சென்னை பதிவர் மாநாட்டின் ஒரு முக்கிய நிகழ்வு மூத்த பதிவர்களுக்கு நிகழ்ந்த பாராட்டு விழா. சென்ற தலைமுறையை சேர்ந்தவர்கள் அதிகம் கணினியே பரிச்சயம் இல்லாதவர்கள் என்பதே யதார்த்தம். அதை மீறி புதிதாய் கணினி கற்றுக்கொண்டும் கூட வலையுலகில் அசத்தும் மூத்த பதிவர்களை பாராட்டி நினைவு பரிசும் பொன்னாடையும் போர்த்தியது அற்புதமான விஷயம் !
பட்டுக்கோட்டை பிரபாகர் பேசும்போது கூட விழாவின் இந்த பகுதி தனக்கு மிக மன நிறைவை தந்தது என்றார். மேலும் " வயதானவர்கள் பேசுவதை கேட்க வீட்டில் யாரும் இல்லை. இருக்கும் நேரத்திலும் காது கொடுத்து கேட்பதில்லை. ஆனால் அவர்கள் சொல்வதை ஆயிரகணக்கானோர் வலை பதிவில் கேட்கிறார்கள். இது அவர்களுக்கு மன நிறைவை தருகிறது" என்றார். " வலையுலகில் பெரிதும் இருப்பது இளைஞர்கள். நீங்கள் எழுதுவது கற்பனை அல்லது ஜாலியான விஷயங்களே. ஆனால் மூத்த பதிவர்கள் எழுதுவது தங்கள் அனுபவத்தை ! கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த அனுபவ அறிவை நீங்கள் இவ்வளவு எளிதாய் பெற முடியாது" என்று பேசியபோது அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது !
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேகா ஒவ்வொரு மூத்த பதிவரின் மிக சிறந்த வரிகளை, அருமையான தொனியில் (Modulation) வாசித்து அவர்களை அழைக்க, அப்படி தங்கள் வரிகள் வாசித்த நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் நெகிழ்ந்து போய் நின்றது அற்புதமாய் இருந்தது !
வல்லியம்மா, வில்லவன் கோதை போன்ற சில மூத்த பதிவர்கள் நினைவு பரிசு பெற்ற படங்கள் மட்டும் என்னால் எடுக்க முடியலை. (அந்த நேரம் முக்கிய போன் வந்துடுச்சு..வேற யாரு. ஹவுஸ் பாஸ் தான் !) அந்த படங்கள் நண்பர்கள் தளத்தில் இருந்தால் எடுத்து இங்கு பின்னர் சேர்ப்பிக்கிறேன் !
அனைவருக்கும் ஒவ்வொரு பதிவர் பொன்னாடை போர்த்த, நினைவு பரிசை பட்டுக்கோட்டை பிரபாகர் வழங்கினார்.
மூத்த பதிவர்கள் வாழ்வில் இது ஒரு மறக்க முடியாத நாளாக இருந்திருக்கும் . இந்த படங்களை காணும் மூத்த பதிவர்கள் தங்கள் படத்தை டவுன்லோடு செய்து தங்கள் ஆல்பத்தில் சேமிப்பார்கள் என்கிற எண்ணத்தில், மிகுந்த அக்கறையுடனும் அன்புடனும் எடுத்த இப்படங்களை, இந்த பெரியோர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
|
அடையாறு அஜீத் என்று அன்போடு அழைக்கப்படும் சென்னைபித்தன் ஐயாவிற்கு
பிலாசபி பிரபாகர் பொன்னாடை போர்த்துகிறார்
|
|
சென்னைபித்தன் ஐயாவிற்கு நினைவு பரிசு அன்புடன் வழங்கப்படுகிறது |
|
இந்த நிகழ்ச்சிக்கு காரணமான ராமானுசம் ஐயாவுக்கு
கரை சேரா அலை அரசன் பொன்னாடை போர்த்துகிறார்
|
|
ராமானுசம் ஐயாவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கிறார் பிரபாகர் |
|
என் குருநாதர் ரேகா ராகவனுக்கு பாலகணேஷ் பொன்னாடை போர்த்துகிறார்
|
டில்லி கணேஷுடன் தனக்கு நடந்த சுவாரஸ்ய சம்பவம் பற்றி ரேகா ராகவன் அவர்கள் தன் ப்ளாகில் சுவையாக எழுதியதை சுரேகா நினைவு கூர்ந்தார்.
