள் !
வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்
பக்கங்கள்:512
விலை : 90
அரசியல்-சினிமா- போலிஸ் இந்த மூன்று துறையின் மறுபக்கம் அறிய இந்த நூலை வாசியுங்கள் !
***
பெயர் : ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்
பக்கங்கள்:512
விலை : 90
சினிமாவில் சொல்லப் படுவதெல்லாம் மிகைப் படுத்தப்பட்டவை என்று நினைப்பதுண்டு. ஆனால் உண்மைகள் சில சமயங்களில் அதைவிட மோசமாக இருக்கிறது.ஆட்டோ சங்கர் அதற்கு ஒரு உதாரணம்
ReplyDeleteகரீட்டு தான் தல
Deleteமனம் பழுதானால் மானுடமே தடம் மாறும் என்பது இந்த ஆட்டோ சங்கர் கதைன் மூலம் உணர்த்தப்படுகிறது
ReplyDeleteஆமாங்க ஐயா நன்றி
Deleteசங்கர் ஒரு பிரபல அரசியல்வாதிக்கு நடிகைகளை அனுப்பியதாகவும் ஒரு தகவல் உண்டு!
ReplyDeleteஒன்னு இல்லீங்கோ; ஏகப்பட்டது; அரசியல் வாதிகளையும் பெயரோடு யார் யார்னு எழுதிருக்கார்
Deleteஅருமையான பகிர்வு... கண்டிப்பாக புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும்...நன்றி...
ReplyDeleteபடிச்சு பாருங்க ஸ்கூல் பையன் நன்றி
Deleteதாதாயிசம் வளர்வதற்கு, தாதாக்கள் மட்டும் காரணமல்ல என்பது சங்கரின் வாக்குமூலம் தெரிகிறது
ReplyDeleteசரியா சொன்னீங்க ஐயா நன்றி
Deleteஆட்டோ சங்கர் புத்தகத்தில் இவ்வளவு செய்திகள் இருக்கிறதா? வாங்கிப் படிக்கிறேன். ஆனால் எங்கு கிடைக்கும் என்றுதான் தெரியவில்லை.
ReplyDeleteநக்கீரன் பதிப்பகம் நண்பரே; அங்கு கிடைக்க கூடும்
Deleteஎனக்கு வாங்கி குடுக்க முடியுமா ஐயா
Delete90 ரூபாயில் வந்தது பழைய எடிஷன்.. இப்போது 200 ருபாய்
ReplyDeleteவிளம்பரத்துக்கு http://romeowrites.blogspot.com/2012/07/blog-post.html
நீங்கள் எழுதிய விமர்சனம் வாசித்தேன் அழகாய் எழுதிருக்கீங்க; இப்போ புக்கு விலை 200-ஆ?தகவலுக்கு நன்றி அருண்
Deleteஇனி பழைய பேப்பர்க் கடையைக் கண்டால் உள்ளே நுழையாமல் விடுவதில்லை!!
ReplyDeleteசார் பத்து தடவை சென்றால் ஒரு முறை தான் இப்படி புதையல் கிடைக்கும் முன்பெல்லாம் அடிக்கடி விசிட் அடிப்பேன் இப்போ வேறு பல சோர்சில் புக்ஸ் வந்துடுது அதனால் அங்கு அதிகம் விசிட் அடிப்பதில்லை
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசார் நீண்ட அருமையான பின்னூட்டம் போட்டு விட்டு எடுத்து விட்டீர்களே :((
Deleteஎதிரதாக்காக்கும் அறிவினார்க்கு இல்லை
Deleteஅதிர வருவதோர் நோய்.
சுப்பு தாத்தா.
மேலோட்டமாக தெரிந்துகொண்டாலும் இதுவே போதும் என்றிருக்கிறது. நல்ல அறிமுகம் மோகன் குமார். நன்றி. கொலை கொள்ளை கற்பழிப்பு விபச்சாரம் போன்றவைகளை மிக ஆழமாக அறிவதற்குக்காரணம் யார் யார் அதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்கிற ஆர்வம்தான்.. அதுவும் நடிகர், நடிகைகள் என்றால், மூன்று எழுத்து நான்கு எழுத்து என்று சொல்லி குழப்பினாலும் கண்டுபிடித்து விடுவார்கள்.. அநுபவம்தான்.
ReplyDeleteஸ்ரீவிஜி நன்றிங்க
Deleteஇதுல எவ்ளோ உண்மை.. எவ்ளோ பொய்னு தெரியல!! சங்கர் கூட இருந்தவங்க யாராவது சொல்லி எழுதி இருக்கலாம்...
ReplyDeleteஅரசியல்வாதிகள் போலீஸ் பத்தின விஷயம் படிக்கும் போது பிரஷர் எகிறிடும் போல இருக்கே சார்,,
//அரசியல்வாதிகள் போலீஸ் பத்தின விஷயம் படிக்கும் போது பிரஷர் எகிறிடும் போல இருக்கே சார்,,//
Deleteஆமாங்
நக்கீரன் பத்திரிக்கை எப்பவுமே அதிக கற்பனைகளை சேர்த்து வெளியிடுவதில் கில்லாடி.எல்லா பேட்டியும் அவர்கள் கூடவே வாழ்ந்து நிழல் போல் இருந்தாற்போல் பில்டப் கொடுக்கும் பத்திரிக்கை.தூக்கு மேடை வரை போய் அவன் கழுத்தில் முடிச்சு போட்டு விட்டு வந்தவர்கள் போல் இருக்கும் அவர்களின் படைப்பு.
ReplyDeleteஅடேங்கப்பா !!
Deleteஅருமை mr மோகன் சிறப்பான கருத்து
Deleteசில உண்மைகள் சில கற்பனைகளோடு வரும்போது சுவாரஸ்யமாகிவிடுகிறது! நக்கீரன் பதிப்பு என்று சொல்லும்போது யோசிக்க வேண்டியுள்ளது!
ReplyDeleteஆம் சுரேஷ் நன்றி
Deleteஅந்த புஸ்தகத்தில் இன்னும் நம்பமுடியாமல் இருப்பது தண்ணீர் தண்ணீர் நடிகை பற்றியும் காங்கிரஸில் இருந்த (காலமான) மூப்பான தலைவர் பற்றியதும்தான்... எந்தப் புற்றில் எந்தப் பாம்போ...
ReplyDeleteமூப்பானவரா? அவரை பற்றி வாசித்த நினைவில்லை (அந்த பகுதி தூக்க கலக்கத்தில் படித்திருப்பேனோ?)
Deleteசதாம் பற்றிய ஒரு புத்தகம் முன்பு படித்தேன். அது நினைவுக்கு வந்தது.
ReplyDeleteஅப்படியா நன்றி வெங்கட்
DeleteAs said by Arif. A
ReplyDelete"நக்கீரன் பத்திரிக்கை எப்பவுமே அதிக கற்பனைகளை சேர்த்து வெளியிடுவதில் கில்லாடி."
நன்றி வடிவேல்
Deleteபுத்தகம் வாங்கி வாசிக்க ஆற்வம் பற்றி கொண்டது.
ReplyDeleteஅருமையான நூல் விமர்சனம்
ReplyDeleteஇப்போது நான் வாங்கி படிக்க ஆரம்பித்துள்ளேன்
ReplyDeletepdf iruka?
ReplyDeleteநான் பெங்களுரில் தற்போது வசிக்கிறேன், இந்த புத்தகத்தை வெகு நாட்களாக தேடி வருகிறேன், இதை வாங்குவதற்கு வழி சொல்லுங்கள்.
ReplyDelete