Monday, August 5, 2013

தொல்லை காட்சி -ஆபிஸ் லட்சுமி - சூப்பர் சிங்கர் வைஜயந்தி

சீரியல் பக்கம் ஆபிஸ் 

இந்த சீரியலை 10 மணிக்கு மாத்தினாலும் மாத்துனாங்க - வீட்ல - இந்த சீரியல் பார்க்காமல் தூங்குறதில்லை .........ஹூம் !

ஐ லவ் யூ சொல்றேன் என்று பல வாரமா ஜவ்வு மிட்டாய் ஆக்கிட்டுருக்காங்க. இன்னொரு பக்கம் ஒரு வில்லன் Boss- ஆ வந்திருக்கார். இவ்ளோ மோசமான ஒரு பாஸ் நான் என்றும் பார்த்ததில்லை !

இவ்வளவு கொடுமையிலும் சீரியல் பார்க்க வைக்கும் ஒரே நபர் இரண்டாம் ஹீரோயினாக வரும் லட்சுமி ! அம்மணியின் குரலும் குறும்பு கொப்பளிக்கும் சிரிப்பும் ரசனை !

முக்கிய விஷயம் : லட்சுமியின் தங்கை - எனது பெண் படிக்கும் அதே பள்ளியில் இன்னொரு செக்ஷனில் படிக்கிறாள். " லட்சுமி நம்பர் வாங்கி தா; நேரில் பார்த்து ஒரு பேட்டி எடுத்து ப்ளாகில் வெளியிடணும் " என்றால் பெண் முறைக்கிறாள்; இருந்தும் "முயற்சியது கை விடேல் !" என தொடர்ந்து வருகிறேன். ஒரு நாள் அவரை சந்தித்து பேசினால் - உங்கள் அனைவருக்கும் புகை வருமளவு பேசி விட்டு பேட்டி வெளியாகும் என்பதை மட்டும் சொல்லி வைக்கிறேன் :)

ஜோடி சீசன் - 6

இந்த வாரம் " Folk டான்ஸ் " ரவுண்ட் - வந்த போதே ஜட்ஜ்கள் நல்ல மூடில் இருந்தனர் எல்லாரையும் ஆஹோ ஓஹோ வென பாராட்டியதிலேயே இன்று யாரையும் அவுட் ஆக்க போவதில்லை என தெரிந்தது

நிகழ்ச்சிக்கு ராதா என்று ஒரு ஜட்ஜ் போதும் கூடவே வரும் அம்பிகா,  ராதா என்ன மார்க் தருகிறாரோ அதே தான் தருகிறார்; ராதா  சொல்வதை ஒட்டிய கருத்துக்களையே பிரதிபலிக்கிறார் !

நிகழ்ச்சியில் இப்போது இருப்பது 5 ஜோடிகள் தான். இவர்கள் - ஒரு பாட்டுக்கு முழுசையும் ஆடுவதில்லை ; 3 நிமிடம் தான் ஆடுகிறார்கள். 5 குழு இப்படி ஆடினால் 15 அல்லது 20 நிமிடத்தில் நிகழ்ச்சி முடியனும் இல்லியா? ஆனால் இந்த நிகழ்ச்சி 2 மணி நேரம் ஓடுது !

எப்படி 2 மணி நேரம் ஓடுது என்கிறீர்களா? நடுவே அத்தனை பேரையும் அழைத்து, உப்பு மூட்டை தூக்க சொல்வதும் , ஒரு நிமிடம் " எப்படி வேண்டுமானாலும் தூக்கி கொண்டு ஆடுங்க " என்பதும் ...அடேங்கப்பா நம்ம கிராமத்து திருவிழாவில் நடக்கும் செக்ஸ் டான்ஸ் நிகழ்ச்சிகள் தோற்றது போங்க !

டிவி போஸ்டர்

பார்த்த படம் - தொடரும்

அஜீத் குமார் தேவயானி மற்றும் ஹீரா நடித்து நடிகர் ரமேஷ் கண்ணா இயக்கிய படம் இப்போது தான் காண முடிந்தது

பொஸசிவ் மனைவியான தேவயானி - கணவனை எப்போதும் சந்தேகப்படுகிறார். தனக்கு இதய நோய் இருப்பதால் இறப்பது உறுதி (!!??) என தெரிந்து - ஹீராவை - அஜீத்துக்கு மணம் முடித்து விட்டு ஒரு பெண் குழந்தையை ஈன்று விட்டு இறக்கிறார்.  படத்தின் முக்கிய முதுகெலும்பாய் இருக்க வேண்டிய தேவயானி பாத்திரம் தான் அதீத எரிச்சல் ஊட்டுது . படம் தோற்க இதுவே காரணமாய் இருந்திருக்க வேண்டும்

ஒல்லியான அஜீத் கண்ணாடி போட்டு கொண்டு - விவேக்கை நினைவு படுத்துகிறார். மணிவண்ணன் மற்றும் வடிவேலு காமெடி பார்ட் சில நேரம் சிரிப்பு; பல நேரம் எரிச்சல்.

