Monday, June 25, 2012

சகுனி : வெற்றி சொல்லும் பாடம்

குனி படம் வெளியாகி அநேகமாய் அனைவரிடமும் திட்டு வாங்கியுள்ளது. நான் இன்னும் படம் பார்க்கலை. எனவே விமர்சனத்துக்குள் போகவில்லை.

ஆனால் ஒரு சின்ன கேல்குலேஷன் செய்து பார்த்துவிட்டு அரண்டு போய் விட்டேன். அதனை உங்களுடன் பகிர்கிறேன்

முதல் 3 நாள் படம் பார்த்தவர்களுக்கு தான் இந்த கும்பிடு ! 
*********
சகுனி 1154 தியேட்டரில் வெளியானதாக சொல்கிறார்கள். படம் வெளியாகும் முன், படம் எப்படி இருக்கும் என தெரியாமல் பெரும்பாலான திரை அரங்குகள் பலரும் அட்வான்ஸ் புக்கிங் செய்து,  இந்த மூன்று நாளும் கிட்ட தட்ட படம் ஹவுஸ் புல் தான். இப்படி மூன்று நாளில் மட்டும் எவ்வளவு பணம் கலக்ட் ஆகும் என நினைக்கிறீர்கள்? வாருங்கள் கணக்கிடுவோம்

வெளியானது : 1154 தியேட்டர்கள்

வெள்ளி, சனி, ஞாயிறு முதல் மூன்று நாள் - ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் = 4 X 3 = 12 காட்சிகள்

ஒரு தியேட்டரில் சீட் Capacity அவரேஜ் ஆக ஐநூறு என எடுத்து கொள்வோம் (சில தியேட்டரில் அதிகம் இருக்கும். சில குறைவு ; ஐநூறுக்கும் குறைவாக இருக்கும் மல்டிபிளக்ஸ்கள் நான்கு காட்சிகளுடன் நிறுத்த மாட்டார்கள்; மாயா ஜால் போன்ற மல்டி பிளக்க்சில் ஒரு நாளைக்கு பத்து ஷோ நடக்கும் )

ஒரு டிக்கெட் விலை தோராயமாக நூறு ரூபாய்

இப்போது கணக்கிடுவோம் :

1154 X 12 (காட்சிகள் ) X 500 ( ஒரு ஷோ சீட் Capacity) X 100 (டிக்கெட் விலை) = 69,24,00,000

69 கோடிக்கு மேல் வசூல் என காட்டுகிறது !

சில தியேட்டரில் முழுக்க Full ஆகலை அல்லது சீட்டிங் குறைவு என்பதால், சீட்டிங் அளவு - 300 என எடுத்து கொண்டால்

1154 X 12 (காட்சிகள் ) X 300 ( ஒரு ஷோ சீட் fill ஆனது ) X 100 (டிக்கெட் விலை) = 41,54,00,000

41 கோடிக்கு மேல் வசூல் என காட்டுகிறது !

டிக்கெட் விலை ரூ. 70 என்றால் கூட: 

ஐநூறு பேர் சீட்டிங் எனில் 41 கோடியும், 
300 பேர் சீட்டிங் எனில் 30 கோடியும் 

வசூல் ஆகியிருக்கும் !  (நன்றி : Microsoft Excel)
******
சகுனி படத்தின் பட்ஜெட் 25 கோடி என விக்கி பீடியா இங்கு சொல்கிறது. இந்த  25 கோடியும் அதற்கு மேல் லாபத்தையும் முதல் மூன்று நாளில் எடுத்து விடுகிறார்கள் !

ஆக இப்போது சினிமா காரர்கள் செய்வது மிக சிம்பிள் கால்குலேஷன் தான்.

1. ரஜினி, கமல், விஜய், அஜீத், சூரியா, கார்த்தி போன்ற பெரிய நடிகர்கள் வைத்து படம் எடுப்பது. 

2. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டரில் ரிலீஸ் செய்வது. 

3. படம் வெளியாகும் முன்பும் பின் முதல் மூன்று நாளும் நிறைய விளம்பரம் செய்து மக்களை தியேட்டருக்கு வரவழைப்பது. 

4. படத்தின் பெரும் அளவு  செலவையும் (Budget) முடிந்தால் சற்று லாபமும்  முதல் மூன்று நாளில் பார்த்து விடுவது. அப்புறம் ஓடினால் என்ன, ஓடா விட்டால் என்ன? 