|
ரேகா ராகவன் ஐயாவுக்கு நினைவு பரிசு |
|
நடனசபாபதி ஐயாவுக்கு சீனு பொன்னாடை போர்த்துகிறார் |
நடனசபாபதி ஐயா "வயதானபின் நினைவுகள் மறக்க துவங்கும்; எனவே நினைவுகளை வலைப்பதிவில் எழுதுவது மீண்டும் நினைத்து பார்க்க உதவுகிறது" என எழுதியுள்ளதை மதுமதி சொல்லியது அருமை !
|
லட்சுமி அம்மாவுக்கு சிரிப்பு போலிஸ் ரமேஷ் பொன்னாடை போர்த்துகிறார் |
லட்சுமி அம்மா மும்பையில் இருந்து விழாவிற்காக வந்திருந்தார் !
|
லட்சுமி அம்மா நினைவு பரிசு பெற்றுக்கொண்ட பின் PKP-இடம் சிறிது நேரம் பேசுகிறார் |
|
ரமணி ஐயாவுக்கு கோவி (கோவை) பொன்னாடை போர்த்துகிறார் |
சுரேகா வாசித்த ரமணி ஐயாவின் விவசாயி/ விளைநிலங்கள் பற்றிய கவிதை அற்புதமாய் இருந்தது !
|
ரமணி ஐயாவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கிறார் PKP |
|
கவிஞர் கணக்காயனுக்கு நினைவு பரிசு வழங்குகிறார் பட்டுக்கோட்டை பிரபாகர் |
|
ருக்மணி அம்மாவுக்கு சங்கவி பொன்னாடை போர்த்துகிறார் |
|
நினைவு பரிசு பெற்று கொண்ட ருக்மணி அம்மா தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார் |
ருக்மணி அம்மா தனது வலைப்பூவில் சொல்லும் கதைகளை தவிர ஒவ்வொரு வாரமும் ஜெயா டிவியில் ஞாயிறன்று குழந்தைகளுக்கு கதை சொல்கிறார்.
|
சுப்பு ரத்தினம் ஐயாவுக்கு பொன்னாடை போர்த்துகிறார் பதிவர் நண்பர் |
|
சுப்பு ரத்தினம் ஐயாவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கிறார் பட்டுகோட்டை பிரபாகர் |
|
ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு ரோஸ்விக் பொன்னாடை போர்த்துகிறார் |
ரஞ்சனி அம்மா விழாவிற்காக பெங்களூரில் இருந்து வந்திருந்தார் !
|
ரஞ்சனி அம்மாவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கிறார் PKP |
பின்குறிப்பு: இன்றோடு எனக்கும் என் மனைவிக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் முடிகிறது.சரியாக கண்டுபிடித்து வாழ்த்து சொன்ன ஆதிமனிதன், ஏஞ்சலின், ரகு மற்றும் ராஜிக்கு மனமார்ந்த நன்றிகள் !
இது சென்ற வருடத்து கல்யாண நாள் பதிவு !: பெண் பார்த்த அனுபவங்கள்
எங்கள் 16-ஆவது திருமண நாளான இன்று இப்பதிவை வெளியிடுவதில் இருவருமே மகிழ்கிறோம். வயதில் மூத்தவர்கள் எங்களுக்கு ஆசி வழங்கினால் பெரிதும் மகிழ்வோம் ! பிற நண்பர்கள் பின்னூட்டம் இடாவிட்டாலும், ஒரு நிமிடம் நாங்கள் இருவரும் இணைந்து நன்றாக வாழ வேண்டும் என உங்கள் மனதினில் வாழ்த்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
அண்ணே திருமணநாள் வாழ்த்துக்கள். இது போல் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் திருமணநாள் கொண்டாட எக்ஸ்ட்ரா வாழ்த்துக்கள். அண்ணிக்கிட்டேயும் சொல்லிடுங்க.
