Wednesday, March 25, 2020

ஓ மை கடவுளே & 375 - இரு நல்ல படங்கள் விமர்சனம்

நாடு முழுதும் கரோனா பற்றியே பேச்சிருக்க, நாம் சில நல்ல படங்கள் பற்றி பேசுவோம்

ஓ மை கடவுளே

நல்லதொரு நாட்..அதனை அழகாக திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். அசோக் செல்வன் மற்றும் ரித்திகா - Just perfect ! வாணி போஜன் தான் மிக சுமாரான பேர்பார்மன்ஸ் ..



நாம் வாழும் வாழ்வில் விருப்பமே இன்றி எதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பதை நாம் உணர்வதே இல்லை.

போலவே, நம் மீது அன்பு செலுத்துவோரை ரொம்ப ஈசியாக எடுத்து கொள்கிறோம். அவர்களின் அன்பும் அதன் ஆழமும் நமக்கு புரிவதே இல்லை

கடவுள் என்கிற சுவாரஸ்ய பாத்திரம் மூலம் வாழ்வை மறுபடி வேறு மாதிரி வாழ்ந்து பார்க்க வாய்ப்பு தருவதே செம கான்செப்ட். அதனை வீணடிக்காமல் ரசிக்கும் வண்ணம் திரைக்கதை செய்துள்ளனர்.

அவசியம் பாருங்கள்.. இந்த கடவுளை !

Section 375 (ஹிந்தி)


ஒரு அட்டகாசமான படம் ! கோர்ட் ரூம் டிராமா !

375 என்பது இந்தியன் பீனல் கோட் செக்ஷனை குறிப்பது. கற்பழிப்பு குறித்த சட்டப்பிரிவு.

ஒரு நடிகர் - ஓர் இளம்பெண்ணிடம் தவறாக நடந்ததாக, கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது

விசாரணை- வாக்கு வாதங்கள் - இவை தாண்டி இறுதியில் உண்மை தெரியும் போது திடுக்கிட்டு போவோம்...

375 செக்ஷனில் இருக்க கூடிய ஓட்டைகளை எடுத்து காட்டும், இந்த பற பற படத்தை காண தவறாதீர்கள் !

2 comments:

  1. முதல் படம் பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளது...

    ReplyDelete
  2. நீங்கள் மீண்டும் எழுதத்துவங்கியது மகிழ்வளிக்கிறது.தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...