எனது கால்குலேஷனில் ஏதேனும் அடிப்படையான தவறு இருந்தால், கேபிள், ஜாக்கி, உண்மை தமிழன் போன்ற அனுபவஸ்தர்கள் சொல்லலாம். திருத்தி கொள்கிறேன்

எது எப்படி இருப்பினும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டரில் ரிலீஸ் செய்து, முதல் மூன்று நாள் ஒரளவு புல் ஆக ஓடிவிட்டால் லாபம் பார்த்து விடலாம் என்கிற அளவில் தான் இருக்கிறது தமிழ் சினிமா !

இது சாதாரண ரசிகனாக எனக்கு சொல்லும் செய்தி ஒன்று தான்: முதல் மூன்று நாள் என இவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து, உடனே தியேட்டருக்கு போக கூடாது ! முதல் நாள் விமர்சனம் எழுதும் துடிப்புள்ள நம் நண்பர்கள் வேண்டுமானால் நம் சார்பில் முதல் நாள் செல்லட்டும். நாம் ரிசல்ட் தெரிந்த பின் போகலாம்.

"முதல் மூன்று நாள் " சினிமா காரர்கள் அடிக்கும் இந்த மொட்டையிலிருந்து தப்பி கொள்ளுங்கள் மக்களே !

60 comments:

  1. ithukuthaan anne, theater pakkam porathillai. evano sambathikka namma kaasa en waste pannanum

    ReplyDelete
  2. Anonymous8:25:00 AM

    மிக எளிமையாக இவர்கள் அடிக்கும் கொள்ளையை விளக்கியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மோகன்,

    இந்த 3 நாள் ஓபனிங் வைத்து தான் எந்த படத்தின் முதலிட்டையும் பெருமளவு எடுப்பார்கள். அப்படி இருந்தும் பல படங்கள் நஷ்டம் என சொல்லக்காரணம் யோசித்தீர்களா?

    படத்தின் பட்ஜெட் விலைக்கு விற்கமாட்டார்கள்.

    25 கோடி பட்ஜெட் படம் 36 கோடிக்கு மொத்தமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    36 கோடி எடுத்தால் விநியோகஸ்தருக்கு போட்டக்காசு வருமா ?என்றால் இல்லை.

    மொத்த வசூலில் 40% சதவீதம் திரையிட ஆகும் செலவு.

    அப்படி எனில் 36 கோடியை எடுக்க எவ்வளவு வசூல் ஆக வேண்டும்,

    60%=36 கோடி,

    100%= 36/60*100
    =60 கோடி

    60 கோடி வசூல் ஆனால் மட்டுமே வியோகஸ்தருக்கு வாங்க செலவிட்ட 36 கோடி கிடைக்கும். அதன் பின்னரே லாபம்.

    இப்போது லாபமா ,நஷ்டமா கணக்கு செய்து பாருங்கள்.

    இதனால் தான் தயாரிப்பாளரிடம் ,நஷ்ட ஈடு கேட்டு போகிறார்கள்.

    முதல் ஒரு வாரக்கலெக்‌ஷன் போட்டக்காசை எடுக்கவில்லை எனில் எவ்வளவு துண்டு விழுதோ அதை போய் கேட்பார்கள்.

    3 படம் ஏக எதிர்ப்பார்ப்பில் வெளிவந்தும் 3 நாளுக்கு அப்புறம் கலெக்‌ஷன் இறங்கிடுச்சு.எனவே தான் ரிடர்ன்ட் கேட்டார்கள்.

    அப்படி இருந்தும் பெரிய ஹீரோக்களை தேடிப்போக காரணம் ஓபனிங்க் கலெக்‌ஷனில் பெருமளவு எடுத்துவிடலாம், மிச்சத்தை அப்புறம் பார்த்துக்கலாம் என்பதே.

    தயாரிப்பாளருக்கு நஷ்டம் இல்லை, அவர் பணத்தை திருப்பிக்கொடுக்காத வரையில்.மேலும் டப்பிங் ரைட்ஸ்,டி.வி ரைட்ஸ், ஓவர்சீஸ் ரைட்ஸ் என காசு வரும், எல்லாம் மார்கெட் உள்ள ஹீரோ இருந்தால் மட்டுமே.அதனாலே பெரிய ஹீரோ சம்பளம் ஏறிக்கிட்டே போகுது.

