Friday, April 16, 2010

வானவில்- இரு தார மணம் - யுவன் ஷங்கர் & ஹேடன்


சென்னை ஸ்பெஷல்சங்கர நேத்ராலயா 

சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லஇந்தியா முழுதும் தெரிந்த ஒரு நல்ல நிறுவனம் - சங்கர நேத்ராலயா கண் மருத்துவ மனைகண் தொந்தரவுகளுக்கும்ரெகுலர்   Check up-களுக்கும் ஒரு நம்பிக்கையான  மருத்துவ மனை இதுஇவர்கள் முக்கிய அலுவலகம் நுங்கம்பாக்கதிலும், கிளை ஆலந்தூர் -கத்திபாரா பாலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது. வெளி மாநிலங்களில் உள்ள பலர் ஆபரேஷன் எனும் போது   சங்கர நேத்ராலயா வந்து விடுகிறார்கள் நீங்கள் செல்லும் போது பார்த்தால்நோயாளிகளில் பலர் வெளி மாநில மக்கள் என்பதை உணரலாம்.
எனது குடும்ப   நண்பர் மனைவிக்கு ஒரு முக்கிய கண் ஆபரேஷன்  வேறு ஒரு மருத்துவ மனையில் தவறாக செய்து ரொம்ப complication ஆகி விட்டதுபின் சங்கர நேத்ராலயா வந்து மறுபடி ஆபரேஷன் செய்து கண் பார்வை மீண்டதுஇந்த அனுபவத்துக்கு பின் குடும்பத்தினர் யாருக்கும்  கண் check up எனில் சங்கர நேத்ராலயா செல்வது வழக்கமாகி விட்டது.

டிவி பக்கம் யுவனின் இசை நிகழ்ச்சி 

 கலைஞர் டிவியில் சித்திரை முதல் நாள் (!!)  சிறப்பு நிகழ்ச்சியாக வந்த  யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி (பார்த்த வரை) நன்றாக இருந்தது. 





முழுதும் பார்க்க முடியாமல் அலுவலகம் செல்ல கிளம்ப வேண்டியதாகி விட்டது! யுவன் நிறைய நல்ல பாடல்கள் தந்துள்ளார் என்பதை உணர முடிந்தது. அடிக்கடி விளம்பரம் போட்டு வெருப்பெற்றாமல் தொடர்ந்து பாட்டு போட்டதும் நிகழ்ச்சி ரசிக்க ஒரு காரணம்
.



வாரம் ஒரு சட்ட சொல் - பிகமி (Bigamy)

முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது  மறு மணம் செய்வது   பிகமி எனப்படும்.  கோர்ட் மூலம் டைவர்ஸ் ஆகாமல், பிரிந்து இருக்கும் நிலையில் மணம் செய்தாலும் பிகமி தான். குறிப்பிட்ட கணவன் அல்லது மனைவி எங்கு உள்ளார் என்பது ஏழு வருடங்கள் தெரியாத பட்சத்தில் மட்டும் டைவர்ஸ் ஆகாமல் வேறு ஒருவரை மணக்கலாம்இது Bigamy-க்கு ஒரு   exception. 

 பிகமிக்கு  "ஏழு வருடங்கள் வரை சிறை தண்டனை" என சட்டம் சொல்கிறது !! நிஜத்தில் பெண்கள் பலரும் கணவர்களுக்கு இத்தகைய தண்டனை வாங்கி தருவதில்லை !!

இந்தியாவில் திருமண சட்டங்கள் இந்துமுஸ்லீம்கிறித்துவர் ஆகியோருக்கு வெவ்வேறு என்பதறிக. முஸ்லீம் ஆண் நான்கு பெண்களை மணக்க சட்டம் அனுமதிக்கிறது!

