Wednesday, August 21, 2013

ஏலகிரி - சென்னைக்கருகே ஒரு ஹில் ஸ்டேஷன்

லகிரி செல்வதாக சொன்ன போதே பலரும் சொன்ன இரு விஷயம்:

i) கிளைமேட்  ஒன்றும் ரொம்ப கூல் ஆக இருக்காது.
ii) பார்க்க நிறைய இடங்கள் கிடையாது.

இரண்டும் உண்மை தான். ஆனால் நாங்கள் சென்ற அக்டோபர் மாதம் கிளைமேட் ரொம்ப கூல் ஆகவே இருந்தது.

எனக்கு ஏலகிரி பயணம்  பிடிக்கவே செய்தது. சொல்ல போனால் மனிதர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாய் வைத்து கொள்வது ஓரளவு அவர்கள் கையிலேயே உள்ளது. இல்லையா ?

ஏலகிரி மிக சிறிய மலை. 20 to 30 நிமிடங்களில் மலை ஏறி விடலாம். சின்ன பசங்களை அழைத்து செல்லும் போது இது மிக வசதியாய் உள்ளது. நாங்கள் மலை ஏறிய போதும், இறங்கும் போதும் ஒருவர் கூட vomit செய்யலை.

மொத்தம் 13 கொண்டை ஊசி வளைவுகள் . ஒவ்வொன்றுக்கும் பாரதி வளைவு, பாரதி தாசன் வளைவு, வள்ளுவர் வளைவு என தமிழ் புலவர்கள் பெயர் வைத்துள்ளனர். நாங்கள் இந்த பெயர்களை படிப்பதும், அவற்றை எல்லாம் நினைவில் வைத்து, கடைசியில் அனைத்து பெயரையும் சொல்ல வேண்டும் என்றும் விளையாடியவரே சென்றோம். மேலும் ஒவ்வொரு வளைவிலும் அந்த வளைவின் எண்ணை சொல்லி ஒரு பெரும் குரல் எழுப்புவோம். இதனாலும் மலை ஏறுவது தெரியவே இல்லை.



ஏலகிரியில் பார்ப்பதற்கு அதிக இடங்கள் இல்லைதான். இதனாலேயே அங்கு உள்ள ஹோட்டல்கள் சற்று பெரிதாகவும் அங்கேயே விளையாட kits உடனும் உள்ளன. ஒரு பார்க் மற்றும் ஏரி ( படகு சவாரியுடன் ) ....  இவை மட்டுமே பார்க்க வேண்டிய இடங்கள். மற்ற படி climate enjoy செய்தவாறே அந்த சிறிய ஊரை சுற்றி வரலாம். நாங்கள் சென்ற போது வெயில் தெரியவே இல்லை. Open AC-ல் இருப்பது போல் இருந்தது.

ஏலகிரியில் மொத்தம் 43 ஹோட்டல்கள் உள்ளனவாம். அவை அனைத்தும் பொதுவாக வெள்ளி, சனி, ஞாயிறுகளில் நிரம்பி விடுமாம். சென்னைக்கு மிக அருகே உள்ளதால் சென்னையில் இருந்து ரெகுலர் ஆக வார இறுதியில்  வருவோர் உள்ளனர் போலும். வார இறுதியில் செல்வதானால் முன்பே ரூம் புக் செய்து விட்டு போக வேண்டும். இல்லா விடல் உருப்படி ஆன ஹோட்டல் கிடைக்காது.

ஏலகிரிக்கு சென்னையில் காரில் சென்றால் 3 - 4 மணி நேரத்தில்  சென்று விடலாம். ரயிலில் சென்றால்  ஜோலார்பேட்டையில் இறங்க வேண்டும். அங்கிருந்து காரில் செல்ல 400 ருபாய் வாங்குகின்றனர். பஸ்-ம் ஒரு மணிக்கு ஒன்று உள்ளது.

நாங்கள் வேலூர் தங்க கோயில் பார்த்து விட்டு அப்படியே இங்கு சென்றோம். ஜோலார்பேட்டையில் இருந்து 10 கிலோ மீடர் தொலைவில் ஒரு நல்ல நீர் வீழ்ச்சி உள்ளதாக கூறினர். நாங்கள் செல்ல வில்லை.