    ReplyDelete
  4. தயாரிப்பாளருக்கு லாபமான தொழிலாய் தெரிகிறது..

    ReplyDelete
  5. இதையே தான் ஹாலிவுடிலும் செய்கிறார்கள். முதல் வீகெண்டில் 4000 திரை அரங்குகளில் வெளியிடுகிறார்கள். இதுவும் கொஞ்ச நாள் நடக்கும். எத்தனை நாட்கள் இப்படி ஓடும்? சகுனியின் சொதப்பலால் கார்த்தியின் அடுத்த படத்திற்கு இவ்வளவு பெரிய ஓபனிங் இருக்காது. பேராசை பிடித்த தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் / தியேட்டர் அதிபர்கள் மேலும் மேலும் பணத்தை இழப்பார்கள்.

    தமிழ் திரை உலகின் எதிர்காலம் அவ்வளவு உசிதமாக இல்லை!

    ReplyDelete
  6. எளிமையாக அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள்.!

    ReplyDelete
  7. // (நன்றி : Microsoft Excel) //

    MS-office -- காசு கொடுத்து தான வாங்கினீங்க..
    அப்புறம் எது இந்த ஃபார்மாலிடீஸ்..

    ReplyDelete
  8. உங்க கணக்கு சரி! முதல் மூன்று நாளில் முதலீட்டை எடுத்து விடுகிறார்கள்...

    ReplyDelete
  9. வவ்வால்
    //////////////////
    அண்ணே! மொத்த வசூலில் 40% திரையிட ஆகும் செலவு என்பது அந்தக்காலம் இப்ப பொரும்பாலும் க்யூப் சிஸ்டம் ரீல் ஓட்டுகின்ற வேலை கிடையாது கார்பன் செலவும் கிடையாது ஹைட்ரஜன் பல்புல வேலையை முடிச்சிடுறாங்க...டிஸ்ஆண்டனா மாட்டினா போதும்.

    அது போக பார்க்கிங் டூவீலருக்கு 10 ரூபாய், கேண்டின்ல டபுள் ரேட்...கொள்ளை திருப்பூர்ல 11 தியேட்டர்ல ஓடுது ஒரு தியேட்டர்ல 5 காட்சி 3நாள் ஹவுஸ்புல் Online Booking ஒரு டிக்கட்டுக்கு 10 ரூபாய் அதிகம்...எப்படிப்பார்த்தாலும் ஸ்டார் வேல்யூ உள்ள நடிகர்கள் படம் 3 நாளில் தியேட்டர்க்கும்/தயாரிப்பாளர்களுக்கும் பணத்தைப் பெற்றுத் தந்துவிடும்...இதுவே பில்லாவும் ரிலீஸ் என்றால் இரண்டுல ஒன்று கண்டிப்பா அடிபட்டிருக்கும்...!

    ReplyDelete
  10. \\"முதல் மூன்று நாள் " சினிமா காரர்கள் அடிக்கும் இந்த மொட்டையிலிருந்து தப்பி கொள்ளுங்கள் மக்களே !\\ படத்தை இணையத்தில் காசு கொடுக்காமல் பார்க்கிறோமே என்ற குற்ற உணர்வு உள்ளவர்கள் இந்தப் பதிவைப் படித்தால் நிம்மதியாவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. [நான் என்ன சொல்ல வாரேன்னு புரிஞ்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன் ஹி...........ஹி...........ஹி...........]

    ReplyDelete
  11. \\இப்ப பொரும்பாலும் க்யூப் சிஸ்டம் ரீல் ஓட்டுகின்ற வேலை கிடையாது கார்பன் செலவும் கிடையாது ஹைட்ரஜன் பல்புல வேலையை முடிச்சிடுறாங்க...டிஸ்ஆண்டனா மாட்டினா போதும். \\ ஆச்சரியமா இருக்கே!! இது நம்மூருக்கு வந்திடுச்சா??!!

    ReplyDelete
  12. சுரேஷ்,

    திரையிட ஆகும் செலவுன்னா நீங்க புரொஜெக்டர் இயக்க ஆகும் செலவை மட்டும் தான் கணக்கு செய்வீங்களா?