அய்யாசாமி அப்டேட் 


அய்யாசாமி உப்புமா செய்ய கத்து கிட்டார்!! (கத்துக்கும் போது எத்தனை முறை திட்டு வாங்கினாருன்னு கேட்க கூடாது) ஒரு முறை வீட்டம்மா மேற்பார்வையிலும் மறுமுறை தனியாகவும் கடந்த பத்து நாளில்  2 முறை உப்புமா செஞ்சிட்டார்.. இது பத்தி ஐயா சாமிக்கு ரொம்ப பெருமை.. “எப்பவும் என்னை பத்தி பாவமாவே எழுதுரீயே இதை எழுது என்றார் பெருமை பொங்க.. எழுதிட்டேன் 

ஐ. பி.யல் கார்னர்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் நேற்று மோசமாக தோற்றனர். இன்னும் இருபது, முப்பது ரன் இருந்தால் ஜெயித்திருக்கலாம். HAYDEN-க்கு என்ன ஆச்சு? சுத்தமா     Out of form. (டில்லி உடன் ஒரு மேட்ச் மட்டுமே அடித்த நினைவு) 


பஞ்சாப் உடன் easy ஆக ஜெயிக்க வேண்டிய மேட்ச் தோற்றது still haunting Chennai. மீண்டும் அதே பஞ்சாபை நன்கு தோற்கடித்தால் மட்டுமே  Semi finals -ல் நுழைய முடியும்

கிட்டத்தட்ட கடைசி வாரம் வந்தும் இன்னும் செமி பைனல்ஸ் செல்லும் அணிகள் உறுதியாய் தெரியலை!! கடைசி வரை சுவாரஸ்யம்  & viewershipவேண்டும் என்பதால் மேட்ச் fixing இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது!!

 ஐ!! டியா  !!

ஒவ்வொருவரும் எத்தனை  Password-களுடன்  வாழ்கையை
 வாழ வேண்டியுள்ளது!! மெயில்களுக்கு னிவங்கி கணக்கிற்கு தனிஅலுவலகத்தில் வேறுஇதனை  தவிர OrkutFacebook , அடிக்கடி  செல்லும் இணைய தளங்கள் (உதாரணமா தமிழ் மணம்தமிழிஷ்).. இப்படி பல "Username" களும், "Password" களும்  வாரத்தில் சில முறையாவது  நினைவில் வைக்க வேண்டி உள்ளது. எப்படி தான இத்தனை விஷயங்க ளை  நினைவில் கொள்வதுமுழுக்க முழுக்க நமது ஞாபக சக்தி மட்டும் நம்பினால் கதைக்கு ஆகாது!! 

ஒரு  சின்ன ஐடியா: நீங்கள் உபயோகிக்கும் இந்த Username/ password   எல்லாம் ஒரு  எக்சல் (Excel) அல்லது வார்டு (Word ) பைலில் போட்டு வைத்து விடுங்கள்இந்த பைலுக்கு ரு பாஸ் வோர்டு வைத்து விடுங்கள். Password சந்தேகம் வரும் போது இதனை எடுத்து பார்க்கலாம். மற்றொரு  குட்டி  யோசனைஇந்த பைலில் கூட   எல்ல Password/ Username    அப்படியே போடணும் என இல்லை. சில நேரம் சில பாஸ்வோர்ட்களுக்கு, உங்களுக்கு மட்டும் புரிகிற மாதிரி  நிக் நேம் போல வைத்து கொண்டால் அதனை மட்டும் பைலில் போட்டு கொள்ளலாம்.  இப்படி செய்வதால் வெளி ஆட்கள் பார்க்க நேர்ந்தாலும் புரியாது.

வேறு யோசனை இருந்தால் பின்னூட்டத்தில் பகிருங்களேன்!!  

20 comments:

  1. உப்புமா செய்யறது அப்படி ஒண்ணும் சுலபம் இல்லை நண்பரே. கொஞ்சம் தவறினாலும் சொதப்பிடும்.

    ஹேய்டன் பற்றி ஒரு கொசுறு - முத்தையா முரளிதரன், பாலாஜி போன்றவர்கள் ஹேய்டனுக்கு வைத்துள்ள செல்லப் பெயர் - “நாமக்கல் ஆஞ்சனேயர்”!


    வெங்கட் நாகராஜ்
    புது தில்லி

    ReplyDelete
  2. எதுவும் குறையலை. நிறைவு :)

    ReplyDelete
  3. //இந்த பைலில் கூட எல்ல Password/ Username அப்படியே போடணும் என இல்லை. சில நேரம் சில பாஸ்வோர்ட்களுக்கு, உங்களுக்கு மட்டும் புரிகிற மாதிரி நிக் நேம் போல வைத்து கொண்டால் அதனை மட்டும் பைலில் போட்டு கொள்ளலாம்.//

    I do this already..

    Another Idea..
    password for gmail may be 'gmailDDMMYEARS' -DD-date eg 31, MM - month eg '08' YEAR - 2009. & this date be the date you set the current password. Also you have can write in your diary on that day saying 'Changed gmail password today' 'S' may be your choice of special character (which you like most / least ) of "! @ # $ % ^ & * ( )" etc..