ReplyDeleteஇனிய மணநாள் வாழ்த்துகள்:)! பொருத்தமான பதிவு. மூத்தோர் ஆசியும் நண்பர்கள் வாழ்த்தும் என்றும் உங்களுக்கு உண்டு.
ReplyDeleteஇன்று நேரம் கிடைத்திருந்தால் கண்டிப்பாக உங்களிடம் ஆசி வாங்க இல்லாளுடன் நேரில் வந்திருப்பேன். கண்டிப்பாக அடுத்த வருடமாவது நேரில் வந்து ஆசி பெறுகிறேன் அண்ணே
ReplyDeleteதிருமணநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteசிறப்பான பகிர்வு... படங்கள் அருமை...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)
ReplyDeleteஆரூர் மூனா செந்தில் said...
இன்று நேரம் கிடைத்திருந்தால் கண்டிப்பாக உங்களிடம் ஆசி வாங்க இல்லாளுடன் நேரில் வந்திருப்பேன். கண்டிப்பாக அடுத்த வருடமாவது நேரில் வந்து ஆசி பெறுகிறேன் அண்ணே
***
தம்பி: உன்னை விட எனக்கு ரெண்டு மூணு வயசு கூட இருக்குமா? :))
இப்படியெல்லாம் பேசப்படாது. அடுத்த வருஷம் வரை வெயிட் பண்ண வேண்டாம் சீக்கிரமே எங்க வீட்டுக்கு வா. அதுக்குன்னு ஆசின்னெல்லாம் சொல்லப்படாது. நானே சின்ன பையன் :)
இனிய திருமண நாள் வாழ்த்துகள் மோகன்.
ReplyDeleteமூத்த பதிவர்களுக்கு மரியாதை செய்த விஷயம் மிகவும் நன்று. அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டது மிக மிக நன்று.
மீண்டும் வாழ்த்துகளுடன்....
வெங்கட்.
ஆதி வெங்கட்.
இதயங்கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்துகள் . & விழாவில் மூத்த பதிவர்களுக்கு மரியாதை செய்த விஷயம் மிகவும் நல்ல செயல் . அதைப் புகைப்படங்களாக பகிர்ந்து கொண்டது அதைவிட மிக மிக அருமை.
ReplyDeleteவிழாவில் நீங்கள் எடுத்த படங்களை உங்களிடம் இருந்து சுட்டு கொள்ளலாமா? அந்த படங்களை பதிவர்கள் அவர்களின் பதிவுகளுக்கு ஏற்றவாறு எடுத்து போட்டு கொள்ளலாமா என்பதை உங்கள் பதிவின் மூலம் அறிவிக்கலாமே? எங்களைப் போல விழாவில் கலந்து போட்டோ எடுக்க முடியாதவர்களுக்கு உதவியாக இருக்குமென நினைக்கிறேன். அனுமதி கிடைக்குமா?
திருமண நாள் நல் வாழ்த்துக்கள்! இன்றுபோல் என்றும் வாழ்க!
ReplyDeleteபுகைப்படங்கள் அருமை.
வாழ்த்துக்கள் யூத் பதிவருக்கு !
ReplyDeleteதிருமணநாள் வாழ்த்துக்கள். உங்க தங்க்ஸுக்கும் என்னுடைய வாழ்த்தை சொல்லிடுங்க
ReplyDeleteAvargal Unmaigal
ReplyDelete// அந்த படங்களை பதிவர்கள் அவர்களின் பதிவுகளுக்கு ஏற்றவாறு எடுத்து போட்டு கொள்ளலாமா என்பதை உங்கள் பதிவின் மூலம் அறிவிக்கலாமே? //
நீங்க வேற ! எல்லாரும் ஏற்கனவே இங்கிருந்து போட்டோ எடுத்து தங்கள் பதிவில் போட்டு கிட்டு இருக்காங்க . சில பேர் மட்டும் தான் நம்ம பேரை ஓரமாவது நன்றின்னு சொல்றாங்க.