இசை இளையராஜா - இந்த படத்துக்கு இவ்வளவு போதும் என நினைத்து விட்டார் போலும்; ஒரு பாட்டும் ஹிட் ஆகலை !

அஜீத்தே கூட மறக்க நினைக்கிற படம் என தோன்றுது !

சூப்பர் சிங்கர் வைஜயந்தி

சென்ற சூப்பர் சிங்கர் ஜூனியரில் கலக்கிய " நித்யஸ்ரீ "யின் அக்கா - வைஜயந்தி !



நித்யஸ்ரீ அளவுக்கு நன்றாக பாடுகிறார் என்று சொல்ல முடியாது ; சில நேரம் மிக நன்றாக பாடுவார். முதல் 15 க்குள் வருவார் என்று தான் நினைக்கிறேன். பி சுசீலா வந்தபோது அவர் பாடிய "என்ன என்ன வார்த்தைகளோ "- இங்கு



இந்த வாரம் 16 வயது இளைஞரான ராஜகோபால் வெளியேற்றபட்டார். அது ஓகே . சவுண்டு சவுந்தர்யா - அபாய கட்டம் வரை வந்தது தான் ஆச்சரியம் !

லயோலா கல்லூரி விழா

தங்கள் பழைய கல்லூரி மாணவர்கள் பலரை அழைத்து லயோலா கல்லூரி நடத்திய விழா விஜய் டிவியில் ஒளிபரப்பானது. (அதென்ன சினிமா நடிகர்கள் மட்டும் மேடைக்கு அழைக்கப்படுகிறார்கள் ?) ஆனந்த் பாபு நடனம் ஆட, பிரபு சிவகுமார் போன்றோர் பேசினர்.

ராதாரவி பேசும்போது மாணவனாய் இருந்தபோது செய்த அராஜகம் பற்றியெல்லாம் பேசிவிட்டு, "நான் இங்கு படித்தது PUC மட்டும் தான்; எனக்கு அப்ப BA Economics - கல்லூரியில் சேர ரவுடி என சீட் குடுக்கலை ; இப்ப பாருங்க எனக்கு சிறந்த மாணவன்னு பரிசு தர்றாங்க" என்று கல்லூரி நிர்வாகத்தை செமையாய் வாரினார்.

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு 

இந்த வாரம் தமிழ் சினிமாவில் வந்த சில அற்புத பாத்திரங்கள்  பற்றி பேசினர். வழக்கமாய் வரும் நெல்லை கண்ணனுடன் - எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் மற்றும் நடிகர் மோகன்ராம் ஆகியோர் நடுவர்களாக வந்திருந்தனர். பராசக்தி சிவாஜி மற்றும் எம். ஆர். ராதா பற்றி அவர்கள் பேசியது மிக சுவாரஸ்யம் ! பார்க்காவிடில் யூ டியூபில் தேடி பாருங்கள் !

17 comments:

  1. //அடேங்கப்பா நம்ம கிராமத்து திருவிழாவில் நடக்கும் செக்ஸ் டான்ஸ் நிகழ்ச்சிகள் தோற்றது போங்க !//

    இதைவிடக் கேவலமாக இந்த நிகழ்ச்சியை திட்ட முடியாது... இதைப் பார்த்தாவது இவர்கள் திருந்தட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்கூல் பையன் ; ரைட்டு

      Delete
  2. //ஒரு நாள் அவரை சந்தித்து பேசினால் - உங்கள் அனைவருக்கும் புகை வருமளவு பேசி விட்டு பேட்டி வெளியாகும் என்பதை மட்டும் சொல்லி வைக்கிறேன் :)//

    ஹா ஹா சீக்கிரம் வெளியிடுங்க பாஸ்

    ReplyDelete
    Replies
    1. 10 மணிக்கு ஆபிஸ் சீரியல் மாறியபோது " இனி நீங்க தப்பிக்க முடியாது"ன்னு சொன்னது நீங்க தான் பிரேம் ; கரீட்டா கெஸ் பண்ணிங்க :)