    So, that makes you password different for different purposes, but follows unique method..


    //இந்தியாவில் திருமண சட்டங்கள் இந்து, முஸ்லீம், கிறித்துவர் ஆகியோருக்கு வெவ்வேறு என்பதறிக. முஸ்லீம் ஆண் நான்கு பெண்களை மணக்க சட்டம் அனுமதிக்கிறது!//

    Unfair Law. Violates 'Equality for All'

    //Bigamy// Is this appplicable to the characters in TV Serials also?

    ReplyDelete
  4. கத்திரி வெயிலிலும் வானவில் தவறாமல் காட்சியளிக்கிறது. :)

    எங்களுக்கு எல்லாம் பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஐ ஹாஸ்பிடல்தான். வாசன் ஹாஸ்பிடலும் விரைவில் (?) வருகிறது (ஆரம்பிச்சிட்டாங்களா இல்லையான்னு சரியா தெரியலை)

    கீப் இட் அப் அய்யாசாமி.

    ஐபிஎல் - மேட்ச் ஃபிக்ஸிங் தவிர வேறொன்றுமில்லை என்பதுதான் எனது எண்ணம். நடக்கும் கூத்துக்களை எல்லாம் பாக்கும் போது மிகவும் கேவலமாக போகப்போகிறது என்றுதான் நினைக்கிறேன். எல்லாம் பணம் செய்யும் வேலை

    ReplyDelete
  5. சங்கர நேத்ராலயா - ஓர் உன்னதமான பணியினை மேற்கொண்டுள்ளது. தகவல்களுக்கு நன்றி.

    அய்யாசாமி உப்புமா நன்கு செய்யக் கற்றுக் கொண்டதற்கு வாழ்த்துகள் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  6. //நிஜத்தில் பெண்கள் பலரும் கணவர்களுக்கு இத்தகைய தண்டனை வாங்கி தருவதில்லை //

    ஆனா, 'வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுமை' பேர்ல‌ பொய் கேஸ் போடுற‌தும் உண்மைதானே!


    வாழ்த்துக‌ள், எப்ப‌டியோ உப்புமா செய்ய‌ க‌த்துகிட்டீங்க‌ ;)

    I guess/hope Hayden will hit back when it matters most!....next match, semis & final...

    Password - இன்னொரு விஷ‌ய‌ம் Username & Passwordக‌ளை ஒருபோதும் மொபைலில் சேவ் ப‌ண்ணிவெக்க‌க்கூடாது. நாம‌ எங்கேயாவ‌து மொபைலை மிஸ் ப‌ண்ணோம்னா....ரொம்ப‌ க‌ஷ்ட‌ம்

    ReplyDelete
  7. நன்றி சித்ரா.
    *******
    கரக்ட்டு தான் வெங்கட்; உப்புமா செய்வது ஒரு கலை தான்; கத்துட்டுருக்கார் ஐயா சாமி.Hayden பற்றிய தகவலுக்கு நன்றி
    *******
    நன்றி அப்துல்லா; நீங்க சொன்னா சரி தான்
    *******
    ஐடியாகளுக்கு நன்றி மாதவன்; டிவி சீரியல் பிகமி .. ஹா ஹா .. அது இல்லாம அவங்க கதை பண்ண மாட்டங்க
    *******
    நன்றி வரதராஜலு; கிரிக்கட் பத்தி நீங்களே வெறுத்து போய் பேசுவது ஆச்சரியமா இருக்கு
    *******
    நன்றி ராகவன்; ஆம் சங்கர நேத்ராலயா பணி உன்னதமானது; சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  8. நல்ல பகிர்வுகளால் வானவில் ஜொலிக்கிறது. ஃபாஸ்வேர்ட் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளதைத் தான் கடந்த இரண்டாண்டுகளாக கடைபிடித்து வருகிறேன்.

    ReplyDelete
  9. வானவில் நல்லா இருக்கு. கொஞ்சம் alignment சரிபாருங்கள்.

    Bigamy பற்றிய ஒரு ஆங்கில நகைச்சுவைப் பழமொழி: Bigamy is having one wife too many. Monogamy is also the same :)

    தமிழில் இப்படி சொல்லலாமா: இருதாரம் என்பது ஒரு தாரம் கூடுதலாக இருப்பது. ஒருதாரமும் அப்படியே :)

    எனக்கு உப்புமா பிடிக்கும். அய்யாசாமி வீட்டுக்குச் சென்றால் அது கிடைக்குமா?

