Sunday, November 8, 2020

Exam (2009)- ஆங்கில பட விமர்சனம்

ர் அறையில் குழுமியிருக்கும் 8 பேர் ஒரு தேர்வுக்காக காத்திருக்கிறார்கள். பல நிலைகளை கடந்து வந்து இறுதி கட்ட தேர்வு இது. அவரவர் இருக்கையில் அவரது எண் போடப்பட்ட தேர்வு தாள் இருக்கிறது. Invigilator அவர்களிடம் வந்து தேர்வு மற்றும் அதன் விதிகள் பற்றி விளக்குகிறார். ஒரு கேள்வி- ஒரு பதில் - அது தான் தேவை என்றும் - தன்னிடமோ அங்கிருக்கும் செக்கியூட்டியிடமோ பேசினால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்கிறார். மேலும் தத்தம் தேர்வு தாளை கிழித்தாலோ, அந்த அறையை விட்டு வெளியே சென்றாலோ தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்கிறார் .

80 நிமிட தேர்வு துவங்குகிறது. எந்த கேள்வி தாளும் யாருக்கும் தரப்படவில்லை. முதலில் கேள்வி தாளை கண்டுபிடிக்கவேண்டும்..

அந்த 8 பேர் அதனை எப்படி எதிர் கொண்டார்கள்- யார் தேர்வானார்கள் என்பதைத்தான் 2009ல் வெளியான இந்த படம் சொல்கிறது

கேள்வி தாளே இல்லாமல் ஒரு தேர்வு - ஒரு அறைக்குள் 90 நிமிடத்திற்குள் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் - என்ற கான்செப்ட் அசத்துகிறது

குறிப்பாக ஒரே அறை என்பது நமக்கு அதிகம் உறுத்தாமல் திரைக்கதை விறுவிறுவென்று செல்கிறது

வித்தியாச சூழலில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் - எப்படி மாறுகிறார்கள் என்பது திரைக்கதையின் ஒரு பகுதி . 

எனக்கு உறுத்திய ஒரு விஷயம் - ஒரு வேலைக்காக ஒருவர் மற்றவரை துப்பாக்கி எடுத்து சுடும் அளவு செல்வாரா என்பது தான் 

இறுதியில் வேலை ஒரு சரியான நபருக்கு கிடைப்பது நிறைவு 

இந்த பரபரப்பான வித்தியாச ஆங்கில படத்தை நிச்சயம் பார்க்கலாம் !

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...