வேலை பளு மற்றும் உடல் நலம் காரணமாய் (தற்போது முழுவதும் நலம்; நண்பர்கள் அன்பிற்கு நன்றி ) தாமதமாய் எழுதுகிறேன்...
*****
1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
மோகன் குமார்.
2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
ஆம். இயற் பெயரே மோகன் குமார் தான். வீடு திரும்பல் மோகன் குமார் என ப்ளாகுகளில் பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள். ப்ளாக் பெயருடன் சேர்ந்து அறிய படுவது மகிழ்வாய் தான் உள்ளது.
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
வலை பதிவுகளை எதேச்சையாக அறிந்து கொண்டு நெடு நாளாக வாசித்து வந்தேன். பின் ஒரு நாள் ஏதேதோ க்ளிக் செய்து ப்ளாக் துவங்கும் இடம் வந்து விட்டது. ப்ளாகிற்கு பெயர் கேட்க, நான் தந்த பெயர்கள் அனைத்தும் ஏற்கனவே உள்ளதாக அறிந்தேன். பின் மறைந்த நண்பன் லட்சுமணனின் கவிதை புத்தக தலைப்பான வீடு திரும்பல் என்ற பெயர் தர, அது இருப்பது தெரிந்து அதே பெயர் வைத்தேன்.
4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?
துவக்கத்தில் திரட்டிகள் இருப்பது தெரியாது. பதிவு எழுதி விட்டு என் நண்பர்களுக்கு மெயில் அனுப்புவேன். அவர்கள் வாசித்து விட்டு மெயில் அல்லது தொலை பேசியில் கருத்து சொல்லி கொண்டிருந்தனர். திரு. ரேகா ராகவன் மூலம் தான் திரட்டிகள் தெரிந்து தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் இணைத்தேன். அதன் பின் தான் நிறைய பேர் வாசிக்கவும் பின்னூட்டம் இடவும் ஆரம்பித்தனர். ரேகா ராகவன் பின் ப்ளாக் வடிவமைப்பு குறித்து பல உபயோகமான தகவல் தந்தார். ரேகா ராகவன் சாருக்கு இந்த நேரத்தில் மீண்டும் நன்றி சொல்ல வேண்டும் !! நன்றி சார் !! போலவே நண்பர் பெஸ்கி (ஏதோ டாட் காம்) இந்த வலை பூ வடிவமைப்பிற்கு பெரிதும் உதவினார்.
5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஓரளவிற்கு பகிர்வது உண்டு. சில நேரங்களில் நமது வடிகாலாக, ஆறுதலாக சில விஷயங்களை பகிர்வது உள்ளது. ஆனால் நம்மை பற்றி முழுவதுமாய் பகிர கூடாது என நினைக்கிறேன். ஒரு அலுவலகமாகட்டும், ஒரு தெருவாகட்டும், சமூகமாகட்டும் ..அதில் 90 நல்லவர்கள் இருந்தால், பத்து மோசமானவர்கள் இருப்பார்கள். அதே போல் தான் பதிவுலகமும். அந்த பத்து பேர் நம்மை குறித்த தனிப்பட்ட தகவல்களை மோசமாக உபயோகம் செய்ய வாய்ப்பு உண்டு. எனவே சற்று எச்சரிக்கை உணர்வு அவசியமே.
6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிவராய் அல்லது எழுத்தாளராய் இருந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியாது. அப்படி சம்பாதித்தவர்கள் மிக குறைவே. பொழுது போக்கிற்காக தான் எழுதுகிறேன். அளவோடு இருந்தால் இது ஒரு நல்ல பொழுது போக்கு என நிச்சயம் சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் recognition-க்காக ஏங்குகிறான். அந்த recognition ப்ளாகில் கிடைக்க பெறுகிறது. இது மனிதனின் ஈகோவை ஓரளவு திருப்தி படுத்துகிறது.
7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?
இரண்டு வலை பதிவு. வீடு திரும்பல் தவிர ஆரம்பத்தில் ஆங்கிலத்திலும் ஒரு வலை பதிவு துவங்கி எழுதி வந்தேன். தற்சமயம் அதில் அதிகம் எழுதுவதில்லை. தமிழில் எழுதுகிற சுகம் தனி. நாம் தாய் மொழியில் தான் சிந்திக்கிறோம். அவரவருக்கும் தாய் மொழியில் எழுதுவது இயல்பாய் இருக்கும்.
8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபம் என்ற பகுதியை சாய்ஸில் விடுகிறேன். பொறாமை.... தொடர்ந்து எழுதும், நிறைய பின்னூட்டம் வாங்கும் சிலர் மீது லேசாக வரும். :))
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?
அலுவலகத்தில் உடன் பணி புரிந்த பிரகாஷ் என்ற நண்பர் " உங்க ப்ளாக் விகடன் படிக்கிற மாதிரி இருக்கு. பல விஷயம் கலந்து எழுதுறீங்க" என்றார். ரொம்ப மகிழ்வாய் இருந்தது. துவக்கம் முதலே வாசித்து வரும் என் நண்பன் தேவ குமார் தில்லியில் இருந்தாலும் போன் செய்து பாராட்டுவான். விவாதிப்பான்.
மேலும் தொடர்ந்து ஊக்கம் தரும் அமைதி அப்பா, ரகு, வெங்கட் நாக ராஜ், சித்ரா, ராம லக்ஷ்மி, ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி ஐயா, மாதவன், பெயர் சொல்ல, ஷங்கர், ரேகா ராகவன் போன்ற அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
10 . கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் பற்றி கூறுங்கள்
பதிவுகள் மூலம் ஏற்கனவே நிறைய தெரியும். இனியும் அறிவீர்கள்...
இதனை தொடர அழைக்க விரும்புவது:
அமைதி அப்பா
வெற்றி
ஜெட் லி
அதி பிரதாபன்
நல்ல பதில்கள்
ReplyDeleteமாட்டி விட்டுடீங்களே அண்ணே...
ReplyDelete"என்னை பற்றி உண்மையாக யாரேனும் ஒரு வரி சொன்னால் அதை வைத்து ஒரு வாரம் உயிர் வாழ்வேன்" - மார்க் ட்வைன். அந்த ஒரு வரி சொல்லிட்டு போங்க!!
ReplyDelete//
அருமை! மோகன் ஜி :))
Straight forward answers. Good.
ReplyDeleteThanks for fulfilled my request.
மிக யதார்த்தமான பதில்கள் சார்.
ReplyDeleteதங்களுடைய அன்புக்கு நன்றி.
அருமை. மார்க் ட்வைன் வரிகளும் ரொம்ப இனிமை.
ReplyDeleteநன்றி மோகன்குமார்.
-----------
ஜெட்லி: சும்மா தெகிரியமா எழுதுங்க. நாங்க இருக்கோம் !!! :))
ஆமா.. பேர் ஜெட்லீன்னு வச்சிட்டு இவ்வளவுபயப்படுவியா..?
ReplyDeleteநல்ல பதிவு..
'சொந்த விஷயங்கள் பகிர்வு' குறித்தான உங்கள் கருத்தோடு முழுதும் ஒத்துப்போகிறேன்
ReplyDeleteநாளைக்கு இந்த தொடரைத் தொடர உங்களை அழைக்கலாம்னு இருந்தேன்...வ.போச்சே :(
அருமை மோகன்
ReplyDeleteஎல்லா கேள்விகளுக்கும் நல்ல பதில்கள். பகிர்வுக்கு நன்றி மோகன்.
ReplyDeleteவெங்கட்.
நன்றி கலா நேசன்.
ReplyDelete***
ஜெட்லி: எஞ்சாய்!!
***
ஷங்கர்: நன்றிங்கோ
****
கேபிள்: நன்றி
***
விதூஷ் & மாதவன்: அழைத்தமைக்கும் கருத்திற்கும் நன்றி
***
நன்றி அமைதி அப்பா
****
ரகு: நன்றி
****
ராஜ்: நன்றி
****
ராதாக்ருஷ்ணன் சார்: நன்றி
***
வெங்கட் நாகராஜ்: நன்றி
பதில்கள் நன்று. அடிக்கடி எழுதுங்க..
ReplyDeleteஉங்களைப் பற்றி நீங்கள் சொன்ன விதம் சிறப்பு.
ReplyDeleteநல்ல பதில்கள் மோகன்.
ReplyDeleteஉடம்பையும் கொஞ்சம் பார்த்துக்கங்க.
அருமை மோஹன்!!
ReplyDeleteஅன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.