Thursday, August 6, 2015

ஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்

கடந்த சில வருடங்களில் பாராட்டத்தக்க வளர்ச்சி பெற்ற விஜய் சேதுபதி - தயாரிப்பாளர் ஆகியிருக்கும் முதல் படம்.. ஆரஞ்சு மிட்டாய் .



கதை 

உடல் நிலை சரியில்லாத நிலையில் - தனிமையில் வாழும் வயதான மனிதர் - நெஞ்சு வலி என ஆம்புலன்சுக்கு போன் செய்கிறார்... ஆம்புலன்ஸ் வந்து ஆஸ்பத்திரி செல்லும் போது நடக்கும் சம்பவங்கள்.. உடன் வரும் நபருடன் அவருக்கு வரும் உறவு.. அவனது மகனுடனான பிணக்கு...   என நகர்ந்து ஒரு புன்னகையுடன் முடிகிறது படம்...

சோகத்தை அடி நாதமாய் வைத்தாலும் முடிந்த வரை காமெடியாய் சொல்ல முயன்றது ரசிக்கும் படி உள்ளது..

படத்தில் ஆங்காங்கு சில காட்சிகள் புன்னகைக்கவும், ரசிக்கவும் வைக்கிறது... வயதானவர் ஆடும் டான்ஸ்... இறுதியில் தெரிய வரும் இனிய டுவிஸ்ட், ஸ்டெரச்சரில் உட்கார்ந்த படி வருவது, அப்போது விண்ணை தாண்டி வருவாயா படம் பற்றி ஊர் காரருடன் பேசுவது..



ஆனால்...

இந்த சின்ன சின்ன பொறிகளே போதுமா?

நிஜத்தில் இது குறும் படமாய் வந்திருந்தால் நிச்சயம்  வரவேற்பு பெற்றிருக்கும் .. !!

என்ன பிரச்சனை ? 

முதலில் படத்தின் நீளம்.... ஒன்னரை மணி நேரம் தான் ஓடுகிறது... ஆனாலும் பின் பகுதில் இழுவையாய் தெரிகிறது.. கடைசி 10 நிமிடம் இது தான் கடைசி ஷாட் போலும் என நினைத்தே ரொம்ப நேரம் ஓடுகிறது...

இவ்வளவு குட்டி படத்தில் 4 பாட்டுகள்.. அதையும் கழித்து பார்த்தால் காட்சிகள் எவ்வளவு நேரம் இருக்கும் !!

பெரியவரின் வாழ்க்கை எந்த விதத்திலும் மனதில் பதிய வில்லை.. பாதிக்க வில்லை... அவர்  மீது பரிதாபமே வரவில்லை.. அதற்கு ஒரு முக்கிய காரணம் அவரை காணும் போது அது விஜய் சேதுபதியாக தான் தெரிகிறது... வயதானவராய் தெரிய வில்லை..



பெரியவர் ஏன் மகனை விட்டு பிரிந்துள்ளார்.. அவருக்கும் மகனுக்கும் என்ன தான் பிரச்சனை? இன்னொரு காட்சியில் பெரியவர் - நானும் என் தந்தையை இப்படி தான் துரத்தினேன்.. அவர் மட்டுமல்ல... அவரது தாத்தா கூட இப்படிதான் என எதோ பரம்பரை வியாதி போல சொல்கிறார்...

பெரியவர்களை நேசியுங்கள்; அவர்களை தனிமையில் விடாதீர்கள் என்ற நல்ல மெசேஜ் சொல்ல நினைத்தது பாராட்டுக்குரியது.. அதை நிச்சயம் ரசிக்கும் படி சொல்லியிருக்கலாம்...

ஆரஞ்ச் மிட்டாய் - இனிக்க வில்லை.. 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...