      Delete
  3. //எப்படி 2 மணி நேரம் ஓடுது என்கிறீர்களா? நடுவே அத்தனை பேரையும் அழைத்து, உப்பு மூட்டை தூக்க சொல்வதும் , ஒரு நிமிடம் " எப்படி வேண்டுமானாலும் தூக்கி கொண்டு ஆடுங்க " என்பதும் ...அடேங்கப்பா நம்ம கிராமத்து திருவிழாவில் நடக்கும் செக்ஸ் டான்ஸ் நிகழ்ச்சிகள் தோற்றது போங்க !
    //

    உண்மை உண்மை

    ReplyDelete

  4. ராதாரவி பேசும்போது தான் மாணவனாய் இருந்தபோது செய்த அராஜகம் பற்றியெல்லாம் பேசிவிட்டு, "
    >>
    எனக்கென்னவோ அவர் பேசினதால கல்லூரிக்கும் பெருமை சேர்ர்க்கலை. எரிச்சல்தான் வந்துச்சு

    ReplyDelete
    Replies
    1. ஆம் ராஜி நன்றி

      Delete
  5. இப்ப பாருங்க எனக்கு சிறந்த மாணவன்னு பரிசு தர்றாங்க" என்று கல்லூரி நிர்வாகத்தை செமையாய் வாரினார்.//


    ராதாரவிய தங்களோட காலேஜ்ல படிச்சவர்னு சொல்லிக்கறதே லயோலாவுக்கு இழுக்கு. இதுல இவருக்கு சிறந்த மாணவன்னு வேற பரிசா? கொடுமை.

    ReplyDelete
    Replies
    1. ஜோசப் சார் :))

      சார்: நீங்க சென்னை தானே? செப் 1 பதிவர் விழாவுக்கு வர்றீங்களா? வர முயலவும்

      Delete
  6. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு இதுவரை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பார்க்க நினைத்திருக்கும் நிகழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைத்தா பாருங்க ரோஷினி அம்மா ; காலை நேரம் வருவதால் வீட்டு வேலைகள் இருக்கும் இல்லியா ?

      Delete
  7. சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  8. Anonymous5:19:00 PM

    ஆபீஸ் சீரியலுக்கு " கேண்டீன்" வச்ருக்கலாம்.. சீரியல் போடுற 20 நிமிஷத்துல 16 நிமிஷம் கேண்டீன் ல தான் இருக்கங்கங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்க கமண்ட்டை வீட்டில் சொன்னேன்: அனைவரும் சிரிச்சிட்டாங்க !

      Delete
  9. ஆபீஸ் லக்ஷ்மிதான் தாயுமானவனின் இரண்டாவது பெண். நேற்று பார்க்கும்போது தன் கணவனுடன் ஆபீஸில் (இருவரும் ஒரே ஆபீஸில் வேலை பார்க்கிறார்கள் - ஆபீஸ் சீரியல் இல்லை) பேசுவது ஆபீஸையே (சீரியலை)ஞாபகப்படுத்துகிறது.
    தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நானும் விரும்பி பார்க்கிறேன். எனக்கு பிடித்த படங்களை வலைப் பதிவில் எழுதலாம் என நினைக்கிறேன்

    ReplyDelete
  10. ஆபீஸ் சீரியல் டைம் மாற்றும் முன் பார்த்தேன் அந்தப் பெண் லட்சுமி ஹூரோயினை விட அழகாக இருக்கிறார்..டி.வி போஸ்டர் ...நன்றாகக் கிண்டலடித்துள்ளீர்கள்....தமிழ் பேச்சு எங்கள் மூச்சில் நான் சார்ந்த ஓசை அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் இளஞ்செழியன் மற்றும் அகிலா பேசுவதால் தொடர்ந்து பார்க்கிறேன்..விடுதலை போராட்டத்தியாகிகள் பற்றி நிறைய செய்திகள் இளைய தலைமுறையினருக்குத் தெரியாததாய் இருந்தது...தொடரும் படத்தின் ஒரே ஒரு சுவாரசியம் ஒரு காட்சி முடியும் இடத்தின் வார்த்தைகளோடோ பின்ணணிகளோடோ அடுத்த காட்சி ஆரம்பிக்கும்...

    ReplyDelete
  11. நல்ல கமண்ட் .தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...