தாம்பரத்தில் பள்ளி மாணவி ஸ்ருதி இறந்த பின் தமிழக அரசும் போலிசும் வண்டிகளில் அதிக கூட்டம் ஏற்றி செல்ல கூடாது என சில தடைகளை விதித்து, பள்ளிகளின் வெளியே மேற்பார்வை செய்வதை துவக்கி உள்ளது. ஆனால் இதிலும் போலிஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு ஏமாற்ற பல்வேறு வழிகளை பள்ளிக்கு வண்டி ஓட்டும் ஆட்டோ/ வேன் காரர்கள் செய்து வருகிறார்கள்.
எல்லா ஆட்டோக்களும் பத்து முதல் பதினைந்து மாணவர்களை ஏற்றி கொண்டு தான் செல்கிறது.
நாங்களே இதுபற்றி எங்கள் பெண்ணுக்கு ஆட்டோ ஓட்டுபவரிடம் பல முறை பேசியும் எந்த பலனும் இல்லை. இத்தனை கூட்டம் ஏற்றி செல்வது தவறு தான் என்று ஒப்பு கொள்ளும் அவர் அதனை மாற்றி கொள்வதே இல்லை.
எங்கள் ஊரான மடிப்பாக்கத்தில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. பிரின்ஸ், ராஜ்குமார் சுலோச்சனா,
சாய் மெட்ரிகுலேஷன், கிங்க்ஸ், பெரியார் அரசு உயர்நிலைப்பள்ளி
ஹோலி பிரின்ஸ், என பள்ளிகள் எக்கச்சக்கம். ஆனால் இவற்றில் பெரும்பாலான பள்ளிகள் வாகனங்கள் ஏதும் இயக்குவதில்லை. முழுக்க தனியார் வேன் அல்லது ஆட்டோவை தான் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே ஆட்டோ காரர்களுக்கு கொண்டாட்டம் தான்.
அப்புறம் ஏன் இப்படிப்பட்டவர்களிடம் அனுப்ப வேண்டும்; வேறு ஆட்டோ பார்க்கலாமே என கேட்கலாம்.
எந்த ஒரு ஆட்டோவிலும் ஐந்து பிள்ளைகள் எல்லாம் செல்வது இல்லை. அனைத்தும் நிரம்பி வழிந்து தான் செல்கிறது. சரி தனியாக நமது குழந்தைக்கு மட்டும் ஒரு ஆட்டோ வைப்போம் என்று கூட முயன்று பார்த்துள்ளோம். ஒரே ஒரு குழந்தைக்கு எனும் போது வாரத்தில் இரண்டு நாளாவது ஆட்டோ காரர் வராமல் இருந்து விடுவார். அதை விட கொடுமை... அன்று மாலை வரமாட்டேன் என நம்மிடம் சொல்லவே மாட்டார். " உங்கள் குழந்தை மட்டும் பள்ளியில் தனியா வெயிட் பண்ணுது" என பள்ளியிலிருந்து போன் வரும், விழுந்து அடித்து கொண்டு ஓடனும், இந்த கொடுமைக்கு தான் பலர் செல்லும் ஆட்டோ எனில் அனைத்து பெற்றோருக்கும் பதில் சொல்லணும், அடிக்கடி லீவு போட மாட்டார்கள் என நினைத்து இத்தகைய ஆட்டோக்களில் அனுப்ப வேண்டியிருக்கிறது.
ஏப்ரல், மே மாதத்தில் பள்ளி இல்லாத போது கூட எல்லா ஆட்டோ கார்களும் முழு பணம் வாங்கி கொள்கிறார்கள். பள்ளிகளில் எப்படி அந்த மாதத்திற்கு கூட பணம் கட்டுகிறீர்கள். அப்படி தான் என்று சொல்லி வாங்குகிறார்கள். வாங்கி விட்டு போகட்டும்.
மாதா மாதம் இன்னும் அதிகம் கூட வாங்கி கொள்ளட்டும். ஆனால் பிள்ளைகள் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம்? அதில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை
இப்போது கூட "போலிஸ் தொந்தரவு அதிகமாயிடுச்சு; வண்டியை எல்லாம் செக் பண்றாங்க " என்று தான் சொல்லி கொண்டே இருக்கிறார்களே அன்றி, குழந்தைகளை புளி மூட்டை போல தாங்கள் ஏற்றி செல்கிறோம் என்ற தங்கள் தவறை உணரவே இல்லை.
இந்த பிரச்சனை துவங்கி, போலிஸ் வாகனங்களில் சோதனை போடுகிறார்கள் என்றதும் இரண்டு நாள் வண்டி ஓட்டுவதை நிறுத்தி விட்டார்கள். " நீங்களே பள்ளியில் விட்டு அழைத்து கொள்ளுங்கள்" என்றனர். மாலை அலுவலகத்தை விட்டு விட்டு போவது பெரும் பிரச்சனை. இரண்டு நாளில் போலிஸ் தொந்தரவு குறையும் என நினைத்தனர் ஆட்டோ காரர்கள். அதன் பின்னும் போலிஸ் கண்காணிப்பு தொடரவே, இப்போது அவர்கள் கண்ணில் மண்ணை தூவ புது வழி கண்டுபிடித்துள்ளனர்.
பள்ளி அருகிலும், முக்கிய சாலையிலும் மட்டும் தானே போலிஸ் உள்ளது? இதனால் ஐந்து ஐந்து பேராக மாணவர்களை இரண்டு தெரு தள்ளி கொண்டு போய் நிறுத்தி வைத்து விட்டு வந்து விடுகிறார்கள். பின் அனைவரையும் வழக்கம் போல் கும்பலாக கூட்டி கொண்டு போலிஸ் தொந்தரவு இல்லாத வீதிகளில் செல்கிறார்கள்.
இன்னும் சிலர் செய்வது இன்னும் வேடிக்கை. ஒரு வேன் எடுத்து வந்து எல்லா குழந்தைகளையும் அழைத்து கொண்டு இரண்டு தெரு தாண்டும் வரை செல்கிறார்கள். அதுவரை இறங்குவோர் இறங்கி கொள்கிறார்கள். இரண்டு தெரு தள்ளி, தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு, அங்கிருந்து பின் ஆட்டோவில் தொடர்கிறார்கள்.
மடிப்பாக்கத்தில் கடந்த ஒரு வாரமாக இப்படித்தான் நடக்கிறது.
இப்படி ஒரு தெருவில் பல குழந்தைகளை விட்டு விட்டு போனால், அந்த நேரத்தில் அவை விளையாடி தெருவில் வாகனம் மோதினால் என்ன ஆவது? அல்லது தனியே நிற்கும் குழந்தைகளில் ஒன்றை யாரேனும் கடத்தி போனால் என்ன ஆவது?
இப்படி ஒரு சம்பவம் நடந்தால் தான் நாம் அதையும் கற்று கொள்வோமா?
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் சென்னை ஆட்டோ காரர்கள் குழந்தைகள் விஷயத்திலும் இப்படி மனிதாபிமானம் இன்றி நடந்து கொள்வது சரியா?
இந்த பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் !
இந்தப் பூனைகளுக்கு மணி கட்டப் போவது யார் ?
ReplyDelete(த.ம.1)
நிச்சயம் சிந்திக்க வேண்டிய விஷயம் மோகன்.
ReplyDeleteகுழந்தைகளை புளிமூட்டைகள் மாதிரி அடைத்துக் கொண்டு போவது என்று தான் நிற்குமோ... தில்லியில் தனியார் பள்ளிகள் வாகனங்கள் வைத்துள்ளார்கள். ஆனால் ஆட்டோ/வேன் காரர்கள் வாங்கும் பணத்தினை விட மிக மிக அதிகம் வாங்குகிறார்கள். எல்லாவற்றிலும் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கிறது.
