விசாரணை
ட்ரைலர்- மற்றும் பிற விமர்சனங்கள் மூலம் இந்நேரம் கதை பலருக்கும் தெரிந்திருக்கும்
சந்தேக கேசில் அழைத்து செல்லப்படும் 4 இளைஞர்கள் - துன்புறுத்தி குற்றத்தை ஒப்பு கொள்ள சொல்கிறது ஆந்திர காவல் துறை.. ஒருவழியாய் அதில் தப்பி தமிழக காவல் துறை வசம் வருகிறார்கள் ...
பிற்பகுதியில் இன்னுமொரு குற்றம் - இன்னொரு விசாரணை - சில்லிட வைக்கும் கிளைமாக்ஸ் ...
3 உண்மை சம்பவங்களை அடிப்படையாய் வைத்து கதை நகர்கிறது
முதலாவது சந்திர குமார் என்கிற ஆட்டோ ஓட்டுனர் - தன் வாழ்வில் நடந்ததை எழுதிய "லாக் அப்" அனுபவம்..
இரண்டாவது - ஆடிட்டர் ஒருவர் விசாரணையின் போது "தற்கொலை" செய்து கொண்ட நிகழ்வு..
இறுதியாக நாம் கேள்விப்படும் ATM என்கவுன்ட்டர்கள்..
விசாரணையின் போது போலிஸ் கொடுக்கும் டார்ச்சர், ஸ்டேஷனில் நிகழும் மரணம் (கஸ்டடியல் டெத்) & என்கவுன்ட்டர் என 3 வித கொடூரங்களை படம் தொட்டு செல்கிறது.
முதல் பகுதியில் நால்வரும் வாங்கும் அடிகள்.. நிச்சயம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பார்க்க அஞ்சுவர்.
முதல் பகுதியில் போலிஸ் டார்ச்சருக்கு உள்ளாவோர் ஏழைகள்.. அன்றாடங் காய்ச்சிகள். முகவரி இல்லாமல் பூங்காவில் உறங்குபவர்கள்.. இரண்டாம் பகுதியில் மிக பெரும் ஆடிட்டர் டார்ச்சருக்கு ஆளாகிறார்.. ஏழைகள் மட்டுமல்ல, ஆட்சியில் இருப்போருக்கு எதிர் பக்கம் என்றால் - பணம் உள்ளோருக்கும் இந்நிலை நிகழலாம் என்கிற உண்மையை சொல்லாமல் சொல்கிறது திரைக்கதை.
விமர்சனத்தில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.. இப்படத்தில் வில்லன் - காட்டப்படவே இல்லை; கண்ணுக்கு தெரியாத ஒரு அதிகார மையம் - அவர்கள் தான் போலிசை ஆட்டி படிக்கிறார்கள் என்று.. மிக சரியான பார்வை அது !
தினேஷ், சமுத்திரகனி, கிஷோர் மூவர் நடிப்பும் வெகு இயல்பு, சின்ன சின்ன பாத்திரங்களில் வருவோரும் கூட திறமையான நடிப்பை வெளிக்காட்டுகிறார்கள் ..
நல்ல விஷயங்களை கூறியாயிற்று.. இனி மற்றவை..
இப்படத்திற்கு விகடனில் 61 மார்க் தந்திருந்தனர். இது 16 வயதினிலே விற்கு பிறகு மிக அதிக மார்க் வாங்கிய படமாம் ! அவ்வளவு மார்க் சரியா?
நிச்சயம் சரியில்லை என்றே நம்புகிறேன். தமிழில் கடந்த 40-45 ஆண்டுகளில் வந்த படங்களில் இது இரண்டாவது சிறந்த படமென நிச்சயம் நான் கருதவில்லை. விகடன் போடும் மார்க் வரிசையில் 50 மார்க் வாங்க வேண்டிய படமிது.. விஜய் டிவி நடுவர்கள் போல விகடனும் இப்படி சில நேரங்களில் புரியாத புதிராகி விடும்...
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் படத்திற்கு விகடன் 50 மார்க் தந்த நினைவு.. அந்த வரிசையில் - அதே போன்ற தரத்தில் - அதே அளவு மார்க் பெற வேண்டிய படம் தான் விசாரணை..
விசாரணை - நல்ல படம் பார்க்க எண்ணுவோர் காண்க !
*********
அண்மை பதிவு :
இறுதிசுற்று-பூலோகம்- ஈட்டி- தற்காப்பு- கதகளி சினிமா விமர்சனங்கள்

யெஸ் ! ! 61 மார்க் அதிகம்தான்..... 50 தான் சரியான மதிப்பெண்..... போலீஸ்-கிட்ட மாட்டினா அவ்வளவுதாண்டா என்றும், அதற்க்கான தீர்வு என்ன என்பதும் சொல்லப்படவில்லை..
ReplyDeleteபாலாத்தனமான படங்களுக்கு இத்தனை வரவேற்பு கிடைக்கும் என்பதே நம் தமிழ் சினிமா உருப்படாது என்பதன் குறியீடாக தோன்றுகிறது. வாழ்க வெற்றிமாறன். இன்னும் இதேபோல பல "உலகத் தரமான" படங்கள் இயக்க அவரை வாழ்த்துவோம். இதுவல்லவோ நம் கலாச்சார பிரதிபலிப்பு!
ReplyDeleteThis comment has been removed by the author.

ReplyDeleteவிமர்சனங்கள் அருமை அண்ணா..குறிப்பாக ஈட்டி ...கட்டிப்போட்ட படம் அண்ணா

ReplyDelete