    தியேட்டர் வாடகை, அங்கே வேலை செய்றவங்க சம்பளம் எல்லாம் யாரு கொடுப்பா?

    எனவே கலெக்‌ஷனில் இத்தனை பெர்சென்டேஜ் அல்லது வாடகை என வாங்கிக்கொள்வார்கள், அப்புறம் வியோகஸ்தர் சார்பா தியேட்டருக்கு ஒரு ஆள் அனுப்புவாங்க, நடுவில இன்னும் நிறைய ஆட்கள், என செலவு இருக்கு, எனவே எல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து 40% செலவாகிடும்னு ஒரு கணக்கு.

    ஹாலிவுட் படங்களில் தியேட்டர் கலெக்‌ஷன் கொஞ்சம் தான் போட்ட காசை எடுக்க உதவும், மற்ற்றது எல்லாம் வெளிநாட்டு உரிமம், டீ.வி ரைட்ஸ், டிவிடி ரைட்ஸ் மூலமே கிடைக்கும். 4 வாரங்களில் அபிசியல் டிவிடி போட்டுருவாங்க.

    இது இல்லாம தயாரிப்பாளர், வியோகஸ்தர் வாங்கிய கடன்,வட்டி எல்லாம் போக நெட் பிராபிட் பார்க்க வேண்டியது இருக்கும்.

    40% திரையிட ஆகும் செலவு என்பது எல்லாம் சேர்த்து தான்.

    ரஜினி படம் தவிர்த்து மற்ற படங்கள் முதல் வாரம் முழுக்க 80% வசூல் காட்டுவது கடினம்.

    குறைவான அல்லது சரியான விலைக்கு விற்கப்பட்டால் மட்டுமே 3 நாள் கலெக்‌ஷனில் பணம் எடுக்க முடியும்.

    ReplyDelete
  13. அட இந்த கணக்கும் காரியங்களும் ரொம்ப புதுசா இருக்கே....!!! பொறுமையா இருந்தா பணம் மிச்சம் இல்லையா..?

    ReplyDelete
  14. ஜெயதேவ்,

    //.டிஸ்ஆண்டனா மாட்டினா போதும். \\ ஆச்சரியமா இருக்கே!! இது நம்மூருக்கு வந்திடுச்சா??!!//

    நம்ம ஊரில் இன்னும் சாடிலைட் மூலம்ம் செய்யும் ஸ்ட்ரீமிங் வரவில்லை. ஆனால் ஒரு மல்டிபிளக்சில் ஒரு டிஜிட்டல் பிரிண்ட் மூலம் எத்தனை திரையில் வேண்டுமானாலும் திரையிடலாம்.

    ஒரு கியூப் செர்வர் , எத்தனை புரொஜெக்டர் வேண்டுமானலும் இணைத்துக்கொள்ளலாம்.

    டிஷ் வச்சு செய்றாங்கன்னு சுரேஷ் தான் சொல்கிறார் , ஆனால் அப்படி இன்னும் இங்கு வரவில்லை, காரணம் குறைந்த பட்சம் 500எம்பி பிஎஸ் சேட்டலைட் இணைய வேகம் இருக்கணும்.

    கியூப் புரொஜெக்‌ஷன் என்பது மிக குறைவான ரெசொல்யுஷன் தான் கொடுக்கும், ஃபில்ம் புரொஜெக்டர் தான் அதை விட சிறப்பானது. நம்ம ஊரில் 1000கே அல்லது 2000கே இருந்தாலே அதிகம்.

    அமெரிக்காவில் இந்த ஆண்டு தான் 4000கே கியூப் வந்து இருக்கு ,நம்ம ஊருக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.

    ReplyDelete
  15. @ வவ்வால்

    Thank you for the clarification!!

    ReplyDelete
  16. //இது சாதாரண ரசிகனாக எனக்கு சொல்லும் செய்தி ஒன்று தான்: முதல் மூன்று நாள் என இவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து, உடனே தியேட்டருக்கு போக கூடாது ! முதல் நாள் விமர்சனம் எழுதும் துடிப்புள்ள நம் நண்பர்கள் வேண்டுமானால் நம் சார்பில் முதல் நாள் செல்லட்டும். //

    விமர்சகர்கள் நம்மிடம் டிக்கெட் காசு கேட்கப் போகிறார்கள். :-)

    ReplyDelete
  17. LK: நன்றி நண்பா

    ReplyDelete
  18. நன்றி பால ஹனுமான்.