தில்லியிலும் அவ்வப்போது விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு விபத்து நடந்த சில நாட்களுக்குக் கெடுபிடிகள் இருக்கும். அதன் பிறகு மீண்டும் அதே கதைதான்... :(
சிந்திக்க வேண்டும்... பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்... நன்றி... (T.M.5)
ReplyDeleteஎன்னங்க இது அக்கிரமமா இருக்கு:(
ReplyDeleteதிருந்தவே மாட்டாங்களா? விபத்துக்கள் பலதையும் பார்த்தும் வாழ்க்கைப்பாடம் படிக்கமாட்டோமுன்னு அடம் புடிச்சால் எப்படி?
நம்ம வீட்டுல அம்மணி கொண்டு போய் விட்டுட்டு சாயந்திரம் கூட்டிட்டு வருவாங்க...
ReplyDeleteவீடு திரும்பல் தலைப்பில் சென்னை பித்தன் ஒரு பதிவு போட்டு இருக்கார்..எது பதிவு, எது ப்ளாகர் நேம் என்று தெரிய கொஞ்ச நேரம் ஆனது..
ReplyDeleteமோகன், உங்கள் வழக்கறிஞர் நண்பர்கள் யாரிடமாவது இதை தெரியப்படுத்துங்கள். முடிந்தால், இந்த பதிவிற்கான லிங்க் கொடுக்கவும். நீதிமன்றத்தில், அவர்களால் பொது நல வழக்கு தொடர முடியும் இல்லையா?
ReplyDeleteநாம் நம்பி போகும் வழக்கறிஞர்களின்ன் உண்மைத்தன்மையை எப்படி அறிந்து கொள்வது? நம் வழக்கறிஞரரின் மேல் மெல்லிய சந்தேகம் வந்தபின் செய்ய வேண்டியது என்ன? சற்று விளக்கமான பதில் அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDeleteமனம் மரக்கட்டையாகி பல யுகங்கள் கடந்து விட்டது, பட்டு தான் தெரியவேண்டும் என்ற நிலை வந்தபோதும் வலிக்கும் போது மட்டும் நிவாரணம் எடுப்பதோடு சரி பிறகு அதை மறந்தே போகிறோம்
ReplyDeleteஎத்தனைதான் பட்டாலும் இவங்க திருந்தவே மாட்டாங்க. சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்படணும்.
ReplyDeleteஏங்க, பெற்றோர்கள் தானே அவங்களை அந்த ஆட்டோவில் ஏத்தி விடுறாங்க ???? இல்ல ஆட்டோ காரங்க பெற்றோர்களுக்கு தெரியாம அவங்க குழந்தைகளை ஏத்திக்கிட்டு போறாங்களா..??? தப்பு பெற்றோர்கள் மேல வச்சுக்கிட்டு ஆட்டோகாரங்களை குறை சொல்லுவது சரி இல்லை என்றே நான் நினைக்கிறன்.
ReplyDeleteமோகன் சார் இன்று மக்கள் தொலைகாட்சியில் தங்களது பேச்சை கேட்டேன் சுஜாதா அவர்களின் மத்யமர் பற்றி நீங்கள் விளக்கமாய் எடுத்துரைத்தது கேட்டேன் உங்களை டிவி இல் பார்த்தது ரொம்ப சந்தோசமாய் இருந்தது வாழ்த்துக்கள்
ReplyDeleteகண்டிப்பாக இதற்கு தீர்வு பெற்றோர்களின் கையில் தான் இருக்கிறது அவர்கள் தான் பள்ளி நிர்வாகத்துடன் போராட வேண்டும் இல்லையேல் அந்த மாதிரி பள்ளியிலிருந்து குழந்தைகளை விடுவித்து நல்ல பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
ReplyDeleteஆட்டு மந்தை கூட்டம் போல் செயல்படாமல் குழந்தைகள் பாதுகாப்பை முன்னிறுத்துவது முக்கியம்
ReplyDeleteஇந்த பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு
ReplyDeleteபோலீஸ் தான் இதை தட்டி கேட்கணும் என்பதில்லை லோடு மாதிரி ஏத்திட்டு போற ஆட்டோவை பார்க்கிற பொது மக்கள் தான் தட்டி கேட்கணும்
தில்லி பஸ்களிலும் தள்ள வேண்டியதைத் தள்ளி பழைய வண்டிகளை வைத்து பிழைப்பு நடக்கிறது. பல இடங்களில் இதை transporter mafia (தில்லியில் mafia தான்) நடத்துகிறது. அல்லாத இடங்களில் பள்ளி நிர்வாகமே இதைச் செய்கிறது.
ReplyDeletebtw, பள்ளி நிர்வாகங்களே இப்பொழுது education mafia-ஆகத் தானே இருக்கின்றன.
இந்த கொடுமை அனைத்து பகுதிகளிலும் தொடர்கதை தான்... இதற்கு ஒன்று பள்ளி பொறுபேற்க வேண்டும் அல்லது அரசு அதிரடியாக சட்டம் இயற்ற வேண்டும்... ஆட்டோ காரர்களின் அநியாயம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு தான் வருகிறதே அன்றி குறைவதில்லை (என்னதான் போலீஸ் 1 -KM கு ஒருவர் நின்றாலும் சரிதான்)...
ReplyDeleteபள்ளிகள் தாங்களே முன்வந்து பேருந்தோ, வேன்களோ இயக்க வேண்டும் அல்லது அரசு அதிரடியாக இதுபோன்ற புளிமூட்டை போல ஏற்றும் ஆட்களின் லைசன்ஸ் வண்டி பெர்மிட் ஆகியவற்றை ரத்து செய்யப்படும் என அறிவிக்க வேண்டும்... தண்டனை கடுமையாக்கபட்டால் தான் தவறுகள் (தெரிந்தே செய்யும் இதுபோன்ற கொடுமைகள்) குறைய வாய்ப்புள்ளது!!!
இது போலவே பயணிகள் ஆடோவிற்கும் கட்டுபாடுகள் கடுமையாக விதிக்க வேண்டும் நம் அரசு!!! ஒரு ஷேர் ஆட்டோவில் 10 பெரியவங்கலையே ஏத்திட்டு போறாங்க.. கொடுமை சார்!!!
நல்ல சமூக அக்கறையுள்ள பதிவு தந்த உங்களுக்கு நன்றி! சார்...
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteஆட்டோவில் இரண்டு பக்கமும் திறந்தே இருக்கிறது, அதில் குழந்தைகளை அனுப்புவது அவ்வளவு பாதுக்காப்பனதாகத் தோன்றவில்லை. நான்கைந்து பெற்றோர்கள் சேர்ந்து மாருதி Van போல கதவு உள்ள வண்டிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது நலம்.
ReplyDeleteபள்ளி வேன்களில் அனுப்புவதுதான் சிறந்த தீர்வு! அந்த வண்டிகளின் தரத்தை நிர்ணயம் செய்வதில் கடுமையான கட்டுபாடுகள் விதித்து முறையாக அவை பின்பற்றபட வேண்டும்!
ReplyDeleteசொந்த வாகனமும் கொண்டு விட சொந்தக்காரர்களும் இருந்தால் மட்டுமே தீர்வு போலத் தெரிகிறது.
ReplyDelete//சட்டங்கள் கடுமையாக்கப் படணும்//
இருக்கும் சட்டங்களே போதுமானது. அதை நிறைவேற்ற ஒழுங்கான, நாணயமான அதிகாரிகள் இருந்தால் போதும்!! :))
This comment has been removed by the author.
ReplyDeleteராஜ் said...