Prem Kumar.s said...
ReplyDeleteவாழ்த்துக்கள் யூத் பதிவருக்கு !
**
க. க. போ :))
திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சார்....
ReplyDeleteஇனிய மண நாள் வாழ்த்துகள் மோகன்.இந்த மூத்தவனின் பரிபூரண ஆசிகள்.
ReplyDeleteபடங்கள் அருமை.மிக்க நன்றி
திருமணநாள் வாழ்த்துகள்...
ReplyDeleteமணநாள் வாழ்த்துகள் மோகன்! அருமையான புகைப்படங்கள்!
ReplyDeleteஅன்பின் இனிய மோகன்!
ReplyDeleteதங்கள் மணவிழா நாளான இன்றுபோல் என்றும் வாழ்வாங்கு வாழ்க! என்று நான் வணங்கும் வேங்கடவனை வேண்டுகிறேன். வாழ்க பல்லாண்டு!
திருமண நவ்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்னிக்கி வேற ஏதும் பதிவு போடாமா, வீட்டம்மாவ எங்கயாவது அவங்க விரும்புற இடத்துக்கு கூட்டிட்டு போய் தனி இடத்துல அடிவாங்குங்க.
நானெல்லாம் அப்படித்தான் பன்றது....
இனிய மண நாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteசீரோடும் சிறப்போடும் நலத்தோடும் புகழோடும்
என்றென்றும் சிறந்து வாழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அருமையாக புகைப்படம் எடுத்து பதிவாக்கித்
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
இனிய மண நாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteசீரோடும் சிறப்போடும் நலத்தோடும் புகழோடும்
என்றென்றும் சிறந்து வாழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அருமையாக புகைப்படம் எடுத்து பதிவாக்கித்
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
வாழ்த்துக்கள் மோகன்/உங்க கல்யாண போட்டோ இருந்தா அதையும் போடுங்க
ReplyDeleteஉங்கள் மணவாழ்வு தொடர்ந்து பிரகாசிக்கட்டும். நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களிடம் நான் கேட்க நினைத்ததற்காக பதிலை படித்தேன்.
நன்றி
வில்லவன்கோதை
திருமன நாள் வாழ்த்துக்கள் சார்! பதிவு அருமை!
ReplyDeleteபதிவும் படங்களும் அருமை...
ReplyDeleteஇன்று போல் என்றும் மணவாழ்வில் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்...
ReplyDeleteதங்களின் இல்லற வாழ்வு மென்மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமுவந்து வாழ்த்துகிறேன்
ReplyDeleteயார் வயதுல சின்னவங்கன்ற நம்ம சண்டையை நாளைக்கு வெச்சுக்குலாம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். அந்த “அப்பாவி” பொண்ணுக்கிட்டயும் என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.
ReplyDeleteஎப்படியும் பர்த்டேக்கு போஸ்ட் போடுவீங்கதானே அப்போ தெரிஞ்சுக்குறேன். யார் சின்னவங்கன்னு?
ReplyDelete
ReplyDeleteதிருமண நாள் நல் வாழ்த்துக்கள் மோகன் சார்
இன்று போல் என்றும் வாழ்க
படங்கள் அனைத்தும் ரொம்ப நல்லா வந்திருக்கு மோகன் சார்
ReplyDeleteஇன்னும் நான் இருக்கும் போட்டோ வரலை
ReplyDelete(இதை "தம்பி டீ இன்னும் வரலே" என்று வடிவேல் பேசும் டைலாக் போல் எடுத்து கொள்ளவும் ஹா ஹா )
உங்களுக்கும் உங்களின் ஹவுஸ் பாஸ்க்கும் என் இதயம் நிறைந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் மோகன்.
ReplyDeleteதம்பி சரவணன்... நான்கூடத்தான் படங்கள்ல வரலை... அவ்வ்வ்வ்வ்!
