கிரிக்கெட் கார்னர்
நேற்று இந்தியா அயர் லேண்டை ஒரு வழியா ஜெயித்தது. ஆனா அதை விட சென்னையில் நடந்த இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா இடையிலான மேட்ச் செம இன்டரஸ்டிங் ஆக இருந்தது. இது மாதிரி லோ ஸ்கோரிங் மேட்ச் தான் டோர்னமேன்டிற்கு சுவாரஸ்யம் தருகிறது.(இது வரை இங்கிலாந்து விளையாடிய நான்கு மேட்ச்களுமே கடைசி வரை யார் ஜெயிப்பார்கள் என்று தெரியாத நிலை தான் கவனித்தீர்களா?) நேற்றைய மேட்சில் இங்கிலாந்து வென்றது இந்தியாவிற்கு நல்லது. எப்படி என்கிறீர்களா? தென் ஆப்பிரிக்கா எல்லா மேட்சும் ஜெயித்தால் இந்த குருப் அவர்கள் தான் டாப்பில் இருப்பார்கள். நமது குருப்பில் நாம் டாப்பில் வந்தால்தான் எதிர் குருப்பில் உள்ள வீக்கான (நான்காம் இடத்தில உள்ள) அணியுடன் விளையாடலாம். எனவே செமி பைனல் வாய்ப்பு வலுக்கும்.

நமது ஆரம்ப ஊகங்களை பொய்யாக்கி இதுவரை பாகிஸ்தான் நன்கு விளையாடி வருகிறது. அதிலும் அப்ரிதி இந்த உலக கோப்பையில் மிக அதிக விக்கெட் வீழ்த்தியவராய் வர கூடும்.
நிற்க. தோனி இன்னும் பியூஷ் சாவ்லாவையே மலை போல் நம்பி இருக்கிறார். அஸ்வினுக்கு எப்போது தான் வாய்ப்பு தர போகிறாரோ? இரண்டு பாஸ்ட் பவுலர்கள் மட்டும் வைத்து விளையாடும் போது அஸ்வின் நிச்சயம் நல்ல சாய்ஸ். அவர் பவர் ப்ளேயிலும் பந்து வீச கூடியவர். இந்தியாவின் பீல்டிங் & பவுலிங் முன்னேறா விடில் நாம் கப் ஜெயிப்பது கடினமே !
பார்த்த படம்: காவலன்
விஜய்யை இப்படி பார்க்க எவ்வளவு நன்றாக உள்ளது ! மசாலா பஞ்ச் டயலாக்குகள் பின்னால் போகாமல் இப்படி பட்ட கேரக்டர்களில் நடித்தால் நன்றாக இருக்கும். அசின் எப்போதுமே எனக்கு பிடிக்கும். துவக்கத்தில் நமக்கு கோபம் வர வைக்கிற கேரக்டர் எனினும் நன்கு தான் நடித்திருந்தார். அதிசயமாக இந்த படத்தில் பாடல்கள் சில, படத்தோடு மிக சரியாக பொருந்தி, கேட்பதை விட படத்தோடு பார்க்க பிடிக்கிறது. வடிவேலுவும் அவ்வபோது சிரிக்க வைக்கிறார். கடைசி அரை மணி நேரம் நிச்சயம் ஆச்சரிய படுத்துகிறது. கிளைமாக்சில் சண்டை இல்லாமால் உணர்வுகளை வைத்தே அமைத்தது பெரும் ஆறுதல். விஜய்க்கு அடுத்து த்ரீ இடியட்ஸ்.. பன்ச் டயலாக்குகள் & குபீர் சண்டைகளிலிருந்து வெளி வந்து அடிக்கடி இப்படி படம் செய்தால் நன்றாயிருக்கும்.
சட்ட சொல்: ஹோஸ்டைல் விட்னஸ்
வழக்கு துவங்கும் போது ஒரு சாட்சி ஒருவருக்கு எதிராக சாட்சி சொல்கிறார். ஆனால் அவரே பின்னர் தன் நிலையை மாற்றி கொண்டு ஆதரவாய் சாட்சி சொன்னால், அவரை ஹோஸ்டைல் விட்னஸ் என்று சொல்லுவார்கள். கிரிமனல் வழக்குகளில் பெரும்பாலும் வழக்கு பதிவு செய்வதும் சாட்சிகளை கொண்டு வருவதும் போலிசாக இருக்கும். அப்படி போலிஸ் கொண்டு வரும் சாட்சிகள் அவர்களுக்கு எதிராகவே போகும் நிலை வந்தால் "ஹோஸ்டைல் விட்னஸ் " என்பார்கள். அநேகமாய் அவரை எதிர் அணியினர் சரிக்கட்டியது ஒரு காரணமாய் இருக்கலாம். இப்படி மாற்றி பேசும் சாட்சிகள் நம்ப தன்மை இழப்பார்கள். நீதி மன்றம் அவர்கள் பேச்சை எடுத்துகொள்ள மாட்டார்கள். அப்ப என்ன பலன் என்கிறீர்களா? உங்களுக்கு எதிரான ஒரு சாட்சி நம்பக தன்மை இழந்து அவர் சாட்சியம் எடுத்து கொள்ள படாவிடில் அது நல்லது தானே! அது !!
டிவி பக்கம்
அதீதத்தில் வீடு திரும்பல்
அதீதம் என்ற இணைய இதழ் சமீபத்தில் துவங்கப்பட்டது. மாதம் இரு முறை வரும் இந்த இதழ் இது வரை நான்கு இதழ்கள் வந்துள்ளது. இதில் வாரம் ஒரு ப்ளாகரை அறிமுக படுத்துகிறார்கள். இந்த இதழில் உங்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு ப்ளாகரை பற்றி எழுதியுள்ளார்கள். யாரா? அட.. அதை நானே எப்படி சொல்றது? இதோ இந்த லிங்கில் நீங்களே படிச்சிக்குங்க.
சிறு அறிவிப்பு
உலக கோப்பை நடக்கும் நேரத்தில் எங்கள் ஊரான நீடாவில் கிரிக்கெட் விளையாடிய நினைவுகளை பகிர உள்ளேன். மூன்று அல்லது நான்கு பதிவுகள் இந்த வரிசையில் வர கூடும். இந்த மினி தொடர் இந்த வாரம் புதன் அல்லது வியாழன் அன்று தொடங்கும்.
வாங்க முன்னேறி பார்க்கலாம் என்ன ஆச்சு என வினவும் நண்பர்களுக்கு : அடிக்கடி இடைவெளி வருவதால் மூன்று அல்லது நான்கு பகுதிகள் எழுதி விட்டே மறுபடிவெளியிட ஆரம்பிக்க உள்ளேன். அதுவும் விரைவில் தொடங்கலாம்.
அய்யா சாமி
இப்போ சென்னை வாசியான பின் அவரும் ரெண்டையும் சோப்பு என்றே கூற ஆரம்பித்து விட்டார்.