நாங்கள் "Nigress" என்ற ஹோட்டலில் தங்கினோம். இணையத்தில் பார்த்து புக் செய்தது தான். ஒரு நாள் வாடகை ருபாய் ஆயிரம். இந்த ஹோட்டல் ஓனர் இடம் கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்தேன். இவர் ஒரு tribal. வயது 35 போல் தான் இருக்கும். அதிகம் படிக்கலையாம். அப்பா என்ன செய்தார் என்றால் விவசாயம் தான் என்றார்! இந்த பின்னணியில் இருந்து வந்து இப்படி ஒரு ஹோட்டல் நடத்துவது குறித்து ஆச்சரியம் தான். ஹோட்டலுக்கு வருவோரை  நன்கு உபசரிக்கிறார். சாப்பாடு நன்கு உள்ளது. அங்கு தங்கிய சிலரிடம் பேசி கொண்டு இருந்த போது சில ஹோட்டல்களில் சாப்பாடு ஒரு நபருக்கு தினம் ருபாய் 150 அல்லது 200 என்று வாங்குவர். Choices -ம் குறைவாக இருக்கும்; ஆனால் இங்கு நாம் வேண்டியது கேட்டால் செய்து விடுவார்கள்; அதனாலேயே இங்கு எப்போதும் வருவதாக சொன்னார்கள்.

எனக்கு அங்கு மிக பிடித்தது தேநீர் தான். பாக்கெட் பால் இல்லாமல் நிஜமான மாட்டு பாலில் போடுகிறார்கள். செம திக் ஆக சூப்பர் ஆக இருந்தது.
*********
ஏலகிரி பூங்கா  ஓரளவு நன்றாகவே உள்ளது. மாலை பவுன்டைன் மியூசிக்கல் ஷோ  உள்ளது. நாங்கள் அதனை பார்க்க வில்லை.



பெரும்பாலான நேரம் ஹோட்டலில் ஓபன்-ல் விளையாடிக்கொண்டு இருந்தோம். Shuttle, Volley ball, இப்படி. (ஒருவருக்கும் ஒரு கேமும் உருப்படி ஆக தெரியாது). இருந்தாலும் ஜாலிக்காகவே  விளையாடினோம்.

இரவு நாங்கள் கேட்டு கொண்டதால் campfire -க்கு ஏற்பாடு செய்தனர். நாங்கள் மிக சிறிய குழு. பசங்க கொஞ்ச நேரம் campfire அருகே ஆடிட்டு இருந்தாங்க. மற்றொரு அறையில் தங்கிய பெரிய family குரூப் வந்து, campfire அருகே பாட்டு போட்டு, அனைவரும் டான்ஸ் ஆடி செமையாக என்ஜாய் செய்தனர்.

இவர்களுடன் பேசிய போது ஆண்கள் அனைவரும் வாக்கிங் மூலம் நண்பர்கள் ஆனவர்கள் என்றும் பின் குடும்ப நண்பர்கள் ஆக அனைவரும் பழகுவதும் தெரிந்தது. வருடத்துக்கு ஒரு ஊர் என பல ஊர்கள் சுற்றி பார்க்கின்றனர். வெளி நாடு கூட ஒரு முறை சென்று வந்தனராம். வாழ்க்கையை இப்படி தான் சார் என்ஜாய் பண்ணனும்!

18 comments:

  1. Anonymous2:51:00 PM

    நன்றி மோகன் குமார்

    அன்புடன்
    செந்தழல் ரவி

    ReplyDelete
  2. Anonymous4:03:00 PM

    Yr article on yelagiri was very fine and I was not interested in going through the film review. as of now.

    Of course, I shall read it later.

    ReplyDelete
  3. //ஜோலார்பேட்டையில் இருந்து 10 கிலோ மீடர் தொலைவில் ஒரு நல்ல நீர் வீழ்ச்சி உள்ளதாக கூறினர். நாங்கள் செல்ல வில்லை.//

    நீர்வீழ்ச்சியின் பெயர் ஜலகம்பாறை. பக்கத்தில் ஒரு முருகன் கோவில் கூட இருக்கும்.