அணைத்து படங்களும் அருமை சார்.... படங்களுடன் கோர்த்திருந்த தகவல்களும் அருமை
ReplyDeleteஅண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்....
சென்னை பித்தன் said...
ReplyDeleteஇனிய மண நாள் வாழ்த்துகள் மோகன்.இந்த மூத்தவனின் பரிபூரண ஆசிகள்.
***
சார் இந்த நாளில் உங்களின் ஆசிகள் மிக மிக மகிழ்ச்சி தருகிறது ! மிக்க நன்றி
மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteபெரியவர்களின் பரிபூரண ஆசிர்வாதங்கள் உரித்தாகட்டும்
புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteஅன்பின் இனிய மோகன்!
தங்கள் மணவிழா நாளான இன்றுபோல் என்றும் வாழ்வாங்கு வாழ்க! என்று நான் வணங்கும் வேங்கடவனை வேண்டுகிறேன். வாழ்க பல்லாண்டு!
**
ஐயா மிக்க மகிழ்ச்சி ! மிக்க நன்றி.
வாழ்த்துகள் சார்!
ReplyDeleteபட்டிகாட்டான் Jey said...
ReplyDeleteஇன்னிக்கி வேற ஏதும் பதிவு போடாமா, வீட்டம்மாவ எங்கயாவது அவங்க விரும்புற இடத்துக்கு கூட்டிட்டு போய் தனி இடத்துல அடிவாங்குங்க.நானெல்லாம் அப்படித்தான் பன்றது....
**
நல்லா குடுக்குராங்கையா அட்வைசு ! சாயந்தரம் கூட்டிட்டு போறேன் ; நாள் முழுக்க உட்கார்ந்து பேசினா அவ்ளோ தான் ; சண்டை, அப்புறம் அழுகை, கடைசியில் நிறைய பொருட்செலவு பண்ணி சமாதானம்.
சோ ரெண்டு மணி நேரம் ஹோட்டல் கூட்டி போயிட்டா, better - நமக்கும் உணவகம் அறிமுகம்ன்னு ஒரு பதிவு தேத்திடலாம் (ஆரிய கூத்தாடி)
ராஜி said...
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள். அந்த “அப்பாவி” பொண்ணுக்கிட்டயும் என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.
*****
அப்பாவியா? அடப்பாவி :))
ஆள் கேள்ஸ் சப்போர்டிங் கேள்ஸ் ஒன்லி ! திஸ் இஸ் பெண்ணாதிக்கம் :))
பால கணேஷ் said...
ReplyDeleteதம்பி சரவணன்... நான்கூடத்தான் படங்கள்ல வரலை... அவ்வ்வ்வ்வ்!
***
அப்படியா? அடுத்த பதிவில் ஆள் போட்டோ கான்சல்; முதல் போட்டோ நீங்க தான் கணேஷ் அண்ணே.
r.v.saravanan said...
ReplyDeleteஇன்னும் நான் இருக்கும் போட்டோ வரலை
**
முதல்லையே போட்டா எல்லா பதிவுக்கும் வர மாட்டீங்க இல்லை. போடுவோம் போடுவோம் ! இன்னும் ஸ்டாக் இருக்கு. ஆள் போட்டோ கன்பார்மா இங்கே போடப்படும்
சீனு said...
ReplyDeleteஅண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்....
**
கிர்ர்ர். :))
தம்பி உன் வலைப்பதிவின் தலைப்பு தான் திருமண வாழ்க்கையும்.. திடங்கொண்டு போராடு !
மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
ReplyDeleteதங்களின் இல்லற வாழ்வு மென்மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமுவந்து வாழ்த்துகிறேன்
**
அண்ணே வருஷா வருஷம் நானும் கல்யாண நாளைக்கு பதிவு போடுறேன். வருஷத்துக்கு ஒரு முறை கரீட்டா அதுக்கு மட்டும் உள்ளே வந்து வாழ்த்து சொல்றீங்க. போன வருஷம் போட்ட பதிவு லிங்க் பாருங்க அதிலேயும் வந்து வாழ்த்து சொல்லிருக்கீங்க :)
பாண்டியன்ஜி said...