    ReplyDelete
  19. மனோ: நன்றி. ..தங்கள் இரு பின்னூட்டத்துக்கும்

    ReplyDelete
  20. விரிவான பகிர்வுக்கு மிக நன்றி வவ்வால். இத்தகைய விளக்கங்கள்/ மற்றும் நம் பார்வையில் உள்ள தவறுகள் ப்ளாகில் பதிவு எழுதுவது
    மூலம் தான் தெரிய வருகிறது. மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாய் விளக்கம் அளித்தமைக்கு ஸ்பெஷல் நன்றிகள்

    ReplyDelete
  21. காவேரிகணேஷ் said...

    தயாரிப்பாளருக்கு லாபமான தொழிலாய் தெரிகிறது..

    **

    மேலோட்டமாய் அப்படி தெரிந்தாலும் முழுக்க அது உண்மை என தோணலை.

    கருத்துக்கும் தங்கள் வருகைக்கும் மிக நன்றி

    ReplyDelete
  22. பந்து: ஹாலிவுட் பற்றி ஒப்பிட்டு தகவல் பகிர்ந்தமைக்கு மிக நன்றி

    ReplyDelete
  23. நன்றி வரலாற்று சுவடுகள்

    ReplyDelete
  24. சுரேஷ்: நன்றி நண்பா; உங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கும் மிக நன்றி

    ReplyDelete
  25. மாதவா: எக்சல் மூலம் அரை நிமிடத்தில் எளிதில் கணக்கிட்டேன் என்று குறிக்கவே அங்கு எக்சல் பற்றி சொன்னேன் (வேலை வெட்டி இல்லாம அரை மணி நேரம் கணக்கு போட்டுருக்கான் பாருன்னு யாரும் சொல்ல கூடாதுல்ல)

    நன்றி

    ReplyDelete
  26. தாஸ்: நீங்க சொல்வது புரியுது :))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

    ReplyDelete
  27. வேங்கட சீனிவாசன்: நன்றி :))

    ReplyDelete
  28. நான் சொல்ல வந்ததை bandhu சொல்லிவிட்டார்.
    தயாரிப்பாளர்/வினியோகஸ்தர்களைப் பொறுத்தவரை முதல் இரண்டு வாரங்கள் தான் முக்கியம். பிறகு வட்டார வினியோக உரிமைகள், டிவிடி டிவி உரிமைகள் என்று வர்த்தக ரீதி வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு திரைப்படம் தயாராவதற்கான greenlight கிடைப்பதற்கு முன்பே இந்த business model பயன்படுத்தி லாப நஷ்ட சாத்தியங்களை அலசிவிடுகிறார்கள். தமிழில் இதைப் பின்பற்றுவது ஆச்சரியமில்லை. இத்தனை நாளானது தான் ஆச்சரியம்! இந்த உத்தியை எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் பயன்படுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கிறேன்..

    ReplyDelete
  29. //வேலை வெட்டி இல்லாம அரை மணி நேரம் கணக்கு போட்டுருக்கான் பாருன்னு யாரும் சொல்ல கூடாதுல்ல

    haha!

    ReplyDelete
  30. Anonymous7:30:00 PM

    >>எனது கால்குலேஷனில் ஏதேனும் அடிப்படையான தவறு இருந்தால், கேபிள், ஜாக்கி, உண்மை தமிழன் போன்ற அனுபவஸ்தர்கள் சொல்லலாம். திருத்தி கொள்கிறேன்.

    அருமை. பணிவில் அனுமனை மிஞ்சி விட்டீர்கள்...

    வவ்வால் அருமையாக விளக்கமளித்துள்ளார்....

    ReplyDelete
  31. அருமை.
    சினிமா எல்லாம் செய்திகளில் படிப்பது தான்.
    நன்றி.

    ReplyDelete
  32. Anonymous9:23:00 PM

    உங்க எக்ஸ்செல் கால்குலேசன்ஸ் எக்ஸலன்ட் மோகன்...


    பத்து வருடங்களுக்கு முன் ஆங்கிலப்படங்கள் வெளியான வெள்ளி-சனியிலேயே அள்ளிய காசை நினைத்து மலைத்ததுண்டு...
    இப்ப நம்ம ஆட்களும் தொடர்கிறார்கள் போலும்...

    ReplyDelete
  33. செம கால்குலேஷன்....

    நமக்கு பிரச்சனையே இல்ல மோகன். எப்படியும் வந்த மூணு நாள்-ல இங்க பார்க்க முடியாது.

    ReplyDelete
  34. //4 வாரங்களில் அபிசியல் டிவிடி போட்டுருவாங்க.//

    மொக்கைப் படங்களுக்குத்தான் உடனே டிவிடி வரும்.

    புதுப்படம் திரையிடப்பட்டு ஓரிரு மாதங்களுக்குப்பின் முதலில் HBO pay-per-view சேனல்களில் காட்டுவார்கள். அப்புறம் HBO கட்டணச் சேனல்களில் ஒரு மாதம் ஓடும். மேற்கண்ட சேனல்களில் காட்சியினூடே விளம்பரங்கள் வராது அல்லது மிகக் குறைவான விளம்பரங்கள் வரும். அப்புறம் terrestrial சேனல்களான CBS, NBC,ABC மூலம் காட்டுவார்கள். இது விஜய், சன், கலைஞர் போல 5 நிமிடப் படத்துக்கு 10 நிமிடம் விளம்பரம் போட்டுக் கல்லாக் கட்டுவது.

    இந்த சமயத்தில்தான் பொதுவாக டிவிடி வெளியிடுவார்கள். சூப்பர் ஹிட் படங்களுக்கு டிவிடி வெளியிடுவதற்கும் buzz உருவாக்கி 20 அல்லது 25 டாலர் விலை வைத்து best-buy, frys, circuitcity, walmart போன்ற கடைகளில் விற்பார்கள். இந்த அலை முடிந்த பின் இரண்டு படங்களை ஒரே வட்டில் பதிந்து (ஒன்று நல்ல படம் ஒன்று மொக்கை) 10 டாலருக்கு விற்பார்கள். இந்தக் கழுதையும் கட்டெரும்பான பின்னர் 5 டாலருக்கும் குறைவாக தள்ளுபடி விலைக்கு விற்பார்கள்.

    எந்த சுயமரியாதையுள்ள தேசியும் டிவிடி வாங்குவது இந்தத் தருணத்தில்தான். :)

    அல்லது டிவிடி வெளியான ஓரிரு நாட்களில் டோரண்ட்டாய நமஹ என்று இறக்குமதி செய்வார்கள்.

    இதையும் தாண்டி directors-cut, anniversary edition, சிக்கன்-65, ஷாங்காய் சிக்கன் என்று விற்பது அமெரிக்கனின் விற்பனை சாமார்த்தியம்.

    ReplyDelete
  35. ஹி.... ஹி... நான் ஏற்கெனவே த்ப்பிச்சிக்கிட்டுதானே இருக்கேன்.... உங்களுக்கே தெரியுமே....!

    ReplyDelete
  36. வவ்வால் எல்லா திசைகளிலும் கலக்குகிறார். சபாஷ்...

    ReplyDelete
  37. வவ்வால் சொல்லி உள்ளது போல
    நீங்கள் தயாரிப்புச் செலவை (தயாரிப்பாளரின்) மட்டும் எடுத்துக் கொள்கிறீர்கள்

    விநியோகஸ்தர்களின் வட்டி, , திரை அரங்க மின்சாரம் (ஜெநேறேட்டார் டீசல்), ஊழியர்கள் சம்பளம், அனுமதிச் சீட்டின் விற்பனை வரி,
    திரை அரங்க சொத்துக்களின் (இருக்கைகள், கட்டிட) தேய்மானம் என்று பல செலவுகள் உள்ளன,

    ரின் சோப் தயாரிப்பு செலவு 2 ரூபாய் தன, ஆனா அதை நுகர்வோரிடம் கொண்டு செல்ல ஏற்படும் செலவுகள், (இடையில் உள்ள மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள் ஆகியோரின்) செலவுகள் எல்லாம் சேர்த்தால் ரின் சோப்பின் அடக்க விலை (கொள்முதல் விழ) 5 ருபாய் வந்து விடும்.