    அனுஜன்யா

    ReplyDelete
  10. அந்த பைலுக்கு பாஸ்வேர்டு மறந்து போச்சின்னா என்ன பண்றது ? :)))))

    ReplyDelete
  11. //சென்னை ஸ்பெஷல்//
    நல்ல தகவல், நன்றி.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. நன்றி ரகு; Password பற்றி நல்ல (புது) விஷயம் சொன்னிங்க
    *****
    சங்கர் ஹா ஹா .. நல்ல கேள்வி; வேறென்ன மறக்க முடியாத Password -ஆக வைக்கணும் :))
    *******
    *******
    நன்றி சரவண குமார் உங்களை சென்னையில் சந்திக்க முடியாதது வருத்தமே
    *******
    அனுஜன்யா நன்றி; அந்த quote மிக ரசித்தேன்
    *******
    அமைதி அப்பா நன்றி

    ReplyDelete
  14. /ஒரு சின்ன ஐடியா: நீங்கள் உபயோகிக்கும் இந்த Username/ password எல்லாம் ஒரு எக்சல் (Excel) அல்லது வார்டு (Word ) பைலில் போட்டு வைத்து விடுங்கள். இந்த பைலுக்கு ஒரு பாஸ் வோர்டு வைத்து விடுங்கள். Password சந்தேகம் வரும் போது இதனை எடுத்து பார்க்கலாம். மற்றொரு குட்டி யோசனை; இந்த பைலில் கூட எல்ல Password/ Username அப்படியே போடணும் என இல்லை. சில நேரம் சில பாஸ்வோர்ட்களுக்கு, உங்களுக்கு மட்டும் புரிகிற மாதிரி நிக் நேம் போல வைத்து கொண்டால் அதனை மட்டும் பைலில் போட்டு கொள்ளலாம். இப்படி செய்வதால் வெளி ஆட்கள் பார்க்க நேர்ந்தாலும் புரியாது.
    //


    இந்த பைலை எங்க வச்சிருக்கோம்னு மறந்திட்டம்னா..:)

    ReplyDelete
  15. வானவில் கலர்புல் தான் தலைவரே! :-)

    எல்லோரும் password -ய் அவங்க பேரின் அடிப்படையில் மாற்றி வச்சிருந்தா நினைவு இருக்கு. எல்லோரும் பழைய நண்ப/நண்பிகளின் பேரை வச்சிருப்பாங்க... அது ஏற்கனவே கணக்குலே குளறுபடி வரும்... அப்புறம் பேருல குழப்படி வரும்... அப்புறம் எப்படி எவ(ன்) பேரை எதுக்கு வச்சோம்னு தெரியும்?? :-))))

    ReplyDelete
  16. உப்புமா கிண்டி, கரண்டிய தூக்கினப்போ, பாத்திரமும் ஒட்டிகிட்டு வந்துச்சான்னு சொல்லவே இல்லையே தலைவரே..:))

    ReplyDelete
  17. Bigamy - புதிய சொல் உங்கள் மூலம்தான் கேள்வி படுகிறேன்.

    நன்றி. இது போல நிறைய வார்த்தைகளை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்

    :)

    ReplyDelete
  18. யுவன் நிகழ்ச்சி முழுவதும் ரசித்தோம்.எப்படி விளம்பரம் அடிக்கடி இடையூறு செய்யவில்லை என்பது மர்மம் தான்...

    ReplyDelete
  19. பாஸ்வேர்ட் ஐடியா:

    நீங்கள் என்ன பாஸ்வேர்ட் வைக்க போகிறீர்கள் என்பதை உங்கள் டாக்குமெண்டில் சேவ் செய்து கொள்ளுங்கள்..பின்னர் அந்த பாஸ்வேர்ட் எழுத்துக்களை கீபோர்டில் ரைட் ஷிப்ட் செய்து ஸ்ட்ராங் பாஸ்வேர்டாக மாற்றி விடலாம்..சோ அந்த பைலை மற்றவர்கள் பார்த்தால் கூட பிரச்சனையில்லை..

    உ.தா: password u saved in ur document : mohankumar

    but the password u set actually : ,pjsmli,st

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...