ReplyDeleteஉங்கள் மணவாழ்வு தொடர்ந்து பிரகாசிக்கட்டும். நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.
உங்களிடம் நான் கேட்க நினைத்ததற்காக பதிலை படித்தேன்.
நன்றி
வில்லவன்கோதை
***
ஐயா வல்லியம்மா படமாவது, காலை விழாவில் சுய அறிமுகம் செய்யும் போது எடுத்து போட்டுட்டேன். உங்கள் படம் எடுக்கவே இல்லை என்பது எனக்கு பதிவை வெளியிடும் முன் மிக மனதை வருத்தியது ! மக்கள் சந்தை நண்பர்கள் படம் எடுத்துள்ளனர். அதில் உங்கள் படம் இருந்தால் அவசியம் பகிர்கிறேன்
//
ReplyDeleteலட்சுமி அம்மாவுக்கு சிரிப்பு போலிஸ் ரமேஷ் பொன்னாடை போர்த்துகிறார்
//
தரமான இலக்கியப்பதிவுகள் எழுதி.., இலக்கியத்திற்கு வார்த்தைகளால் அடைக்க முடியாத அளவிற்கு சேவை செய்து வரும் நம்ம சிரிப்பு போலிஸ் ரமேஷ் அண்ணன் இவருதானா?
மூத்த பதிவர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட்டது... நல்ல விஷயம்! நிச்சயம் அவர்கள் மனதில் பெரும் உற்சாகம் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை!
ReplyDeleteதிருமண வாழ்த்து சொல்லும் அளவிற்கு நான் பெரியவன் கிடையாது!
ReplyDeleteஇன்று போல் நீங்கள் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் பிரதர்!
மூத்தவர்களுக்கான பாராட்டு விழா நெகிழ்ச்சியான தருணம் தான்.இனிய திருமண நாள் வாழ்த்துகள் தோழரே..
ReplyDeleteஎன் உள்ளம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா .. சீரும் சிறப்புடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ...
ReplyDeleteஇந்த படங்கள் என்றும் மனதில் இருந்து அழியாது, உள்ளத்தை பசுமையாக்கும் சிறப்பான நிகழ்வுகளை படமாக்கி
ReplyDeleteதந்தமைக்கு என் நன்றிகள் அண்ணா ..
படங்கள் அருமை...திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடங்களும் விரிவான விளக்கங்களும் அருமை.
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துகள் மோகன் குமார் அண்ணே.
ReplyDeleteநீங்க சிறந்த பதிவர் மட்டுமல்ல நல்ல போடோக்ராபர்-னு நிருபிசிடீங்க சார்.. அருமை...
ReplyDeleteமணநாள் வாழ்த்துக்கள்... உங்க ஹவுஸ் பாஸ்-கும் தெரிவிச்சிடுங்க.... வெள்ளி விழா, வைர விழா அப்புறம் நிறைய விழா காண என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!
நிச்சயம் இது போன்ற பதிவர் விழா இதற்குமுன் நடந்திருக்காதுதான். சீனியர்களுக்கு மரியாதை-அற்புதம்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் எங்கள் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள். இன்று போல என்றும் இனிமையாக, இளமையாக பல்லாண்டு இணைந்து வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மணநாள் வாழ்த்துகள் மோகன்.
ReplyDelete//எப்படியும் பர்த்டேக்கு போஸ்ட் போடுவீங்கதானே அப்போ தெரிஞ்சுக்குறேன். யார் சின்னவங்கன்னு? //
நாள் மாதம் சொன்னாலும் வருஷத்தை மட்டும் சொல்லவே மாட்டார், அப்ப என்ன செய்வீங்க மேடம்.
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ! மூத்த பதிவர்களை கௌரவிக்கும் நெகிழ்ச்சியான தருணங்கள் !
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள்..