    எங்க ஊர் பக்கம் வந்திருக்கீங்க. இறங்கியதும் மண்ணை தொட்டு கும்பிட்டீங்களா? ;)

    ReplyDelete
  4. வணக்கம் செந்தழல் ரவி.. வருகைக்கு நன்றி. தங்கள் blog நன்றாக உள்ளது. அப்பப்போ வந்து என்னை மாதிரி புது bloggers ஐ encourage செய்யுங்க.

    வாங்க சீனு. உங்க ஊர் பற்றி என்றதும் குஷி ஆகிடீங்களா? யாருக்கும் இது இருக்கும் தானே. அடிக்கடி வாங்க. நன்றி.

    ReplyDelete
  5. மோகன் குமார்....

    நான் சென்னையில் இருந்த போது, ஒரு வீக் என்ட் ஆஃபீஸ்ல எல்லாரும் சேர்ந்து "ஏலகிரி" போனோம்... அப்போ போட்டிங் நிறுத்தி வைத்திருந்தார்கள்... கொஞ்சம் ஏமாற்றமா இருந்தது...

    இருந்தாலும், அனுபவிக்கத்தக்க சூழல் என்பதை மறுப்பதற்கில்லை...

    ReplyDelete
  6. நான் ஏலகிரியில் தான் வசிக்கிறேன்.. ரொம்ப நல்லா எழுதியிருகிங்க ...

    ReplyDelete
  7. நன்றி கோபி.. படித்தமைக்கும், பின்னூடத்திற்கும்..

    வாருங்கள் லோக நாதன். வருகைக்கு நன்றி. உங்க ஊர் நம்ம ஊர் பக்கம் இருப்பதால் அடிக்கடி வர வாய்ப்பு உண்டு..

    ReplyDelete
  8. நன்றாக உள்ளது உங்கள் பயணகட்டுரை

    ReplyDelete
  9. Anonymous5:46:00 AM

    Hi MohanKumar,

    It was a good artice. I have never been to Nilgiris and I would love to visit there.

    Nanri,
    Velmurugan

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. // மனிதர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாய் வைத்து கொள்வது ஓரளவு அவர்கள் கையிலேயே உள்ளது... // சரி தான்...

    ReplyDelete
  12. வாழ்க்கையை இப்படி தான் சார் என்ஜாய் பண்ணனும்!
    >>
    சரி, நல்லாவே என்ஜாய் பண்ணுங்க சகோ!

    ReplyDelete
  13. சென்னைக்குப் பக்கத்தில அதுவும் 3-4 மணி தூரத்தில இப்படி ஒரு இடமா? சென்னை வாசிகளே சொன்னதில்லையே. இந்த எரியும் அங்கு தானிருக்கிறதா? ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்குமா? அடுத்த முறை இங்கு போக வேண்டும்.

    ReplyDelete
  14. நீங்கள் முதலில் சொன்ன இரண்டு காரணங்களால் தான் அங்கே போக ஆசையே படலை.பதிவை படித்ததும் போலாம்னு ஐடியா வந்துடுச்சு.

    ReplyDelete
  15. அன்பின் மோகன் குமார் - அருமையான பயணக் கட்டுரை - மற்றவர்களுக்கு உதவியாக் இருக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  16. மோகன் அங்கு காக்கைகள் இருப்பதில்லை மேலும் வேப்பமரமும் ஏலகிரி மலைமேல் இல்லை என்பதும் உண்மையே.கடந்த மாதம் நான் எனது காரில் சென்று வந்தபோது கிடைத்த தகவல் நானும் இரண்டுநாள் தங்கிப் பார்த்தேன்.பரவாயில்லை

    ReplyDelete
  17. பின்னூட்டமிட்ட அணைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றி !

    ReplyDelete
  18. Anonymous12:01:00 AM

    ஏலகிரி போலாமா வேண்டாமானு யோசிச்சுட்டு ஈருந்தஏன்.very timely review ...Thanks...How to type in tamil without mistake?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...