    8 ரூபாய்க்கு விற்பார்கள்.
    The margin/ profit is not 6 (8-2), the margin is 8-5=3.

    இவை எல்லாம் தவிர்த்து

    ஒரு கலையை (கலைஞனை) ரசிக்கையில் காசு செலவாகிறதே, அவன் லாபம் அடைகிறானே என்ற மன நிலை இருந்தால் கலையை ரசிக்க முடியாது.

    ஒரு ஓவியமோ, நடனமோ, கூத்துப் பாட்டோ, கரகாட்டமோ, நாதஸ்வரமோ, கிரிக்கெட் போட்டியோ, இசை நிகழ்ச்சியோ அதன் மூலம் அந்தக் கலைஞர்கள் லாபம் அடைவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். இல்லாவிடில் கலை அழிந்து விடும், பணம் மட்டுமே மிஞ்சும் இவ்வுலகில்

    ReplyDelete
  38. வவ்வால் சொல்லி உள்ளது போல
    நீங்கள் தயாரிப்புச் செலவை (தயாரிப்பாளரின்) மட்டும் எடுத்துக் கொள்கிறீர்கள்

    விநியோகஸ்தர்களின் வட்டி, , திரை அரங்க மின்சாரம் (ஜெநேறேட்டார் டீசல்), ஊழியர்கள் சம்பளம், அனுமதிச் சீட்டின் விற்பனை வரி,
    திரை அரங்க சொத்துக்களின் (இருக்கைகள், கட்டிட) தேய்மானம் என்று பல செலவுகள் உள்ளன,

    ரின் சோப் தயாரிப்பு செலவு 2 ரூபாய் தன, ஆனா அதை நுகர்வோரிடம் கொண்டு செல்ல ஏற்படும் செலவுகள், (இடையில் உள்ள மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள் ஆகியோரின்) செலவுகள் எல்லாம் சேர்த்தால் ரின் சோப்பின் அடக்க விலை (கொள்முதல் விழ) 5 ருபாய் வந்து விடும்.

    8 ரூபாய்க்கு விற்பார்கள்.
    The margin/ profit is not 6 (8-2), the margin is 8-5=3.

    இவை எல்லாம் தவிர்த்து

    ஒரு கலையை (கலைஞனை) ரசிக்கையில் காசு செலவாகிறதே, அவன் லாபம் அடைகிறானே என்ற மன நிலை இருந்தால் கலையை ரசிக்க முடியாது.

    ஒரு ஓவியமோ, நடனமோ, கூத்துப் பாட்டோ, கரகாட்டமோ, நாதஸ்வரமோ, கிரிக்கெட் போட்டியோ, இசை நிகழ்ச்சியோ அதன் மூலம் அந்தக் கலைஞர்கள் லாபம் அடைவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். இல்லாவிடில் கலை அழிந்து விடும், பணம் மட்டுமே மிஞ்சும் இவ்வுலகில்

    ReplyDelete
  39. ஒரு ஓவியமோ, நடனமோ, கூத்துப் பாட்டோ, கரகாட்டமோ, நாதஸ்வரமோ, கிரிக்கெட் போட்டியோ, இசை நிகழ்ச்சியோ அதன் மூலம் அந்தக் கலைஞர்கள் லாபம் அடைவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். இல்லாவிடில் கலை அழிந்து விடும், பணம் மட்டுமே மிஞ்சும் இவ்வுலகில்...I agree with you Ramji.

    ReplyDelete
  40. மோகன் முற்றிலும் தவறான கால்குலேஷன்.

    ReplyDelete
  41. மோகன் முற்றிலும் தவறான கால்குலேஷன்.

    ReplyDelete
  42. சகுனி நிச்சயம் விநியோகஸ்தர்களூக்கு சுமார் பெரிய அடியை கொடுக்கும் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. நேற்றிலிருந்து.

    ReplyDelete
  43. சகுனி நிச்சயம் விநியோகஸ்தர்களூக்கு சுமார் பெரிய அடியை கொடுக்கும் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. நேற்றிலிருந்து.

    ReplyDelete
  44. அப்பா துரை:
    //இந்த உத்தியை எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் பயன்படுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கிறேன்.//

    செம ! அதுவும் MGR படம் இப்படி நடந்திருந்தால் தமிழ் நாட்டில் நிறைய தியேட்டர் Owners மற்றும் விநியோகஸ்தர்கள் கோடீஸ்வரர் ஆயிருப்பார்கள்

    ReplyDelete
  45. balhanuman said...
    >>எனது கால்குலேஷனில் ஏதேனும் அடிப்படையான தவறு இருந்தால், கேபிள், ஜாக்கி, உண்மை தமிழன் போன்ற அனுபவஸ்தர்கள் சொல்லலாம். திருத்தி கொள்கிறேன்.

    அருமை. பணிவில் அனுமனை மிஞ்சி விட்டீர்கள்..
    ***
    எந்த ஹனுமனை? பால ஹனுமனையா? :))

    ReplyDelete
  46. நன்றி ரத்னவேல் ஐயா

    ReplyDelete
  47. நன்றி ரெவரி சார். உண்மை தான்

    ReplyDelete
  48. நன்றி வெங்கட்.

    ReplyDelete
  49. தனபாலன் சார்: மிக நன்றி

    ReplyDelete
  50. குஜால்: சார் உங்கள் பெயரே அருமையா இருக்கு.

    உங்கள் விளக்கமும் மிக மிக அருமை. அடிக்கடி இந்த பக்கம் வந்தீங்கன்னா, இங்கே வவ்வால்னு ஒருத்தர் இருக்கார். அவருக்கு, கருத்துகளில் டப் பைட் குடுக்கலாம்

    ReplyDelete
  51. ஸ்ரீராம். said...
    வவ்வால் எல்லா திசைகளிலும் கலக்குகிறார். சபாஷ்...

    ******

    ஸ்ரீராம் :))

    வவ்வால் : பாத்தீங்களா.. இந்த பதிவில் என்னை விட உங்களை தான் நிறைய பேர் பாராட்டுறாங்க. இதுக்கே நீங்க ஒரு டிரீட் தரணும் :))

    ReplyDelete
  52. ராம்ஜி யாகூ: அதிசயமாய் இந்த பக்கம் நன்றி

    ReplyDelete
  53. உமா மேடம் : நன்றி

    ReplyDelete
  54. கேபிள்: என்ன தவறு என சொல்லாமல் கிளம்பிடீங்க. சொன்னா நாங்களும் தெரிஞ்சிகிட்டு இருப்போமில்ல :))

    ReplyDelete
  55. மோகன்,

    என்னது டிரீட் ஆஹ் , நீங்க தான் எனக்கு கொடுக்கணும், நீங்க தப்பா எழுதிய ஒரு பதிவை தூக்கி நிறுத்தியிருக்கேன் :-))

    கேபிள்ஜி போல ஒரு வரில ராங்க் கால்குலேஷன் சொல்லிட்டு போயிருக்கணும், மெனக்கெட்டு பதில் சொன்னா டிரீட் கேட்பாங்களாம் ட்ரீட்டு, ,என்ன லோகமப்ப்பா இது ?

    சகுனியே எம்.ஜில வெளியிடப்பட்ட படம் என்பதால் முதல் நட்டம் தியேட்டர்க்காரங்களுக்கு தான். வேந்தர் மூவிஸ் அவுட் ரைட்ல வாங்கி,மாவட்ட அளவில் , அப்புறம் அவங்க தியேட்டருக்கு எம்ஜில என விற்று இருக்கிறார்கள், பலரும் லாபம் எடுக்க 2 வாரமாவது ஹவுஸ்ஃபுல்லா ஓடணும், அப்படி இல்லை எனில் நட்டமே.பெரிய பஞ்சாயத்து வரும் பாருங்க.

    தப்பித்தது படத்தை எடுத்த ஸ்டுடியோ ஞானவேல்ராஜா தான் :-))

    ReplyDelete
  56. வவ்வால்: பல விஷயம் பேசுறீங்க. நான் எதுக்கு டிரீட் கேக்குறேன்னு கண்டு பிடிக்க முடியலை. அப்படியாவது
    உங்களை நேரில் ஒரு தடவை பாத்துடலாமேன்னு தான்

    சரி நானாவது டிரீட் தர்றேன். எப்போ போகலாம் சொல்லுங்க :)

    ReplyDelete
  57. yaaruku laapamo nastamo herovuku pesuna kaasu poirumla.....so namma heros be happy

    ReplyDelete
  58. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...