ReplyDelete:-)
படங்கள் அத்தனையும் அருமை. நெகிழ்வான தருணங்கள். அற்புதமான திருவிழாவை அழகாய் நடத்தி முடித்தத சாதனைக்காக ஒரு ஸ்பெசல் வாழ்த்து. மேலும் இனிய திருமண நாள் வாழ்த்துக்களும் சகோ.
ReplyDeleteமிகவும் அருமையான படங்களுடன் அற்புதமான பகிர்வு. பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றிகள்.
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணா... அண்ணியிடமும் சொல்லிவிடுங்கள்.
ReplyDelete(15- வருடம் ஆகிறதா? நான் ஏதோ போன வருடம் திருமணமான புது மாப்பிள்ளை என்று நினைத்தேன்)
Congrats Mohan. Wish you many more years of happy married life. Where/when is the party?
ReplyDeleteஇனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் மோகன் சார்! எம் நெஞ்சில் நிறைந்துவிட்ட பல மூத்தபதிவர்களைப் பார்க்க வழி செய்தமைக்கு மிக்க நன்றிகள் சார்!
ReplyDeleteஇனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்..!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்....
ReplyDeleteதிருமணநாள் நல்வாழ்த்துக்கள் மோகன்.
ReplyDeleteதிருமணநாள் நல்வாழ்த்துக்கள் மோகன்.
ReplyDeleteஇனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்..!
ReplyDeleteவாழ்க வளமுடன். :))
ReplyDeleteமனப்பூர்வமான வாழ்த்துக்கள்...
ReplyDeletedear mohan many more happy returns of the day convey our wishes to chitra our wishes to ur daughter sneha also
ReplyDeletekanakkayan. vanajamani, amizhdhu parimala amizhdhu athithya and aravind
dear mohan many more happy returns of the day convey our wishes to chitra our wishes to ur daughter sneha also
ReplyDeletekanakkayan. vanajamani, amizhdhu parimala amizhdhu athithya and aravind
மூத்தோர்களை பாராட்டி ஊக்குவித்தது சிறப்பான செயல்! பதிவர் குழுமத்திற்கு வாழ்த்துகள்!
ReplyDelete***
திருமண நாள் வாழ்த்துகள்!
மூத்த பதிவர்களுக்கும் , இன்று கல்யாண நாள் கொண்டாடும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்/
ReplyDeleteபிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். மேலும் விவரங்களுக்கு:
ReplyDeleteகேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview
பதினைஞ்சுக்கு இந்த முப்பத்தெட்டின் அன்பும் ஆசிக்ளும்.
ReplyDeleteநல்லா இருங்க!
///
ReplyDeleteதம்பி: உன்னை விட எனக்கு ரெண்டு மூணு வயசு கூட இருக்குமா? :))
அதுக்குன்னு ஆசின்னெல்லாம் சொல்லப்படாது. நானே சின்ன பையன் :) ///
ஏண்ணே, இப்படி குண்டத் தூக்கி போட்டீங்க, நெஞ்சு வலிக்குது. நீங்க கேபிளுக்கு போட்டியா யூத் பதிவராகிடுவீங்க, போல இருக்கே.
நண்பர்களே.. உங்களது அனைவரின் அன்பில் நாங்கள் இருவரும் மிகவும் நெகிழ்ந்து போனோம். இவ்வளவு அன்பை சிறிதும் எதிர்பாராமல் எப்படி நன்றி சொல்வது என தெரியாமல் நிற்கிறோம். நெஞ்சார்ந்த நன்றி ! நம் நட்பு தொடரட்டும் !
ReplyDeleteஇனிய மண நாள் நல்வாழ்த்துகள்..
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துகள் மோகன்! தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!
ReplyDeleteசென்னை பதிவர் மாநாட்டில் மூத்த பதிவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசை வழங்கியது எல்லோராலும் பாராட்டப்பட்ட மறக்கமுடியாத நிகழ்வு. எனது பெயரை குழுவுக்கு பரிந்துரைத்ததற்கு மிக்க நன்றி.