ReplyDeleteஏங்க, பெற்றோர்கள் தானே அவங்களை அந்த ஆட்டோவில் ஏத்தி விடுறாங்க ???? இல்ல ஆட்டோ காரங்க பெற்றோர்களுக்கு தெரியாம அவங்க குழந்தைகளை ஏத்திக்கிட்டு போறாங்களா..??? தப்பு பெற்றோர்கள் மேல வச்சுக்கிட்டு ஆட்டோகாரங்களை குறை சொல்லுவது சரி இல்லை என்றே நான் நினைக்கிறன்
S raj Problem with parents and not with auto driver.
//இந்த பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு//
ReplyDeleteவீட்டிற்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்; அதுதான் ஒரே தீர்வு!!
தற்போதைய கல்வி உரிமைச் சட்டமும் இதைத்தான் சொல்கிறது. ஆனால், அரசு அதைத் தெளிவாகச் சொல்லவில்லை; செயல்படுத்தவுமில்லை. அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாகச் சிறப்புற வேண்டும். A long way to go!!
சின்ன வயதில், நாங்களெல்லாம், பள்ளியிலிருந்து மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குச் செல்வோம். இத்தனைக்கும் எங்கள் ஊர் கிராமம்தான்; படித்ததும் தனியார் பள்ளிகள்தான். ம்ம்.. அதெல்லாம் ஒரு கனாக் காலம்.
ராஜ் மற்றும் Sri Srini :
ReplyDeleteதங்கள் கருத்துக்கு மிக நன்றி. எனினும் எனது கருத்து வேறு.
பெற்றோர் தாங்களே கொண்டு சென்று விட்டுவிட்டு அழைத்து கொள்வது எனில் ஒருவர் (மனைவி) வேலைக்கு செல்லாமல் இருக்க வேண்டும். 50 % வீட்டில் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். வீட்டில் இருக்கும் பெண்களிலும் பாதி பேர் வண்டி ஓட்டுவதற்கு தெரியாதவர்களாக உள்ளனர். எனவே அவர்களும் ஆட்டோ அல்லது வேனை விரும்புகின்றனர்.
எங்கள் கேசை சொல்கிறேன்: ஆட்டோ நிரம்பி வழிகிறதென காலை நானே கொண்டு போய் விட்டுவிடுகிறேன். மாலை மட்டுமே ஆட்டோ. அப்போது என்ன நடக்கிறதென பெண் சொல்லி தான் தெரிய முடியும்.
நிறைய பேர் போகிறார்கள் என குறைவாய் உள்ள ஆட்டோவில் அனுப்பலாம் என்றால் அப்படி ஐந்து பேருடன் யாரும்
ஓட்டுவதில்லை.
எங்கள் ஆட்டோக்காரரிடம் கூட்டமாய் ஓட்டுகிறீர்கள் என சொல்லி சொல்லி வேன் வாங்குகிறேன் என அனைவரிடமும் பணம் வாங்கினார். அந்த பணத்தை மாதா மாதம் தரும் பணத்தில் குறைத்து கொண்டார் ஆனால் வேன் இருந்தும் கூட அதை எடுத்து வருவதில்லை. கேட்டால் சேற்றில் வண்டி மாட்டி கொள்கிறது என்கிறார்.
நான் சொல்வதை பார்த்தால் அந்த ஆட்டோ காரர் மீது உங்களுக்கு என்ன பிம்பம் தோன்றுகிறதோ தெரியாது. ஆனால் அவர் எங்களுக்கு பல வருடம் பழக்கமான, மிக மிக நல்லவர். அதனால் மட்டுமே அவர் வண்டியில் அனுப்புகிறோம்
ஆட்டோவில் ஐந்து அல்லது ஆறு குழந்தைகளுக்கு மேல் ஏற்றாமல் வண்டி ஓட்டுவது தான் இதற்கு தீர்வாய் இருக்கும். ஆட்டோ காரர்கள் தான் மனது வைக்க வேண்டும்
raj,
ReplyDelete//ஏங்க, பெற்றோர்கள் தானே அவங்களை அந்த ஆட்டோவில் ஏத்தி விடுறாங்க ???? இல்ல ஆட்டோ காரங்க பெற்றோர்களுக்கு தெரியாம அவங்க குழந்தைகளை ஏத்திக்கிட்டு போறாங்களா..??? தப்பு பெற்றோர்கள் மேல வச்சுக்கிட்டு ஆட்டோகாரங்களை குறை சொல்லுவது சரி இல்லை என்றே நான் நினைக்கிறன்.//
சரியா சொன்னீங்க, பிரச்சினையை நம்ம கிட்டே வச்சுக்கிட்டு , இது ஏதோ வேற்றுக்கிரகத்தில இருந்து வந்த பிரச்சினை போல ,பூனைக்கு மணி கட்டணும், குதிரைக்கு கடிவாளம் போடணும்னு சொல்லி தங்களின் சமூக அக்கரையை பிரஸ்தாபித்து கொள்வது மக்களின் வேலையா போச்சு :-))
கூட்டமாக இருக்கும் ஆட்டோவில் அனுப்பாமல் புறக்கணித்தலே சரியான வழி.
ஒரு ஹோட்டலுக்கு போறாங்க ,சாம்பார்ல கரப்பான் பூச்சி கிடந்தால் , மீண்டும் போவார்களா? அப்போ மட்டும் எது சிறந்தது எனப்பார்த்து தேர்வு செய்வார்கள் :-))
# முதலில் ஏன் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க மாட்டேன்கிறார்கள்?
சப்பைக்கட்டுப்பதில்: அருகில் உள்ளப்பள்ளி தரமாக இல்லை.
என்பதில்:
வீட்டை சுத்திப்பத்து பள்ளிக்கூடம் இருக்கும் அங்கேயெல்லாம் தரம்மில்லைனு சேர்க்காமல் 5 வயசு பிள்ளையை 20 கி.மீ அந்தப்பக்கம் இருக்கும் பள்ளியில் போராடி சேர்ப்பதும் பெற்றோர்களே ,அப்புறம் வேன் சரியில்லை, ஆட்டொ சரியில்லை என்பார்கள் :-))
தரமான பள்ளியில் படித்தால் தான் நல்லா படிப்பார்கள் என்பது மாயையே , மாணவர்கள் திறனுக்கு தான் படிப்பு வரும், தோனிப்படம் பார்த்துவிட்டு ஆமாம் உண்மையை சொல்லிட்டாங்கன்னு பாராட்டும் இவர்களே நடைமுறையில் ,அதுவும் அவர்கள் பெற்ற பிள்ளைகளை புரிந்து கொள்ளாமல் ,ஓபாமா முதல் மன்மோகன் சிங் வரை எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என பதிவு எழுதுவார்கள் :-))
அப்துல் கலாம் எந்த மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்தார்? எல்லாம் பெற்றோர்களின் கவுரவம் மற்றும் மூட நம்பிக்கை தான் தனியார்ப்பள்ளிகளின் பலம்.
# ஏன் பிள்ளைகளை இவர்களே கொண்டுப்போய் விடக்கூடாது?
சப்பைக்கட்டுப்பதில்: எங்களுக்கு நேரமே இல்லை, பள்ளி நேரமும் எங்கள் நேரமும் ஒத்துவருவதில்லை.
என் பதில்:
நேரமில்லை என்ன சொல்லிவிட்டு ,தேவையில்லாத வேலைகளில் நேரம் செலவிடுவார்கள். மேலும் அனைத்து பள்ளிகளும் இவர்கள் அலுவல நேரத்துக்கு முன் தான் துவங்குகிறது ,எனவே கொஞ்சம் முன்னரே கிளம்பினால் பள்ளியில் விட்டுவிட்டு செல்ல முடியும், ஆனால் செய்ய மாட்டார்கள்,ஏன் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்ற சோம்பேறித்தனம்.
தாய் ,தந்தை இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தாலும் ஒரு நாள் மாற்றி ஒரு நாள் என முறைவைத்து பொறுப்பேற்றுக்கொள்ளலாம். மேலும் யாருக்கேனும் மாலையில் வேலை இருக்கும் போது முன்கூட்டியே கைப்பேசியில் தகவல் பரிமாறிக்கொண்டு அழைத்து வரமுடியும், அந்தக்காலமா தகவல் தொடர்பு இல்லாமல் அல்லாட.
8 ஆம் வகுப்பு வரையில் பெற்றோரே நேரடியாக இப்பணியை செய்யலாம், பின்னர் மாணவர்களே பார்த்துக்கொள்வார்கள்.
பின் குறிப்பு:
1-5 ஆம் வகுப்பு வரையில் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த நகராட்சிப்பள்ளியில் படித்துவிட்டு 6 ஆம் வகுப்பு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளியில் படிக்கையில் தினம் 5 கி.மீ நடந்து சென்று படித்தேன், 8 ஆம் வகுப்பு வந்த பிறகே ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார்கள்.மழைக்காலத்தில் கூட ரெயின் கோட் போட்டுக்கொண்டு போய்விடுவேன் :-))
மோகன்,
ReplyDelete//ஆட்டோவில் ஐந்து அல்லது ஆறு குழந்தைகளுக்கு மேல் ஏற்றாமல் வண்டி ஓட்டுவது தான் இதற்கு தீர்வாய் இருக்கும். ஆட்டோ காரர்கள் தான் மனது வைக்க வேண்டும்//
மறுபடியும் அடுத்தவங்க மேலே போடுங்கள்,
10 பேர் ஏற்றி சென்றால் என்ன வருவாய் ஆட்டோ ஓட்டுனருக்கு கிடைக்குமோ,அதை 5 பேர் ஏற்றி சென்றாலும் கொடுத்துவிட்டால் போதுமே.
மலிவாகவும் இருக்கணும் 5 பேருக்கு மேலும் அனுப்பக்கூடாது என பெற்றோர்களின் பொருளாதாரக்கணக்கை மட்டும் சொல்லிடாதீங்க :-))
வவ்வால்
ReplyDelete//10 பேர் ஏற்றி சென்றால் என்ன வருவாய் ஆட்டோ ஓட்டுனருக்கு கிடைக்குமோ,அதை 5 பேர் ஏற்றி சென்றாலும் கொடுத்துவிட்டால் போதுமே.//
ஒவ்வொரு முறையும் எங்கள் ஆட்டோ காரரிடம் நான் சொல்வது இதுவே. பிள்ளைகளின் பாதுகாப்பை விட பணமா பெரிது?
ஆனால் ஆட்டோவில் உடன் வரும் மற்ற பிள்ளைகளின் பெற்றோரும் இதற்கு தயாராய் இருக்கணும். சிலர் எங்களால் அவ்வளவு முடியாது என புலம்புவதும் உண்டு
வீட்டுக்கருகில் உள்ள பள்ளியில் படிக்கலாமே என்றால்: எங்கள் வீட்டுக்கு மிக அருகில் உள்ள பள்ளியே இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது.
குழந்தைகளை காலை பள்ளியில் விட பெற்றோர் பெரும்பாலும் தயங்குவதில்லை. நாங்கள் இரண்டு நேரத்துக்கும் சேர்த்து பணம் கட்டினாலும் ஒரு நாளும் காலையில் ஆட்டோவில் அனுப்புவதில்லை. போலவே பல பெற்றோரும் காலையில் தாங்களே கொண்டு வந்து விடுவதை பார்க்கிறேன். மாலையில் தான் கூட்டம் அதிகம் என ஆட்டோ காரரே சொல்வார்.
சனிக்கிழமை பள்ளி இருந்தாலோ, என்றேனும் நாம் விடுப்பு எடுத்தாலோ அன்று கூட ஆட்டோவில் வேண்டாம் என மாலையில் நேரில் போய் கூட்டி வந்து விடுவேன்
வேலைக்கு செல்லும் பெற்றோர் எனில் மாலை நேரம் நிச்சயம் பள்ளி விடும்போது அவர்களால் அழைக்க செல்ல முடியாது. மூணரைக்கு பள்ளி விடும். ஆறு மணிக்கு முன் அலுவலகத்தில் இருந்து கிளம்ப முடியாது; தினம் நடுவில் ஒரு மணி நேர பெர்மிஷன் எல்லாம் கிடைக்காது
பெற்றோர் தான் காரணம் என்பவர்கள் இப்போது ஆட்டோக்காரர்களிடம் பேசி பாருங்கள்; அரசாங்கத்தை தான் கோபமாய் இப்படி சட்டம் போட்டது தப்பு என்றும், இப்படி எவ்வளவு நாள் செய்வார்கள் என்றும் பேசுகிறார்கள். பல பெற்றோர்கள் இப்போதாவது இந்த பிரச்சனைக்கு ஒரு விடிவு வருமா என நினைக்கிறார்கள்
இரண்டு மடங்கு ஆட்டோ விலையை ஏற்றி எல்லா ஆட்டோ காரர்களும் அறிவிக்கட்டும். அவர்கள் சொல்லும் பணம் தர கூடியவர்கள் ஒரு ஆட்டோவிற்கு ஐந்து பேராவது இருப்பார்கள். அவர்களுக்கு மட்டும் பத்து பேருக்கான பணம் வாங்கி கொண்டு ஒட்டட்டும். ஆனால் ஆட்டோ காரர்கள் இதை செய்ய மாட்டார்கள்
எங்களுக்கு ஒரே பெண் குழந்தைதான்.. அவள் விஷயத்தில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம்.. நான் M.Sc;B.Ed, படித்திருக்கிறேன் அரசுபணி கிடைத்தும் மகளை கவனிக்க வேண்டும் என்பதாலேயே வேலையை தவிர்த்துவிட்டேன்.
ReplyDeleteஅது மட்டுமல்லாது கணவரின் பணியினிமித்தமாக வெவ்வேறு ஊர்களுக்கு செல்லும்போது பள்ளியின் அருகிலேயே நடந்து செல்லும் தூரத்தில் வீடு பார்த்துக்கொள்வோம். இப்போது தூத்துக்குடியில் பள்ளிக்கும் வீட்டுக்கும் 2km தூரம் என்பதால் (சொந்தமாக வீடு வாங்கியதால்) மே மாதம் வண்டி ஓட்ட்க் கற்றுக் கொண்டு அவளை நானே பள்ளிக்கு அழைத்துச்செல்கிறேன் நம்மை நம்பி கடவுள் குழந்தையை ஒப்படைத்திருக்கிறார். நம் கடமையை சரியாகசெய்யவேண்டும் இல்லையா?
நான் பள்ளியிலும் கல்லூரியிலும் முதலிடத்திலேயே இருந்திருக்கிறேன் என் தோழிகள் அறிவை வீணாக்குகிறாயே என சொல்லுகின்றனர் ஆனால் படிப்பு, அறிவு, பணம் சம்பாதிப்பதற்காக மட்டும்தானா? அடுத்த் தலைமுறையை நல்லவிதமாக உருவாக்க வேண்டியதுதானே நம் கடமை. நான் என் மகளை ஒரு சிறந்த பெண்ணாக மெருகேற்றுகிறேன்
என் கருத்துப்படி கணவன் மனைவி யாராவது ஒருவர் குடும்பத்தினரை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அடுத்த த்லைமுறை ஆரோக்கியமானதாக இருக்கும். ஆட்டோக்காரரையும் பள்ளி நிர்வாகத்தினரையும் குறை சொல்வது வீணானதே.
பத்து குழந்தைகள் சேர்ந்து ஒரு வேன் வாடகைக்கு பிடிப்பதுதான் சிறந்தது!
ReplyDeleteஉடனடித்தீர்வு காணப்பட வேண்டும்
ReplyDeleteமோகன்,
ReplyDeleteநாம் முடிவெடுத்து மாற்ற மாட்டோம், ஆட்டோ டிரைவர்கள் எல்லாம் சேர்ந்து முடிவு எடுக்கணுமா? என்ன நியாயம் இது.நமது குழந்தைகள் பாதுகாப்புக்கு நாம் தான் முடிவு எடுக்கணும்.
மேலும் இப்போது உள்ள மோட்டார் வாகன விதியே அதிகம் ஏற்றக்கூடாது என்று தான் உள்ளது, அப்படி இருந்தும் மீறி ஏற்றுவது வாகன உரிமையாளர்/ஓட்டுநரின் தவறு அதற்கு உடந்தையாக இருக்கும் பெற்றோரின் தவறு.
காவல் துறைக்கண்கானிப்பதை தவிர்க்க இப்போதே தில்லு முல்லு செய்வதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
இப்போது ஆபத்தான பயணத்தினை காவல் துறையை ஏமாற்றி அனுப்பும் பெற்றோர்/ ஓட்டுநரின் கூட்டு சதியில் அரசு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?
இதில் வேறு அரசாங்கத்தினை தான் ஆட்டோக்காரர்கள் திட்டுகிறார்கள் என்கிறீர்கள்.
அரசு நடவடிக்கை எடுத்தாலும் குற்றம் எடுக்காவிட்டாலும் குற்றம் ,ஆனால் பெற்றோர்கல் கண்ணுக்கு தெரிந்தே செய்வதை ஒத்துக்கொள்ளவே மாட்டீர்கள் :-))
உமா அவர்கள் சொல்லியிருப்பதையும் பாருங்கள்.
-----------
நாங்க அனுப்பும் ஆட்டோ டிரைவர் நல்லவர் என்று சொல்லிக்கொள்வதால் என்ன சொல்ல வருகிறீர்கள்?
அப்படியானால் மற்ற ஆட்டோ டிரைவர்கள் எல்லாம் கெட்டவர்களா?
வேன் வாங்க பணமும் வாங்கிவிட்டு ஆட்டோவில் அழைத்து செல்லும் நல்லவரைப்பற்றி என்ன சொல்ல :-))
வேன் சேற்றில் சிக்கிக்கொள்கிறதாம் ,ஆட்டோ சிக்காதா?அடேங்கப்பா என்னா ஒரு கண்டுப்பிடிப்பு!!!
எங்க ஏரியாவில் எல்லாம் மழையில் ஆட்டோ வரமாட்டேன் என்பார்கள் காரணம் சேறாகவும் ,தண்ணீரும் தேங்கி இருக்கும் என.
365 நாளும் மழை பெய்து மடிப்பாக்கமே சேற்றில் இருக்கிறதா இன்னும் மழையே வரவில்லை, அப்படியே மழை வந்து சேறாவதும் ஒரு 2 மாதம் என்று வைத்துக்கொண்டால் மற்ற நாட்களில் வேன் ஓட்டினாரா?
அந்த வேனை டிராவல்ஸில் விட்டு இருப்பார் :-))
வட்டியில்லாமல் பணம் வாங்கி வேன் வாங்கிவிட்டு ,ஆட்டோவில் அழைத்து செல்பவர் நல்லவர் :-))
இப்போது முன்னரே பணம் கொடுத்தாச்சு ,வேறு ஆட்டோவும் மாற முடியாது,மாறினாலும் கொடுத்த பணத்தினை வாங்க முடியாது என அழகாக மாட்டிக்கொண்டு , இப்படி சமாளிக்கிறீர்களே :-))
வவ்வால்: முகமே தெரியாத உங்களை சகித்து / பொறுத்து கொள்ளும் போது நேரில் பார்த்து பழகும் அவரை நேசிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை.
ReplyDeleteஎங்கள் ஆட்டோ காரர் பணம் வாங்கியது போன வருடம். அதற்கான பணம் முழுக்க வண்டி ஓட்டி கழித்து விட்டார்.
இருதய நோயாளியான அவரின் மகள்கள் இருவருக்கும் பள்ளிக்கான பணம் கடந்த ஐந்து வருடமாக நான் தான் கட்டுகிறேன். எங்களுக்கு குடும்பத்தோடு எங்கு போகணும் என்றாலும் அவர் ஆட்டோ / வேனில் தான் போவோம். அவர் குடும்ப நிலை தெரியும் என்பதால் அவர் எதிர்பார்ப்பதை விட அவருக்கு அதிக பணம் தான் எப்போதும் தருவேன்
அவரை பற்றி எதுவும் தெரியாமல் எவ்வளவு எழுதுகிறீர்கள் !
போன தடவையே சொல்ல நினைத்தேன். இதில் உள்ள கடைசி பாராவை சென்ற முறை எழுதி விட்டு பின் டெலிட் செய்தேன். பதிவெழுதும் என்னை பற்றி சொல்வது பரவாயில்லை. நீங்கள் இதில் கமன்ட் போட்ட என் நண்பர்கள் உள்ளிட்ட பலரை இழுக்கிறீர்கள். உங்களை எனக்கு யாரென்று தெரியாது. உங்களை திருப்தி படுத்த வேண்டிய கடமை எனக்கில்லை. ஆனால் எனது நண்பர்களை (உதாரணமாய் முதல் கமன்ட் போட்ட என் நெருங்கிய நண்பரை நீங்கள் எப்படி நக்கல் அடித்துள்ளீர்கள் பாருங்கள்) நீங்கள் பேசுவதை என்னால் பொறுத்து கொள்ள முடியாது.
என்னை நன்கு அறிந்த, குடும்ப நண்பர்கள் ரீதியில் பழகும் நண்பர்களை காயப்படுத்தி விட்டு முகம் தெரியாத உங்களை satisfy-செய்ய வேண்டிய அவசியமில்லை
தவறாக எண்ணாதீர்கள் இனிமேல் எனது எந்த பதிவிலும் நீங்கள் கமன்ட் இட வேண்டாம். நீங்கள் இனி வீடுதிரும்பலில் இடும் எந்த ஒரு காமன்ட்டும் உடனடியே டெலிட் செய்யப்படும். (உங்கள் ஒருவருக்காக நான் கமன்ட் மாடரேஷன் வைக்க முடியாது) தவறாக எண்ண வேண்டாம் ! நன்றி !
இந்தக் கொடுமைக்கு விடிவு கிடையாது. மற்று வழிகள் என்று பார்த்தால் ஒரே தெருவில் குடியிருக்கும் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாருதி ஆம்னி வண்டியை வாங்கி சுழற்சி முறையில் ஓட்ட வேண்டியதுதான். 12 வருட படிப்புக்கு பெற்றோர்கள் இதைச் செய்யலாம். அதாவது கார் பூலிங். அரசாங்கம் பொதுப் போக்குவரத்தை பல மடங்கு பெருக்கினால் ஓரளவுக்கு உதவும். பெற்றோர்கள் தானே ஆட்டோவில் அனுப்புகிறார்கள், அவர்கள் மீது தான் தவறு என்பது விதண்டாவாதம். அனைத்து ஆட்டோக் காரர்களும் இப்படிச் செய்தால் வேறு வழியே இல்லை.
ReplyDelete//10 பேர் ஏற்றி சென்றால் என்ன வருவாய் ஆட்டோ ஓட்டுனருக்கு கிடைக்குமோ,அதை 5 பேர் ஏற்றி சென்றாலும் கொடுத்துவிட்டால் போதுமே.// செய்ய மாட்டார்கள் வவ்வால். வாடகையையும் ஏற்றி 10 பேரையும் ஏற்றிக் கொண்டே செல்வார்கள். மேல் வருமானம் வருவதை விட விரும்ப மாட்டார்கள்.
மோகன், எதற்கு வவ்வாலின் மீது இவ்வளவு காட்டம்? இந்த அளவுக்கு போகத் தேவையில்லை என்பது என் கருத்து.
உமா போன்றவர்களின் சூழ்நிலை அனைவருக்கும் பொருந்தாது வவ்வால். இந்தக் காலத்தில் 5 கி.மீ நடந்து சென்று படிப்பதெல்லாம் நடை முறைக்கு உதவாது. அந்தக் காலத்தில் போக்குவரத்து குறைவு, பாதுகாப்பு பிரச்சினைகளும் அவ்வளவாக இல்லை. தற்போது பிஸியான நேரத்தில் ஒரு ரோட்டை கடப்பதே சிரமம்.
ReplyDelete//இப்போது முன்னரே பணம் கொடுத்தாச்சு ,வேறு ஆட்டோவும் மாற முடியாது,மாறினாலும் கொடுத்த பணத்தினை வாங்க முடியாது என அழகாக மாட்டிக்கொண்டு , இப்படி சமாளிக்கிறீர்களே //
ReplyDeleteமோகன் குமாரைப் பற்றி அவரை விட உங்களுக்கு அதிகம் தெரியும் போலிருக்கிறதே ;-)
எல்லா ஊர்களிலும் இதே கொடுமைதான்! அருகாமையில் பள்ளிகள் இருந்தால் நன்றாக இருக்கும். பேசாமல் 5வயதுநிரம்பிய பின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம்!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஒவ்வொரு மாணவனையும் பணம் சம்பாதிக்கும் மெஷினாகதான் பார்க்கிறார்கள்... ஆட்டோகாரர்களும் சரி... பள்ளிக்கூடமும் சரி... வளர்ந்த பிறகு பெற்றோர்களும் சரி...
ReplyDeleteபெற்றோர்களும் பிள்ளைகளும் பணம் பணம் என்று அலையும் போது ஆட்டோகாரர்கள் அலைவதில் என்ன தவறு இருக்கிறது...?
பத்து பேர் போகும் பணத்தை நான்கு பேரை ஏற்றிக் கொண்டு அவர் கேட்டால் நாம் கொடுத்துவிட்டால் அவர் ஏன் பத்து பேரை ஏற்றப் போகிறார்...
இல்லாவிட்டால் ஆட்டோவை கட் செய்து விட்டு வேறு வழி தேடலாமே...
@ Suresh
ReplyDelete///பேசாமல் 5வயதுநிரம்பிய பின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம்!///
நீங்கள் சொல்வது போல் ஒரு நிலை வர வேண்டுமானால் மக்கள் இன்னும் ரொம்பவே பக்குவப்பட வேண்டும். ஒருவேளை அப்படி மட்டும் நடந்துவிட்டால், ஏராளமான கல்வி தந்தைகள் (?) பாடு திண்டாட்டம்தான்...
நண்பர்களே : இந்த பதிவை எழுதும் போது இவ்வளவு கருத்துகள் வரும் என நினைக்க வில்லை. மாற்று கருத்துகள் வர
ReplyDeleteகூடாது என்று நினைப்பவன் அல்ல நான். பிறரது மாற்று கருத்துகளிலும் நல்ல விஷயம் இருக்கும் என நிச்சயம் நினைப்பவன் தான். ஆனால் விவாதம் தனி மனித தாக்குதலாக மாறும் போது இந்த ப்ளாகின் ஓனர் (அடேங்கப்பா !) என்கிற முறையில் குறுக்கிட வேண்டி உள்ளது. இன்று இங்கு நடந்த சில விஷயங்கள் (இறுதியாய் நான் செய்தது உட்பட) என் மனதை பாதிக்கவே செய்தது !
பாலஹனுமான்: நன்றி
ReplyDeleteதனபாலன்: நன்றி
ReplyDeleteதுளசி மேடம்: உண்மை தான் நன்றி
ReplyDeleteகோவை நேரம் said...
ReplyDeleteவீடு திரும்பல் தலைப்பில் சென்னை பித்தன் ஒரு பதிவு போட்டு இருக்கார்..எது பதிவு, எது ப்ளாகர் நேம் என்று தெரிய கொஞ்ச நேரம் ஆனது..
படிதேன் நண்பரே நன்றி
ரகு நீங்கள் சொன்னது நல்ல யோசனை. முயலலாம்
ReplyDeleteதமிழ்செல்வி: உங்கள் வேதனை புரிகிறது :(
ReplyDeleteஅமைதி சாரல்: கருத்துக்கு நன்றி
ReplyDeleteராஜ்: பெற்றோர் மீதும் தவறு இருப்பது உண்மையே. ஆனால் என்னை போன்ற பெற்றோர் செலவு செய்ய தயார் எனினும் சூழல் அதற்கு சாதகமாய் இல்லை. எங்கள் ஏரியாவில் ஐந்து பேர் போகிற ஆட்டோ நிச்சயம் கிடைக்க வில்லை. தங்கள் மாற்று கருத்துக்கு நன்றி
ReplyDeletev.saravanan said...
ReplyDeleteகண்டிப்பாக இதற்கு தீர்வு பெற்றோர்களின் கையில் தான் இருக்கிறது அவர்கள் தான் பள்ளி நிர்வாகத்துடன் போராட வேண்டும் இல்லையேல் அந்த மாதிரி பள்ளியிலிருந்து குழந்தைகளை விடுவித்து நல்ல பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
சரவணன்: அது அவ்வளவு எளிதா என தெரியலை பல நடைமுறை சிக்கல் இருக்கு
வெங்கட ஸ்ரீநிவாசன் said...
ReplyDeleteபள்ளி நிர்வாகங்களே இப்பொழுது education mafia-ஆகத் தானே இருக்கின்றன.
உண்மை நன்றி
சமீரா: விரிவான தங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDeleteநன்றி அமைதி அப்பா
ReplyDeleteதாஸ்: பிராக்டிகலா ஆட்டோவில் அனுப்பவே முடியாது என சொல்ல முடியலை நண்பா
ReplyDeleteவரலாற்று சுவடுகள்: நீங்கள் சொல்வது சரியே. அது ஒரு ஐடியல் தீர்வு ஆனால் பல பள்ளிகள் வண்டி வைத்து நடத்துவதில் உள்ள தலைவலியால் வண்டிகள் வைத்து கொள்வதில்லை :(
ReplyDeleteஸ்ரீராம்: ம்ம் :((
ReplyDeleteநமக்கு பக்க்கத்தில் சொந்த காரங்க யாரும் இல்லை
ஸ்ரீனி: தங்கள் மாற்று கருத்துக்கு நன்றி
ReplyDeleteஹுசைனம்மா: தங்கள் கருத்துக்கும் அனுபவம் சொன்னமைக்கும் நன்றி
ReplyDeleteஉமா மேடம்: நீங்கள் உங்கள் பெண்ணுக்காக செய்தது மிக நல்ல விஷயம். ஆனால் எல்லா பெண்களும் ஹவுஸ் வொயிபாக இருக்க சொல்ல முடியாதே மேடம் ? தங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDeleteசுரேஷ்: வேன் - அதில் பத்து அல்லது பன்னிரண்டு பேர் செல்வது மிக Safe. True !
ReplyDeleteசென்னைபித்தன் ஐயா: நன்றி உண்மை
ReplyDeleteஅமர பாரதி தங்கள் விரிவான கருத்துக்கு நன்றி. சில விஷயங்களில் உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன். சிலவற்றில் மாறுபடுகிறேன்.
ReplyDeleteமாற்று கருத்துகளே வேண்டாம் என சொல்ல வில்லை இங்கு எத்தனையோ பேர் மாற்று கருத்து கூறி உள்ளனர். ப்ளாக் பாஸ் டைம் தான். வேலையும் குடும்பமும் தான் முக்கியம். இங்கு தொடர்ந்து சண்டை போட நான் தயார் இல்லை நண்பா.
சுரேஷ்: தங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDeleteதமிழ் திரட்டி : கருத்துக்கு நன்றி
ReplyDeleteஇது ஒரு சூழலே. இதில் இருந்து தப்பிப்பது கடினம். பேசுவதற்கு வேண்டும் என்றால் எளிதாக இருக்கலாம். வருடா வருடம் பள்ளி மாற்றுவது, வருட பாதியில் ஆட்டோ மாற்றுவது எல்லாம் சொல்வதற்கு எளிது ஆனால் நடைமுறையில் கடினமே. இதற்க்கு எல்லாம் தீர்வு அரசாங்க பள்ளிகளை கூட்டுவதுதான். எது எதற்கோ செலவு செய்யும் அரசாங்கம் பள்ளிக்கு செலவு செய்ய முடியாதா என்ன? ஒவ்வொரு 5 kmகும் 2-3 நல்ல பள்ளிகளை அரசாங்கத்தால் நடத்த முடியாதா? தரம் நன்றாக இருந்தால் யார் சேர்க்க மாட்டார்கள்? இது பிரச்னையை அரசிடம் பார்க்க சொல்லி தட்டி கழிப்தல்ல. கல்வி, தண்ணீர், பாதுகாப்பு போன்றவற்றை முழுமையாக மற்ற அரசுதான் மனம் வைக்க வேண்டும். போலீஸ் எவ்வளவு நாள் தான் கண்காணிக்க முடியும்? கண்காணிப்பை மீறுவது எளிது. காமராஜ் போல் நிஜ சமுக அக்கறை உள்ள யாராவது வந்தால் மட்டுமே இது தீரும். அடிப்படையை மாற்றாமல் ஒட்டு போடுவதால் பிரச்சனை தீராது. போட்ட ஒட்டு கிழியும், மீண்டும் ஒரு ஒட்டு, அதுவும் கிழியும். இது ஒரு தொடர்கதை.
ReplyDeleteமோகன் வவ்வால் தனிமனித தாக்குதல் எல்லாம் நடத்த வில்லை. நீங்க ஆட்டோகாரர் நல்லவர் என்று கூறினீர். பதிவிலும் மறுமொழியிலும் வந்தவற்றை வைத்து அவர் மறுமொழி இட்டார். உங்க ஆட்டோகாரர் வேன் வாங்கியதை பற்றியும் அவர் நல்லவர் என்றும் சொல்லாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லை அல்ல அவர் ஏன் நல்லவர் என்று நீங்கள் கருதும் காரணத்தை மறுமொழியில் இட்டதற்கு பதில் பதிவில் எழுதியிருக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் யார் எனத்தெரியும் மற்றவர்களுக்கு தெரியாதே? மற்றவர்கள் உங்கள் பதிவை படிப்பவர்களே. எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராக இப்போது எனக்கு நீங்கள் தெரிகிறீர்கள். இது என் கருத்து, அப்படியெல்லாம் இல்லை என்று நீங்கள் சொன்னாலும் அதற்கு நான் மறுப்பு சொல்லமுடியாது. இது உங்கள் வலைப்பதிவு இதில் என்ன மாதிரியாக எழுதுவது என்பது உங்கள் உரிமை. மறுமொழி பெட்டி இருந்தால் மற்றவர் அதில் மறுமொழி இடுவர், உங்களுக்கு பிடிக்காதெனில் மறுமொழி பெட்டியை எடுத்துவிடவும் அல்லது இன்னார் மட்டும் மறுமொழி இடலாம் என்று கூறவும் அல்லது மறுமொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என கூறவும். இதை வெளியிடுவதும் வெளியிடாததும் உங்கள் விருப்பம். என் மறுமொழியை நீங்கள் படித்தால் அதுவே போதும்.
ReplyDeleteகுறும்பன்: தங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDeleteஒத்த சிந்தனை கருத்துகள் மட்டுமே இடுங்கள் என்று நான் சொல்வதாக நினைப்பது சரியன்று. மாற்று கருத்துகள் தான் இந்த பதிவில் அதிகம் உள்ளன. அவற்றை எதுவும் செய்யவில்லை.
காமன்ட்கள் - பதிவின் கருத்துகள் பற்றி இருக்க வேண்டும். பதிவினை வைத்து நீ இப்படிப்பட்டவன் என்கிற ரீதியிலும், மேலும் இங்கு கமன்ட் போட்ட சிலரை விமர்சித்தும் இருந்ததால் அப்படி செய்ய வேண்டி வந்தது.
உங்கள் கருத்து என்னை கடுமையாக விமர்சிப்பதாக இருந்தும் நான் அதை நீக்கவில்லை
நீங்கள் சொன்னது போல என் ப்ளாகில் முடிவெடுக்கும் உரிமை எனக்குண்டு. அப்படி எடுத்த முடிவு தான் அது. தொடர்ந்து விவாதம் செய்யவோ சண்டையிடவோ, ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரி இறைக்கவோ எனக்கு நேரமும் energy-யும் இல்லை
தங்களுக்கு மீண்டும் நன்றி
விவாதத்திற்குரிய விஷயம்தான் இது.
ReplyDeleteஇது தொடர்பாக விவாதிக்க ஆசைதான் ஆனால் ..
விவாதத்திற்குரிய விஷயம்தான் இது.
ReplyDeleteஇது தொடர்பாகவிவாதிக்கவும் பதிவிடவும் ஆசைதான்.
மடிப்பாக்கம்,தாம்பரம் பகுதிகளில் இது மிகப் பெரிய பிரச்சனையே.
\\உங்க ஆட்டோகாரர் வேன் வாங்கியதை பற்றியும் அவர் நல்லவர் என்றும் சொல்லாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லை அல்ல அவர் ஏன் நல்லவர் என்று நீங்கள் கருதும் காரணத்தை மறுமொழியில் இட்டதற்கு பதில் பதிவில் எழுதியிருக்கலாம். \\ இவர் எழுதியதில் பல அபத்தமாக இருந்ததை நீங்கள் கவனிக்கத் தவறியது வியப்பாக இருக்கிறது. உதாரணத்துக்கு சில:
ReplyDelete\\அப்துல் கலாம் எந்த மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்தார்? எல்லாம் பெற்றோர்களின் கவுரவம் மற்றும் மூட நம்பிக்கை தான் தனியார்ப்பள்ளிகளின் பலம்.\\ அப்துல் கலாம் என்பவர் ஒரு Exception. அப்படிப் பார்த்தால் பெங்களூர் பஸ் கண்டக்டர்கள் எல்லோரும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாகியிருக்க வேண்டும். சொல்லப் போனால் 99% அரசுப் பள்ளி ஆசிரியர்/ஆசிரியைகள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை, சாமான்யர்கள் மட்டும் தோனி படம் பார்த்துவிட்டு அரசுப் பள்ளிக்குப் போக வேண்டும் என்று எதிர் பார்ப்பது அபத்தம்.
\\# ஏன் பிள்ளைகளை இவர்களே கொண்டுப்போய் விடக்கூடாது?
ReplyDeleteநேரமில்லை என்ன சொல்லிவிட்டு ,தேவையில்லாத வேலைகளில் நேரம் செலவிடுவார்கள். தாய் ,தந்தை இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தாலும் ஒரு நாள் மாற்றி ஒரு நாள் என முறைவைத்து பொறுப்பேற்றுக்கொள்ளலாம். மேலும் யாருக்கேனும் மாலையில் வேலை இருக்கும் போது முன்கூட்டியே கைப்பேசியில் தகவல் பரிமாறிக்கொண்டு அழைத்து வரமுடியும், அந்தக்காலமா தகவல் தொடர்பு இல்லாமல் அல்லாட.\\ School Hours: 8 AM TO 3 PM, காலையில் கொண்டு போய் விடலாம், ஆனால் மாலை மூணு மணிக்கு பள்ளிக்குச் சென்று அழைத்து வர இரண்டு மணிக்கே அலுவலகம் முடிந்தால் மட்டுமே முடியும். அப்படி ஒரு அலுவலகம் எங்கே இருக்கிறது என்று தான் தெரியவில்லை. மேலும் குழந்தைகளுக்கு மேல் முக்கியமானதாக ஒன்று இருப்பதாக எந்த தாய் தந்தையரும் நினைக்கவே மாட்டார்கள். அவ்வாறு பொறுப்பில்லாதவர்களாக அவர்களைச் சித்தரிப்பது அபத்தம்.
\\1-5 ஆம் வகுப்பு வரையில் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த நகராட்சிப்பள்ளியில் படித்துவிட்டு 6 ஆம் வகுப்பு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளியில் படிக்கையில் தினம் 5 கி.மீ நடந்து சென்று படித்தேன், 8 ஆம் வகுப்பு வந்த பிறகே ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார்கள்.\\ நாங்களும் அதை விட வசதி குறைந்த பள்ளிகளில் தான் படித்தோம். ஆனால் இன்றைக்கு இவரது குழந்தையை சென்னையில் ஏதாவது ஒரு காப்போரே ஷன் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பாரா? அந்தக் காலத்தில் நாம் இருந்த நிலை இன்றைக்கு நடைமுறைக்கு சரியாக வராது என்று இவருக்கு நிச்சயம் தெரியும், இருந்தும் இவ்வாறு இவர் பேசுவது வியப்பாக இருக்கிறது.
ReplyDelete\\
ReplyDelete10 பேர் ஏற்றி சென்றால் என்ன வருவாய் ஆட்டோ ஓட்டுனருக்கு கிடைக்குமோ,அதை 5 பேர் ஏற்றி சென்றாலும் கொடுத்துவிட்டால் போதுமே.\\ எவ்வளவு காசு கொடுத்தாலும் அவர் பத்து பேரை ஏற்றுவதை மட்டும் விட மாட்டார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
\\மேலும் இப்போது உள்ள மோட்டார் வாகன விதியே அதிகம் ஏற்றக்கூடாது என்று தான் உள்ளது, அப்படி இருந்தும் மீறி ஏற்றுவது வாகன உரிமையாளர்/ஓட்டுநரின் தவறு அதற்கு உடந்தையாக இருக்கும் பெற்றோரின் தவறு.\\ சார் நாம் பேசுவது இந்தியாவைப் பற்றி, நீங்கள் சொல்வது சிங்கப்பூருக்கு எது பொருந்தும் என்பது பற்றி. சட்டம் போட்டு விட்டால் எல்லோரும் பின்பற்றுவார்கள், அதுவும் இந்தியாவில்...!! இது உங்களுக்கே காமடியாகத் தெரியவில்லையா?
ReplyDelete\\இப்போது ஆபத்தான பயணத்தினை காவல் துறையை ஏமாற்றி அனுப்பும் பெற்றோர்/ ஓட்டுநரின் கூட்டு சதியில் அரசு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?\\ ஆட்சி செய்பவர்கள் நீங்கள் வைத்திருக்கும் அபரீதமான மதிப்பை நிச்சயம் மெச்சத்தான் வேண்டும். அவ்வளவு யோக்கியமானவர்களாக அவர்கள் இருந்தால் அவர்களிடம் அத்தனை கோடி ரூபாய் சொத்துகள் சேர்வது எப்படி? நீங்க இவ்வளவு அப்பாவியாகவா இருப்பீர்கள்?
ReplyDeleteதாஸ்: விவாதம் இனிமேல் வேண்டாம் நண்பா ! இந்த பதிவால் நிறையவே மனக்கசப்புகள் ! நீங்கள் விவாதத்துக்கு அஞ்சுபவர் அல்ல. நான் சற்று அஞ்சவே செய்கிறேன். தனி வாழ்வில் நிம்மதி முக்கியம் என நினைப்பவன்
ReplyDeleteஎன்னை தவறாய் எண்ணாதீர்கள்.
திரு குறும்பன் அவர்களே: நண்பர் வவ்வால் சொன்னதில் ஏகத்துக்கும் அபத்தமாக இருக்கிறது, நடைமுறைக்கு ஒவ்வாதது, இங்கே நடக்கும் அரசைப் பற்றி ரொம்ப கைசுத்தம் என்ற அபரீத நம்பிக்கை, அரசுப் பள்ளிகள் தரத்தின் மீதான நம்பிக்கை, மேட்டரே போடாத ஆட்டோக்காரர்கள் மீதான மதிப்பு என்று ஏகத்துக்கும் அபத்தமாக எனக்குப் படுகிறது. இவற்றில் எதையும் நீங்கள் குறிப்பிடாதது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், இந்த விஷயத்தில் பதிவர், அவரை பின்னூட்டமே போட வேண்டாம் என்ற அளவுக்கு போனது ஏன் என்று தான் தெரியவில்லை. அந்த அளவுக்கு சீரியசாக எனக்கு இது தோன்றவில்லை, இதெல்லாம் சகஜம் தானே, Take it easy Policy என்று போயிருக்கலாம். Anyway, each individual is different!!
ReplyDeleteபெற்றோர் ஆசிரியர் கழகம் என ஒன்று இருப்பது எதற்கு என்றே தெரியவில்லை. தினசரி பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து போக முடியாவிட்டாலும்.. ஆசிரியர்கள் இணக்கம் காட்ட முடியாத சூழ்நிலை இருந்தாலும்.. பள்ளி முழுவதும் உள்ள பிள்ளைகளின் நன்மைக்காக இல்லாவிட்டாலும்.. ஒரு வகுப்பில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் மட்டுமாவது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பள்ளியிலோ, பொது இடங்களிலோ நேரில் சந்தித்து தங்கள் பிரச்சினைகளை பேசி சரி செய்து கொள்ள முயற்சிக்க கூடாதா ??
ReplyDeleteபொழுதுபோக்கு அம்சங்களுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு பங்கை ஒரே வகுப்பில் ஒன்றாக படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் கழித்தால் பல சிக்கல்கள் தீரும். பிறரை குறை சொல்லாமல் உடனே செயல்படுங்கள் பெற்றோர்களே.. ஆட்டோகாரர்களை உங்கள் பிள்ளைகள் மீதான அக்கறை உங்களுக்கு அதிகம் வேண்டும்.
வெளி பூனைகளை விடுங்கள்.. முதலில் அவரவர் மனதில் உள்ள பூனைகளுக்கு மணிகளை கட்டுங்கள்.
ReplyDeleteஇந்த பதிவில் உங்களுடன் சண்டை போட்டு, நீங்கள் வெளியேற்றிய நபர் கடந்த பல ஆண்டுகளாக இதே வேலையாக
ReplyDeleteஉள்ளார். இவர் சென்னையை அடுத்துள்ள ஒரு ஊரில் உள்ள கல்லூரியில் தமிழ் துறை விரிவுரையாளர் ஆக உள்ளார். கல்லூரியில் அவருக்கு மரியாதை இல்லையா அல்லது குடும்ப பிரச்சனையா தெரியவில்லை. நிம்மதி இல்லாத இந்த குடிகாரர் எல்லா பதிவர்களிடமும் சென்று சண்டை போடுவார். அல்லது தன் அறிவு ஜீவி தனத்தை காட்டுவதாக விக்கி பீடியாவில் இருந்து விஷயங்கள் எடுத்து விடுவார். பல மூத்த பதிவர்களை புண்படுத்தி சந்தோசம் கண்ட அற்ப ஜீவி இந்த ஆசிரியர். அவர்களின் சாபம் நிச்சயம் இவருக்கு கிட்டவே செய்யும்.