படங்கள் அனைத்தும் அருமை.
என் வீட்டில் இரண்டு நாட்டகளாக நெட் கனக்ஷன் இல்லை. அதனால் தாமதமாக வாழ்த்தும் பின்னூட்டமும் வாக்கும் அளித்திருக்கிறேன். மன்னிக்கவும்.
அன்பு திருமணநாள் நல்வாழ்த்துகள் மீண்டுமொருமுறை மோகன்குமார் தம்பதியருக்கு இங்கேயும் வாழ்த்துகிறேன்...
ReplyDeleteமனம் நிறைந்த ஆசிகள் மோகன்குமார்..
இல்லறம் என்பது அன்பை பிணைத்து இறுதிமூச்சு வரை இணைந்திருந்து இளையோருக்கு முன் உதாரணமாகவும் மூத்தோரை வணங்கும் நல்ல பிள்ளைகளாகவும் என்றும் சீரோடும் சிறப்போடும் நல்ல ஆரோக்கியத்துடனும் தெய்வ சிந்தனையுடன் வாழ ஆசீர்வதிக்கிறேன்பா....
திருமண நாளுக்கு பொருத்தமாக மூத்தோர்களின் நெகிழ்வான தருணங்களை மிக தத்ரூபமாக அவர்களின் மனதில் இருந்த நெகிழ்வை , சந்தோஷத்தை, நன்றியை படம் பிடித்த உங்கள் அன்பை என்றும் மறக்கவே முடியாது... அதற்கும் சிறப்பான நன்றிகள் தம்பி உங்களுக்கு...
பட்டுக்கோட்டை பிரபாகர் சார் சொன்னது சத்தியமான உண்மை...
இளைஞர்கள் சிந்தித்து தன் படைப்பை இட்டால்...
மூத்தோர்கள் தன் அனுபவங்களை வாழ்வியலை இங்கே நமக்கு பாடமாக தருகிறார்கள்....
அனுபவங்களை பாடமாக எடுத்துக்கொண்டு அவர்கள் வழி நடந்தால் வெற்றியும் உறுதி....வாழ்க்கையும் நம் பிள்ளைகளுக்கும் நாம் நல்லவைகளை சொல்லித்தருவோம். நம்மைப்பார்த்து நம் பிள்ளைகளும் நல்லதை கற்கும்...
பிரச்சனைகள் இல்லாத சண்டை இல்லாத உலகம் அமைதி பூங்காவாக இருக்க மூத்தோர் வழி நடப்போம் என்று உரைக்கும் விதமாக மிக அருமையாக படங்களும் அவர்களை பற்றிய மனதுக்கு நிறைவான சம்பவங்களும் தொகுத்து வழங்கியமைக்கு அன்பு நன்றிகள் மோகன்குமார்...
பரிசுகள் பெற்று எங்கள் மனதை வென்ற மூத்தோர் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களுடன் கூடிய வாழ்த்துகள்....
இனிய மண நாள் நல்வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஇன்றுடன் உங்கள் பதிவினை படிக்க ஆரம்பித்து வருடம் ஒன்று ஆகி விட்டது !!
பெண் பார்க்க போன அந்த பதிவுதான் நான் முதல் முதலில் படித்தது !!
வாழ்த்துக்கள் சார் !!
அன்புடன்
அருண் பிரசாத் ஜெ
அன்பின் மோகன்,
ReplyDeleteவணக்கம். அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்.
வயதிலும்,திருமண நாளிலும் சில மாதங்கள் உங்களைவிட நான் மூத்தவன்.
அன்புடன்
அரவிந்தன்
அன்பின் மோகன் குமார் - இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் - மேன் மேலும் சிறப்பும் புகழும் அடைந்து பெரு வாழ்வு வாழ பிரார்த்தனைகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் மோகன் குமார் - நானும் மூத்தோர் பாராட்டு விழாவில் கலந்து கொண்டேன் - புகைப்படங்கள் இருந்தால் அனுப்பி வைக்கவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete